anjali’s Endrum Enthunai Neeyaethan 22
anjali’s Endrum Enthunai Neeyaethan 22
என்றும் என்துணை நீயேதான் 22
பாண்டியன் வீட்டில் இருந்து விருந்து முடித்து சோழவந்தானுக்கு வந்தனர் கர்ணனும், விருஷாலியும். வீரபத்திரனும், லட்சுமியும் விருந்தாடலை பற்றி விசாரிக்க, அவர்களும் பாண்டியன், முல்லையின் விருந்தாடலை கூறினாள். கிளம்பு போது பாண்டியனும், முல்லையும், விருஷாலிக்கு தங்கத்தில் செயின் போட்டு விட அதை மறுத்த விருஷாலியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கர்ணனுக்கு விளை நிலத்தை விருந்தின் சீதனமாக கொடுத்தார்கள் இருவரும். அதையும் விருஷாலி மறக்காமல் கூறினாள்.
“ஏத்தா, தலை குளிச்சிட்டயா..” கோடியம்மாள் கேட்க.
“தினமும் குளிச்சிட்டு தான் பாட்டி இருக்கேன்.. ஏன் கேக்குறீங்க.” அவள் மருத்துவமனை சென்று வந்து குளிப்பதை கூறினாள். ஆனால் கோடியம்மாள் கேட்டது “வீட்டுக்கு தூரம்” விஷயம் வேறு.
“ஹாஹா.. ஏத்தா, நான் அதை கேட்க்கலை நான். வீட்டுக்கு தூரமாகி முடிச்சிட்டயானு கேட்டேன்.”
“ஓ.. அதுவா.. போன வாரம் தான் முடிந்தது பாட்டி.” நாக்கை கடித்துகொண்டு தவறாக சொன்னதை மாற்றி சொன்னாள்.
“சரித்தா.. அப்போ அடுத்த நல்ல நாள் தாலி சரடும், குண்டு காசும் மாத்திடலாம் லட்சுமி.” அவர் மருமகளிடம் சொல்ல, லட்சுமியோ,
“அப்படியே சமம்ந்திக்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் அத்தை. அவகளுக்கு சவுகரியமா இருக்குமானு. நாமளா முடிவெடுத்தா என்ன நினைப்பாங்க.”
“அப்போ இப்போவே கேட்டுரு லட்சுமி, ஏய்யா வீரா நம்ம சம்மந்திக்கு போன்போட்டு விஷயத்தை சொல்லுய்யா.” மகனிடம் கேட்க சொல்ல.
”சரி ம்மா இதோ கேட்க்குறேன்.” அவர்கள் அடுத்த வேலையில் பிசியாகிவிட, விருஷாலி அவர்களது அறைக்கு சென்றாள்.
”லட்சுமி நம்ம மருமகளோட தங்கச்சியையும் அப்படியே பொண்ணு கேட்டுறலாம். அன்னைக்கு ரொம்ப நல்ல நாளு கையோட சின்னவன் திருமணத்தை முடிச்சிட்ட எல்லாம் கடமையும் முடிந்த மாதிரி.” கோடியம்மாள் சின்ன பேரனி காதலை அன்றே பார்த்ததாள் அதை கூறினார்.
“பாட்டி, இப்போ அவங்க படிக்குறாங்க முதல உங்க சின்ன பேரன் படிச்சு முடிச்சதும் வேலைக்கு போகட்டும். அடுத்து இரண்டு மாசத்துல திருமணத்தை வச்சுக்கலாம். இப்பவே அவன் தலையில பொறுப்ப வைக்காதீங்க. உங்க கடமைய முடிக்க அவங்களை அவசரப்படுத்தாதீங்க, அவன் படிக்குற படிப்புக்கு பெரிய கம்பெனி வேலை கிடைக்குற மாதிரி இருக்கு. வேலையில சேர்ந்த பின்னாடி திருமணத்தை வைக்கலாம்.” கர்ணன் சொல்லிவிட்டு அறைக்கு சென்றான்.
“என்னமோ சின்னவன் மேல ஒட்டுதல் இல்லைனு சொல்லிட்டு இருந்த பார்த்தேல தம்பிக்கு இப்போவே பொறுப்பை கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு போறான். இதுலயே அவனோட பாசம் புரியலையா லட்சுமி.” அத்தையின் விளக்கமான பேச்சை கேட்டதும் தான் லட்சுமிக்கே புரிந்தது.
”அம்மா, அவங்களுக்கு நாம சொல்லுற நாளுல தாலி பிரிச்சு கட்டிரலாம்னு சொல்லிட்டாங்க. வேலை எல்லாம் தள்ளி வைச்சுட்டு, பிள்ளை விசேஷத்தை கவனிப்போம்னு சொல்லிட்டாங்க.”
