Penniyam pesathadi 8
Penniyam pesathadi 8
பெண்ணியம் பேசாதடி – 8
இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றாள்
உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி
வாழ்வா? சாவா? உன் கையில்…….
வன் காதல் புரியும் எழுத்தாளரே!
சாவே என் முடிவு.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று ஒழுங்காக வேலை பார்த்து.இன்று சென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் தகப்பனும்,மகனும் சுழன்று கொண்டு இருந்தனர்.அவர்களைப் பார்த்தவாறே நடுக் கூடத்தில் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தாள் காஞ்சனை.
மறந்தும் இருவருக்கும் உதவிக்கு முன் வரவில்லை, அதுவும் வாமணன் பக்கம் சுத்தமாகப் பார்வை செல்லவில்லை,சென்றால் இன்றும் தொழிலுக்குச் சென்றது போலத்தான்.அப்ப….ப்ப…. மனிதனின் முரட்டுத் தனமும்,அடங்கா காதலும்,வன் முத்தங்களும் கிறக்கத்தைக் கொடுத்து,அவளது உறுதியை அல்லவா களவாடி செல்கிறது. இனி ஒரு நிமிடம் கூட இங்கு இருக்கக் கூடாது என்ற முடிவுடன் அவள்.
முதலில் மகன் வர அவன் பின்னே தகப்பன் அட்டகாசமாக.அவனது உடையை விடத் தகப்பனின் உடை அசரடிக்கக் காண்டானால் பேரிளம் பெண்.இருவரும் இன்று அதிசயமாகக் காலை உணவுக்கு அமர வேலை செய்யும் பணி பெண் வேகமாகச் சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
இருவரும் சரியாகக் காலை உணவை உண்டு ஒரு வருடத்திற்கு மேல் சென்று விட்டது.மது இருந்தவரை அவளுடன் உண்பது,அதன் பின் சொல்லி வைத்தார் போல் தகப்பனுக்கும்,மகனுக்கும் காலை உணவு புசிக்கவில்லை.
இன்று கஞ்சனையின் வருகை அவர்களிடம் ஓர் உயிர்ப்பை கொடுத்தது அதன் மாற்றம் தான் இந்தக் காலை உணவு.என்னதான் இருந்தாலும் உரிமையுள்ள பெண் வீட்டில் இருந்தாள்.ஒரு கவளம் உணவு கூட அமிர்தம் தான்.இத்தனைக்கும் அவள் எட்டி நின்று தான் பார்க்கிறாள்,அன்பாகப் பரிமாறவில்லை,ஆனாலும் ஒரு இனிய நிறைவு இருவருக்கும்.
இரண்டு இட் லியை உள்ளே தள்ளியவன் கஞ்சனையை நோக்கி “நீயெல்லாம் என்ன பொம்பள புள்ள, இரண்டு ஆம்பளைங்க சாப்டா வந்த பொறுப்பா நின்னு பரிமாற வேணாம்மா,உக்காந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க” சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்க…
இதோ நமது பெண் சிங்கம் சீறி பாய்ந்து விட்டது,அதிலும் வாமணன் உணவை விழுங்கும் சாக்கில் சிரிப்பை விழுங்க இன்னும் கோபம் வந்து விட்டது.அதில் தீ பொறியாக வார்த்தைகள் சிதறியதை பேரிளம் பெண் அறியவில்லை.
“நான் ஏன்டா செய்யணும்,நான் யாரு உங்களுக்கு”
அவள் கேட்டு முடித்துத் தான் தாமதம் உணவு மேஜையில் இருந்த கண்ணாடி குடுவை உடைந்து சில்லு சில்லுலக நொறுங்கியது.வாமணன் கையில் கண்ணாடி குத்தி ரெத்தம் பீறிட்டது,அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாமணன் உணவில் கவனம் செலுத்த வளவனும்,கஞ்சனையும் அதிர்ந்தனர்.
“அப்பா…………………. ” “எழுத்தாளரே ………………. “முதலில் சிலையாக அதிர்ச்சியில் இருந்தவர்கள் பின்பு தெளிந்து ஒரு சேர கூவி கொண்டே வாமனனை நெருங்கினர்.
