உயிரோடு விளையாடு 27(1)

uyirodu vilaiyadu-c90bd3ff

உயிரோடு விளையாடு 27(1)

என்னில் உன்னைத் தொலைத்து,

உன்னில் என்னை நிறைத்து,

‘நீ’ என்னும் உன்னையும்

‘நான்’ என்னும் என்னையும்

‘நாமாக’ மாற்றி விட்ட விந்தை

எப்படி நடந்தது!….

பார்வைகள் தவமாய்!…

ஸ்பரிசங்கள் வரமாய்!…

உன்னை நோக்கியே

என் வாழ்க்கை

உன் பாதை வேறு

என் பயணம் வேறு,

உன் பாதையில் என் பயணம்

எப்படி சாத்தியம் ஆனது!

பூமியாய் நான்,

வானமாய் நீ,

எப்படி நம் இதயங்கள்

பறி மாறப்பட்டது!

எனக்காக என்று

துடித்து கொண்டிருந்த

என் இதயம்,  இன்று உனக்காக

ஏன் துடிக்கிறது!…

உன்னை சுற்றியே

என் கனவுகள்

இரவுகளை ஏன் நிறைக்கிறது!…

பகலில் என் பொழுதாகவும்,

இரவில் என் உறக்கமாகவும்,

நீயே மாறி போனது ஏன்?

நம் இணைவு சாத்தியமற்றது

எப்படி இருளும் ஒளியும்

 இணைய முடியாதோ,

அது போன்றது நம் காதல்…

ஆனால், உன் இருளுக்கு

ஒளியாக நானும்,

என் வெளிச்சத்தின் நிழலாக

நீயும் மாறிப் போகிறோம்

உன்னை அடைவதற்கான

விதி என்னிடம் இல்லை

இருந்தாலும் நம்மை

இணைக்கிறது காதல்!…

நம் விதி முற்றிலும் மாறுபட்டது

உன்னை நானோ,

என்னை நீயோ

 ‘நம் வாழ்க்கையில் சந்தித்து

 இருக்கவே கூடாது’

என்பது என்

பிராத்தனையாக இருந்தது

சந்தித்த பிறகோ, என் பிராத்தனையாக

‘நீயே’ மாறிப் போனது விந்தை!…

உன் ஒற்றை விழி பார்வைக்கு

என் உயிர் சமர்ப்பணம்!…

உன் ஒற்றை வார்த்தைக்கு

உன்னில் என்னை

அழித்துக் கொண்டிருக்கிறேன்

கண் திறந்து பார்

‘நீ’ என்னும் தீயில்

உருகி கொண்டிருக்கிறது

‘என்’ உயிர் மெழுகு

உனக்காக

உன்னில்…

அத்தியாயம் 26

வாகனம் நிறுத்துமிடங்கள்.

perspective #CarParking #phoenix #mall #architecture #velachery #tamilnadu #photography A8 #randomclicks #hap… | Architecture photography, Photography, Car parking

பொழுதுப் போக்கு இடங்கள், உணவகங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், துணி, நகை கடைகள், உடற் பயிற்சி மையங்கள், கற்றல் இடங்கள் என்று பலவற்றில் தினமும் நாம் கண்டு, கருத்தில் கொள்ளாத இடம் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்.

நம் வாழ்வில் பல சமயங்களில் நாம் கடந்து வந்திருக்கும் இடம். தனக்கென்று தனி உலகை சிருஷ்டித்து இயங்கும் இடம். பல காத்திருப்புகளை, வலிகளை, வேதனைகளை, சோகங்களை, துக்கங்களை பார்த்த இடம்.

பல்வேறு வகையான வாகனங்கள், பல்வேறு வகையான வாழ்க்கை முறைக்கு ஏற்ப, வெறும் தட்டியில் ஆரம்பித்து, அல்ட்ரா மாடர்ன் வகை நிறுத்தங்கள்.

இப்படி இங்கே வந்து நிற்கும் இந்த வாகனங்கள் சுமந்தவர்களின் எப்படி பட்டவர்கள், எங்கே செல்கிறார்கள், எங்கிருந்து என்ன வேலை முடித்து வருகிறார்கள் என்று நின்று யோசித்து பார்த்தால், பிரபஞ்சம் என்னும் பெரும் மாய விளையாட்டில் நாம் ஒரு சிறு மணல் துகள் மட்டுமே என்ற பிரமிப்பு ஏற்படாமல் போகாது.

அப்படியொரு திறந்தவெளி வாகன நிறுத்துமிடம் அது.

கடல் முத்து/ocean’s pearl என்ற அந்த ரிசார்ட்டிற்கு வருபவர்கள் வாகனங்கள் நிற்கும் இடம். நடக்க நடக்க விரிந்து கொண்டே போகும் அளவிற்கு மைதானம்போல் பரந்து விரிந்திருந்த கார் பார்க்கிங் ஏரியா.

