ஆட்டம்-51
ஆட்டம்-51
ஆட்டம் 54
திலோத்தமையிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்ற உத்ரா, “சொல்லு திலோ” என்றிட, “டாக்டர் வந்திருக்காங்க... கீழ வா” என்றழைக்க, “ம்ம் வர்றேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு கீழே வந்தாள்.
அவள் கீழே இறங்க, நறுமுகையுடன் அமர்ந்திருந்த மருத்துவர் இமையரசியிடம், “நேரா ஹாஸ்பிடல்தான் வந்தாங்க... நானும் மேமும் (நீரஜா) தான் செக் பண்ணோம்... உங்க பேத்திக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல... அதைவிட உங்க கொள்ளு பேரன் அதைவிட டபுள் ஸ்ட்ராங்கா இருக்கான்... வளைகாப்புக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கான்” என்று கூறிச் சிரிக்க, அப்போது தான் உத்ராவின் நெஞ்சில் பால் வார்த்தது போன்று இருந்தது.
அவள் அதிகம் பயந்தது நறுமுகையை பற்றி நினைத்து தான். மயக்க மருந்து குழந்தையையும் பாதித்துவிடுமோ என்று ரொம்பவும் பயந்து போய் இருந்தாள் உள்ளுக்குள். காரில் வரும்பொழுதே நீரஜா நறுமுகையுடன் நேராக மருத்துவமனை சென்றிருக்க, மற்ற மூவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
ஆபிஸ் அறையில் சிம்மவர்ம பூபதியின் முன் அமர்ந்திருந்த நீரஜா, அனைத்தையும் தந்தையிடமும் சகோதரர்களிடமும் கூறி முடித்து,“அபி, விக்ரமுக்கு முன்னாடியே தெரியும் ப்பா” மகள் கூற அவர் விஜய்யை பார்த்தார். மருமகனை காணவே அவருக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது. நினைத்திருந்தால் தப்பித்து இருக்கலாம் தான். ஆனால்…
நீரஜா மட்டும் தியாகங்கள் செய்யவில்லை. மருமகனின் தியாகங்களும் பொறுமையும் அதிகம் என்பதை உணர்ந்தவர், எழுந்து வந்து மருமகனை அணைத்துக் கொள்ள, நீரஜாவின் விழிநீர் ஆனந்தத்தில் சுரந்தது.
மருமகனின் தோளில் கரத்தை போட்டபடி மகளை பார்த்த சிம்மவர்ம பூபதி, “ஆனா, இந்த விஷயத்துக்கு உங்களை அவன் பழிவாங்க துடிச்சது ரொம்ப நெருடலா இருக்குமா.. ஊர்ல நடக்காதது இல்லையே இது.. அவனுக்கு இழப்பு ரொம்ப பெருசு தான்.. ஆனா.. ” என்று புருவங்கள் சிந்தனையில் சுருங்கக் கூற,
“ஒரே நேரத்துல பொண்டாட்டி, புள்ளை இரண்டு பேரையும் இழந்து, அவன் மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டுட்டான் ப்பா.. அதுதான் நடைமுறை என்னன்னு சாதாரண மனுஷனா யோசிக்க மறந்திருக்கான்.. நான் ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணாததுதான் காரணம்னு அவன் மனசுல பதிஞ்சு போயிடுச்சு.. கிட்டத்தட்ட அவனும் ஒருவித சைக்கோ தான்.. அதுனால தான் பல வருஷத்துக்கு முன்னாடி இந்திரஜித்தோட அப்பா கட்சியோட அடிப்படை உறுப்பினர்ல இருந்து அவனை எடுத்து விட்டிருக்காரு..”
“அன்ட் அவன் ஹிஸ்டரியை பத்தி வரும்போது இவரு சொன்னாரு.. இவரை அவன் கடத்தி வச்சிருந்தப்ப அவன் அடிக்கடி டேப்லெட்ஸ் எடுப்பானாம்.. அவன் ஒரு ஸ்கைசோப்ரெனியா (schizophrenia) பேஷன்ட்.. ரொம்ப தீவிரமான சைக்கோலாஜிகள் டிஸ்ஸாடர்.. எனக்கு தெரிஞ்சு இப்ப எங்க பெரிய டாக்டர் இறந்தது கூட ஆக்ஸிடென்ட்னு தோணல.. அங்க சுத்தியிருந்த யாரோட நிம்மதியும் இருக்கக் கூடாதுனு நினைச்சிருக்கான்” யோசித்த நீரஜாவின் அருகே வந்த விஜய், “அதெல்லாம் யோசிக்கணுமா அம்மாடி.. எல்லாம் முடிஞ்சு போன விஷயம்.. இப்ப அவன் இல்லாமையும் போயிட்டான்.
தங்கையிடம் வந்த இரு அண்ணன்களும், “இப்படி ஒண்ணு நடந்ததை நீ மறந்திடணும்டா” அரிமா பூபதி கூற, அதியரன் பூபதி, “இனிமே அதை பத்தி யோசிக்கவே கூடாது” என்று தங்கையை சிறிது கண்டிப்புடன் எச்சரிக்க, சரியென்று தலையாட்டியவரிடம் இருந்து விஜய்யிடம் தலையை திருப்பிய அரிமா பூபதி, “இத்தனை நாள் எங்களை விட நீரஜா மேல யாராலையும் அன்பு வைக்க முடியாதுனு நினைச்சோம்.. ஆனா நீங்கதான்” என்றவர் தனது சகோதரரை பார்க்க, அவரும் அமோதிப்பது போல தங்கையை பார்த்து கண் சிமிட்டி தலையாட்டினார்.
நீரஜா புரியாது பார்க்க, “உன்னையும் சேத்தி தூக்கிட்டாங்கனு சொன்னப்ப.. பொண்ணுகளுக்கு எதுவும் ஆகாது.. அபி, விக்ரம் போற வரைக்கும் அவளால சமாளிக்க முடியும்.. யாருக்கும் எதுவும் ஆகாதுன்னு எங்க எல்லாருக்கும் தைரியம் சொன்னதே இவர்தான்” என்று கூற, கணவரை பெருமையாக பார்த்த நீரஜா விழிகளை சிமிட்டினார்.
‘அவனின்றி அமையாது என் உலகு‘ என்பது போல அவரது உலகமே நீரஜாவின் ஹனி ப்ரவுன் விழிகள் பிரதிபலித்தன.
ஐவரும் பேசியபடி வெளியே வர, இமையரசியிடம் உரையாடிக் கொண்டிருந்த மருத்துவர் எழுந்து, “எல்லாரையும் செக் பண்ணிட்டேன் மேம்...எல்லாருமே சேஃப் தான்” என்றார்.
“ம்ம்” என்ற நீரஜா, “சாப்பிட்டு போங்க... லேட் நைட்ஆகிடுச்சு” என்று அழைக்க, மறுக்க இயலாதவர் இரவு உணவிற்காக அனைவருடனும் அமர, உத்ராவிற்கு யார் பேசுகிறார்கள் என்ன, ஏது என்று எதுவும் மனதில் பதியவில்லை.
கணவன் எப்போது வருவான், அவனின் பார்வை தரிசனம் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கமே யுவதியின் மனம் முழுவதும்!