இருவரும் காயம் பட்ட கையைப் பிடிக்கச் சண்டை வேறு “டேய் விடுடா”
“நீ போ உன்னாலதான் அப்பாக்கு அடி பட்ருச்சு”
“ஆமாடா நான் தூக்கி போட்டு உடைக்கச் சொன்னேன்,போடா அந்தாண்ட”
“முடியாது நீ போ எங்க அப்பா”
“நீ போடா, என் எழுத்தாளர்” அந்த நிலையிலும் அவளது வெகு சாமர்த்தியமான அழைப்பு அவனுக்கு எரிச்சல் தர. “எழுத்தாளர் தானே புருஷன் இல்லையே போ தொடாத”
“தொடுவேன் என்னடா செய்வ” வாமணனுக்குக் காயம் வலிக்கவில்லை போலும்,அவர்களின் செல்ல சண்டையை ரசித்துக் கொண்டு இருந்தார்.
இருவரும் தங்களை மறந்து சண்டை இட்டு கொள்ள,வாமணன் தனது அறைக்குச் சென்று காயத்திற்கு மருந்திட்டு,வேலைக்குச் செல்ல கிளம்பி வந்து விட்டார், அதுவரை இவர்களது சண்டை நின்ற பாடில்லை.
“கண்ணா ஆபீஸ்க்கு நேரம் ஆச்சு வா” வாமணன் அழைக்க அப்போதுதான் தந்தையை கவனித்தான், அவர் காயத்தையும். அதில் கட்டு போடப்பட்டு இருக்க,திரும்பி பார்த்து தனது சிற்றன்னையை முறைத்தவன் தந்தையிடம் சென்று “சாரி அப்பா”
அவன் கன்னம் தட்டி தோள் அனைத்து கஞ்சனையின் புறம் திரும்பியவர் “அநியாயத்துக்கு நம்பப் பையன வம்பு பண்ணாதடி,அம்மா மாதிரி நடந்துக்கோ” நமுட்டு சிரிப்புடன் சொல்லிவிட்டு கிளம்ப.கஞ்சனையின் நிலை சொல்லவா வேண்டும்.
அவர்கள் சென்றவுடன் சோபாவில் அமர்ந்தவளுக்கு அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகரமாக மிரட்டியது.தந்தைக்கு என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை,தன்னை தேடி பயம் கொள்வார் என்று அடித்துப் பிடித்துப் போன் பேசினால் மனிதர் வெகு இயல்பாக நீ அங்கையே இரு திருமணம் நாள் குறிக்கிறேன் என்கிறார்.
தனது அக்காளின் கணவனுடன் மறுமணம் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.எழுத்தாளரின் பேரிளம் பெண்ணாக மனம் முரண்டு பிடிக்கிறது.ரசனைக்கும் காதலுக்கும் உள்ள தொலைவை குறைக்க முடியவில்லை,முயற்சிக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
என்னடா இது?………………..
எழுத்தாளனின் வன்மையான கூடல் சமுதாயத்தில் ஏற்க படாத ஒன்றாக நெருடினாலும் தனது உணர்வை கொன்று எழுத்தாளனுக்கு உயிர்ப்பை கொடுக்கத் தான் ரசிகையின் மனம் துடிக்கிறது.இந்த பிடித்தம் பத்தியமான ஒன்று என்றாலும் அதனை மறுக்க முடியவில்லை.
பொல்லாத பிடித்தம்…….
கண்மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்,இனி தனது முடிவு என்று ஒன்று இல்லை என்பது திண்ணம்.சரி திருமணம் செய்து கொண்டாலும் அதன் பின்?…….. தனக்கு ஒரு குழந்தை வேண்டாம் என்பதால் தான் வாமணனின் நண்பனுக்குத் திருமணம் கோரிக்கை வைத்தாள்.ஆனால் இன்று அது சாத்தியமா அதுவும் வாமணனிடம். அவரது கண்ணியம் சற்று விசித்திரமானது அவரது எழுத்த போன்றே.