“அப்போ சரி வர்ர வாரம் வெள்ளிகிழமை தாலி பிரிச்சு கட்டிரலாம் லட்சுமி. சம்மந்தியம்மாகிட்ட பொண்ணுக்கு தாலில சேர்க்க, காசு, குண்டு, பவளம், இதெல்லாம் நாளைக்கு வாங்கிர சொல்லிடு நீ. வீரா சம்மந்திய்யம்மா வீட்டுல இருந்து எத்தனை பேர் வராங்கனு கணக்கு செய்து, நம்ம கிராம மக்களும் சேர்த்து சாப்பாடு செய்து போடனும் அதுக்கான வேலையை நீ பார்த்துக்கோ. நகுலா.. ஏய்யா நகுலா..” லட்சுமி, வீராபத்திரனுக்கு வேலையை பிரித்துகொடுத்துவிட்டு நகுலனை அழைத்தார்.
“சொல்லுங்க பாட்டி.”
“வாசல்ல பந்தல் போட சொல்லு தர்மன அப்படியே வெள்ளிகிழமை ஒரு இருபது சேர் கொண்டு வரச்சொல்லிடு அவன்கிட்ட.”
“சரிங்க பாட்டி.”
“அத்தை அண்ணிகிட்ட சொல்லிட்டேன் அவங்களும் நாளைக்கே நகை கடைக்கு போய் எடுத்து வந்திராங்களாம்.”
“சரிம்மா..”
“அறைக்குள் நுழைந்த கர்ணனை பார்த்துவிட்டு அவள் வேலையில் கவனமானாள். அவனோ, “விசலா.. விசலா.”
“என்ன..”
“ஏய் இன்னுமா என்மேல கோவம் போகலை ஏன் டி நான் தான் அத்தைக்கிட்ட சொல்லி எல்லாத்துக்கு ஏற்படு பண்ணுச்சொன்னேனு நினைக்குற. நான் தான் அன்னைக்கு விளக்கமா சொன்னேன்ல அப்புறமும் ஏன் உனக்கு கோவம் போகலை.”
“கோவம் இல்லையே அன்னைகே நான் தயரா தான் இருந்தேன். நீங்க என் பார்வையை தப்பா புரிந்துகொண்டா அதுக்கு நான் பொறுப்பா.” விருஷாலி, சாதாரணமாக சொல்லிவிட்டு விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
“ஓ.. சரி.. என்ன?” முதலில் சாதாரணமாக எடுத்துகொண்டவன் அவள் தயரா தான் இருந்தேனு சொன்னதை கேட்டதும் அவன் அதிர்ச்சியடைந்தான்.
“ஏய் இப்போ என்ன சொன்ன..”
“ஒன்னுமில்லை.. எதுவும் சொல்லலையே.” சிரிப்பை அவன் முன் மறைத்துகொண்டாள்.
“இல்லை வேற என்னமோ சொன்ன.. தயரா இருந்தேனு சொன்ன. எதுக்கு தயரா இருந்த சொல்லு எனக்கு சுத்தமா புரியலை விசலா.” வேலை செய்பவளின் கையை பிடித்து திருப்பியபடி அவன் கேட்க.
“ஒரு முறை தான் சொல்ல முடியும் அதுக்குனு ஒவ்வொரு முறையும் சொல்ல முடியுமா? போங்க.. போய் வயல்ல வேலை இருக்கும் போய் பாருங்க.” மேலும் அவனை சோதித்தபடி அவன் கையை விலகிவிட்டு மெத்தையின் விரிப்பை மாற்றிக்கொண்டிருந்தாள்.
”எதுக்கு இப்போ மெத்தை விரிப்பை மாத்துற.”
“கசங்கி இருக்கு அதான்.. மாத்துறேன்.” அவள் மெத்தையின் விரிப்பை பற்றி சொல்ல, அவனோ அவளின் கையை பிடித்து நிறுத்தி விருஷாலியை திருப்பி, “இன்னும் கசங்கவே இல்லையே அப்புறம் எப்படி மாத்த முடியும்.” கர்ணன் குறும்பு சிரிப்புடன் விருஷாலியை பார்த்து கண்ணடித்தான்.
“என்… என்ன.. கச..” அவள் திணற, அவனோ முழுதாய் விருஷாலியை தன் கைக்குள் கொண்டு வந்தான்.
