என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 39
ஓம் நமோ நாராயணாய, என்ற வாசகம் பதித்த அப்பெரும் புகைப்படத்தில் செல்வச் செழிப்போடு நின்றிருந்தார் ஏழுமலையான். அவர் பக்கத்தில் செல்வத்தின் அன்னை மகாலட்சுமியும், கல்வி அன்னை சரஷ்வதி என்று அந்த அறைமுழுதும் கடவுளின் புகைப்படங்கள் நிறைந்திருந்தது..
எண்ணெய் ஊற்றி திரியிடப்பட்ட, அந்த லக்ஷ்மி விளக்கையேற்றினாள் ஜானு. அங்கே சீதா, ராமனும், ரகுவும், ஆர்.ஜே சித்துவும் இருந்தனர். விளக்கேற்றிய பின் அனைவரும் கடவுளை வழிபட்டுவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர்.
சமயலறையின்னுள்ளே நுழைந்த சீதா, அவர்களுக்கு ஜூஸை கலக்க,ஜானுவும் அவருக்கு உதவி செய்தாள்.
” நீ போடா ! நான் போட்டு எல்லாருக்கும் கொண்டு வரேன்… “
” இல்லமா, இருக்கட்டும். நானும் உங்களுக்கு உதவிப் பண்றேன் ” என்றவள் அவருக்கு உதவி செய்தாள்.
சித், வீட்டைச் சுத்திப்பார்க்க, மூவருமாக ஹாலில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
” என்ன சித்து கண்ணா அப்படி பார்க்கிற ? “
” இல்லை ராமு, வீட்டு ரொம்பப் பெருசா இருக்கே. உங்களுக்கு இங்க இருக்கப் பயமாயில்லையா ? “
” சித்து, என்னைத் தான் ரகுன்னு பெயரைச் சொல்லிக் கூப்பிடுற. இவரையுமா? தாத்தான்னு சொல்லிக் கூப்பிடு பேரா ! “
“அதென்ன சம்மந்தி, நீங்க அவனுக்குத் தாத்தாவா இருந்தாலும் உங்களைப் பெயரைச்சொல்லித்தானே அழைக்கிறான். அதே போல என்னையும் கூப்பிட்டுப் போட்டுமே ! ஒருமையில அழைச்சாலும், உரிமையில அழைக்கிறது போல இருக்கு… அப்புறம் சித், பயமாயில்லையான்னா கேட்ட ?”
” சித்து குட்டி, வீடுப்
பெரிசா இருந்தா பயமா இருக்குமா என்ன ? இங்க நான் இருக்கும் உங்க தாத்தாக்கு பயமே இருக்காது. “
“ஆமா, இங்க பேய் , பிசாசு இருக்காது, அதுக்கு பதில தான் இவ இருக்காளே.. ” என்றதும் அவரிடமும் முறைப் பெற்றுக்கொள்ள, மத்த அனைவரும் சிரித்துவிட்டனர்..
” ராஜூ, என் பேரனுக்கு வீட்டை சுத்திக்காட்டுடா. அவனுக்கும் எது எது எங்க இருக்குன்னு தெரிஞ்சுகட்டும்… ” என்றார் சீதா.
“சரிம்மா, காட்டுறேன். வா சித்” என்று சித்தை தூக்கிக்கொண்டான். ” ஜானு, நீயும் போமா, போய் பார்த்துட்டு வா ” அவளையும் அனுப்பிவைத்தார்.
மூவருமாக மாடியேறிச் சென்றனர். சித் இறங்கி முன்னேச் செல்ல, ஜானுவின் கையைப்பற்றி அழைத்துச் சென்றான்.
முதலில் அவனது அறையைத் தான் காட்டினான்.. கொஞ்ச நாளாக அவனது புழக்கம் இல்லாமல் போனாலும், இன்றும் அறை முழுதும் சுத்தமாகவே இருந்தது… உள்ளே நுழைந்தவளின் கண்கள் சுழன்றது.