ரஞ்சனியும் மகளின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, மகளின் வதனத்தை வைத்தே அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவர், உத்ராவின் இடது கரத்தை அழுத்திக்கொடுத்து, “மாப்பிள்ளை வரும்போது பேசவாது தெம்பு வேணும் உத்ரா... ஒழுங்கா சாப்பிடு” என்று கூறி சிரிக்க, அன்னையின் பேச்சில் வரிசை பற்கள் தெரிய மௌனமாய் புன்னகைத்தவள், சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து, மருத்துவரும் கிளம்பிய பின், இரவு பதினொரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தார்கள் நாற்படை நண்பர்கள்.
சிம்மவர்ம பூபதியிடமும், இமையரசியிடமும் வந்த இந்திரஜித் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்க, புன்னகையுடன் எழுந்த இந்திரஜித்தை அணைத்துக் கொண்ட சிம்மவர்ம பூபதி, “எவ்வளவு நாளாச்சு... எங்களை எல்லாம் மறந்துட்டையா?” என்று வினவினார்.
“கத்துக் கொடுத்த குருவை யாரும் மறக்க மாட்டாங்க தாத்தா” என்றவனின் குமட்டில் குத்திய இமையரசி, “இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று வினவ, அவர் யாரை கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டான் இந்திரஜித்.
தலை கோதி தன் வெட்கப் புன்னகையை மறைத்தவன், “நல்லா இருக்கா பாட்டி” என்று நேரடியாக பதிலளிக்க, அனைவரின் வதனத்திலும் ஒரு நிம்மதிப் புன்னகை.
பேச்சுக்கள் மேலும் தொடர, கேலிக்கைகளும், சிரிப்பலைகளும் தான்.
இமையரசியை, “நீங்க போய் தூங்குங்க ம்மா... நான் பாத்துக்கறேன்.. ரொம்ப நேரம் முழிக்க வேணாம்” என்று நீரஜா அன்னையையும் தந்தையையும் உறங்க அனுப்பிவிட்டு, நால்வரையும்சாப்பிட அழைக்க, டைனிங் டேபிளில் அமர்ந்த நால்வருக்கும் நீரஜா பரிமாற, திலோத்தமையும் அங்கு வந்து நின்று கொண்டாள்.
நறுமுகை சோர்வுடன் வரவேற்பறையில் அரிமா பூபதி மற்றும் அதியரன் பூபதியுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, “நறு சாப்பிட்டாளா அத்தை?” என்று நீரஜாவிடம் விக்ரம் வினவ, “எல்லாரும் சாப்பிட்டாச்சு விக்ரம்... நீங்க சாப்பிடுங்க” என்றவர் சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தார்.
உத்ரா உள்ளே தோசையை சுட்டுக்கொண்டிருந்தாள்.
திலோத்தமைக்கு கௌதமிடம் பேச வேண்டும் என்பது போன்று மனம் பரபரக்க, அண்ணன்களின் முன்னிலையில் பேசத் தயங்கியவள், பரிமாறும் சாக்கில் அவ்வப்போது அவன் அருகில் சென்று நின்றிருந்தாள்.
திலோத்தமை அங்கும் இங்கும் நிற்பதைக் கண்ட நீரஜாவிற்கு சின்னவளின் மனவோட்டம் புரிந்துவிட, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர், முதலில் மற்ற மூவரையும் சாப்பிட வைத்து எழுப்பிவிட வேண்டும் என்று எண்ணியவர் அவர்களுக்கு தோசையை பரிமாற, அதற்கு தகுந்தாற் போன்று கௌதமும் ஆமை வேகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, முதலில் சாப்பிட்டு முடித்த இந்திரஜித்தும், விக்ரமும் எழுந்துகொள்ள, அபிமன்யு அமைதியாக பொறுமையாக, கௌதமிற்கு போட்டிக்கு வந்தவன்போன்று உண்டு கொண்டிருக்க, நீரஜா திலோத்தமையின் முகத்தைப் பார்த்தார்.
அடுத்த தோசையை எடுத்து வந்த திலோத்தமையிடம் வேண்டாம் என்பது போல கரத்தை நீட்டிய அபிமன்யு எழுந்து சமையல் அறைக்குள் நுழைய, அவனை அங்கு எதிர்பாராத உத்ரா, கணவனின் வரவை உணர்ந்து சட்டென நிமிர்ந்து பார்த்தாள். எப்போதும் வாஷ் பேஷினில்கை கழுவும் பழக்கம் கொண்டவன் இன்று சமையல் அறைக்குள் வந்ததை வைத்தே உள்ளே இருந்தவளுக்கும் சரி, வெளியே இருந்தவர்களுக்கும் சரி புரிந்துவிட்டது.
அதற்கு மேல் சமையற்கட்டின் கதவை வேறு அடைத்துவிட்டான் அந்த விடாக்கண்டன்.
கைகளை கழுவிவிட்டு தன்னை பார்த்திருக்கும் கணவனையே பார்த்திருந்த உத்ராவின் இமைகள் சிற்பி செதுக்கிய குடை போன்று தன்னவனின்பார்வையில் தாழ, தன்னவனை பாய்ந்து அணைத்தவள், “சாகப் போறேன்னு தெரிஞ்சப்ப கூட பயப்படல... உங்ககூட வாழாம போறேன்னுதான் பயமா இருந்துச்சு... அந்த ஆறு மணி நேரம் ஆறு யுகம் உங்களை பிரிஞ்ச மாதிரி ஆகிடுச்சு... இனி எவ்வளவு சண்டை வந்தாலும் விளையாட்டுக்கு கூட பேசாம இருக்க மாட்டேன்... ஐ டூ ஸாரி” என்று கண்ணீர் ரேகையுடன் கூறியவளின் நாடியை பற்றி நிமிர்த்தியவன், தன்னவளின் நெற்றியில் விழுந்திருந்த முடிகளை மென்மையாக ஊதி ஒதுக்கி, தன் முத்திரையை அங்கு பதித்தான்.
சொல்லிலும், செயலிலும் அடங்காத காதலை ஒற்றை அளவிலடங்காத நெற்றி முத்தத்தில் காட்டிவிட்டான்!
தன்னவனின் நெற்றி முத்தத்தில் லயித்து போய், விழிகளை மூடி ஆழ்ந்து இருவரும் மட்டும் இருக்கும் சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தவளின் பேரெழில் வதனம், எப்போதும் முதல் முறை ஈர்ப்பதுபோல அபிமன்யுவை ஈர்த்தது.
தன்னவளின் செவியருகே குனிந்தவன், “இன்னைக்கு நான் என்னோட பிரம்மச்சாரி விரதத்தை உடைச்சே ஆகணும்டி” என்று கிசுகிசுக்க, கணவனின் மயக்கும் குரலில அவனிடம் இருந்து விலகியவள், கவர்ச்சிகரமான புன்னகையோடு திரும்பி நின்று,
“அது அப்புறம் பாக்கலாம்... அம்மா வெளிய இருக்காங்க... எவ்வளவு நேரம் இங்க இருப்பீங்க” என்று கணவனுக்கு முதுகு காட்டி கேட்டவளின் இரவு உடையை மேலிருந்து கீழ்வரை நிதானமாக பார்த்து தன்னவளின் வடிவான அங்கங்களை பார்த்து மலைத்துப் போனான் அந்த மன்மதனே.
