இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 7

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 7
“என்ன தாரு பேபி தனியா புலம்புர. இந்த கொஞ்சநாளாவே உன் போக்கு சரியில்லையே என்னாச்சு? ‘என அவள் அருகே வந்தவள்
‘வெளில போக வர சொன்னாலும் வரல்ல நீ. ஹாஸ்டல் ரூம்குள்ளேயே அடஞ்சி இருக்க. புன்யா கூட போனா ஒரு சாமான் வாங்க 10 கடைக்கு ஏறுரா முடியலடி. நீ வந்திருந்தா சீக்கிரமே வந்திருக்கலாம்…”
அவள் ஒன்றும் பேசாது இருக்க,”என்னதான் நடந்தது? உடம்புக்கு முடியலையா?”
” ப்ச் அப்டில்லாம் ஒன்னும் இல்லை அனி. மனசுதான் என்னோவோ போல இருக்கு. நமக்கு நம்ம கூடவே இருக்கவங்களுக்கு எதுவோ சொல்ல தெரியலடி கஷ்டமா இருக்கு டி… ” கண்கள் வேறு கலங்கி விட்டது..
“ஹேய்! தாரு என்னாச்சு “என அவளை தோளோடு அணைத்து கொண்டவள்… “டென்ஷன் ஆகாத.எதுன்னாலும் பார்த்துக்கலாம்.வா கீழ பார்க்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம்.” என அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
மனதில் காதலை உணர்ந்தாலும் எதுவோ ஓர் உறுத்தல் அவள் மனதில்….
மாலைக் கதிரவன் இளைப்பாற எண்ணி மேற்கே செல்ல, ஐந்து மணியளவில் வீடு வந்தவன் அந்திக்குளியல் ஒன்றை போட்டு ஷார்ட்ஸ் ஸ்லீவ்லெஸ் டீ ஷர்ட் சகிதம் கையில் அன்னை தந்த காபியுடன் விஜய் அவனது அறை பெல்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்… மேலிருந்து தோட்டத்தினை பார்த்தவாறு இருந்தவன் மாலை கடவுளுக்கு வைக்க பூக்கள் பறிக்கும் அன்னையையும் அவரது கையில் இருந்த கூடையும் பார்த்தவன். அன்று கிணற்றடியே பூக்கள் சிதற பூக்களின் ராணியவள் அமர்ந்திருந்த ஞாபகம் வந்தது.. அத்தோடு மஞ்சள் நிற துணிக்கொண்டு முகம் மறைத்த மங்கையவள் கண்கள் சொன்ன பாஷை ஞாபகம் வந்தது.அவள் ஷாலை விலக்கிய பின்பு வைரக்கல் மின்னிய கூர் மூக்கும் அதன் கீழே செவ்வண்ண ஆரஞ்சு சுளை இதழ்களும் கண் முன்னே வந்து செல்ல ஓர் நொடி உடல் சிலிர்க்க நெஞ்சோரம் ஓர் பரவசம்.
‘ப்பா முடியலடா. பிரம்மன் அவளை செதுக்க ரொம்ப கஷடப்பட்டிருப்பார். ‘ என்று எண்ணியவன்.என்றும் இல்லாதவாறு இந்த சில நாட்களாக அவள் ஞாபகம் வருதே…. என்னாச்சு.அவளும் நம்மள நினைப்பாளா. ஹ்ம்ம் டேய் ரெண்டோ மூனோ முறைதான் பார்த்திருக்க இதுல அவ உன்னை பார்க்கும் சந்தர்ப்பம் எல்லாம் மயக்கம் வேறு போட்டு விழுறா இதுல உன்னை எங்க நினைக்க.’
‘டேய் தருண் மச்சான் உன் தங்கச்சிய என் கண்ணுல இருந்து பாதுகாத்துக்கொள்ளுடா. பிரண்டு தங்கச்சி எனக்கும் தங்கச்சின்னெலாம் சொல்லமாட்டேன்டா. பெஸ்ட் பிரென்ட் மச்சானா வந்தா எவனுக்குத்தான் கசக்கும்.’
சிரித்த்துக்கொண்டவன்.மனதுக்கு எதுவோ ஒன்று நெருட, யேனோ மனம் கஷ்டமாக உணர்ந்தது.ஏனோ?
