கனலியின் கானல் அவன்(ள்)

20200724153943

கனலியின் கானல் அவன்(ள்)

நேற்றைய இரவு வரை இரவின் அமைதி, அது தனக்கு தனியே தன் வாழ்வில் தந்த வலிகளை,சுகங்களை நினைத்து போராடும் மனதுக்கு இதமாகவே இருந்திருக்க,  இன்றைய இரவு தன் வாழ்வில் என்றுமே வரும் என நினையாத நாள்.ஆனால் அரசு இதுவரை அது பற்றி நினையாத நாளில்லை.

ஏற்படுத்திக்கொள்ள விரும்பாவிட்டாலும் மனதில் என்றோ தனக்காக என்றும் இருப்பாள் தன் இரவுகளுக்கு ஒளிதருவாள்  எனும் நம்பிக்கையில் தன் எதிர்காலத்தை தன் காதல் பெண்ணோடு பகிர்ந்த நினைவுகள் என்றும் அவர் இரவின் தனிமை நேரங்களில் நினைவு வரும். அதோடு அவர்களுக்கு உண்டான பிரிவும்.இத்தனை  வருடங்களில் அவர் செயலோ முகமோ அதனை வெளிப்படுத்தியதில்லை. 

‘நினைத்திருந்தால் அவள் (மீனாட்சி)கரத்தையும் சேர்த்தே பிடித்திருந்திருக்கலாம்’ எனும்  உணர்வு இன்றளவும் தேனரசுவின் மனதில் ஓரிடத்தில் முள் என குத்திக்கொண்டு தான் இருக்கிறது.

அரசு தன் துணையையும் பாதுகாப்பும் வேண்டி ஒடுங்கி கிடந்த பெண்ணுக்கு அடைக்கலம் தருவதை மட்டும் நினைத்தார் என்பதற்கில்லை.தான் இன்னும் தொழில்  தேடிக்கொள்ள வில்லை.தன்னைவிட வசதியாக வாழ்ந்த பெண்,அவளது குடும்ப கௌரவம்,அவளது மானம் என அவற்றையும் நினைத்து தான் கலையரசியை மட்டும் கூட்டிக்கொண்டு  சென்றது.அதுவும் மீனாட்சிக்கு பார்த்திருந்த வரன்,மணமகன் பற்றி அரசு தேடிப்பார்க்க நல்லவிதமாகவே வார்த்தைகள் வர சந்தோஷமாய் வாழ்வாள் என்னுடன் இருப்பதை விட என்பதை  நினைத்தே முடிவெடுத்தார் அவளை விட்டு செல்ல. 

இருந்தும் காலம் அவர்கள் மூவரது  வாழ்விலும் ஏற்படுத்திய தாக்கம் இவர்கள்  இருவரையும் அவர்களின் பந்தமான கயல்விழியின் மூலமே சேர்க்கப்பட,தன் அறையில் இருந்த இருக்கையில்  சாய்ந்தமர்த்தவரின் மூடியிருந்த விழிகளுக்குள் கண்ணீர் நிறைந்து ஒரு துளி கண்ணோரமாய் இறங்கியது. 

கண்ணீரை தன் விரல் கொண்டு சுண்டி விட்டவர் நிமிர்ந்து அமர,தனதறையில் கட்டில் அருகே மேசையிலிருந்த பூச்சாடியில் நிறைத்து வைத்திருந்த வெள்ளை ரோஜாக்களை பார்த்திருந்தவருக்கு என்ன  சொல்லவென்று தெரியவில்லை. 

தன் தந்தையின் இரவுக்காக மகளின்  ஏற்பாடு.அறையில் எவ்வித அலங்காரமும்  இல்லை ஆனால் ஒற்றை பூச்சாடி அவ்வறையினையே  அலங்காரப் படுத்தியது.பெருமூச்சு விட்டுக்கொண்டவர் எழுந்துக்கொள்ளப் பார்க்க,அறையினுள் நுழைந்தார் மீனாட்சி.

