anbin mozhi – 19

அன்பின்  மொ(வி)ழியில் – 19

 

 

விகர்த்தனன் (சூரியன்) தன் பணி செய்ய, மெல்ல துயில் களையும் வேளையில், பெண்ணவளோ உறக்கம் இல்லா மயக்கத்தில், தன்னிலை எண்ணி கலங்கியிருந்தவள் மெல்ல விழிகளை திறந்தாள்.

 

மனம் முழுவதும் வெறுமை சூழஇத்தனை நாட்கள் எதிர்காலத்தின் மீது இருந்த கனவுகள் அனைத்தும்  ஒரே நாளில் கருகிய நிலையில்ஏதும் செய்ய முடியாமல் தன் தலையெழுத்தை நொந்தபடி ராமின் இறுகிய அணைப்பில் அடைக்கலம் ஆகி இருந்தாள் கயல்விழி.

 

நேற்றைய இரவில் நடந்தது அவளின் கண்களின் முன்னே வந்து நர்த்தனமாடியது. அவனைக் காக்க வேண்டி ராமின் அருகே நெருங்கியவளை அவனுக்கு அடையாளம் கூட தெரியவில்லை.

 

 

சார், உங்க கிட்ட முக்கியமான சில பேப்பரில் சைன் வாங்கச் சொல்லி, ராஜ் சார் சொன்னாங்க, ப்ளீஸ் வாங்க! உங்க ரூம்லதான் அந்த பைல் இருக்கு என்ற கயலின் வார்த்தைகள் சிறு நடுக்கத்துடன்,  தடுமாற்றியபடி வெளிவந்து விழுந்தன.

 

தான் சொல்வதை நம்பி அவன் தன்னுடன் வரவேண்டுமேஎன்ற அவசரம் அவளுக்கு. விஜயின் கண்களில் இருந்து தப்ப வேண்டிய  நிலையில், பாவம் அவளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது.

 

ராமிற்கு அவளின் முகமோவார்த்தைகளோ, எதுவும் மனதில் பதியவில்லை.

 

ராஜ் என்ற வார்த்தையை மட்டும்  புரிந்து கொண்டவன், கிறக்கமாக,

 

நீ… நீங்க… ராஜ் அங்க இருக்கானா? ஆமா, ஏன் புள்ள?  இந்த அறை ஆடிக்கிட்டே இருக்கு?, நீ என் கூட… இல்ல இல்ல, நான் உன்கூட வாரது கூட இந்த மயக்கத்துக்கு காரணமா, இருக்குமோ? என்று ஏதேதோ உளறிக் கொண்டே அவளின் பின்தொடர்ந்தவன், தனது அறைக்கு வந்தவுடன்  மாறிப்போன விந்தை எப்படி என்று அவள் அறியவில்லை.

 

போதை என்பது ஒரு ஒழுக்கமான மனிதனை கூட எப்படிப்பட்ட  தீய எண்ணங்கள் மனதில் விதைக்கும் என்பதை அறிந்தவர் எவரும் இல்லை…

 

கொலை, கொள்ளை, வன்கொடுமை, தற்கொலை எண்ணம், குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை, என நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படையாய் அமைவது   இவ்வகை மது, மற்றும் போதை பொருட்கள் அனைத்தும் தான்.

 

அரசே குடிக்க வழி செய்து கொடுக்கும் இன்றைய அதி நவீன உலகில்கேவலமான இவ்வகை குற்றங்கள் பெருகுவதில் வியப்பேதும் இல்லை.

 

ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசித்திரமான உலகில் வெற்றியை கொண்டாட சோசியல் ட்ரிங்க் என்று கவுரவமாக அழைத்து நடத்தப்படும்  கேளிக்கை கூத்துகளும், பார்ட்டிகளும் அழிவை நோக்கியே இன்றைய இளைய தலை முறையினர்களை  நகர்த்தி செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

 

 

தன்னை அறியாமல் ராமிற்கு போதை மருந்து கொடுக்கப்பட்டாலும் அது, அதன் வேலையை செவ்வனே தொடங்கி விட்டது.  இனி நடப்பது விதியின் செயலாக மாறஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவனோ, தடுமாறி தன் மீது விழுந்தவளை மதியிழந்துதன்னவளாக்கிக் கொண்டான்.