ஐந்து நட்சத்திர ரிசார்ட் என்பதால், கார் பார்க்கிங் அதற்கு ஈடாக மிரட்டிக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு விளையாட்டரங்கதிற்குள் நடப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது என்றால் மிகையல்ல. அத்தனை நீளம், அத்தனை விஸ்தாரம் அந்தக் கார் பார்க்கிங்.

சோலார் விளக்குகள் சூரியனுக்கு போட்டியாக, ‘எங்களாலும் இரவைப் பகலாக மாற்ற முடியும்’ என்று களத்தில் இறங்கி தோற்று கொண்டிருந்தன பெண்ணவளின் மேனியை தழுவும் உடைபோல், மெல்லிய பனியானது சூழ்ந்து மறைத்தும், மறைக்காமலும், ‘இரவிற்கும் ரகசியங்களும் நெருங்கிய தொடர்பு உண்டு’ என்று சொல்லிக் கொண்டிருந்தது.

இரவு வேளை பூச்சிகளின் இசை கச்சேரி அந்தச் சூழ்நிலைக்குப் பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தது.

கடல் முத்து/ocean’s pearl’ ரிசார்ட்டின் கார் பார்க்கிங்கில் ஒரு மூலையில் மட்டும் அந்தகாரம் சூழ்ந்து இருந்தது. அந்தப் பகுதியில் இருந்த சோலார் விளக்குகள் பழுதாகி இருக்க, அந்தப் பகுதி மட்டும் இருளில் மூழ்கி இருந்தது.

Car in parking lot at night | Park photography, Night aesthetic, Alone in the dark

நள்ளிரவு நிலவின் ஒளியும், காற்றின் ஸ்பரிசமும், கடல் அலையின் ஓசையும், இரவின் இருட்டும் தகுந்த சந்தர்ப்பத்தை, ஏற்படுத்திக் கொடுத்து இருக்க, தங்களுக்குள் இருக்கும் ஆத்ம பந்தத்தை உணர ஆரம்பித்துக் கொண்டிருந்தது இதயங்கள் ரெண்டு அங்கே.

பிடிபட்டவர்களை இழுத்து கொண்டு செல்வம், ரிஷி, ரிசார்ட் பணியாளர்கள் சென்றிருக்க, அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் அங்கேயே தனித்து நின்றார்கள் ஈஸ்வரும், சம்யுக்தாவும்.

காரணம் அவர்களே அறியாத ஒன்று.

யாரும் இல்லாமல், துணையோடு தனித்து இருப்பதில் தோன்றும் இனிமையை அனுபவித்தபடி அந்த இருளோடு இருளாகத் தனித்து நின்றார்கள் அவர்கள் இருவர் மட்டும்.

‘காதல்’ என்னும் முத்தை எடுக்க, இரு இதயங்கள் முக்குளிக்கத் தயாராகி இருந்தன தாங்களே அறியாமல்.

யார் இதயம், யாரிடம் சேர வேண்டும் என்ற காதல் விளையாட்டு அது.

நான்கு விழிகள் ஒன்றிலொன்று கலந்து, பார்வைகள் ஒன்றை ஒன்று தழுவி, இதயங்கள் ஒன்றை ஒன்று பறி மாறிக் கொண்டிருந்தது.

எண்ணம், சொல், செயல் எல்லாம் மறந்து, சுற்றி இருக்கும் உலகம் எல்லாம் மறைந்து, இருவர் மட்டுமே இருக்கும் புதிய உலகத்தை அவர்களே அறியாமல் அங்கே சிருஷ்டித்து கொண்டிருந்தார்கள்.

ஈஸ்வர் சம்யுக்தாவாகவும், சம்யுக்தா ஈஸ்வராகவும் மாறிப் போனதை அவர்களே அறியவில்லை.

ஒற்றை நொடியில், ஒற்றை பார்வையில், ஒற்றை ஸ்பரிசத்தில் மலர்ந்து விட்ட காதல் அவர்களை மாற்றி இருந்ததை, என்று இருவரும் உணர போகிறார்கள்!.

‘இருவராய்’ இருந்தவர்களை, காதல் ‘ஒருவராய்’ மாற்றி விட்ட காதல் மலர்ந்த நேரமது.

ஆதி முதல் ஆணையும் பெண்ணையும் இணைக்கும் ஏதோ ஒரு மாயம் காதல்.

மனங்கள் மீள விரும்பாத போதை.

யுகங்கள் கடந்தாலும் புதிது புதிதாய் இதயங்களை இடம் மாற்றும் மாயம்.

தசையினால் ஆன இதயத்திற்கு, உயிர் கொடுக்கும் அர்த்தம்.

தாயின் கருவறையில் பிறந்த மனிதர்களை, இன்னொருவரின் இதயத்தில் மீண்டும் புதிதாய் பிறக்க வைக்கும் அதிசயம்.

