தோளொன்று தேளானது 20(ஆ)
தோளொன்று தேளானது 20(ஆ)
தோளொன்று தேளானது! 20B
ஜேப்பி, ஜேக்கே இருவரின் தலைமையில், ஜேஜே பில்டர்ஸின் அலுவலர்கள் சந்திப்பு, அறிவித்த நேரத்தில் துவங்கியிருந்தது.
மீட்டிங் ஹாலில், ஆண்கள், பெண்கள் என அனைவரும் குழுமியிருக்க, அனைவரையும் வரவேற்று முகமன் கூறி அனைத்து சந்திப்புகளின் முக்கியமான பொது நிகழ்ச்சிகளுக்குப்பின், ஜேப்பி பேசத் துவங்கினான்.
“இதுக்கு முன்ன நீங்க கொடுத்த சப்போர்ட்னால, ஈசிஆர்ல ஸ்டார்ட் பண்ண வர்க் முடியப்போற நிலையில இருக்கு. இது உங்க எல்லாருடைய ஒத்துழைப்பாலதான் சாத்தியமானது. அந்த வர்க் முடிஞ்சு ஹேண்டோவர் பண்ணதும், அதுக்கான பெனிஃபிட்ஸ் அண்ட் எக்சட்ரா சீக்கிரத்துல உங்களுக்கு அனௌன்ஸ் பண்ணிருவோம் க்கைஸ்” என்றதுமே, அனைவரும் கரவோசையை எழுப்பிட, சற்றுநேரம் புன்முறுவல் மாறாது தானும் கைதட்டியவாறு அமைதி காத்து நின்றான் ஜேப்பி.
சுமித்ராவும் அதே அறையில்தான் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் இருக்கும் பக்கம் பார்க்காமலேயே பேசினான் ஜேப்பி. கண்டும் , காணாததுபோல காதல் வளர்த்து, அதனை ஆராதிக்கவும் முடியாமல், தனது மனதில் இருந்து அகற்றவும் முடியாமல் கண்ணாமூச்சி ஆட்டம் அவன் மட்டுமே ஆடிக் களைக்கிறான்.
கரவோசை நின்றபின், “அடுத்து நீலாங்கரை புராஜெக்ட்ல, ஆர்க்கிடெக்ட்ஸ் உங்க டிசைன்ஸ் எல்லாம் இன்னிக்கு ஈவினிங் பிஃபோர் செவனுக்குள்ள என்னோட மெயிலுக்கு அனுப்பிருங்க. நானும் ஜேக்கேயும் அதைப் பாத்து ஃபைனலைஸ் பண்ண பின்ன, நெக்ஸ்ட் மீட் வச்சிக்கலாம். வேற எதுவும் அதுல டவுட் இருந்தா, எப்பக் கூப்பிட்டாலும், வந்து கிளாரிஃபை பண்ணணும் க்கைஸ். ரெடியா இருந்துக்கங்க” ஜேப்பி
“செங்கல்பட்டு பக்கமா வரயிருக்கற, வில்லா டைப் டிசைனுக்கு எலிவேசன் ரெடியாகிருச்சா” இடையில் குறுக்கிட்ட ஜேக்கே, பில்டிங் டிசைன் செய்பவர்களை நோக்கிக் கேட்டான்.
அதில் சீனியன் டிசைனர் எழுந்து, “ஒன் மோர் வீக் டைம் எக்டெண்ட் பண்ணா இன்னும் நல்லாயிருக்கும் ஜேக்கே” பணிவோடு வேண்டினான்.
இதற்கு இடையில் குறுக்கிட்டுப் பேசத் துவங்கிய ஜேப்பியை நோக்கி அனைவரது பார்வையும் நிலைத்தது. “அல்ரெடி ஒன் வீக் கம்ப்ளீட்டட் க்கைஸ். இன்னும் ஒரு வாரம் அதிகமாத் தோணலையா?”
“சாரி ஜேப்பி. லாஸ்ட் வீக் ரெண்டு பேர் அன்எக்ஸ்பெக்டடா லாங்க் லீவு. அதனாலதான்” தங்களின் பக்கம் தவறு இருப்பதால், தயங்கியவாறு கூறினான் சீனியர் டிசைனர்.
“யாரு ஒரே சமயத்துல லீவு போட்டது?” சாதாரணமாகத்தான் கேட்டான் ஜேக்கே.
“ப்ருத்வி அண்ட் சுமித்ரா” பதில் கூறினான் சீனியர் டிசைனர்.
பதிலைக் கேட்ட, ஜேப்பிக்கு நெஞ்சுக்குள் காந்தாரி மிளகாயை தேய்த்தாற்போல காந்தியது.
