யாழ்-26

யாழ்-26
யாழ்-26
“டேய்! என்னடா காலைல பதினொரு மணி வரைக்கும் தூங்கற. ஹர்ஷாஆஆஅ எந்திரிடா!” என்று கணவனை உலுக்கினாள் கீர்த்தனா.
“என்னடி ஆச்சு” கண்களை மட்டும் திறந்தவன், “சண்டேகூடத் தூங்க விடமாட்டியா என்னை” என்று சலிக்க,
“இன்னிக்கு அண்ணா, அண்ணிக்கு அனீவர்ஸரிடா. அண்ணா சீக்கிரமே வரச் சொன்னாருல கிளம்பு” அண்ணனை வைத்து மிரட்ட,
“ஆமா, இவ அண்ணன் சொன்னாராமா. நான் கிளம்பனுமாமா. போடி” மீண்டும் தலையணையில் முகத்தைப் புதைக்க, அவ்வளவுதான்
கீர்த்தியின் பொறுமை காற்றில் பறந்தது.
“நீ எல்லாம் சொன்னாக் கேக்கமாட்ட” என்றவள், அவன் உச்சி முடியைப் பிடித்து இழுக்க, “ஏய்! அம்மா! அய்யய்யோ…! வலிக்குதுடி!” என்று கத்தினான் ஹர்ஷா மனைவியின் பிடி தாளாமல்.
“என்ன அம்மா? அடிக்கிறது நானு. நீ உங்க அம்மாவை கூப்பிடறியா?” வாயிலேயே அடிக்க, அவளை அடக்க முடியாமல் திணறியவன், கடைசியில் அவளின் இடையோடு சேர்த்துக் கட்டிப்பிடித்து அவளது வயிற்றில் தலைசாய்த்தான்.
“ஏய், நானே சின்னப்பையன். அடிக்காதடி வலிக்குது ப்ளீஸ்!” என்று கெஞ்ச, அவளிற்கோ மனம் இளகியது. அவளின் அமைதியை ஏதோ அனுமதியாய் நினைத்த ஹர்ஷா அவளின் வயிற்றில் முகம் புதைக்க, கணவனின் நோக்கம் புரிந்தவள் அவனைத் தள்ளிவிட்டாள்.
“எப்பப்பாரு இதே நினைப்பு.. போய் குளிச்சிட்டுவா. போலாம்” அவனைக் கிள்ளி வைத்தவள், ஈரத் தலையை காயவைக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.
“என்னடி.. எப்ப பாத்தாலும் இதே நினைப்பு. உங்கிட்டதானே எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” ஹர்ஷா கணவனுக்கே உண்டான உரிமையை முன் வைத்துக் கேட்டான்.
“இதுக்குதான் ஒரு குழந்தை வேணும்னு சொன்னேன். நீ என்னனா இப்ப வேணாம்னு சொல்ற” அவள் குழந்தை பெறுவதைத் தள்ளிக் கொண்டு போவதை நினைத்து அவன் பாவமாய் சொன்னான்.
“ஏன், என் மூஞ்சியைப் பாத்துப்பாத்து சலிச்சிருச்சோ?” ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவன் மனைவி வினவ,
“அது இல்லடி சக்கரக்கட்டி. பேபி வந்துட்டா, நீ பெரிய பேபி அது சின்னபேபி. ஸோ ஜாலியா இருக்கும்ல” மனைவியின் கன்னத்தைப் பிடித்து மிருதுவாய்க் கிள்ளிக் கொஞ்சினான் ஹர்ஷவர்தன்.
“நல்லா சமாளி” என்று அவன் கையைத் தட்டிவிட்டவள், ட்ரெஸிங் டேபிள் முன்னால் சென்று நின்றாள்.
“இந்த ட்ரெஸ் உனக்கு ஃபிட்டா இருக்குடி!” அவன் சொல்ல, அவனை வெறுப்பேற்ற நினைத்தவள் வேறொரு சல்வார் கமீஸை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து மாற்றிக்கொண்டு வந்தாள்.
“இது.. அதைவிட சூப்பரா இருக்கு” அவளை கண்களால் கணவனாக அளந்துகொண்டு அவன் சொல்ல, அதையும் மாற்றிவிட்டு வந்தாள் கீர்த்தி.
அதற்கும் ஹர்ஷா காம்ப்ளிமென்ட் தர, இன்னொரு உடையை எடுத்துவிட்டுத் திரும்பியவளிடம், “நீ ட்ரெஸ் போட்டாவே. அதாவது எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகுதான்” விஷமக்குரலில் சொல்ல, அது அவளிற்குப் புரிய நொடிகள் எடுத்தது.
விலுக்கெனத் திரும்பியவள், “பொறுக்கி ராஸ்கல்!” அருகில் கிடைத்த சீப்பை எடுத்து அவன் மீதுவீச, அவனோ அதில் எளிதாகத் தப்பித்தான்.
“ஹாஹாஹா. கூல்டி!” என்றவன் தனது உடையை எடுத்து மாற்றிக் கொண்டு பத்து நிமிடத்தில் கிளம்பி விட்டான்.
“ஏன்டி இவ்வளவு சிம்பிளா ரெடியாகியிருக்க?” அவள் எளிமையாக ரெடியானதைக் கண்டு ஹர்ஷா கேட்டான்.
“இல்ல! அங்க ஈவ்னிங் போய் ரெடியாகிப்பேன்” என்றவள் ஒரு பிக்ஷாப்பரை எடுத்து மாட்டிவிட்டு “ரெடிடா, போலாம்!” என்றாள்.
அனைவரும் கிளம்பிச் செல்ல அங்கே எல்லாம் தயாராகிக் கொண்டிருந்தது. வேலையாட்களை வைத்து ஒவ்வொன்றையும் அழகாக டெக்கரேட் செய்து கொண்டிருந்தார் செல்வமணி.
“எதுக்கு அஷ்வின் இவ்வளவு செலவு?” சங்கடமாகக் கேட்டாள் ராஷ்மிகா.