வாழ்க்கை என்னும் பயணத்தை வண்ணமயமாக்கும் விந்தை.

மனதிற்குள் ஆயிரம் சூறாவளிகளை உண்டாக்கும் அதி உன்னத மன எழுச்சி. தனக்குள் மூழ்கி இருக்கும் மனிதர்களை இன்னொரு உயிருக்காக வாழ வைக்கும் பேரானந்தம்.

வாழ்வென்பதன் அர்த்தத்தையே மாற்றி விடும் உலகின் மிகப் பெரிய புதிர். புரிந்தவர்களுக்குச் சுவர்க்கம், புரியாதவர்களுக்கு புத்தியை மழுக்கடிக்கும் மதிமயக்கி.

எதற்காக, ஏன், எப்படி, எதனால், எப்பொழுது என்ற கேள்விகளால் யாராலும் விடை சொல்ல முடியாத தேடலான காதல், அங்கே துளிர் விட ஆரம்பித்திருந்தது.

‘அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்’ என்று கம்பர் வர்ணித்த, காவிய காதலின், முதல் விழி ஸ்பரிசத்தில், இதயங்கள் தடம் மாறி இடம் மாறி இருந்தது.

அது எத்தனை வினாடிகளோ இல்லை மணி துளிகள் கடந்ததோ ஈஸ்வர், சம்யுக்தாவிற்கே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.

பார்வைகள் மூலம் மனங்கள் ரெண்டு, அங்கு மௌனமாய் உரையாடி கொண்டிருக்க, அவர்கள் சிருஷ்டித்து இருந்த காதல் என்னும் மாய உலகத்திலிருந்து அவர்களை மீட்க, கனத்த கனைப்பொலி அங்கே எழுப்பப்பட்டது.

ஈஸ்வர், சம்யுக்தா இருவரும் ஒரு கணம் திகைத்து, தங்களை சுற்றி என்ன நடந்தது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றார்கள்.

தலையைக் கோதி திரும்பிய ஈஸ்வர், ‘என்ன ஆச்சு இப்போ!… எதுக்கு இப்படி இதயம் போர் முரசு மாதிரி அடிக்குது?…. ஓடி வந்ததில் இருக்கும்…’ என்று ஈஸ்வர், மிகத் தவறாய் கணித்து, குழம்பி நிற்க, தன் இதயத்தைப் போர் முரசாக மாற்ற வல்ல பெண்ணவள், அவன் அருகில் தான் நிற்கிறாள் என்பதை அவனிடம் யார் சொல்வது.

சம்யுக்தா என்ற பெண் ஒருத்தியால் மட்டுமே, அந்த இதயத்தின் துடிப்பை, உயிர்ப்புடன் வைக்க முடியும் என்பதை என்று ஈஸ்வர் உணர போகிறான்?

ஈஸ்வர் அருகில் சம்யுக்தாவோ, வெகுவேகமாய் துடிக்கும் தன் இதயத்தை மேல் கை வைத்து நின்றாள்.

‘ஓஹ்! … அடெரனலின் குறைந்து விட்டது போலிருக்கு. அதான் துரத்திய சம்பவம் லேட்டா ரியாக்ஷன் காட்டுது…’ என்று மிகத் தவறாய், தன் இதய துடிப்பின் காரணத்தைப் புரிந்து கொண்டாள்.

இதயத்தின் வேக துடிப்பிற்க்கு காரணமானவன் அருகில் நிற்கிறான் என்பதை சம்யுக்தா உணரவேயில்லை.

அந்த இதயம், அவன் ஒருவனுக்காக மட்டுமே உயிரின் கடைசி நொடிவரை துடிக்கப் போகிறது என்பதை என்று சம்யுக்தா உணர போகிறாள்?

மீண்டும் தங்கள் அருகில் இருந்த தங்கள் துணையை பார்த்தவர்கள், அசட்டு சிரிப்பொன்றை உதித்தார்கள் எதற்கு என்றே தெரியாமல்.

அன்னைக்கு தெரியாமல் இனிப்பை உண்ணும் குழந்தை, பிடிபடும்போது அங்கு இருக்கும் அழகு எப்படி இருக்குமோ அப்படியொரு சூழல், காதலர்கள் தங்கள் திருட்டுத்தனத்தால் சிக்குவதும்.

“அது வந்து….” என்று இருவரும் ஒன்றாய் ஆரம்பித்து, என்ன சொல்ல நினைக்கிறோம் என்று புரியாமல் குழம்பி நிறுத்தினார்கள்.

“அது வந்து… நான்…”

ஈஸ்வர், சம்யுக்தா மீண்டும் உளறிக் கொட்டி, தலையைக் கோதி அசடு வழிந்து நின்றிருக்க, இது எல்லாவற்றையும் கடுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள் செல்வம், எமி, ரிஷி.