“நான் வந்து குளிச்சு முடிக்கிறதுக்குள்ள... அத்தை அன்னைக்கு உனக்கு எடுத்துக் குடுத்த கோல்ட்ஸாரில நீ இருக்கனும்” கட்டளை பிரபித்தவன், அவளின் இடையில் அழுத்தமாய் கிள்ளிவிட்டுச் செல்ல, நாணத்தின் உச்சத்தை அடைந்து போய் நின்றாள் அந்த ஓவியப் பாவை.
வெளியே வந்ததும், அபிமன்யு கண்டது கௌதமின் அருகே கண்ணீருடன் அமர்ந்திருந்த திலோத்தமையும், அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்த கௌதமையும்தான்.
சட்டென எழுந்த தங்கையின் தோள் பற்றி அமர வைத்த அபிமன்யு, தங்கையின் கன்னத்தில் ஆறுதலாகத் தட்டிவிட்டு, “இப்படி ஒண்ணு நடந்ததையே மறந்திடணும் திலோ... அதுதான் உன்னோட மென்டல் ஹெல்த்துக்கு நல்லது...” என்று கூறியவன் அங்கிருந்து அகல, கௌதமை பார்த்தவள், “லவ் யூ” என்றாள் கண்களைத் துடைத்தபடியே.
கடைசி விள்ளை பிய்த்து திலோத்தமையின் வாயில் வைத்தவனுக்கு அவளின் உதட்டின் ஓரத்தில் இருந்த காயத்திலும், கரங்களில் இருந்த சிராய்ப்புகளை கண்டு மனம் கனத்துப் போக, தன்னவளின் கரத்தைப் பிடித்து அவளின் உள்ளங்கையில் முத்தமிட்டவன், “அழாதடி... நீ அழுதா ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று முடித்து தன்னவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட நேரம், உத்ரா வெளியே வர, சட்டென நகர்ந்து அமர்ந்துவிட்டான் கௌதம்.
உத்ராவிற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த திலோத்தமை தலையைத் திருப்பி அண்ணன் மனைவியை திரும்பிப் பார்த்தவள் விழிகளை சிமிட்ட, “நீ நடத்துடி” என்று கேலி செய்த உத்ரா வெளியே வர, இந்திரஜித்துடன் பேசிக்கொண்டிருந்த அபிமன்யு, மனைவியை, ‘வா‘ என்று தலையசைத்து அழைக்க, இரம்மிய புன்னகையுடன் கணவனிடம் சென்றாள்.
அரிமா பூபதியும், அதியரன் பூபதியும், “எப்படி விக்ரம் அவங்க இருக்க இடத்தை கண்டு பிடிச்சீங்க?” என்று வினவ,விக்ரம் அபிமன்யுவை பார்க்க, அருகில் வந்த மனைவியின் தோளில் கை போட்ட அபிமன்யு, “உங்க மருமக தான்” என்றான் வாகையின் களிப்பை உண்டவனாக.
அனைவரும் புரியாது அவனை பார்க்க, தனது அலைபேசியை எடுத்த அபிமன்யு, ஒரு ஆப்பை ஆன் செய்து, உத்ராவின் நெஞ்சிற்கு அருகே கொண்டு செல்ல அதுவோ பயங்கரமாக ஓசையிட்டது.
நடுவே தண்ணீர் பாட்டிலை எடுக்க வந்த இமையரசி “ஆபரேஷன் பண்ணி ஏதாவது உள்ள வச்சுட்டியா?” இரு கன்னங்களிலும் கை வைத்து வினவி, “அடி ஆத்தி.. புள்ளை நெஞ்சுல இப்படி வச்சுட்டானே?” என்று கத்த, நான்கு நண்பர்களும் தலையில் அடித்துக் கொண்டனர்.
உத்ராவின் தாலியை வெளியே எடுத்துப் போட்ட அபிமன்யு, “இதுல தான் வச்சேன் ட்ராக்கரை.. நான் அதுக்கு தான் நகைக்கடைல வாங்காம.. விஸ்வகர்மாகிட்ட கொடுத்து செஞ்சேன்” என்றவனை காதலோடு கண்ட உத்ராவின் கண்களில் சிறிது கோபமும் எட்டிப் பார்த்தது. அனைத்தையும் செய்துவிட்டு முகத்தை வேறு எட்டு முழத்திற்கு நீட்டிவிட்டான் அல்லவா அவளது கணவன்.
அருகில் வந்தவுடன் மனைவியின் தோளில் கை போட்ட அபிமன்யு, “உனக்கு தெரிஞ்சிருக்கும்... ஷீஇஸ் மை வைஃப்... உத்ரா” என்று அறிமுகம் செய்து வைக்க, உத்ராவை பார்த்து புன்னகைத்த இந்திரஜித், “இரண்டு பேரும் வீட்டுக்கு ஒருநாள் வாங்க” என்று அழைக்க, “கண்டிப்பா” என்று அமைதியாக புன்னகைத்து தலையாட்டினாள் உத்ரா.
கிளம்ப எத்தனித்த இந்திரஜித் அனைவரிடமும் விடைபெற்று, “என்னடா உங்க வீட்டு மாப்பிள்ளை விட்டா, கல்யாணம் வரைக்கும் இங்கையே தங்கிடுவான் போல” என்று கௌதமை கேலி செய்ய,
“ஸ்கூல் படிக்கும்போது நான் கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொன்னவன் தானே அவன்” என்று விக்ரம் சொல்லி சிரிக்க, அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அனைத்தையும் கேட்டு டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த கௌதம், “விட்டா இன்னைக்கு என்னை பாய்ன்ட் பண்ணியே செஞ்சிடுவானுகடி... நான் கிளம்பறேன்” என்றே வெளியே வந்த கௌதமும் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான்.
அனைவரும் கிளம்ப, நறுமுகையும் விக்ரமும் அபிமன்யுவின் அறைக்கு எதிரே இருந்த நறுமுகையின் அறைக்குச் செல்ல, திலோத்தமையும் மித்ராவும் ஏதேதோ தங்களுக்குள் பேசியபடியும், அபிமன்யு உத்ராவை பார்த்து தங்களுக்குள் சிரித்தபடியும் அறைக்குள் செல்ல, வாசலையே பார்த்திருந்த உத்ராவின் விழிகள் செக்கச்செவேலென சிவந்து போயிருந்தது.
அச்சம்! மடம்! நாணம்! பயிர்ப்பு!
உத்ராவை தலை திருப்பிப் பார்த்த அபிமன்யு, “அப்புறம் இப்படியே நிக்க போற ப்ளானா?” என்று கிசுகிசுக்க, தலை கவிழ்ந்து, இல்லை என்று தலையாட்டியவள், சட்டென அறைக்குச் செல்ல படிகளில் ஓட, அளவு கடந்து தாபம் மனையாளின் மேல் கொண்ட காதலிலும் காமத்திலும் தெறிக்க, இன்றைய இரவை கடலளவு மோகத்தில் முக்குளிக்க எண்ணியவன், இரண்டு இரண்டு படிகளாக ஏறினான் உத்ராவின் ஆருயிர் கணவன்.