‘ஹ்ம்ம் பார்க்கலாம்.மனம் உன்னை தேடுதான்னு.நீ எனக்கானவள்னா என் நெஞ்சை விட்டு போக மாட்டடி.’ என்றவன் எழுந்து உள்ளே சென்றான்.
இருவரும் ஒருவரை யொருவர் நினைத்திருக்க இவர்கள் இடையே உள்ள மற்றைய இருவரது காதலால் இவர்களது காதலின் நிலை?
நேற்று இரவு தருண் விஜயின் வீட்டிற்கு வந்திருந்தான்.அனைவரும் வற்புறுத்தி தங்க வைத்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக இருவரும் நேரம் செலவழித்தனர்.பிரபாவை வீடியோ கால் பேசி அவனையும் தம்முடன் இணைத்துக்கொண்டனர்.இவ்வாறாக இவர்களது இரவு கழிய,விஜயின் வீட்டில் காலை உணவுக்கு அனைவரும் அமர்ந்திருக்க, ஹரியின் மனைவி மட்டும் அவர்களது மூன்று மாத ஹரிணி குட்டியை வைத்துக்கொண்டு அறையில் இருந்தாள். நிவியின் அப்பாவும் ஸ்டிக் வைத்து நடக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்து இருந்தார். தினமும் ஷோரூம் சென்று வருவார்.
விஜய் வள்ளிம்மாவுக்கு பக்கம் அமர்ந்திருக்க அவனை அடுத்து தருண் அமர, நிவி அவர்களுக்கு எதிரில் அருணாவுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.
சகஜமான பேச்சு வார்த்தை என்றும் அந்த உணவு மேசையில் நடைப்பெறும்.
“நிவிம்மா உன்னுடைய லெட்டர் வந்து விடுமே, என்ன செய்யலாம்னு இருக்க. கனடா போனா திரும்ப வர டூ இயர்ஸ் ஆகலாம்.கல்யாணம் பண்ணிட்டேன்னா புருஷன் கூடவே போகலாம்.நாமலும் சந்தோஷமா உன்னை அனுப்பி வைக்கலாம். இல்லன்னா கஷ்டம் டா.” என ராஜ் அவளிடம் கேற்க,
(நேற்று இரவு ராஜ்ஜிடம் நிவியின் அப்பா கேட்குமாறு கூறியிருந்தார். விளையாட்டுக்கேனும் திருமணம் பற்றி கதைக்கும் அப்பேச்சை தவிர்ப்பாள் )
“மாமா நான் டூ இயர்ஸ்கு அப்புறம் பண்ணிக்கிறேன்.இப்போ அதுக்கென்ன அவசரம்.” எனவும்
“இப்போவே 23 முடிய போகுது உங்க அண்ணாக்கு 25ல முடிச்சாச்சு இதுக்கு மேலயும் லேட்டா பண்ண வேணாம் நிவிம்மா.” “மாப்பிளையும் ரெடியா இருக்கப்ப உனக்கு ஏன் டைம் கேக்குற?” என வள்ளிப்பாட்டி கேட்க ,
நிவியின் அம்மாவுக்கும் அவள் வெளிநாடு போவது பிடிக்காமல்,
“கல்யாணம் பண்ணலன்னா நீ எங்கயும் போக வேணாம் வீட்ல இரு. பெண் பிள்ளைகள் தொழில் செய்யணும்னு ஒன்றும் இல்லை. நானும் அண்ணியும் வேலைக்கு போனோமா? அறிவுக்காக படித்தோமா. கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் குழந்தைனு வாழ வழிப்பாரு.” என அவர் பங்கிற்கும் கூறிவிட,
“என்ன பேசுற நீ? ‘
என ராஜ் தனது தங்கையை அடக்கியவர்,
‘எந்த காலத்தில் இருக்க மீனா, அறிவுக்காக மட்டுமே படிச்சு என்ன பண்ண.இந்த காலத்துல பெண்கள் எவ்வளவோ சாதிகிறாங்க. நாமளே நம்ம பொண்ணுக்கு அந்த வாய்ப்பை குடுக்க வில்லை எனில் அவளை இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சு என்ன அர்த்தம் சொல்லு.”