மெத்தைக்கு மேல் பெரியதாய் அவனது புகைப்படம். மரக்கட்டையில் செய்த வாட்ரோப்.. அறையில் எல்.இ.டி டீ. வி ரேடியோ சௌண்ட் சிஸ்டம்… சுவற்றில் மாட்டியிருந்த ஏ.சி. ஜன்னல் அடைக்கப்பட்டு, அதனை திரைகள் இட்டு அழகு படித்திருந்தனர்..
இன்டூர் செடிகளென அவ்வறையை மேலும் அழகுப் படுத்திருந்தது… சுவரில் ஆங்காங்கே அவனது புகைப்படமே இருந்தது. பெயிடிங்க்ஸ் வேற இருந்தது…
அவனது அறை ஹைடெக்காக இருந்தது… சித்து உள்ளே வந்தவன் மெத்தையில் குதித்தான். அவளும் சுத்தி சுத்திப் பார்த்தாள்.
” ஆர்.ஜே உனக்கெல்லாம்,தனி ரூமா இங்க ? “
” ஏன் சித், எனக்கு தனி ரூம் இருக்கக் கூடாதா ? அம்மா ,அப்பா ஒரு ரூம். நான் பெரியவனானதும் அம்மா, எனக்கு தனி ரூம் கொடுத்துட்டாங்க.. “
” அப்படியா ! அப்ப எனக்கும் தனி ரூம் வேணும் ஆர்.ஜே “
” சித், என்ன இது ? நீ சின்னப் பிள்ளைத்தான். அதுனால நீ இங்க எங்க கூட இரு… இல்லேன்னா, தாத்தா கூட இருக்கணும். இப்ப நீ தனியா இருக்கக் கூடாது புரியுதா ? “
” ஒ.கே ஜானு,.. நானும் வளர்ந்ததுக்கு அப்புறம், எனக்கு தனி ரூம் வேணும் ” என்றவன் வெளியே செல்ல, அவளும் பின்னே செல்ல, அவளைப் பிடித்து அணைத்துக் கொண்டான். ” மேடம், நம்ம ரூம்மைப் பத்தி எதுவுமே சொல்லல, பிடிச்சிருக்கா ? பிடிக்கலையா? எதாவது மாத்தனுமா ? சொல்லுங்க ” என அவள் தோளில் தாடையைப்பதித்தான்.
” இவ்வளவு வசதியா இருந்துட்டு, எப்படி அந்தச் சின்ன ரூம்ல இருந்தீங்க ஆர்.ஜே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா ? “
” ஜானு, நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போதும் அப்படி ஒரு வீட்டுல தான் இருந்தேன். நான் சினிமா இன்டஸ்ட்ரிக்கு வந்ததுக்கு அப்புறம் தான் இதெல்லாம்.. அதுனால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை.. அதுமட்டுமில்ல, எனக்கு என் தேவதை கூட இருக்கும் போது, கஷ்டமே தெரியவில்லை. ” என்றவன் அவனது மீசையைவைத்து அவளை குறுகுறுக்கச்செய்தான்.
” ஆர்.ஜே சித், வந்திட போறான். சும்மா இருங்க.. ” அவனிடம் இருந்து விலக முயன்று தோற்றாள். அந்த பெரிய புகைப்படத்தைப் பார்த்து அவள் கண்கள் நிலைகுத்த, அதை கவனித்தவன். ” என்னடி, நான் இங்க இருக்கும் போது, அந்த போட்டோவை ரசிக்கிற “
” ஹான்… நாங்க ஒன்னும் உங்களை ரசிக்கலை, இதே போல சித்துவையும் போட்டோ எடுத்துப் பெருசா மாட்டணும் தான் யோசிக்கிறேன்.” என்றதும் அவளை முறைத்தவன், கன்னத்தைக் கடித்துவைத்தான்.
வீட்டை முழுவதுமாக சுத்திக்காமித்தான்… மதிய உணவை சீதா, தயாரித்தார். அவருக்கு உதவியாக இருந்தாள் ஜானு. மாலையில் குடும்பமாக கோயிலுக்குச் சென்று வந்தனர். இரவு உணவை முடித்துவிட்டுச் செல்ல, ரகுவோடு சித்து உறங்கச்சென்றான்.