அறைக்குள் வந்தவனுக்கு உத்ரா அவளின் அறையில் இருப்பது புரிய, குளியலறைக்குள் புகுந்தவன், நிதானமாக குளித்து முடித்து வெளியே வந்தான்.
குளியல் அறையில் இருந்து தன் அறைக்கு வரும்வரை இருந்த கண்ணாடிகளில் தன் முறுக்கேறியிருந்த புஜத்தையும், திமிறிய உடலையும் பார்த்தபடியே சிகையை கோதிக்கொண்டு வந்தவன், தன் அறைக்குள் கால் வைத்தவுடன் பார்த்தது என்னவோ, பொன் தடாகமாய், தங்க ரதமாய், தேவலோகத்தில் இருக்கும் ஊர்வசியை மிஞ்சும் அழகில் தன் படுக்கையில் அமர்ந்திருந்த உத்ராவைத் தான்.
உத்ரா சித்தார்த் அபிமன்யு!
தன்னவளை கண்டவுடன் அபிமன்யுவின் உதடுகளில் புன்முறுவல் பூத்துவிட, படுக்கை அறையில் இருக்கும் தன்னுடைய சிறிய கப்போர்ட்டை திறந்தவன் உத்ராவின் முதுகிற்கு பின் நின்று உடையை மாற்ற, தன்னவன் உடை மாற்றுவது புரிந்து அமைதியாய் அமர்ந்திருந்தவளின் அருகே வந்து ஒன்றை வைக்க, அதைப் பார்த்த உத்ராவிற்கு தூக்கிவாரிப் போட்டது.
மெல்ல விழிகளை உயர்த்தி கணவனை கண்டவள், “என்ன... இது?” என்று திக்க, கருப்பு நிள வெஸ்ட் அணிந்து கீழே முட்டி கால் வரை வெள்ளை நிற சார்ட்ஸ் அணிந்திருந்த அபிமன்யுவின் பார்வையில் தெரிந்த எண்ணங்களை மனைவியாய் அவள் புரிந்து கொண்டாலும், கணவனாய் பதில் கூற முன் வந்தான் அபிமன்யு.
“நீதானே ஆசைபட்ட... என் பொண்டாட்டி ஆசைபட்டு நான் செய்யாம இருக்க முடியுமா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவியவன், அறையில் இருந்த ப்ரீசரை திறந்து பார்த்தான்.
பின் வெளியே செல்ல, “எங்க போறீங்க?” என்று உத்ரா கேட்டும் பதிலளிக்காது சென்றவன், சமையல் அறையில் இருந்த ஐஸ் க்யூப்ஸை (ice cubes) அதற்கு உண்டான சிறிய பெட்டியில் எடுத்துக் கொண்டு அறைக்கு ஏற, மாடியில் சிறிது நேரம் உலாவிவிட்டு இறங்கிய நறுமுகையும், விக்ரமும், அபிமன்யு உள்ளே செல்வதையும் அவன் கரத்தில் இருந்ததையும் தவறாது பார்த்தனர்.
“மாமா எதுக்கு ஐஸ் பாக்ஸ் எடுத்திட்டு போறாங்க?” நறுமுகை விக்ரமிடம் வினவ, “ஆஹ் நைட்டு புல்லாஉக்காந்து ஜூஸ் போட்டு குடிப்பாங்க” என்று தன்னவளின் தலையில் குட்டியவன், “ரூமுக்குள்ள போ... குழந்தை நீ... இதெல்லாம் பாக்க கூடாது” என்று மனையாளை விரட்டினான்.
“குழந்தைக்கு குழந்தை தர்ற ஊரு போல இது” என்று நறுமுகை நக்கலடிக்க, வஞ்சியவளை இழுத்து, அவளின் காதில் சிலதை விக்ரம் கூற,
கண்கள் இரண்டும் ஆந்தை போல விரிய இரு கரத்தாலும் வாயை பொத்தியவள், “அதுக்கா?” என்று கேட்க, “ம்ம்” என்று தன்னை நல்ல பிள்ளை போன்று காட்டியவனும் கட்டிலில் மனைவியுடன் சரிந்தான்.
அறைக்குள் நுழைந்த அபிமன்யு, அங்கிருந்த ப்ளைன்ட் போல்டை (Blind Fold) எடுத்து, உத்ராவின் கண்களை கட்ட, கணவனின் திட்டத்தை நினைத்த மாத்திரத்தில் இப்பொழுதே அவனின் மனைவிக்கு, சலனமும் காமமும் எழத் துவங்கியது.
அவன் வெளிநாடு கிளம்பும் முன், அவள் அவனின் ட்ராலியை கீழே போட்டு கவிழ்த்ததிற்கு அவன் தன்னுடைய பெல்ட்டால், உத்ராவின் கரங்களை கட்டி அமர வைத்திருந்தான். அதற்கு அவளோ, “நான் கூட கட்டி வச்சு ஏதோ பண்ண போறீங்கனு நினைச்சேன்” என்று ஏக்கத்துடன் ஏறி இறங்கிய மார்புடனும் கூறியிருக்க, அதுவோ அவன் மனதில் நீங்காத கல்வெட்டில் பொறிக்கப்பட்டது போன்று பதிந்துவிட்டது.
இப்போது அதை செயல்படுத்தவும் அவன் தவறவில்லை.
தன்னவளின் கண்களை கட்டியவனின் வலது கை பெரு விரல் உத்ராவின் இதழ்களை மென்மையாய் உரச, இதழ் பிரித்து உஷ்ண மூச்சுக்களை வெளியிட்டவளின் இதழில் இருந்து கரத்தை கீழிறக்கிய அபிமன்யு அவளின் கழுத்தை மென்மையாய் பற்றி, படுக்கையில் சாய்க்க,
“மா... மா...” என்றழைத்தவளின் குரல் உள்ளே இருக்க, அவளின் செம்பவள உதட்டில் விரல் வைத்து, “ஷ்ஷ்” என்றான் அந்த மன்மதனையே வெல்லும் வல்லமை வாய்ந்த சித்தார்த் அபிமன்யு.
தன்னவளின் புறம் சரிந்து சாய்ந்தவன், தன் பேரழகியை தழுவியிருந்த தங்க நிற டிசைனர் புடவையின் மாராப்பை விலக்க, ஏற்கனவே கட்டப்பட்டிருந்த விழிகளை இன்னமும் இறுக மூடிக் கொண்டாள் பேதையவள்.
மெத்தை விரிப்பை இறுக்கி பிடித்திருந்தவளின் வெட்கம் உணர்ந்த அபிமன்யு, “உன்னை அப்பப்ப குழந்தைன்னு எல்லாரும் சொல்றாங்கடி... அதை செக் பண்ணிடறேன்” என்று விரகதாபம் வழிய குரலில் குறும்பு தெறிக்க கணவன் கூறியதில் பெண்ணவளின் இதழ்கள் வெட்கத்தில் விரிய, அந்த கீழ் அதரங்களை முரடனாய் வலிக்கப் பிடித்த அபிமன்யு, அங்கு அழுத்தமாய் முத்தமிட்டு கழுத்திற்கு இறங்கி அடுத்த விநாடி, கோதையவள் அசந்த நேரம், மாராப்பை விலக்கியிருந்தான்.