“அப்படி இல்லை அண்ணா…”
என மீனா எதோ கூற.
நிவியின் முகம் வாடுவதை கவனித்த விஜய் அவ்விடம் சகஜம் ஆக்கும் பொருட்டு,
“அப்பா, அத்தம்மா அவளுடைய லைப் அவதான் முடிவெடுக்கணும். அவ போறதுன்னா போகட்டும் வந்து பார்த்துக்கலாம்.டூ இயர் தானே.” என விஜய் கூறினான்.
இப்போ தானே படிப்பு முடஞ்சிருக்கு. அவளுக்கு அவளுடைய விருப்பத்தை செய்ய விடுங்க.
ஹரி எப்பொழுதுமே சபையில் அப்பா, மாமா முன்னாடி பேச மாட்டான். என்றாலும் அமைதியாக இருப்பவனும் அல்ல. இது நிவியின் வாழ்க்கை அவளே பேசட்டும் என இருந்தான்.அதிகமாக நிவியின் விடயங்களில் தலையிடவும் மாட்டான். விஜய் வீட்டில் எல்லோருடனும் ஒன்று போல பேசுவான். ஒருவருக்கொருவர் இடையே அவர்களை புரிந்து நடப்பான்.
ஆனால் விஜய்க்கு இந்த கல்யாண பேச்சு அவளது எதிர்கால விருப்பங்களை தடை செய்வதாக அமையவுமே இடையில் பேசி கதையை திருப்ப முனைந்தான்.
நிவிதா யாராக இருந்தாலும் அவர்களது முகத்துக்கே பட்டென்று பேசிவிடுவாள். அவளது தேவை எவ்வகையிலும் செய்துகொள்வாள். அவளது தேவை நிறை வேற அவளது மனதையும் மறைத்து நடக்கிறாள்.
விஜய்யுடன் மட்டுமே அவளது அணைத்து செயல்களும் அடங்கி போகும். சில சந்தர்பங்களில் அவனைக்கொண்டே அவளது தேவைகளை செய்துக்கொள்வாள். விஜய் அவளது குணம் புரிந்து அதனை பெரிதாக நினைப்பதில்லை. வீட்டில் ஒற்றை பெண் பிள்ளை என்பதால் செல்லம்.
வீட்டில் அவனுக்கும் அவளுக்குமே முடிச்சு போட விரும்ப அவனுக்கு அதில் துளி கூட இஷ்டம் இல்லை, எனினும் நிவி இது வரையில் அந்த பேச்சு வரும் போது அதனை தவிர்த்தாலும் எதிர்த்து பேசாதது அவனுக்கு மனதில் ‘அப்படி ஒரு எண்ணம் இருக்குமோ?’ என தெரிய வேண்டி இருந்தது. அத்தோடு, வீட்டினரை நோகடிக்கும் படி என்றுமே அவன் பேசுவதில்லை. அவளது திருமண வாழ்வின் விருப்பமும் வெளி வரட்டும் என நினைத்தான்.
அவனது மனதிலும் கடந்த இரண்டு வரங்களாக மனதில் சொல்லமுடியா உணர்வொன்று இருப்பது வேறு அவன் மனதை குழப்பி இருக்க,
நிவி தருணை பார்க்கும் பார்வையில் மாற்றதினை வேறு உணர்ந்திருந்தாலும் அவனுக்கு அதை என்ன வென்று நிவியிடம் கேட்க முடியவில்லை. நிவியின் தருண் மீதான காதல் விளங்கத்தான் செய்தது. அவளிடம் யாருக்காக பேசினாலும் காதலுக்காக யாரிடமும் பேசக்கூடாது அவரவர் பேசிக்கொள்ளட்டும் என இருந்தான்.
தன் நண்பனிடம் அவன் மனம் தெரியாது பேச விரும்பவும் இல்லை.இதுவரையில் தருணின் பார்வையில் ஒரு மாற்றத்தினையும் கண்டதும் இல்லை.
(டேய் தருண் அவ்வளவு அழகா பொண்ண பார்த்திருக்க.)