 

போதை படுத்தும் பாடு பெண்ணவளை தன்னுள் எடுத்துக் கொள்ள தூண்ட, அவனுள் ஆர்ப்பரித்த  உணர்வுகளின் கலவையில்ராஜ போதையின் உச்சத்தில், நிலைதடுமாறி  ராம், அதன் வலையில் அழகாக விழுந்து விட்டான். அவனின் மரியாதையை காப்பாற்ற நினைத்தவளையே, களவாடியவனை என்ன செய்வது?

 

இரவு முழுவதும் கண்ணம்மா, பட்டு, தங்கம், உன்னோட ஸ்பரிசம் என்னமோ செய்யுதுடி, மாமன!என்று விடாது பிதற்றிக் கொண்டே, அவளை ஆதியோடு அந்தமாய்,   கயலை மொத்தமாய் திருடி கொண்டவனை அவளால் இப்போது கூட தவறாக எண்ண முடியவில்லை.

 

அவளுக்கு தெரியும் இதை எதையும் அவன் சுய நினைவுடன் செய்யவில்லை என்று. அவள் அறிந்த வரை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும்  பார்க்காமல் இருந்தாலும், அதே நேரத்தில் பெண்கள் மீது எந்த மரியாதை  இல்லாதவன்  தான் ராம்.

  

இது வரை, அவளின் முகம் கூட அறியாதவன், காலையில்  நினைவு திரும்பியவுடன் அவளை எவ்வளவு கேவலமாக நினைப்பான் என்பதை எண்ணியவளின் மனம் வேதனையில் வெம்பி ததும்பியது.

 

தன்னுடன் வேலை செய்யும் பெண்களின் எண்ணம் போல, கயல்விழியையும், காசுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்க்கைகாகவும்,   இத்தகைய கீழ்த்தரமான செயலில் இறங்கியதாக எண்ணி அவனின் வார்த்தைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது என்று அஞ்சியவள் உள்ளம்ஓடி ஒளிந்து கொள்ள சொல்லியதை உணர்ந்தவள், மெல்ல அவனின் கரங்களில் இருந்து வெளியே வந்த போதும், முழுமையாக பிரிய முடியாத படி அவளின் கார் குழல் ராமின்  வெந்நிற கைகளில் சிக்கியிருந்தது.

 

கூடவே அவனின் உதடுகளில் புன்னகையுடன் கண்ணம்மா என்று கிறக்கமாக  ஒலிக்க அவனின் உறக்கம்(மயக்கம்)?, களையும் முன் அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள், அடுத்த ஒரு மணி நேரத்தில் விடுதி அறையின் தனது கட்டிலில் கைகளில் தலையை தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள்.

 

ஓடி ஒளிவது எதற்கும் தீர்வாகாது என்று தெரிந்த போதும் கூட, பேதை உள்ளம்  அதை ஏற்கவில்லை, ஏதேதோ சிந்தனையில் இருந்தவள், இறுதியாக ஒரு தீர்மானதுடன் ராஜிற்கு தனது ராஜினாமா கடிதத்தை மின் அஞ்சல் மூலம் அனுப்பியவள், தன் சான்றிதழ்கள், தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

 

                    **********************

 

கயல் சென்று பல மணி நேரங்கள் கழித்து கூட ராம் உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளவில்லை. மயக்கத்தில் பிடியில் இருந்தவனின் காதுகளில் விழுந்தது கைகளினால் மேளம் தட்டிக் கொண்டே, ஒரு மாதிரி பாடல்  பாடும் குரல்.

 

அதுவும் மிகவும் பழக்கப்பட்ட குரலாக தெரிந்ததில் பிரிக்க மறுத்த இமைகளை மிகவும் சிரமப்பட்டு பிரித்தவன் எதிரே, அவனின் அத்தை  பெத்த முத்துஅரண்ட வாலு விஷ்ணு, கண்களில் குறும்புடன் அருகில் இருந்த டேபிளை தட்டியவாறே பாடி கொண்டிருந்தான்.