“என்ன திணறுர.. உண்மைய தான சொன்னேன் இன்னும் நாம..” அவன் சொல்ல வர,
“இப்போ வேண்டாமே எல்லாரும் இருக்காங்க அதுவும் பகல் நேரம்.” விருஷாலி தயங்கி சொல்ல, அவனோ,
“அப்படியெ…” அவன் சொல்ல வருவதற்க்குள்,
“அண்ணா, உன்னை அப்பா, கூப்பிட்டாங்க.” அவர்களின் அறையின் வெளியே நின்று சொல்லிவிட்டு சென்றான்.
”தேவையா.. போங்க போய் என்னனு கேட்டு வாங்க.” அவனை பார்த்து சிரிப்புடன் சொல்லிவிட்டு மெத்தை விரிப்பை மாற்றினாள்.
“சிரி.. சிரி.. நல்லா சிரி ராத்திரி வந்து உன்னை கவனிக்குறேன்.” அறையை விட்டு வெளியேறிகொண்டே சொல்லிவிட்டு சென்றான் கர்ணன்.
மாங்கல்யாம் மாத்துவதற்க்கான சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிருந்தனர் குடும்பம் முழுவதும். யார், யார்க்கு சொல்லலாம், ஊர் முழுவதையும் அழைக்கலாமா? இல்லை சொந்தங்களையும் மட்டும் அழைக்கலாமா? என்ற பேச்சும் ஓடிகொண்டிருந்தது. நகுலனும், வீரபத்திரனும் மற்ற வேலைகளை கவனிக்க. கர்ணன் தோப்பு, வயல் என பிசியாக இருந்தான். விருஷாலி விடுமுறையை மேலும் நீட்டித்துகொண்டிருந்தாள் அதனால் அவளும் வீட்டு பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தாள்.
கர்ணனும், விருஷாலியும் அதிகம் பேசிகொண்டாலும் அவர்களுக்கு நடுவில் ஏதோ ஒன்று குறைவது போல தான் தோன்றியது. அது என்னவென்று இருவரும் அறிந்திருந்தனர். கர்ணன் விருஷாலியை கவனமாக பார்த்துகொண்டான் என்றால் ஏன் நம்மை கவனாமக பார்த்துகொள்கிறான் என்ற யோசனை விருஷாலிக்கு சில சமயம் தோன்றிவிடும்.
மெத்தையில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துகொண்டிருந்தான் கர்ணன். வெங்காயம் விதைப்பு முடிந்து அறுபது நாளுக்கு மேலாக வந்துவிட்டது இன்னும் சில தினங்களின் வெங்காயத்தை எடுக்க வேண்டும். நெல் அறுவடை காலமும் நெருங்கிவிட்டது அதற்க்கான கூலி ஆள்களை பிடிக்கவும், அவர்களுக்கென சம்பளமும் கொடுக்க வேண்டும். அதனால் முன்கூட்டியே கணக்குகளை போட்டு வைத்தான்.
“என்னங்க ரொம்ப தீவிரமா கணக்கு பார்க்குறீங்க.” அவனை உரசிகொண்டு அமர்ந்தாள். இது அவனுக்குமே சாதாரணம் தான் ஆனால் அவளின் இரவு உடை அசாதாரணமாக இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
“இல்லை விசலா நெல் அறுவடை பண்ணனும், வெங்காயம் எடுக்கனும். அதுக்கான கூலி ஆள்களுக்கு சம்பளமும் கொடுக்கனும் அதான் முன்னாடியே கணக்கு பார்த்து வைக்குறேன்.” அவளை பார்க்காமல் சொன்னான்.
“ஓ.. சரி தோப்புல தான கணக்கு பார்ப்பீங்க என்ன இன்னைக்கு நம்ம ரூம்ல பார்க்குறீங்க.”
“உனகெப்படி தெரியும்..” விருஷாலியின் முகத்தை பார்த்து கேட்க.
“அன்னைக்கு நானும், சந்தோஷூம் வந்திருந்தப்போ நிறைய கணக்கு நோட்டெல்லாம் இருந்ததே அதை வைச்சு தான் கேட்டேன்.”
“ம்ம்.. ஆமா, அங்க பார்க்க நேரமில்லை அதான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடேன்.” மீண்டும் கணக்கில் கவனமானான்.
”ஏங்க.. இப்போ தோப்புல தேங்காய் பறிக்கலையா.”
“அதுக்கான..” அவள் முகத்தையும், அவள் அணிந்திருந்த உடையையும் அப்போது தான் பார்த்தான்.
“என்னாச்சு..” அவனின் பேச்சு பாதியில் நிற்ப்பதை பார்த்து கேட்க.
