கிட்காட்-14

கிட்காட்-14
கிட்காட்-14
கடந்த ஒரு மாதமாக சித்தாரா குழம்பியே தான் இருந்தாள். அதுவும் கல்யாண நாள் நெருங்க நெருங்க அவளால் சாதரணமாக இருக்க முடியவில்லை. அவள் மனதில் நெருடிக் கொண்டிருப்பதை அவளால் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.
அதிலும், வர்ஷினியைக் கண்டாலே சித்தாராவிற்கு வரும் கோபத்தை அவளால் அடக்க முடியவில்லை. சித்தார்த் எந்த ஒரு சமயத்திலும்… அதாவது கல்யாணப் புடவை எடுப்பது நகை எடுப்பது என்று அனைத்திலும் சித்தாராவை தன்னுடனே நிறுத்திக் கொண்டான். ஆனால், அவள் தான் அதில் ஒன்றிட முடியாமல் சிரமப்பட்டாள். காரணம் என்னவென்று கேட்டால் அவளிற்கும் தெரியவில்லை.
சம்மந்தமில்லாமல் மனம் அவ்வப்போது துணுக்குற்றது.
புடவை பார்க்கும் சமயத்தில் கூட சித்தார்த், “நான் தான் சூஸ் பண்ணுவேன்” என்று அவளுடன் நிற்க அவளிற்கு உள்ளுக்குள் சில்லென்று தான் இருந்தது. ஆனால், வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அவர்கள் கடையிலிருந்தே வீட்டிற்கு வர வைக்கப்பட்ட விலையுயர்ந்த சேலைகள்
அனைத்தையும் பார்த்தவன் முழி பிதுங்கினான். தன்னருகில் முகம் ஒரு மாதிரி உட்கார்ந்திருந்தவளின் காதின் அருகே குனிந்தவன், “செலக்ட் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு தாரா. நான் நீ கட்டிப்பாத்து வாங்கற ஆப்ஷன் எல்லாம்
இல்லியா” என்று இருஅர்த்தத்தில் வினவ,
அவனை தன் கண்களால் கூர்ந்து பார்த்தவள், “பாட்டி உங்க பேரனுக்கு கட்டிப்பாத்து வாங்கணுமாம்” என்று அனைவரின் முன்னால் சித்தாரா சொல்ல
சித்தார்த்திற்கோ பகிரென்று இருந்தது. ‘அடிப்பாவி’ என்று மனதிற்குள்
அதிர்ந்தவன் அங்கிருந்தவர்களைப் பார்க்க,
புடவை எடுத்துக்காட்ட வந்த பெண்ணிடம் திரும்பிய ரேணுகா, “மேல வச்சு
காமிம்மா” என்று சொல்ல அவள் ஒவ்வொரு புடவையாக எடுத்து வைக்கத்
தொடங்கினாள்.
எதிலும் அவன் திருப்தி அடையவில்லை. வைத்துக் காண்பித்த அனைத்தையும்
நிராகரித்தான். வைத்திருந்த புடவையை பார்த்தவனின் கண்ணில் அந்த
ரோஜாநிற சிவப்பு பட்டுப்புடவை சிக்கியது. அதைக் கையில் எடுத்தவன் தர, அந்தப் பெண்ணிடம் தர அவள் அதை சித்தாராவின் மேல் வைத்துக் காண்பித்தாள். வானவில்லைப் போல அழகாய் நின்றவளை சிறு குழந்தைப்
போல பார்த்தான் சித்தார்த். அவனது பார்வையில் அவள் உள்ளுக்குள் உருகிக்கொண்டு இருந்தாள்.
“ம்மா… வர்ஷி, நந்திதா, அகல்யா எல்லாருக்கும் எடுத்திடுங்க” என்றவன், “வர்ஷி இந்த பிங்க் கோல்ட் தான் கேட்பாள். இதை எடுத்திட்டு மத்தவங்களுக்கு நீங்க செலக்ட் பண்ணிடுங்க” என்று சித்தார்த் சொல்ல சித்தாராவிற்கு உள்ளுக்குள் எழுந்த உணர்வுகள் எல்லாம் அப்படியே அடங்கியது.
அதேபோல நகை எடுக்கும் போதும்… மாங்கல்யத்தை அவனது டீ ப்ராடக்ட்டில்
இருந்து வந்த முதல் லாபத்தில் எடுத்தான். அவனது முதல் உழைப்பில் அவளிற்கு
வாங்கித் தந்ததில் அத்தனை ஒரு திருப்தியும் நிம்மதியும் அவனிற்கு. “ஏன் ஒரு மாதிரியே இருக்க தாரா..?” சித்தார்த் வினவ, “தலைவலி” என்று சமாளித்தாள்.
