anjali’s Endrum Enthunai Neeyaethan 12

என்றும் என்துணை நீயேதான் 12

 

கர்ணனின் தகவல் ஹரியின் கையில் வந்ததும், ஹரி முழுதாக அந்த தகவலை படித்தான். கர்ணனின் ஊர், அவனது பின்புலம், நேற்று வரை அவன் எங்க இருந்தான் என்ன நடந்தது என முழு தகவலும் ஹரியில் கையில் இருக்க. ஹரியோ “என் கல்யாணத்தை நிறுத்துன உன்னை சும்மா விடமாட்டேன். ஓ.. உனக்கு  கல்யாணம் நிச்சியம் பண்ணிருக்காங்களா. அப்போ சரி எங்க அடிச்சா எங்க வலிக்குனு எனக்கு தெரிந்து போனது.” என்று கையில் நிச்சியதார்த்தம் புகைப்படைத்தை பார்த்தவன் அழகோவியமாக இருக்கும் வைஷாலியை கண் எடுக்காமல் பார்த்துகொண்டிருந்தான்.

 

“உன்னை மட்டும் பழிவாங்குனா போதாது இன்னொருத்தியும் இருக்கா. அவளை பழிவாங்கனும் அதுக்கு அவளோட தங்கச்சியை தூக்குறேன். இரண்டும் பேருக்கும் என் வலி என்னனு புரிய வைக்குறேன்.” அவனின் அடியாள் ஒருவனுக்கு போனில் அழைத்து விஷயத்தை மட்டும் கூறினான்.

 

கல்யாண கனவுகளில் மிதந்தவளின் மனம் நிச்சியம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் ஆனது. பெரியவர்கள் திருமணம் வேளையில் இருக்க. வைஷாலி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவில் என சென்றுகொண்டிருந்தாள். கடவுள் அவள் மீது வருத்தமாக இருந்தார்  ஆயுள் முடிய போகும் நிலையில் உள்ள இந்த பெண் எப்படி தான் என் சன்னதிக்கு ஒவ்வொரு நாளும் வருகிறாளோ. பிறக்கும் போதே இறக்கும் நாளை ஆண்டவன் ஏன் தான் தீர்மானித்தாரோ என்ற கவலையில் கடவுளே சோகமாக இருந்தார். அந்த அளவுக்கு வைஷாலியின் வேண்டுதல் அனைத்தும் கர்ணன் என்னும் ஒற்றை மனிதனுக்கு தான்.

 

அன்று வெள்ளி கிழமை என்பதால் கோவிலுக்கு கிளம்பிகொண்டிருந்தாள் வைஷாலி. “வைஷூ கோவில் போனது எல்லாம் போதும்மா.. வீட்டுல இரும்மா கல்யாண நாள் வேற நெருங்கிட்டு இருக்கு.” முல்லை மகளுக்கு சொல்ல

 

“ம்மா.. நான் யாருக்காக கோவில் போறேன் என்னவர்க்குகாக தான். அவரோட ஒவ்வொரு நிமிஷமும் நல்லா இருக்கனும் தான். கல்யாணம் நிச்சியம் செய்திட்டா நான் நாள் தவிராம கோவில் வரேனு வேண்டிருந்தேன் ம்மா. போயிட்டு வந்திருவேன்.” அன்னையின் பேச்சை கேட்க்காமல் சென்றாள். அந்த நிமிடம் தான் மகளை முகத்தை கடைசியாக பார்த்தார்  முல்லை.

 

கோவிலுக்கு தெருவை தாண்டி வயல் இருக்கும் பக்கம் நடந்தவளின் பக்கத்தில் இடிப்பது போல ஒரு கார் வந்து நின்றதும் வைஷூ பயந்து போய் தள்ளி நிற்க, அவளின் பயத்தை தனக்கு சாதகமாக எடுத்துகொண்டு அவர்கள் வைஷாலியை கடத்திவிட்டனர்.

 

”நான் நம்ம கேண்டின்ல வெயிட் பண்ணுறேன் நீ க்ளாஸ் முடிச்சு அங்க வந்திரு.”ஷாலினி, நகுலனிடம் பேசிகொண்டே கேண்டின் பக்கம் திரும்பியவளை யாரோ முகத்தில் துணியை வைத்து அழுத்தி ஷாலினியை கடத்திவிட்டனர்.

 

கல்லூரியில் முக்கியமான மீட்டிங்கில் இருந்தவளை ஒரு போன் கால் தொந்திரவு செய்தது. அதை கவனிக்காமல் மீட்டிங்கில் விருஷாலியின் கவனம் இருந்தது. மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டிருந்தனர். அதனால் அவளின் போன் சைலண்ட் மோடில் இருந்தது ஆனால் வைப்ரேட் ஆகிகொண்டே இருந்ததை அவள் கவனிக்கவில்லை. மீண்டும் போன் ரிங்க் வைப்ரேட் ஆக இம்முறை அவள் கவனித்து போனை எடுத்துகொண்டு வெளியில் சென்று பேசியவளின் முகம் அதிர்சியை காட்டியது.

