OVOV 32

OVOV 32

I hope Asin rubs off her luck on me: Akshay Kumar | Hindi Movie News - Times of India  

ப்ரீத்தியும் அர்ஜுனும் பார்வையால் தங்களுக்கு என்று தனி உலகம் சிருஷ்டித்து கொண்டு அதில் சஞ்சரித்து கொண்டு இருக்க, அமர்நாத்  சட்டென்று,”Arajuna kāra rōkō/அர்ஜுன் காரை நிறுத்து.”என்று அலறினார்.

அர்ஜுன் கால் தன்னிச்சையாக பிரேக்கில் கால் வைக்க, கார் நின்றது

“என்ன மாமா இது!….இப்படி தான் திடீரென்று கத்துவீங்களா? என் லிட்டில் ஹார்ட் என்ன ஆவது?”என்றான் அர்ஜுன்.

“உன் லிட்டில் ஹார்ட் இதுக்கெல்லாம் ஒன்றும் ஆகாது … வண்டியை ரிவர்ஸ் எடு.” என்றார் அமர்நாத்.

“எதுக்கு மாமா?பின்னாடி உங்க லவ்ஸ் யாராவது வாரங்களோ?… அத்தையை மேரேஜுக்கு பேக் செய்து அனுப்பிட்டு, இப்படி, ‘ரோடு சைடு ரோமியோ’ வேலை எல்லாம் செய்ய கூடாது.”என்றான் தீப்.

அர்ஜுன் தீப்பிற்கு ஹை பைவ் கொடுக்க, அமர்நாத் இருவரையும் முறைத்தார்.

“ஐயோ!…இது எல்லாம் ஒரு joke.பின்னாடி பாருங்கடா. அந்த மரத்திற்கு கீழ் கார் ரிப்பேர் ஆகி,ரோட்டில் அமன்ஜீத், அந்த பொண்ணு ஜெஸ்ஸியுடன் நிற்கிறான்.”என்று அமர்நாத் கை காட்ட, மூவரும் பின்னால் திரும்பி பார்த்தனர்.

Sonal Chauhan on how she has lost out on many projects due to makers' choice | India Forums       Sonu Sood Brings Oxygen Plants From France To Fight Covid-19

அர்ஜுன் அவன் காரை ரிவேர்ஸ் எடுத்து வந்து அமன்ஜீத் கார் அருகே முழுவதுமாய் நிறுத்துவதற்குள் மற்ற மூவரும் காரில் இருந்து இறங்கி அம்னஜீத்திடம் சென்றார்கள்.

அவர்கள்  காரை ஓட்டி வந்த கார் டிரைவர்  பானெட்டிற்குள் தலையை நுழைத்து கார் ஆராய்ச்சியில் இறங்கி இருந்தார்.

(நிச்சயம் ph.d வாங்கிடுவார் என்று நம்புவோமாக ) 

அமன்ஜீத் முகத்தில் தெரிந்த கோபத்தில் அவன் காலை வைத்து தரையை உதைத்து கொண்டு இருந்த விதத்திலேயே தெரிந்தது அவன் கடுப்பு.

அது ஒரு கிளை பாதை.அதிக போக்குவரத்து இல்லாத, எப்போதாவது ஒரு வண்டி வந்து செல்லும்,கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் மரங்கள் மட்டுமே இருந்த பகுதி.

A Beautiful View of Country Roads Stock Image - Image of categories, foliage: 108890325

உதவிக்கு அழைக்க அங்கு மொபைல் சிக்னலும் கிடைக்கவில்லை அமன்ஜீத்துக்கு. கோபத்தின் உட்சத்தில் இருந்தான்.

குறுக்கு வழி என்பதாலும்,டிராபிக் இருக்காது என்பதாலும், அவன் தான் அந்த ரூட்டினை டிரைவருக்கு சொன்னது. அது இத்தனை பெரிய பிரச்சனை கிளப்பும் கனவா கண்டான்?

அவன் மட்டும் நிற்பது என்றால் கூட பரவாயில்லை.அந்த ஆள் இல்லா பகுதியில், ஒரு பெண்ணோடு நிற்கும் போது அவளின் பாதுகாப்பும் அவன் பொறுப்பு தானே!…அந்த டென்ஷன் வேறு.

ஆனால், ஜெஸ்ஸி அதை பற்றி எல்லாம் கவலை படைத்தவளாய், அருகே இருந்த மரத்தில் இருந்து நீண்டு இருந்த தாழ்ந்த கனமான கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து, ‘நாங்க குரங்கு இனத்தின் பிரதிநிதி’ என்று  சுற்றுப்புறத்தை ரசித்து கொண்டு இருந்தாள்.

‘நம்மால் சரி செய்ய முடியாத சூழ்நிலைக்கு டென்ஷன் ஆகினால் மட்டும் ப்ரோப்லேம் சால்வ் ஆகி விட போகிறதா என்ன?… அப்படியே டென்ஷன் ஆனாலும், அதனால் என்ன கிடைத்து விட போகிறது?…

பிரீ ரத்த கொதிப்பு, ஹார்ட் அட்டாக் தவிர.’டேக் இட் ஈசி யார்’ என்பது அவள் பாலிசியாக இருக்க, அமன்ஜீத் எண்ணையில் பொரியும் கடுகு போல், டென்ஷன் ஆகி கொண்டு இருப்பது அவளுக்கு வேடிக்கையாக தான் தோன்றியது.

அமன்ஜீத் கடுப்புக்கு ஜெஸ்ஸியின் நக்கலும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். அவனை வச்சி செய்து கொண்டு இருந்தாள்.

“அமன்!…நீ கூகிள் ஆண்டவருக்கு கசின் பிரதர்ராடா?”என்றாள்.

அவள் உள் குத்து புரியாமல், ஆண்டவர் என்றால் என்ன என்றும் தெரியாமல்,”இல்லை ஜெஸ்…கூகிளில் அண்ட்ராவ் என்று எல்லாம் எனக்கு கசின் யாரும் இல்லை.”என்றவனை கண்டு ஜெஸ்ஸி தான் ஜெர்க் ஆகி போனாள்.