“இன்னும் என்ன நீங்க அப்படியே இருக்கீங்க அரசு,போய் பிரெஷ் பண்ணிட்டு வாங்க.” 

மிக சாதாரணமாய் அவர் அறைக்குள்  வந்தவர் இரவுடையாக பருத்தி துயிலி  ஒன்று அணிந்திருந்தார்.அவரது கையில இருந்த சாரியினை ஒருபக்கம் வைத்தவர் அரசுவிடம் டவலினை நீட்ட, அரசு அதைப்  பெற்றுக்கொண்டு அப்படியே எழாது அமர்ந்திருந்தார்.

அவரருகே அமர்ந்த மீனாட்சி அவர் கை பிடித்து,

“என்னாச்சு தேனு? என வினவ, 

“ஒன்னில்லை மீனா,இரு பிரெஷாகிட்டு  வரேன் “என குளியலறைக்குள் நுழைந்தார். 

 

அவர் வரும் போது அவருக்காக கையில்   பாலுடன் கட்டிலில் அமர்ந்திருந்த மீனாட்சி அருகே அவரும் அமர்த்துக்கொண்டார். அவர் அமரவுமே அவர் கையில அதை கொடுத்தவர் கட்டிலில் வைத்திருந்த கயல்  தந்த பரிசினை பிரிக்க ஆரம்பித்தார்.  

“எதுக்கு இவ்வளவு அவசரமா அதை  பிரிக்கிற.காலைல பொறுமையா பார்க்கலாமே மீனா. 

“ரெண்டுபேரும் அடிக்கடி பேசிகிட்டு  இருந்தாங்க தேனு. என்னதான்னு பார்ப்பமே”

எனக் கூறிய மீனாட்சி அதை பிரிக்க அதில்  சிறிது நிற மங்கலான புகைப்படங்கள் பலதும் அடங்கிய தங்க நிற பிரேம் ஒன்று இருந்தது. 

அதை தடவிப்பார்த்துக்கொண்டே, 

“ரொம்ப அழகா இருக்குல்ல… என்கிட்டே  இது மட்டும் தான் இருந்தது.எங்க போய்  இதையெல்லாம் தேடி எடுத்துச்சுங்க “

என ஒரு படத்தைக் காட்டி கூற,  

 

“என்கிட்ட இந்த படங்கள் மூனும் இருக்கு”  என இன்னும் சிலதைக்காட்டி கூறினார் அரசு.  

ஏனையவை அரசு மீனாட்சி சந்திக்கும்  இடங்களான கல்லூரி மரப்பகுதி, அவர்களின் தெரு, அவர்களின்  வேர்த்து வாயில் என பழைய சில படங்கள்.அவர்கள் இருவரினதும் இனிதான தருணங்களை  நினைவு படுத்துவதாக. 

ருத்ராவின் மூலம்  தேடிப்பெற்றுக்கொண்டாள். 

அடுத்து அந்த  படத்திற்கு கீழ் இன்று காலை  மாதவன் கோவிலில் வைத்தெடுத்த இவர்கள் மூவரினதும் படம்.கயல்,மீனாட்சி  இருவரும் தேனரசுவை அன்னார்ந்து பார்க்க அவர் இருவரையும் அணைத்தவாறு நின்றிருந்தார்… 

“ரொம்ப அழகா இருக்குல்ல ” மீனாட்சி கூற  ஹ்ம்ம் என்ரு அதனை ஆமோதித்த அரசு அதனை கையில வாங்கி கயலின் முகம் வருடியவாறு, 

 

“இவளால என் லைஃப் முழுமையடைஞ்சு  தான் இருக்கு.ஆனா ஏதோ அவளால நான் என் லைஃப பார்க்காம விட்டுட்ட போல  நெனச்சுட்டு இருக்கா.இவளும் இல்லன்னா… சொல்லத்தெரில” என்றவர் கைகள் இப்போது படத்தில் இருக்கு  மீனாட்சியின் மீது.