ஆர்.ஜே தன்னறையில் இருக்க, ஜானு வேலைகளை முடித்துக் கொண்டு வந்தாள் அவளைத் தன்ணைப்பில் வைத்துக்கொண்டான்..
” நிஜமாவே கனவுப் போல இருக்கு, ஜானு. நீ அதுவும் என் அறையில் ” என்றதும் அவள், அவன் கன்னத்தை தடவி, அன்றைய நாள் சீதா அடித்ததை நினைவூட்டினாள்.
” என்ன ஆர்.ஜே அடியை மறந்துடீங்களா ? ” அவனது நினைவு அவர் அடித்த நாளிற்குச் சென்றது…
அன்று அதிசயமாக இருந்தது சீதாவின் வருகை, அதை விட அதிர்ச்சி, வந்ததும் ஆர்.ஜேவை அடித்தது தான்
” மா….” என்று கன்னத்தில் கைவைத்து நின்றான். யாரும் ஏன் அடித்தீர்கள் என்று ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை. வீட்டின் பெரிய மனுசி, அதுவும் பெற்றப் பிள்ளையை அடிக்க அவருக்குத் தான் முதல் உரிமையே.
” ஏன்டா குழந்தைக்கு அடிப்பட்டிருக்கே, அவனை நல்லா கவனிச்சுக்காம ஆடவிட்டுருக்க. அவ்வளவு முக்கியமா இந்த ஆட்டம். ஆடலைன்னா என்ன இப்ப, அடுத்த முறைப் பாத்துக்கலாம். அதுக்காக வலியோட பிள்ளைய ஆட வச்சிருக்க, அவன் என்ன உன்னைப் போல வலியைத் தாங்கிற எருமமாடா! குழந்தைடா, ஏன்மா நீயாவது சொல்லிப் புரியவைக்கக் கூடாதா ? ” என அவளைப் பார்த்துக் கேட்டார்.
அவளோ ஆர்.ஜேவை பார்த்தாள்” உன் பேச்சையும் கேட்காமத்தான் இவன் பிள்ளையை ஆடவிட்டிருக்கானா… உன் உதடு வீங்கிருக்கு இவன் அடிச்சானா ? உன்னை ” என்றதும் மீன் முள்ளை விழுங்கியது போல் ஆனது அவனது முகம். அவளுக்குப் பார்க்கச் சிரிப்பே வந்தது, அதனை கஷ்டபட்டு மறைத்தவள், ” ஆமாம் ” ” இல்லை ” என்று தலையாட்டி வைத்தாள்.
” இதுல பொம்பளைப் பிள்ளையை வேற அடிச்சிருக்க, பாவம் அது சொல்லவே எப்படி பயப்பிடுது… பிடிச்சுத் தானே கட்டிக்கிட்டு போன. இப்படி அடிக்கத்தானா ? நான் இல்லைன்னு உனக்கு பயம் விட்டுப்போச்சு அப்படித்தானே!
பீட்டர் சொன்னதும். என் பேரனுக்கு என்னாச்சோ ? ஏதாச்சோன்னு ஓடிவரேன். இதுல அவனை ஆடவைச்சிருக்க. ” என்று அவனை திட்டிக்கொண்டிருந்தார்.
” சீதா! ஐ யம் ஆல்ரைட். எனக்கு ஒன்னுமில்லை. நீ ஆர்.ஜேவை திட்டாதே! நான் இந்த லெவல்ல ஆடலைன்னா, அடுத்து எந்த சேனல் ஷோ பண்றாங்களோ, அதுல போய் முதல் இருந்து ஆடனும். எனக்கு பின்வாங்க பிடிக்கலை சீதா… எனக்கும் வலிக்கலை, அதான் ஆடுனேன். பாவம் ஆர்.ஜே எனக்காக தான் இவ்வளவு பண்றார் ப்ளீஸ் திட்டாதீங்க. ஹி இஸ் மை ரோல்மாடல். ஹீ இஸ் தி பெஸ்ட் பாதர் டூ மீ… ” என்றுப் புகழ்ந்தான்.