தமிழ்நாட்டு ஜோக் எல்லாம் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது நினைவுக்கு வர,”இல்லை ஆண்ட்ராவ் இல்லை …ஆண்டவர்…ஐ மீன் குதா… கடவுள்.  தமிழ்நாட்டுல கூகிள் சர்ச் என்ஜின்  நாங்க “கூகிள் காட்” என்று தான் சொல்வோம்,எதை கேட்டாலும் கொடுக்கும் என்று அப்படி.

ஆனா, கடவுள் போல் அதுவும் silentடா நமக்கு ஆப்பு வச்சிடும்…அது கிட்டே டைரெக்ஷன் கேட்டா முடிக்கவே முடிக்காத பிரிட்ஜ்/மேம்பாலம்  வழி எல்லாம் கொடுத்து, அதை பாலோவ் செய்தால் நமக்கு குழி கன்போர்ம்.

அது போல் நீயும், ‘take diversion ,take diversion ‘என்று டிரைவரை படுத்தி எடுத்து, எனக்கு  வழி காட்ட தெரியும் என்று  இப்படி அமேசான் காட்டுக்குள் நிறுத்திட்டியா?…  அதான் கேட்டேன் கூகிள்க்கு நீ கசின் பிரதர்ரா என்று. “என்று முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு ஜெஸ்ஸி கலாய்க்க, அவன் முகம் போன போக்கை கண்டு ஜெஸ்ஸிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

‘இன்னைக்கு யார் முகத்தில் விழித்தோம்?’என்று அதி தீவிரமாக அமன்ஜீத் மூளையை கசக்கி யோசிக்கும் அளவிற்கு, அவனை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள் அந்த கோல்டன் பிஷ்.

‘இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை.’என்று அமன்ஜீத் நொந்து நூடுல்ஸ் ஆகி போனான்.

அன்று காலையில் இருந்தே எல்லாம் தலைகீழ்.ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது சொதப்பி கொண்டு இருந்தது.

காலை ஜெஸ்ஸியை டிஸ்சார்ஜ் செய்து வரும் போது தான் பார்சல், ஸுல்பா, விசாரணை  என்று விழி பிதுங்கி போனார்கள் அமன்ஜீத்,ஜெஸ்ஸி, தன்வி.

விசாரணை முடித்து வீரேந்தர் அவர்களை விடுவித்த பின் தான் அவனால் சரியாக மூச்சு விடவே முடிந்தது.

ஏற்கனவே அவன் ஹோட்டல் மரணம்,கோடௌன் எரிப்பு,அங்கு இருந்து கிளம்பிய லாரி என்று எல்லாமே அவனை குழப்பி கொண்டு இருக்க,இதில் தன்னிடம் வேலை செய்ய வந்த தோழி மரணத்தின் விளிம்பு வரை சென்றது,ஒரு கொலைகாரன் அவளுக்கு பார்சல் அனுப்புவதும், அதுவும் போதை மருந்து என்று எல்லாம் மனதை சோர்வடைய தான் செய்து விட்டது.

குருதேவ் மீண்டும், “பஞ்சாப் சுற்றும் வாலிபனாக” தன் அரசியல் பயணத்தை தொடங்கி இருக்க,வீட்டில் இவர்கள் மூவர் மட்டும் தான்.

குழந்தைகள் என்றால் தன்விக்கு உயிர். அமன்ஜீத் பிறந்த நேரம் சுற்றத்தின் பேச்சில் மனதளவில் அடிபட்டு போனார் அந்த பெண்மணி.இதில் அர்ஜுன் குடும்பத்தை கை எடுத்து கும்பிட்டு விடலாம்.

‘எங்கள் பெண் இறக்க நீ காரணம். அவளே போன பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’என்று முழுவதுமாய் விலகி விட்டார்கள். clean cut என்பார்களே அது.

பகை என்றால் ஒரு சிலர் போல் புறம் பேசுவது,வந்ததிகளை பரப்புவது போன்ற எந்த சில்லறைத்தனங்களும் அர்ஜுன் குடும்பத்தினர் செய்யவில்லை.முடிந்த அளவிற்கு, எதிர் எதிராக சந்திப்பதை ரெண்டு குடும்பங்களும் தவிர்த்து விட்டன  சொல்ல வேண்டும்.

எல்லாம் மாற்றியது சாட்சாத்  அமன்ஜீத். தன் அன்னைக்கு நியாயம் கேட்கிறேன் என்று கிளம்பியதும் தான் பல குழப்பம் ஏற்பட்டது.
காலம் ரெண்டு பக்கமும் மன மாற்றங்களை கொண்டு வந்து தான் இருந்தது.

ஆனால், சம்பந்தபட்ட பெண் குடும்பம் அமைதியாக இருந்தாலும் ஊர்,உலகம் சும்மா இருக்குமா?…

வார்த்தைகளை விஷத்தில் தோய்த்து, நாக்கு என்ற ஆயுதத்தால் அடித்தே அந்த தாயின் மனதை கொன்றார்கள்.இந்த பேச்சுகளை கேட்க முடியாமல் குருதேவே பலமுறை அதிர்ந்து தான் போய் இருக்கிறார். தன்வி முற்றிலும் நொறுங்கி போனார்.

முறையான திருமண பந்தத்தில் உருவான மகனுக்கே, “illegal child “என்று பெயர் வைத்த சமூகம், வேறு பிள்ளைகள் பிறந்தால்?… அதிலும் அந்த பிள்ளை பெண் குழந்தையாக பிறந்தால்?… அதுவும் இதே பேச்சுக்களை கேட்டு தானே வளரும்?

நாளை திருமணம் என்று போது இது பிரச்சனையாகி போனால்?… இல்லை ஏதாவது  மனஸ்தாபம் வரும் போது மாப்பிளை வீட்டார் இதை பத்தி பேசி மகளின் மனதை கொன்று விட்டால் ?….

அந்த எண்ணமே தன்விக்கு மரணவலியை உண்டாக்கியது.

மனம் என்பது கண்ணாடி.

ஒரு முறை உடைந்து போனால், திரும்ப அதை சரி செய்வது இயலாத காரியம் .இல்லறத்தில் உடைக்க படும் இதயங்கள் என்றுமே மீள்வதில்லை.