“ப்பா ரெண்டு வருஷம் தானேப்பா, அவளுடைய ஆசைக்கு கல்யாணம் ஒரு தடையா இருக்க வேணாம் பா. அவ போகட்டும், வந்தப்ரம் பார்க்கலாம்.” என்றான்.
“அதை தானே டா நானும் சொல்றேன், அவ போகட்டும்.அவளுக்கு நீ தொழில் செய்ய தடையா சொல்லப்போற.” என ராஜ் கூற,
” நா எங்கப்பா சொல்லப்போறேன்? ” என விஜய் கூற,
” அப்போ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க. ” என்றார்.
“அப்பா நா எப்டி நிவியை? கிண்டல் பண்ணாதீங்க. சின்னதுல இருந்து தொங்குனது பத்தாதுன்னு காலம் பூரா இவளை கழுத்துல தொங்க போட்டுட்டு சுத்தணுமா? ஆள விடுங்க. ரெண்டு வருஷம் தொல்லை விட்டதுன்னு இருக்க பார்த்தால் நீங்க அவளையே கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க”
என அப்பேச்சை விளையாட்டாகவே பேசி மாற்ற நினைத்தாலும் நிவியை பார்த்தவன்,
‘ஓபன் யூர் மைண்ட் நிவி.’ என மனதால் கூறிக்கொண்டான்.
ஆனால் நிவியோ வேறு நினைத்தாள்.
“ஏன் அத்து உனக்கு நான் தொல்லையா?”
அவன் விளையாட இவளோ எல்லோரினது கல்யாண கதையிலும் கடுப்பில் இருந்தவள் ,அத்தோடு இவர்கள் பேச்சை தருண் வேறு வேடிக்கை பார்ப்பதில் கோபம் வந்தவள், காதலனும் காதல் கூற மறுக்க விஜய் விளையாட்டாக கூறியது இவ்வளவு நாள் என்னுடன் இருந்தவனும் என்னை மறுப்பதா எனும் எண்ணம் வேறு மனதில் தோன்றி விட,
“அத்தான் சின்னதுல இருந்தே என்ன புரிஜிக்கிட்டு பேசுறேன்னு பார்த்தா நான் உனக்கு தொல்லைனு நினச்சு சகிச்சுக்கிட்டு இருந்து இப்போ விரட்டி விட பாக்குறியா? “
“எப்படிகரெக்டா கண்டுபிடிச்ச? அதற்கும் விஜய் அவளை கலாய்க்க,
ஆனால் விளையாட்டையும் உண்மை என நினைத்த நிவி
“பரவால்ல மாமா, வீட்ல என்ன முடிவு பண்றிகளோ எனக்கும் ஓகே, அத்துவ கல்யாணம் பண்ணின பிறகே நா கனடா போறேன்.’
‘ என்றவள்,அதுக்கப்புறம் அங்க போகாதே இங்கே போகாதன்னு என் விஷயத்துல தடை போடவேணாம்.’
ஒரு கனம் அங்கு தருண் இருப்பதை மறந்தும் விட்டாள் எனலாம். ‘சிறு வயது முதல் என்னுடன் ஒன்றாக இருந்தவனே என்னை மறுக்கிறான் இவனெல்லாம் எம்மாத்திரம்’ என நினைத்தவள்.கோபம் அவள் கண்ணை மறைக்க பிறந்தது முதல் உடன் இருந்தவன் உறவையே புரிந்துக்கொள்ளாது பேசி அவன் மனதை நோகடிக்க, விஜய் அமர்ந்த பக்கம் பார்க்காது மாடிப்படி ஏற கதிரையை விட்டு எழ …
அந்த நேரமும் கோவத்தினாலே வார்த்தை விடுகிறாள் என புரிந்தவன்,
வீட்டில் உள்ளவர்கள் அதனை உண்மையென நம்புவார்களே என்பதனையும் உணர்ந்த விஜய்,
“நிவி என்ன பேசுற நீ. என்னால முடியாது.
நிவி எதுல விளையாட்றதுன்னு இல்ல உனக்கு .
உனக்கு ஜாப் பண்ணணும்ன்றதுக்காக என்னை மேரேஜ் பண்ணிக்கணும்க்ரியா?
உன் ஈகோவினால் உன் வாழ்க்கையை நீ கேள்விக்குறியாக மாற்ற பாக்குற.”