திருமணத்திற்கு ஒரு வாரம் முன் எல்லோரும் கோயம்புத்தூர் வந்து சேர வீடே விழாக்கோலம் பூண்டது. திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு மெஹெந்தி வைக்க பார்லரில் இருந்து பெண்கள் வர எல்லோருக்கும் வைக்க ஆரம்பித்தனர். சித்தாராவிற்கு ஸ்பெஷல் டிசைன் ஹைடெக் டிசைனர் வைக்க, அதை ரசித்தபடி உட்கார்ந்திருந்த சித்தாராவின் காதில், தனக்கு வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வர்ஷினி சொன்னது கேட்டது.
“டிசைன் போட்டுட்டு நடுவுல ‘எஸ்’, ‘வி’ லெட்டர்ஸ் போடுங்க” என்று அவள் சொல்ல சித்தாராவிற்கு கையில் உள்ள மெஹெந்தி போனாலும் சரி அவள்
மூஞ்சியில் ‘நச்’ என்று அடித்துவிடலாமா என்று தோன்றியது. மனம் சருண்டது
சித்தாராவிற்கு. சித்தார்த்திற்கு ‘எஸ்’, வர்ஷினிக்கு ‘வி’ என்பதை யாரும்
சொல்லத் தேவையில்லை சித்தாராவிற்கு.
“சித்தார்த்! சித்தாராவை எதாச்சும் சொன்னியா?” ரேணுகா வந்து கேட்க,
“ஏன் ம்மீ?” என்று கேட்டான்.
“இல்லை நல்லாதான் இருந்தா சிரிச்சிட்டு. இப்ப ஒருமாதிரி இருக்கா” என்று அன்னை சொல்ல சித்தாராவைத் தேடிச் சென்றான். ப்ளூ நிற தாவணியும் பச்சை நிற டிசைனர் ஸ்கர்ட்டிலும் இருந்தவள் அவனின் இதயத்தைச் சுண்டி இழுக்க, அவளின் முகத்தை பார்த்தவனோ புருவத்தை நெறித்தான்.
“தாரா” என்று சித்தார்த் அழைக்க கைகளில் மெஹெந்தியுடன் நிமிர்ந்தவளிடம், “உன்கிட்ட பேசணும். மொட்டை மாடிக்கு வா” என்றழைத்தான்.
“ஒஹோ…” என்று கோரஸ் பாடினர் சின்மயும் அங்கிருந்த உறவுப்பெண்களும்.
“என்ன சித்தார்த் இரண்டு நாள் வெயிட் பண்ணா சித்தாரா உன்கூடையே தான்
பேசிட்டு இருக்கப் போறா. அதுக்குள்ள அவசரமா” என்று சித்தார்த்தின் தூரத்து
உறவு அத்தைப் பெண் கேலி செய்ய,
“நான் விட்டா இப்பவே கூட்டிட்டு போயிடுவேன். தாத்தா சொன்னதுக்காகத் தான் வெயிட்டிங்” என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு சொன்னவன், “நான் மேல இருக்கேன் வா” என்று மேலே சென்றுவிட்டான்.
பத்து நிமிடத்தில் கைகளுக்கு வைத்து முடிக்க எழுந்தவள், “அக்கா நான் மேல
போறேன்” என்றுவிட்டு மெல்ல மெல்ல மாடிப்படிகளை ஏறினாள்.
“சித்தார்த்” என்று மேலே வந்தவள் அழைக்க திரும்பியவன், அவளை வழக்கம் போல சைட் அடிக்கத் தவறவில்லை. தாவணியில் கையில் வைத்த மெஹெந்தியுடன் நின்றிருந்தவளை வைத்தகண் வாங்காமல் பார்த்தவன், “ஜம்முனு கும்முனு இருக்க” என்றவனை முறைத்தவள், “இதுக்கு தான் கூப்பிட்டியா?” என்று சிரிப்பை அடிக்கியபடி அவள் கேட்க,
“இந்த மாதிரி சிரிச்சா நல்லா இருக்கும்னு சொல்லக் கூப்பிட்டேன் தாரா. உம்முன்னு இருக்காதே அது உனக்கு செட்டே ஆகல” என்றவன், “ஏன் ஒரு மாதிரியே இருக்க?” என்று அவன் வினவ,
“ஒண்ணுமில்லை” என்றாள் அவள். அவனோ கண்களைச் சுருக்கி அவளை குறும்பான பார்வை பார்க்க… அந்தக் கோவைக் காற்றும் அவனை நல்லபிள்ளையாக இருக்கவிடாமல் வேகமாய் வீச அவளது தாவணியோ பறந்தது.
