OVOV 47
OVOV 47
‘(ஹர்மந்திர் சாஹிப்’ என்றால் ‘கடவுள் கோயில்’ என்று பொருள். கிபி 1577 யில் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ், ஒரு குளத்தை தோண்டினார். அது அமிர்தசரஸ் (“அழியா தேன் குளம்” என்று பொருள்) என அழைக்கப்படுகிறது. அதை சுற்றி வளர்ந்த நகரத்திற்கும் அதே பெயர் கொடுக்கப்பட்டது. குவிமாடம்/dome 750 கிலோ தூய தங்கம் கொண்டு செய்யப்பட்டு உள்ளது)
அந்த காலையும் மிக அழகாக தான் விடியும் போது விடிந்தது.அந்த ரெண்டு ஜோடி காதலர்களுக்கு இன்னும் அழகாய்…காதல் வந்து விட்டால் உலகமே வர்ணமயமானதாகி தான் விடுகிறது.
இரவின் மடியில் காதலை பகிர்ந்து கொண்டு,காதலர்களுக்கே உண்டான நெருக்கம்,அணைப்புடன், இதழ் கவிதையினை பகிர்ந்து கொண்டு,பிரிய மனமில்லாமல் பிரிந்து,தங்கள் சரி பாதியை நினைத்து கொண்டே உறக்கத்தை விழிகள் தொலைத்திருக்க, இதழ்கள் ரகசிய புன்னகையில் மலர்ந்திருக்க, விடிய விடிய விழித்தே கிடந்தனர் அந்த காதலர்கள் நால்வரும்.
காதலர்கள் காதல் என்ற போதையால் உறக்கத்தை துறந்திருந்தால்,அமர்நாத் மனதின் குழப்பத்தால் தூக்கத்தை இழந்து தவித்து கொண்டிருந்தார்.
அர்ஜுன்,அமன் இருவரில் ஒருவரிடம் பெண் மாறி விட்ட விஷயத்தை சொல்வதா, இல்லை அப்படியே மறைத்து விடுவதா என்று புரியதா குழப்பம் அப்பொழுதும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
பணம்,பதவி எல்லாவற்றையும் தாண்டி அது குடும்ப கெளரவம் சம்பந்தப்பட்டது.’பகத் சிங்’ என்ற கெளரவம்.நாளை குருதேவ் முதலமைச்சர் ஆக கூட ஜெஸ்ஸி பயன்படலாம்.அந்த அளவிற்கு சுதந்திர போராட்ட தியாகியின் பெயர் பஞ்சாபிகளின் உயிர்,உணர்வு எல்லாம்.
காதலர்கள் தங்கள் இணையை அறிந்து கொண்டது தான் இவருக்கு தெரியாதே.அதனால் பெரும் குழப்பம் அவரை சூழ்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது.இரவு முழுவதும் எதை எப்படி செய்யலாம் என்று குழம்பி,விடிந்தும் விடியாததுமாய் தன் ஊழியர்களை அழைத்து லெப்ட்,ரைட் வாங்கி கொண்டிருந்தார்.
“ச்சே யூஸ்லெஸ்…”என்று கடைசியாய் பொரிந்து விட்டு, திரும்பிய அவர் திகைத்து போனார்.அங்கே கைகளை மார்பின் குறுக்காக கட்டி, பால்கனி கதவு சாத்தியிருக்க அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அவன்.முகத்தில் அத்தனை கோபம் தெறித்து கொண்டு இருந்தது.அவன் முகமே சொல்லாமல் சொன்னது அவர் பேசிய அனைத்தையும் அவன் கேட்டு விட்டான் என்று.
அர்ஜுன்,அமன் இருவரில் யார் அவன்?
அடுத்த நொடி அமர்நாத் சுவரோடு சுவராய் அமுக்கப்பட்டு, அப்படியே அலாக்காக தூக்கப்பட்டார்.
“என்ன நடந்தது…உண்மையை சொல்லுங்க…மறைக்க முயல வேண்டாம்.”என்றான் அவன்.
‘அடப்பாவி விட்டா இப்படியே தூக்கி இங்கேயிருந்து கீழே போட்டுடுவான் போலிருக்கே!.’என்று அமர்நாத்க்கு சொர்க்கம் கண் முன்னே தெரிய,அங்கிருந்து ரம்பா,ஊர்வசி,மேனகை கையசைப்பதை போல் காட்சி மனக்கண்ணில் ஓடியது.
