anjali’s Endrum Enthunai Neeyaethan 10

anjali’s Endrum Enthunai Neeyaethan 10

     என்றும் என்துணை நீயேதான் 10

 

”பெரிய வீட்டு கல்யாணங்கிறது இது தான் போல அவங்க இஷ்ட்டத்துக்கு கல்யாணத்தை நடத்துவாங்க. அவங்க இஷ்ட்டத்துக்கு கல்யாணத்தை நிறுத்துவாங்க. ஏன் கல்யாணம் நின்றுச்சுனு கேட்டா வேற பதில் சொல்லி சமாளிப்பாங்க. இதெல்லாம் நமக்கு தேவையா.. வந்தோமா போனோமானு இருக்கனும்.” கல்யாணத்திற்க்கு வந்திருந்த கூட்டங்கள் அவர்களுக்குள் பேசிகொண்டு வெளியேறினர்.

 

சிலர், பெண்ணுக்கு பிடிக்காத கல்யாணம் போல அதான் உடனே நின்றுச்சு.. எனவும். சிலர் பையனுக்கு உடம்புல எதாவது கோளாறு இருக்கும் போல… எனவும். சிலர் அதுக்கும் மேலே போய் சீர்வரிசை ஒழுங்கா கொடுத்திருக்கமாட்டாங்க போல அதான் மாப்பிள்ளை வீட்டுலயே கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. இவ்வாறாக திருமணத்திற்க்கு வந்த சொந்தங்கள் பேசிகொண்டே இருந்தனர்.

 

ஒரு திருமணம் நின்றாலே இதே வேளை தான் சொந்தங்களுக்கு. இருவீட்டார்க்கும் என்ன பிரச்சனை என கேட்டு தீர்த்து வைக்க இருக்கும் உறவுகளைவிட. அவர்களுக்குள் இருக்கும் சண்டையை பெரிதாக பேசிவிட்டு செல்வார்கள். ஆனால் இருவீட்டாரிடம் என்ன ஏதென்று விசாரிக்க மாட்டார்கள். அப்படி தான் இருவீட்டு உறவுகளும் இருந்தனர்.

 

ஜெகன் ஜோதி இருவரும் ஏன் மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை நிறுத்தினர் என கேட்க. அதற்க்கு மாப்பிள்ளையான ஹரி சொன்ன பதிலில் அவர்கள் அதிர்ந்து நின்றனர். ஊரார் கூடி இருக்க, அவர்கள் முன்னிலையில் நடக்க இருந்த திருமணத்தை நொடி பொழுதில் நிறுத்தியதற்க்கான காரணம் என்ன என அவர்கள் கேட்டனர்.

 

திருமணத்திற்க்கு முதல் நாளான நேற்று, “இருவரையும் மணமேடையில் நிற்க வைத்து ரிஷப்சன்ஸ் நடந்தது. மொத்த சொந்தமும், கூடி இருந்தது. அனைவரும் மகிழ்ச்சியாக தான் இருந்தனர். ஏன் விருஷாலிகூட சந்தோஷமாக தான் இருந்தாள். வெளிப்படையாக காட்டிகொண்டிருந்தாள் அவளது சந்தோஷத்தை. ஆனால் ஹரி மட்டும் யோசனையிலே இருந்தான். அவனின் முகத்தையே பார்த்துகொண்டிருந்த விருஷாலிக்கு மனதில் உற்ச்சாகமாக இருந்தது.

 

“என்கூட கல்யாணம் நடக்கனும் ஆசைப்பட்டலே.. அனுபவி டா.. இது மட்டுமில்ல நாளைக்கு நீ கழுத்துல தாலி கட்டிருவியா என்ன அதையும் பார்க்கலாம்.” விருஷாலி மனதுக்குள்ளே சபதம் போட, அவனோ யோசனையில் இருந்து, விருஷாலியை பார்த்தான். அவளின் முகத்தில் ஏக்கத்துக்கும் மாறாக மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. அப்போதே யூகித்துவிட்டான் இது இவளின் சூழ்ச்சி தான் என்று.

 

ஆனால் அந்த குரலுக்கு சொந்தம் யாரவன் என்று மட்டும் தான் ஹரியால் கண்டறிய முடியவில்லை. அதையும் அவன் கண்டுபிடிக்க சொல்லி துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்திருந்தான்.

