என் உயிரே பிரியாதே 2
என் உயிரே பிரியாதே 2
பிரியாதே 2
மழையை பொருட்ப்படுத்தாமல் ஊட்டி மலைப்பாதையில் கார் ஓட்டிகொண்டிருந்தாள் சர்மிளா. அவளுடன், அவளின் காதலன் கௌதமும் இருக்கிறான். இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து, இதோ அவன் தன் காதலை ஏற்றது வரையில் ஒவ்வொரு நாளையும் கொண்டாடி வருகின்றனர்.
”கௌதம்..”
“சொல்லு சர்மி.”
“கண்டிப்பா மும்பை போகனுமா?”
“ம்ம் போய் தான் ஆகனும், என்னையும் அழைத்திருக்கிறார்களே போகமால் இருந்தா என் கெரியரில் ப்ளாக் மார்க் தான்.”
”ஹ்ம்ம்.. ஆனா, உன்னை விட்டு என்னால இருக்கமுடியாது நானும் வரேன் உன்கூட மும்பைக்கு.” அவனின் சில நாள் பிரிவை தாங்க முடியாதவளாய் இருந்தாள் சர்மிளா.
“ஹ்கூம்.. நீ ஒழுங்க உன்னோட ஃபைனல் இயர் எக்ஷாம்க்கு படிக்கனும். நான், உன்கூட இருந்தா நீ என்னை காதலிச்சுட்டே இருப்ப, அது உன்னோட எக்ஷாம பாதிக்கும். அதனால் நான் மும்பை போறது தான் சரி.” அவளின் லட்சிய கனவான முதுநிலை பட்டபடிப்பான மகப்பேறு மருத்துவம் நுழைவு தேர்வை அவள் எழுதுவதால் அவன் இவ்வாறு கூறினான்.
“ஹ்ம்ம்.. நான் வேணா அடுத்த வருஷம் எழுதிகிறேன் கௌதம். இந்த முறை நானும் உன்கூட மும்பை வரேன், ப்ளீஸ் கௌதம்.” அவனுடன் இருப்பதற்க்காக அவளின் கனவுகளை இழப்பதற்க்கு அவள் தயாராக இருந்தாள்.
“சர்மிளா.. என்னை பார்க்காத வரைக்கும், ஏன் என்ன காதலிக்காம இருந்திருந்தா நீ இந்த நேரம் எக்ஷாம்க்கு படிச்சிட்டு இருப்ப. ஆனா, என்னைக்கு நீ என்னை காதலிக்க ஆரம்பிச்சியோ அப்போது இருந்து நீ என்கூட தான் இருக்க. சரி கூட இருக்க… ஆனா, எனக்காக, என்னோட இருக்குறதுக்காக உன்னோட கனவை விட்டுகொடுக்கனும், நான் நினைக்கலை, நினைக்கவும் மாட்டேன். உன் லட்சியத்தை எனக்காக கூட விடக்கூடாது. நீ எப்போவும் உன்னோட நிலையில இருந்து மாறக்கூடாது. நான் வர்ரதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்படி இருக்கனும், ஏன் உன்னை மாத்திக்கிற..” கொஞ்சம் கோவமாய், அவளின் கடந்த காலத்தில் அவள் எப்படி இருப்பாள், இப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்பதையும் அவன் சுட்டிக்காட்டி அவளிடம் பேச.
அவனின் பேச்சுகள் அவளுக்கு வேதனை தந்தாலும், அவன் சொன்னது உண்மை தானே. அவன் வரும் வரை படிப்பு, வேலை இருந்த அவளின் காலம், அவன் வந்த பின்னும், காதலித்த பின்னும், அவனும் தன் காதலை ஏற்றுக்கொண்ட பின் அவள் மொத்தமாக மாறியிருந்தாள். அனைத்தையும் அவனுக்காக அவள் விட்டுருந்தாள், இதையெல்லாம் அவன் அறிந்தாலும் அவன் மனம் ஒரு பக்கம் ஏற்க்காமல் இருந்தது. இன்னொரு பக்கம் அவளின் காதலுக்காக ஏற்றுக்கொண்டது.
அவள் அமைதி கூட அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் முகத்தையே அவன் பார்த்திருக்க, அவள் கண்ணின் ஓரம் நீர் துளி விழவா? என கேட்டு நின்றது. அதையும் அவன் கண்டுகொண்டு, அவள் கண்ணில் ஓரம் நின்றிருந்த நீரை சுண்டு விரலால் துடைத்துவிட்டு,
“சர்மி.. சாரி டா..” அவளிடம் மன்னிப்பை யாசிக்க.