அமர்நாத் சிக்கி திக்கி நடந்த ஆள்மாறாட்டத்தை சொல்லி முடிக்க, அவரை பொத்தென்று கீழே விட்ட அவன் கோபம் எல்லையை கடக்க,”என்ன சொல்றீங்க?”என்று பாம்பின் சீறலாய் வந்தது அவன் குரல்.
“எப்படி நடந்தது என்று தெரியலை…”என்றார் அவர் அவன் கோபத்தால் அதிர்ந்தவராய்.
“இது யாருக்காவது தெரியுமா?” என்றான் அவன் கோபத்துடன்.
“இல்லை…சொன்ன பிரச்சனை ஏதாவது வருமோ என்று…” என்று அவர் இழுக்க,”உங்களுக்கு தானே! நிச்சயம் கயிறை கட்டி இங்கேயிருந்தே தொங்க விட்டு,கிணற்றில் இருந்து தண்ணீர் இரைப்பது போல் இழுத்து இழுத்து விளையாடுவாங்க தான்.இந்த பஞ்சாபில் நீங்க இருக்கவே முடியாத படி செய்ய வேண்டும் தான்.”என்றான் அவன் தடையாய் தேய்த்து கொண்டு.
‘அடப்பாவி!…விட்டா இவனே கயிறை அவுங்க கையில் கொடுப்பான் போலிருக்கே.பர்கிதா!….’என்று அவர் முகம் வெளிறி நின்றவர்,
“ஐயோ பர்கிதா!இந்த அரக்கன் கிட்டே மாட்டிட்டேனே.இனி உன்னை பார்க்க முடியுமான்னு தெரிலையே பிபீ.”என்று அமர்நாத் வாய் விட்டு புலம்ப,அவரை வெட்டவா,குத்தவா என்று முறைத்தான் அவன்.
“யோவ் !…எங்க வாழ்க்கையில் கும்மி அடிச்சுட்டு,அதுக்கே உன்னை துவைத்து எடுக்கணும்.எங்களை இந்த இக்கட்டில் மாட்டி விட்டுட்டு பிபீ கேக்குதோ பிபீ….நாலு அப்பு அப்பினால் உமக்கே பிபி ஊத்திடுவாங்க….”என்றான் அவன் அவர் சட்டை காலரை பிடித்து உலுக்கியவாறே.
“அப்படி எதுவும் நடக்க கூடாது என்றால் ….யாரிடமும் சொல்ல வேண்டாம்.இதை அப்படியே மறைச்சிடுங்க.நான் சொல்வதை செய்யுங்க.” என்று அவர் காதில் அவன் ஏதோ சொல்ல அவர் வெலவெலத்து போனார்.
“வேண்டாம்….இது தேவை இல்லாத வேலை.நான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன்.பெண் மாறியதை விட இது மிக பெரிய பிரச்சனை ஆக்கி விடும்.இதற்கு நான் விஷயத்தையே சொல்லிடறேன்.” என்று கிளம்பிய அவரை இழுத்து மீண்டும் சுவரோடு சுவராக வைத்தவன்,அவர் நெஞ்சில் தன் முழங்கையை வைத்து அழுத்தி,
“தொலைச்சுடுவேன்….வயசானவர் என்று கூட பார்க்க மாட்டேன். ஜெஸ்ஸி அமன்ஜீத்துக்கு தான்,ப்ரீத்தி அர்ஜுனுக்கு தான்.புரிந்ததா!நான் சொல்வது காதும் காதும் வைத்தார் போல் செய்து முடிங்க.”என்றவன் அவரை முறைக்க,அவருக்கு தான் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகி விட்டது போல் தோன்றியது .
அதிர்ந்து போய் நின்றிருந்தார் அமர்நாத்.
“சொன்னது நினைவு இருக்கட்டும்.விஷயம் யார் மூலமாய் வெளியே வந்தாலும் நான் உங்களிடம் தான் வந்து நிற்பேன்.ஒரு வேலையை கூட உருப்படியாய் செய்வது இல்லை.எந்த தவறும் வராமல் நான் சொன்ன இந்த வேலையை செய்து முடிங்க. புரிந்ததா?”என்று அவன் உறுமி விட்டு செல்ல,தலையை பிடித்து கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அவர் பொத்தென்று அமர்ந்தார்.