தன் மகனை புகழும் பேரனை வாரி அள்ளிக்கொண்டார். ” உனக்காக, இவனை சும்மா விடுறேன் சித்து குட்டி ” என்றார்.
” தாங்கியூ சீதா. என்னைப் பார்க்க வந்தீயா, லவ் யூ சீதா. ” என்று அவருக்கு முத்தம் கொடுத்தான்.
” எப்படி சித்துகுட்டி இருக்க, யாருடா உன்னை அடிச்சது கண்டுபிடிச்சீங்களா. கட்டைல போறவன் என் பேரனை அடிச்சிருக்கான். இந்த தடிமாடி யாருன்னு கண்டுப்பிடிச்சானா? இல்லையா ? ” என்று கேட்டார்..
” எம்மா! என்ன நீ வந்ததுல இருந்து, என்னை அடிக்கிற, திட்டுற.. நான் என்ன பண்ணினேன். உன் பேரனுக்காகத்தானே அத்தனையும் பண்றேன். அதுக்கு அடிப்பீயா..? சரி அத கூட விடு உன் பேரனுக்காகத்தான் வந்தீயா? எனக்காக வரலையா நீ ? “
” உனக்காக நான் ஏன்டா வரணும் ? கல்யாணம் பண்ணிட்டு நீ பாட்டு வந்து இங்க இருந்துட்ட என்னை பத்தி யோசிச்சீயா நீ.. அம்மாகிட்ட மன்னிப்பு கேட்கணும் நினைச்சீயா நீ.. என் பேரன் தான்டா வந்து மன்னிப்பு கேட்டான். இப்ப பேசுடா.. சும்மா முறைச்சுட்டு வராதா நீ.. எனக்கு என் பேரன் தான் முக்கியம் நீ இல்லை.. “
” அம்மா! என் பெத்த தெய்வமே ! என்னை மன்னிச்சிடுமா ! உன் பிள்ளையை மன்னிச்சி ஏத்துக்கோமா ” என்று காலில் விழுந்தான்.
” விழுந்தே விட்டானையா ! ” என்றான் ராமன்.
” அம்மா! என்னையும் மன்னிச்சு, ஏத்துக்கோங்க மா. ” அவனோடு அவர் காலிலும் விழுந்தாள் ஜானு.
” சரி சரி எந்திருங்க மன்னிச்சுட்டேன் மன்னிச்சிட்டேன். ” என்றார்.
” ரொம்ப நன்றி சம்மந்தி… உங்க பிள்ளையை அருமையா வளர்த்திருக்கீங்க. எங்களுக்கு அவர் கிடைக்க நாங்க தான் புண்ணியம் பண்ணிருக்கணும்… என் பொண்ணுக்கும், என் பேரனுக்கும் ஒரு அரணா அவர் தான் இருக்கிறார். நெடுநாள் எனக்குள்ள இருந்த என் பாரமே குறைஞ்சிடுச்சு சம்மந்தி. நாங்க எதாவது தவறு செய்திருந்தா, எங்களை மன்னிச்சு. இவங்களை ஏத்துங்கோங்க சம்மந்தி.. “
” என்ன அண்ணா மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு. எங்களுக்கு இப்படி ஒரு அருமையான மகளையும், பேரனையும் கொடுத்திருக்கீங்க, நாங்க தான் நன்றி சொல்லணும்.. என் வளர்ப்பு எப்படியோ, அதே போலத்தான் ஜானுவோட வளர்ப்பும்.. அவன் அப்பனுக்கும் அவனுக்கும் நீங்க தேவைன்னு வந்து நின்னான் பாருங்க… இதெல்லாம் சொல்லிக்கொடுக்காம வருதுன்ன, அதெல்லாம் வளர்ப்பு தான் அண்ணா.. எனக்கு கொஞ்சம் நெருடலா இருந்தது உண்மைதான்.. ஆனா, அதுக் கூட என் பேரனை பார்த்ததும் போயிருச்சு. இனி என் பேரன் எங்கக் கூடத்தான் இருக்கணும். டேய் என் மருமகளை கூட்டிட்டு வீட்டுக்கு வாடா.. நான் என் பேரனோடு தான் இருக்கப் போறேன் இனி.. ” என்றார்.