 

 தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்…                 

 தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்…

இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி…   

என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி  சாமி சாமி…

சாராயத்தை ஊத்து… ஜன்னலைத்தான் சாத்து         

சாராயத்தை ஊத்து… ஜன்னலைத்தான் சாத்து…

 

 ஏலே பக்கி! காலங்காத்தால பாட்டா பாடுற பாடவதியா இருக்கு, தொரைக்கு பாட நல்ல பாட்டே கிடைக்கலயாலே?”, மிச்ச சொச்ச போதையில் ராம் உளறிக் கொட்ட.

 

என்ன? காலங் காத்தாலையா? உச்சி வெயில் மண்டைய பொழக்குது, என்னவோ கருக்களுல எழுந்த மாதிரி ஆக்கெட்ட (அலப்பறைய) கிளப்ப கூடாதுஎன்று கேலியில் இறங்கியவன், கண்களில் கேலியுடன்  வெக்கப்படுவது போல முகத்தை வைத்து கொண்டு,

 

நீங்க, இப்போ நான் வந்தப்போ இருந்த கோலத்தை பார்த்து வேற என்னத்த பாட மச்சான்? பெண்ணின் சிணுங்களில் சொன்னவன்,

 

 கண்ணக் கொண்டு காண முடியல, நல்ல வேலை நான் பையனா போயிட்டேன், அப்படி இல்லாம இதே உங்க  அத்தை மகளா இருந்தா, இந்நேரம்  உங்க கற்பு எல்லாம் காத்தோட எங்கோ போயிருக்கும்என்றான் நக்கலாக கண்களை சிமிட்டி.

 

விஷ்ணுவின் வார்த்தைகளை முழுதாக உணர, ராமிற்கு சில வினாடிகள் பிடித்தது. திடுக்கிட்டு போர்வைக்குள் தலையை விட்டு பார்த்தவன் முகம், அந்தி சாயும் நேரத்தில் ஒளிவீசும் செவ்வானம் என சிவந்து விட்டது.

 

ராம் தன்முக சிவப்பை மறைக்க முயன்றவாறு,

 

நீ வேற ஏன்டா கடுப்ப கெளப்புற? தெரியாத்தனமா ஏதோ கருமத்தை குடிச்சுத் தொலைச்சுட்டேன் போல, நேத்து ராத்திரி நடந்தது  ஒரு மண்ணும் நினைவுல இல்லை வினிஎன்று கண்களை சங்கடமாக சுவற்றின் மீது  பதித்து  கூறியவனின் கரங்கள் போர்வையை தன்னுடன்  இறுக்கி கொண்டன.

 

இரவு நடந்தது எதுவும் போதை தெளிந்த பிறகு ராமிற்கு ஞாபகம் வரவில்லை, அதோடு அவன் விழித்த போது விஷ்ணு உடன் இருக்க  அனைத்தையும் இலகுவாகவே எடுத்துக் கொண்டவன், யாரோ தனக்கு எதிராக செய்த மட்டமான செயலை, தற்செயலாக நடந்ததாக எண்ணி விஷ்ணுவிடன்   கலகலக்க ஆரம்பித்து விட்டான்.

 

தான் சிரித்து மகிழ்ந்திருக்கும் இதே வேளையில், தன்னால் ஒரு பெண் தன் வாழ்வை இழந்து நிற்பதை பாவம் ராம் அறியவில்லை. இயல்பாய் அவன்  வாழ்வு செல்ல அதில் ஒரே ஒரு மாறுதல், ராமின் இரவுகளில் நிகழ்ந்தது. சலனமற்ற மனதுடையவனின் கனவுகளில் ஒரு பெண்ணும், அவளின் ஸ்பரிசமும்  ராமை உருகி, அவனை அவை  ஒரு வழி செய்தன.