மெல்லிய வெளிச்சத்தில் இருவரும் நின்றிருக்க காற்று வீசி அவளது இடைப்
பகுதியை முழுதாக காண்பித்து கவிதை பிறப்பித்துக் கொண்டு போனது.
சித்தார்த் தான் காற்று செய்து போன சில்மிஷத்தில் கண்களை காந்தம்போல
இழுத்த இடத்தில், கண்களை எடுக்காமல் நின்றுவிட்டான்.
முதலில் தாவணி விலகியதில் கைகளால் ஒன்றும் செய்த முடியாமல் திண்டாடியவள் சித்தார்த் பார்த்த பார்வையில் ஸ்தம்பித்து திரும்பி நின்று கொண்டாள். திரும்பியவளுக்கு அவள் பின் சித்தார்த் வந்து நின்றதை உணர முடிந்தது. அவனைப் பற்றித் தெரிந்தவள் கண்களை மூட அவள் காதின் அருகில் குனிந்தவன், “யூ ஆர் டிஸ்ட்ராக்ட்டிங் மீ” என்றவன் அவள் அவளது தாவணியை கையில் பிடிக்க சித்தாராவோ கண்களைத் திறந்தாள்.
தாவணியின் முந்தியை கையில் எடுத்தவன், அவளை பார்வையால் துளைத்துக்கொண்டே அவள் முன் சுற்றி வர, சித்தாரா அவனை அதே
பார்வையால் எதிர்கொண்டாள். அவள் முன் நின்றவன் நொடியும் தாமதிக்காமல்
அவளது தாவணியை, அது மறுபடியும் காற்றில் பறக்காத வண்ணம் சொருகிவிட, அதை சற்றும் எதிர்பார்க்காதவளோ “ங்க்” என்று ஜெர்க்காக… அவனோ மாயப்
புன்னகையை உதிர்த்தான்.
“தாரா. கல்யாணம் எப்போமே லைஃப்ல ஒரு டைம் வரும். நீ ஏதோ குழப்பத்துல
இருக்கேன்னு தெரியும். ஆனா, எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்
பாத்துக்கலாம். இந்த மொமன்ட்ஸ் நம்ம கேட்டாலும் இனிக் கிடைக்காது”
என்றவன், “லவ் யூ தாரா” என்றான்.
அவன் அருகில் வந்தவள் பாதத்தைத் தூக்கி அவனது கன்னத்தில் இதழைப்
பதித்துவிட்டு விலக… விலக… விலக… அவன் விட்டால் தானே. அவனது கைகள்
அவளது இடையை சுற்றி வளைத்திருந்தது. அவளது கைகளில் இருந்த மெஹெந்தியோ அவளின் கைகளை இப்போது உபயோகப்படுத்த முடியாதபடி செய்ய, “விடுடா” என்றாள் அவன் கைகளுக்குள் சிக்கி சிரித்தபடியே.
“லவ் யூ சொல்லு விடறேன்” என்று அவன் கேட்க, “ஐ ஹேட் யூ” என்றாள்.
“என்னைப் பிடிக்காமையாடி இப்ப கன்னத்துல குடுத்த?” என்று சித்தார்த்
புருவுத்தைத் தூக்கி வினவ, “உன்னை பிடிக்கும். ஆனா, லவ் எல்லாம் இல்லியே”
என்று சிரிப்பை அடிக்கியவள் வேறு பக்கம் முகத்தைத் திருப்ப,
“சரி பரவாயில்லை. லவ் யூ சொல்லு” அவன் விடாக்கண்டனாய் கேட்க, “நோ
மீன்ஸ் நோ” என்றாள் சித்தாராவோ.
அவன் ஏதோ கேட்க வர, “சித்துக் கண்ணா” என்று பாட்டி படிகளில் ஏறி வரும்போதே குரல் கொடுத்துக்கொண்டு வருவது கேட்க, “தாத்தா இந்தப் பாட்டியை கிழிவின்னு திட்டறதுல தப்பே இல்ல. இந்தப் பாட்டிதான் எனக்கு வில்லி
போல” என்று அவளை விடுவித்தவன் நகர்ந்து நிற்க, பாட்டியும் தாத்தாவும்
மேலே வந்தனர்.