‘ரப்ஜி!…ஹே குதா!…என்ன செய்வேன்?’என்று அவர் மனத்திற்குள் புலம்பி கொண்டிருக்க,”சோ பெண் மாறி போச்சா அங்கிள்?”என்ற பெண் குரல் கேட்டு பதறி அடித்து எழுந்தார் அமர்நாத்.
“நீயா!”என்று அவர் அதிர,
“நானே தான்.நீங்க உங்க ஆட்களிடம் பேசும் போதே வந்துட்டேன். வயசானவர் என்று நான் செய்ய தயங்கியதை அவர் செய்துட்டார்.என்ன சொல்லிட்டு போனார்?உங்க காதருகில் சொல்லியதால் சரியாகி கேட்கவில்லை.கொஞ்சம் திரும்ப சொல்றீங்களா?’என்றாள் அவள்.
இந்த இவள் ப்ரீத்தியா,ஜெஸ்ஸியா?
“அது…அது…”என்று அவர் தடுமாற,”சொல்லுங்க அங்கிள்.” என்றாள் அவள்.
‘அவன்’ சொல்லிவிட்டு போனதை அமர்நாத் தயங்கி தயங்கி சொல்ல, அதை கேட்ட அவள் ஒரு நொடி திகைத்தாலும் அடுத்த நொடி யோசனையில் இறங்கியவள்,சற்று நேரம் கழித்து, “சொன்னதை செய்துடுங்க அங்கிள்.”என்றவள் பேச்சை கேட்டு திகைப்பது அவர் முறை ஆயிற்று.
அமர்நாத் மேல் அணு ஆயுதம் பயன்படுத்தி விட்டு, எதுவுமே நடக்காதது போல் தங்கள் அறைக்குள் சென்று விட்ட இருவரை என்ன செய்வது என்று புரியாமல் நின்ற இடத்திலேயே நின்று விழித்து கொண்டிருந்தார் அமர்நாத்.
சில பல நொடிகளுக்குள் நடந்து விட்ட இதையெல்லாம் எப்படி எடுத்து கொள்வது என்று புரியாமல் அமர்நாத் திகைத்து போய் விழித்திருக்க, பொழுது புலரும் நேரம் தங்களையும் அறியாமல் உறக்கத்தை தழுவி இருந்தனர் காதலர்கள்.
கனவில் அர்ஜூனுடன் டூயட் பாடி கொண்டிருந்த ப்ரீத்தியின் காதுகளில்,”பேபி” என்ற குரல் வந்து கனவினை,உறக்கத்தை கலைக்க, கனவில் வந்தவன், நிஜத்தில் அருகில் இருப்பதை கண்டு பதறி அடித்து எழுந்த ப்ரீத்தியை எழ விடவில்லை அர்ஜுன் கைகள்.
“நோ கோ..”என்றவன் அவள் தோளின் மீது தலை சாய்த்து அவளை இறுக அணைத்து கொண்டிருந்தான்.
‘சத்தியமா இவன் மலைப்பாம்புக்கு கசின் பிரதர் தான்…’என்று மனதிற்குள் நினைத்து கொண்ட ப்ரீத்தி, அவனை உலுக்கி, சைகையால், ‘இங்கே என்ன செய்யறீங்க?’என்று கேட்டாள்.
“பஞ்சாப் கோல்டு….மீ யுவர் சைவைத்திரா….ஸ்வெட்டர்.”என்று அர்ஜுன் சொல்ல,அவனின் கள்ளத்தனம் கண்டு ப்ரீத்திக்கு சிரிப்பு பொங்கியது.
‘பஞ்சாப் குளிருதாம்….அதில் இருந்து என்னை காக்க இவர் தான் ஸ்வெட்டர்ராம்.பஞ்சாபி மாக்கான் என்று நினைத்தால் விவரமா தான்யா இருக்கான்.’என்று மனதிற்குள் எண்ணம் ஓடியது.
ஸ்வெட்டர் என்பதன் அர்த்தத்தையே மாற்றி கொண்டு இருந்தான் அந்த கள்வன்.