அவர் அனுபவிக்கும் நரகத்தை, ‘தனக்கு பிறக்க போகும் இன்னொரு மகவும் அனுபவிக்க வேண்டுமா?’ என்ற கேள்விக்கு விடையாய், அந்த தாயின்  கருவறை அடைபட்டு விட ,அமன்ஜீத் ஒற்றை மகனாய், அனைத்து சொல்லடிகளையும் தாங்கும் தனி மரமாய் நின்றான்.

https://www.youtube.com/watch?v=lc0DvtRnIyM

காலம் என்னும் நூலிலே
இங்கு பேசும் பொம்மைகள் ஆடுது
பாவம் ரெண்டு பொம்மையும் விடும்
கண்ணீர் கன்னத்தில் ஓடுது

அம்மா என்னும் வார்த்தை தான்

 பல அர்த்தம் சொல்கின்ற வாக்கியம்

எல்லோருக்கும் வாய்க்குமா அதை

காதால் கேட்கின்ற பாக்கியம்?

தேவன் தரும் தாய்மை தான்

வேண்டாம் என்னும் பெண்மை தான்

ஒரு விந்தையானதே!

கன்றுகளை ஈன்று எடுக்க

ஆடு மட்டும் அஞ்சுதா?

கர்ப்பத்தடை வேண்டும் என்று

தெய்வத்திடம் கெஞ்சுதா?

பிள்ளை ஒன்று வேண்டும் என்று

எத்தனையோ தாய்க்குலம்

கோயில்,குளம்,சாமி என்று

சுற்றி வந்து வேண்டிடும்

சுற்றி வந்த போதிலும்

பெற்றெடுக்க கூடுமோ?

முக்குளிக்கும் யாருமே

முத்தெடுக்க ஆகுமோ?

பெண்ணை ஒரு தெய்வமாய்

பேசுகின்ற காரணம்

அவள் தாங்கும் தாய்மை தான்.

ஐயிரெண்டு மாதம் என்று

அன்னை படும் வேதனை

கையிரெண்டில் தேனை அள்ளி

கொண்டு வரும் சாதனை!

சோறும் இன்றி,நீரும் இன்றி

சாம்பல் திங்க தோணலாம்

தித்திக்கின்ற முத்தங்களை பிள்ளையிடம் வாங்கலாம்.’

என்ற பாடல் தான் எவ்வளவு அர்த்தம் வாய்ந்தது?

அந்த தாய்மைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க விடாமல்,

இன்னோர் உயிரை

கொன்று புசிப்பது மிருகமடா

இன்னோர் உயிரை கொன்று

ரசிப்பவன் அரக்கனடா!…’

என்ற வரிகளுக்கு ஏற்ப, மனித வடிவில் இருந்த மிருக ஜென்மங்களின் வக்கிரங்களுக்கு, அந்த தாய்மை தன்னையே பலியிட்டு கொண்டது.

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்!

மனிதன் —மனிதனாய்  எல்லோரும் வாழ்ந்து விட்டால்,  இன்னொரு உயிர் ஏன்  துடிக்க போகிறது?…

ஆனால்,  துடிக்க வைத்து இன்பம் காண்பதில் ,வார்த்தைகள் என்னும் ஆயுதங்களை கொண்டு அடித்து, மற்றவரின்  துடிப்பை ரசிப்பவர்கள்  தான் அதிகம்.

மகனை மணந்து தங்கள் வீட்டில் இன்னொரு அங்கமாக மாற போகும் மருமகள், இல்லை மகளுக்காக  தவமிருந்தது அந்த அன்னையின் இதயம்.

இன்று அவர்கள் நன்கு அறிந்த ஜெஸ்ஸியே, ஹர்பிர் அனுப்பிய வரனாக வர,மகனின் நெருங்கிய தோழியே, அவனின் சரி பாதியாய் வர போவது தன்விக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது.

அவரை பற்றிய பேச்சு எல்லாம் அறிந்தது ஜெஸ்ஸி குடும்பம்.புதிதாய் போய் இதை பற்றி எல்லாம் விளக்கி சொல்லி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!. அப்படியே சொன்னலும் எத்தனை பேர் அதை நம்புவார்கள் என்று இன்னும் சந்தேகம் அவர் மனதை அரித்து கொண்டு இருந்தது.

தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்காத குறையாய் ஜெஸ்ஸியை தன் அன்பில், பாசத்தில்,கவனிப்பில் திக்குமுக்காட வைத்து விட்டார்.

அமன்ஜீத்துக்கே தன் அன்னை, ‘தனக்கு தான் அம்மாவா இல்லை ஜெசிக்கா,வீடு மாறி வந்து விட்டோமோ?…’  என்று நினைக்கும் அளவிற்கு,இருந்தது தன்வி கவனிப்பு.

வெளியே பேருக்கு அழகான கூடு தான் அது.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் இன்னும் காதலிக்கும் கணவன்,அன்பான பிள்ளை,அள்ள அள்ள குறையாத செல்வம், பேர்,புகழ் என்று எல்லாம் இருந்தாலும்,  மனதளவில் இன்னும் அந்த தாய்மை துடித்து கொண்டு தான் இருந்தது என்றாவது இதற்கு முடிவு வராதா என்று.

காலங்கள் உருண்டோடி இருக்க,இவர்களின் பதவியும்,செய்யும் தர்மங்களும்,நல்ல காரியங்களும்  ஊர் வாயை அடைத்து தான் இருந்தது. ஆனாலும், அவர் தவிப்பு, மரணவலி குறைந்த பாடில்லை,அந்த தவிப்பிற்கு வடிகாலாய்,அவரின் இத்தனை வருட பிராத்தனைக்கு பலனாய் அவர் ஜெஸ்ஸியை கருதினார்.

விருந்து தடபுடலாக நடந்தது.

பல வருடங்களுக்கு பிறகு, அந்த வீட்டிற்கு ஜெஸ்ஸி வரவால் உயிர் வந்ததை போல், அன்று தான் அவர்கள் குடி இருக்கும் இடத்தை “வீடு” என்று சொல்லவே தோன்றியது தன்விக்கு.

ஜெஸ்ஸிக்கும் அத்தனை வருடம் கிடைக்காத தாயின் பாசம் கிடைத்தது போன்ற நிறைவு.

அவள் அண்ணன் இறந்த உடன் படுத்த படுக்கை ஆன தாய், அதில் இருந்து மீளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.தவம் இருந்து பெற்ற   தலை மகன் இறந்த  போது, இவர்களின் உயிர்ப்பையும் அல்லவா கொண்டு போய் விட்டான்.