“சித்தாரா மொட்டை மாடில நின்னு சளி பிடிச்சுக்க போகுது. கீழ போலாம் வா”
என்று சித்தாராவை நேக்காக அழைத்துக்கொண்டு போக, “தாத்தா, உங்க வேலை தானே?” என்று அவரைப் பார்த்து வினவினான்.
“ஹிஹிஹி… குட்டி மேல வந்து பத்து நிமிஷம் ஆகிடுச்சு. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று அவர் சிரிக்க,
“தாத்தா” என்று அவன் பல்லைக் கடிக்க,
“நீ என் ரத்தம் தானே பேரான்டி. அதான் கிழவியை சீக்கிரம் கூட்டிட்டு வந்தேன், நீ
திருவிளையாடல் ஆடறதுக்குள்ள” என்று அவர் பேரனின் தோளில் கை வைத்தபடிச் சொல்ல, “போங்க தாத்தா” என்றவனுக்கு வெட்கம் வேறு வந்தது.
அதன்பிறகு திருமணமும் பெரியோர்களின் ஆசிர்வாதத்தில் அவர்கள் மனம் குளிர நடந்து முடிந்தது. சித்தாராவும் எல்லா சடங்குகளிலும் மனதார ஒரு முகச்சுணக்கமும் இல்லாமல் வலம் வந்துகொண்டிருந்தாள். அன்றைய இரவிற்கு சித்தாராவை சின்மயி தயார் செய்துகொண்டிருக்க, “சின்மயி இங்க வா” என்று தேவி அழைக்க அவள் சென்றாள்.
அக்கா சென்றபின் சும்மா உட்கார்ந்திருந்த சித்தாராவிற்கு ஏதோ சத்தம் கேட்க ஜன்னல் அருகில் எழுந்து சென்றாள். “சரி எதுக்குடி அழறே.விடு” என்று நந்திதாவின் குரல் கேட்க,
“நான் என் லவ்வை சொல்லியும் அவன்…” என்று இழுத்த வர்ஷினி அழுவது கேட்டது.
“சித்தார்த் என்ன சொன்னான்?” நந்திதா வினவ,
“அவன் கண்டிப்பா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டான். யாருக்கும் தெரியாதுனு சொல்லிட்டான்” என்று வர்ஷினி சொல்ல சித்தாரா தன்
முகத்தில் யாரோ வெந்நீரை வாரி இறைத்தது போல உணர்ந்தாள். மீண்டும்
மனம் குரங்காய் மாறியது சித்தாராவிற்கு.
கோபமும் எரிச்சலும் ஒன்றுசேர இருந்தவளை சின்மயி அறைக்குள் தள்ளிவிட்டு நகர சித்தார்த்திடம் பேச வேண்டியதை மனதிற்குள் அசை போட்டபடியே நின்றவளின் முன் தான் நம் ஹீரோ,
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி
வை
மேகம் கொண்டுவா மெத்தை போட்டு
வை
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி
வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல்
வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை
நம்பினேன்
இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு
உணவு..
என்று சொடக்கிட்டு ஆடியபடி வந்து
அவளை சிலையாக உறைய வைத்தான்.
“ஹாப்பி பர்ஸ்ட் நைட்” என்று தட்டில் வைக்கப்பட்டிருந்த அண்ணாச்சி பழத்தை
அவன் நீட்டி, அவளை வரவேற்க அவளது முகமோ எரிமலையாய் வெடித்துக்
கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு? எதுக்கு கோபம்” என்று அவன் அவளது தாடையைப் பற்ற வர,
“ப்ச்” என்று அவனது கையைத் தட்டிவிட்டவள் அவனை நேர்பார்வை பார்த்தாள்.
“எப்ப என்னை கழட்டி விடலாம்னு ஐடியால இருக்க?” என்று அவள் கேட்க,
அதுவரை சிரித்த முகத்துடன் இருந்தவனின முகம் மாறியது.
“என்ன உளறீட்டு இருக்க?” என்றவன்,
“வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கப் போறீயா… இல்ல இரண்டாந்தாரமா…?”
என்று அவள் ஆரம்பிப்பதற்குள், “ஏய்!” என்று உறுமிய சித்தார்த் கையை ஓங்கிவிட்டான். என்ன நினைத்தானோ கண்களை மூடித் திறந்தவன் கையை
இறக்கினான்.