 

அவளின் கனா கூடல்கள் அற்ற இரவே, அதன் பின் அவன் நித்திரையில் இடம் பெறவில்லை.

 

செல்வம் கூட சில சமயங்களில், வரவர மச்சான், நீ ஒரு மார்க்கமா இருக்கஎன்று கிண்டல் செய்யும் அளவுக்கு, அவனில் இரண்டற கலந்து விட்டாள் அந்த தேவதை பெண்.

 

                     *********************

 

 மனையில் சூழ் கொண்ட மங்கையவளை அமர்த்தி, தலை நிறைய பூவை வைத்து,  மஞ்சள், சந்தனம், பூசி, தாயற்ற அவளுக்கு தாயாக மாறிய அந்த மலைசாதி மக்கள், அவர்களின் வழக்கப்படி புதுவரவாக உதிக்கப் போக்கும் பிஞ்சுகளுக்கு வளைகாப்பின் மூலம் வரவேற்பளிக்க,

 

அவர்களின் அன்பில் கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள் கயல்விழி. இங்கு வந்த பின்,   தான் பிள்ளை உண்டாகி இருப்பதை அறிந்தவுடன் நடுங்கி போனாள்.

 

கர்ப்பமாகி இருப்பதை உடையவனிடம், அவனுடைய குடும்பத்தில் சொன்னால் எந்த மாதிரியான வார்த்தைகளை கேட்க நேரிடும் என்பதை  மனதோடு யோசித்தவள்  காதுகளில்.

 

இது எம்புள்ளதான் என்கிறதுக்கு ஆதாரம் என்ன? எனக்கே தெரியாம, எவ்வளவு கீழ்த்தரமான நடந்திருக்குற?’ என்று ராமின் ரௌத்திரமான குரலும்

 

 நீ இவன் கூட மட்டும் இருந்தியா இல்ல…சாட்டையடியான நக்கலும் எதிரொலிக்க, அதனைத் தொடர்ந்து,

 

இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம், பணத்துக்கான என்ன வேணா பண்ணுவாங்க ராம்… இவளை நம்ப கூடாது  என்று சில பெண்களின் பரிகாசக் குரலும் கேட்க காதுகளை, தன் கைகளை கொண்டு இறுக மூடிக்கொண்டு சிலையென நின்று விட்டாள்.

 

பின் தன்மணி வயிற்றை பிடித்து கொண்டவள்,

 

இல்லை இல்லை இதை அவுங்க  யாருக்கும் சொல்ல மாட்டேன், இது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு, என் வாழ்க்கைக்கான பிடிமானம் யாருக்கவும் இந்த உயிர அசிங்கமாக பேச விட மாட்டேன்என்று தனக்கு தானே சத்தமாக சொல்லிக் கொண்டவள் மனதில்.

 

 இனி அவளின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்ற  வரைபடம் தோன்றியது. காலம் அதன்  போக்கில் வேகமாக நகர… இதோ வளைபூட்டும் விழாவும் விமரிசையாக முடிந்திருக்கிறது.

 

பெரிய வயிற்றில்  வளையல்கள்  அணிந்த கரங்களை பதித்து, சற்று முன் தோன்றிய நிலவை ரசித்து கொண்டிருந்தாள் கயல்விழி.

 

மேகங்கள்  சில கைகளை எட்டும் தூரத்தில் மிதந்து செல்ல, வானம் மெல்லிய தூறலை கயல் மீது பொழிய, அந்த பகுதி அவளின் மனதிற்கு சொல்ல முடியாத அளவுக்கு அமைதியை கொடுத்தது.

 

வாழ்வை எதிர் நோக்க அஞ்சி வந்தவளை அரவணைத்து கொண்ட பூம்பொழில் ஒரு அழகிய மலை (மழை) கிராமம்.

