பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 36
உடுபதியும் உடுக்களின் ஆளுமையில் அக்கருவானமும் கவர்ந்துக் கொண்டிருந்தது…
சமையல் முடித்த, சசி. அனைவரையும் சாப்பிட அழைத்தார்… படித்துக்கொண்டு இருந்த சாரதியும் தொலைகாட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமனும் ஹாலுக்கு வத்தனர்.
” ஏங்க, போய் விஷ்ணுவையும் மயூ தம்பியையும் கூட்டிட்டு வாங்க…” என்றவர் உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
“சாரதி, நீ போய் தம்பியைக் கூட்டிட்டு வா, நான் விஷ்ணுவை கூட்டிட்டு வரேன்…” என்றவர் விஷ்ணுவை அழைக்க, மாடி ஏறினார். இவனும் மயூரனைத் தேடிச்சென்றான்.
அந்தக் கருவானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.. எண்ணற்ற விண்மீன்கள் பூத்திருப்பது போலவே அவள் எண்ணங்களில் ஆயிரமாயிரம் நினைவுகள் அவளை வாட்டிக் கொண்டிருந்தது.
” இங்க என்னமா பண்ற? அதுவும் தனியா நின்னுட்டு…” அவள் அருகில் வந்து தோளோடு அணைத்தார்.
” எனக்கு தனியா இருக்கிறது பழகிப் போன ஒண்ணும்.அதே தொடரது” என்றாள். மகளின் கூற்றுப் புரியாமல் இல்லை, அவளைப் பெத்தவருக்கு.
” பழகின விஷயத்தை மாத்திக் கொள்வதும், புது விஷயத்தை பழகிக் கொள்வதும் மனிதனோடு இயல்பு மா. என்ன கொஞ்சம் கஷ்டமா இருக்கும். புது பழக்கம் பிடிச்சுருந்தால் மனதுக்கு இதமா இருக்குமா. வா மா சாப்பிடலாம்.”என்றார் இரு பொருள் பட, அதுவும் அவளுக்குப் புரிந்தது.
அவள் எதுவும் சொல்லாமல் அவரோடு இணைந்தாள்.
இங்கோ தன் அறையில், விஷ்ணுவின் புகைப்படத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
தன் காதலி, மனைவி என எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு, அவள் இன்னொருவனை நினைத்து வாடுவதை நினைக்க நினைக்க, நெருப்பு ஜூவலையில் குளித்தது போல எரிந்தது.
தனக்கென்று நினைக்கும் ஒரு பொருளோ நபரோ தனக்கு மட்டும் தான் என்று எண்ண வைப்பது அன்பு தான். தனக்குப் பிடித்த பொருள் ஒன்று வேறொருவரின் கைகளில் பார்த்தாலே, கோபம், தவிப்பென வந்து விடும் போது. காதல் கொண்டவன் எவ்வாறு அதை தாங்குவான். அவளை நினைத்து கண் கலங்கிருக்க ” உள்ள வரலாமா? ” அறை வாசலில் நின்றுக்கொண்டு கேட்டான் சாரதி.
போட்டோவைத் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தவன்…” உள்ள வா சாரதி” என்றான் வர மறுத்த சிரிப்பைக் காட்டி.
” அம்மா, உங்களை சாப்பிட கூப்பிடறாங்க…” என்றான்.
” இதோ ரெண்டு நிமிஷம் வந்துறேன்…” என்றவனை முறைத்தவன்.. ” என்ன வர்றீங்களா? நீங்க வர்ற வேணாம்” என்றதும் அவனுக்குப் பக்கென ஆனது..’ ஒரு வேள இவனுக்கும் நான் இங்க இருக்கிறது பிடிக்களையோ…’ புரியாமல் விழித்துவாறு பார்த்தான்.
” ஹாஹா… விஷ்ணுவை நினைச்சு பீல் பண்ணிட்டு தானே இருந்தீங்க? பீல் பண்றவங்க சாப்பிடலாமா? சாப்பாடு வேணாம் சொல்லி மறுக்க வேணாம்…” அவன் கூறுவது அவனுக்கு சுத்தமாக புலப்படவே இல்லை.
