KK 12
KK 12
கலியுக கல்கி – 12
ராஜலுவின் வீட்டில் ஓர் ஊரே கூடி இருந்தது எள் விழுந்தால் கூடச் சத்தம் வரும் அளவிற்கு அமைதி, எண்ணி பார்க்க கூட முடியாத அளவிற்கு வீடு முழுவதும் தலைகளால் நிரம்பி இருந்தது.இன்றோடு அந்தச் சம்பவம் முடிந்து ஒரு மாதம் ஆகி விட்டது.ரெங்கன் சொன்னது போல ஒரு வார கால அவகாசத்தில் யார் இதைச் செய்தால் என்பதைக் கண்டு பிடித்தாயிற்று இருந்தும் மௌனம்.
கண்டு கொண்ட செய்தி அத்தனை நல்லதல்ல பொறுமையாகச் செயல் பட வேண்டும் அதற்காகத் தான் இந்த ஒரு மாத காலம் கண்களை இறுக்க மூடிக்கொண்டார் ராஜலு.ராப்பகலா கண் விழித்து ரெங்கணும் ராஜலுவும் ஓர் முடிவு கண்டனர்.அதற்காகத் தான் தனது அங்காளி, பங்காளி, மாமன் மச்சான் மற்றும் பெரிய தலைகள் அனைவரும் இன்று கூடி உள்ளனர்.
முதலில் சபையில் உள்ள பெரியவர்கள் பேச்சை ஆரம்பித்தனர் “என்ன சொல்லுற ராஜலு அவனுகளா செஞ்சானுக”.
“ஆமா பெத்தா கொஞ்ச வருஷம் முன்னாடி அவனுக நம்ப ஜனக மேல கை வச்சு இருக்கானுக அதுவும் ஸ்கூல்,காலேஜ் பசங்க கிட்ட மயக்க மருந்து,போதை ஊசி,அப்புறம் பேணா இங்க் மூலம் ரொம்பப் பெருசா பண்ணிட்டானுக அதான் விதுரன் தட்டி கேட்க போய்ப் பிரச்சன பெருசா போய் இருக்கு”.
“நானா அவனுக அத மட்டும் செஞ்சு இருந்தா பெரிய இடத்துல பேசி நிறுத்தி இருக்கலாம்,அவனுகளல சின்னப் பையனும் பொண்ணும்.சொல்லமுடியாத நிலைமைல என்னால பார்த்துட்டு எப்புடி சும்மா இருக்க முடியும்.அப்புடியும் என் பெரு அடி படமா தான் பார்த்துக்கிட்டேன்”.
“இதை ஏன் முன்ன சொல்லல விதுரன், எப்போ குழந்தைங்க மேல கை வச்சானோ அன்னைக்கே களை எடுத்துருக்கணும்.சரி சொல்லுங்க நம்ப என்ன பண்ணலாம்.நம்பத் தற்புல இருந்து மூணு உயிர் போய் இருக்கு”
ராஜலுவின் மாமா முறை ஒருவர் “ராஜலு அவசர படாத இந்தச் சம்பவத்தை ஆற போடு சமயம் பார்த்து சொல்லுறேன்.அதுக்கு முன்னாடி அவனைப் பத்தின முழு விவரம் கைக்கு வரணும்.ரெங்கன் சொன்னது பாதித் தான்.நம்ப அடிக்குற அடி அவனுக்குக் கடைசி அடியா இருக்கணும்”.
எழுபது வயதில் இருக்கும் அவர் சிங்கத்தின் கர்ஜனையாகக் கம்பிரமாக மருமகனை வழி நடத்தினார்.பரம்பரை பரம்பரையாகப் பாரம்பரியமாக வாழ்ந்த குடும்பம். அதன் செழிப்பும்,வளமையும்,பெருமையும் அவர்களின் நியாயமும், அவர்களுக்குப் புண்ணியம் சேர்த்தது என்றே சொல்ல வேண்டும்.
எத்தனை காயங்கள் ஏந்தி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கயவர்களை வென்றார்கள் என்பதே வரலாறு தானே.இத்தனை நாள் எப்படியோ ஆனால் இன்று மொத போகிற இடம் அவர்களுக்குச் சரித்திரம் தான்.