நிவி அமைதியாக இருக்கவும்.
“ஸ்பீக் அவுட் நிவி.”என, நிவி அவனை பார்த்தாலும் வாய் திறக்கவில்லை.
நிவியின் அன்னை மீனாவோ,
“அவளை என்ன கேக்கிற ஸ்ரீ? வீட்ல நம்ம எல்லாருக்குமே அதுதான் விருப்பம். நீ என்ன முடியாதுன்னு சொல்ற.சின்னதுல இருந்தே நீங்க ஒண்ணா தானே இருக்கீங்க? அவளுக்கென்னடா குறை, உனக்கு பொருத்தமா தானே இருக்கா, அப்பாடா பிஸ்னஸ் பண்றோம்னு பெரியவனாகிட்டியா?”
என மீனா கொஞ்சம் கோபமாகவே கேட்க சங்கடமாக உணர்ந்தவன் தாயை பார்த்தாலும். இவ்வளவு நாள் அளந்து பேசும் மீனா கொஞ்சம் அதிகமாக பேசவுமே அருணாவும் அமைதியாகி விட்டார்.
கணவனின் தங்கை அவர் மணம் முடித்து வந்த புதிதில் அவரை கொஞ்சம் இலக்கரமாகவே பார்ப்பார். நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர் என்பதால்.பிள்ளைகள் கொஞ்சம் வளர்த்ததன் பின்னரே அவரது பேச்சு நின்று போனது எனலாம். எனவே அருணா அவரோடு அளவாகவே நடந்துகொள்வார். அத்தை அன்னையாக இருக்க மீனாவின் பேச்சுக்கள் அவ்வளவாக எடுத்துக்கொள்ள மாட்டார்..
” அத்த …’ என எதுவோ விஜய் கூற வர வள்ளிப்பாட்டி,
“ராஜ் நிவி போறதுக்கு இன்னும் டைம் இருக்குல்ல, பாக்கலாம் விடு.” என அப்பேச்சினை அத்தோடு நிறுத்துமாறு கூறியவர். ஸ்ரீ யின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டார்.
இவர்கள் குடும்பம் இவர்களை இணைக்க நினைக்க விஜய், நிவி உறவும் பார்க்க அதற்கு ஒத்ததாகவே இருக்க தருணும் அப்படியே ஓர் குழப்பதோடு நம்பினான்.
விதியோ வேறொன்று நினைத்தது.
“உன்கிட்ட நா இதை எதிர் பார்க்கல நிவி. இப்படி சுயநலமாய் இருக்காத.உன் லைப் நல்லதா அமையணும்னா அதுலயும் ஈகோ பார்க்காத. பேசாம எதுவும் முடிவுக்கு வராது. ஸ்பீக் அவுட் நிவி. “
“ஐ ஸ்போக் அவுட் அத்து.”
தருணின் மனமோ நடுக்கடலில் தத்தளித்தது.
“பசங்களா என்ன இது, ரெண்டு பேருடைய சந்தோஷம் தான் நமக்கு முக்கியம். இந்த கல்யாணம் நடந்தா நாம சந்தோஷப்படுவோம். சோ உங்க இஷ்டம். இதுனால யாரும் மனம் நொந்துகொள்ள முடியாது, யோசிச்சு பண்ணுங்க.” என அத்தோடு ராஜ்ஜூம் எழுந்துக்கொள்ள
வள்ளிபாட்டி அப்பேச்சினை மாற்றும் பொருட்டு,
ஆமா தருண் நீ எப்போ கட்டிக்க போர?
தொழிலும் நல்ல படி போகுது தங்கையும் படிக்கிறா. நீ பண்ணிட்டா அப்புறம் தங்கைக்கு நல்லா வரன் பார்க்கலாமே. ” என கூற
மாடி ஏறாது முன்னறைக்கு வந்து அமர்ந்தவள் காதுகளில் இதுவும் கேட்டு விட,
“வீட்லயும் அம்மா கேட்டுக்கொண்டு தான் இருக்காங்க பாட்டி பார்க்கலாம்.”என அப்போதைக்கு சமாளித்து வைக்க கூறியவன் அதுவே அவனுக்கு வினையாகும் என நினைக்க வில்லை.