 

மறுநாள் விடியலில் பொழுதில் அவனுக்கு அதே போன் கால் வந்தது. இம்முறை கல்யாண மண்டபத்திலே அவனுக்கு பயத்தை ஏற்படுத்த அந்த குரலுக்கு      சொந்தகாரன் செய்தான்.

 

“ஹலோ..” தூக்க கலக்கத்தில் அவன் பேச.

 

“டேய் புது மாப்பிள்ளை இன்னும் தூங்குற.. இப்படி தூங்குனா அப்போ கல்யாணம் எப்படி நடக்கும்.” அந்த குரல் கேட்க

 

“யார் நீ.. என்ன வேணும் உனக்கு.”

 

“டேய் புது மாப்பிள்ளை.. நான் தான் ஏற்கனவே சொல்லிருந்தேல.. உன் கல்யாணத்தை நீயே நிறுத்தனும். அதை செய் முதல.”

 

“உன்னை கண்டுபிடிச்சேன்.. என் கையால தான் சாவு உனக்கு.”

 

“முதல கல்யாண மண்டபத்துல வந்திருக்க பொண்ண உன் ரூம் ஜன்னல்ல இருந்து பாரு.”

 

ஹரி எந்த பொண்ணு என யோசனையின் ரூம்மின் ஜன்னலை திற்ந்து பார்த்து அதிர்ச்சியானன். இவள் நேகா தானே இவள் எப்படி இங்கு. அவன் சிந்திக்க மறுபடியும் அந்த போன் கால் வந்தது.

 

“என்ன நியாபகம் இருக்கா.. அந்த பொண்ணு யாருனு. இல்லை நியாபகம் படுத்தனுமா.. உன் கையால அவளோட மானத்தை பறிச்சியே, அவள் கெஞ்சி கேட்டு அவ மானத்தை காப்பாத்த போராடுனா. நீ அவள் வாழக்கை கேள்வி குறியாக்கிட்ட. இப்போ நினைவு வந்திருச்சா.”

 

”இப்போ நான் என்ன செய்யனும்.” ஹரி வழிக்க வர

 

“நேரா போய் கல்யாணம் நடக்காதுனு சொல்லு பொண்ணு வீட்டுல. அப்படியே உனக்கு தெரிந்த காரணத்தை சொல்லி இந்த கல்யாணம் எப்போவும் நடக்காதுனு சொல்லு. முக்கியமா எல்லார் முன்னாடியும் சொல்லனும். இப்போ சொல்லிட்டு யாருக்கு தெரியாம கல்யாணத்தை பண்ணனும் நினைச்ச ஒரு லிஸ்ட்டே இருக்கு, உன்கிட்ட ஏமாந்த பொண்ணுங்களும், நீ ஏமாத்துன பொண்ணுங்க லிஸ்ட்டும்.” அவன் குரலுக்கு சொந்தகாரன் சொல்லிவிட்டு வைக்க.

 

அதற்கடுத்து ஒவ்வொரு உறவினர்களும், சொந்தங்களும் வர ஆரம்பிக்க. கல்யாணத்திற்க்கான அனைத்து வேலைகளும் நடக்க. மாப்பிள்ளையை அழைக்க சொல்லி ஐயர் சொல்லி முடிக்க, ஹரி அனைவரின் முன் வந்து நின்றான்.

 

“டேய் உன்னை அழைக்காம எப்படி நீ வரலாம்.” அவன் அன்னை கேட்க.

 

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ம்மா.” சொல்ல

 

மகன் ஏதோ உளறுகிறான் என்று, அவனை பார்த்து        “போய்  மேடையில உட்காரு டா.” அவர் சொல்ல

 

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாமுனு சொல்லுறேன்ல..” அந்த மண்டபமே அதிர ஹரி சொன்னான்.

 

“பைத்தியமா உனக்கு பிடிச்சிருக்கு.. எதுக்கு மண்டம் வரை வந்த கல்யாணத்தை நிறுத்தனும் சொல்லுற.” அவனின் தந்தையும் வந்து கேட்க.

 

‘என்னாச்சு.. ஹரி.. என்னப்பா ஆச்சு.” விருஷாலியின் தாயும், தந்தையும் சேர்ந்து வந்து கேட்க.