“ஏன்? உனக்கு இதுல இஷ்டம் இல்லியா.. ஏன் ஒரு மாதிரியே இருக்க ராஷ்மி?” அவளின் கன்னத்தை நிமிர்த்திக் கேட்க,
“அப்படியில்லை அஷ்வின்..” தயங்கித் தயங்கி தன் மனதில் இருப்பதை அவனிடம் சொன்னாள்.
“நம்ம இத்தனை வருஷமா பிரிஞ்சு இருந்தது எல்லாருக்குமே தெரியுமே அஷ்வின். இப்ப ஒண்ணு சேர்ந்துட்டோம்னு தெரிஞ்சாலும் அவங்க எல்லாம் ஒருமாதிரி பாப்பாங்க. அதான்..” ராஷ்மிகா சொல்ல அவளது மனம் அவனிற்கு விளங்கியது.
“ராஷ்மி!” அவளது கையைப் பிடித்தவன், “இப்படி அடுத்தவங்களுக்காக நம்ம எதுவும் பார்த்து நம்மளோட சந்தோஷத்தை இழந்திடக்கூடாது” திடக்குரலில் இயம்பினான்.
“நான் உன்னை விட்டுட்டு வந்த அப்புறம் கொஞ்சநாள் கழிச்சுதான் எல்லோருக்கும் நியூஸ் தெரிஞ்சது. எல்லாரும் என்ன பேசுனாங்க தெரியுமா? அஸ்வின் பிசினஸ்ல ஜெயிச்சு, வாழ்க்கைல ஜெயிக்க முடியலன்னு!”
“ஸாரி, அஸ்வின். என்னாலதானே எல்லாம்” தலை குனிந்தாள் ராஷ்மிகா.
“என் மேலயும் தப்பிருக்கு ராஷ்மி. அதைவிடு. இனிமேல் அதைப்பற்றி நாம பேசவேண்டாம்” என்றவன், “சொல்ல வந்தது பாதில நிக்குது பாரு. அப்படிப் பேசுனவங்கதான் கீர்த்தி கல்யாணத்துல உன்னையும் யாழையும் பாத்துட்டு வாய் திறந்து நின்னாங்க. அதுல என் ப்ரண்டோட அப்பா ஒருபடி மேலபோய், ‘அஸ்வின் எனக்கே உன்னைப் பாத்தா பொறாமையா இருக்குப்பா.. இப்படி ஒரு அழகான குடும்பத்தை கொண்டு வந்து நிறுத்தி, எல்லாரும் பேசுனதுக்கு மூஞ்சில கரியப் பூசிட்ட நீ.. வாழ்த்துக்கள்பா!’ அப்படின்னு சொல்லிட்டுப் போனாரு” என்றவன் ராஷ்மிகாவின் இருகைகளையும் தூக்கி அதற்கு மென்னையிலும் மென்மையாய், முத்தத்தைத்தர சரியாக யாழ் கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடி வந்தாள்.
“அப்பா! அம்மா கையில கிஸ் பண்ணீங்களா?” மகள் கேட்க, அஷ்வினோ வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவனைப் போல திருதிருவென்று முழித்தான்.
“அப்பா, எனக்கும் கையில முத்தா தாங்க!” யாழ் தன் பிஞ்சுக் கைகளைத் தூக்கிக் காண்பிக்க, மகளின் முன் வந்து நின்ற ராஷ்மிகா, “அதெல்லாம் கிடையாது. எனக்கு மட்டும்தான்” எனச் சொல்ல, யாழ்மொழியோ அன்னையை முறைத்தபடி நின்றாள்.
“என்னடி முறைக்கற? போ, கீழ போய் டிவி பாரு” ராஷ்மிகா விரட்ட,
“போ குண்டம்மா” யாழ் சொல்லிவிட்டு ஓட, அஷ்வின் வாய்விட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
“ராஷ்மி பாரேன். நம்ம பொண்ணுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு” அஷ்வின் இன்னும் கண்களை மூடிக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரிக்க, போய் கண்ணாடியின் முன் நின்ற ராஷ்மிகா,
“வெயிட் போட்டுட்டேனா அஷ்வின்” என்று முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தபடியே வினவினாள்.
“ஆமா, ராஷ்மி” அஷ்வின் சொல்ல மனதிற்குள், ‘ஐயயோ’ என்றிருந்தது அவளிற்கு.
அவளைப் பின்னால் வந்து அணைத்தவன், “நீ இங்க வந்திருந்தப்ப ரொம்ப இளச்சிருந்த. அப்புறம் நான் பேசாம இருந்தப்ப இன்னும் இளச்சிட்ட. இப்பதான் நீ நம்ம கல்யாணம் ஆனப்ப இருந்த ராஷ்மிகா மாதிரி ஆகியிருக்க. மை குண்டூஸ் இஸ் பேக்!” என்றவன் அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
திருப்பி அவனிற்கு குடுக்க எண்ணியது மனம், ஆனால் செய்யவில்லை. அவளுள் ஒரு கேள்வி இருந்தது. ஆனால், அஷ்வினிடம் இன்னொன்றை சொன்னாள் ராஷ்மிகா.
“அஷ்வின், நான் உங்களை சென்னை வந்த அன்னிக்கே பாத்தேன்!”
“எப்ப?” யோசனையாய் அஷ்வின் கேட்க,
“நாங்க ஹர்ஷா நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க வந்தப்ப.. நீ அங்க முதலாளி ரூம்ல இருந்து வெளில வந்த. ஆனா, நீ என்னைப் பாக்கல. ஆனா, யாழ் பக்கத்துல போய் க்ராஸ் பண்ணித்தான் போன” ராஷ்மிகா நடந்ததை நினைவு கூர்ந்து அவனிடம் ஒப்பித்தாள்.
“யாழ் என்னைப் பாக்கலையா?”
“அவ சின்சியரா ஹர்ஷா வாங்கித்தந்த ஐஸ்கிரீமை உள்ள தள்ளிட்டு இருந்தா” சிரித்தவள், “சரி கொஞ்சம் தள்ள முடியுமா. திடீர்னு உன் மக வந்தானா இதையும் பாத்திடுவா” தன்னை அணைத்திருந்த அஷ்வினிடம் எச்சரிக்கையோடு சொன்னாள்.