அப்பா, அம்மா இல்லாத அனாதையா வளர்ந்த அவளுக்கு அவனோட அருகாமை தான் அதுக்கு ஈடாக இருக்கிறது. அவள் கௌதமின் அரவணைப்பை தேடுகிறாள், நாடுகிறாள். இது அவனுக்கு தெரியுமா? இல்லை தெரிய வைப்பாளா?
“நீ இப்படி அமைதியா இருந்தா நான் எப்படி போக முடியும் நீ நல்லா இருந்தா தான நான் போக முடியும்.”
“ப்ச்.. போரேனு சொல்லாத போயிட்டு வரேனு சொல்லு கௌதம்.” அமைதியை கலைத்து அவனிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்.
“சரி, நல்லபடியா என்னை வழியனுப்பி..” அவன் பாதி முடிக்கும் முன்னே எதிரே வந்த ஒரு கார் அவர்களின் காரை மோதிகொண்டு வலது பக்க பள்ளத்தாக்கில் கீழே விழுந்தது, பெருத்த சத்ததுடன். சர்மிளா, கௌதம் இருந்த கார் உருண்டு, உருண்டு விழ, சர்மிளாவை காப்பாற்ற அவன் எண்ண, அவளோ கௌதமை காப்பாற்ற எண்ண இருவரின் நிலையும் கொஞ்சம் மோசமாக இருந்தது.
சர்மிளா பயத்திலும், தலையில் பட்ட அடியிலும் அவள் மயக்கத்திற்க்கு செல்ல, அப்போது காரின் பெட்ரோல் டேங்க், தீப்பற்றி எரிய ஆரம்ப்பிக்க, தலையில் அடிப்பட்ட கௌதம், அதை கண்டுகொண்டு சர்மிளாவை அவள் அமர்ந்திருக்கும், கார் கதவை முயற்சி செய்து அவன் திறந்து அவள் அணிருந்திருந்த சீட் பெல்ட்டை கத்தியை கொண்டு அறுத்துவிட்டு அவளை கீழே தள்ளி விட சரியாக பெட்ரோல் டேங்க் வெடித்து காருடன் கௌதமும் சம்பவ இடத்திலே எரிந்து போனான்.
கீழே விழுந்த சர்மிளா, ஒரு பாறையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள். அவளை காப்பாற்றியது அந்த வழியில் சென்ற மலை வாழ் மக்கள்.
“சர்மி.. சர்மி..” தூங்கிகொண்டிருந்தவளை, எழுப்பினால் தியா.
மெதுவாக கண்ணை விழித்து பார்க்க, நடந்தது எல்லாம் அவள் கனவில் வந்து சென்ற முந்தைய காட்சிகள். இன்று வரையில் அவள் கனவிலும், தூக்கத்திலும் வராமல் இருக்காது அந்த சம்பவம். இப்போதும், அவள் வெளி உலகத்திற்கு ஒரு மருத்துவர். ஆனால், அவள் உலகத்தில் சர்மிளா கௌதமை நினைத்து வாழும் ஒரு காதலி.
“சர்மி.. உன்னை தேடி ஒருவர் வந்திருக்காங்க.” தோழி தியா கூற. தோழியை பின்பற்றி, அவர்களின் வீட்டின் ஹாலுக்கு வந்து பார்த்தவள் விழி பார்வை சாதாரணமாக தான் இருந்தது.
“சர்மிளா.. எப்படியிருக்கம்மா..” அவர் குரலில் என்றும் உன் நலத்தை விரும்புபவன்.
“நல்லா இருக்கேன்.. உட்க்காருங்க.” அவரை, அமரசொல்லிவிட்டு, அவரின் எதிரில் நின்றிருந்தாள்.
’எதற்க்கும் என்னை தேடி வராதவர் இன்று மட்டும் ஏன் என்னை தேடி வந்திருக்கிறார்.’ அவள் மனதில் யோசிக்க, அவள் மனதை படித்தார் போல் எதிரில் நின்றிருந்தவரும் அதே பேச ஆரம்பித்தார்.
“உன்னை தேடி எதுக்கு வந்தேனு தெரிந்துக்கனுமா..”
“ஆமா.. சொல்லுங்க.”
”உதவி வேணும்.” அவரின் வார்த்தைக்கு அவள் இப்போது மயக்கம் போட்டு தான் கீழே விழ வேண்டும்.
’தன்னிடம் உதவி கேட்டு வருமளவிற்க்கு அப்படி என்ன இருக்கிறது. இவர், இவருக்காக உதவி கேட்டு வந்திருக்க மாட்டார். வேறு யாரோ ஒருவருக்கு தான் உதவி கேட்டு வந்திருப்பார். ஆனால், அந்த வேறொருவர் ஒருவர் யார், எதற்காக அந்த உதவி செய்ய வேண்டும்.’ அவள் நினைத்துகொண்டிருக்க.