 

“இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம். உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வையுங்க.” அவன் சொல்லிவிட்டு அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறினான்.

 

அனைவரும் அதிர்ந்து இருக்க ஹரியோ விறு விறுவென மண்டபத்தைவிட்டு வெளிஏறிவிட்டான். மணமகள் அறையிலோ தாய், தந்தையின் முன் சோகமாகவும், மனதில் சந்தோஷமாகவும் இருந்தாள். அவளின் சந்தோஷத்தை அவளால் வெளிகாட்ட முடியவில்லை. எல்லாம் வேதாசலத்தின் திட்டம் தான் என விருஷாலி நினைத்துகொண்டிருந்தாள்.

 

”ஏய் லட்சுமி இன்னுமா கிளாம்ப இருக்கீங்க.. அங்க என் பொண்ணும், மாப்பிள்ளையும் காத்திருப்பாங்க. உனக்கு கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா, பரிசம் போட போகும் போது நல்ல நேரத்துல கிளம்பனும்.” லட்சுமியின் மாமியார், வீரபத்திரனின் தாயாரான கோடியம்மாள் மருமகளை விரட்ட.

 

“அத்தை நான் கிளம்பிட்டேன் உங்க பிள்ளையும், பேரன்களும் தான் இன்னும் கிளம்பாம இருக்காங்க. அவங்ககிட்ட நேத்து சொல்லிட்டேன் நேரத்துக்கு நாம கிளம்பனும்னு. அதுக்கு என்னை வசவு பாடுறீங்க இதெல்லாம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.” மாமியாரை அரட்டி பேசாமல் தன் மேல் எந்த தவறும் இல்லை என லட்சுமி வாதிட ஆரம்பித்தார்.

 

“ஆமா, என் பிள்ளைகளும், பேரன்களும் ராசா டி.. ராசா மாதிரி தான் உடுப்பு போட்டு வருவாங்க. அதுக்கு தாமதம் ஆக தான் செய்யும்.”

 

”அப்போ பேசாம இருங்க.. எங்க என் மாமானார் கூப்பிடுங்க அவரை.” கோடியம்மாளின் கணவரான சுருளிப்பிள்ளை அங்கு வந்தார்.

 

“என்ன மருமகளே என்னை எதுக்கு தேடுறீங்க.” மரியாதையாய் அவர் பேச

 

“அத்தைய கொஞ்சம் அதட்டி வையுங்க மாமா. என்னவோ நான் தான் கிளம்ப தாமதமாக்குனேனு சொல்லி என்னை வசவு பாடுறாங்க.” மாமானாரிடம் புகார் வாசித்தாள்.

 

“ஏன் கோடி உன் மருமகளை நீ வசவு பாடலனா பொழுது போகாதா.”

 

“இந்தாருங்க இது எனக்கும், என் மருமகளுக்குமான சண்டை நீங்க இடையில வராதீங்க.”

 

“அது சரி அப்போ நான் ஒன்னும் பண்ண முடியாதும்மா மருமகளே.” அவர் பின் வாங்கிகொண்டார்.

 

“சரி.. சரி.. போம்மா மருமகளே உன்ற புருஷனையும். என்ற பேரபிள்ளைகளையும் அழைச்சிட்டு வா ராகு வர்ரதுக்குள்ள நாம கிளம்பனும்.”

 

“ம்ம்.. போறேன்..” வாய்க்குள் முனங்கிகொண்டே பிள்ளைகளையும், புருஷனையும் தேடி சென்றார்.

 

“ஏலேய் தர்மா.. ஆளுக வந்துட்டாங்களா..”

 

“வந்துட்டாங்க பெரிய்யம்மா.. இப்போ தான் முதல் வண்டில ஆளுக ஏறியிருக்காங்க. இன்னொரு சின்ன வேனுல குமரி பொண்ணுங்க இருக்காங்க.”

 

“சரி சரி.. விரசா ஆளுங்களை வரச்சொல்லு கிளம்பனும்.” கோடியம்மாள் ஒவ்வொருத்தரையும் விரட்டினார்.