 

மனதில் வஞ்சம் வைத்து மற்றவர் மனம் புண்படும் படி பேச தெரியாத வெள்ளந்தியான மக்கள், இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கை, தூய்மையான காற்று, தேனை ஒத்த சுவையுடைய சுனைநீர்

 

விஷத்தை உரமாக போட்டு மண்ணை மலடாக்காமல், இயற்கை உரம் கொண்டு பூமி தாயின் மடியில் விளையப்படும் பொருட்கள் தனை உணவாக கொண்டு வாழும் இந்த இடம், அவளுக்கு பூலோக சுவர்க்கம் போல் தோன்றும்.

 

கைகளை சூடு பறக்க தேய்த்து,  கன்னங்களில் வைத்து கொண்டு, சூழ் கொண்ட நிலையில் அந்த முழுமதியை போல் நின்றவாறு, அந்த அழகிய பின் மாலைப் பொழுதை ரசித்தவளின் செவிகளில் விழுந்தது ஒரு இனிமையான குரல்.

 

உனக்கு எத்தன முறை சொல்றது கயல்!  இப்பவோ, அப்பவோன்னு வயித்துல புள்ளைகள வச்சுக்கிட்டு, பொழுது பொட்டு (ஆதவன் மறையும் நேரம்) இப்படி வந்து நீங்க கூடாதுன்னு, எதையும் கேக்குறது இல்லஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, என்ன பண்ண முடியும்?  இங்குட்டு நிக்காம செத்த வீட்டுக்குள்ள வாஎன்றவள் பேசியவாறே தனது தோழியை நெருங்கினாள் அந்த எழில் பொருந்திய மலைசாதி மங்கை.

 

உறவற்ற கயலுக்கு உறவின் மொத்தமாய் அமைந்த  நட்பு. பார்த்த சில நிமிடங்களில் காதல் மட்டும் மலர்வதல்ல… ஒத்த அலைவரிசை உடைய உள்ளங்களில் உள்ள அன்பும், பார்த்த சிறு நொடியில்  நட்பாக  உருவாக்க முடியும் என்பதிற்கு இலக்கணமாய் அமைந்து ரம்யாவுடனான கயலின் தோழமை.

 

 இங்கு  வேலைக்கென வந்த போது ஓய்ந்து போய் இருந்தவளை, எதுவும் சொல்லாமல் எதையும் கேட்காமல் ஏற்றுக் கொண்ட ரம்யாவின் தூய அன்பே  கயலுக்கு, வாழ்வை எதிர்நோக்கும் துணிவை தந்தது.

 

அதுவும், தான் சூல் கொண்டதை உணர்ந்த நொடி முதல் ரமியின் தோள்கள் தான் கயலை தங்கின… ரம்யாவுக்கும் அவளின்  சோகத்தில் இருந்து மீண்டு வர கயலின் வரவு காரணமாக அமைந்து.

 

பள்ளிப் பருவத்திலேயே சிறு பறவையென பறந்து திரிந்தவளை, சிறகுகளை உடைக்க எண்ணிய விதியின் செயலால், தன் தாய் இறக்கும் தருவாயில், அவளின் மாமனுடன் நடந்த  திருமணத்தில் அதிர்ந்திருந்தவளை மேலும் சோகத்தில் தள்ளியது அன்னையின் மரணம்.

 

மெல்ல இயல்பிற்கு திரும்பியவளை அவளின் விருப்பம் போல் படிக்க வைக்க விரும்பிய  ரம்யாவின்  மாமன் சேது,  நீ நல்லா படி கண்ணு! எதையும் யோசிக்காத படிக்கிற வயசுல உன்னைய…  நான் வந்து, அது… அக்காவோட கடைசி ஆசை, அதான்… எதையும் யோசிக்காமல், கண்ணாலம் பண்ண வேண்டியதா போச்சு…என்று  தயங்கியவாறு கூறியவன்.

 

 நீ எப்பவும் போல இரு, நம்ம சேர வேண்டிய நேரத்துல எல்லாம் தானவே நடக்கும்என்ற  சேதுவின் சொல்லில், கணவனாய் மட்டும் இல்லாமல் நல்ல மனிதனாய் உயர்ந்து நின்றான் ரமியின் மனதில்.