யோசிக்காமல் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் பெற்றோர்களை தான் சிலுவையில் ஏற்றி விடுகிறது.இவர்கள் ஏற்படுத்தி விடும் சுழலில்,மீளவே முடியாத புதை குழியில்,புத்திர சோகத்தில்  சில பெற்றோர்கள் வாழ்வையே தொலைத்து தான் விடுகிறார்கள்.

உடல் நோய்யாய்  இருந்தால் மருந்து கொடுத்து குணப்படுத்தி விட  முடியும்.இது தீர்க்கவே முடியாத சோகம்,ஏக்கம்.அந்த தாயை படுக்கையில் தள்ளி மனநோயாளி ஆக்கி விட்டது.

அவர்கள் மகன் ஒரு முறை இறந்ததோடு அவன் கதை முடிந்து தான் விட்டது. ஆனால்,  அவனால் ஜெஸ்ஸி குடும்பத்தினர் தினம் தினம் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த தாய் மனதில் மகனோடு படுத்த படுக்கையாகி விட,இந்த மகள் தனித்து போனாள்.

வெளியே சிரித்து பேசி, இரும்பு திரைக்கு பின் மறைந்து நின்று, வீராங்கனை போல் அநீதியை எதிர்த்து போரிட்டு கொண்டு இருந்தாலும் ஜெஸ்ஸி இன்னும் தாயை, அண்ணனால் உயிரோடு இழந்து தவிக்கும் அதே பள்ளி மாணவி தான்.

இன்று தன்வி,  அந்த தாயாக மாற,தாய் பாசத்திற்கு ஏங்கி கொண்டு இருந்த அந்த பெண் மீண்டும் குழந்தையாகி அந்த தாயின் மடி சேர்ந்தாள்.

இருவருமே ஒரு விதத்தில் பாவ பட்ட ஜீவன்கள் தான்.

தவறே செய்யாமல் மற்றவர்களின் தவறுக்கு தண்டனை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள்.இன்று கடந்த கால காயங்களுக்கு ஒருவருக்கு ஒருவர் மருந்தாகி போனது விந்தை தான்.

படைத்தவன் யாருக்கு யாரோடு உறவினை,பிரிக்க முடியாத பந்தத்தை ஏற்படுத்துவான் என்பதில் தானே வாழ்வின் சுவாரஸ்யமே இருக்கிறது.

அர்ஜுன் வீட்டிற்கு செல்ல வேண்டிய இந்த ப்ரீத்தி, அமன்ஜீத் வீட்டிற்கு,ஒரு தாயின் பாசவலைக்குள் அடைக்கலம் ஆகி இருப்பது தான் அவன் சித்தமோ.

யாருக்கு எதை,எப்பொழுது,எப்படி கொடுக்க வேண்டும் என்று கணக்கிடுவதில் அவனை மிஞ்ச யார் இருக்க முடியும்?

காதலை விட உயர்ந்தது ஒரு தாய் பாசம்.

ஜெஸ்ஸிக்கும் -தன்விக்குமான இந்த தாய் -மகள் பாசம் இவர்களை நோக்கி வரும் சூறாவளிகளை எதிர்த்து நிற்குமா?

காலம் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.

அந்த தாய்மையின் கவனிப்பில் பல வருடங்களுக்கு பிறகு வெகு நிம்மதியாய்,மனநிறைவோடு உறங்கி எழுந்தாள் ஜெஸ்ஸி.

அதை வீடு என்று சொல்வதை விட மாட மாளிகை என்று தான் சொல்ல தோன்றியது ஜெஸ்ஸிக்கு.அத்தனை பிரம்மாண்டம், கலைநயம் கொண்டது அமன்ஜீத் வீடு.

Homes of the Rich: Most expensive 'bungalow' deals in the last decade

நான்கு தளங்களை கொண்டு,லிப்ட் வசதியுடன்,ஒவ்வொரு தளமும் தனி தனி வீடு அமைப்பில் இருந்தது.

ஒவ்வொரு தளத்திற்கும் தனி தனி வடிவமைப்பில் நீச்சல் குளம்,ஜக்குஸி வசதி கொண்ட குளியல் அறைகள்,பத்து கார் ஒரே சமயத்தில் நிற்கும் வண்ணம் பார்க்கிங் வசதி கொண்ட மிக பிரம்மாண்ட மாளிகை அது.

கிட்டத்தட்ட 30 அறைகள் கொண்ட அந்த மாளிகையில் கீழ் தளம் குருதேவ் ஆபீஸ் அறையாகவும், தொண்டர்கள்,மக்கள் அவரை சந்திக்கும் மீட்டிங் ஹால்,விருந்தினர் தங்கும் அறைகள்,பூஜை அறை,சமையல் அறை,டைனிங் ஹால் கொண்டது.

ரெண்டாவது தளத்தில் குருதேவ்,தன்விக்கு சொந்தமானது.அந்த தளத்தில் அவர்கள் மாஸ்டர் பெட்ரூமிற்கு அருகிலேயே ஜெஸ்ஸியை தங்க வைத்து இருந்தார் தன்வி.

ஜெஸ்ஸிக்கு என்று அவர் தேர்ந்தெடுத்த அறை ஒரு மினி அரண்மனை பீல் தான் அவளுக்கு கொடுத்தது.

“உனக்கு இங்கு உள்ள வசதி போதவில்லை ஏதாவது வேண்டும் என்றால் உன் அம்மா மாதிரி நினைத்து தயங்காமல் கேளு ஜெஸ்.இந்த அறை பிடித்து இருக்கா இல்லை வேறு அறைகளையும் பாரு மா.வேறு அறை பிடித்து இருந்தாலும் தயங்காமல் சொல்லு.”என்று தன்வி வீட்டை சுற்றி காட்ட,  அந்த பாசம் அவளுக்கு பிடித்து போனது.

மனம் இருந்தால் கூரை வீடும் மாட மாளிகை தான்.ஆனால் அன்போடு இவர் அரண்மனை மாதிரி வீட்டையே அல்லவா காட்டுகிறார்.

மூன்றாம் தளம் முழுக்க அமன்ஜீத் சாம்ராஜ்யம்.