ஒருவழியாக அனைவரும் அந்தப் பெரியவர் சொல்படி அமைதியாக இருப்போம் காலம் கனியும் வரை ஒரு மனதாக முடிவாகி.அங்கே மதிய உணவை முடித்துக் கொண்டு ராஜலுவிடம் விடை பெற்று சென்றனர்.அவர்கள் சென்றது தான் தாமதம் “அப்புறம் விதுரா உடம்பு கொஞ்சம் தேறிடுச்சு தானே, உங்க அம்மாவை கூப்டுட்டு உங்க வீட்டுக்குக் கிளம்பு”.
ராஜலுவிடம் இப்புடி ஒரு பேச்சை யாரும் எதிர் பார்க்கவில்லை.ஆனால் விதுரன் எதிர் பார்த்தான் ரெங்கனின் திருமணத்திற்கு முதல் நாளில் இருந்து ராஜலுவின் பேச்சு அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது. அவரிடத்தில் இருந்து பார்த்தால் அது நியாயமே என்பதால் விதுரன் பேசவில்லை ஒரு சிரிப்புடன் தலையை அசைத்தான்.
பெண்கள் தான் அதிர்ந்து நின்றனர் கமலம் வேகமாக வந்து “வர வர நீங்க சரியே இல்லை,இப்போ எதுக்கு இப்புடி பேசுறீங்க”.
“வேற எப்புடி பேசணும் நான் எதுக்கு உங்களுக்கு உப்புக்கு சப்பானியா உன் மகனும் மகளும் உன்ன பார்த்துக்கு வாங்க,அதே மாதிரி அவன் என்று விதுரனை கை காட்டியவர் அவனோட அம்மாவ பார்த்துக்குவான்.எனக்கு மிருது போதும்” என்றவரை யாராலும் எதிர்த்து பேச முடியவில்லை.மிருதுவிற்குத் தனக்குத் தகப்பன் கிடைத்த களிப்பு ஒரு புறம்,அவரது முடிவில் வந்த கலக்கம் ஒரு புறம் எனத் தவித்துப் போனாள்.
வேணி கண்களில் கண்ணீர் மட்டுமே தனது தாயின் கண்ணீரை பார்த்து தாங்கமாட்டதவனாக “நானா நான் இனி எங்கையும் போற மாதிரி இல்ல,எல்லாரும் ஒண்ணா இருப்போம்”.
“இதைத் தானடா நானும் வருஷ கணக்கா சொல்லிட்டு இருக்கேன்,இப்போ என்ன புதுசா…”என்று நிறுத்தியவர். அவர் ஆதங்கம் முழுதும் கொட்டும் வணக்கமாக ஒவ்வொருவரையும் ‘வச்சு செஞ்சார் ப்பா…..’ .
“ஏன் உன் பொம்மி உன்ன விட்டு போய்ட்டானு, அங்க நமக்கு என்ன வேலைனு இங்க வந்தியா.உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம மயக்கத்துல இருந்து இருக்க,ஆனா அவளுக்கு அங்க கல்யாண ஏற்பாடு நடக்குது தெரியுமா?” விதுரன் அதிர்ந்து பார்க்க அடுத்து தனது மகளிடம் சென்றார்.
நீங்க உங்க அண்னனுகள தூக்கி சாப்பிட்டுருவீங்க போலையே! இப்போ வந்தவன் மேல உள்ள பாசத்தைப் பெத்தவங்க மேலையும் வைக்கலாம்.நீ போய்ச் சேர்ந்துட்டா அவனுக்கு வேற பொண்ணு கிடைக்கும், ஆனா பத்து மாசம் உன்ன மனசுளையும் வயிற்றுளையும் சுமந்த எங்களுக்கு இன்னொரு மக கிடைப்பாளா.கண்ணில் கண்ணீர் பெறுக தலை குனிந்து கொண்டாள்.
அடுத்து ரெங்கணும் சீதாவும். அவர் பேச வருமுன்னே சீதா அவரது கால்களைப் பற்றி விட்டாள் “என்ன மனுச்சுடுங்க என்ன மட்டும் யோசுச்சுட்டு அந்தச் சின்னப் பொண்ண விட்டுட்டேன்” என்று கதற, அவளை விட்டுட்டு ரெங்கனை தான் பார்த்தார். ஆனால் எதுவும் பேசவில்லை.அதற்குப் பதில் தான் மிருதுவை கண்ணில் கூட இந்த ஒரு மாத காலம் காட்டாமல் படுத்தி எடுத்து விட்டாரே.