“பைத்தியமாடி நீ” என்று கேட்டான் கோபமாக. “நீதான் என்னை பைத்தியம்
ஆக்கிடுவே போல” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“என்னதான் பிரச்சினை சித்தாரா உனக்கு” என்று வினவினான் பொறுமையாக.
“வர்ஷினி உன்னை லவ் பண்றா தானே. இத்தனை நாள் அவதான் லவ் பண்றா நீ
அவாய்ட் பண்றேன்னு நினைச்சா.. நீயும்” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
“வர்ஷி என்னை லவ் பண்றாளா? குட் ஜோக்” என்றவன் அவளைப் பார்க்க,
“எனக்கு முன்னாடியே தெரியும் சித்தார்த். உனக்கும் அக்காவுக்கும் உறுதி வார்த்தை பேசலாம்னு முடிவு பண்ணப்போ நீயும் ரமணாவும் பேசுனதை நான் கேட்டேன்” என்றாள்.
“என்னனு பேசுனோம்” என்று ஹாயாக பெட்டில் அமர்ந்தவன் கேட்க சித்தாராவிற்கு அவனை மொத்தினாள் என்னவென்று தோன்றியது.
“லவ் பண்றேன்னு சொல்றா மச்சி அப்படின்னு நீ ரமணா அண்ணா கிட்ட சொன்ன” என்று அவள் நின்றுகொண்டே குற்றம் சாட்ட,
“சரி. இன்னொரு தடவை சொல்லு” என்றவனை முறைத்தாள். “லவ் பண்றேன்னு சொல்றா மச்சி” என்ற வாக்கியத்தை மீண்டும் பல்லைக் கடித்துக்கொண்டு சித்தாரா சொல்ல,
“லவ் பண்றேன்னு சொல்றானு சொன்னேன். ஆனா, என்னை லவ் பண்றான்னு சொன்னேனா” என்று சித்தார்த் கேட்க சித்தாராவின் தீயாய் எரிந்துகொண்டிருந்த கோபம் தண்ணீர் ஊற்றியது போல அப்படியே அடங்கியது.
“அப்ப வர்ஷிக்கு நீ ஸாரி செலக்ட் பண்ணது?”
“அவ அந்த கலர் தான் புடிக்கும்டி… ஓ மேடம் இதெல்லாம் கவனிச்சு இருக்கீங்க”
என்று சித்தார்த் கேட்டான்.
“அப்புறம் ஏன்டா மெஹெந்தி டிசைன்ல ‘S’, ‘V’னு போட சொன்னா அவ” என்று
சித்தாரா பாயின்ட்டைப் பிடித்தது போலக் கேட்க,
“மை டியர் பொண்டாட்டி. உன் அண்ணன் ரமணாவோட முழுப்பெயர் ‘ஸ்ரீரமணா’ ” என்று சித்தார்த் சொல்ல சித்தாரா வாயைப் பிளந்தாள்.
“அப்போ” என்று ஆரம்பித்தவளிடம், “ஆமா அவ அவனை தான் லவ் பண்றா”
என்றான்.
“அப்போ அந்த ரெஜிஸ்டர் மேரேஜ்…” என்று அவள் ஆரம்பிக்க, “அவளுக்கும்
ரமணாக்கும். அவ அப்பா எம்எல்ஏ டி. அவரு ஒத்துக்கல ஸோ வந்துட்டா எங்ககிட்ட. கல்யாணம் வெளில கோயில்ல பண்ணா பிரச்சனை ஆகிடும். ஸோ ரெஜிஸ்டர் மேரேஜ்” என்றவன் அவளைப் பார்க்க,
“அப்போ நீங்க விளையாடினப்ப. அவ ரமணாவை பிடிக்காம உன்கிட்ட மாட்டுனது” என்று அவள் மேலும் கேட்க,
“ஐயோ ராமா…..” என்றிழுத்தவன், “அது உன் பிரதர் ரமணா அவளை அக்ஸப்ட்
பண்ணாம ஓவரா சீனைப் போட்டுட்டு சுத்தீட்டு இருந்தான். அதனால அவளுக்கும் ரமணாக்கும் ட்ரெக்கிங் போறதுக்கு முன்னாடி சண்டை. அவளும் விட்டுப்பிடிச்சா. அதனாலதான் ஔட் ஆனாலும் பரவாயில்லைனு அவனைத் தொடமாட்டேன்னு ஔட் ஆனா” என்று சித்தார்த் விளக்கினான்.