விருஷாலியின் இரவு உடை மிகவும் தளர்வாக இருந்தது. அதிலும் அவள் அணிந்திருந்த மேல் சட்டை அவளின் கழுத்துப்பகுதியை தெளிவாக காட்டியது. கர்ணனின் பார்வையை எங்கே போய்கிறது என அவளும் அவன் பார்வையை தொடர்ந்து பார்க்க அப்போது தான் ஓவர் கோட் போடாது வந்ததை அறிந்தாள்.
“போதும்.. ஓவரா பார்க்குறீங்க.” அவனிடம் சொல்லிகொண்டு எழுந்தவளை மீண்டும் அமர்த்தினான் அவனருகில்.
”ஆனா, அன்னைக்கு போட்டுருந்தியே அந்த மாதிரி போட்டுருக்கலாம்.” விருஷாலியிடம் சொல்ல, அவளோ ஏன் என்பது போல அவனை பார்க்க.
“அன்னைக்கு தான் அழகாக இருந்த அந்த ராத்திரி ட்ரெஸ்ல. இன்னைக்கு சுமார் தான்.. நீ.” ஏற்ற இறக்கத்துடன் அவன் சொல்வதை பார்த்து.
“உங்களை.. நான் சுமாரா.. அப்படி ஐயா எத்தனை பொண்ணுங்க அழகை வர்ணீச்சிருக்கீங்க.”
“ஏய் விசலா நான் ராமன் டி உன்னை தவிர இன்னும் யாரையும் ஏற எடுத்து பார்க்கலை.” கர்ணன் சிரித்துகொண்டு சொல்ல, விருஷாலியின் நாக்கில் சனி நர்த்தனம் ஆடியது போல,
“அப்போ வைஷாலி.. அவகூட நடந்த பரிசம்.” விருஷாலி சொன்னது, கர்ணன் முகம் சோர்ந்து போனது அவளை விட்டு விலகி எழுந்தான்.
“சாரிங்க.. ஏதோ நினைப்புல சொல்லிட்டேன் உண்மையா சொல்லனும் சொல்லலை.” விருஷாலி வருந்தி மன்னிப்பு கேட்க.
“சாரி கேட்க்குற அளவுக்கு வைஷூ என்னை பாதிக்கலை விசலா. பிடிக்கும், என் குடும்பத்துக்கு இவ சரியாதான் இருப்பானு தோனுச்சு. ஆனா அவள் முகத்துல என்னை பிடிக்கும்னு காட்டுற மாதிரி அவளோட சந்தோஷம் இருக்கும்.”
“அப்போ நான்.”
“உன்னையும் பிடிக்கும், தங்கச்சிக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட, என் குடும்பத்தை அனுசரிக்க பழகிக்கிட்ட. இருந்தாலும் தண்ணீ அடிக்குற பழக்கத்தை விடு டி அது தான் ஒரு குறை.” முதலில் அவளை பிடிக்கும் என்பதற்கான காரணத்தை சொல்லியவன், அவள் குடிப்பதை சிரித்துகொண்டு கவலையாக சொன்னவனை அடிக்க துரத்தினாள்.
அவனை துரத்திக்கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் அவனுடன் சேர்ந்து மெத்தையில் விழுந்தார்கள் இருவரும். மூச்சு வாங்க ஷாலு, கர்ணனை பார்க்க, அவனும் அவளை பார்த்துகொண்டே அவளை அருகில் இழுத்தான். அவனின் இழுப்புக்கு அவன் கழுத்தில் கைகளை போட்டுகொண்டு காதலாக பார்த்தாள்.
அவனோ, “விசலா ஒன்னு சொல்லனும்.” கர்ணன் ஆரம்பிக்க. ஷாலுவோ, ஒரு வேளை காதலை தான் சொல்ல போகிறான் என ஷாலுவும் ஆவலாக அவன் சொல்லுவதற்க்கு ஏற்ப இன்னும் அருகில் நெருங்கி வந்தாள்.
“ம்ம் சொல்லுங்க..” அவனிடம் கேட்க
“அன்னைக்கு அத்தை வீட்டுல போட்டுருந்தயே அந்த நைட் ட்ரெஸ் போட்டு வரீயா விசலா அது தான் உனக்கு அழகா இருந்துச்சு.” அவளின் காதில் சொல்ல, அவளுக்கோ எங்காவது போய் முட்டிகொள்ளலாம் போல இருந்தது.
“உங்களை…” அவனின் கன்னத்தில் கடித்து வைத்தாள்.
இரவின் குளுமையில் அவர்களின் வாழ்வு இனி நன்றாக இருக்கும் என கடவுள் சிரித்துகொண்டே சென்றார்.
தொடரும்…………………