 

அதன் பின் நடந்தது அத்தனையும் விதியின் செயலே… ரம்யாவின் தந்தை கயலிடம் சொல்லியவை இது. அத்தனையும் கேட்ட போது, தன்னைப் போல் வாழ்வில் விதியால் வஞ்சிக்கப் பட்டவள்  என்பதை அறிந்து அதிர்ந்து போனாள் கயல்விழி.

 

                        **********************

 தன்னை அக்கறையுடன் கவனித்து கொள்ளும் ரமியின் அன்பில் கண்கள் கலங்க..

 

நான் வாரேன் ரமி! கொஞ்ச நேரம் கழித்துஎன்று கூறியவளின் அருகில் வந்த ரம்யா, தன் இடையில் கரங்களை பதித்து முடிந்த மட்டுக்கும் முறைப்பை தன் தோழிக்கு பரிசாக அளித்தவள்.

 

 இப்போ வரப்போறியா, இல்லையா? புள்ளைகளை என்கிட்ட நல்லபடியா  பெத்து கொடுத்துட்டு, எவ்வளவு நேரம் வேணா வந்து  இந்த நிலாவ பாத்துகிட்டு நில்லு நீஎன்று கடுப்பாக கூறியவள், கயலின் கரங்களை பற்றி வீட்டினுள் அழைத்து வந்து.

 

 கயல் இரு, பால்ல மிளகு, மஞ்சத்தூள் பனங்கற்கண்டு போட்டு வெது வெதுன்னு  கொண்டு வாரேன்என்று அடுப்படிக்கு சென்றவளை தடுத்தது கயலின் அம்ம்ம்மா….முகத்திலும் குரலிலும் வலியின் வேதனையைத் தாங்கிய கதறல்.

 

 ரமியின் முகம் ஒரு நொடி பயத்தில் வெளுத்து விட்டது. பின் சூழ்நிலை உணர்ந்து கொண்டு கயலின் அருகில் வந்தவள்.

 

 கயல் என்னடா… பயப்புடகூடாது, கதிர் அண்ணாகிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன், கொஞ்சம் வலி பொறுத்துக்கோ! இப்ப வந்துடுவாங்கஎன்றவள் ஆதரவாய் கயலை தன்மீது சாய்ந்து கொண்டு மலைகுடில் டிரைவர் கதிருக்கு கால் செய்தாள்.

 

கதிர் அழைப்பை ஏற்றவுடன் அண்ணா கயலுக்கு புள்ளவலி  வந்திருச்சு போல சீக்கிரம் வாங்கஎன்றாள் நடுங்கும் குரலை மறைத்தபடி.

  

இதோ வரேன்மா, பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்கதிரும், உடன் தனது அன்னையை அழைத்துக்கொண்டு, கயலின் வீட்டுக்கு கிளம்பி விட்டான்

 

ரமியின் கரங்களை இருக்க பற்றியிருந்த கயலின் விழிகள் தாங்க முடியாத வலியை  காண்பிக்க, “ அம்மம்மா…  மு… முடி… முடியலை… ரமி…என்றாள் மெல்லிய குரலில். கயலை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்த பிறகே ரம்யாவிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

 

கதிரும் அவனின் அன்னையும் அமர்ந்திருக்க, முதியவரின் கைகளை பிடித்து கொண்டு அவரின் அருகில் அமர்ந்து மலைகாளியிடம் கண்களை மூடி வேண்டிக் கொண்டு இருந்தாள்  ரம்யா.

 

அன்றைய இரவு முழுவதும்  கயலுக்கு வலி, விட்டு விட்டு வர, மறுநாள் காலை சூரிய ஒளி இப்பூமியில் பரவி ஆட்சி செய்யும் முன் அழகிய பால் வண்ண நிறத்தில் மெல்லிய மலரைப் போல ஒன்றன் பின் ஒன்றாக உலகை காண வந்து விட்டனர் ராமின் மைந்தர்கள் இருவரும்.