 

“ஏய்யா கர்ணா நம்ம வைஷூவ காணோமா ய்யா..” அழுத்துகொண்டே லட்சுமி கர்ணனிடம் சொல்ல. வயலில் வேலை பார்த்துகொண்டிருந்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து வீட்டுக்கு விரைந்தான்.

 

“மணி அண்ணே ஷாலினிய பார்த்தீங்களா.. அவ இங்க தான் இருப்பேனு சொன்னா.” கேண்டின் உரிமையாளரை நகுலன் கேட்க.

 

“இல்ல தம்பி ஷாலினி பாப்பா வரலையே வந்தா உங்களுக்கு சேர்த்து ஆர்டர் பண்ணிட்டு என்கிட்ட பேசிட்டு இருக்கும்.” அவர் சொல்ல, இருவரின் ஜோடியும் காலேஜில் மட்டுமில்லாமல் கேண்டில் காதல் பறவைகளாக இருப்பதை அவர் அறிந்தவர். அதனால் தான் நகுலன் கேண்டின் உரிமையாளரிடம் கேட்டான்.

 

“வரேனு சொல்லி எங்க போனா.. ஒரு வேளை க்ளாஸ்ல இருக்காளோ.” அவனுக்குள்ளே பேசிக்கொண்டு அவளின் வகுப்பிற்க்கு சென்று பார்த்தால் அங்கு ஷாலினி உன்னை தேடி தான் கிளம்பினாள் என அவள் தோழிகள் சொல்ல. நகுலனுக்கு பயம் வந்துவிட்டது. கையில் உள்ள போனில் அவளை அழைக்க, ரிங்க் போய்கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி தான் ஆனால் எடுக்கவில்லை.

 

விருஷாலிக்கு போன் செய்ய அவளோ எடுத்தவுடன் “எங்க ஷாலினி நகுலா..” கேட்க.

 

“என்னை பார்க்க கேண்டின்ல காத்திருக்கேனு சொன்னா. ஆனா அங்க போய் பார்த்த இல்லைங்க.. நீங்க எடுத்த உடனே ஷாலினிய கேட்க்குறீங்க. என்னாச்சு அவளுக்கு.. யாராவது..” அவன் பாதியில் நிறுத்த.

 

“ஹரி, ஷாலினிய கடத்திட்டான் நகுலா.. அவன் எங்க வச்சிருக்கானு எனக்குமே தெரியலை. என் ஃப்ர்ண்ட் மூலமா ஹரியோட நம்பர ட்ரேஷ் பண்ண சொல்லிருக்கேன். நீ கிளம்பி என் காலேஜ் வா நகுலா.” விருஷாலி சொல்லிவிட்டு வைக்க. நகுலன் தனது பைக்கை எடுத்துகொண்டு கிளம்பினான்.

 

“என்னாச்சு ம்மா.. வைஷூ எப்படி கானாம போவா.” அவன் பதற்றத்தில் அன்னையிடம் கேட்க.

 

“கர்ணா இப்போ முதல நாமா சோலையூர் கிளம்பி போகலாம். அங்க இருந்து வைஷூ எங்க போனானு விசாரிச்சு தேட ஆரம்பிக்கலாம். போலீஸ் கம்ப்ளைண்ட் அப்புறமா கொடுக்கலாம்.” தந்தையின் பேச்சில் சரி என சொல்லுவதை தவிர அவனிடம் வேறெதும் இல்லையே.

 

வீரபத்திரனும், கர்ணனும் காரில் ஏறும் சமயம் கர்ணனுக்கு போன் கால் வந்தது. அந்த பக்கம் என்ன கூறியதோ, கர்ணன் தந்தை அருகில் இருக்கும் காரணத்தால் கோவத்தை வெளிகாட்டாமல் அமைதியாக அவன் சொல்லுவதை கேட்டான்.

 

“என்னாச்சு கர்ணா.. யார் போன்ல.”

 

“ப்பா நீங்க சோலையூர் போய் தேட ஆரம்பிங்க.” தந்தையிடம் சொல்லிவிட்டு அவன் மட்டும் தனியாக காரில் கிளம்பினான்.

 

தன் முன்னால் இரு பெண்கள் கயிறால் கட்டப்பட்டு இருப்பதை பார்த்த ஹரியின் மனம் விருஷாலி தந்த அவமானத்தை நினைக்க தூண்டியது. தான் பட்ட அவமானத்தை அவன் நினைக்க நினைக்க மனம் விருஷாலியின் மீது கோவத்தையும் ஆத்திரத்தியும் அதிகம் உண்டாக்கியது.