 

இந்த நாளுக்காக தானே காத்திருந்தேன் என்பது போல் தன்னை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள் வைஷாலி. ஏதோ திருமணம் இப்போதே தன்னவனுடன் நடக்க போகிறது என்ற நினைப்பில் அவள் அலங்காரம் அவ்வளவு அழகாக இருந்தது. கர்ணன் எடுத்துகொடுத்த பட்டு சேலையிலும், நகையின் ஜொலி ஜொலிப்பிலும் அவள் முக அழகிலும் கல்யாண பெண் போலவே இருந்தாள். அவளை சுற்றி அவளது தோழிகள் இருந்தனர், அவளுக்கு தேவையான அலங்கார உதவியை செய்துகொண்டிருந்த போது அவளது அன்னை உள்ளே நுழைந்தார்.

 

மகளின் அழகில் பெற்ற தாய்க்கு கண்ணீர் வந்தது. கண்ணில் இருந்த மையை எடுத்து அவளது காதோரத்தில் திருஷ்டியாக வைத்துவிட்டு, மகளின் தலையில் அவர் கொண்டு வந்த மதுரை மல்லியை சூடிவிடும் போது வாசலில் கார், மற்றும், வேனின் சத்தம் கேட்க அங்கே சென்றார்.

 

“அக்கா, மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வந்துட்டாங்க. மாமா வேஷ்ட்டி சட்டையில அழகாக இருக்காரு, நீயும் போய் பாரு ஜன்னல் வழியா.” ஒரு சிறு பெண் சொல்ல வைஷாலிக்கும் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் வெட்கம் தடுக்க அவள் பார்க்கவில்லை.

 

பரிசம் போடும் விழாவும் ஆரம்பம் ஆனது. உறவினர் முறை சங்கத்தினர் நடுவில அமர்ந்திருக்க, இருபக்கமும் எதிர் எதிராக மாப்பிள்ளை வீட்டு சொந்தமும், பெண் வீட்டு சொந்தமும் அமர்ந்திருந்தனர். நகுலனோ ஏன் இன்னும் ஷாலினி வரவில்லை என வாசலிலே அவன் கண்கள் நிலைத்து நின்றது.

 

“சோழவந்தான் உறவினர் முறையில் எங்க சோழவந்தான் பெரிய ஐய்யா வீட்டின் வீரபத்திரன் – வீரலட்சுமிக்கு பிறந்த மகனான கர்ணனுக்கு. சோலையூர் உறவினர் முறையில் இருக்கும் பாண்டியன் முல்லை தம்பதியர்க்கு பிறந்த மகளான வைஷாலியை பெண் கேட்டு வந்திருக்கிறோம். எங்கள் சாட்சியாகவும், எங்கள் முன்னிலையில் நடக்கும் இந்த பரிசம் விழாவை ஏற்றுகொள்ள வேண்டும்.” மாப்பிள்ளையின் பக்கம் பேச

 

“சோலையூர் கிராமத்தில் வசிக்கும் எங்கள் பாண்டியன் முல்லையின் மகளை, சோழவந்தானில் வசிக்கும் வீரபத்திரன் வீரலட்சுமியின் மகனுக்கு பெண் கொடுக்க எங்கள் உறவினர் சங்கம் முடிவெடுத்தும், பெற்றோர்களின் சம்மத்துடனும் நாங்க உங்கள் பரிசத்தை ஏற்றுகொள்கிறோம்.” பெண்வீட்டு பக்கம் பேசினார்கள்.

 

இருவீட்டு பெற்றோர்களும் சபைக்கு வந்தனர். அவர்களிடம் தாம்புல தட்டை கொடுத்து மாற்றிகொள்ள செய்தனர்.

“பொண்ணுக்கு பரிசம் போட அப்படி என்ன கொண்டு வந்திருக்கீங்க நீங்க. எங்க பொண்ணு தங்கம் மாதிரி குணம் உள்ள பொண்ணு. அதுகேத்த மாதிரி தங்கத்தாள் இழைந்த பட்டு கொண்டு வந்திருக்கீங்களா? எங்க பொண்ணு முகத்துல பூசிக்கிற பவுடர்ல இருந்து உடம்புக்கு பூசுற மஞ்சள் வரை எல்லாமே கொண்டு வந்திருக்கீங்களா? எங்க பொண்ணு சாதாரணமாகவே கழுத்துல பத்து சவரன் நகை போட்டு இருப்பா நீங்க அவளுக்கு எத்தனை சவரன் போட்டு உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறீங்கனு கொஞ்சம் சொல்லுங்க.” என பெண் வீட்டின் சார்பாக ஒரு முதியவரான பெண்மணி பேச.