அவளை விடுவித்தவன், “என் மககூட உனக்கு எதுக்குடி போட்டி” மனைவியிடம் பொய்யாய் சண்டையிட்டான்.
“அதெல்லாம் அப்படித்தான்” என்றவாறே ராஷ்மிகா ரெடியாகிக் கீழே செல்ல, அஷ்வினும் அவள் பின்னோடே தலையைக் கைகளாலே கோதியபடி வந்தான். ஹர்ஷா, கீர்த்தி, சிவக்குமார், விஜயலட்சுமி,
கல்யாணி, நாகேஷ்வரன் என அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க யாழ்மொழி, ‘உர்’ என்று அமர்ந்திருந்தாள்.
“ஏன் குஜிலி வொய் டென்சன்?” ஹர்ஷா அவளைத் தன் மடியில் தூக்கி வைத்தபடிக் கேட்க,
“அப்பா எங்கைல கிஸ் தரவே இல்லை மாமா” சிறியவளோ மாமன் தோளில் சாய்ந்தபடி சோகமாகக் கூற,
“ஏன் மாமா இப்படி பண்ணிங்க? பாருங்க குஜிலி உம்முன்னு ஆயிடுச்சு” ஹர்ஷா அஸ்வினைப் பார்த்து அக்கா மகளுக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்க,
“அம்மாக்கு மட்டும் அப்பா கிஸ் தராங்க” யாழ்மொழி உதட்டைப் பிதுக்கி சோகமாகச் சொல்ல, அங்கே இருந்த அனைவருக்கும் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நல்லவேளை வேலையாட்கள் அனைவரும் வெளியே இருந்தனர். ராஷ்மிகாவோ மாமியாருக்கு உதவி செய்கிறேன் என்று வெளியே, வேலையாட்களை வேலை ஏவிக்கொண்டிருந்தவரிடம் தப்பித்தோம் என்றோட, அஷ்வின்தான் வேறுவழி இல்லாமல் ஹர்ஷா அருகில் அமர்ந்தான்.
“என்ன மாமா ஒரே ரொமான்ஸ்போல” யாழ்மொழி டிவி பார்க்க சென்றவுடன் ஹர்ஷா அஷ்வினைக் கலாய்க்க,
“அட ஏன் மச்சான் நீ வேற” அப்படியே பேச்சின் திசையை மாற்றினான் அஷ்வின்.
மாலையில் அனைவரும் தயாராக, தயாரான அஷ்வின் யாழை கிளப்பிக் கொண்டிருந்தான். மகளிற்கு வைலட் நிறத்தில் பூ வேலைகள் செய்த ஃப்ராக்கை மாட்டிவிட்டவன், மகளின் கன்னத்தை பிடித்து கேசத்தை அழகாக வாரிவிட்டுக் கொண்டிருந்தான்.
ஒருபக்கம் முடிகளை சீவிய அஷ்வின் மகள் சொன்ன வைலட் குஷி க்ளிப்பை எடுத்து முடி முன்னால் விழாமல் இருக்கக் குத்திவிட்டான்.
“அப்பா அந்த ரெட் லிப்ஸ்டிக்” மகள் கேட்க,
“அவளுக்கும் உன்ன மாதிரி ரெட் லிப்ஸ்டிக்தான் பிடிக்கும் அஷ்வின்!” குளித்து முடித்து நைட்டியோடு வந்த ராஷ்மிகா முகத்தைத் துடைத்த படியே சொன்னாள்.
மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன், “அப்பாக்கு போட்டுவிடத் தெரியாதே” என்றான் மகளிடம்.
“நான் சொல்ற மாதிரி போடுங்கப்பா” யாழ்மொழி.
தந்தையிடம் லிப்ஸ்டிக் போடும் முறையைச் சொல்ல அஷ்வினும் பெட்டில் நின்றிருந்த மகள் உயரத்திற்குக் குனிந்து கவனமாகப் போட்டுக் கொண்டிருந்தான்.
லிப்ஸ்டிக் போட்டு முடித்ததும், “ம்ம்ம்” என்று உதடுகளை மடக்கித் தேய்த்த, யாழ்மொழி ஒரு கல்பொட்டை அவளே வைத்துக்கொண்டு அனைவரிடமும் காட்ட வெளியே ஓடினாள். மகளின் துள்ளலைப் பார்த்த
இருவருக்குமே மனம் நிறைந்து இருந்தது.
“என்ன பொண்ணை மட்டும் ரெடி பண்ணி விடற? நானும் ரெடி ஆகணும்” ராஷ்மிகா மகளிற்கு போட்டியாக வர,
“என்ன சேலை கட்டி விடணுமா” அஷ்வின் கேட்ட கேள்வியில் ராஷ்மிகாவிற்கு விக்கலே வந்து விட்டது. அவள் தலைவாரி விடுவது என்பது போல சொல்ல வர, அவனோ அப்படிக் கேட்பான் என்று ராஷ்மிகா நினைக்கவில்லை.
“ஹ்க்!” அவள் விக்க,
“ஹேய்!” என்றவன் தண்ணீரை எடுத்து அவளிற்கு தந்துவிட்டு, “நான் கீழ போறேன் நீ ரெடி ஆகிவா” என்று சிரித்துவிட்டுக் கீழே சென்று விட்டான்.
அங்கே அப்படி என்றால் இங்கேயோ ஒருவன்..
“ஏய், பேபி!” சேலைகட்டி முடித்தவளை பின்னால் இருந்து ஆசையாய் அணைத்து ஹர்ஷா கொஞ்ச,
“ஐய்யயோ தள்ளுடா!” என்று தள்ளிவிட்டவள், “இப்பதான் கஷ்டப்பட்டு கட்டி இருக்கேன். தள்ளியே நிள்ளு ஹர்ஷா” என்று சேலையை சரி செய்தபடி சொன்னாள் கீர்த்தி.
“முடியாது என்ன பண்ணுவ?” கேட்டபடி ஹர்ஷா மீண்டும் அருகில் வர,
“அப்படியே ஒரு ஏத்து ஏத்துனேனா” முழங்கையை வைத்து கணவனின் வயிற்றில் இடிக்க வந்தாள்.