“காபி.”என்று அர்ஜுன்,ப்ரீதிக்காக எடுத்து வந்த காபி கோப்பையை கை காட்ட,’ஹாஹா பெட் சர்விஸ் நல்லாத்தான்யா இருக்கு.’என்று நினைத்து கொண்டு எழ முயன்றவளை விடாமல் வம்பு செய்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
“அர்ஜுன்!”என்ற ப்ரீத்தி அவனை தள்ள,அர்ஜுன் இவளை இழுக்க என்று காலையில் அங்கு ஒரு, ‘டக் ஆப் வார்’ நடந்தது.
‘இவன் பார்வை மாறுது ப்ரீத்தி.எஸ்கேப்.’என்று மனம் குரல் கொடுக்க, அவனை ஒரே தள்ளாக தள்ளி விட்டு அருகில் இருந்த பாத்ரூமிற்குள் ஒளிந்து கொண்டாள்.
“ப்ரீத்தி!கம் குயிக்…”என்றான் அர்ஜுன்,சற்று நேரம் கூட அவளை பிரிந்து இருக்க முடியாதவனாய்.
தன்னை தூய்மை செய்து கொண்ட ப்ரீத்தி வெளியே வரும் போது யோகா பாண்ட்,ஷர்ட்டில் வெளி வர,அந்த அறையில் விசில் சத்தம் அவளை வரவேற்றது.
“அர்ஜுன்!ஐ ஆம் கோயிங் டு டூ யோகா.தென் டேக் பாத்.பை.” என்று பாதி ஆங்கிலமும்,பாதி சைகையும் சொல்லி முடித்தாள் ப்ரீத்தி.
“ஒகே…யோகா…டூ…யோகா…”என்றவன் கிளம்ப,ப்ரீத்தி பிடித்திருந்த மூச்சை வெளிஇட்டவளாய் தன் யோகாவை ஆரம்பிக்க அவள் மனம் போர்க்கொடி உயர்த்தியது.
‘இப்போ இந்த யோகா முக்கியமா?எவ்வளவு ஆசையாய் உனக்கு காபி எல்லாம் கொண்டு வந்தான்!பதிலுக்கு ஒரு மினி டிபன் கொடுக்கிறதை விட்டுட்டு.’என்றது மனம்.
‘நாம தங்கி இருப்பது ஹோட்டல்.மார்னிங் டிபன் அவங்களே கொடுக்க போறாங்க.இதுல நான் எதுக்கு சமையல் அறைக்கெல்லாம் சென்று சமைக்கணும்?’என்று புத்திசாலித்தனமாய் மூளை கேள்வி கேட்க,மனம் அதன் தலையில் அடித்தது.
‘டிபன் என்றால் ….’என்று மனம் கிளாஸ் எடுக்க, ப்ரீத்திக்கு முகம் சிவந்து போனது.
‘மினி டிபன்,ஸ்டார்ட்டர்ஸ்,மினி மீல்ஸ்,டின்னெர்’என்று மனம் அடுக்க சத்தியமாய், அது எல்லாம் உண்ணும் உணவை குறிக்கவில்லை.
‘இந்த வம்பே வேண்டாம்.’என்று நினைத்து கொண்டு மனதின் தலையில் ஒரு போடு போட, அது அடங்கிய உடன் தான் ஏதோ சரியில்லை என்று மூளை எச்சரிக்க,என்ன என்று திரும்பி பார்த்த ப்ரீத்தி,கால் தடுமாறி கீழேயே விழுந்தாள்.
‘அடப்பாவி…இவன் இன்னும் கிளம்பலையா?’என்று ப்ரீத்தி ஜெர்க் ஆகி நிற்க,கட்டிலில் ரெண்டு கால்களையும் மடித்து அமர்ந்து,கன்னத்தில் ரெண்டு கையையும் வைத்து இவளையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்தது அர்ஜூனே தான்.
“அர்ஜுன்!இங்கே என்ன செய்யறீங்க?”என்றாள் ப்ரீத்தி.
“மீ சீ யோகா….”என்றான் அந்த திருடன்.
‘இவன் யோகாவையா பார்த்தான்?’என்று மனம் கேள்வி எழுப்ப,அவனை கண்டு கொள்ளாமல் எவ்வளவு முயன்றாலும் ப்ரீத்தியால் அதற்கு மேல் ஸ்ட்ரெட்ச் செய்ய முடியவில்லை.