 

குழந்தையை ஏந்தி கொண்ட  மருத்துவர், செவிலியர் கண்கள் இரண்டும் ஆச்சிரியத்தில் விரிந்து விட்டன கயலின் புதல்வர்களை கண்டுபிள்ளைகள் இருவரையும் கயலிடம் காட்ட உணர்ச்சி மிகுதியில் கயலின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

 யாரை எதிர்கொள்ள அஞ்சி ஓடி வந்தாளோ, யார் தனது நடத்தையை தவறாக விமர்சனம் செய்ய முனைவானோ, என்று அஞ்சி தன்னை தானே மறைத்து வாழும் அவளுக்கு, இனி யாரும் சொல்லாமலே, பார்த்தவுடன் அறியும் வகையில் தனது தந்தையை உரித்து வைத்து பிறந்த மகன்களை கண்டு பூரிப்பாக இருக்க, ‘பார்த்தாயா… என் ரத்தத்தில் உதித்த உன் மகவுகளை’ என்று அவனிடம் காட்டி மார்தட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

 

தன் மெல்லிய கைகளினால் பிஞ்சுகளின் பாதங்களை வருடியவளை பார்த்து மகிழ்வுடன், கயல்… உன் பசங்கதான் இந்த நீலகிரி மலையிலே அழகுஎன்று புன்னகையுடன் கூறிய மருத்துவரின் குரலை கேட்டவாறே, மனம் நிறைந்து, அலுப்பு மிகுதியில் மயங்கி விட்டாள்.

 

வெளியில் வந்த செவிலியின் கைகளில் இருந்த அந்தப் பிஞ்சுகள் இரண்டையும் முதன்முதலாக கைகளில் ஏந்தியது ரம்யாதான். அவளுக்கும் அவர்களுக்குமான பந்தம், அந்த நொடியில் இருந்து தொடங்கியது.

 

அவர்களை பொற்குவியல்களாய் வாங்கிக் கொண்டவள், கண்கள் இரண்டும் அந்த முகம் தனக்கு மிகவும்  பரிச்சயம் என்று அடித்து கூறபெண்ணவளுக்கு எப்படி என்றுதான் புரியவில்லை.

 

அவளின் கைகளில் சிணுங்கிய அந்த சின்ன சிட்டுக்கள் இரண்டும்  சிப்பி இமைகளை  திறந்து, நீலநிற முத்துகளால் ஆன விழி மலர்களை அசைத்து, அவளின் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் இருந்து, பார்ப்பவர்கள் எல்லோர்  மனதையும் மயக்கின.

 

 

                              *********************

 அவனின் உயிர்நீரில் ஜனித்தவர்கள் இருவரும், அன்னையின் மணி வயிற்றில் இருந்து வெளிவந்த அதே நேரத்தில், உறக்கத்தின் பிடியில் சிக்கி இருந்தவன் உடல்  தன்னையறியாமல் சிலிர்த்து அடங்கியது.

 

உள்ளுணர்வு என்பது இன்று வரை அனைவரும்  வியக்கும் ஒன்றாகும். அது உரைத்தவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், ராம் அதனை உணர்ந்தான்.

 

தூக்கத்தில் தலையணையை, இறுக்க அணைத்தவன் குரலில் தாபம் பொங்க, ‘கண்ணம்மா நீ  என்னை மயக்கும் போது இருப்பதை விட, இன்னைக்கு பொழுது மனசு என்னவோ செய்யுது புள்ள! சொல்லத் தெரியல… மறுபடியும் நான் பிறந்த மாதிரி இருக்கு, பட்டு!என்று தன்கற்பனை தேவதையிடம் கூறியவன் அவளை கட்டித் தழுவி கொள்ள,  அவளின் ஸ்பரிசம் அப்போது கூட ராமின் உயிர்வரை சென்று தித்தித்தது.

 

அவன் கற்பனை பெண் என நினைத்து இருப்பவள், அவனின் அழகிய குழந்தைகளை பெற்றிருக்க, உண்மைகளை கனவு என்று  நினைத்து கொண்டு முட்டாள்களின் சுவர்க்கத்தில் வாழ்பவனை எண்ணி நகைத்து  விதி.