“சாரதி, நீ என சொல்ல வர்றன்னு எனக்கு சுத்தமா புரியல…” என்றான் முழியை உருட்டியவாறு
“ம்ம்ம்… நீர் மங்குனி மாமா என்று மணிக்கு ஒரு முறை காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்…” என்றான்.
” டேய்….” அவனை அடிக்க முயல, இரண்டடி பின்னே சென்றவன்..” நோ நோ வோயலென்ஸ் மாமா. நான் சொல்லுறத்தைக் கேளுங்க, இப்ப நான் போய், மாமாக்கு மனசு சரி இல்லையாம், அதுனால சாப்பாடு வேணாமான்னு சொல்லுவேன்.. நீங்களும் இப்ப பண்ணினது போல, பீல் பண்ணுங்க, உடனே என் அக்கா, பீல் பண்ணி உங்களைத் தேடிவருவா, அப்டியே அம்மா கிட்ட சொல்லி அவ கையில் சாப்பாடு கொடுத்து விட சொல்லுறேன்.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க. அவக்கூட கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம் ல…” என்றதும் வாடிய முகம் இரவில் பூக்கும் அல்லி மலரை போல் மலர்ந்தது.
” ஆமா, நான் உனக்கு மாமான்னா,நீ எனக்கு என்ன வேணும்?”
“இது கூட தெரியாதா? நான் உங்களுக்கு மச்சான் வேணும் மாமா”
” ஒ… மச்சான், ரொம்ப தங்க்ஸ். எங்க நீயும் உங்க அக்கா மாதிரி என் மேல கோபமா இருக்கியோன்னு நினைச்சேன். சூப்பர் ஐடியா மச்சான்….” என்றே அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டான்.
” ஆமா, எனக்கு கொடுங்க இதெல்லாம். போங்க மாமா” என்றவன் சலித்துக் கொள்ள,
” அடேய் எனக்கு மட்டும் ஆசையா, உனக்கு கொடுக்க, எல்லாம் மை நேரம்… உங்க அக்காக்கு நான் கொடுத்தேன் வை.. அவ்வளவு தான் என் மண்டை இந்நேரம் பொலந்து இருக்கும்” என்றான் அதே ரீதியில்…
” போங்க மாமா, இவ்வளவு நாள் அவளை காதலிக்கிறீங்க, அவள பத்தி உங்களுக்கு முழுசா தெரில. எங்க அக்கா ஒரு சென்டிமென்டல் இடியட். பாசமா , அன்பா பேசுனா அடங்கிருவா, இப்படி எதாவது பண்ணால் தான் கொஞ்சம் திமிர் காட்டுவா… இப்ப நீங்க அவ கிட்ட செட்டிமெண்டா பேசி லாக் பண்ணுங்க. என்ன புரியுதா?” என்றதும் பூம் பூம் மாடாய் தலையை ஆட்டினான்.
“ம்ம் … நல்லா ஆட்டுங்க, ஆனா சொதப்பினீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என ஒரு விரல் நீட்டி எச்சரிக்கைச் செய்தான்.
” எப்பா சாமி, நான் காதலுக்குப் புதுசு டா…. கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்” என்றவனை ஏற இறங்க பார்த்தவன்..
” ஆமா, நான் மட்டும் பி.ஹெச். டி முடிச்சுட்டேன் பாருங்க… புதுசா இருந்தாலும் ஒரு வேகம் வேணாமா? என்னா நீங்க?” அழுத்துக் கொள்ள, முகத்தைத் தொங்க போட்டாங்க..
” சரி சரி இப்படியே முகத்தை வச்சுருங்க.. அப்ப தான் அவ நம்புவா.” என்று கிளம்பியவன் மீண்டும் வந்தவன்,” எங்க அக்கா பாவம் மாமா, வருண் இறந்த வருத்தத்துல இருக்காள். கொஞ்ச நாள்ல மாறிடுவா அவ மேல கோபப்பட்டுறாதீங்க…” எனக் கெஞ்சவும் அவனை அணைத்து விளக்கினான்.. அந்த அணைப்பே அவன் காதலை அவனுக்குச் சொல்ல, புரிந்தது சாரதிக்கு. சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.