கோபமெல்லாம் இறந்த போன தனது அக்காககளிடம் சென்றது பாவி பாவி அவள் மட்டும் உயிரோடு இருந்து இருந்தாள் கண்டிப்பாக வாமணன் தன்னைத் தேடி இருக்க மாட்டார், மதுவை அத்தனை பாங்காக வைத்திருந்தார் மனிதர்.தங்களது உறவும் எப்போதும் போல் சென்று இருக்கும் ஆனால் இன்று…..
கடந்த காலம் மனதில் சிறு சலனமாக…………………
வாமணனின் தந்தை வட்டி தொழில் செய்தவர்,தாய் இல்லத்தரசி.எப்பொழுதும் போல் அன்றும் தனது வீட்டுக்கு வந்த அத்தை, மாமாவை வரவேற்று அவர்களுடன் அமர்ந்தான் வாமணன்.அவனைப் பார்த்ததும் சிறு சங்கடம் இருவருக்கும், அவர்களை புரியாமல் பார்த்தவன் தனது தாயை பார்க்க,அவர் தனது கணவரை பார்த்தார்.
வாமணனின் தந்தை விடயத்தைக் கூறினார்.அதாவது மது திருமணம் செய்தால் வாமனனை தான் செய்வேன் என்று ஆடம் பிடிப்பதாகக் கூறவும்.அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் சரியென்றான் தாய்,தந்தையை கூடக் கலந்து கொள்ளவில்லை.அவர்கள் சங்கடம் மறந்து பெரியவர்களும் நாள் குறித்தனர்.
வாமணனின் தாய்க்கு தான் சிறு நெருடல்,மதுவின் பெற்றோரின் சங்கடத்துக்கு இதுவே காரணம். மதுவை விட வாமணன் இரு வயது சிறியவன்.அக்காலத்தில் இது பெரிய விடயம் தான் அல்லவா,ஆனால் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெற்றோர், இருவருக்கும் பிடித்தம் என்பதால் ஒத்துக்கொண்டனர்.
அழகு பெண்,மாமன் மகள் என்றவரை திருமணம் இதில் காதல் இல்லை,கடமை இல்லை,சிறு பிடித்தம் மட்டுமே வயது வரம்பு எழுத்தாளனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதால் சுலபமாக முடிந்தது திருமணம்.
கஞ்சனைக்கு விடயம் தெரிந்தாலும் சிறு பெண் என்பதால் எதுவும் புரியவில்லை,இனி அத்தை மகன் அக்காளின் கணவன் என்றவரை தான் அவளது எண்ணம்.இதில் சிறப்பு என்னவென்றால் அந்த வயதிலே அத்தை மகன்,அக்காள் கணவன்,எழுத்தாளன் என்று பிரித்துப் பார்த்து உறவுகளுக்கு எல்லை வைத்தாள் பெண்.பாராட்ட பட வேண்டிய விடயம் அல்லவா இது.
அதன் பின் ஒரு நாள் விளையாட்டாக மது தனது கணவனுடன் இணைத்து பேச,பேச்சையும்,உறவையும் சுத்தமாகக் குறைத்து கொண்டாள் காஞ்சனை,திருமணம் பருவம் வேறு அவளது மனதை அலைக்கழிக்க முழுவதுமாகப் புத்தகத்தில் புதைந்து கொண்டாள்,அதுவும் ஒருவகைப் போதை தான் படிக்க எடுத்தால் வைப்பது கடினம்.
எண்ணங்கள் அலைக்கழிக்க அப்புடியே தூங்கியும் போனாள்,மதிய உணவை மறந்து.
வேலையை முடித்துக் கொண்டு மாலை நான்கு மணி போல் வளவன் வீடு வர.அவன் குரல் கேட்டு தான் எழுந்தாள் காஞ்சனை போனை பேசி கொண்டே உள்ளே நுழைந்தான்.அவன் பின் ரமேஷ் (ஓசி டீ வழமை போல் வருகை)
“ஐ லவ் யூ சொல்லுடி” அந்தப் பக்கம் என்ன பதிலோ
“சரி அப்போ முத்தம் கொடு அப்போதான்….”என்க
தூக்க கலக்கத்தில் இருந்த காஞ்சனை வேகமாகப் போனை பறித்துக் காதில் வைத்தாள் அவளுக்குத் தெரியும் யார் போன் செய்தது என்று
“பேபி” அவள் அழைக்க அந்த வாண்டு “ஓ………” என்று அழுதது.