மேலும் சில தகவல்களை ஜேக்கே அவர்களுடன் பரிமாறிக் கொண்டபின், “நீ இன்னும் எதாவது சொல்ல வேண்டியிருக்கா ஜேப்பி” கவனம் அங்கிருந்து திசைமாறிப் போயிருக்க, முதலில் ஜேக்கே பேசியது கேட்கவில்லை. பிறகு ஜேப்பியைத் தொட்டு நடப்பிற்கு கொண்டு வந்தவன்,
“ஆர் யு ஓகே” ஜேக்கே தன்னை நினைவிற்கு கொண்டுவந்ததை அறிந்து, தலையைச் சிலுப்பி, தன்னைச் சரி செய்து கொண்டவன், தன் சார்பாக கூற வேண்டிய விசயத்தை அதன்பின் பகிர்ந்துகொள்ள, அந்த சந்திப்பு அத்தோடு நிறைவடைந்தது.
அனைவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். ஜேப்பி, ஜேக்கே இருவர் மட்டும் அந்த அறையில் தேங்கியிருந்தனர்.
“என்னாச்சுடா?” சகோதரனை நோக்கிக் கேட்டான் ஜேக்கே.
“நத்திங்” ஜேப்பி
“வர வர உன்னோட எதுவுமே புரிய மாட்டிங்குதுடா. என்னவோ செய்யிற. ஆனா அது என்னானு சொல்லவும் மாட்டிங்கற. கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவிக்குதான் வந்தாகனும்டீ” சிரித்தபடியே ஜேக்கே கிண்டல் அடித்தான்.
“இது அந்த மாதிரி விசயமில்ல ப்ரோ” ஜேப்பி
“எந்த விசயமா இருந்தாலும், ஒரு நாளைக்கு வெளிய தெரியத்தான் செய்யும்” என்றவாறே ஜேக்கே அங்கிருந்து தனது தனியறையை நோக்கிக் கிளம்பினான்.
தனித்திருந்தவனுக்கு, ‘ரெண்டு பேரும் சேந்து லீவ் எடுத்துட்டு எங்க போயிருப்பாங்க?’ வினாக்கள் அவனுக்குள்ளாக எழுந்தவண்ணமிருந்தது. மனதை உறுத்திய வினாக்களுக்கு, விடைதெரியாமல் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான்.
ப்ருத்வி வரும்வரை, சுமித்ராவை சாதாரணமாகப் பேசி, சிரித்துக் கடந்தவன்தான் ஜெயபிரகாஷ். அப்போதெல்லாம் மற்ற ஆண்களுடன் சுமித்ரா பேசுவதைக் கண்டிருக்கிறான்தான். ஆனால் காண்டானது இல்லை.
தற்போதும் பிற ஆண்களோடு பேசத்தான் செய்கிறாள். ஆனால் அப்போது தோன்றாத ஏதோ ஒன்று ப்ருத்வியுடன், சுமித்ரா பேசினால் தோன்றுவது ஏன்?
ப்ருத்வி இந்த அலுவலகம் வந்த பிறகு சுமித்ராவே மாறியதுபோல ஜேப்பிக்கு தோன்றத் துவங்கியிருந்தது, சுமித்ரா தங்களது கம்பெனியில் பணிபுரிகிறாள் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான், தனக்குள் தோன்றிய காதலைக் கூற, செயல்படுத்த பிரியமின்றி, ரகசியமாகவே வைத்திருந்தான்.
ப்ருத்வியின் வருகைக்குப்பின், தன்னை மீறி, சுமித்ராவிடம் சென்று எதாவது கூறிவிடுவோமோ என்கிற தயக்கம் ஒருபுறம். சரி, ப்ருத்வியோடு எப்படியும் சுமித்ரா போகட்டும் என்று விட்டுவிடு என அந்தஸ்து பார்க்கும் அவனது ஒரு மனது கூறினாலும், அவளைக் கண்டதுமுதல் நினைவடுக்கில் அவளது நினைவுகளைப் பொக்கிஷமாகச் சேமித்த மனதோ, முரண்டுபிடித்து எதற்கும் ஒத்துழைக்காது தர்ணா செய்கிறது.
அவள் தனக்கே வேண்டும் என ஒரு மனதும், தங்களின் அந்தஸ்திற்கு அவள் ஈடானவள் கிடையாது, ஆகையினால் அவள் வேண்டாம் என மற்றொரு மனதும் வாதிடுவதைத் தவிர்க்க இயலாமல் தடுமாறி நிற்கிறான்.
நீண்ட நேர யோசனைக்குப்பின் உதித்த யோசனையை செயலாக்க மனம் பரபரத்தது. தாத்தாவின் வேண்டுகோள் மற்றும் தனக்கும் அவன் இடைஞ்சல் என எண்ணிய மனம் அதைத்தான் முடிவு செய்ய உந்தியது.