காதலில் விழுந்தவர்களை விட, அவர்கள் அருகில் உள்ளவர்களுக்குத் தான் நடப்பது நன்கு விளங்கும் என்பதும், அதிகமாய் இது போன்ற பைத்தியக்காரதனங்களால் நொந்து நூடுல்ஸ் ஆவதும் காதலிப்பவர்களின் நண்பர்களே என்பது உண்மை தானோ!.

எத்தனை உயர்ந்த அறிவாளியாக, செல்வந்தனாய் இருந்தால் என்ன, காதல் என்னும் நோய் தாக்கியபிறகு இப்படி டன் கணக்கில் அசடு வழிவது எல்லாம் சகஜம் தானே.

‘காதலிக்கிறோம்’ என்பதை உணர்வதற்கு முன் உள்ள குழப்பமான மனநிலை கூட, இசைபோல் மனதை தாலாட்ட வல்லது.

என்ன நினைக்கிறோம், என்ன சொல்ல விரும்புகிறோம், எதற்காகக் காரணமே இல்லாமல் சிரிக்கிறோம், வழக்கமான பார்த்து, பழகிய அதே உலகம், மக்கள் தீடிர் என்று வண்ணமயமாக இன்னும் அர்த்தம் உள்ளதாக ஏன் மாறித் தெரிகிறது என்று புரியாத தருணம் அது.

தங்கள் இதயம் இடம் மாறி விட்டது என்பதை உணராத அந்த உள்ளங்கள் ரெண்டும், மாய நாடகம் ஒன்றில் சிக்கி, திக்கி, திணறிக் கொண்டிருக்க, அருகில் இருந்த மற்ற மூவருக்கும் நன்கு விளங்கி விட்டது அந்தக் காதல்.

Vijay Antony: Age, Photos, Family, Biography, Movies, Wiki & Latest News - FilmiBeat    G.V.Prakash Kumar on Twitter: "#NewProfilePic… "    Varalaxmi Sarathkumar signs one more!

“கிளீன் போல்ட்…” என்றான் செல்வம் எரிச்சலுடன்.

“உனக்கு ஏன் எரியுது செல்வம் அண்ணா?…” என்றான் ரிஷி விஷம புன்னகையுடன்.

“எப்படி எரியாமல் இருக்கும்?… சாருக்கு தான் சம்யுக்தா மேடம் மேல், சாப்ட் கார்னெர் இருக்கே!… இப்போ அதுக்கு ஈஸ்வர் போட்டியாக….” என்று நக்கலாகச் சொன்ன எமியை கண்டு, தன் கோப பார்வையை திருப்பிய செல்வம்,

“ஜஸ்ட் சட் அப் எமி/just shut up… அப்படி எல்லாம் எதுவும் இல்லை… நீயே கற்பனை செய்துக்காதே!… சம்யுக்தா இஸ் நத்திங் டு மீ நௌ ஆர் எவர்/samyukthaa is nothing to me.now or ever.” என்றான் எங்கோ பார்த்த படி.

“இன்று, ‘நத்திங்/nothing’ என்று இருப்பது, நாளைச், ‘சம்திங்/something’ ஆகி, எதிர்காலத்தில், ‘எவெரி திங்/everything’ ஆக வாய்ப்புண்டு செல்வம்…” என்றாள் எமி நக்கலாக.

“டோன்ட் பீ மெலோ ட்ராமாட்டிக்/don’t be melodramatic. சினிமா டயலாக் மாதிரி வாட் ஐஸ் திஸ் எமி?… குரோ அப்/grow up.”என்றான் செல்வம்.

“உண்மைக்கே காலம் இல்லாமல் போச்சு… கலி காலம். கலி காலம்.” என்றாள் எமி.

“ஆமாப்பா சொன்னாங்க பிபிசி நியூஸில் கூட… காலம் என்ற ஒன்று இருக்கு எமிக்கா… இன்று எதுவும் இல்லை என்றாக இருப்பது, எதிர்காலத்தில் எல்லாமுமாக மாறலாம். முழு பூசணிக்காயை வெறும் கையால் மறைத்து விட்டேன் என்று சொல்லலாம். காதில் முழம் முழமாய் பூவைச் சுற்றலாம். ஆனால் உண்மை, உண்மை தான் இல்லையா எமிக்கா?” என்றான் ரிஷி நக்கலுடன்.

“உண்மை தான் ரிஷி. ஜப்பான் எரிமலை அனல் இங்கே அடிக்குது… அப்படி இருந்தும் எதுவுமே இல்லையாம்… சொல்ராங்க நம்பிடு ரிஷி. என்னவாம் சார்வாளுக்கு!…” என்றாள் எமி நக்கலாக.