“ஹே! இப்படி க்யூட்டா இருந்துட்டு கொஞ்சக் கூடாதுன்னு சொல்றியேடி. க்யூட்டா இருக்கிறது உன் தப்பு” பெண்மேலேயே பழியைப் போட்டான்.
“ஏதோ நான் மட்டுந்தான் அப்டி இருக்க மாதிரிப் பேசற. அதான் உனக்கு அடி பட்டாவே கண்ணீர் விடுவாளுகளே. அவங்கல்லாம் க்யூட்டா இல்லியா” கீர்த்தியோ பொறாமையில் பொங்க,
‘ஓ பொஸசிவ்வா!’ மனதினில் நினைத்து சிரித்த ஹர்ஷவர்தன். “ஏன்டி இரண்டு வாரத்துக்கு முன்னாடி யாழ் சொன்னதை வச்சா இப்ப சண்டைக்கு வர நீ.. சரி அதைவிடு. என்னதான் எத்தனைபேர் வந்தாலும் நீ தான் என் க்யூட் பேபி” அவளது கன்னத்தைக் கிள்ளினான்.
கணவனின் கழுத்தில் சுற்றிக் கைபோட்டவள், “யாழ்தான் எப்பவுமே எனக்கு சாதகமா ஏதாவது பண்ணிவிடறா” என்றிட,
“புரியலையே..?” ஹர்ஷா.
“ஆமா, உன் நிச்சியத்தப்போ அந்தப் பொண்ணு வீட்டை வாயைத் திறந்து, போக வச்சதே அவதானே” என்று சிரித்தவள், “அப்புறம் உன்ன அப்பப்ப என்கிட்ட போட்டும் விடறா” என்றவள்,
“என் அண்ணன் மகள் என் அண்ணன் மாதிரியே என் பக்கம்தான்” என்று பெருமையாகச் சொன்னாள்.
“சரி, தள்ளி நில்லு. இவ்வளவு நல்லா பக்கத்துல வந்து நிப்ப. அப்புறம் கைபட்டுதே கால்பட்டுதேனா நான் பொறுப்பில்லை” அவன் அவள் முகத்தை ரசித்தபடிச் சொல்ல,
“உன்னை!” அவனது கன்னத்தை நோக்கி கை ஓங்கியவள் அவன் கண்களை மூட, அவன் எதிர்பாராதவண்ணம் அதில் தன் இதழைப் பதித்துவிட்டு ஓடினாள்.
ஐந்துமணி போல தெரிந்தவர்கள் எல்லோரும் வர, அஷ்வின் ராஷ்மிகா ஆனீவர்ஸரி செலிப்ரேஷன் ஆரம்பித்தது. யாழ்மொழியை நடுவில் நிற்க வைத்து இருவரும் கேக்கை வெட்ட, அஷ்வின் முதலில் மகளிற்கு ஊட்டிவிட்டு மனைவிக்கு ஊட்டினான். அனைவருக்கும் கேக்கை வெட்டித்தர வந்தவர்களை கவனித்தபடி அஷ்வின் ஒவ்வொருவருடனும் பேசிக்கொண்டிருந்தான்.
குழந்தைகளுக்கு வெளியே சாக்லேட்ஸ், விளையாட என அனைத்தும் வைத்திருக்க குட்டீஸ் எல்லாம் அங்கே ஆட்டம்போட ஆரம்பித்தனர்.
“ராஷ்மிகா!” குரலில் அவள் திரும்ப, அவளுக்கோ இன்ப அதிர்ச்சி.
“டேய், சரண்” சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தவள், “அவரு கூப்பிட்டாரா?” ராஷ்மிகாவும் சரணை மறக்கவில்லை. வந்த தினத்தில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் அவனிடம் பேசிவிடுவாள். ஆனால், நண்பனையே கூப்பிட மறந்ததை நினைத்து அவள் தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான்.
“ஆமா மேடம். நீங்கதான் மறந்துட்டிங்க” சரண் குறையாகச் சொல்ல,
“ஸாரிடா! எனக்கே இவரு இரண்டுநாள் முன்னாடி தான் சொன்னாரு. அந்த பரபரப்புல மறந்துட்டேன்” நெற்றியில் கையை வைத்தபடி ராஷ்மிகா மன்னிப்பைக் கேட்க,
“விளையாட்டுக்கு சொன்னேன் ராஷ்மி” சரண் சொல்ல, “சரண் அங்கிள்!” என ஓடி வந்தாள் யாழ்மொழி.
“ஹே, குட்டி பாப்பு!” யாழைத் தூக்கியவன்,
“அங்கிள்கிட்ட பேசவே இல்லையே நீங்க” பொய்க் கோபமாய்க் கேட்டான்.
“ஸாரி அங்கிள்!” யாழ் சொல்ல, அவளின் கையில் ஒரு கிப்டைத் தந்தான் சரண்.
உள்ளே கிட்ஸுடைய குட்டி தங்க ப்ரேஸ்லட் இருக்க, “தேங்க்யூ அங்கிள்!” யாழ் சிரிக்க, அஷ்வினும் அங்குவந்து சேர்ந்தான்.
“ஹாய், சரண்” என்றவன், “நேத்து சொன்னவுடனே கிளம்பி வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றான்.
“லஷ்மிம்மா எப்படி இருக்காங்க?” ராஷ்மிகா வினவ,
“அவங்க நல்லா இருக்காங்க ராஷ்மி. உன்னைக் கேட்டதா சொல்லச் சொன்னாங்க?” சரண்.
“ம்ம்” என்றவள் கேக்கை எடுத்து வந்து தந்தாள்.
“ஆக்சுவலி ஹர்ஷா கல்யாணத்துக்கு நீங்க கூப்பிட்டப்ப அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் வர முடியல. அதுக்கு அப்புறம் அதப்பத்தி நீ கேக்கல. ஸாரி!” சரண் அஷ்வினிடமும் ராஷ்மிகாவிடமும் விளக்க,
“நாந்தான் கோவமா இருந்தேன். இவருதான் ஏதாச்சு ரீசனா இருக்கும்னு சொல்லி கூல் பண்ணாரு” என்றாள் ராஷ்மிகா.