ஒரு புறம் ஒரு அறையையே நீச்சல் குளமாய் மாற்றி இருந்தான்.இன்னொரு புறம் wall luxury என்று அழைக்கப்படும் 292இன்ச் அதாவது 24 பீட் அளவு கொண்ட மஹாப்பெரும் சுவர் டிவி,மினி பார்,ஜிம் என்று தண்ணீர் ஆறாய் செலவழிக்க பட்டு இருந்தது.

(ஹலோ இன்கம் டாக்ஸ்,லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகமா?)

வெகு நாட்களுக்கு பிறகு அன்று தான் விருந்து தடபுடலாய் நடந்தது.அமைதியை மட்டுமே அதுவரை பிரசவித்து கொண்டு இருக்கும் அந்த டைனிங் டேபிள் அன்று தான் சிரிப்பொலியையே கேட்டது.

தன்வி படைத்த விருந்தினை மூக்கு பிடிக்க உண்டு விட்டு, அந்த மெத்தையில் படுத்தது தான் ஜெஸ்ஸிக்கு தெரியும்.அத்தனை ஆழந்த உறக்கம்.

காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து கடைசியில் வீடு வந்த சேர்ந்த உணர்வுடன் நன்றாக உறங்கி தான் போனாள்.

சொந்த மகளாகவே தன்வி ஜெஸ்ஸியை தன் அன்பில் சீராட்டி, அவள் அருகே ஒரே மெத்தையில் ,உரிமையாய் கை போட்டு ஆழந்த உறக்கத்தில் இருந்தார்.அவரும் தூக்க மாத்திரையின் உதவியே இல்லாமல் உறங்குவது இன்று தான்.

அவர் முகத்திலும் நிம்மதி,மனநிறைவின் சாயல்.அந்த வயதிலும் ஒரு தெய்வீக அழகுடன்,ஒரு grace தன்வியிடம் இருப்பதை நன்கு உணர்ந்தாள் ஜெஸ்ஸி.

Rekha photo 15 of 48 pics, wallpaper - photo #550221 - ThePlace2

அவர் முகத்தையே ஆசையாய் பார்த்து கொண்டு இருந்த ஜெஸ்ஸியின் மொபைல் ஒலி எழுப்ப,தன்வி தூக்கத்தை கலைக்காத வண்ணம் வந்த அழைப்பை ஏற்றாள் ஜெஸ்ஸி.

“கோத்தா/கழுதை!…,Śaitāna/பிசாசே!…

Maiṁ tuhānū mārana jā rihā hāṁ/உன்னை கொல்ல போறேன்,

Kī tusīṁ sacē dōsata hō/நீ எல்லாம் உண்மையான தோழியா?”என்று எதிர் முனை  கத்த, ஜெஸ்ஸி அலண்டு போனாள்.

அது அவளின் தோழி சிருஷ்டி.

அவள் திருமணத்தை அட்டென்ட் செய்ய தான் இவள் தமிழ்நாட்டில் இருந்தே வந்தது.

வந்த இடத்தில் “தம் மருதம்  ” என்று  ஜெஸ்ஸி ஹாஸ்பிடலில் என்று படுத்து விட, திருமணத்திற்கு வராத தோழியை கடித்து குதறி கொண்டு இருந்தாள் சிருஷ்டி.

‘தோழியின் திருமணத்தை எல்லாம் நினைவில் வைத்து கொள்ளும் நிலையிலா நான் இருந்தேன்?… திருமண விருந்தை சாப்பிட வந்தவளுக்கு, வாய்க்கரிசி போட்டு இருப்பாங்க. இதுல இவ வேற மனுஷங்க இருக்கும் நிலை தெரியாம.’ என்று மனதிற்குள் புலம்பிய ஜெஸ்ஸி, தோழியை கூல் செய்வதில் இறங்கினாள்.

அதில் இவள் சத்தம் உயர்ந்ததையோ, அதை கேட்டு தன்வி கண் விழித்து விட்டதையோ, ஜெஸ்ஸி கவனிக்கவில்லை.

ஓரு வழியாக சிருஷ்டியை கூல் செய்து, ‘receptionக்கு நிச்சயம் வரேன்.’ என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாய், ஜெஸ்ஸி பேசிய பின் தான் அந்த அழைப்பு துண்டிக்க பட்டது.

அது வரை பிடித்து வைத்து இருந்த மூச்சை வெளியிட்ட ஜெஸ்ஸி,”பத்து friends இருக்கறவ எல்லாம் நிம்மதியா இருக்கா… இவ ஒருத்தியை வச்சிட்டு நான் படும் பாடு இருக்கே! …

ஹே குரு!…ஹே பகவான்!… உனக்கே இது சரியாய் இருக்கா?”என்று ஜெஸ்ஸி புலம்ப வாய் விட்டு சிரித்தார் தன்வி.

சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பிய ஜெஸ்ஸி,தன்வியை கண்டதும்,”ஐயோ சாரி ஆன்ட்டி! …ரொம்ப சத்தமாய் பேசி, உங்க தூக்கத்தை கலைச்சிட்டேனே?…சோ சாரி .”என்றாள் அவர்  கரங்களை பிடித்து கொண்டு.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆன்டி எல்லாம் வேண்டாம்.மாதாஜி/அம்மா என்று கூப்பிடு ஜெஸ்.”என்றார் ஜெஸ்ஸி கன்னத்தை வருடியபடி.

அவர் உள்ளங்கையில் தன் கன்னத்தை வைத்து,ஒரு கணம் கண் மூடி ஆழ்ந்து சுவாசித்த ஜெஸ்ஸி,”ஒகே மா”என்றாள்.

“என்ன போன் அது?…யார் கிட்டே அத்தனை சாரி சொல்லிட்டு இருந்தே தீ/மகளே?”என்றார் தன்வி.

போன் விவரம் ஜெஸ்ஸி சொல்ல,”இதுக்கா தயங்கிட்டு இருக்கே?.இதோ அமன் இருக்கான்.வீடு முழுக்க    கார் இருக்கு.துணைக்கு அந்த தடியனை பாடிகார்ட் வேலை செய்ய வச்சிட்டா போகுது.