” மா… என் தங்கமே! ” என கட்டிக்கொண்டான் அவரை.
” ஹேய் நாம எல்லாரும் தாத்தா வீட்டுக்கு போகப்போறோம்.. ” என்று சித் கத்திக் குதித்தான்.
ஏனோ, ஜானு தன் தந்தையை பார்த்தாள், அவரோ சித்துவின் மகிழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவளை பார்த்த சீதா, அதனை உணர்ந்துகொண்டவர், ” அண்ணா ! நீங்களும் எங்களோடு வந்திடுங்க ” என்றார் சீதா..
” நான் எதுக்குமா ? நீங்க மாப்பிள்ளை ஜானுவை சித்தையும் அழைச்சுட்டு,போங்க, நான் இங்கயும் அங்கையும், என் மகன் வீடுன்னு இருந்துகிறேன்..
” அதெல்லாம் இல்லை அண்ணா… என்னத்தான் நாங்க இப்ப வந்தாலும் நீங்க தான் சித்தை வளர்த்தவர். நீங்க இல்லாமையா அண்ணா.. நீங்களும் வாங்க… உங்க பொண்ணுகூட இருந்தீங்க, உங்க தங்கச்சி கூட இருக்க மாட்டீங்களா ? ” என்று கேட்டார் அவரை அண்ணாக்கி அதிர்ச்சியாக்கினர் சீதா.
‘ இது நம்ம லிஸ்டுலையே இல்லை ‘ என்பது போல பார்த்தார் ராமன்.
வேகமாக சித் ரகுவை கண்டிக்கொண்டவன். ” ரகு, நீ இல்லாம நான் எப்படி இருப்பேன். நீ தானே எனக்கு முதல் ப்ரண்டு. என் கூடயே வந்திடு ரகு.. என்னால உன்னை விட்டு பிரிய முடியாது.. ” என்று அழுதவனைத் தூக்கிக்கொண்டார்.
” சம்மந்தி, உங்களைப் பார்க்க பொறாமையா இருக்கு. பேரன், உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான். அவனை ஏங்க வீடாதீங்க சம்மந்தி.. நீங்களும் வாங்க, எல்லாரும் குடும்பமா இருப்போம்.. வாழ்க்கை பணம்காசை விட அன்பு காட்ற சொந்தம் பந்தம் கூட இருக்கிறது தான் பெருசு.. ” என்றார் ராமன்.
” சரி சம்மந்தி, நானும் வர்றேன்.. “என்று ஒப்புக்கொள்ள.. ” அதன் படியே இரண்டு நாளில் ஆர்.ஜேவீட்டிற்கு வந்தனர்.
” எப் பீ முடிஞ்சா ஆர்.ஜே சார். இப்ப கனவு இல்லைன்னு நம்புறீங்களா ? “
” கனவு இல்லைன்னு நீ கிஸ் பண்ணீயே சொல்லிருக்கலாம் அதைவிட்டு அடியை ஞாபகப்படுத்திட்டீயே ! ” என்றான்.
” ம்ம்… ரொம்ப தான் போங்க.. ” என்று திரும்பி படுக்கப் போனவளை, பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான். ” சித்துவோட ஆசையெல்லாம் நிறைவேத்திட்டு இருக்கேன் ஜானு. அவன் கேட்டதெல்லாம் செய்திட்டு தான் இருக்கேன். இன்னும் அவன் கேட்டதுல ஒன்னே ஒன்னு தான் இருக்கு அதையும் நிறைவேத்தணும் ” என்றான்.