அனைவரும் சாப்பிட்டு முடித்து ஒவ்வொருவராகக் கிளம்ப மணி ஒன்பதானது. சரண் ராஷ்மிகா குடும்பத்தோடு பேசிக்கொண்டிருந்தான். வெளியே அமர்ந்திருந்த ஹர்ஷா, சரணை அழைத்து அஸ்வின் ஏதோ சொல்ல, அதைக் கேட்ட இருவரும் வீட்டின் உட்செல்ல, மற்ற அனைவருடனும் வெளியே அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தான் அஷ்வின்.
சரணின் ஃபோனிலிருந்து அஷ்வினிற்கு மிஸ்ட்கால் வர, எழுந்து வந்து மனைவியின் கண்ணை மூடிய அஷ்வின், “எல்லாரும் எங்க பின்னாடி வாங்க” என அனைவரிடமும் சொல்லிவிட்டு முன்னால் ராஷ்மிகாவை கண்ணை மூடியபடியே அழைத்துக்கொண்டு சென்றான் அஷ்வின். யாழ்மொழியும் அன்னை தந்தை பின்னால் வாயில் இரு கைகளை வைத்து முத்துப் பற்கள் தெரியச் சிரித்தபடிச் சென்றாள்.
“அஷ்வின் எங்க போறோம்!” ராஷ்மிகா கேட்க அவனோ பதில் அளிக்கவில்லை. வீட்டினுள் நுழைய முழுவதும் இருட்டாக இருந்ததை ராஷ்மிகாவைத் தவிர அனைவரும் உணர்ந்தனர்.
“ராஷ்மிமா!” தந்தையின் குரல் கேட்க, திடீரென தந்தையின் குரல் கேட்டதில் ராஷ்மிகாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.
“அப்பா!” என்ற ராஷ்மிகாவின் குரல் கரகரத்தது.
அஷ்வின் அவளது கண்களில் இருந்து கையையெடுக்க அங்கே ப்ரொஜக்டரில் சக்திவேல் பேச ஆரம்பித்தார். அஷ்வின் மனைவியின் தோளைப்பற்றி ஆறுதலாய் அணைக்க, அவளோ அவன்மேல் தலை சாய்த்தபடி தந்தை பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.
“ராஷ்மிமா ரொம்ப ஸாரிடா! அப்பா உன்னைப் புரிஞ்சிக்கவே இல்லை! உங்கிட்ட என்னனே கேக்காம இத்தனை நாள் செல்லமா வளர்த்த உன்னையே அடிச்சிட்டேன். இந்த அப்பாவை மன்னிச்சிருடா. அப்பா நிறைய கனவு வச்சிருந்தேன் உன் கல்யாணத்தைப் பத்தி. அந்த ஆதங்கம்தான் கோபமா மாறி உங்கிட்ட காமிச்சுட்டேன். மாப்பிள்ளை வந்து சொன்னப்பதான் எல்லாம் தெரிஞ்சுது. ஆனா, அப்பா ஒண்ணு சொல்லுவேன் அதைமட்டும் கேளுமா. அவரு உன்னைக் கல்யாணம் பண்ணமுறை வேணா தப்பா இருக்கலாம். ஆனா, அவரு உன்னைக் கல்யாணம் பண்ணது சரிதான். நானே பாத்திருந்தாக்கூட இப்படி ஒரு பையனைப் பாத்திருப்பனானு தெரியலடா” என்றவர்,
“மறுபடியும் ஸாரிடா. உன்னை புரிஞ்சுக்காம அடிச்சதுக்கு. நீ மால்தீவ்ஸ்ல இருந்து வந்தப்புறம் உன் பழைய அப்பாவை மறுபடியும்
பார்ப்ப. இனி அப்பா எப்போமே உன்ன புரிஞ்சுட்டு உங்கூடவே இருப்பேன்” என்று வீடியோ நிறைவை எட்ட, எல்லா விளக்குகளையும் போட்டனர் சரணும் ஹர்ஷாவும்.
அங்கிருந்த எல்லோரின் கண்களும் கலங்கி இருந்தது. “இதுதான் அந்த சர்ப்ரைஸா?” ராஷ்மிகா கேட்க,
“ம்ம்” தலையை ஆட்டினான் அஷ்வின்.
“அஷ்வின்!” காலிலேயே விழப்போனவளைப் பதறி தூக்கிவிட்டான்.
“அப்பாகிட்ட இதைத்தான் பேசுனிங்களா?” ராஷ்மிகா கேட்க சக்திவேலிற்கும் தனக்கும் நடந்த உரையாடலை அனைவரிடமும் சொன்னான் அஷ்வின்.
“இந்த வீடியோவை உங்க வீட்டிலேயே ப்ளே பண்ணி.. ராஷ்மிகா அதைப்பார்க்கும் போது மாமாவை அவ பின்னாடி நின்னு அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கிறதுதான் ப்ளான். நான் அவர்கிட்ட இந்தமாதிரி பண்ணுங்கனு சொல்லிட்டேன். எனக்கு தெரிஞ்சு அவரு அந்தப் பென்ட்ரைவ் எடுக்கத்தான் காலைல கடைக்குக் கிளம்பி இருப்பாரு. ஏன்னா எனக்கு வீடியோ பண்ணிட்டு, ஃபோன் பண்ணி அவரோட ஆபிஸ் ரூம்ல இருக்கிறதா சொன்னாரு” என்றவனுக்கு மாமனாரின் அன்றைய திடீர் மறைவு கண்முன் வந்து முகம் வருத்தத்தில் இறுகியது.
அதன்பின் சும்மா கடைக்குச் செல்வது போலச் சென்று யாரும் அறியாமல் சிசிடிவியை ஒரு ஐந்து நிமிடம் ஆஃப் பண்ணி அந்தப் பென்ட்ரைவை ரிஷியை வைத்து, எடுத்து வைத்திருந்தான் அஷ்வின்.
ராஷ்மிகாவிற்கு இத்தனை நாள் தன் மனதில் அஷ்வின் தந்தையிடம் என்ன பேசி இருக்கக்கூடும் என்றதற்கான விடை தெரிந்தது.