 

“என் வீட்டுக்கும், என் பேரனுக்கும் மருமகாளாவும், மனைவியாவும் வர உங்க வீட்டு பொண்ணு கொடுத்து வச்சிருக்கனும். எங்க வீட்டுக்கு மருமகளா வர போற பொண்ணுக்கும் தினமும் சேலை உடுத்த  தங்கத்தால் இழைத்த பட்டு சேலை கொண்டு வந்திருக்கோம். முகத்துல பூசுற பவுடர்ல இருந்து உடம்புல பூசுற மஞ்சள் வரையும் நாங்காளே கொண்டு வந்திருக்கோம். பத்து சவரன் எல்லாம் ஒரு நகையா? என் வீட்டு மருமகளுக்கே முப்பது சவரன் நகை போட்டு என் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கேன் அப்படி இருக்க என் பேரனுக்கு மனைவியாக போற உன் பேத்திக்கு பதினைந்து சவரன் தாலிக்கொடியும், பத்து சவரனுக்கு வளையலும், ஐந்து சவரனுக்கு காதணியும், மாட்டலும், வெள்ளி கொலுசும் கொண்டு வந்திருக்கோம். உன் பேத்தி தான் என் பேரனை கட்டிக்க கொடுத்து வைத்திருக்கனும்.” மாப்பிள்ளையின் பாட்டி கோடியம்மாள் சீர்வரிசையை அடுக்கினார்.

 

“ஏய்யா ராசா வாய்யா.. வந்து பொண்ணுக்கு உன் கையில பரிச சேலையை கொடு.” கோடியம்மாள் அழைத்தார் கர்ணனை.

 

“ஏய் முல்லை போய் உன்ற பொண்ணை அழைச்சிட்டு வா.” அந்த பெண்மனி சொல்ல

 

தோழிகளுடன் புடை சூழ பூமிக்கு அதிருமோ என்னும் விதத்தில் மெதுவாக அன்ன நடையாக நடந்து வந்தாள் வைஷாலி.  “ஆத்தா.. சபைக்கும், சோழவந்தான் உறவினர் முறைக்கும், உன் வருங்கால மாமியார் வீட்டுக்கு அவங்க ஊர்க்காரங்ககிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ தாயி.” சோலையூர் உறவினர் முறை சொல்ல, அவள் செய்தாள்.

 

“பொண்ணு அழகா தான் இருக்கு.. ஆன என் பேரன் பக்கத்துல நிக்க முடியுமா?” என கோடியம்மா ஆரம்பிக்க.

 

“ஸ்ரீதேவி கணக்கா என் பேத்தி இருக்க.. மதுரைவீரன் மாதிரி இருக்க உன்ற பேரனுக்கு என் பேத்திய கட்டிகொடுக்குறதே பெரிய விஷயம்.” அவரும் பதில் பேச.

 

“தம்பி உங்க கையில் பரிச புடவை கொடுத்து பொண்ணை ஆசீர்வாதம் பண்ணுங்க.” கர்ணனிடம் சொல்ல, அவனும் தன் தாய் கொடுத்த புடவை தட்டை வாங்கி வைஷாலியின் முகம் பார்த்துகொடுத்தான். அவளோ, அவனின் முகம் காணாமல் வெட்கத்தோடு அவனிடம் இருந்து வாங்கி கொண்டு அவனிடம் ஆசீர்வாதம் வாங்கினாள்.

 

பின் அவள் அந்த பரிச புடவையை கட்டிகொண்டு மீண்டும் சபைக்கு வந்தாள். கர்ணனையும் அவளுடன் நிற்க வைத்து வாழ்த்திகொண்டு இருந்தனர் இரு ஊரின் மக்களும், சொந்தங்களும், உறவினர்களும்.