” என்ன ஆர்.ஜே அது ? “
” அவன் கேட்ட தங்கச்சி பாப்பாவை கொடுக்கணும் ” என்றதும் அவனை முறைத்தாள்.
” என்னடி மிளகாய் !முறைப்பு, என் மகன் ஆசையை நிறைவேத்தாம, ஓயமாட்டான் இந்த ஆர்.ஜே ” என்று வசனங்கள் பேசினான்.
” இது உங்க மகன் ஆசைதானா ஆர்.ஜே, இல்லை உங்க ஆசையும் கூடவா ? “
” ஆமா, இது என் ஆசையும் கூடத்தான். ஏன் உனக்கு அந்த ஆசையில்லையாடி,
உனக்கும் இருக்குத்தானே, இல்லாத மாதிரியே பேசுறது… ” என அவன் உதட்டை பிடித்து இழுத்தான்.
” ஆர்.ஜே… ” அவனதுப் புஜங்களை அடித்து தன்னுதட்டைப் பார்த்தாள். ” என்னடி, அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் ” என நெருங்கி அதைப் பற்றிக்கொண்டு மகனின் ஆசைக்கு ஏற்கனவே அடித்தளமிட்டவன் இப்போது மெல்லமாக கட்டித்தொடங்கினான்.
இதயத்தில் ஓரமாய் அறுத்துக்கொண்டிருந்த ஒன்று, இன்று தடமின்றி காணாமல் போனது போல உணர்ந்தனர்.முழுமை பெறாத மூவருமாக இருந்த அந்த குடும்பம் இன்று முழுமைப்பெற்று மகிழ்ச்சி அடைமழையில் நனைத்துக்கொண்டிருந்தது..
இப்போது சித்துவை கிளப்பும் வேலை சீதாவை பார்த்துக்கொண்டார். அவனை கிளப்பி, ஸ்ஸூ போட்டு விடுவதிலிருந்து சாப்பாட்டு ஊட்டுவது வரைக்கும் அவரே பார்ப்பார். தன் மருமகள் வேலைக்குச் செல்வதால் இவரே அனைத்தையும் பார்த்தார்.. முதலில் வேலைக்குப் போவதை தடைச் சொல்லுவார் என்று எண்ணிப் பயந்திருந்தாள்.. அவரிடம் அனுமதி கேட்கவே தயங்கினாள்.
ஆனால் அவரோ! சற்றும் யோசிக்காமல் அனுமதி வழங்கினார்.
” இங்க பாரு ஜானுமா, எனக்கு மருமகளை வேலைக்கு அனுப்பிறதுல இஷ்டமில்லை தான். ஆனால், நீ பார்க்கிற வேலை உயிரைக் காப்பாத்துற வேலை. எனக்கு உன் வேலை பத்தி முழுசா தெரியலைன்னு, ஐயோ அம்மான்னு வரும் போதும் கடவுளை விட முதல் உயிரை காப்பாத்திறது இந்த மருத்துவர் தான். அதுனால உன்னை நான் போக வேணான்னு தடுக்கமாட்டேன் மா.. நீ தாரளமா போ ” என்றார். அவளுக்கும் அவர் தன்னை புரிந்துகொண்டதில் நிம்மதி.
அவளும் வேலைக்கு போயிட்டு வந்து ஒருவாரம் இரவும் மறுவாரம் பகலும் என உதவி செய்வாள். சித்துவுக்கும் படிப்பும் ஒரு பக்கமும் அவனது காம்படிசனும் ஒரு புறமென அவனும் பிசியானான். ஆர்.ஜேவிற்கு சூட்டிங் ஒருபுறம் டான்ஸ் க்ளாஸ் சித்துக்கு டான்ஸ் பயிற்சியும் ஜானுவை காதலிக்கவும் நேரம் சரியாக இருந்தது..
இதற்கிடையில் போட்டியில் பத்து குழந்தைகளிலிருந்து நான்கு குழந்தைகளை பிரி பைனல் போட்டியில் தேர்வுச்செய்திருந்தனர். அதில் சித்துவும் ஒருவன் அந்த சந்தோசத்தில் இருக்க, வெளியே சென்ற குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுக்க, வொயில்கார்ட் ரௌண்ட் வைத்தனர்..
