நேச தொற்று-8b
நேச தொற்று-8b
” எருமை மாடு… எருமை மாடு… “
“யார் என்னை ரெண்டு தடவை கூப்பிட்டது”
“அட ஆதி! எமோஷனை குறை. எமோஷனை குறை. உன்னை எருமைனு திட்டல… நான் இந்த லேப்டாப்பை தான் சொன்னேன்… ” என்றாள் வொர்க் ஆகாத லாட்டாப்பை சுட்டிக் காட்டியபடி.
“ஏன் பாவம் அதை திட்டுற. “
“ரொம்ப hang ஆகி என் உசுரை வாங்குது ஆதி. “
“அதை என் கிட்டே தா… என்னனு பார்க்கிறேன் ஆரு.”
“அதை வேற ஏன் கையிலே வேற வாங்கி என்னனு பார்க்குற ஆதி? இங்கே இருந்தே பாரு. அது வேற எதுவும் இல்லை லேப்டாப் தான்”
“ஆரு நீ நிதானமா இல்லை. உன் வாயிலே நல்ல ஜோக் வரல. முதலிலே நல்லா காமெடி வரா மாதிரி பேசு. அப்புறமா வந்து ஜோக் சொல்லு. “
“என்ன அஞ்சான் பட டயலாக்கா? “
“இல்லை அஞ்சாதே பட டயலாக். கேள்வியை பாரு… அட அந்த லாப்டாப்பை என் கிட்டே கொடு. நான் சரி பண்ணித் தரேன்”
“ஆதி அப்போ நீ சிஸ்டம் மெக்கானிக்கா?” என வியப்புடன் கேட்டபடி தன் லேப்டாப்பை அவனின் முன்பு நீட்டினாள்.
“ம் ஆமாம் ஆரு” என்று சொல்லிவிட்டு அவள் லேப்டாப்பை எடுத்து மும்முரமாக ஏதேதோ செய்து கொண்டு இருந்தவனையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள் இவள்.
லேசாக தொண்டையை கணைத்தவன் சின்ன சிரிப்போடு சொன்னான், ” யாரோ என்னையே சைட் அடிக்கிறா மாதிரி இருக்கே… ” என்று
“அட நினைப்பு தான். சைட் அடிக்கிறா மாதிரியா உன் மூஞ்சு இருக்கு. நான் உன்னை பார்க்கல. நீ லேப்டாப்பை சரி பண்றதை தான் பார்த்துட்டு இருக்கேன். “
“ஓ சரி சரி. ” என்று சொல்லி மடிக்கணினியின் மீது கவனம் செலுத்தியவனை மீண்டும் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ஆதி எனக்கு ஒரு டவுட்”
“கேளு ஆரு. “
“இல்லை என்னை பொண்ணு பார்க்குறதுக்காக ஏன் சிங்கப்பூர்ல இருந்து இவ்வளவு தூரம் வந்தே?” என்றாள் வெகுநாள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் நோக்கோடு.
“ஏன்னு தெரிஞ்சுக்கணுமா? “
“ம் ஆமாம். “
“இதுக்காக தான் வந்தேன். ” என்று அவள் நீள முடியை சுட்டி காண்பித்தான்.
“என்னது இந்த முடிக்காகவா?”
“ஆமாம் நீ நம்புலனாலும் அதான் நிசம். “
“ஆனால் ஆதி, இந்த முடியைப் பார்க்கவா சிங்கப்பூர்ல இருந்து கொச்சி வரை வந்தே? ஏன் எதுக்காக? “
“இதான் பொண்ணுனு சொல்லி அம்மா உன் போட்டா காமிச்சாங்களா… நான் உன்னை பார்க்கும் போது உன் முடி என் கண்ணை உறுத்துச்சு. அதான் நிஜ முடியா இல்லை சவுரி முடியானு நேர்ல இழுத்துப் பார்த்து confirm பண்ணிக்க வந்தேன்.” என்று சொல்ல அவளது நீட்டு முடியை எடுத்து முன்னே போட்டுக் கொண்டாள்.
“ஆமாம் இதை செக் பண்ண தானே வந்த. ஆனால் ஏன் வந்ததுல இருந்து என் முடியை நீ தொட்டே பார்க்கல?”
“ஆரு நான் ஒரு உண்மையை சொல்வேன். என்னை நீ தூக்கிப் போட்டு மிதிக்க மாட்டியே?”
“அது நீ சொல்ற உண்மையை பொறுத்து அடியோட வீரியம் இருக்கும்.”