 

மாப்பிள்ளை வீட்டின் சார்பாக கொண்டு வந்திருந்த நகையான தாலிக்கொடியை அவன் கையால் போட்டுவிட, மற்றவைகளை அவளின் கையில் அவன் கொடுத்தான். பெண் வீட்டின் சார்பாக மாப்பிள்ளை மோதிரமும் கழுத்துக்கு செயினும் பெண்ணின் தம்பியான சொந்தத்தில் இருந்த சிறுவனை அவர்கள் போட்டுவிட்டனர்.

 

பரிச விழா முடியும் தருவாயில் வந்தாள் ஷாலினி.

 

”ஏன் டி இதான் வர்ர நேரமா? உன்னை எப்போ வரசொன்னே இப்போ வந்திருக்க..” அவன் கோவம் பட”

 

“கல்யாணம் நின்றாலும், என் அக்காவை தேத்தி வீட்டுக்கு அனுப்பிட்டு, என் அம்மா, அப்பாவ சமாளிச்சிட்டு வரவேண்டாம்.” அவள் அங்கு நடந்ததை சொல்ல.

 

“சரி சரி.. வா எல்லாம் முடிந்தது.. பரிசமும் போட்டாங்க. வா வைஷாலிக்கு உன்னை அறிமுகப்படுத்துறேன்.” அவளை அழைத்துகொண்டு உள்ளே சென்றான்.

 

பெரியவர்களிடம் ஆசீர்வாதாம் வாங்கிகொண்டிருந்த இருவரையும் பார்த்து மெய் மறந்தாள் ஷாலினி. ஏன்னென்றால் இருவரின் ஜோடி பொருத்தமும் அழகாக இருந்தது. அதுவும் வைஷாலியின் அழகு பேரழகாக இருந்தது.

 

“அண்ணி.. இவ தான் ஷாலினி.. ஷாலினி இவங்க தான் என் அண்ணி.” அறிமுகபடுத்த.

 

“கங்க்ட்ராட்ஷ்.. சார்.. அக்கா..” இருவரையும் வாழ்த்த

 

“தாங்க் யூ ஷாலினி.. நன்றிம்மா..” இருவரும் சொல்ல

 

“ஏன் ம்மா.. தாமதா வந்திருக்க.” ஷாலினியிடம் கர்ணன் கேட்க.

 

“அது… அவங்க அப்பாகூட வெளிய முக்கியமான வேலை அதான் தாமதம் ஆகிருச்சு.” நகுலன் சமாளித்துகொண்டே ஷாலினியிடம் சொல்லாதே என கண்ணை காட்டினான்.

 

“ஆமா.. ஆமா.. சார்.. முக்கியமான வேலை.”

 

“சரிம்மா.. உங்க அக்கா கல்யாணம்” கர்ணன் ஆரம்பிக்க

 

“என்னங்க பெரியத்தை வந்திருக்காங்க.. அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கவே இல்லை.” வைஷாலி இடையிட, ”சரி போய் வாங்கிட்டு வரலாம்”. ஷாலினியிடம் பாதியிலேயே பேச்சை முடித்துகொண்டு சென்றான்.

 

“என்ன உன் அண்ணாகிட்ட இன்னைக்கு தான் என் அக்கா கல்யாணம் சொல்லலையா. அவ தான் உதவி வேண்டாமுனு சொல்லிட்டாளே அதையும் நீ சொல்லலையா?” ஷாலினி நகுலனிடம் கேட்க.

 

“சொல்லலை ஷாலினி.. சொல்லுற சூழ்நிலையும் எனக்கு அமையலை. ஆனா அண்ணா கேட்டாங்க எப்போ கல்யாணம்னு நான் தான் இரண்டு மாசம் கழிச்சு தான் பொய் சொல்லிட்டேன்.”

 

”ஒழுங்கா கல்யாணம் நின்றுச்சுனு இன்னைக்கு சொல்லிரு. தேவையில்லாம அவங்க எப்படி உதவி செய்யலாம்னு யோசிக்க போறாங்க.”

 

“சரி.. சொல்லிடுறேன்.”

 

விருஷாலியோ கல்யாணம் நின்றதால் தனது தோழிகளுக்கு விருந்துகொடுக்க ஹேட்டலை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

 

ஹரியோ தன் கல்யாணத்தை நிறுத்திய அந்த குரலுக்கு சொந்தகாரனை வெறியோடு தேடிகொண்டிருந்தான்.

 

                                               தொடரும்……………..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!