“வேற என்ன!… ஈஸ்வர் ப்ரோ, சம்யுக்தா மேடம்,
‘கண்ணுக்குள் நூறு நிலவா!…
இது ஒரு கனவா?...’ என்று கண்களால் அக்னி ஏவுகணையாய் ஏவி, டூயட் பாடி கொண்டிருப்பது தான் காரணம் சிஸ்… யப்பா!… என்ன அனல்!… என்ன அனல்!… பயர் என்ஜின்னுக்கு தான் போன் செய்யணும்…” என்றான் ரிஷி.

“ச்சே!… ச்சே!… அதெல்லாம் போதாது… பற்றி எரியும் நெருப்பின் அனலை பார்க்கும்போது, சமுத்திரத்தில் கொண்டு போய் முக்கி எடுத்தால், உலகத்தின் ஒட்டுமொத்த கடல் நீரும் ஆவியாகி விடும் அளவுக்கு அனல் அடிக்குது ரிஷி…” என்றாள் எமி.

“எமி ஐ சேட் ஸ்டாப் இட்/ I said stop it…. பஸ் கரோ… வாட்ஸ் ராங் வித் போத் ஆப் யு?/what’s wrong with both of you?..” என்ற செல்வம்.

“பஸ் இல்லைன்னா ட்ரெயின், ஆட்டோ ஓகேவா ப்ரோ?…” என்றான் ரிஷி.

“ஜோக்கு… சிரிப்பே வரலை…” என்றான் செல்வம்.

“எப்படி வரும்… அதான் புகைஞ்சிட்டு இருக்கே….” என்றாள் எமி.

“எமி…”என்று செல்வம் கடுப்புடன் ஆரம்பிக்க,

“ஹே செல்/sel…டேக் சில் பில்/take chill pill…” என்றனர் மற்ற இருவரும் கோரஸாக.

“கைஸ் ஸ்டாப் இட். வில் யு/stop it will you?… சைல்ட்டிஷ் ஷா இருக்கு… ஜஸ்ட் ஸ்டாப் இட்…” என்ற செல்வம்
கோபத்துடன், பார்வை என்னும் க்ளு வால் ஒட்டிக் கொண்டிருந்த ஈஸ்வர், சம்யுக்தாவை நோக்கிச் சென்றான்.

அருகில் இத்தனை நடந்து கொண்டிருக்க, அதைப் பற்றிய கவனம் இல்லாமல், கார் பார்க்கிங் இருளில் மீண்டும் பார்வையால் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டு நின்றார்கள் ஈஸ்வரும் சம்யுக்தாவும்.

வார்த்தைகள் தோற்று, இதயங்கள் பேசிக் கொண்டிருந்த தருணம் அது.

காதல் என்னும் யாகத்தில், இரு இதயங்கள் அறியாமல் பங்கேற்று கொண்டிருக்க, அதில் பூஜை வேலை கரடியாக நுழைந்தான் செல்வம்.

செல்வம் வந்ததை அவர்கள் இருவருமே பார்க்கவில்லை. உரக்க கனைத்தும் அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.

“சார்!… ஈஸ்வர் சார்!…” என்று ஈஸ்வர் தோளில், செல்வம் தட்டி கொண்டிருக்க, அதை ஈயை விரட்டுவது போல் கையால் தட்டி விட்ட ஈஸ்வரின் பார்வை மட்டும் சம்யுக்தாவை விட்டு விலகவேயில்லை.

“அங்கே பாரு ஈஸ்வர் பார்வை கோந்து போல் சம்யுக்தா மேல் ஓட்டிட்டு இருக்கு… இவரு போய்க் கூப்பிட்ட உடனே அவன் பார்வை எப்படி விலகும்?… அழகான பெண் மாட புறா  எதிரில் நிற்கும் போது நண்பனாகவே இருந்தாலும், ‘மூழ்காத ஷிப் எங்க பிரென்ட்ஷிப்’ என்று பாட்டு பாடி இருந்தாலும், ஜீன்ஸ் போட்ட சிம்ப்பன்சியை எல்லாம் எவன் பார்ப்பான் ?…” என்றாள் எமி ரிஷியிடம் முணுமுணுப்பாக.

“அதானே!….சம்யுக்தாவை லூக்ஸ் விட்டு, ஜொள் மன்னனாய் இருந்தாலாவது எதிர்காலத்தில் பலமான கவனிப்பு இருக்கும் மேடம் கிட்டே இருந்து… செல்வம் ப்ரோவை பார்த்து என்ன ஆக போகுது?… எனக்கு ஒரு ஆசை எமி.” என்றான் ரிஷி.

“என்னடா?… அப்படி என்ன திடீர் ஆசை?” என்றாள் எமி வியப்புடன்.

“ஈஸ்வர் ப்ரோ சட்டையைக் கழட்டி பார்க்கணும்…” என்றான் ரிஷி.

“என்னது ?…” என்று ரிஷி சொன்னதை கேட்டு எமிக்கு ஹார்ட் அட்டாக் வராத குறையாய் அலறினாள்.