“எனக்கு அப்பா ஏதோ எங்கூட ரொம்ப நாள் அப்புறம் பேசுன மாதிரி இருக்கு அஷ்வின். திஸ் இஸ் தி பெஸ்ட் சர்ப்ரைஸ்” என்று நன்றியுடன் சொன்னாள் ராஷ்மிகா.
அனைவரும் கிளம்ப அஷ்வினும், யாழும் அறைக்கு ஏற மாமியாருடன் நாளை செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்ட ராஷ்மிகா மேலே சென்றாள். அஷ்வினின் வயிற்றில் உட்கார்ந்திருந்த யாழ்மொழி, அவனின் மேல் விழுந்து விளையாடிக்கொண்டிருக்க அதைப்பார்த்த ராஷ்மிகாவிற்கு சிரிப்புதான் வந்தது. இருந்தும் மகளை வம்பிழுக்க நினைத்தவள்,
“ஏய், இங்க வா” அஷ்வினின் வயிற்றில் இருந்து அவளைத் தூக்க, “நோநோநோ. நான் அப்பாக்கூடத்தான் இருப்பேன்” கத்திய யாழ்மொழி அஷ்வினின் பனியனை இறுகப் பிடித்துக்கொண்டு ராஷ்மிகாவிடம் திமிறினாள்.
அஷ்வினோ மனைவியையும் பெட்டில் இழுத்துப் போட்டவன், அம்மா மகள் இருவருக்கும் குறுகுறுப்பு மூட்ட, அந்தப் பெரிய அறையைத் தாண்டியும் ராஷ்மிகா யாழ்மொழியின் சிரிப்பு சத்தம் கேட்டது.
“அப்பா விளையாடலாம்பா” மகள் கேட்க,
“சரி, என்ன விளையாடலாம்” அஷ்வின் வினவ,
“கண்ணாமூச்சி” என்ற யாழ்மொழி, “நான் தான் கண்ணைக் கட்டுவேன்” எனச்சொல்ல, யாழ்மொழியின் கண்களை ராஷ்மிகாவின் துப்பட்டாவை பட்டையாக மடித்து மகள் கண்களைக் கட்டினான் அஷ்வின்.
ராஷ்மிகாவைப் பார்த்து விஷமச் சிரிப்பு சிரித்தபடியே விளையாட்டை ஆரம்பித்தான்.
யாழ்மொழி இவர்களின் அருகில் எளிதில் வர நகர்ந்து நகர்ந்து சென்ற இருவரும் சுவற்றின் ஓரம் செல்ல, மனைவியில் இடையில் கை வைத்த அஷ்வின் அவளின் கழுத்தில் முகம் புதைக்க, ராஷ்மிகாவோ கணவனின் திடீர் தாக்குதலில் சில்லிட்டுப் போனாள்.
மகளைக் கண்ட ராஷ்மிகா அவள் வேறு பக்கம் இருப்பதை உணர்ந்து, நிம்மதியடைய, அஷ்வின் மனைவியின் கழுத்தில் புதைந்து தன் தாபத்தைக் காட்டி அவளின் தாபத்தைத் தூண்டினான்.
கணவனின் தொடுகையிலும், அவனிடம் தெரிந்த மூர்க்கத்திலும் அவளின் உடல் நாணத்தில் நெளிய, கணவனின் கைகள் அவளின் பாகங்களைப் பரிசோதிக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இருவரின் அருகாமையும் இருவருக்கும், உணர்வுகளை எரிமலையாய் வெடிக்கச் செய்தது.
மேலும் புதைய நினைத்தவர்களின் செயலை, “ப்பா” என்ற மகளின் குரல் கலைத்தது.
“குட்டி, அம்மா இங்க இருக்கா” மனைவியிடம் இருந்து விலகிய அஷ்வின் சொல்ல, ‘தவளை தன் வாயால் கெட்டது’.
யாழ்மொழியின் கரங்கள் அஷ்வினை நோக்கித்தான் வந்தது. மகள் அருகில் வர டக்கென்று அருகில் நின்றிருந்த மனைவியின் இடுப்பை பிடித்து அவன்முன் நிற்கவைக்க யாழ்மொழியோ அன்னையைத் தொட்டுவிட்டாள்.
கணவன் கை இன்னுமே தன் இடையில் இருப்பதை உணர்ந்த ராஷ்மிகா அஷ்வினைத் திரும்பிப் பார்க்க அஷ்வினோ மகள் மனைவியை அவுட் செய்துவிட்டாளா என்று பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்னையின் சேலையை உணர்ந்த யாழ்மொழியோ, “அம்மா அவுட் அம்மா அவுட்” என்று குதிக்க, அஷ்வின் மகளின் கண்களை அவிழ்த்து விட்டான். மூன்று ரவுண்ட் விளையாடிய பிறகே மூவரும் அடங்கி உட்கார்ந்தனர்.
“அம்மா, தண்ணி” யாழ் கேட்க,
“தண்ணி இங்க ஓவர். வா கீழ போயிட்டு வரலாம்” யாழைத் தூக்கிக் கொண்டு கீழே ராஷ்மிகா வர, நாகேஷ்வரன் கீழே தனது ஆபிஸ் அறையைப் பூட்டிக்கொண்டு இருந்தார்.
“அடடே! குட்டித்தங்கம் இன்னும் தூங்கலையா?” வினவ கீழே வந்ததன் நோக்கம் பேத்தி அவருக்கு விளக்கினாள்.
“தாத்தாகூட வரிங்களா? யானை கதை சொல்றேன்..” அவர் கேட்க,
“சூப்பர் சூப்பர். நான் வரேன் தாத்தா” என்று அவரிடம் தாவினாள்.
“நீ போம்மா. தண்ணி குடுத்து நானே தூங்க வச்சிடறேன்” என்றிட, மாமனாரிடம் புன்னகைத்தவள் மேலே நடந்தாள்.
ராஷ்மிகா மட்டும் மேலே வர, “யாழ் எங்கே?” வினவினான் அஷ்வின்.
“மாமாகூட போயிட்டா அவ” சொன்ன ராஷ்மிகா குளியலறைக்குள் புகுந்து உடையை மாற்றிக்கொண்டு வந்தாள்.