டீப் வீ நெக் (Deep V neck) வைத்து முன்னே தைத்திருத்த ப்ளவுஸ் பெண்ணவளின் அபரிதமான அழகுகளை, அங்கு செழித்திருந்த மகரந்த பூக்களை காட்ட, சில்லிட்டு போய் தன் விழிகளை அகற்றாதவன், தன் ஆராய்ச்சிகளை நடத்தத் துவங்க, வெட்கத்திலும், மின்சாரமாய் பாய்ந்து மேல் மேனியில் ஓடும் உணர்வுகளில் பனியாய் உருகிக் கொண்டிருந்த உத்ராவின் நகங்கள் அபிமன்யு அணிந்திருந்த கையில்லாத பனியனை உணர்ச்சியின் மிகுதியில் பிடித்து முறுக்கியவளின் செவியருகே சென்றவன்,
“இப்படி ஒருத்தியை எப்படி சின்ன பொண்ணுன்னு சொல்றாங்களோ... குடுத்து வச்சவனுக்கு தான் தெரியும் குழந்தையா குமரியான்னு” என்றவனின் பேச்சில் தாமாக கைகள் சென்று தன் முன்னழகை மூடினாள்.
“இதெல்லாம் நான் பாதிக்கு பாதி ஷிப்லையே பாத்தாச்சுடி” என்றவனின் பேச்சில் மேலும் சிணுங்கியவள், விழி மூடியதால், அவனை தொட்டு உணர்ந்து தன்னவனின் விழிகளை மூடினாள்.
அடுத்து ஐஸ் பாக்ஸில் இருந்து ஐஸ் க்யூபினை எட்டி எடுத்த அபிமன்யுவின் இரு விரல்கள், தன்னவளின் நெற்றியில் துவங்கி, விழிகளை சுற்றி, நாசியின் நுனியை சிவக்க வைத்து, இதழ்களுக்கு வர, அச்சில் வார்த்த அதரங்களாய் இருந்த அவளின் இதழ்களின் அழகிலும், சூட்டிலும் ஐஸ் கட்டியும் வெகுவாக கரையத் துவங்க, ஆங்காங்கே சில்லென்ற நீர்த்துளிகள் முகத்தினில் பிரகாசிக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் மறந்து படுத்திருந்தாள் அபிமன்யுவின் மனையாள்.
ஐஸ் க்யூப்பை அப்படியே அவளின் கழுத்தில் வழிய விட்ட அபிமன்யுவின் இதழ்கள் பெண்ணவளின் இதழோடு விநாடி தாமதிக்காது பொருந்தியிருந்தது.
விடாது எழுப்பப்பட்ட உணர்வுகளில், பெண்ணவளின் தயக்கமும், வெட்கமும் கட்டவிழ்ந்து போக, தன்னவனின் இதழை தானும் சுவைக்கத் துவங்கினாள்.
இதுதானே அவன் எதிர்பார்த்தது.
இருவரும் நீண்ட நேரம் பரிமாறிக் கொண்ட முத்தங்களின் யுத்தம் இறுதியை அடைய, தன்னுடைய ப்ளைன்ட் போள்டை தளர்த்திய உத்ரா, “இதுக்கு மேல எதையும் பாக்காம இருக்க முடியாது...” என்று கவர்ச்சியான விழிகளுடன் கூறியவளின் பூவுடலை இரும்பென பற்றிப்பிடித்தான் அபிமன்யு.
மொத்தமாய் துகிலுரித்த அபிமன்யுவின் விழிகளை உத்ரா தன் கரம் கொண்டு மூடப் பார்க்க, அவன் இதழ் பதியாத இடங்களும், கரம் செல்லாத இடங்களும் இல்லாது போக, காமதேவன் செலுத்திய அம்புகள் அன்று வீறு கொண்டு அபிமன்யுவை அடைந்திருக்க, அபிமன்யுவின் பற்தடங்கள் பதிந்த மென்னுடல் உத்ராவின் மேனியில் கன்றிக் கிடக்க, ஆனால் அதை ஏற்றவளுக்கோ தன்னவன் கொடுத்த உணர்வுகளில் வலி என்பதையே உணரவில்லை.
தன் நகங்களை தன்னவனின் மார்பிலும் தோளிலும் பதித்து கீறி வைத்தவளுக்கு, தான் என்ன செய்கிறோம் என்று தெரியவும் இல்லை. புரியவும்இல்லை.
இருவரின் தேகமும் அடுத்த நகர்வுக்கு ஏங்க, காமம் கொடுத்த உஷ்ணத்தை தாங்க முடியாத உள்ளங்கள் இரண்டும், பிரிய மனமில்லாது இறுக அணைத்திருக்க, அபிமன்யுவின் இதழ்கள் மட்டும் தன் இதழொற்றல்களை நிறுத்திய பாடில்லை.
உடைகள் இன்றி இருப்பதனால், நிலவை அணுகிய ஆடவனின் தாபங்களும், மோகங்களும் எக்கச்சக்கமாக எழ, அடடா என்று அதிசயத்து போயிருந்தவன், எதையோ நினைத்து சிரிக்க, அபிமன்யுவின் காதருகே மயக்கம் கொண்டு, “யூஆர் டர்ன்னிங் மீ (you’re turning me)” என்று கிசுகிசுக்க, முழு காம தரிசனம் பார்க்க பறக்க துவங்கியிருந்தது அபிமன்யுவின் ஆண்மை.
முழுவதுமாக பனித் துண்டுகள் கண்டு நடுங்கியிருந்த உத்ராவின் மேனி அபிமன்யுவை அணைத்து, தெர்மோடைனமிக்ஸை உருவாக்க, ஆடவனுக்கு ரசாயன மாற்றங்களை பற்றி கூறவா வேண்டும்.
அபிமன்யுவின் அடுத்தக்கட்ட ஆட்டங்கள், இருவருக்கும் அதிசயங்கள் காட்ட, வேகத்தடைகள்பல கடந்த அபிமன்யுவை இறுக அணைத்துக் கொண்டவளின் பெண்மை காட்டிய இரு உணர்வுகளும்,
உத்ராவின் விழியில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை விட, அவன் அவளுக்குள் வசிக்க இன்பமாய் பரிதவித்தவள், தன் மந்திரனோடு பின்னி பிணைந்து கிடக்க, அபிமன்யுவின் அடுத்த தொடரல்கள் அறிந்த அவனின் மனையாள், அதற்கு தடை விதிப்பாளா?
அடுத்த நாள் காலை அபிமன்யுவின் மார்பில் இருந்து விழித்த உத்ராவின் மனக்கண்ணில், நேற்றைய இரவு அனைத்தையும் நினைவு படுத்த, வெட்கத்தில் கணவனின் மார்பில் சுருண்டவள், “சீக்கிரம் குட்டி அபிமன்யு வேணும்” என்றாள் ஆசையோடு.
கணவன் விழித்திருப்பதை பார்க்காமலேயே அறிந்துவிட்டாள்.