“அப்போ பலமா தான் அடி விழும் போல இருக்கே… இரு நான் போய் சாப்பிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி எழுந்தவனின் சட்டைக்கலரைப் பற்றி இழுத்து நிறுத்தினாள்.
“உண்மையை சொல்லிட்டு போடா… எப்போ என் முடியை தொட்டு பார்த்தே?”
“அது அன்னைக்கு பேய்க்கனவு கண்டு உன் பெட்ல வந்து படுத்தேன் இல்லை. அப்போ தான் நைசா தொட்டுப் பார்த்தேன்” என்று சொல்லியவன் சட்டென கண்களை மூடிக் கொண்டு அடிவாங்குவதற்கு தயாராய் நின்றான்.
ஆனால் அவளோ ஓ அப்படியா சரி என்று இயல்பாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள். இவனுக்கோ ஆச்சர்யம்!
வேகமாய் அவள் முன்னே ஓடி சென்று நின்றவன், “ஆரு என்ன ஆச்சு உனக்கு? நல்லா தானே இருக்கே… உடம்பு சரி இல்லையா? சரியா சாப்பிடலையா? அடிக்க தெம்பு இல்லையா?” என பலவித கேள்விகளைக் கேட்க அவனைப் பார்த்து சிரித்தேவிட்டாள் அவள்.
“ஆரு நீ இந்நேரத்துக்கு என்னை தூக்கிப் போட்டு மிதிச்சு இருக்கணும். ஆனால் ஏன் இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கே. நீ சரியா இல்லை ஆரு. உனக்கு ஏதோ ஆகிடுச்சு. “
“இப்போ என்ன டா உன்னை அடிக்கணும் அவ்வளவு தானே கிட்டே வா” என்று அவள் கறாராய் சொன்னாலும் அந்த குரலில் இனிமை இழையோடி தான் இருந்தது.
அதை தெளிவாக கண்டு கொண்டான் அவன்.
” ஹா ஹா இது அதற்கான அறிகுறி தானே… ஐயோ ஆதி ரூட்டு மாறுதுடா. ரூட்டு மாறுது. இனி உன் காட்டுல மழை தான். ” என அவன் மைண்ட்வாய்ஸ் என நினைத்து கொஞ்சம் சத்தமாகவே பேசிவிட
“இங்கே வா ரூட்டு எப்படி மாறுதுனு நான் காட்டுறேன் ஆதி” என்று அவள் கைகளை முடுக்கிக் கொண்டு அவனை நோக்கி வந்த நேரம் ஆபத்பாண்டவனாய் காய்கறி கொண்டு வருபவரின் ஒலி கீழ் இருந்து கேட்டது.
“ஆரு மா… நான் போய் காய்கறி வாங்கிட்டு வந்துடுறேன். ” என்று சொல்லி தப்பித்தவன் கதவைத் திறக்க போனான்.
கதவிற்கு வெளியே ஆதவ்வும் தர்ஷயும் நின்று கொண்டு இருந்தனர்.
“இங்கே பாரு, தர்ஷி. நேத்து நடந்தது ஆக்ஸிடென்ட்டா நடந்தது. அதை அப்படியே மறந்துடணும் சரியா. கனவுல கூட நினைச்சுப் பார்க்கக்கூடாது. ” என்று தர்ஷினியிடம் அந்த நிகழ்வை மறக்க சொல்லிக் கொண்டு இருந்தான் ஆதவ்.
“ஆமாம் நியாபகம் வெச்சுக்கிறா மாதிரியாடா நீ பண்ணி வெச்சே…இதை வேற மறுபடியும் கனவுல வேற நான் நினைச்சுப் பார்க்கணுமா? சே சே… இங்கே பாரு. நீயும் அதைப் பத்தி மறந்துடு நானும் அதைப் பத்தி மறந்துடுறேன். இதைப் பத்தி ஒரு வார்த்தைக் கூட பேசக்கூடாது டீல்.”
“டீல்… “
“சரி ஆனால் நான் ஒரு உண்மையை சொல்லுவேன். நீ என்னை திட்டக்கூடாது.”
“சரி சொல்லித் தொலை பனைமரம்.”
“இல்லை ஆனாலும் உன் லிப்ஸ் செம ஸ்வீட் தெரியுமா? சர்க்கரை போட்டு இருந்தாக்கூட டக்குனு கசப்பு போய் இருக்காது. ஆனால் முத்” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே சட்டென தன் கைகளைக் கொண்டு அவன் இதழ்களைப் பொத்தினாள்.