அதுவே சின்ன டீ ஷர்ட்.தன் வீட்டில் வழக்கம் போல் போடுவதை, ப்ரீத்தி அணிந்து கொண்டிருக்க அது இவள் ஒவ்வொரு வளைவுக்கும், நெளிவுக்கும் எக்குத்தப்பாய் உயர்ந்து தாழ்ந்து, அர்ஜுனுக்கு பிபி ஏத்தி கொண்டிருந்தது.
“கோ அர்ஜுன்!”என்றாள் ப்ரீத்தி அதற்கு மேல் அவன் பார்வையை தாங்க முடியாதவளாய்.
“மீ யோகா….சிக்கா மைனு…டீச்…”என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் அவள் முன்புறம் வந்து நின்றான்.
‘இன்று இவன் ஒரு மார்க்கமாய் தான் இருக்கான்.’என்ற ப்ரீத்தி,”டூ பரீத் எக்சர்சைஸ்.”என்று சுவாசத்தை உள் இழுக்க அர்ஜுனிடம் இருந்து பெருமூச்சே வெளிவந்தது.
யோகா என்ற பெயரில் ப்ரீத்தி வளைய சொன்னால்,அவளை வளைத்தான்.குனிய சொன்னால் அவள் மீது சாய்ந்து குனிந்தான்.காலை தூக்க சொன்னால் இவளை மார்போடு அணைத்தவாறு தூக்கினான். மொத்தத்தில் அங்கே யோகா கற்று கொள்கிறேன் என்ற பெயரில், ப்ரீத்தியை விதவிதமாய் தன் கை வளைவில் வைத்து காதல் செய்து கொண்டு இருந்தான் அந்த இம்சை அரசன்.
அங்கு யோகா நடந்ததோ இல்லையோ காதல் எக்குத்தப்பாய் நடந்தது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் ப்ரீத்தியின் தடைகளை தாண்டி அவளுடன் மாய உலகில் சஞ்சரித்து,அவளிடம் மயங்கி அவளையும் மயங்க செய்து கொண்டு இருந்தான் அர்ஜுன்.
எல்லைகளை கடக்காமல் கடந்து,பால் வெளிகளில் பறந்து கொண்டு இருந்தவர்களை இந்த உலகத்திற்கு அழைத்து வந்தது அர்ஜுன் மொபைல் அழைப்பு.அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலா அவர்கள் இருந்தார்கள்.
அவர்களை அப்படியே விடுவதில்லை என்று விடாமல் அடிக்க,அழைப்பு நிற்கப்போவதில்லை என்பது புரிந்து விட,அந்த அழைப்பை எடுத்தான்.
எதிர் முனையில் ராஷ்மி,”மகனே எவ்வளவு நேரமெல்லாம் யாரும் காபி கொடுக்க மாட்டாங்க.பொற்கோயில் போக ரஞ்சித் காத்திருக்கார்.மிச்சத்தை அப்புறமாய் வைத்து கொள்.”என்று ஹாலில் இருந்து பேச,பின்னால் அவன் குடும்பமே சிரிக்கும் சத்தம் கேட்டு டன் கணக்கில் அசடு வழிந்தான் அர்ஜுன்.
“வரேன் மா…”என்று அழைப்பை துண்டித்தவன்,ப்ரீத்தி அறை டேபிள் மீது வைத்திருந்த ஒரு பார்சல் எடுத்து அவளிடம் நீட்டினான்.
“அம்ரிஸ்டர்…வி கோ…ரஞ்சித் அவுட் …யு… திஸ் ரெடி.”என்றவன் மீண்டும் ப்ரீத்தியை இழுத்து அணைத்து, நீண்ட நேரம் கழித்தே விலகினான்.
அவன் சென்றதும் கதவை மூடி அழுந்த கதவின் மீதே சாய்ந்து நின்றவள்,அர்ஜுன் கொடுத்த பாக்ஸ் ஓபன் செய்ய அதில் வெள்ளை நிற நீண்ட உடை அவளை பெரிதும் கவர்ந்தது.
‘ரசிகன் தான்யா நீயி…’என்று அந்த வெள்ளை உடையை தடவி கொடுத்தவளுக்கு என்னவோ அர்ஜுனையே தொடுவது போன்ற பிரமை உருவாக,தன் தலையில் தானே குட்டி கொண்டாள்.