“அடேய்!… சொல்லவே இல்லை… நீ சேம் சைட் கோல் அடிக்கிறவனுக்கு இத்தனை நாள் தெரியாம போச்சே!… அது தெரியாம அந்த ரெண்டு லூசுங்களும் நைட்டில் உன் கூடப் படுத்துட்டு இருக்குங்களே!…”என்றாள் எமி திகைப்புடன்.

“என்னது!….” என்று எமி பேச்சில் குழம்பிய ரிஷி, அவள் தன்னை, ‘அவனா நீயி?…’ என்று மறைமுகமாய் கிண்டல் செய்வதை புரிந்து கொண்டு, ஓங்கி எமி தலையில் ஒரு கொட்டு வைத்தான்.

“வெள்ளை குரங்கே!…தீஞ்சி போன ஓணானே!… வாயைப் போய்ப் பினாயில் ஊத்தி கழுவுடீ… மாப்பி பின்னாடி எத்தனை குஜிலிஸ் சுத்திட்டு இருக்கு… நீ என்னன்னா முதலுக்கே மோசம் ஆகிடுவே போலிருக்கே!…தாயே! …அங்காள பரமேஸ்வரி!…. கதையை மாத்தி விடாதே தெய்வமே!… நான் அவன் இல்லை…” என்றான் ரிஷி அலறாத குறையாய்.

நம்பாத பார்வை ஒன்றை எமி, ரிஷிமேல் செலுத்தி, “பின்ன ஈஸ்வர் சட்டையைக் கழட்டி பார்க்கணும் என்று திடீர் என்று சொன்னால், நான் என்னனு நினைக்கிறது? இதை அந்தப் புள்ள சம்யுக்தா சொல்லி இருந்தா கூட ஏதோ ஒத்துக்கலாம்… நீ ஈஸ்வர் சட்டையைக் கழட்டி என்னடா செய்யப் போறே?…” என்றாள் எமி கண்ணடித்து.

“ஹேய்!… நான் உன் தம்பிடீ… தம்பி கிட்டே பேசுவது மாதிரி பேசு… சென்சார் செய்யும் அளவுக்கு விட்டா போவே போலிருக்கே!… பார்த்துப் பேசு. அந்தப் பொண்ணுக்கு கராத்தே, குங்கும பூ எல்லாம் தெரியும் போலிருக்கு… அங்கே காட்டினதை பார்த்தே தானே!…

‘எங்கேயோ போற மாரியாத்தா!…
என்மேல் கொஞ்சம் வந்து ஏறாத்தா!.…’ என்று புயலை இந்தப் பக்கம் திசை திருப்பிட போறே!… என்னையெல்லாம் பார்த்தா அடி வாங்கும் உடம்பு மாதிரியா இருக்கு…நானெல்லம் ஊன்னு ஊதினாலே பறக்கும் ரகம். அந்தப் புள்ளை கிட்ட தர்ம அடி எல்லாம் வாங்க முடியாது.” என்றான் ரிஷி சம்யுக்தா மேல் கலவரத்துடன் பார்வை ஓட்டி.

“அடேய்!… அவங்க இன்னும் காதல் என்னும் தனி உலகத்தில் டூயட் பாடிட்டு தான் இருக்காங்க… நீ சொல்லு… ஈஸ்வர் சட்டையை நீயேன் கழட்டி பார்க்கணும் என்று சொன்னே?…வாட்ஸ் தி மேட்டர்?”என்றாள் எமி .

“எம்மா தாயே!… மேட்டரும் இல்லை, குவாட்டரும் இல்லை… ஈஸ்வர் ப்ரோக்கு உடம்பு பூரா மச்சம் இருக்கோன்னு ஒரு டவுட்… அதான்…” என்றான் ரிஷி.

“அவனுக்கு மச்சம் இருந்தா உனக்கு என்ன, இல்லாட்டி உனக்கு என்ன?… இப்போ மச்ச ஆராய்ச்சியில் தாங்கள் தொபுக்கடீர் என்று குதிக்க காரணம் என்னவோ?”என்றாள் எமி.

“இல்லை எமி… திருநெல்வேலி அல்வா மாதிரி, காஷ்மீர் ஆப்பிள் மாதிரி, வெண்ணையில் செய்த கேக் மாதிரி இருக்கும் சம்யுக்தா, ஈஸ்வர் ப்ரோவை லுக் விடுதே…. அதான் உடம்பு பூரா மச்சம் இருக்கோன்னு ஒரு டவுட்…” என்றான் ரிஷி.

“ஏன் டா அவனுக்கு என்னடா குறைச்சல்?… சிக்ஸ் பாக் வச்சி அவனும் சினிமா ஹீரோ கணக்கா தானே இருக்கான். ஈஸ்வருக்கு அவன் கல்லுரியில் இருக்கும் விசிறிங்க இதைக் கேட்டாங்க உன்னையே கொத்து பாராட்டோ போடாம விடமாட்டாங்கடீ… உடம்பு பத்திரம் நைனா… ஒருத்தி அடிப்பது போய் ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து மொத்தியெடுக்க போகுது.