அங்கு இருவரும் அமர்ந்திருக்க, மூவராக இவனும் அமர்ந்தான்.” எங்க டா தம்பி, நீ மட்டும் வந்துருக்க? ” சசி கேட்க,
” அவருக்குப் பசிக்கலையாம், மனசு கஷ்டமா இருக்காம்.. அதுனால் வேணாம் சொல்லிட்டார்..” என்றவன் விஷ்ணு பக்கம் வந்து அமர, ” அவள் எதையோ சிந்தித்தாள்.
” இருடா, நான் போய் கூட்டிட்டு வர்றேன்…” போக எத்தனித்தவரை..
” எம்மா, உன் புள்ளை, என்னை கவனிக்காம, சாப்பாடு வேணாங்கிறவரை போய் கவனிக்கப் போறேங்கற, தோசையை வை மா… யாருக்காக வந்தரோ அவங்களே கவலை இல்லாமல் கொட்டிக்கும் போது, நாம ஏன் பீல் பண்ணனும்? நீ வைமா” என்றவன் அவன் கண்ணைக் காட்ட புரிந்தவர்
” பாவம் புள்ள இங்க வந்து கஷ்ட படுது. அண்ணி, அந்தத் தம்பிய இப்படி பட்னியாவ விட்ருப்பாங்களா? இங்க வந்து வெயிலையும் அலைஞ்சு, இப்படி சாப்பிட்டாம கிடைக்கே…” அவரும் புலம்ப,”மா, தனியா தட்டுல எடுத்து வைச்சு கொடுமா. நான் சாப்பிட வைக்கிறேன்…” என்றாள் கொஞ்சம் மணமிறங்கி. சசியும் எடுத்து வைத்துக்கு கொடுக்க… வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
அவள் சென்ற பின்னே, பலராமனும் சாரதியும் ஹைபைப் போட்டுக்கொண்டுனர்..
அவள் வரும் அரவம் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்துக் கொண்டான்.. உள்ளே நுழைந்தவள் “மயூ… வா, சாப்பிட” என்று அறைக்குள் செல்லாது ஹாலில் நின்று கொண்டாள்.
” எனக்கு வேணாம் விஷ்ணு நீயே சாப்பிடு… ” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவனருக்கே வந்தமர்ந்தவள், ” இந்தா சாப்பிடு” தட்டை நீட்ட, ” எனக்கு வேணாம்” என்றான்.
” பச்…..” தோசையைப் பிய்த்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
கண்களில் காதல் கண்ணீரோடு கசிய, அதை எதிர் நோக்க முடியாமல் தலையைத் தாழ்த்தினாள்.
அவள் ஊட்ட வாங்கிக் கொண்டவன்,தோசையைப் பிய்த்து அவளுக்கு ஊட்டினான். வாங்கிக் கொண்டாள். இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டுக் கொண்டனர்.. அவன் போன் ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்தவனின் இதழ் புன்னகையில் விரிந்தது.
” ஹெலோ அம்மா, சொல்லு மா ” என்றான்.. அது யாரென அவளும் யூகித்தாள்.
தினமும் ஒரு மணி நேரம் மகனுடன் பேசாமல் இருக்க முடியாது முத்துவால், ” சாப்பிட்டியா மயூ?”
“ம்ம்ம்.. உன் மருமகள் கையால் சாப்படுறேன்…”என்று அவரைத் திகைக்க வைத்தான். ” அதுவரைக்கும் போயிட்டியா டா?”
எனக் கேட்க, வாய் விட்டுச் சிரித்தவன்,
” கொஞ்ச தூரம் வந்துருக்கேன் மா…” என்றான் அவள் முகம் பார்த்து.அவளோ முத்துவிடம் பேச எண்ணி வாடி இருக்க, ஸ்பிக்கரில் போட்டான்.
” மயூ சீக்கிரம் வாடா… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” அவர் குரலில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.
” வர்றேன் மா, உன் மருமகளைக் கூட்டிட்டு…” என்றான் அவளைப் பார்த்தவாறு.. மீண்டும் தலையைத் தாழ்த்தினாள்.
” அம்மா, விஷ்ணு கிட்ட பேசும்மா..” என்றான்.