அர்ஜுன் கொடுத்த உடையில் ப்ரீத்தி ரெடியாகி அறையை விட்டு வெளியே வர,அர்ஜுன் மூச்சு விடுவதையும் மறந்து அப்படியே நின்றான்.ப்ரீத்திக்கும் அர்ஜுனை பொருத்தமான வெள்ளை நிற ஷெர்வானியில் பார்க்க தெவிட்டவில்லை.
இவர்கள் கண்களால் படம் ஓட்டி கொண்டிருக்க,அதே வேலையை அமன்ஜீத்,ஜெஸ்ஸி செய்து கொண்டிருந்தார்கள்.
இவர்கள் நால்வரை இப்படியே விட்டால் அன்று முழுவதும் கூட அப்படியே நின்று தங்கள் இணையை ரசித்து கொண்டே இருப்பார்கள் என்று தோன்றி விட அவர்களை தள்ளாத குறையாய் ரஞ்சித் உடன் அனுப்பி வைத்தார் ராஷ்மி.
அது ஒரு உயிரை பறிக்க போவதை மட்டும் ராஷ்மி அறிந்திருந்தால் எல்லாத்தையும் நிறுத்தி,இவர்களை ஒரு அறையில் போட்டு பூட்டியே இருப்பார் தான்.ஆனால் நடக்க போகும் விபரீதம் அறியாதவர்களாய் விடை பெற்றும்,விடை கொடுத்ததும் அனுப்பினார்கள்.
அருகில் இருந்த வயல் வெளியில் வந்து நின்றது அந்த EC130 என்ற Airbus H130 ஹெலிகாப்டர்.அதில் விமான ஓட்டியுடன் ரஞ்சித் ஏறிக்கொள்ள, ‘ஸ்டேடியம் சீட்டிங்’ எனப்படும் பயணிகள் இருக்கையில் ப்ரீத்தி,அர்ஜுன்,அமன்ஜீத்,ஜெஸ்ஸி அமர்ந்து கொள்ள,அந்த ஹெலிகாப்டர் அவர்களை சுமந்து கொண்டு சென்றது துப்பாக்கி முனையை நோக்கி.
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சில கிலோமீட்டர் அருகே மீண்டும் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவர்கள்,காத்திருந்த காரில் ஏற அவர்களை பொற்கோயிலின் வாசலில் வந்து இறங்கினர்.ஏற்கெனவே மத்திய அமைச்சர் குருதேவ், தன்வி, முதலமைச்சர் வந்து இருந்ததால் பலத்த பாதுகாப்பு வளையம் அங்கு போடபட்டு இருந்தது.
காலணிகளை கழற்றி விட்டு,ஆண்,பெண் இரு பாலரும் தங்கள் தலையை முக்காடிட்டு உள்ளே நுழைந்தனர்.
கதிரவனின் ஒளிபட்டு மின்னி கொண்டு இருந்த Sri Harmandir Sahib திருக்கோயில் முதல் முறை போலவே இந்த தடவையும் ப்ரீத்தியின் மூச்சை நிறுத்தியது.
“எத்தனை கம்பீரம்…எத்தனை அழகு”என்று கோயிலின் அழகில் மயங்கியவளாய் கூறினாள் ப்ரீத்தி.
“அப்படியே மூச்சை நிறுத்துது இல்லையா ப்ரீத்தி?நம்மையும் அறியாமல் மனதில் ஒரு அமைதி வந்து விடுகிறது.’Pool of the nectar of immortality -அழியாத அமிர்தத்தின் குளம்’ என்று அழைக்கப்படும் இந்த குளத்தில் இறங்கி நம்,கை,கால்,முகம் கழுவி நம் பாபங்களை போக்கி கொள்வதாக குரு அர்ஜுன் தாஸ் மகன் சொல்லியிருக்கிறார்.
இந்த குளத்தில் இறங்கி தன்னை சுத்தம் செய்பவர்களின் பாவம் அனைத்தும் கழுவபட்டு விடும்.Sabh laathae paap kamaatae /All the sins one has committed are washed away.” என்று ஜெஸ்ஸி சொல்லி கொடுத்ததை ப்ரீத்தி செய்தாள்.