அன்று சிவாளிக்கு பிறந்தநாள் என்று சின்ன பார்ட்டி போல வெங்கி வைத்திருந்தான். சக்தியும் வெங்கியும் தனக்கு தெரிந்தவர்களை அழைத்திருந்தனர் அதில் ஆர்.ஜே பேமிலியையும் அழைத்திருந்தான்.
சித்து, அவளுக்கு இன்டோர் ப்ளாண்ட்ஸ் வாங்கிகொடுத்தான். பதிலுக்கு அவள் முத்தத்தை கொடுத்தாள்… அன்றைய பார்ட்டியில் சிறுவர்கள் விளையாடிட, பேசி மகிழ்ந்திருந்தனர்..
அனைத்தும் முடிய சக்திக்கு உதவிச் செய்தவிட்டு தாமதமாக தான் கிளம்பினர்… அவர்களை வழியனுப்ப ஆர்.ஜேவுடன் வெங்கியும் சக்தியும் கார் பார்க்கிங் வரை நடந்து வந்தனர்..
அங்கே சந்தோஷ்ஷூம், அவனது நண்பர்களும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.. அதில் சித்தை அடித்த நால்வரும் இருந்தனர். சித்துவிற்கு அந்த நால்வரின் முகம் தெரிந்தது.
” ஆர்.ஜே, அந்த நாலுப் பேரும் தான் என்னைய அடித்தது ” என்று சொல்ல, ஆர்.ஜேவிற்கு கோபம் வர, அந்த நால்வரோடு சந்தோசஷையும் பிடித்து அடி நொறுக்கிவிட்டான். அவர்களது பெற்றோர்கள் ஆர்.ஜேவிடம் சண்டைப் போட்டனர்.
” உங்க பிள்ளைய அடிச்சதும், கோபம் வந்து சண்டைப் போடுறீங்க, இந்த எட்டு வயசு பையன், இவன் சொல்லி இந்த நாலுப்பேரும் அடிச்சிருக்காங்க. அப்ப எனக்கு கோபம் வராதா ?.. அதான் அடிச்சேன். அது தப்புன்னா வாங்க போலீஸ்க்கு போகலாம். நீங்க என் மேல கம்பிளைண்ட் கொடுங்க. நான் என் பிள்ளையை அடிச்சதுக்கு இவங்க மேல கம்பிளைண்ட் கொடுக்கிறேன். வாங்க ” என்றதும் அமைதியானர்கள்..
பின் அந்த ஜவரும் சித்துவிடமும் ஆர்.ஜேவிடமும் மன்னிப்புக் கேட்டனர்.. ” பசங்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லி கொடுங்க.. ” என்றுவிட்டுச் சென்றான்.
சித்துவிற்கு ஆர்.ஜே, ஹீரோவைப் போலவே தெரிந்தான். தனக்காக, துடிக்கிறான், தனக்காக துணையாய் நிற்கிறான், தனக்காக சண்டைப் போடுகிறான். தனக்காகப் பேசுகிறான். தனது ஆசையை நிறைவேற்ற முயல்கிறான்.. இத்தனை செய்யும் இவன் தனது தந்தை, தோழன், குரு, கடவுள் என யாதுமாய் நிற்கும் தாயுமானவனாகத் தெரிந்தான்… அவனை அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தான்.
குறும்பு தொடரும்.ஓம் நமோ நாராயணாய, என்ற வாசகம் பதித்த அப்பெரும் புகைப்படத்தில் செல்வச் செழிப்போடு நின்றிருந்தார் ஏழுமலையான். அவர் பக்கத்தில் செல்வத்தின் அன்னை மகாலட்சுமியும், கல்வி அன்னை சரஷ்வதி என்று அந்த அறைமுழுதும் கடவுளின் புகைப்படங்கள் நிறைந்திருந்தது..

குறும்பு தொடரும்.