அவரே அந்த உதவி யார்க்கு என விளக்கமாகவும், அவளுக்கு புரியும்படியாகவும் கூறினார். அவர் சொன்னதையெல்லாம் பலவித உணர்ச்சிகளுடன் அவள் முகத்தில் வெளிப்படுத்த, அவரும், அவள் முக உணர்ச்சிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
“என்னால சரியா செய்ய முடியலைனா.. அப்போ இந்த உதவி எல்லாம் வீண் தானே.”
சின்ன சிரிப்புடன் அவள் அருகில், “சர்மிளாவால முடியாதாத.. கண்டிப்பா முடியும்னு நம்பிக்கை இருக்கு ம்மா.” அவர் கூறிய வார்த்தையில் அவள் இவரின் நம்பிக்கையை காப்பாற்றியாக வேண்டும் என நினைத்துகொண்டாள்.
“சரி நான் செய்யுறேன், எப்போ எங்கனு எனக்கு சொல்லுங்க.” அவர் சொன்னதற்க்கெல்லாம் சம்மதித்தாள் அவரும், சில திட்டங்களை சொல்லிவிட்டு, அவளிடம் ஒரு கோப்பை கொடுத்துவிட்டு சென்றார்.
கையில் வாங்கிய கோப்பை, அவள் அறையின் மேஜையில் வைத்துவிட்டு குளிக்க சென்றாள். அன்றைய நாளுக்கான வேலையை செய்ய ஆரம்பித்தாள். தியா, சர்மிளாவுடன் வேலை செய்யும் தோழி. இருவரும் ஒரே மருத்துவமனையில் மருத்துவர்களாக வேலை செய்கின்றனர். சர்மிளா மகப்பேறு மருத்துவ துறையில் இருக்கிறாள். தியாவும் அதே துறையில் குழந்தைகள் மருத்துவத்தில் இருக்கிறாள். அதனால் ஒரே வீட்டிலும் இருவரும் தங்கியிருக்கிறார்கள்.
”யார் சர்மி அவங்க..” உணவு மேஜையில் அமர்ந்த தோழிக்கு உணவை பரிமாறியப்படி தியா கேட்க.
“என்னோட கடவுள்..” ஒரே வரியில் முடித்துகொண்டு உணவில் கவனமானாள் சர்மிளா.
ஓரளவிற்க்கு மேல் தியாவும் கேட்க்கவில்லை ஆனால் தியா, வந்தவரின் மேல் சந்தேகமாக இருந்தாள். சர்மிளாவை சந்தித்த நாளில் இருந்து இன்று வரையில் தியாவிடம் ஒட்டாத பேச்சும், நெருங்கிய தோழி என்றெல்லாம் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் ஒரு தோழி அவ்வளவே, ஆனால் எப்போதும் தியாவிர்க்கு ஒரு பக்க துணையாக இருப்பாள் அவளறியாமல்.
”நான் போயிட்டு வரேன் தியா.. உனக்கு எப்போ டியூட்டி.”
“ஈவ்னிங்க் செவனுக்கு மேல சர்மி.. ம்ம் பார்த்து போ சர்மி.” சர்மியை வழியனுப்பி வைத்தாள் தியா.
“சரி..” சர்மிளா அவள் ஸ்கூட்டியை எடுத்துகொண்டு அவள் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தாள்.
சர்மிளாவின் மனம் கௌதமை நினைத்த வண்ணம் இருக்க. அவள் காதருகில், “என்னை பற்றியே நினைக்காத, உன்னோட படிப்பும், எதிர்காலத்தையும் நினைவில் வைத்துகொள். என்னை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து நீ என்னோட ஒட்டிட்டே இருக்க. இப்போ ஒழுங்க உன்னோட வேலையை கவனி, வேலையில கவனத்தை வச்சாதான் அந்த வேலை நல்லபடியா நடக்கும்.” அசரிரீயாக ஒலிக்க நடு ரோட்டில், வாகனங்கள் வந்தபடி இருந்த சாலையில் சட்டென்று நிறுத்தியவளை திட்டிகொண்டிருந்தார்கள் அவள் பின் வந்த வாகன ஓட்டிகள்.
அவர்களின் திட்டுக்களை, அவள் ஏற்க்காமல் போனாலும், கௌதமின் பேச்சுகள் அவள் காதில் இன்னும் ஒலித்த நிமிடத்தை அவளால் கேட்க்காமல் இருக்க முடியவில்லை.
