sippayinmanaivi 11

காதலும் பெண்ணே! காமமும் பெண்ணே!

கால தூண்கள் இருக்கும் சிறு கோட்டையின் உள்ளே அடுத்த சில ஆண்டுகளை தீர்மானம் செய்யக்கூடிய  துணிவான முடிவை முகிலன் எடுப்பானோ இல்லையோ என்ற குழப்பத்தில் மலையமான் இருந்தான்.

‘நன்றாக எண்ணிப்பார், உன் வீரமும் ஆற்றலும் மலைநாடுகளை உன் வசம் கட்டிபோட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டால் நாகர் நாட்டின் கிழக்கில் பெரும் பகுதியான பெருங்கலூர் உன் வசம் கிழக்கு கடல் உன் கட்டளைக்கு காத்திருக்கும் ‘ மலையமான் முகிலனை ஒப்புவிக்க முயற்சி செய்தான்.

‘தோழா! மலைநாடுகள் சித்திரை அரசியின் வசம் தான் இன்றும் என்றும். மலைநாடுகளின் செழிப்பிற்கு எங்கள் மக்கள் அனைவருமே காரணம், நான் வெறும் மலைக்குறவன்’  முகிலன் சொன்னான்.

‘தோழா அதற்காக ஒரு பெண்ணை தளபதியாக செய்வது…’ மலையமான் குழைந்து பேசினான் முகிலனின் மனம் புண்பட்டுவிடக்கூடாதென்று.

‘ஏன் ? பெண்ணாய் இருக்கக்கூடாதா?’ முகிலன் சிறிது கோவத்துடனே கேட்டான்.

‘தோழா! என்னைத் தவறாக எண்ண வேண்டாம். மலைநாடுகள், இருள்காடு மற்றும் தெற்கே இருக்கும் வேலன்காடு மட்டும் தான் இன்னும் பெண்களின் ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது, உலகம் எங்கோ செல்கிறது நீங்கள் இன்னும் பழமையை பிடித்து கொண்டிருக்கிறீர்கள்’ மலையமான் சொன்னான்.

‘இல்லை, நகரங்கள் பெண்களை மறுக்கிறது, மலைகளும் காடுகளும் அல்ல.  பழமை என்பது மாற்றமில்லாத செய்கையை செய்யும் போது அறிவு வளராமை. ஆனால் மாற்றமில்லாத செய்கையின் மூலம் வளர்ச்சியே என்றால் அது எப்படி பழமையாகும்; அது பயிற்சி’  முகிலன் சொன்னான்.

‘இருந்தாலும் ஒரு பெண்ணை தளபதியாக ஏற்கும் பொருமை பெருங்கலூர் தலைநகரில் இல்லை இதனால் என் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம்’ மலையமான் சொன்னான்.

‘பெண் என்றால் என்ன? ரத்தினமணி அரசியை எப்படி பார்க்கிறாய்’ முகிலன் கேட்டான்.

‘அவள் என் மனைவி, என் பிள்ளைகளின் தாய், நாட்டு மக்கள் நலன் காக்கும் அரசனை பார்த்துக்கொள்வது அரசியின் வேலை. ஆணின் காதலும் காமமும் பசியும் தீர்க்கவே பெண்கள்.’ மலையமான் சொல்லி முடித்தான்.

‘காதலும் பெண்ணே! காமமும் பெண்ணே! என்கிறாய்’ முகிலன் கேட்டான்.

‘ஆம் ஆணின் உடம்பிலிருந்து பெண் உருவாக்கப்பட்டாள் என்று புது கடவுளை வணங்கும் சித்தர்கள் சொல்கிறார்கள். பெண்ணிடம் இருந்து துறப்பதே துறவு என்கிறார்கள் வடக்கிலிருந்து வரும் துறவிகள்’ மலையமான் சொன்னான்.

‘புது கடவுள்கள் ! யார் இவர்கள் ? நாம் காலந்தோறும் வணங்குபவை பெண்களே அதுவும் நம்மோடு வாழ்ந்தவர்களே! உன் குலம் காக்கும் தெய்வம் யார்? நிச்சயம் பெண்ணாகத் தான் இருக்கும். ‘ முகிலன் உரக்கப் பேசி தொடர்ந்தான்.

‘காமும் பெண்ணே! காதலும் பெண்ணே!
ஆற்றலும் பெண்ணே! அறிவும் பெண்ணே!
ஆவையும் பெண்ணே! யாவையும் பெண்ணே!

கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது தான் கேள்வியே தவிர முட்டை போட்டது கோழியா சேவலா என்பது இல்லை’ முகிலன் சொல்லிமுடித்தான்.

‘தோழா, இந்த ஆண் பெண் சண்டை எதற்கு, நீ தளபதியாக பொறுப்பேற்றுக்கொள் இல்லை என்றால் உன்னை புலிகாடு சிறைக்கு அனுப்பிவிடுவேன்’ மலையமான் வேடிக்கையாக சொன்னான். முகிலன் சொன்னது புரிந்தாலும் ஆண் மனம் ஏற்கவில்லை.

‘சரி நான் தளபதி ஆகிறேன் ஆனால் ஒரு கட்டுப்பாடு!’ முகிலன் சொன்னான்.

‘என்ன தோழா?’ மலையமான் கேட்டான்.

‘உன் அருகில் தலைவர்களுக்கான இருக்கைகளிலும் அவை இருக்கைகளிலும் எங்கள் அரசியும் என் மனைவியுமான சித்திரையே எங்கள் சார்பாக இருப்பாள்’ முகிலன் சொன்னான். மலையமான் எதுவும் பேசாமல் ஏதோ எண்ணிக்கொண்டிருந்தான்.

