anjali’s Endrum Enthunai Neeyaethan 11

anjali’s Endrum Enthunai Neeyaethan 11

    

 என்றும் என்துணை நீயேதான் 11

 

ஹரியின் தாய், தந்தை அனைத்து சொந்த பந்தங்களுக்கும் பதில் சொல்லிய அவர்களின் அன்றைய தினம் கழிய. ஹரியோ அவமானத்தில் கூனி குறுகி இருந்தான். இது அவன் எனக்கு அளித்த இரண்டாவது அவமான சின்னம். விடமாட்டேன் அவளை, என்னை அசிங்கபடுத்தியதற்க்கு அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என அவன் கோவத்தில் இருக்க. அவனுக்கு துப்பறியும் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் சொல்லிய பதிலி தான் அவன் அதிர்ந்து நின்றான். ஆகா கூட்டம் சேர்ந்து என்னை பழிவாங்கிவிட்டார்கள்.. அந்த குரலுக்கு சொந்தகாரனின் தகவல் மட்டும் தான் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதை தவிர மற்ற அனைத்து தகவலும் ஹரியை தேடி வந்தது.

 

மகளின் திருமணம் கல்யாணம் மேடை வரை நின்றதை அவர்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது. ஆனால் மகளின் முகத்தில் சோகம் இருக்கிறதா? இல்லை மகிழ்ச்சி இருக்கிறதா? என ஜோதியும் ஜெகனும் கண்டறிய முடியவில்லை. அவன் தான் திருமணம் செய்து வைக்க வேண்டினான், மகளின் விருப்பத்தை கூட கேட்க்காமல் அவர் ஹரிக்கு விருஷாலியை நிச்சியம் செய்துகொடுத்தார். ஆனால் மகளை இப்படி கல்யாணம் மேடை வரை கொண்டு வந்து அவளை வேண்டாம் என சொல்லுவான் என அவர் எதிர்பார்க்கவில்லை.

 

தாய், தந்தை சோகமாக இருப்பதை பார்த்து எப்போதும் போல் அலட்சியமாகவே விருஷாலி கீழ் இறங்கி வந்தாள். இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்ல இருந்தவளை தடுத்தார் ஜோதி, “விரு உன் கல்யாணம் நின்றுச்சுனு நாங்க சோகமா இருந்தா. நீ அடுத்த நிமிஷமே வெளியே கிளம்பி போற உனக்கு வருத்தமா இல்லையா விரு.” ஜோதி மகளின் மனம் வருத்தமாக இருக்கும் என்ற நினைவில் கேட்க.

 

விருஷாலிக்கா அந்த வருத்தம் இருக்க போகிறது கல்யாணத்தை நிறுத்தியதே அவள் சொல்லி தானே பின் எப்படி அவளுக்கு வருத்தம் இருக்க போகிறது விருஷாலி மனதிலே பேசிக்கொள்ள. “ம்மா அதுக்காக உங்களை மாதிரி எல்லாம் கவலைப்பட்டு இருக்க முடியாது. அடுத்தடுத வேலையை பார்க்க போகவேண்டாமா? போங்க நீங்களும் கவலைப்படாம போய் வேலை இருந்தா பாருங்க. எனக்கு என் ஃப்ர்ண்ட்ஸோட மீட் இருக்கு. அவரையும் கொஞ்சம் கவலைப்படாம இருக்க சொல்லுங்க.” அவர்களுக்கு எடுத்து சொல்லிவிட்டு தோழிகளை பார்ப்பதற்க்கு அதே ஹோட்டலுக்கு சென்றாள். தோழிகள் அனைவரும் விருஷாலியின் வரவுக்காய் காத்திருந்தனர். விருஷாலியும் தோழிகளுக்கு ஹாய் சொன்னபடி அவர்களின் அருகில் அமர்ந்தால்.

 

“கங்க்ட்ராஷ் ஷாலு சொன்ன மாதிரியே கல்யாணத்தை நிறுத்திட்டயே.” வந்தனா வாழ்த்தவும் மற்ற தோழிகள் விருஷாலியை கட்டியணைத்து வாழ்த்து கூறினர். அப்படியே அவர்களுக்கான குளிர் பானமும் ஆடர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தனர்.

 

“உன் தங்கச்சி லவ்ரோட அண்ணா தானே உன் கல்யாணத்தை நிறுத்தியது. அவங்களும் உனக்கு கடைசி நேரத்துல உதவி செய்ய வந்துட்டாங்க. எப்படியோ உன் கல்யாணம் அந்த பொறுக்கி கூட நடக்காம போனதே எங்களுக்கு சந்தோஷம். ஆமா உன் தங்கை எங்க அவளையும் இங்க அழைச்சிட்டு வந்திருக்காலாமே ஷாலு.” கர்ணன் தான் கல்யாணத்தை நிறுத்தினான் என நினைத்து தோழிகள் கேட்க.