உடையை மாற்றிவிட்டு வந்தவளுக்கு அஷ்வினிடம் கிடைத்த தனிமையில் பேசவேண்டும் என்றிருந்தது. ஆனால், ஏதாவது எல்லை மீறி அவனிடம் நெருங்கினால் தப்பாக நினைத்துக் கொள்வானோ என்ற பயமும் எழுந்தது. அஷ்வின் அப்படியில்லை என்று அவளிற்குத் தெரியும். இருந்தாலும் பெண்ணான அவளிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
வந்து படுத்தவள் அஷ்வினிற்கு முதுகைக் காட்டிப்படுத்துக் கொண்டாள். அவளின் மனமோ அஷ்வினிடம் பேச ஏங்க, மூளையோ வேண்டாம் என்றது. யோசித்துக் கொண்டே படுத்திருந்தவள், கணவனைத் திரும்பிப் பார்க்க, அஷ்வினோ ராஷ்மிகாவைப் கையை மடக்கி தலையில் வைத்து தாங்கியபடி, ஒருபக்கமாக திரும்பி அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஒரு நிமிஷத்துல திரும்பிடுவேன்னு நினைச்சேன். ஆனா, முப்பது செகண்ட்ல திரும்பிட்ட” என்று கேலி செய்து சிரிக்க, அவனை கிள்ளி வைத்தவள், “இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல” என்று அவனைப் பார்த்தபடி திரும்பிப் படுத்தாள்.
அஷ்வினோ இருகைகளையும் நீட்டி அழைக்க, அவன் அருகில் நகர்ந்தவள் அவன் நெஞ்சில் காதல் ததும்ப முகம் புதைந்தாள்.
இருவரும் மட்டும் தனிமையில் நீண்ட வருடம் கழித்து இருக்க, நிறைய நிறைய பேசினர். இருவரும் இருவரைப் பிரிந்து இருந்த நேரத்தில் அடைந்த துக்கங்களை, எல்லாம் பகிரப் பகிர இருவரின் அணைப்பும் இனி பிரியவேகூடாது என்பதுபோல இறுகிக்கொண்டே சென்றது.
“அஷ்வின், நான் இல்லாதப்ப நீங்க ட்ரின்க்ஸ் பண்ணிட்டு சிலடைம் வந்திங்களாமே” கேட்டதோடு, “ப்ளீஸ், இனி அப்படிப் பண்ணாதிங்க” என்றாள்.
“ஓகே. அதே மாதிரி இன்னிக்கு லூசுத்தனமா பண்ணியே. அதான் என் கால்ல விழ வந்தியே, அதையும் நீ பண்ணாதே” என்று கட்டளைக் குரலில் சொன்னான்.
“சரி, யாழிற்கு நாலு வயசு முடியப்போகுது இல்ல?” மெதுவாக அஷ்வின் வினவ,
“ஆமா” ராஷ்மிகாவிற்கு சிரிப்பு வந்தது, கணவனின் பேச்சு செல்லும் திசையை உணர்ந்து.
“அப்போ அவளுக்கு விளையாட ஆளில்லை ராஷ்மி.. பாவம் பொண்ணு தனியா இருக்கா” அஸ்வின் சொல்ல, அவனிடம் இருந்து விலகியவள், “ஸோ?” என்று கண்களைச் சுருக்கிக் கேட்க, “ஸோ, என் பொண்ணுக்கு தம்பி ரெடி பண்லாம்னு நினைச்சேன்” ராஷ்மிகாவின் கண்களைப் பார்த்தபடிச் சொன்னான்.
“ஓ! இதுவும் உங்க பொண்ணு கேட்டதா?” ராஷ்மிகா போக்கு காட்ட,
“உன்னை இப்படிப் பக்கத்துல வச்சிட்டு என் லவ்வை காமிக்காம இருந்தா, அது நான் நடிக்கிற மாதிரிதான்டி” என்றவன், அவளை இறுக அணைத்து உண்மையை ஒத்துக்கொண்டான்.
“ஐ லவ் யூ ராஷ்மி!” என்றவனிடம் விலகியவளின் பார்வை, மனைவியின் பார்வையாக மாற,
“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு” அஷ்வின் மோகக் குரலில் வினவ,
“என் புருஷன் நான் பாப்பேன்.. உனக்கென்ன?” துடுக்காய் கேட்டவள், அத்தோடு தாங்காமல் கணவனைக் கட்டிக்கொண்டாள்.
“புருஷங்கிற நினைப்பு இருந்தா சரி” என்றவன், அவளை அணைத்தபடியே நீண்ட நாள் தாபங்களை காதலோடு ராஷ்மிகாவிடம் காட்ட, கணவனை அறிந்தவள், அவனுடன் காதலோடு ஒன்ற, அவனின் ஆசைகள் எல்லாம் இமையத்தின் அளவு இருக்க,
கணவனின் ஆசையில் மகள் பிறந்த பிறகும் தடுமாறியவள், அவனுடன் அடங்க, சில நொடிகள் கழித்து அவன் வன்மையைக் கழித்து மென்மையைக் கூட்ட, கணவன் எழுப்பிய உணர்ச்சிகளில் அவள் சிகரத்தைத் தொட்டு, “அஷ்.. வின்” என்றபடி அவன் தோளில் விரல் நகங்களைப் பதித்தாள்.
ஒரு மாதம் சென்றது..
“அம்மா நீங்க பாட்டி ஆகப் போறீங்க” கீர்த்தி வந்து நிற்க செல்வமணி மகளின் கன்னத்தில் வழித்து நெட்டி முறித்தார்.
ஆம், ஹர்ஷா குழந்தை ஆசையில் இருப்பது தெரிந்த கீர்த்தியால் தள்ளிப்போட முடியவில்லை. அதனால்தான் அவனுக்கே இன்ப அதிர்ச்சியைத் தந்திருந்தாள். ஹர்ஷாவிற்கு தனக்கு வாரிசு வரப்போவது தெரிந்து கண்களே கலங்கிவிட்டது.
“கீர்த்தி!” அவன் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.