“ஓ….” என்று அவள் யோசனையில் மூழ்க, “அடுத்த கேள்வி இருக்கா ராசாத்தி?”
என்று சித்தார்த் வினவ சித்தாராவிற்கு சிரிப்பு வர, “இல்லியே” என்றவள்
நாணிக் கோணினாள்.
“என்கிட்ட பேசாதே” என்றான் கோபமாக.
“ஸாரிடா” என்றவள் அவன் மடியில் அமர்ந்து கைகளை மாலையாகக் அவன்
கழுத்தில் கோர்த்தாள்.
“சந்தேகப்பட்டுட்டீல என்மேல. அவ என் பிரண்ட்டி. என் தங்கச்சி மாதிரி சரியா”
என்றவன் முறைக்க, “அது பொஸசிவ்நஸ் மச்சி” என்றாள்.
“மச்சியா?” என்று அவன் அவளைப் பார்க்க, “யெஸ்” என்றவள் அழகாகத் தலை ஆட்டினாள்.
“இவ்வளவு பண்றியே… லவ் யூ சொல்ல மாட்டியா?” என்று சித்தார்த் அவளை
கைகளால் சுற்றிபடிக் கேட்க,
“ஐ ஹேட் யூ” என்றாள் சிரிப்பு மாறாமல்.
“கொழுப்புடி உனக்கு” என்றவன், “என்னை எப்ப இருந்து மேடம் உங்களுக்குப் பிடிச்சுது?” என்று வினவினான்.
“அது என் அக்கா மாமா கல்யாண விஷயத்துல. அப்புறம், நான் காணாம போயிட்டேன்னு மலை உச்சில கத்திட்டே தேடுனால. அப்போல இருந்து” என்றாள்.
“என்னை எப்ப இருந்து…” என்று அவள் ஆரம்பிக்க,
“ஷ்ஷ்” என்றவன் அவள் கழுத்தில் முத்தாக வந்துகொண்டிருந்த வியர்வை
முத்தைக் கண்டு ஏசியை ஆன் செய்தான். “வேர்க்குதுல” என்றவனிடம், “ஆமாம்”
என்றாள் அவளோ. “நானும் ட்ரெஸ் மாத்திட்டு வரேன். காலைல இருந்து சேரி.
முடியலடா” என்று நகரப்பார்த்தவளை சித்தார்த் தடுக்க, அவளோ திரும்பி
அவனைப் பார்த்தாள்.
அவனது கண்களில் மின்னிய குறும்பையும் வழிந்த தேடலையும் உணர்ந்தவள், “ச்சி. டர்ட்டி பெல்லோடா நீ” என்று அவனை அடித்தவளின் பார்வையும் மாறியது.
“என்னடி பார்வை எல்லாம் பலமா இருக்கு” என்று சித்தார்த் கேட்க, அமைதியாக அவனின் இதழை முற்றுகையிட்டாள். நிமிடங்கள் கழிய அவளிடம் இருந்து பிரிந்த சித்தார்த், “கேடி டி நீ” என்று கேலி செய்ய அவளோ வெட்கத்தில் விலகி எழுந்தாள்.
தானும் எழுந்தவன் அவளருகில் செல்ல பெண்ணவளோ இயல்பாய் எழுந்த
கூச்சத்தில் அவனிடமிருந்து விலகினாள். அறையின் நறுமணமும் தனிமையும்
ஆணவனிற்கு தைரியத்தைத் தர பெண்ணவளை பிடித்தவிட்டான். தயக்கமும் பதட்டமும் எழ நடுக்கத்தில் அவளிருக்க அவளது இடையைப் பற்றியவன் மேலும் முன்னேறி தன் முத்தங்களால் அவளின் கூச்சத்தைப் போக்கி மொத்த உலகையும் மறக்கடிக்கச் செய்தான். அவனின் இம்சையை கையால் அள்ளியவன் படுக்கையில் கிடத்தி, அன்றைய இரவை விடியாத இரவாய் சித்தார்த் அமைக்க சித்தாரா அவனின் கரங்களில் உருக இருவரும் இல்வாழ்க்கையை சிறப்பாய்த் தொடங்கி இருந்தனர்.
அனைத்துப் பிரச்சினைகளும் எளிதாய் முடிய குப்பிட் வெற்றி மதப்பில் மிதந்தான். ஆனால், அவனுடைய எதிரியான விதியோ குப்பிட்டை பார்த்து சிரித்தது.