“நான் பக்கத்துல தான் இருக்கேன் தேனு” 

மீனாட்சி கூற,சிரித்தவாறு அவர் தோள் சுற்றி கைபோட்டு அணைத்துக் கொண்டார்.அவரும் அவர் தோள்களில் நெடுநாள் பறந்து திரிந்த பறவை களைப்புற்று இளைப்பாற எண்ணி தன்  கூண்டு மரக்கிளையில் அமர்வது போல அவர் தோள்களில் தானும் சாய்ந்துக்கொண்டார். 

“இப்படி பண்ணுவான்னு நான் எதிர் பார்க்கவே இல்லை மீனா.அவளுக்கு  கல்யாணம் பண்ணலாம்னு தான் வந்தேன் பாரிப்போ,யாரு பண்ணிகிட்டான்னு.சின்ன  குழந்தையாவே நினைச்சிட்டு இருந்துட்டேன்.எவ்வளவு தூரம் யோசிச்சிருக்கா.இதால அவளே அவளை நோகடிச்சுப்பாளோன்னு தான் யோசனையா இருக்கு.” 

 

“உங்க பொண்ணு உங்களை போலவே  

வளர்த்திருக்கா தேனு.”

‘என்னை போலவா? ‘  எனும் விதமாய் அரசு  மீனாட்சியில் ஏறிட, 

“தன்னோட நிலை அடுத்தவங்களுக்கு  வர்றப்ப அவங்க நிலை யோசிச்சு இப்படி  பண்ணிருக்கா.அவளுக்கும் துணை,அன்பு காதல்,எல்லாம் தேவை பட்ரப், அவளும்  அதை உணர்ரப்ப அதெல்லாம் இல்லாம இருக்க நீங்க தான் அவ கண்ணுக்கு தெரிஞ்சிருப்பீங்க.அதான் இப்படி.”

இவ்வாறு,இருவரும் ஒருவரை ஒருவர்  பற்றிய பேச்சுக்கள் கயலையும் வட்டமிட்டுக்கொண்டு இரவு நெடுநேரம்  தொடர்ந்தது.அவர்கள் அருகே இருந்த வெள்ளை ரோஜாக்கூட்டம் இரவிலும் விழித்திருந்து இவர்கள் குரல் கேட்டு…

மிக நீண்ட நெடிய நாட்கள் அல்ல வருடங்கள் கடந்து இணைந்த இரு உள்ளங்களின் தேவை அவர்கள் உள்ளங்களை பகிர்ந்திட ஓர் இணையே. அது அங்கு இனிதாய்  நிறைவேற இனி அவர்கள் கடந்த காலம் அவர்கள் வாழும் வாழ்வினில் வந்துசேரும்… 

தனதறைக்கு வந்த கயல் உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழ ஏனோ இன்று அதிகமாய் ருத்ராவின் நினைவுகள்.

‘தன் அத்தையோடு எவ்வளவு பாசமாய் இருக்கிறான்.அதை மனைவிக்கு பல மடங்கு அள்ளித்தருவானே.எனக்கு  அதைபெற முடியாத இடத்தில் வைத்து விட்டாயே. இன்னொருவன் மகனாய் பிறந்திருக்க கூடாதா? ‘மனதில் ஊமையாய்  அழுதாள். 

 

பல நாட்கள் ஓய்வின்றி வேலை செய்தது போல் உடலுக்கு அசதியாய் உணர்ந்தாள்.உடல் வலிக்க வேலை செய்திராதவள், உடலில் வியர்வை வெளியேறி அணிந்திருக்கும் ஆடையில் அது பட்டு கண்டதில்லை இதுவரை. தன் அறையையே தந்தை தான் சுத்தப்படுத்தி தருவார்.பல நாட்களாக களகத்துக்கு டென்னிஸ் விளையாடவும்  சென்றிருக்கவில்லை.ஆனால் இன்று காலை எழுந்தது முதல் இப்போது படுக்கைக்கு வரும் வரையிலும் அவள் செய்த வேலை அவளுக்கு அதிகம் தான்.