 

”இல்லை இந்த கல்யாணத்தை நிறுத்தியது வேற ஒருத்தர்.” விருஷாலி சொல்ல, தோழிகள் அனைவரும் புரியாமல் பார்த்தனர்.

 

“அதெல்லாம் எதுக்கு இப்போ.. என் கல்யாணம் நின்றிருச்சு. அதனால மோனியோட பேச்சிலர் பார்ட்டிய என்ஜாய் பண்ணலாம்.” தோழிகளிடமும் எந்த நேரத்திலும் வேதாசலத்தின் உண்மைகளை சொல்லிவிடக்கூடாது என உறுதியாக இருந்தாள்.

 

பரிசவிழா முடிந்ததும் ஷாலினி கர்ணனிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டு, கார் வரை அவளுடன் வந்த நகுலனிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள். இன்று நடந்தவைகளை அவள் நினைத்துகொண்டே கார் ஓட்டி சென்றவளுக்கு தனக்கும், நகுலனுக்கு இது போல் தானே திருமணம் உறுதி பேச வருவார்கள் என ஷாலினி அங்கிருந்த பொழுதுகளின் நடந்த சின்ன சின்ன சடங்குளை பார்த்து வியந்து போனாள்.

 

“நமக்கும் இது மாதிரி தான் நடக்குமா?” ஷாலினி நகுலனிடம் கேட்க.

 

“ஆமா, பரிசம் போட்டா தான் கல்யாணம் நடக்கும். ஏன் இந்த கேள்வி, இதெல்லாம் உங்க வீட்டு பக்கம் இல்லையா?”

 

“தெரியாது.. ஆனா ஹரியோட நடந்த நிச்சியத்துல மோதிரம் மட்டும் தான் மாற்றிகொண்டாங்க.” ஷாலுவின் நிச்சியத்தை சொல்ல

 

“அதெல்லாம் நிச்சியதார்த்தம் இல்லை…” அவன் சொல்ல

 

”ஏன் ப்பா நகுலா வந்ததில் இருந்த அந்த பொண்ணு கூடவே சுத்துற. கொஞ்சம் என் மாமா, மச்சாங்களை கவனிக்கனும் உனக்கு தோணாதா.” ஒருவர் கேட்க

 

“சரி நீ போ நான் இங்க உட்கார்ந்திருக்கேன். சேர்ந்து சாப்பிட போகலாம் அப்புறமா.” அவள் அவனை போக சொல்ல.

 

“நீ வா என் அம்மாவுக்கு அறிமுகம் செய்யுறேன் அவங்க கூட இருந்தா உனக்கு தனியா இருக்க ஃபீல் வராது.” அவளை அழைத்துகொண்டு லட்சுமியிடம் சென்று. அவருக்கு புரியும் விதத்தில் அறிமுக செய்துவைத்துவிட்டு வந்தான்.

 

அவரோ இது என்ன புது கதை என ஷாலினியை பார்த்தாலும். மகனின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி தானே ஆகவேண்டும். அதனால் ஷாலினியை அவர் சினேக பார்வை பார்த்துவிட்டு அவருடனே வைத்துகொண்டார்.

 

அனைவரும் கிளம்பும் சமயம் தான் ஷாலினி கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள். அதை எல்லம் நினைத்தவள் மனம் நகுலனை காதலித்ததில் மகிழ்ச்சியடைந்தது.

 

மாப்பிள்ளையின் வீட்டர் கிளம்பும் போது வைஷாலியிடம் கர்ணனின் தாய், தந்தை விடைபெற. கோடியம்மாளோ “முல்லை கல்யாணம் சேலை எடுக்கும் போகனும் அதுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லிவிடுறேன். அப்புறம் மாப்பிள்ளை, உங்க வீட்டு மருமகனுக்கு என்ன சீர் செய்யிறேங்கனு சொல்லிடுங்க. அப்புறம் குழப்பம் வரக்கூடாதுல அதான் சொல்லுறேன். பொண்ணு சீர்க்கு என்ன என்ன வைக்கனும் நான் சொல்லுறேன். இரண்டு நாள் கழிச்சி உன் வீட்டுக்கு வரேன் அப்போ பேசலாம். அடுத்து சீவரிசை பாத்திரம் எல்லாமே எங்க எடுக்கனும் முடிவு பண்ணிக்கோங்க.” அந்தகாலத்தில் திருமணத்தில் என்ன செய்வார்களோ அதை இன்றைய கால திருமணம் வரையிலும் பின் பற்றுவதே வழக்கமாக வைத்திருக்கின்றனர் கிராம மக்கள்.