கமலம் அவரை முறைத்து கொண்டு இருந்தார் “இங்க பாருங்க பண்ணது தப்புனு நாங்க எல்லாரும் மன்னிப்பு கேட்டாச்சு, இனியும் நீங்க இப்புடி பண்ணிட்டு இருந்தீங்கனா… என்று நிறுத்தியவர் சேதாரத்துக்கு நாங்க பொறுப்பில்ல” அவர் சொன்ன தினுசில் அனைவர் முகத்திலும் புன்னகை மறந்தும் யாரும் வாய் விட்டு சிரிக்கவில்லை.
சிங்கத்திடம் சிக்கினால் கண்டம் தான் என்பதை அறிந்து அனைவரும் அமைதி காத்தனர்.என்னதான் வெளியில் வீரனாக இருந்தாலும் மனைவிடம் மட்டும் தனித்து போகும் ராஜலுவை என்னவென்று சொல்ல.மனைவிடம் மண்டியிடும் ஆண்மையும் வீரம் என்பதை அறிந்தவர் ஆயிற்றே.
———————————————————————————————–
கும்பகோணத்தில் ராகவ்வை சுற்றிக் கொண்டு இருந்தான் பாலாஜி அன்று அலமேலுவிடம் பேசியது தான், அதன் பின் அவளும் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை.வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப அலமேலுவின் அருமை,அருகாமை எல்லாம் புரிந்தது சாத்தியமற்றுது என்பது சாத்தியமாகி போனது.
அவளது தொலைபேசி எண்னையும் பாவி மாற்றி விட்டாள்.அவளது நினைவு பாடாய்ப் படுத்த தனது கொள்கைகளைக் கை விட்டான் அந்த முரட்டு ப்ராமிணன்.
“டேய் ராகவ் நீ வேலைக்குப் போகலை. அவா ஆத்துல எல்லாம் எப்புடி இருக்கா” கேட்கும் அண்ணனை எட்டாவது அதிசயமாகப் பார்த்தான் ராகவ்.நேற்று என்னவென்றால் தனது தாயும், தந்தையும் கேட்டார்கள் இன்று இவன் என்னவாயிற்று இவர்களுக்கு எண்ணியவன்.
“அதெல்லாம் ஷேமமா இருக்கா, பெரியவர் உனக்கு அங்க சின்ன வேலை இருக்கு, சொல்லுறேன்னு சொன்னார் அதான் இருக்கேன்.
ஓ… என்றவன் சரி “அலமேலு எப்புடி இருக்கா அவளுக்கு எதுவும் நம்பர் இருந்த கொடு.”
இப்போது தெளிவு பிறக்க ராகவ் “அவா அப்பா நம்பர் தான் இருக்கு தனியா இனி போன் தேவை இல்லனு மன்னி போனை கொடுத்துட்டாங்களாம்.”
“ப்ச் ….. சரிடா அவுங்க அப்பா நம்பர் கொடு நான் பேசணும்”.
“எதுக்கு?”
“உனக்கு நேரம் சரியில்லை ராகவ், அடி வாங்கிடாத நேக்கு ரொம்பக் கோபம் வர்ரது” தமையனிடம் அடி வாங்கும் தெம்பில்லை என்பதால் ஒழுங்கு பிள்ளையாக நம்பர் கொடுக்க எண்ணி அவனது போனை எடுக்க ராஜலு அழைத்து விட்டார்.
“அண்ணா! பெரியவர் தான் பேசுறார் இருங்க” என்றவன் போனை காதில் வைக்க “எப்புடி இருக்கா ராகவ்.”
“நல்ல இருக்கேன் சார்”
“சரி நேர பொள்ளாச்சி போய் அந்த ரெண்டு பொண்ணுகளையும் தூக்கிட்டு வந்துரு.உங்க அப்பா அம்மாவ வர சொல்லிட்டு நீ அந்தப் பொண்ணுகளா கூட்டிட்டு வா”
எதிர் கேள்வி கேட்காது “சரிங்க என்றவன் பின்பு தயங்கி இங்க அண்ணன் உங்களண்ட பேசணுமா”.