‘ப்ருத்வியோட சாப்டரையே க்ளோஸ் பண்ணிட்டா’ குரூரமாகப் பரிசீலனை செய்தபடி அமர்ந்திருந்தான் ஜேப்பி.
தாமதிக்காது அடுத்த கட்ட பணியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நோக்கில், அங்கிருந்து புதுப்பொலிவோடு கிளம்பினான் ஜெயபிரகாஷ்.
ஜேப்பியின் எண்ணமறியாத இருவரும் கேண்டினில், ஒன் பை டூவாக காஃபியை ஷேர் செய்து கொண்டிருந்தனர். அதிகமாக அவள் காஃபி அருந்துவதைக் கண்டு, அவளின் மேல் ப்ருத்விக்கு கேரிங் எழ, அதனால்தான் இந்த ஷேரிங் என்பது ஜேப்பிக்கு தெரிய வந்தால்…
அப்படி ஒரு நிலையைப் பற்றி ஜேப்பி அறிந்து கொள்ள விரும்பவே இல்லை. அவனுக்கு அவன் வேண்டியதை நடத்திக் கொள்ள மட்டுமே தெரியும். பிறரை, அவர்களின் இடையூறுகளை, கஷ்டங்களை, கவலைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவன் ஜேப்பி.
***
திருச்சிக்கு அருகே இருந்த உறையூரில் வசதி வாய்ப்போடு வாழ்ந்திருந்த பெரிய குடும்பத்து வாரிசுகள் இருவர். அதில் இளையவர் ப்ருத்வியின் தந்தை. மூத்தவரின் பணத்தாசைக்குப் பகடையான இளையவரின் குடும்பத்து வாரிசுதான் ப்ருத்வி.
ப்ருத்வி அனாதையாக்கப்பட்டதற்கு முழுப்பொறுப்பு எஸ்ப்பியின் செயல்தான் காரணம். ஓரளவிற்கு விபரமறிந்தவனாக இருந்தபோது நடந்த சம்பவம் ஆதலால் தேவுடன்ள நிறுவனம் துவங்கும்போது எஸ்ப்பி பிரச்சனை செய்ததுமே, விசாரித்து அறிந்து கொண்டிருந்தான் ப்ருத்வி.
பழிவெறி மனதிற்குள் இருந்தாலும், அதற்கான திடமோ, பணமோ, ஆள்பலமே இல்லாததால் அமைதியாகவே இருக்க எண்ணியிருந்தான் ப்ருத்வி.
ஆனால் ப்ருத்வி பற்றி அனைத்தையும் விசாரித்து அறிந்து கொண்ட ஜேப்பி, அவனது திமிரான பேச்சிற்கும், சில செயல்பாடுகளுக்கும் தனது தாத்தாவின் செயலே காரணம் என தனக்குத்தானே நினைத்துக் கொண்டு தனது திட்டத்தைத் தாமதிக்காமல் செயல்படுத்த எண்ணினான்.
ப்ருத்வியை தங்களின் புதிய பங்களூர் கிளைக்கு மாற்றி, தனது சூம் நிறுவனத்தின் துணையுடன் சில வெளி நபர்களைக் கொண்டு விபத்தில் சிக்க வைத்து உயிரிழக்கச் செய்திருந்தான் ஜேப்பி.
முக்கிய கிளையில் மட்டுமல்லாது, அனைத்து கிளைகளுக்கும் ப்ருத்வியின் மறைவிற்கு இரங்கல் அனுசரிப்பு நடைபெறும்படி செய்து, ப்ருத்வி எதிர்பாரா விபத்தில் இறந்ததாகவே அனைவரையும் நம்பச் செய்திருந்தான். ஜேப்பியும் ப்ருத்வி இறந்ததாகத்தான் நம்பியிருந்தான்.
எஸ்ப்பிக்கு, ஜேப்பியின் செயலில் மிகுந்த மனநிறைவு.
அனைத்திற்கும் இடையே பூஜா மகதீரா வேலை எனும் துருப்புச் சீட்டைக் கையிலெடுத்து ஜேஜே நிறுத்திற்குள் வந்திருந்தாலும், அவள் எங்கிருந்து வந்திருக்கிறாள், அவளின் நோக்கம் என்ன? என்பதை கார்த்திக்குடன் படுக்கையில் இருந்தவளை நேரில் கண்டபின் தனது நிறுவனம் மூலம் ஆராய்ந்து அறிந்து கொண்டிருந்தான் ஜேப்பி.
அதன்பின் அவளை அழைத்து, “நீ தமிழ்நாட்டுப் பொண்ணான எங்க அத்தைக்கு மகளாப் பொறந்து இருந்தாலும், வளர்ந்த இடம், சூழல் இது எல்லாம் உன்னை முழுசா அங்க உள்ள மாதிரியே மாத்திருச்சு.