“அதுக்கென்னடி... கண்டிப்பா சீக்கிரமே...” என்றவன், “எனக்கு மூணு குழந்தை வேணும்” என்று கூற, காளையவனின் நெஞ்சில் நாடி குத்தி குறும்புடன் கணவனை பார்த்தவள், “அதுக்கென்ன ரெடி பண்ணிடலாம்” என்றிட, உத்ராவை கீழே கிடத்தி மேலே வந்த அபிமன்யு, தன் வேலையை காட்ட, மகுடிக்கு மயங்கிய பாம்பாய் ஆனாள் பெண்ணவள்.
அன்றைய வாரம் ஸ்விட்சர்லாந்து கிளம்ப முடிவெடுத்த அபிமன்யு தன் தேனிலவை பதினைந்து நாட்கள் வைத்திருந்தான். சும்மாவே ஐஸ் க்யூப்ஸை வைத்து விளையாடியவனை ஐஸ் மலைக்கு அருகே விட்டால் என்ன ஆகும்?
நடக்கக் கூடாது எல்லாம் நடந்தது!
எழுத்தில் அரங்கேற முடியாதது எல்லாம் அரங்கேறியது!
முழுதாக தங்களின் சொர்க்கங்களில் காதலோடு பயணித்தனர் இரு காதல் கொண்ட உள்ளங்களும்!
“Define him?”
“Hard to understand
Harder to leave
Easy for my safety
Purity for my soul
World for my eyes
Maturity for my Career
Easier for my childness”
– Uthra Siddharth Abhimanyu
“Define her”
“Smile is mine
But Reason is her...
Life is mine
But soul is her...
Anger is mine
But Relief is her...
Love is mine
But destination is her...
She’s inseparable from me
And that’s why I love you uthra“
– Siddharth Abhhimanyu
அடுத்த ஒரு வாரத்தில் நறுமுகையின் வளைகாப்பு கோலகலமாய் வீட்டிலேயே வைத்திருந்தவர்கள் மிக முக்கியமானவர்களை மட்டுமே அழைத்திருந்தனர். கன்னங்களில் சந்தனங்கள் மணக்க, நெற்றியில் குங்குமம் சிவந்து போய் அழகு பெட்டகமாய் நறுமுகையை காட்ட, நீரஜாவிற்கு அன்று கால்கள் அடங்கவில்லை. சிறு பெண் போன்று அனைத்து வேலையையும் இழுத்து செய்து கொண்டிருந்தார்.
விக்ரமை பற்றி சொல்லத் தேவையில்லை. சும்மாவே தன்னவளின் மீது காதல் கொண்டிருப்பவன் இப்போது அமைதியாக இருப்பானா. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான். நறுமுகையின் தாத்தா, பாட்டையையும் அழைத்து இருக்க, நறுமுகைக்கு அன்று ஊற்றெடுத்த காதலுக்கு அளவில்லை.
நீரஜாவையும், விஜய்யையும் ஆசிர்வதித்த நறுமுகையின் தாத்தா, பாட்டி, “நல்லா இருப்பீங்கமா.. மகராசியா இருடா சாமி” என்று மனதார வாழ்த்த, மற்ற தம்பதியர்களும் அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
உத்ரா வேலை செய்யச் சென்றாலும் ஒருவன் அவளை விட்டால் தானே! கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தனது தாகத்தை தணித்துக் கொண்டிருந்தான்!
“ஐயோ விடுங்க.. யாராவது பாக்க போறாங்க..” உத்ரா சிணுங்கலுடன் கெஞ்ச, “நீனாடி சீக்கிரம் நறு மாதிரி ஆகணும்னு சொன்ன.. வேணாமா?” என்று கேட்டவனின் கரம் சொல்ல முடியாத இடங்களுக்கு சென்று தனது அழுத்தத்தைக் காட்ட, “ஐயோ ட்ரெஸ் எல்லாம் கசங்குது” என்று கணவனின் நெஞ்சில் தள்ளிவிட்டு ஓடியவள், எதிரே ஏதோ தட்டை தூக்கிகொண்டு வந்த ஆரவ்வின் மீது இடித்துவிட, கையில் இருந்த மொத்த காபியும் அவனின் சட்டையிலும், பேன்ட்டிலும் கொட்டி ஆவி பறந்தது.
சூடு அந்தரங்க இடங்களில் எல்லாம் பாய்ந்து அவனை தடதடக்க செய்ய, உள்ளே இருந்து வந்த அபிமன்யுவை பார்த்தவுடன், “குட் மார்னிங் ஸார்” என்றவனிடம், “எனி ப்ராப்ளம் ஆரவ்?” சிரிப்பை அடக்கியபடி அபிமன்யு வினவ,
கீழே குனிந்து பார்த்துவிட்டு அபிமன்யுவை பார்த்தவன், “எனக்கு இல்ல ஸார்.. என் ஆளுக்கு தான் இது பிரச்சனை” கர்மமே கண்ணியம் என்று காத்து கூறிட, நுனி நாவை மேலுதட்டில் வைத்து கடித்த உத்ரா, அங்கிருந்து சிரிப்புடன் ஓடிவிட்டாள்.
அன்று மாலை இரு ஜோடிகளும் பார்னிற்குச் செல்ல, நறுமுகையின் மேக்ஸிமஸ் ஓடோடி வந்தது. அவளின் முன் வந்து நின்றவன் நீண்ட நாட்களாக தன் எஜமானி வராததில் கோபம் கொண்டு மூக்கில் இருந்து புகை வர கனைக்க, அவனின் முகத்தோடு தன் வதனம் சாய்த்தவள், “ஸாரி மேக்ஸிமஸ்.. ஸாரிடா” என்று கேட்க,
மேக்ஸிமஸின் அருகே வந்த உத்ரா, “இதுலதான் நீ பழகுனதா?” என்று வினவ, “ஆமா” என்ற நறுமுகை, “உத்ரா! பேசாம நீயும் கத்துக்க.. இவனை இப்ப நானும் ரைட் பண்ண முடியாது.. நீ வேணா பண்ணு” என்றிட, மிரண்டு போய் விழிகளை விரித்தாள் உத்ரா.
“ஐயோ! மாட்டேன்..” என்று உத்ரா முடிக்கும் முன்னே பின்னே இருந்த அபிமன்யு, அவளின் இருபுற இடையிலும் கை வைத்து, “ஏன் மாட்ட?” என்று கேட்டவன் அடுத்த விநாடி தன்னவளை இடையோடு தூக்கி ஒரு பக்கமாக மேக்ஸிமஸின் மீது அமர வைக்க, விக்ரமும் மேக்ஸிமஸ் நகராது பிடித்துக் கொள்ள, “அம்மா! இறக்கிவிடுங்க.. இல்லைனா தாத்தாக்கு கூப்பிட்டு மூணு பேரும் என்னை ரேக்கிங் பண்றீங்கனு சொல்லுவேன்” என்று மிரட்ட, தோள்களை ஒரே போல திமிராக குலுக்கினர் மூவரும்.
“காலை அந்த பக்கம் போடு” என்ற அபிமன்யு ஒரே தாவில் உத்ராவின் பின் ஏறி அமர்ந்துவிட, பதறிப் போனாள் பெண்ணவள். அதற்குள் அங்கிருந்தவர் நான்கு நாற்காலிகளை எடுத்து வந்து போட, விக்ரமும், நறுமுகையும் அமர்ந்து கொள்ள, மேக்ஸிமஸை கிளப்பினான் அபிமன்யு.