 

”வைஷாலி அதிகமா வெளிய போக கூடாது கண்ணு. இப்போ தான் திருமணம் பேசி முடிச்சிருக்கோம் அதுனால சூதானமா இரு கண்ணு. எங்க போனாலும் அம்மா கூட போகனும். பிள்ளையை தனியா விட்டு எங்கயும் போகாதீங்க இரெண்டு பேரும்.” வைஷாலிக்கு அறிவுரை சொல்லிவிட்டு அவர்கள் கிளம்ப கர்ணன் முறையாக மாமானார், மாமியாரிடம் விடைபெற, கடைசியில் வைஷாலியிடம் விடை பெற வந்தான்.

 

“போயிட்டு வரேன் வைஷூ..”

 

“சரிங்க..” அவன் முகம் பார்த்து அவள் விடைகொடுத்தாள்.

 

ஹோட்டலில் இருந்து திரும்பியவளின் மனம் முழுவது வேதாசலத்தை காண வேண்டும் என எண்ணியிருந்தது. ஆனால் அவரை சந்தித்துவிட்டு அந்த வீட்டை விட்டு  அவளால் வெளியேற முடியவில்லை. அவரின் பாசம் விருஷாலியை கட்டுபடுத்தினாலும். அவருடனே இருக்க மனம் ஏங்கியது தான் அவளுக்கு தெரியவில்லை.

 

காரை அப்படியே ஆலயம் ஆசிரமத்திற்க்கு விட்டாள். கொஞ்சம் நேரம் அங்கிருந்துவிட்டு வரலாம் என நினைத்தவள் மனம் குழந்தைகளை பார்த்து நாளாகிவிட்டது என நினைத்துகொண்டிருந்தால். அவர்களை பார்த்தால் மட்டும் சிரித்து பேசிவிடுவாயா என மனம் கேள்வி கேட்டாலும். அவளின் மௌனமே அவளிடம் பதில் இல்லை என தெளிவாக கூறியது.

 

“உங்களை பார்த்தே பல வருஷம் ஆகிருச்சே.. எப்படி இருக்கீங்க மேடம்.” உள்ளே நுழைந்தவுடன் எதிர்ப்பட்ட ஜோசப் அவளிடம் பேச

 

”வேலை அதிகம்.. அதனால வரமுடியலை ஜோ.” அவள் நிதானமாக பேச

 

“இன்னும் ஒன்றை விட்டுவிட்டயே ஷாலு.. உன் கல்யாணமும் நின்று போனது.” அவன் நிறுத்த

 

“அது பெரிய விஷயமா எனக்கு தெரியலை அதனால சொல்லலை ஜோ. எங்க குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா.. எல்லாம் செலவுக்கும் பணம் போட்டுட்டு தான் இருக்கேன் குழந்தைகளுக்கு.” அவள் பிசியாக இருந்தாலும் குழந்தைகளின் செலவு, அவர்களின் படிப்பு மற்றும் இதர செலவுக்கு அவள் நாள் தவறாமல் பணத்தை போட்டுவிடுவாள்.

 

“அதெல்லாம் சரியா இருக்கு ஷாலு நீ கடைசியா சேர்த்த பொண்ணோட ராசியோ என்னவோ நம்ம ஆசிரமத்துக்கு வயிறார ஒருத்த அரசியும், தேங்காயும், இன்னும் அவர் நிலத்துல விளைந்ததை மாசம் மாசம் அனுப்பிடுறாரு.” அவன் உளரிவிட.

 

”என்ன… அமிர்தாவா? அவ என்ன செய்தா?” ஷாலு கேட்க

 

”அது.. அது..” அவன் திணற

 

“சொல்லு குழந்தை எங்கயும் மிஸ் ஆகி கிடைச்சாலா. அவளுக்கு ஒன்னும் இல்லையே.. உடம்புல எதாவது காயமானு பார்த்தீங்களா?” ஷாலு பதற

 

”அதெல்லாம் ஒன்னுமில்லை ஷாலு குழந்தை சேப் தான். அவளை கொண்டு வந்துவிட்டவரும் நல்லவர் தான். இந்த சமையல் அம்மா தான் குழந்தையை அழைச்சிட்டு போயிருக்காங்க எங்க விட்டாங்கனு தெரியலை. அப்புறம் அவர் தான் கண்டுபிடிச்சி அழைச்சிட்டு வந்தாரு.” ஜோசப் கர்ணன் செய்த உதவியையும், அடுத்து அவனு ஆசிரமத்திற்க்கு உதவுவதாக சொல்லவும் தான் ஷாலு சமாதானம் ஆனாள்.