‘ஹ்ம்ம்’ என்று மட்டும் பதில் அளித்தார் ராஜலு.
தனது அண்ணனிடம் கொடுக்க இருவருக்கும் என்ன வாக்குவாதம் நடந்ததோ பாலாஜியின் பேச்சில் பதறிப் போனான் ராகவ் .அதுவும் கடைசியாக அவன் சொன்ன வாக்கியம் ராகவ்வின் வயிற்றில் புளியை கரைத்தது ‘நேக்கு அவ வேணும்’.
இரவு முழுவதும் ராகவ் பாலாஜி அவர்களது பெற்றோர்களும் பேசி கொண்டனர்.விடுயும் தருவாயில் தான் அந்த வாக்கு வாதம் முடிவு பெற்றது.திருமணம் என்பது ஆணின் தலைமுறைகளும் பெணின் குடும்ப வழி தலைமுறைகளையும் இணையும் ஒன்று.இரு வேறு பிரிவினர்கள் இணையும் பொதுத் தடைகள் வரத்தான் செய்யும்.
இதில் நிறைய ஒவ்வாமை, வேறு பாடுகள் இருக்கத் தான் செய்யும், அதையும் தாண்டி இங்கு இரு மணங்கள் ஒன்று சேர்வதால், பெற்றவர்கள் விட்டு கொடுத்து போக வேண்டிய நிலை.பிள்ளைகளுக்காகச் சமாளிப்போம் என்ற முடிவுடன் ராகவ்வின் பெற்றோர்கள் சம்மதித்தனர்.
———————————————————————————————–
அங்குப் பொள்ளாச்சியில் பொன்னிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள் முத்து. அவ்வப்போது கலங்கும் பொன்னியை பார்க்க பாவமாக இருந்தாலும் நிதர்சனும் உரைக்கத் தோழியின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அவளைக் கண்டு கொள்ளாமல் அலங்காரம் செய்தாள்.
ஏய்! முத்து போதும் பொன்னியக் கூட்டிவா என்ற முத்துவின் அன்னை கூடத்துக்குச் சென்று “பொண்ணு இப்ப வந்துடும்” என்ற சொல்ல கனக்கும் மனதோடு வந்து, சபைக்கு மரியாதை செய்து அமர்ந்தாள் பொன்னி.முத்து அவளுடன் அமர அங்கே திருமணப் பேச்சுகள் ஆரம்பம் ஆனது.
மாப்பிளை பையன் வருவாய் துறையில் கிளெர்க் ஆகப் பனி செய்கிறான்.அவர்கள் வசதிக்கு அதுவே பெரிய இடம் என்று பூரித்துப் போனார் பொன்னியின் தந்தை.அவர் தான் பொன்னியின் திருமணம் விடயத்தை ராஜலுக்குச் சொன்னது.பொதுவாகத் தனக்கு உதவியவர் என்ற நிலையில் வெகுளியாகக் கொட்டிவிட்டார்.அதுசரி அவர் என்ன கனவா கண்டார் தனது மகள் ராணியாக அவர்களிடத்தில் வாழ போகிறாள் என்று.
அனைத்தும் பேசி முடித்துத் திருமணம் முடிவு செய்து பூ வைக்கும் நேரம்.பத்து பேர் கொண்ட கும்பல் வந்து இரு , போனஸ்சகா பெற்றவர்களையும் தூக்கி சென்றனர். முகமுடி அணிந்தவன் கையில் துள்ளிய முத்துவை, இறுக்கப் பற்றித் தனது காரில் தள்ளியவன் கண் இமைக்கும் நேரத்தில் தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடினான் இடையில் இருக்கும் முகமுடி ஈரத்தால் நினைந்தது.
மூச்சுவாங்க பிரித்து எடுத்தவள் யோவ்! ஐயரே விடுய்யா (ராகவ்வின் வாசனை வைத்தே கண்டு கொண்டாள் அவன் தான் என்று) மரியாத கெட்டுரும் பார்த்துக்க அவள் சரமாரியாகக் கத்த துவங்க, அவன் சொன்ன செய்தியில் பயந்து ஒடுங்கி போனாள்.இனி அந்த ஆண்டவன் தான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று.