அமிர்தத்திற்கு நிகரான அந்த குளத்தில் தங்களை தூய்மை படுத்தி கொண்டு கரை ஏறியவர்கள் கடவுளின் பெருமைகளை பேசி கொண்டே நடந்தனர்.
“ஒன்றை கவனித்தாயா ப்ரீத்தி?இந்த கோயிளுக்குள் நான்கு புறத்தில் இருந்தும் உள்ளே வரலாம்.அதாவது கடவுளை அணுக வேண்டிய எண்ணம் மட்டும் இருந்தால் போதும். எந்த மதத்தை, எந்த வழியை பின்பற்றினாலும் ஒன்றே என்ற தத்துவம் இதில் உள்ளது.
மற்ற கோயில்களில் நாம் படியேறி சென்று தான் இறைவனை வணங்க முடியும்.’என்னிடம் நீ வா…உனக்கான வழியை நான் காட்டுகிறேன்’ என்று அர்த்தம் அதற்கு.இங்கே நாம் கீழ் இறங்கி சென்றால் தான் கருவறைக்கு செல்ல முடியும்.’தான் என்ற ஆணவம்,அகந்தை, திமிர்,ஈகோ,பணத்தாசை,சுயநலம்’ இவற்றை விட்டு கடவுளின் பிள்ளையாக நீ கீழ் இறங்கி வந்தால் கடவுளுடன் ஒன்றாய் கலந்து விடலாம் என்ற தத்துவம் இங்கே.”என்றாள் ஜெஸ்ஸி.
“வாஸ்தவம் தானே!….எல்லா ஆறுகளும் கடலில் கலப்பது போல்,எல்லா மதங்களும் மனிதன் நல்லவனாய் வாழ தானே வழி சொல்கிறது.அன்பு ஒன்றே கடவுளை காணும் வழி என்று புரியாத சிலர் தான் என் மதம்,உன் மதம் என்று போட்டி போடுவார்கள்.
எந்த மதத்திலும் இறந்து போன அத்தனை பேரும் அப்படியே உயிரோடு வந்ததும் இல்லை.சாகாமல் யாரும் இருந்து விட போவதும் இல்லை.expiry தேதி உடன் வந்து இருக்கும் போதே இத்தனை ஆட்டம் ஆடுகிறோம்.படைத்தவன் ஆட விட்டு சரியான நேரத்தில் கணக்கை தீர்த்து தான் விடுகிறான்.
எது எல்லாம் தீய குணமோ அதை எல்லாம் விட்டாலொழிய கடவுளை அடைய முடியாது தான்.அது தெரியாமல் தான் லட்ச லட்சமாய் உண்டியல்களில் போட்டு கொண்டு இருக்கிறோம்.” என்றாள் ப்ரீத்தி.
“கோயில் காலை நான்கு மணிக்கே திறந்து விடுவார்கள். உள்ளே கருவறையில் Gurbani Kirtan இசை வழிபாடு காலை முதல் மாலை வரை நடைபெறும் ப்ரீத்தி.நமக்காக சிறப்பு அர்தாஸ்/வழிபாடு செய்வார்கள்.அது முடியும் வரை அமைதியாக அமர்ந்து மனதிற்குள் உனக்கு பிடித்த இறைவனை பிராத்தித்து கொள்.
Karah Prasad/பிரசாதம் வழங்குவார்கள்.அதை உண்டு விட்டு கீழே விழுந்து “குரு க்ராந்த் சாஹிப் வணங்க வேண்டும்.
அதன் பிறகு அர்ஜுன் குடும்ப வழக்கப்படி அவர்கள் ஷேர் உன் பெயருக்கு மாற்றுவதில் விருப்பமா என்று கேட்பார்கள்.சம்மதம் என்றால் பத்திரத்தை படித்து பார்த்து கையெழுத்து இடு. திருமண உறுதியும் இங்கேயே செய்ய போவதாய் பேசி கொண்டார்கள்.”என்றாள் ஜெஸ்ஸி.
“திருமண உறுதியா?”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன்.
“சாரி மா.உன்னிடம் சொல்ல சொல்லி ராஷ்மி ஆன்ட்டி என் கிட்டே தான் சொன்னார்கள்.”என்று இழுத்தாள் ஜெஸ்ஸி.
“நீங்க அமன்ஜீத் சார் கூட டூயட் ட்ரீம் வேர்ல்ட்ல பாடிட்டு இதை சொல்ல மறந்துடீங்க அதானே!”என்றாள் ப்ரீத்தி ஜெஸ்ஸியை முறைத்தவாறே.