“தங்க பேபி அழ கூடாது அம்முலு,செல்லம்” கொஞ்சிய கஞ்சனைக்கும் சிறு அழுகையின் தொடக்கம்
“காஞ்சு…… நீ என்க இதுக்க…..”
“இங்கதான் பேபி பக்கத்துல இருக்கேன், நாளைக்கி வளவன் கூட வரியா அம்மாகிட்ட பெர்மிசஸின் கேக்குறேன்”.
“வேணாம் நான் மலர் கோடி ஆண்ட்டி கூட வரேன்.வளவன் பேட் பாய்”
மலர் கொடிய ? யோசனை வந்தாலும் “சரிடா வா,பேபி குட் கேர்ள் அழ கூடாது ஓகே”.
அவள் பேசிவிட்டுப் போனை வளவனிடம் கொடுக்க “என்ன நான் சொன்னதைக் கேக்குறிய” என்று கேட்க அந்த வாண்டோ “நீ ஒன்னும் வேணாம் போ ,நான் மலர் ஆண்ட்டி கூட வருவேன்,நோ முத்தா நோ ஐ லவ் யூ” என்று வைக்க
வைத்த போனை முறைத்துப் பார்த்தான் வளவன்,அவனது நிலையைப் பார்த்த ரமேஷ் “நாலு வயசு பொண்ண கரெக்ட் பண்ண தெரியல நீயெல்லாம் வாமணன் பையன்னு வெளில சொல்லிடாதடா”
“என்னடா நாக்கால”
“ச்சா.. ச்சா… உன்ன போய் நக்கல் பண்ணுவேனா” என்றவனைப் பார்த்து.
“பேசுடா.. பேசு…. உனக்கு ஒரு நேரம் வரும் தானே அப்போ வச்சு செய்யுறேன்”.
“அப்போ பார்த்துக்கலாம்” என்றவன் நண்பனை அழைத்துக் கொண்டு டீ குடிக்கச் சென்றான்.தூக்க கலக்கமோ,இல்லை இறந்த கால எண்ணங்களோ காஞ்சனை சோர்வாகத் தெரிந்தாள், மீண்டும் தூக்கினாள் தேவலை என்பது போல இருக்க,மீண்டும் சென்று வாமணனின் அறையில் படுத்து கொண்டாள்
வேறு அறையில் படுத்தால் வாமணன் தன்னைத் தூக்கி செல்லும் அபாயம் உள்ளதால்.அவளே சென்று படுத்து கொண்டாள் யாரு கண்களுக்கும் உறுத்தாத வாரு.
மீண்டும் தூங்கி இரவு பத்து மணிக்கு தான் எழுந்தாள் பசி கூடத் தெரியவில்லை பேரிளம் பெண்ணுக்கு.எழும் போதே வாமணனின் வாசம் நாசியில்,குளித்து முடித்துக் கம்பீரமாக உள் பனியன், கைலி அணிந்து மனிதன் சிரத்தையாகக் கவி படைக்க,சக ரசிகையாக மோகம் கொண்டு தன்னை அறியாமல் கால்கள் அவரிடம் சென்றது.
பின்னிருந்து தோள் வளைவில் கன்னம் பதித்துக் கவி படைக்கும் கவிஞரின் கை பற்றி நிறுத்தி தனது எழுத்தாளரின் முதல் மூன்று வரி கிறுக்கல்…
தன் மீது மென்மை உரச,கண்கள் சொருகி தன் எழுத்தை ரசிக்கும் ரசிகையை,விழிகள் மங்க பார்த்துக் கொண்டு இருந்தார் வாமணன் இதோ அந்த மூன்று வரி கிறுக்கல்…..
வஞ்சனை இல்லாமல் என்னை வஞ்சித்த வஞ்சியே!
எஞ்சிய காலமெல்லாம் உன்னிடம் காதல் தஞ்சம்!
வஞ்சம் தாங்கி, தஞ்சம் கொண்டு மஞ்சம் செய்த காதலன் நான்!