நீ ரெடி ஆகு ஜெஸ்.இந்த மேரேஜ்க்கு அங்கிள்-அமன் அப்பாக்கு கூட தான் அழைப்பு வச்சிட்டு போனாங்க.திடீர் என்று ஏதோ மீட்டிங் என்று அங்கிள் கிளம்பிட்டார். அவருக்கு பதில் இவன் அட்டென்ட் செய்தது போலவும் இருக்கும்.”என்றவர் எழுந்து போய்,

நான்கு குஜிலிகளுடன் கனவில் “லவ் தி வெ யு டான்ஸ்/ love the way you dance என்று ஆடி கொண்டு இருந்த அமன்ஜீத்தை அவர் எழுப்ப,  அவன் எழுந்து தூக்க கலக்கத்தில் நாலு ஸ்டெப் போட்டு வைக்க,தன்விக்கு ஹார்ட் அட்டாக் வராதது ஒன்று தான் குறை.

https://www.youtube.com/watch?v=lFUOL_2ZT2s

சினிமாவில் பேய்யை பார்க்கும் கோவை சரளா ரியாக்ஷன் மாதிரி, தன்வி ஒரு ரியாக்ஷன் கொடுக்க,அமன்ஜீத் நொந்தே போனான்.

“ஹே பாப்ரே!…குதா! …என்ன ஆச்சு இவனுக்கு?” என்று வாய் விட்டே தன்வி புலம்ப அசடு வழிய நின்றான் மகன்.

தனக்கு எதுவும் இல்லை,’கனவில் பிரபு தேவா டான்ஸ் ஆடிஷன் வச்சார்’ என்று கதை கதையாய் புனைந்து, அவரை நம்ப வைப்பதற்குள் அவனுக்கு நாக்கு தள்ளி விட்டது.

அப்பவும் நம்பாமல், அவனை சந்தேகத்துடன் பார்த்தவாறு தன்வி, திருமணத்திற்கு அவன் ஜெஸ்ஸியுடன் சென்றே ஆக வேண்டும் என்று அவர் கழுத்தை பிடித்து வீட்டை வீட்டு தள்ளி விட, சீக்கிரம் போக வேண்டும் என்ற அவன் எண்ணத்திற்கு தான், கடந்த ஒரு மணி நேரமாய் அந்த ரோட்டில் அவன் நின்று இருப்பது.

இப்படியாக கதையின் ரெண்டாவது கதாநாயகன், அவன் பிளாஷ் பாக்கை நினைத்து பார்க்க,அவனை அந்த காட்டிற்கு நடுவே இருந்து காக்கும் கடவுளாக விதி, அர்ஜுனை கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை கண்டு வாய் விட்டு கத்த வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.

‘போயும் போயும் இந்த சிம்ப்பன்சி தான் இந்த வழியாக வர வேண்டுமா?….இவன் வண்டியில் ஏறுவதற்கு பதில், ஒரு குப்பை அள்ளும் லாரியில் ஏறிவிடுவேன்.’என்று எண்ணி கொண்ட அமன்ஜீத் கண்களால் அர்ஜுனை பார்த்து அம்பு விட்டு கொண்டு இருந்தான் கோபத்தில்.

அர்ஜுன் எதையும் சொல்வதற்குள் ப்ரீத்தி,அமர்நாத்,தீப்  கீழே இறங்கி விட்டு இருக்க,ஸ்டேரிங் வீல் அழுந்த பிடித்தவாறு அமர்ந்து இருந்தான் அர்ஜுன்.

‘எங்கே இருந்துடா என் லவ் பீலிங்ஸ்க்கு தடை போட என்றே கிளம்பி வரீங்க?… அவன் தெருவில் நின்னா இதுங்களுக்கு என்ன வந்தது?… அப்படியே வெயில் பட்டால் கருத்து போயிடுவான் வெள்ளை குரங்கு .

‘இங்கே காதல் பயிர் வளர வைக்க வா’ என்று கூப்பிட்டால்  இந்தம்மா நட்பு பயிரை வளர்க்க இறங்கி போறா… லூசுடீ நீ …” என்று வாய் விட்டு முனகினான் அர்ஜுன்.

(சர்தார்ஜி! …விவசாயி என்பதை அப்போப்போ நிரூபிக்கணுமா?)

காரில் இருந்து அர்ஜுன் அமன்ஜீத்தை முறைக்க, நடு ரோட்டில் இருந்து அமன்ஜீத் அர்ஜுனை  முறைத்து கொண்டு நின்றான்.

(கண்ணுகளா!…. இதை எல்லாம் நாங்க  ‘அக்னிநட்சத்திரத்திலேயே’  பார்த்துட்டோம்)

அர்ஜுன் கடுப்பை கண்டு கொண்ட அமன்ஜீத், ப்ரீத்தியிடம் உருகி உருகி பேச,இங்கே ஒரு பசிபிக் RING OF FIRE என்ற எரிமலைகள் தொகுப்பே உருவாகி கொண்டு இருந்தது.

நடுவே அமன்ஜீத் நிற்க ஒரு பக்கம் ப்ரீத்தி,இன்னொரு பக்கம் ஜெஸ்ஸி என்று நின்று இருந்தான் அவன்.

“ஆமா இவர் பெரிய லார்ட் க்ரிஷ்.ஒரு பக்கம் பாமா.இன்னொரு பக்கம் ருக்மணி என்று போஸ் தந்துட்டு இருக்கார்.மூஞ்சை பாரு சப்பாத்தி கணக்கா இருக்கான். டேய்!… டேய்!…. போதும்டா ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாது.நாங்களே அடக்கி தான் வாசிக்கிறோம் அவகிட்டே.”என்று வாய் விட்டு முனகினான் அர்ஜுன்.

அதற்குள் ப்ரீத்தியும், ஜெஸ்ஸியும் ஒட்டி உறவாடி அவர்கள் நட்பு பயிரை  கஞ்சா செடி போல் வளர்த்து கொண்டு இருக்க, தீப் டிரைவரிடம், ‘என்ன?’ என்று விசாரிக்க, அமர்நாத் அமன்ஜீத் இடம் விசாரித்து விட்டு அர்ஜுனிடம் திரும்பினார்.