உத்ராவோ விழிகளை திறக்கவில்லை. பயத்தில் தன் பின் அமர்ந்து தனக்கு முன்னிருந்த ரெய்னை (கடிவாளம்) பிடித்திருந்த அபிமன்யுவின் கரங்களை இறுக பற்றிக் கொண்டவளுக்கு தெரியவில்லை, இன்னும் மேக்ஸிமஸ் தன் வேகத்தையே காட்டவில்லை என்று. அபிமன்யு கொடுத்த ஆணையில் மிகக் குறைவான வேகத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் அவன்.
“உத்ரா! கண்ணைத் திறடி” என்று அபிமன்யு கட்டளையிட, விழிகளைத் திறந்தவள், “பயமா இருக்கு” என்றாள் மேலும் கணவனோடு நெருங்கி அமர்ந்து.
“இப்படி இருந்தா நீ கத்துக்க முடியாது உத்ரா.. லீவ் மை ஹான்ட்.. நான் சொல்றதை கேளு” என்றவனின் அதிகாரக் குரலிலும், அதில் தெறித்த தீர்மானமான ஆணையிலும் பட்டென கரத்தை எடுத்துவிட்டாள் வஞ்சியவள்.
அடுத்து அபிமன்யு அவளுக்கு தைரியத்தை ஊக்குவித்தவன், “நீ இன்னும் இரண்டு தடவை இவன் கூட பழகிட்டா எதுவுமே தெரியாது.. பயம் மட்டும் இருக்கக் கூடாது.. இதுல நிறைய டைப்ஸ் இருக்கு” என்று அபிமன்யு ஹார்ஸ் ரைடிங் வகைகளை தன்னவளுக்கு கற்றுக் கொண்டிருக்க, பெண்ணவளின் செவிகளில் பட்ட ஆடவனின் மூச்சுக்காற்றும் அவ்வப்போது பேச்சின் மும்முரத்தில் உரசிய இதழ்களும், அவளுக்கு சலனத்தைக் கொடுக்க, மேலும் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பது அவளின் சித்தத்தை கலைக்க, கீழுதட்டை கடித்து தலை தாழ்த்தியவள், இரு மணித்துளிகள் கழித்து இலேசாக சிவந்த விழிகளுடன் கணவனை திரும்பிப் பார்க்க, தன் உள்ளத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தவளின் மயக்கும் மந்தார பார்வையை இந்த அபிமன்யுவால் புரிந்துகொள்ள முடியாதா என்ன?
“என்னடி? மூட் சேன்ஞ் ஆகிடுச்சா?” என்று நேரிடையாகவே கேட்க, “ச்சி” என்று நாணத்தில் தலையை மீண்டும் முன்னே திருப்பிக் கொண்டவள், “ஒண்ணும் இல்லை” என்றாள்.
“ஓஹோ” என்றவன் கீழே இறங்க எத்தனிக்க, “எங்க விட்டுட்டு போறீங்க” என்று கத்தியவளின் கத்தலில், “அந்த பயம் இருந்தா சரி” என்றவனின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவள் உர்ரென்று முன்னே பார்த்து அமர, “மேக்ஸிமஸ்!!!” என்று அபிமன்யுவும் கனீர்க் குரலில் உத்தரவிட,தன்னுடைய முன் கால்களை உயர்த்தி கம்பீரக் கனைப்புடன் மேக்ஸிமஸ் காற்றில் தூக்க அரண்டு போய்விட்டாள் பெண்ணவள்.
“விடுங்க.. நான் போறேன்“ என்று கோபித்துக் கொண்டு உத்ரா இறங்கி அங்கு அவர்களுக்கு என்று இருந்த அறைக்குள் செல்ல, ஒரே எட்டில் புழுதி பறக்க கீழே குதித்து இறங்கிய அபிமன்யு, “ஏய் நில்லுடி” என்று பின்னேயே செல்ல, திரும்பி கணவனிடம் உதட்டைச் சுளித்தவள் நிற்காமல் நடந்து செல்ல, தன்னவளின் செழித்த பின்னழகையே பார்வையை அகற்றாது தன்னவளுடன் அறைக்குள் நுழைந்தவன், கதவை படீரென்று அடித்துச் சாத்தி, தன்னவளின் குதிரை வாளை பிடித்து இழுக்க, “ஆஹ்” என்று வலியை வெளிப்படுத்தியவள், தன் பின் மேனி கணவனின் முன் மேனியில் சாய நின்றாள்.
தன்னவளின் தலையில் இருந்து பேன்டை கழற்றி, தலை முடிகளை விரித்து விட்டவன், பெண்ணவளின் அடர்த்தி வாய்ந்த சிகையை தன் முரட்டு விரல்களால் அதனுடைய பட்டை உணர, கணவனை நோக்கித் திரும்பிய உத்ரா, “வெளிய மாமாவும் நறுவும் இருக்காங்க” என்று மயக்கம் ஏறிய விழிகளுடன் கூற, தன்னவளின் இதழை சிறை செய்த அபிமன்யு, தன்னவளுடன் காதலும் தாபமுமாக கூட, மெய் சிலிர்த்துப் போன உத்ரா கணவனின் தோள்களை இறுக்கமாகப் பற்ற அபிமன்யுவுடைய மேன்னோவார் சத்தமாய் கனைத்தான்.
உத்ரா கோபித்துக் கொண்டு இறங்கி வந்தது, அபிமன்யு பின்னேயே சென்று கதவை அடைத்தது அனைத்தையும் கண்ட விக்ரம் இதழுக்கிடையில் புன்னகைத்து, ஒற்றை விரலால் நெற்றியை நீவ, கணவனின் அருகே அமர்ந்திருந்த நறுமுகை, “அண்ணனுக்கும் தம்பிக்கும் இதுல மட்டும் ஒரே ஜீன் போல” என்று சமயம் பார்த்து கொட்ட, “அன்னைக்கு என்னைவிட மேடம்தான் ரொம்ப ஃபோர்ஸா இருந்தீங்க..” என்று நினைவு கொணர்ந்தவனாய் விக்ரம் கூற, பெண்ணவளின் வெட்கம் வானை பிய்த்துக் கொண்டு சென்றது.
இருந்தும் தன்னை மறைத்தவள், “மாமாவாது ஹார்ஸ் ரைடிங் தெரியாத உத்ராவுக்கு கத்துக் கொடுக்க கூட்டிட்டு போனாரு.. ஆனா நீங்க எட்டு மாசத்துக்கு முன்னாடி ஹார்ஸ் ரைடிங்ல எல்லா வகையும் தெரிஞ்சவலையே அது கத்துத் தர்றேன் இது கத்துத் தர்றேன்னு கடைசில..” என்றவளுக்கு சொல்ல முடியாது இதழில் புன்னகை எட்டிப் பார்க்க, செங்கொழுந்தாய் சிவந்த முகத்தை சிரமப்பட்டு அடக்கியவள், கணவனை அடிபோட, அன்னையின் மீது இப்போதே ஆயிரம் பாசம் வைத்திருந்தாலும், லட்சம் காதல் கொண்டிருந்தாலும், தந்தையை அன்னை எட்டி உதைத்தவுடன், சட்டென அன்னைக்கு ஒரு குத்துவிட்டான் உள்ளிருந்த குட்டி விக்ரம்.