“டேய் அதைப் பத்தி பேசக்கூடாதுனு நீ தானே டா சொன்னே. இப்போ ஏன் டா அதைப் பத்தி பேசுற. கொன்னுடுவேன் உன்னைய.. எல்லாத்தையும் மறந்துடணும் final deal ” என அவள் கேட்க அவனும் ” final deal ” என்றான்.
“ஆனாலும் தர்ஷி.. செம ஸ்வீட்டா இருந்துது” எனவிடாமல் மீண்டும் அதை சொல்லிக் கொண்டிருக்க சட்டென அவன் முன்பு தன் கையில் வைத்து இருந்த பேனாவை நீட்டினாள்.
“அடுத்த வார்த்தை ஏதாவது பேசுனா இந்த பேனா வெச்சு உன் கண்ணை நோண்டிடுவேன். “
“அட அப்படி நோண்ட வேண்டிய அவசியம்லாம் எதுவும் இல்லை தர்ஷி. நான் உனக்கு ரூட்டு விடல. என் ஆரு பேபிக்கு தான் ரூட்டு விடுறேன். சோ மேடம் நீங்க பயப்பட வேணாம் சரியா?” என்றுக் கண்ணடித்து சொன்னவன் பின்பு ஏதோ யோசித்து நிமிர்ந்தவனாக
“ஆமாம் நீ இதை பத்தி திரும்ப திரும்ப பேசுறதைப் பார்த்தா எனக்கு ரூட்டு விடற போல… அப்படி எதும் இருந்துதுனா என்னை மன்ன்ச்சிடு. ஐ யம் சாரி டார்லிங். ” என சொல்லி சிரிப்புடன் அவள் கன்னங்களை தட்டினான்.
அவன் கைககளை பட்டென தட்டிவிட்டவள் “இங்கே பாருடா பனைமரம் உனக்கு இந்த நினைப்பு வேற இருக்கே. இவர் பெரிய ஆணழகன் இவருக்கு அப்படியே நாங்க மயங்கி போய்ட்டோம். அடச்சீ முதலிலே அந்த கூலர்சை கழட்டு நல்லா ராப்பிச்சைக்காரன் மாதிரி இருக்கே. இவருக்கு நாங்க வேற ரூட்டு போட்டு அது நடக்காம போயிடுமோனு வருத்தம் வர படணுமாக்கும். நீ ஆருவோட சிரிச்சே முகத்தை தானே பார்த்து இருக்கே. அவள் பத்ரகாளியாகி நீ பார்த்ததே இல்லை. நீ என் கிட்டே சொன்ன இதே விஷயத்தை போய் ஆரு கிட்டே சொல்லிப் பாரு. ஒரு எலும்பு கூட மிஞ்சாம உன்னை சல்லி சல்லியா நொருக்கி அனுப்பிடுவா. “
“தர்ஷி இந்த ஆதவ்வை பார்த்து தெரியாம பேசுற… “
“தெரிஞ்சதாலே தான் பேசுறேன். முதலிலே தைரியாம போய் ஆரு கிட்டே பிடிச்சு இருக்குனு சொல்லுடா பார்க்கலாம்”
“ஓ சேலன்ஜா?”
“ஆமாம் சேலன்ஜ் தான். “
“சரி டி நான் போய் ஆரு கிட்டே பிடிச்சு இருக்கானு கேட்கிறேன். சேலன்ஜ் accepted. இந்த சேலன்ஜ்ல நான் ஜெயிச்சா என்ன தருவ?”
“முதலிலே போய் சொல்லுடா அப்புறம் பார்த்துக்கலாம்.”
“ஓ நான் தோத்துடுவேன்ற ஓவர் கான்ஃபிடன்ஸ்ல பேசுற. நான் ஜெயிக்கிறேன்டி. ஆரு கிட்டே போய் பிடிச்சு இருக்குனு சொல்றேன். சொல்லிட்டு வந்து உன்னை வைச்சுக்குறேன். ” என்று கோபமாக இவன் கதவை உட்புறமாக திறக்க முற்பட காய்கறி வாங்க கூடையை எடுத்து கொண்டு வந்த ஆதியும் அப்போது தான் கதவைத் திறந்தான்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன் சட்டென்று தடுமாறி பின்னே விழப் போக ஆதியை தாங்கிப் பிடித்தான் ஆதவ்.
இந்த காட்சியைக் கண்ட ஆரு
“தம்தம்தர தம்தம்தர தம்தர” பிஜிஎம் பின்னிருந்து சத்தமாக சிரித்தபடி பாட இங்கே ஆதவ் கைகளில் ஆதி…