அவள் மனதில், “உன் நினைவுகளுடன் நான் வாழ்ந்தாலும், உன்னோட குரல் இப்போவும் என் காதுக்கருகில் ஒலித்துகொண்டிருக்கிறது. அப்போ நீ என்னுடன் தான் இருக்கியா கௌதம்?” அவள் மனம் வேதனை கொண்டது.
இல்லாதவனை நினைத்து வாழும் சர்மிளாவின் மனம் எப்போது மாறப்போகிறது என தெரியவில்லை. ஆனால், விபத்து நடந்த அன்று சாட்சியாக இருந்த ஒருவரால் அவளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
“எல்லாம் எடுத்து வச்சுட்டேன் சிவா ஒரு முறை சரியா இருக்கானு பார்த்துக்கோ. உன்னோட திங்க்ஸ், ட்ரெஸ், அண்ட் சேவீங்க் க்ரீம், வாட்ச், டை, சூஸ். டே பை டே என்ன ட்ரெஸ் போடனும்னு டைம் டேபில் போட்டுருக்கேன் அதையும் பார்த்துக்கோ.” நண்பனின் பயணத்திற்க்கு தேவையான பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் முரளி.
முரளி செய்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன் மடிக்கணினியில் முக்கிய வேலையை செய்துகொண்டிருந்தான் சிவா. ஆனால், முரளி விடுவானா, அவனருகில் சென்று மடிக்கணினியை பிடிங்கி கொண்டு, அவனின் பெட்டியின் அருகே சென்றான்.
“டேய்.. முக்கியமான வேலை பார்த்துட்டு இருந்தேன் கொடு என் லேப்டாப் அ.”
“இங்க ஒருத்தன் உயிர் போக பேசுனா, நீ கண்டுக்காம உன்னோட வேலைய பார்த்தா என்ன அர்த்தம். முதல வா உன்னோட எல்லா பொருளும் சரியா இருக்கானு பாரு சிவா.” முரளி அழைக்க, சிவாவும் முரளியின் அருகே வந்தான்.
நண்பன் எடுத்து வைத்த எல்லா பொருளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாம் இருக்கு, ஆனா என்னோட கான்பிரன்ஸ் மீட்டிங்காக ப்ரிப்பேர் செய்து வைத்த ஃபைல்ஸ் எங்க?”
முரளி தன் தலையிலே அடித்துகொண்டு, சிவாவின் மேஜையில் இருக்கும் கான்பிரன்ஸ் கோப்புகளை எடுத்து வைத்தான்.
“இப்போ ஓகே வா.” குழந்தையாக கேட்க, நண்பனின் செய்கையில், சிவா சிரித்துகொண்டே அவனை அணைத்துகொண்டான். அந்த அணைப்பில் சிவாவின் பயம் இருந்ததா? இல்லை அவசியம் மும்பை போகவேண்டுமா? என இருந்தது.
”சிவா.. ஜெஸ்ட் ஒன் வீக் தான் மீட்டிங்க் முடிச்சுட்டு நீ வர போற அதுக்கு எதுக்கு டா இப்படி பீல் பண்ணுற.” முரளி ஆறுதல் சொல்ல.
சிவாவின் அணைப்பு சாதாரணமாக இல்லை உணர்ந்துகொண்ட முரளி அவனை தேற்றினான்.
“எதுக்கு அந்த மீட்டிங்க்.. நான் போகலை டா.” மறுபடியும் அவன் பின் வாங்க.
“ஹ்ம்ம்.. அப்போ நீயே ஷீப்கிட்ட சொல்லிரு..” முரளி ஷீப்பை நினைவுப்படுத்த.
“ஹ்ம்ம் அதுக்கு நான் மும்பை கிளம்புறேன்.. அவர்கிட்ட செஸ்ல தோல்வியடைந்ததுக்கு தான இப்போ இந்த மீட்டிங்க் அட்டென் பண்ண சொல்லி, பனிஷ்மெண்ட் கொடுத்தாரு.”
”பின்ன, பாடம் சொல்லிகொடுத்த குருவையே மிஞ்ச முடியுமா உன்னால.”
இருவரும் பேசிகொண்டே சிவாவின் பயணத்திற்க்கு முரளி தயார் செய்து வைக்க சிவாவும் மும்பை பயணத்திற்கு புறப்பட்டான். அவனின் பயம் விமான நிலையத்திற்க்குள் நுழைந்ததும் ஆரம்பித்தது.
இது தான் ஆரம்பமா? இல்லை அவன் மனம் என்ன நினைக்கிறது என சோதனை செய்ய போகும் தருணமா?
பிரியாதே………..