“அர்ஜுன்!…இவர்களும் அதே receptionனுக்கு  தான் போறாங்க.கார் ரிப்பேர் ஆகி இருக்கு.ஷெட்டுக்கு தான் போகணும் என்று டிரைவர் சொல்றான்.அங்கே போய்ட்டு நாம மெக்கானிக் அனுப்புவோம்.இவங்களை  கூட்டிட்டு போகலாம் அர்ஜுன்.”என்று அமர்நாத் அவனிடம் வந்து சொல்ல அவள் அருகே வந்த ப்ரீத்தியும்,

” சார்! …ப்ளீஸ் சார் .ஜெஸ்ஸி எனக்கு ரொம்ப க்ளோஸ். அவங்களும் கூட அங்கே தான் போறாங்க சார்.ப்ளீஸ் சார்.” என்று கெஞ்ச

‘இவ சாதாரணமாய் கேட்டாலே, அதை செய்துடுவேன் …இப்படி குலுங்கி,சிணுங்கி கேட்டால் செய்ய மாட்டேன் என்றா சொல்ல தோன்றும்?…

கேக்கறது தான் கேக்கிறா… நிலாவில் ஒரு பிளாட்,மங்கள்யான் ராக்கெட்டில் ஒரு இடம்,ஆழ்கடலின் ஆழத்தில் ஒரு ஷாப்பிங் மால், டிராகன் பல், என்று கேக்க கூடாதா?

(இங்கு இருந்துடா இப்படி எல்லாம் கிளம்புறீங்க! …ரூம் போட்டு யோசிப்பாங்களோ!…)

‘போயும் போயும் இந்த சப்பாத்தி மாவு,சைனா மூக்கன்னுக்கு தான் ஹெல்ப் செய்ய சொல்லனுமா?… இவனை கூட்டி போவதற்கு நாலு கழுதையை ஏற்றி கொண்டு போய் விடுவேனே!….’என்று மனதிற்கு புலம்ப ப்ரீத்தியின்,

‘ப்ளீஸ் அர்ஜுன்!… ‘ என்ற சிணுங்கல் அசைத்து பார்க்க,

‘சோ ஸ்வீட் …ரசகுல்லா இப்படி கொல்றியேடீ!…’ என்று அர்ஜுன் மனம் உருகியது.

“ஒகே… ஒன் கண்டிஷன் …நோ சார்….யு கால் மீ நோ சார்” என்றான் அர்ஜுன்.

‘ஹ்ம்ம்! ….ஏற்க்கனவே டிஸ்டன்க்ஸ் மைண்டைன் செய்ய முடியாம தவிக்கிறவ கிட்ட  போய் …’ என்று மனதிற்குள் உருகியவள்,

“ஒகே அர்ஜுன் ஜி!..”என்றாள் புன்னகையுடன்.

“இதையே தானேடா நான் அரை மணி நேரமாய் கேட்டுட்டு இருக்கேன்.” என்று அமர்நாத் கடுப்பாகி, அர்ஜுனை முறைக்க,அசடு வழிய ஒரு சிரிப்பு சிரித்து வைத்தான் அவர் மருமகன்.

ஒரு சில கிப்ட் மட்டும் கையில் எடுத்து கொண்டு மற்ற பெரிய கிப்ட் எல்லாம் எல்லாம் அமன் வண்டியில் ஏற்றி,  கார் ரிப்பேர் ஆனதும் சிருஷ்டி வீட்டில் கொடுத்து விடும் படி அர்ஜுன் சொல்ல,பொருட்கள் எல்லாம் அமன்ஜீத் வண்டியில் ஏற்றப்பட்டு பின் இருக்கை தீப்,அமர்ந்த அமரும் விதமாய் செட் செய்ய பட்டது.

அமர்நாத்தும்,  தீப்பும் பின்னால் ஏறிக்கொள்ள,ப்ரீத்தியும் ஜெஸ்ஸியும் நடு சீட்டில் அமர்ந்து கொள்ள,அர்ஜுன் பக்கத்தில் அமர்ந்தான் அமன்ஜீத்.

‘யார் முகத்தில் சாமி இன்னைக்கு முழித்தேன்!….இந்த எருமை பக்கத்தில் உட்காரும் கொடுமை வேறா?….’என்பது தான் ஆண்கள் இருவரின் மைண்ட் வாய்ஸ்சாக இருந்தது.

‘இவன் என் பக்கத்துல உட்கார தான் இத்தனை லட்சம் போட்டு கார் வாங்கி இருக்கேன் பாரு… அவளுக்கும் அறிவு இல்லை. இப்போ தான் தோழி ,கோழின்னு ஆளை கடுப்பு ஏத்துறா. முன் சீட்டில் என் கூட உட்கார்ந்து அவ கூட பேசினா அவளுக்கு காது கேட்கதாமா?…. அவ சின்ன குழந்தை.திருவிழாவில் தொலஞ்சிட போறா .

என் கையை பிடிடீ என்றால்,  பின்னால் உட்கார்ந்து அவ கையை பிடிச்சிட்டு வருது Mānasika/மெண்டல்.இதுங்களை…அப்படியே பாச பயிர் வளர்க்கிறாங்க .

நடந்து வந்தா இல்லை குப்பை லாரியில் ஏறி வந்தா இந்த சப்பாத்தி குறைஞ்சிடுவான் பாரு.’ என்று மனதிற்குள் அமன்ஜீத்தை பார்த்து கருவி கொண்டு இருந்த அர்ஜுன், ப்ரீத்தி,அமர்நாத்துக்கும் மனதிற்குள் மண்டகப்படி நடத்தி கொண்டு இருந்தான்.

அமன்ஜீத் ஒழுங்காய் ரோட்டை பார்த்தவாறு அமர்ந்து விட்டால் பிரச்சனையே இல்லையே!….

அவன் தான் அர்ஜுன் கோபத்தை பெட்ரோல் கிடங்கையே   ஊற்றி கிளறியே ஆவேன் என்று கங்கணம் புதிதாய் கட்டி கொண்டு இருக்கிறானே.

முழுவதுமாய் பெண்கள் இருவரையும் பார்த்தார் போல் திரும்பி அமர்ந்த அமன்ஜீத் அவர்களிடம் கடலை போட ஆரம்பித்தான்.

“ஐயோ ப்ரீத்திஜி!…உங்க வீரம்,PRESENCE OF MIND பத்தி பெரியப்பா சொன்ன உடன்,  உங்க பரம விசிறி ஆகிட்டேன் நான்” என்றான் அமன்

‘பார்த்து விசிறி கிழிஞ்சுட போகுது .’அர்ஜுன்

“அழகோடு,  வீரத்தை பார்ப்பது ரொம்ப ரேர்.அதில் புத்திசாலித்தனமும் சேர்ந்தால்,  அதன் காம்பினேஷன் ஹைராணி/SURPRISE “

‘உன் ஹைராணியில்  தீயை வச்சி கொளுத்த.’