‘சரி செய்கிறேன், வரப்போகும் ஆபத்தை தளபதியாக  நீ தான் தடுக்க வேண்டும்’ மலையமான் சொல்லி அணைத்துக் கொண்டான்.

****

‘ரத்தினமணி, இன்று முகிலன் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும்! பெண்ணே பெண்ணே என்று பெண்களை புகழ்ந்து விட்டான்’ மலையமான் சொன்னான்.

‘அதனால் என்ன? பெண்ணே சிறப்பு. வீட்டை பார்த்துக்கொள்வதும் சமைப்பதும் ஆண்கள் செய்ய முடியுமா ?’ ரத்தினமணி சொன்னாள் சிரித்துக் கொண்டே.

‘சித்திரை அவை இருக்கையில் மலைநாடுகள் சார்பாக இருக்கவேண்டும் என்கிறான் முகிலன்’ மலையமான் சொன்னான்.

‘வேடிக்கை, சிப்பாயின் மனைவிக்கு தலைவர் இருக்கையா?’ ரத்தினமணி சிரித்தாள்.

‘அப்பொழுதுதான் தளபதி ஆவேன் என்கிறான் முகிலன், அவனும் அவன் இருநூறு வீரர்களும் மிக தேவை. அவர்களை போரில் பார்க்கவேண்டும்’ மலையமான் சிலாகித்தான்.

‘தளபதியாக வேண்டாம், நீங்கள் வேறு வீரரை பாருங்கள்’ ரத்தினமணி சொன்னாள்.

‘அரசு முடிவுகளை நீ எடுக்காதே’ மலையமான் கண்டிப்பாக சொன்னான். எண்ணத்தில் உறைந்தான்.

****

சித்திரை தேறலுடன் படுத்திருந்தாள். கட்டில் பக்கத்தில் பல விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. மெல்லிய ஆடை அணிந்திருந்தாள், கூந்தல் கட்டிலின்-தலைக்கு பின் பக்கம் படர்த்தி தலையை அதன் மேல் சாய்த்திருந்தாள். கீழ் ஆடை வளைந்து வளைந்து இடை முதல் துடை வரை நீண்டிருந்தது. முகிலன் அறைக்குள் வந்தான், சித்திரை புன்னகைத்தாள். இந்த புன்னகை எதற்கு என்றுணர்ந்தான் முகிலன் சிரித்த முகத்துடன் மேல் ஆடை நீக்கி கட்டிலின் இடது பக்கத்தில் ஏறி வலதுபக்கமாக இருந்த சித்திரையை அணைத்தான். நெத்தியிலிருந்து உதடுகள் வரை விரலால் மெல்ல தீண்டினான், இன்னொரு கை சித்திரையின் மெல்லிய வயிறை தடவிக்கொண்டிருந்தது.

‘என்ன வீரனே, ஒவ்வொரு முறையும் உன்னை முரடனாக மாற்ற நான் பாடுபடுகிறேன்’ சித்திரை திரும்பி முன் பக்கமாக அணைத்தவாறு சொன்னாள். முகிலனின் கையை சித்திரை அவளது பின் பக்கம் வைத்தாள். கீழ் ஆடை நீக்கியவாறு முகிலனின் கை மேலும் கீழிறங்கியது. கொஞ்சம் முரட்டுத் தனமாக அழுத்த மேலும் இறுக்கமாக அணைத்தாள். முகிலனின் முதுகில் அழுத்தம் கொடுத்து அவளின் மேல் முகிலன் வருமாறு திருப்பினாள். அவளின் கால்களுக்கிடையில் முகிலன் துடைகள் உரசி லேசாக சூடேறியது. கட்டிலில் விரித்திருந்த மெத்தை குளிர் காற்றினால் சில்லென இருந்தது. அதன் மேல் படுத்திருந்த சித்திரை உடல் குளிரடைதிருந்தது. முகிலனின் உடல் வெப்பம் சித்திரைக்கு இனிமையாக இருந்தது. உடல்கள் மேலும் கீழும் அந்த மெத்தையின் மேல் அசைந்து கொண்டிருந்தது. சித்திரை முகிலனின் முதுகை முரட்டுத்தனமாக கை சென்ற இடமெல்லாம் தீண்டிக்கொண்டிருந்தாள். சித்திரையின் உடல் சிறு நடுக்கமடைந்தது நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது சித்திரையின் உடல் இறுகியது கடினமாக முகிலன் உடல் மேல் காற்று புகா அளவு இடித்துக்கொண்டிருந்தது சிறிது நேரத்தில் தளர்ந்து பின்வாங்கினாள். முகிலன் அவசரப் படுத்தி சித்திரையை அவன் முன் நிற்க வைத்தான், அவளின் இடையை பிடித்து முன்னும் பின்னும் அசைத்தான். வேகமெடுத்தான் மேலும் மேலும் வேகமானது. முகிலனின் உடல் தளர்ந்தது. இருவரும் அணைத்து படுத்திருந்தனர்.

‘காமும் பெண்ணே! காதலும் பெண்ணே!
ஆற்றலும் பெண்ணே! அறிவும் பெண்ணே!
ஆவையும் பெண்ணே! யாவையும் பெண்ணே!’ முகிலன் பாடிக்கொண்டே காலதூண்களை பற்றியும் அங்கு நடந்தவை பற்றியும் சித்திரையிடம் சொன்னான்.