“ஆஹ்..” என்று வலியில் இடுப்பை பிடித்தவள், “உதைக்கறான் உங்க மகன்” என்று வயிற்றை தடவிக் கொடுத்து, “இந்த பரம்பரை வாரிசா தவறாம பிறக்கப் போறான்னு நினைக்கறேன்.. என் மருமகளை நினைச்சா..” என்று இப்போதே விசனப்பட்டவள்,
கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு நிம்மதியுடன், “ரொம்ப ஹாப்பியா இருக்கு மாமா.. அபி மாமா மட்டும் தான் கொஞ்சம் ஒரு மாதிரி உத்ரா கூட விலகி இருந்தாங்க.. இப்ப எல்லாம் ஓகே” என்றவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான் அவளின் உயிர்க் கணவன்.
“அன்னைக்கு உத்ராவுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்துச்சு.. அபியோட லைஃப்” என்று ஒரு கணம் நிறுத்திய விக்ரம், “ரொம்ப கஷ்டம் நறு.. அந்த பாடியை பாத்து அபி உடைஞ்சு போய் அங்கேயே உக்காந்தது ஞாபகம் இருக்கா? பிசினஸ்ல இன்னும் வெறியா இறங்கி இருப்பான்.. ஆனா பர்சனலா நம்ம பாக்கிற அபிமன்யு டோட்டலா மாறி போயிருக்க நிறைய சதவீதம் வாய்ப்பு இருக்கு” என்று பெருமூச்சோடு முடித்தவன், “இப்ப மொத்தமா அபிமன்யுவோட எல்லாமும் உத்ரா.. உத்ரா தான் அபிமன்யுவோட வீக்நஸ்னு யாராவது கை வைக்க நினைச்சா.. அவனோட முடிவு ரொம்ப பயங்கரமா இருக்கும்” என்ற விக்ரமின் வார்த்தைகள் எந்தளவிற்கு உண்மை என்பதை நறுமுகையும் உணர்ந்திருந்தாள்.
கணவனின் தோளில் மேலும் சாய்ந்தவள், “லவ் யூ” என்று புஜத்தில் முத்தமிட, சிறிது நேரம் அமர்ந்திருந்தவன், தன்னுடைய ஆங்கஸின் மீது ஏறி பறக்க, மேக்ஸிமஸ் வந்து எஜமானிக்கு துணையாய் நின்று கொண்டான்.
உள்ளே உடைகளை சரி செய்த உத்ரா, “எப்ப பாரு நீங்க ஏதாவது செஞ்சு இப்படி எல்லாம் பண்ணிடறீங்க” என்று குறை கூற, குரலை செருமிய அபிமன்யு, “நான் ஒழுங்க உனக்கு ஹார்ஸ் ரைடிங் கத்து தந்துட்டு இருந்தேன்.. நீ பாத்தே மயக்கிட்டு இப்ப என்னை சொல்றியாடி?” என்று வினவ, தன்னுடைய மேல் சட்டையை எடுத்து போட்டவள்,கை கால் முகம் கழுவிவிட்டு தலைக்கு ரப்பர் பேன்டை போட்டபடி வெளியே வர, அபிமன்யுவும் உடலை முறுக்கியபடி வெளியே வந்தான்.
வந்தவனின் முன் மேன்னோவார் வந்து ஆக்ரோஷத்துடன் நிற்க, ஒரே தாவில் ஏறிய அபிமன்யு, “மேன்னோவார்!!!” என்று கட்டளையிட்டு, ரெய்னை பிடிக்க, அபிமன்யுவும், விக்ரமும் போட்டி போட்டார்களோ இல்லையோ, மேன்னோவாரும், ஆங்கஸும் பறந்து தீர்த்துவிட்டனர்.
***
அடுத்த ஒரு வருடத்தில் கௌதம் மணவறையில் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே பெண் சிற்பமாய் அமர்ந்திருந்தாள் திலோத்தமை.
பெரியோர்கள் அனைவரும் மனநிறைவோடு மணமேடையில் நின்றிருக்க, நீரஜாவும் விஜய்யும் அருகருகே என்றும் இல்லாத நிறைவுடன் நின்றிருந்தனர். அவர்களுடைய கல்லூரி நண்பர்கள் சிலரை எல்லாம் திருமணத்திற்கு விஜயவர்தன்அழைத்து வைத்திருக்க, இருவருக்கும் இருக்கும் பெருமை பற்றி சொல்லவா வேண்டும்.
கையில் பத்து மாத மகனை வைத்துக் கொண்டு நறுமுகை கணவனுடன் பேசிக் கொண்டிருக்க, மனையாளிடம் இருந்து மகனை வாங்கிய விக்ரம், உர்ரென்று இருந்த மகனின் கன்னத்தில் முத்தமிட, கீழ் பற்கள் தெரிய கன்னங்களில் குழி விழ அழகாய் சிரித்தவன், கைகளைத் தட்ட, அவனின் சத்தத்தில்அருகே எட்டு மாத மேடிட்ட வயிறுடன் நின்றிருந்த உத்ராவின் மகவு உள்ளே இருந்து உருண்டு அன்னையினுள் விளையாட, கணவனை பார்த்து புன்னகைத்த உத்ரா, “உங்க மகன் ஆரம்பிச்சுட்டான் உதைக்க” என்று வயிற்றை தடவிக் கொடுக்க, சரியாக முகூர்த்த நேரத்தில் மனைவியோடு வந்தான் இந்திரஜித்.
அவர்களுடன் வந்த இன்பா பிரபஞ்சனின் விழிகளும், மித்ராவின் விழிகளும் சந்தித்து மீள, அடுத்த காதல் கதை உருவாக ஒரு மேடையை உண்டு செய்து கொண்டிருந்தது இத்திருமண மேடை.
உத்ராவிற்கு இப்போது தனி நடன பள்ளி வைத்து கொடுத்திருந்தான் அபிமன்யு. அவளது பிறந்தநாளன்று அவளுக்கே தெரியாது கூட்டிச் சென்று அவள் கரத்தாலேயே திறக்க வைத்திருந்தான். முதலில் இருந்ததை விட இப்போது பன்மடங்கு காதல் கூடியிருந்தது.
இந்திரஜித்தின் மனைவியை பார்த்த உத்ரா, “இது...” என்று துவங்க, மனையாளின் வாயை பொத்திய அபிமன்யு, “சஸ்பென்ஸை உடைக்காத... அத நம்ம ரைட்டர் அடுத்த கதைல சொல்லிடுவாங்க” என்று கூற தலையாட்டிவள், இந்திரஜித்தின் மனைவியின் அருகே சென்று நின்று பேசத் துவங்கிவிட, நறுமுகையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
மங்கல நாண் பூட்டி, வாழ்வின் சரிபாதியாக கௌதம் திலோத்தமையை ஏற்றுக்கொள்ள, அபிமன்யுவும், விக்ரமும், இந்திரஜித்தும் தோளோடு தோள் கரம் போட்டு நிற்க, பெண்கள் அனைவரும் பேச்சில் லயித்திருக்க, விக்ரமின் மகன் மீண்டும் கை தட்ட, அபிமன்யுவின் மகன் வயிற்றினுள்அசைந்தான்.
*செக்மேட்*