“உங்களை முதல் முறை பார்த்ததும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியக மெழுகு பொம்மைக்கு தான் உயிர் வந்துடுச்சோ என்று நினைத்தேன்.”

‘ஆமாடா!… அப்படியே பேசி பேசி அவளை உருக வைக்க முயற்சி செய்யறீங்களாக்கும்.டேய் வழியுதுடா.’

“எப்படிங்க உங்களால் இப்படி மத்தவங்களுக்கு என்று பார்க்க முடியது?”

“ஹ்ம்ம் கண்ணு இருக்கு பார்க்கிறா. உனக்கு என்னடா வந்துச்சு வெள்ளை சிம்பன்சி?…’

“நீங்க சோ ஸ்வீட்டுங்க.”

‘ஹ்ம்ம்!… ப்ரீத்தியை குரா/வெல்லத்தில் செய்து இருக்காங்க .அதான் அவ சோ ஸ்வீட்டா இருக்கா ….  பார்த்து ப்ரீத்தி கொஞ்சம் தள்ளியே நில்லு …விட்டா முழுங்கிடுவான் சம்பல் காட்டு கொள்ளைக்காரன்.’

“so lovelyங்க.”

‘Hmm…fair and lovely…யில் குளிச்சுட்டு வந்து இருக்கா…

Kākarōca/கரப்பான் பூச்சி மண்டையா!…வாயை மூடு.

அய்யோ இளிக்கிறானே!… .வாந்தி வருதே .இது எல்லாம் ரொமான்டிக் லுக்கு சகிக்கலை .’

கார் ஒட்டி கொண்டே, அமன்ஜீத்தை மனதிற்குள் வறுத்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.

‘அர்ஜுனுக்கு BP ஏத்தி கொண்டு இருக்கிறோம்.’ என்று அமன்ஜீத் தெரிந்தே கடலையை, ஜொள்ளை நயாகரா ரேஞ்சுக்கு ஓபன் செய்ய,இவர்களின் சரித்திரம், பூலோகம் எல்லாம் தெரியாத ப்ரீத்தி, ஒன்றும் அறியாதவளாய்,அர்ஜுனுக்கு டென்சன் ஏத்தி கொண்டு இருந்தாள் அமன்ஜீத் உடன் பேசுவதன் மூலம்.

அர்ஜுனிடம் பேசும் போது உள்ள மொழி பிரச்சனை, மனதிற்குள் ஒரு தடை, ஒரு இன்பமான பரபரப்பு  ப்ரீத்திக்கு அமன்ஜீத்  இடம் வரவில்லை.

ஆங்கிலம் ப்ரீத்தி அளவிற்கு பேச தெரியவில்லை என்றாலும் அடிப்படை ஆங்கிலத்தை வைத்து அவள் பேசுவதை புரிந்து கொள்ளவும்,தட்டு தடுமாறி பதில் சொல்லவும் அம்னஜீத்தால் முடிந்தது.

அது கூட முடியாத அர்ஜுன்,இவர்கள் பேசுவதை கண்டு அப்படியே எரிந்து கொண்டு இருந்தான்.

“தீப்! ..டேய் தீப்! …ஏதோ கருகும் வாடை வரலை?”என்றார் அமர்நாத்

“மாமா!…. இன்னைக்கு உங்களுக்கு நேரமே சரியில்லை …வேணாம் …அண்ணா, அமன் அண்ணா விடும் ஜொள்ளில், பயங்கர கோபத்தில் இருக்கார் .

ஸ்டேரிங் வீலுக்கு வாய் இருந்தால் அழுதிடும்.அடுத்து நீங்க தான்.பாருங்க rearவியூ கண்ணாடி மூலம் உங்களை எவ்வளவு பாசமாய் பார்க்கிறார் பாருங்க.'”என்று தீப் சுட்டி காட்டஅமர்நாத் கண்களுக்கு தெரிந்தது கோபத்தில் சிவந்து இருந்த இரு விழிகள் மட்டும் தான்.

Akshay Kumar Angry Scene | Jaanwar | - YouTube

‘ஹே பாப்ரே!.. இவன் எதுக்கு இப்போ கண்ணால் என்னை பிரை செய்துட்டு இருக்கான்?”என்றார் அமர்நாத் பீதியுடன்.

“இந்த பயம் இவங்களை வண்டியில் ஏற்றும் முன் இருந்து இருக்கணும்.பெரிய ராபின் வுட் நீங்க.யாருக்கு என்றாலும் அப்படியே பாய்ந்து போய் உதவிட்டு தான் மறுவேலை…” என்றான் தீப்.

“டேய்!,,,, நீயும் தானேடா கூட வந்தே.அமன் கூட பேசினே.இப்போ என்ன சம்மர் சால்ட் அடிக்கிறே? ..இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.”என்றார் அமர்நாத் பயத்துடன்.

அர்ஜுன் கிட்டே ஒற்றை ஆளாய் யார் உதை வாங்குவது

“ஆமா நான் கூட வந்தேன் தான்.கார் ரிப்பேர் என்றதும் ‘மெக்கானிக் அனுப்பறேன்’என்பதோடு கழன்று இருப்பேன்.இப்போ பாருங்க,அவன் அண்ணியை பார்த்து விடும் ஜொள்ளில், “பாணி புயலை” விட அதிக சேதாரம் உமக்கு தான் ஏற்பட போகுது.”என்றான் தீப்.

இப்படி மௌன பனி போர் ஒன்று தன்னை வைத்தே நடத்த பட்டு கொண்டு இருப்பதை அறியாத ப்ரீத்திக்கு, அமன் அர்ஜுன் உறவினன் என்ற வரை புரிந்தது.

அர்ஜுன் உறவினன் என்ற காரணத்திற்காகவே அவன் விடும் ஜொள்ளை எல்லாம் பொறுத்து கொண்டு பேசி கொண்டு வந்தாள்.ஆனால் அதுவே அவளுக்கு வில்லங்கமாய் மாறி கொண்டு இருந்தது.

மீண்டும் ஒரு பல கோண காதல் கதைக்கு அங்கே வித்து விழுந்து கொண்டு இருந்தது.

start the music

பயணம் தொடரும்…

error: Content is protected !!