அச்சு அசல் நீ இப்ப வடநாட்டுப் பொண்ணு மாதிரிதான் இருக்க. வடநாட்டுல பிறந்து உங்கப்பா தமிழ்நாட்டுல பல வருசம் தங்கியிருந்திருந்தாலும், அந்தஸ்துல குறைஞ்ச ஆளை எங்க அத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டதை எங்க தாத்தாவால ஏத்துக்க முடியாமத்தான், உயிரோட உங்கம்மாவை விட்டு வைக்கலை.
மகளையே ஏத்துக்க விரும்பாதப்போ, அவங்க மகளா இருந்தாலும் ஒரு லேடி பிம்ப்போட வாரிசா வளக்கப்பட்ட ஒன்னை நிச்சயமா எங்க குடும்பத்தில ஏத்துக்க மாட்டோம்.
சுதாவோட மகன்னு எங்க தாத்தா ஒருவேளை மனசு மாறி ஏத்துக்கிட்டாலும், நான் அதுக்கு அனுமதிக்க மாட்டேன்” தனது எண்ணத்தை மறையாது கூறியிருந்தான் ஜேப்பி பூஜாவிடம்.
“புரிஞ்சிக்கோ ஜேப்பி. யாருக்கும் என்னைப் பத்தித் தெரியாது. ஜேகேயை சமாளிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. என்னை அனாதைன்னு சொல்லியாவது அவனோட சேத்து வச்சிறேன்.” எனக் கெஞ்சியவளிடம்,
“கார்த்திக் மேல தேவையில்லாத ஆசைய வளத்துக்காம, நடந்த விசயங்களை மறந்துட்டு இங்க இருந்து கிளம்பற வழியப் பாரு. இல்லைன்னா, உங்கம்மாவோட நிலைமைதான் உனக்கும்” திடமாக அவளுக்கு முன்பே உரைத்திருந்தான் ஜேப்பி.
அதற்குமேலும் கெஞ்சியவளிடம், “நீ வளர்ந்த இடம், விதம் எல்லாம் நல்ல குடும்பப் பெண்ணா வாழறதுக்குரிய உன்னோட ஆசைகளைக் குழிதோண்டிப் பறிச்சிருச்சு.
தேவையில்லாத ஆர்க்கியூ பண்ணாம சத்தமில்லாமக் கிளம்பிப் போயிரு. மீறி எதாவது தகிடதத்தம் பண்ணணும்னு நினைச்சா, உசிரும் மிஞ்சாது” இரக்கமின்றிக் கூறி பூஜாவை அங்கிருந்து அகற்ற முயன்றான் ஜேப்பி.
பூஜா தன்னை வளர்த்தவளை எதிர்த்துக் கொண்டே சென்னைக்கு கிளம்பி வந்திருந்தாள். ஆனால், வந்தவளுக்கு ஏமாற்றமே.
“இந்த என்னோட நிலைக்கு உங்க குடும்பந்தான காரணம் ஜேப்பி. அப்போ அதுக்கு நீங்கதான் தகுந்த நியாயம் செய்யணும்.” பூஜா.
“வீட்டை விட்டு வேறொருத்தனோட போன உங்கம்மாவுக்கு செய்த அதே நியாந்தான் உனக்கும்” ஜேப்பி சற்றும் இரங்காமல் பதிலளித்தான்.
“இவ்ளோ தூரம் கேக்கறேன். கொஞ்சம்கூட மனசு இரங்க மாட்டிங்கற.” அழுகையோடு யாசகம் கேட்டவள்,
“நீ மனசு வைக்கலனா, இனி என்னைப் படைச்ச அந்த ஆண்டவன்கிட்ட மட்டுந்தான் நான் கேக்க முடியும்” என தேம்பினாள் பூஜா.
“நல்லவ வேசம் போடாம சீக்கிரமாக் கிளம்பற வழியப் பாரு. உன்னை இத்தனை நாளும் பத்தரை மாத்து பத்தினித் தங்கமாவா வச்சிருக்கா வளர்த்தவ. கதையெல்லாம் சொல்லாம, இடத்தை முதல்ல காலி பண்ணு” அகல முயன்றவனிடம்,
“நான் பத்தினியா இல்லையாங்குறதை சொல்லிப் புரிய வைக்க என்னால முடியாது, ஒத்துக்கறேன். ஆனா, என் வழியா வரக்கூடிய சில விசயங்களை உண்மைனு நம்ப வைக்க, நீயே அரும்பாடுபடற நிலை வரும். அப்போ நீயே என்னைப் புரிஞ்சிப்ப!” எனச் சென்றிருந்தாள் பூஜா.
அதுபோன்ற நிலை ஜேப்பிக்கு வந்ததா?