அது கொலைகார விசிறிப் படை. அவளுங்க இவன் கன்ன குழியில் விழும் குழியைப் பார்த்து விடும் பெருமூச்சில் சூறாவளிகளே அடிச்சுட்டு பத்து கண்டம் தாண்டிப் போகுது… இப்படி மட்டும் நீ பேசினதை கேட்டாளுங்க மவனே உன் உயிருக்கு நோ கியாரண்டி.” என்றாள் எமி.

“அட ஆமாம்மில்லை…”என்றான் ரிஷி கிலியுடன்.

“என்ன நோமமில்லை… மூடிட்டு அங்கே செல்வம் படும் பாட்டைக் கவனி… இன்னமும் குதிரை மாதிரி கனைச்சிட்டு அவங்க கவனத்தை கலைக்க காமெடி ஷோ நடத்திட்டு இருக்கான்… அதுங்க ரெண்டும், ‘உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே’ காட்டிட்டு இருக்கு…

அதுங்களை காதல் ஆற்றில் முழுகி எப்படியாவது போகட்டும் என்று விட்டுட்டு இவன் கரை ஏராளம்….” என்றாள் எமி சிரிப்புடன்.

“யாரு செல்வம் ப்ரோ தானே!… செஞ்சிட்டு தான் மறு வேலை பார்ப்பார்… பாரு ரெண்டு பேருக்கும் நடுவே சீன பெருசுவரை கட்டாமல் ஓய மாட்டார்…

ஐயோ!… முடியலடீ… அவர் முகம் போகும் போக்கைப் பாரேன்… வடிவேலு காமெடி யோட மிகப் பெரிய காமெடியா இருக்கு… சும்மா சொல்லக் கூடாது ஈஸ்வரும் சம்யுக்தாவும் புகுந்து விளையாடி, செல்வத்தை வச்சி செஞ்சிட்டு இருக்காங்க…” என்றான் ரிஷி சிரிப்புடன்.

எமியும், ரிஷியும் விழுந்து விழுந்து சிரிப்பது போல் தான் இருந்தது செல்வத்தின் நிலை.

தொண்டை தண்ணீர் வற்ற செல்வம், ஈஸ்வரை அழைத்துக் கொண்டிருக்க, ஈஸ்வரோ சம்யுக்தாவிடம் காதல் பயிரை அமேசான் காடுபோல் வளர்த்தே ஆவேன் என்று கங்கணம் கட்டி இருந்தான்.

செல்வத்தின் அழைப்பு ஐஸ்வரின் செவிகளை எட்டாமல் போனது.

ஈஸ்வர் விட்டுக் கொண்டிருக்கும் ஜொள் என்னும் சுனாமியில் சிக்கி, செல்வம் முகம் போகும் போக்கைப் பார்த்து, எமி, ரிஷி இருவரும் வாய்மேல் கை வைத்துச் சிரித்து கொண்டிருந்தார்கள் மௌனமாக.

சத்தமாகச் சிரித்து, செல்வத்தின் கோபத்திற்கு ஆளாக அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு.

“அடங்!… டேய் ஈஸ்வர்!…” என்று செல்வம் மீண்டும் அவன் தோளைத் தட்டினான்.

ஈஸ்வரோ சம்யுக்தாவின் கண்ணில் கருவிழி நடனத்திற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டிருந்தான்.

அடுத்த நொடி ஈஸ்வர் முதுகில் பேய் அறையாக ஒன்று விழ, கோபத்துடன் கை ஓங்கி திரும்பிய ஈஸ்வர், அங்குச் செல்வத்தைக் கண்டு குழம்பி, “என்னடா!….” என்றான் திகைப்புடன்.

“என்ன நொன்னைடா!… எத்தனை நேரமாய் கூப்பிட்டுட்டு இருக்கேன்…” என்றான் செல்வம்.

“என்னது கூப்பிட்டியா?… எப்போடா… எனக்குக் கேக்கவேயில்லையே!… ஆமா நீ எப்போ வந்தேடா?…” என்றான் ஈஸ்வர் விழித்தவாறு.

(எங்கப்பன் சத்தியமாய் குதிருக்குள் இல்லவே இல்லை.)

“சுத்தம்….” என்ற செல்வத்தின் கோப பார்வை சம்யுக்தா பக்கம் முழு வீச்சுடன் திரும்ப, உதட்டைப் பல்லால் கடித்து கொண்டு எங்கோ பார்த்தாள் சம்யுக்தா.

சிவந்து இருந்த இருவரின் முகம், அதில் டன் கணக்கில் வழிந்த அசடு, வகையாய் சிக்கி கொண்ட பாவம் கண்ட செல்வத்தின் கோபம் எல்லைகளை எல்லாம் தாண்டிக் கொண்டிருந்தது.