“ஹி ஹி …”என்று அசடு வழிந்தாள் ஜெஸ்ஸி.
“வேணாம்…சகிக்கலை…விட்டுடு…ஆமா இப்போ என்ன அவசரம் ஆன்ட்டிக்கு?” என்றாள் ப்ரீத்தி குழப்பத்துடன்.
“இருக்கும் சூழ்நிலை சரியில்லை இல்லையா அதான்.இவர்களை போதை மருந்து கூட்டம் குறி வைத்து விட்டது.அதுவும் மெக்ஸிகோவுடன் தொடர்புடைய எத பஞ்சமாபாதகத்திற்கும் அஞ்சாத கூட்டம் அது.
திருமணமே முடித்து தான் இருப்பார்கள்.ஆனால் உன் குடும்பம் வர வேண்டும்.டாலி அப்பா நிலைமை வேறு சரியில்லை.அதான் திருமண உறுதி விழாவாக, பரம்பரை வைர நகையை மட்டும் மருமகளாக வரும் பெண்ணுக்கு அணிவிப்பார்கள். நீ சொன்னது உண்மை தானே ப்ரீத்தி?
அர்ஜுனை நீ உண்மையிலேயே லவ் செய்யறே தானே?இல்லை அமன் மனசு மாற என்று பொய் எதுவும் சொன்னாயா?”என்றாள் ஜெஸ்ஸி பதற்றத்துடன்.
“ரிலாக்ஸ் டியர்.நானும் அர்ஜுனும் லவ் செய்யறோம்.நேத்து தான் அந்த மைதா மாவுக்கு கொஞ்சம் புரிய வச்சேன்.நடுவுல அவர் காதில் விழுவது போல எதையாவது சொல்லி வச்சி அந்த மனுசன் மீண்டும் முருங்கை மரம் ஏறிட போறார்.”என்றாள் ப்ரீத்தி.
இவர்களும் முதலமைச்சருடன் கலந்து கொள்ள இவர்களுக்கான சிறப்பு பிராத்தனை அங்கே நடைபெற்றது.
பிராத்தனை முடிந்ததும் அங்கே உள்ளவர்கள் முன்னிலையில், ரப்ஜியின் அருளுடன் தங்கள் குடும்ப சொத்தில் ப்ரீத்திக்கும், ஜெஸ்ஸிக்கும் சரி பாதி என்ற பத்திரத்தில் கடவுளின் முன்னிலையில் அர்ஜுன்,அமன்ஜீத் கையெழுத்திட்டனர்.வழி வழியாக வீட்டிற்கு வரும் மருமகள்களுக்கு அணிவிக்கபடும் வைர நகையை அர்ஜுன் ப்ரீத்தியின் கழுத்திலும்,அமன்ஜீத் ஜெஸ்ஸி கழுத்திலும் அணிவித்து திருமண நிச்சயத்தை கடவுள்,உற்றம்,சுற்றம் முன் நடத்தி கொண்டார்கள்.
காதலர்கள் கண்கள் நான்கும் தங்கள் இணையை கண்களுக்குள் நிறைத்து கொண்டது.மனம் முழுவதும் ஒரு நிறைவு என்று சொன்னால் கூட மிகையல்ல.
இல்லறம் என்னும் பந்தத்தில் இணைவதற்கு முதல் படியாய் கடவுள் சன்னிதானத்தில் உறுதி எடுத்தாகி விட்டது.அவர்கள் நால்வரை பொறுத்தவரை அது திருமணத்திற்கே ஈடானது தான். இருந்தாலும் குடும்பம்,சமூகம்,உற்றம்,சுற்றம் வாழ்த்தும் ஒப்புதலும் கிடைக்க,குடும்பத்தினர் திருமண விழாவை நடத்த அப்பொழுதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்தனர்.
புதிதாய் திருமண நிச்சயம் ஆன இளம் ஜோடிகளை வாழ்த்தி அவர்களுக்கு விருந்து அளிக்க அழைத்து சென்றார் முதலமைச்சர் தர்ம.அவர்களை காலனும் பின் தொடர்வதை அவர்கள் யாருமே அறியவில்லை.
பயணம் தொடரும்.