அவளது வயிற்றைப் பார்த்தவனுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை தான். இருந்தாலும் கீர்த்தியை கண் நிறைய நிரப்பியவன், அவளது சேலையை விலக்கி அவளது வெண்பட்டு வயிற்றில், தன் முத்தத்தை குழந்தைக்கு தந்து கீர்த்திக்கும் அவளது நெற்றியில் தந்தான். வீட்டில் சொன்னவன் கீர்த்தியின் வீட்டிற்கும் அவளை அழைத்து வந்தான்.
செல்வமணி நாகேஷ்வரன் காலில் இருவரும் விழுந்து எழ, “இரு இப்பவே உனக்கு பிடிச்ச ஸ்வீட் ஏதாவது செய்யறேன்” என்று செல்வமணி திரும்ப,
“அம்மா அப்படியே என் பொண்டாட்டிக்கு புடிச்ச கேசரி செஞ்சிருங்க” அஷ்வின் மகளைத் தூக்கிக்கொண்டு மனைவியின் கையை பிடித்தபடி கீழே வர,
“பாட்டி! எனக்கு தம்பி பாப்பா வரப்போகுது” குஷியில் கத்தினாள் யாழ்மொழி.
ராஷ்மிகாவின் முகமோ இரத்தமாய்ச் சிவந்து வெட்கத்துடன் கணவனைப் பார்க்க, அவனோ கர்வமாக மனைவியை நோக்கினான்.
மேலிருந்து வரும்போதே தங்கை குரல் கேட்டபடி வந்த அஷ்வின் ஹர்ஷாவைக் கட்டிக்கொண்டு தன் வாழ்த்தைத் தெரிவித்தான். திருப்பி ஹர்ஷாவும் வாழ்த்துக்களைச் சொல்ல விஷயம் சிவக்குமாருக்குத் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் அங்கு வர வீடே விழாக்கோலம் பூண்டது.
அடுத்த ஒன்பது மாதத்தில்..
முதலில் கீர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். வலியால் துடித்துக் கொண்டிருந்தவளைப் பார்க்கப் பார்க்க ஹர்ஷாவின் இதயமோ வலித்தது.
பிரசவம் பார்க்கும் டாக்டரோ கீர்த்தியுடைய தோழி தான்.
ஹர்ஷாவும் உள்ளே நின்றிருக்க, “ஹர்ஷா! முடியலடா” என்று கத்தியவளைப் பார்க்கப் பார்க்க அவனின் கண்களில் கண்ணீர் சுரந்தது.
“இன்னும் கொஞ்ச நேரந்தான். நல்லா புஷ் பண்ணு கீர்த்தி” கையை நீவி ஹர்ஷா தைரியமூட்ட, அடுத்த பத்து நிமிடத்தில் கீர்த்தி தன் ஆண் குழந்தையை இந்த பூமிக்குக் கொண்டு வந்தாள். அடுத்த இருபது நிமிடத்தில் அவளுக்கு மீண்டும் வலி எடுக்க, அவர்களது பெண் குழந்தையும் இந்த பூமியில் கால் பதித்தாள்.
ஆம் ட்வின்ஸ்தான்!
இரண்டாவது குழந்தையும் பிறந்தவுடன், “நீ இவ்வளவு பாஸ்ட்னு நினைக்கல ஹர்ஷா” வியர்த்து, விறுவிறுத்து இருந்த போதும் அவனைக் கேலி செய்துவிட்டே மயக்கத்திற்குச் சென்றாள் கீர்த்தி.
இரட்டைக் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க, கீர்த்தி ஒரு வாரத்தில் வீட்டிற்கு அழைத்து வரப்பட, அந்த வாரத்திலேயே ராஷ்மிகாவிற்கு வலி எடுத்தது.
ஹர்ஷா, கீர்த்தி பட்ட கஷ்டத்தை சொன்னதாலோ என்னவோ, அஷ்வின் உள்ளே செல்லவே இல்லை. ராஷ்மிகாவை அப்படிப் பார்க்க அவனிற்கு தைரியமில்லை. வெளியே மகளுடனே நின்றிருந்தவனுக்கு எப்போது ராஷ்மியைப் பார்ப்போம் என்றிருந்தது. உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்ட போதுதான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
வெளியே வந்த நர்ஸ், “ஆண் குழந்தை” எனச் சொல்ல யாழ்மொழியோ கையைத் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். மயக்கதில் ராஷ்மிகா சோர்ந்து கிடப்பதை உள்ளே சென்று பார்த்தவன், மனைவியின் கைகளைப் பற்றி முத்தமிட்டான்.
யாழ்மொழி பிறந்தபோது தான் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் எனப் புரிந்தது அஷ்வினிற்கு. மூன்றாம் நாளே ராஷ்மிகாவும் அழைத்து வரப்பட, மூன்று குழந்தைகளின் சத்தமும், யாழின் சத்தமும்தான் வீட்டில். விஜயலட்சுமி கல்யாணி என்று எல்லோரும் பார்த்துக் கொண்டாலும், சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடாத குறைதான் அனைவருக்கும்.
ஆண்களும் மாலை வீடு திரும்பியபின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளத் தவறவில்லை.
பெயர் சூட்டும் நாளில் அஸ்வின்-ராஷ்மிகா தம்பதியர் மகனிற்கு, “த்ரூவ்” எனவும்,
ஹர்ஷா-கீர்த்தி தம்பதியர் மகனிற்கு, “வைபவ்”, மகளிற்கு, “தியாஸ்ரீ” என்று பெயர் சூட்டினர்.
குடும்பத்தோடு அவர்கள் குலதெய்வம் கோவிலில் நின்றெடுத்த புகைப்படம் பாந்தமாய் அமைந்திருக்க, அவர்களின் சந்தோஷம் வாழ்நாள் முழுமைக்கும் தொற்றிக்கொண்டது.
யாழ் அனைவரின் சந்தோஷத்தையும் பிள்ளையார் சுழியாய்த் துவங்கி மீட்டு எடுத்தாள்.
இனி அவர்களின் வாழ்வில் சந்தோஷம் என்னும் இன்னிசைகளே!
*முற்றும்*