” நான் யார்கிட்டயும் பேசிறதா இல்லை. என்னை வேண்டாம் போனவங்க
கிட்ட நான் பேச மாட்டேன் ” என்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “முத்து…” என அவள் அழைப்பில் மனம் நெகிழ்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல் போனை வைத்து விட சோகமானாள்.
“விஷ்ணு… அம்மா…” என்றவன் ஆரம்பிக்க அதனைத் தடுத்தவள், ” நீ இங்க இருந்து போ மயூ… ஏன் எல்லாரையும் கஷ்ட படுத்துற?”
” நீயும் வா நான் போறேன்… விஷ்ணு நான் யாரையும் கஷ்ட படுத்தல… நீ தான் எல்லாரையும் கஷ்ட படித்துற. உனக்காக எல்லாரும் காத்துட்டு இருக்காங்க. அவங்களுக்காவது நீ மாறனும்..” என்றான்.
” ஆனா, என்னால….” என்று ஆரம்பிக்க,
” உன்னால முடியும் விஷ்ணு.. ஆனா, நீ தான் முயற்சி பண்ண மாற்ற ”
அமைதியாக அமர்ந்தவள், பெருமூச்சை இழுத்து விட்டு” முயற்சி பண்றேன்.
மயூ” என்று அவனுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க, அவள் நெற்றியில் இதழை ஒற்றியெடுத்து” தங்க்ஸ் டி…” என்றான்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க, அவள் மடியில் படுத்து அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தான்.
” கொஞ்ச நேரம் விஷ்ணு….” என்றவன் கண்ணை மூடிக் கொண்டான்.
அவளது ஒரு கையை நெஞ்சோடு வைத்துக் கொண்டான். அவன் தலையைக் கொதினாள்.
அவன் உறங்கிப் போக, அவன் தூக்கம் கலையாதவாறு தலையை மெல்ல தலையணையில் வைத்தாள். அவன் முகம் பார்த்திருந்தவள், அவன் கன்னத்தை வருடினாள்.
இந்தக் காதலென்பது
கண்ணா மூச்சி
ஆட்டம்
தான்
உள்ளுக்குள் ஒளித்து
வைத்து தேட வைப்பதே
வேலைதான்.
சாரதியை உடன் உறங்கச் சொல்லிட்டு விட்டு இவளும் உறங்கச் சென்றாள்.. பாவம் தூக்கமும் அவள் மனம் போல் முரண்டு பிடித்தது..
மறுநாள் விடியலைத் தொடங்க, நேற்றைய நினைவுகளோடு சந்தோசமாக தொடங்கினான் அந்த நாளை மயூரன். அவளும் அவனை சிநேகப் புன்னகையுடன் எதிர் நோக்கினாள்.
இருவரும் கிளம்பி கீழே வர, கீழ் வீட்டுக்குக் குழந்தைப் பள்ளிக்குச் செல்ல அழுதது. அதனிடம் காரணத்தைக் கேட்டால் சொல்ல மறுத்தது..
விஷ்ணுவும் மயூவும் அக்குழந்தையைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.. இருவரும் சேர்ந்தே வேலைக்கு வர்ற, அங்கு வினோதினியும் அவர்களுக்காக காத்திருந்தாள்..
அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.. மல்லிகா விடம் பேசி அங்கே அவளுக்கும் வேலையும் வாங்கி தந்தனர் …
அதன் பின், புகைப்படக்காரரை அழைத்துக்குக் கொண்டு நகர்ப்புற செய்திகளைச் சேகரிக்க விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
அன்றைய நாள் அதிலே ஓட, மாலை நேரம் இருவரும் அலுவலகம் வர்ற, அலுவலக வாசலில் அர்ஜுன் விஷ்ணுவிற்காக காத்திருந்தான்.
அவனை இங்கு எதிர்பாராதவளுக்கு ஆச்சர்யம் தான்.. அவனிடம் பேச சென்றாள்.. இவனுக்கோ குழப்ப ரேகைகள் படர்ந்தது .
விஷ்ணு வந்ததும் அவளை அணைத்து அழுதான் அர்ஜுன்.
மயூக்கு பக்கென ஆனது….