 

அரசுவை நினைத்து மனம் முழுதும் சந்தோஷம் நிறைந்திருந்தது.தந்தை அவர் முகத்தில் காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் அவரில் ஏதோ ஓர் இதம் அதை கண்டு கொண்டவளுக்கு மனம் நிறைந்து தான் போனது. 

‘இருவரும் இனி வரும் காலங்களில்  அவர்களின் வாழ்க்கையை அவர்கள் நினைத்திருந்தது போலவே   வாழ்ந்துவிடுவர்.அவள் மனமும் சற்று இதமாகியது. 

 

அடுத்து என்ன இனி, ஒருவாரம் சென்று  செல்லவிருந்த பயணத்தை நாளைய இரவிற்கு மாற்றிக்கொண்டாள்.இவர்கள்  திருமணம் முடியவும் கனடா சென்று சில மாதங்கள் இருந்து வரலாம் என்று  நினைத்திருந்தாள்.ஏற்கனவே அது அவர்களுக்கான தனிமைக்காக என்று அவள் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் ருத்ராவை பிரிவதே முக்கியமாய். 

 

கடந்த நாட்களில் ருத்ராவின் வீட்டினருடன்  பழக கிடைத்த சந்தர்ப்பத்தில் தெரிந்து கொண்ட விடயத்தில் முக்கியமாக,  மீனாட்சியின் திருமணம் முடிய ருத்ராவுக்கு பல வரன்கள் வந்திருப்பதாகவும் அதில் ஒன்றை முடித்திட வேண்டும் என்று பார்வதி  கூறியிருந்தார்.அவனது திருமணம் முடிந்தால் தான் மதுமிதாவுக்கு முடிக்க முடியும் என்றும் கூறியிருக்க எப்படியும்,ஆறுமாதங்களுக்குள் அவனுக்கு திருமணம் நடந்தேறும்.அதுவரை  கனடாவில் இருப்பதாக முடிவெடுத்தாள்.  

 

அரசு தனியே செல்ல அனுமதிக்க மாட்டார் என்பதால்,அவர்களின் குடும்ப நண்பர் மெத்தியூஸின் மகனிடம் தான் கனடா வர இருப்பதாகக் கூறி,அவனையே டிக்கெட்டும்  போட சொல்லியிருந்தாள்.

கனடாவில் இருக்கும் போதே அதிகம் பேசாதவள் வரவேண்டும் எனக் கூறவும் சந்தோஷமாக சரியென்றிருந்தான்.தந்தை தனியே வர அனுமதிக்கமாட்டார்.அவரதுதிறீர் திருமணம்  பற்றி சுருக்கமாய் கூறியவள் வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்றுவிட்டு தானில்லாமல் இருந்தால் தான் அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கிக்கொள்வர் என்பதை கூறி அவனையே அவருடன் பேசி  அனுமதி கேட்க சொல்லியிருந்தாள்.நாளை அவன் பேசும் நேரம் அரசு மறுக்கக்கூடாது என வேண்டிக்கொண்டவளாய், 

 

தான் செல்லும் முன்னர் ருத்ராவோடு சில மணிநேரங்களாவது கழிக்க வேண்டும் என  நினைக்க கயலுக்கு வழிதான் தெரியவில்லை.அவனை பார்த்தாலாவது போதும் என நினைத்தவள் அவனை ஒருமுறையாவது பார்த்துவிட்டு  செல்வதென முடிவெடுத்தாள்… 

 

உடலுக்கு அசதியாய் இருந்தாலும் தூக்கம்  யேனோ கண்களை எட்டவில்லை. அலைபேசியில் அன்றைய நிகழ்வுகளின்  படங்களை பார்த்திருந்தவள்,வெகுநேரம் சென்றே துக்கத்தை தழுவினாள். 

Leave a Reply

error: Content is protected !!