‘இது சரியில்லையே!… இதை வளர விடக் கூடாதே!….’ என்று செல்வத்தின் மனம் அலற, சம்யுக்தாவின் முன் வந்து நின்ற செல்வம், தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, கைகளை மார்பின் குறுக்காகக் கட்டி கொண்டு கால்களை அகல விரித்து நின்றான்.

சம்யுக்தாவின் மீது செல்வத்தின் குற்றம் சாட்டும் பார்வை வெகு அழுத்தமாய் பதிந்தது.

‘நாம என்ன தப்பு செய்தோம்… எதுக்கு இந்த அளவுக்கு இவர் இப்படி பாசமாய் பார்த்து வைக்கிறார்?… என்ன பார்வை உந்தன் பார்வை என்று பாடணுமோ?…’ என்று விழிப்பதை தவிர சம்யுக்தாவிற்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

செல்வத்திடமிருந்து வெளிப்பட்ட ஏதோ ஒன்று சம்யுக்தாவை அவளையும் அறியாமல் ரெண்டடி பின்னால் நகர வைக்க, பின் இருந்த காரில் மோதி நின்றாள்.

கை வைத்துத் தொட்டால் கையில் சிக்கி விடும் போலிருந்தது செல்வத்திடமிருந்து வெளிப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.

முதல் பார்வையிலே ஒருவருக்கு ஒருவரை பிடிக்காமல் போகுமா என்ன?…

இல்லை இது வேறு ஏதும் ஒன்றா!

“செல்வம்!…” என்ற ஈஸ்வர் குரலில் தேங்கிய செல்வம், திரும்பிப் பார்க்க, அவன் கையைப் பிடித்து அழுத்தினான் ஈஸ்வர்.

காதலர்கள் பார்வைகள் மட்டும் தான் மோதிக் கொள்ளுமா என்ன!… அங்கே கூர் வாட்களாய் நண்பர்கள் இருவரின் பார்வையும் மோதிக் கொண்டன.

“ரிலாக்ஸ்!… நான் டாக்டர் மேடம் கூடப் பேசத் தான் போறேன்….” என்றான் செல்வம்.

செல்வம் அதைச் சொன்ன விதமே சம்யுக்தா வயற்றில் புளியை கரைத்தது.

‘அடிக்க முடியவில்லையே!….’ என்ற தொனி ஏன் இவன் குரலில் இருக்கிறது?…. யாரிவன்?….எதுக்கு ஜென்ம விரோதியை முறைப்பது போல் இப்படி பார்த்து வைக்கிறான்?….’ என்று குழம்பி நின்றாள் சம்யுக்தா.

நக்கலான பார்வை ஒன்றை சம்யுக்தா பக்கம் செலுத்திய செல்வத்தையும், அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்த ஈஸ்வரையும் பார்த்து என்ன அங்கே நடக்கிறது என்று புரியாமல் விழித்தவாறு நின்றாள் சம்யுக்தா

‘தன்னால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு மௌன நாடகம் அங்கே அரங்கேறி கொண்டிருப்பது என்ற உணர்வு ஏன் ஏற்படுகிறது?…’ என்று புரியாமல் குழம்பி நின்றாள் சம்யுக்தா.

‘யாரிவன்?…இவன் முகம் ஏன் நெடுநாள் பழகிய முகம்போல் தோன்றுகிறது?…இவனை எப்படி எனக்குத் தெரியும்?… இவன் முக அமைப்பு, இவன் மனேரிசம், இவன் பார்க்கும் பார்வை எல்லாமுமே எனக்கு நெடுநாள் பழகியது போன்று ஏன் தோன்றுகிறது?… எந்த வகையில் இவன் எனக்குப் பழக்கம்?…

இவனை எப்படி எனக்குத் தெரியும் ?… இவனுக்கும் எனக்கும் என்ன உறவு?… இவனிடமிருந்து வெளிப்படும் கோபம், ஒரு வித துவேஷம் அதைக் கை வைத்துத் தொட்டு விடும் அளவிற்கு என்னால் ஏன் உணர முடிகிறது.

இவனின் இத்தனை கோபத்திற்கு ஆளாகும் அளவிற்கு நான் என்ன செய்தேன்?… யாரிவன்…. அதி முக்கியமாய் எனக்கு யார் இவன்?…’ என்ற எண்ணம் மலைபோல் எழும்பக் கண்களில் குழப்பத்துடன், மனதில் சஞ்சலத்துடன், கோப பார்வை பார்த்துக் கொண்டிருந்த செல்வத்தைத் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

பார்வைகள் அங்கே மோதிக் கொண்டன.

ஒன்றில் அடக்கப்பட்ட கோபம்.

இன்னொன்றில், ‘ஏன்?…’ என்ற குழப்பம்.

ஆட்டம் தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!