 

”நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் குழந்தைகளை அதிகமா யார்கூடாவும் வெளியே விடாதீங்கனு. இப்போ பாரு கொஞ்சம் விட்டுருந்தாலும் குழந்தையோட அம்மா, அப்பாவுக்கு என்ன பதில் சொல்லுறது. இனி எந்த குழந்தையையும் யாரும் வெளியே அழைச்சிட்டு போக கூடாது.”

 

“சட்டம் போட்டாச்சு ஷாலு.. யாரும் அப்படி கூப்பிட்டு போக மாட்டாங்க என்னையும், மேகலாவையும் தவிர.”  ஜோசப் தெளிவாக சொன்ன பின் தான் ஷாலு அமைதியனாள்.

 

”சார் நீங்க கேட்ட தகவல் இதுல இருக்கு உங்க கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தது மூனு பேரு. விருஷாலி, ஷாலினி, நகுலன், ஆனா இவங்க மூனு பேரும் இன்னொருத்தர்கிட்ட உதவி கேட்டிருந்தாங்க. அது யாருனா, ஷாலினி லவ்ரோட அண்ணா அவங்க பேர் கர்ணன்.”

 

“அப்போ அந்த குரல் யாரு.. என்னை வச்சு என் கல்யாணத்தை நிறுத்திய குரல் யாருனு  கண்டுபிடிக்க முடிந்ததா.” ஹரி அந்த ஆளிடம் கேட்க

 

“இன்னும் சரியா கண்டுபிடிக்க முடியலை சார். ஆனா எனக்கு ஒரு சந்தோகம் இருக்கு. அது ஏன் நகுலனோட அண்ணாவா இருக்காது, உங்களுக்கு போன் செய்து மிரட்டி கல்யாணத்தை நிறுத்தியது கர்ணனா இருக்கலாம்னு எனக்கு தோணுது.”

 

ஹரியோ இவர்கள் மூவரும் சேர்ந்து செய்த வேலையில் இன்னொருவனும் இருக்கிறான் என்றால் அவனாக தான் இருக்க வேண்டும். அப்போ என் கல்யாணத்தை நிறுத்திய குரலுக்கு சொந்தம் நகுலனின் அண்ணன் தான். முதலில் அவனை பார்த்து கணக்கை தீர்த்துகொள்ளலாம், பின் இருக்கு இவர்கள் மூவருக்கும்.

 

”சரி அந்த கர்ணன் பற்றிய தகவலை எனக்கு நாளை கொடுக்க முடியுமா?” துப்பறியும் ஆளிடம் கேட்க.

 

“சூயர் சார்.. இன்னைக்கு இரவே அவரை பற்றி உங்களோட மெயிலுக்கு அனுப்பிருவேன்.” ஹரியிடம் உறுதியளித்துவிட்டு விடைபெற்றான்.

 

“சார்.. நான் கல்யாணம் மண்டபத்துக்குள்ள நுழைந்ததுமே அந்த மாப்பிள்ளை கல்யாணம் வேண்டாம்னு சொல்லி என்னை தாண்டி தான் போறான். அதான் எனக்கு முன்னாடி நீங்க வேற யாரையாவது வைத்து கல்யாணத்தை நிறுத்திட்டீங்களானு கேட்டேன்.” இதற்க்கு முன் நடந்த பேச்சு வார்த்தையை அவன் சொன்னான்.

 

”கல்யாணத்தை நாம நிறுத்தலைனா வேற யார் நிறுத்திருப்பா. இல்லை… இல்லை.. யாரோ விருஷாலி பின்னாடி மறைமுகமாக இருக்காங்க. அவளை சுற்றி நான் பாதுக்காப்பு வளையம் போட்டா, என் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே யாரோ விருஷாலி பக்கத்துல இருக்காங்க. கண்டுபிடிக்கனும்.. அவன் யாருனு நாம கண்டுபிடிக்கனும்.” வேதாசலம் குழம்பியபடி தன் கீழ் இருக்கும் வேலையாளிடம் கோவமாகவும், குழப்பமாகவும் சொல்லிகொண்டிருந்தார் வேதாசலம்.

 

ஹரியின் கோவம் கர்ணனின் மீது திரும்ப போகிறதா?

 

அந்த குரலுக்கு சொந்தமானவனை யார் முதலில் கண்டறிய போகிறார்கள்.

 

திருமணத்தை நிறுத்தியது வேதாசலம் இல்லை என விருஷாலிக்கு தெரியவந்தால்..

 

                                               தொடரும்…………….

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!