 

மயக்கத்தில் இருந்த முதலில் கண் விழித்த வைஷூ தான் எங்கு இருக்கிறோம் என உணர்தால். ஏதோ ஒரு வீட்டின் வராண்டாவில் தான் கயிறால் கட்டப்பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தவள் யாராவது உதவிக்கு வருவார்களா? என அவள் கத்த முயற்சிக்க, ஆனால் முடியவில்லை. வாயால் துணி கொண்டு கட்டியிருந்தனர்.

 

ஷாலினியும் கண்விழித்து பார்த்தவள் வைஷூவை போல தான் அவளும் செய்தாள். இருவரும் ஒருவரை ஒரு திரும்பும் போது பார்த்துகொள்ள, ஷாலினிக்கும், வைஷூக்கு திகைப்பாக இருந்தது.

 

”ஷாலினி.. ஷாலினி..” கத்திகொண்டே உள்ளே நுழைந்த விருஷாலியும், நகுலனும் அங்கு கட்டப்பட்டிருந்த வைஷூவையும், ஷாலினியையும் பார்த்து அதிர்ந்தார்கள்.

 

நகுலன் அங்கு இருக்கு இருப்பெண்களும் அவனுக்கு முக்கியம். ஒன்று அவன் காதலி, வைஷூ அவனின் அண்ணி. அதனால் அவன் முன்னேறி போக, அவன் பின் தலையில் ஒருவன் கட்டையால் அடித்துவிட்டான். தலையில் சுருக்கென்ற வலி பட்டதும் தான் தெரிந்தது தன்னை யாரோ அடித்துயிருக்கின்றனர். வலியில் அவன் இருந்தாலும் பெண்கள் இருக்கும் பக்கத்தில் அவன் செல்ல முயற்சிக்க மீண்டும் அவனின் காலில் அடி விழுந்தது.

 

“நகுலா..” என விருஷாலி நகுலன் அடிவாங்கியதை உணர்ந்து முன்னே செல்ல, அவளை ஒரு கரம் கெட்டியாக பிடித்துகொண்டது.

 

“என்ன மேடம் வந்தவுடனே உங்க தங்கச்சிய காப்பாத்த போறீங்க.” ஹரி அவளின் கையை பிடித்துகொண்டு கேட்க.

 

“ஹரி தப்புமேல தப்பு பண்ணுற.. சொன்ன கேளு அவங்களை விடு.” விருஷாலி சொல்ல

 

“ஆமா டி தப்பு தான் பண்றேன்.. அதுக்கு என்ன இப்போ. என்னை கல்யாணம் பண்ணிருந்தா இவங்களுக்கு ஏன் இந்த நிலைமை வரபோகுது.”

 

“ஹரி என்னை பழிவாங்க என்னை என்ன வேணாலும் செய். ஆனா ஒன்னும் தெரியாத அவங்களை எதுக்கு கடத்துன. அதுவும் அந்த பொண்ணு யாருனே எங்களுக்கு தெரியாது.” வைஷூக்காக விருஷாலி பேச

 

“ஓ.. மேடம்க்கு தெரியாதா.. நீங்க ஷாலினி லவ்ரோட அண்ணன்கிட்ட உதவி கேட்டீங்களே. அப்போ அவன் தான என்னை பிளாக் மெயில் செய்து கல்யாணத்தை நிறுத்தினான், அவனை பழி வாங்க வேண்டாம்.. அதுக்கு தான் அவனுக்கு நிச்சியம் செய்த பொண்ணை தூக்கிட்டேன்.”

 

“டேய் அவங்க எனக்கு உதவியே செய்யலைடா.. சொன்னா கேளு. எல்லாம் உண்மையும் நான் சொல்லுறேன் உனக்கு என்னை தான பழிவாங்கனும். இதுல எதுக்கு என் தங்கையும், அந்த பொண்ணையும் பழிவாங்க போற.” விருஷாலி போராட.

 

“விருஷாலி நீ கொடுத்த அவமான சின்னம் இன்னும் மறந்து போகலை. கோவையில் ஒரு பொண்ணுகிட்ட நான்  தப்பா, நடந்துகிட்டேனு சொல்லி எல்லார் முன்னாடியும் என்னை அவமான படுத்தியது இன்னும் மறக்கலை. அப்போ செய்ததுக்கு தான் உன்னை ஆக்ஸிடண்ட் செய்ய சொல்லி ஆள் அனுப்பினேன். ஆனா யாரோ செய்த உதவில நீ பிழைச்சுக்கிட்ட. இப்போ மறுபடியும் உன்னை கல்யாணம் செய்து அனு அனுவா சித்ரவதை செய்ய நினைச்சேன் ஆனா இப்போவும் நீ தப்பிச்சிட்டு இனி உன்னை பழிவாங்க கூடாது. நீ யாருமேல அதிகமாக பாசம் வச்சிருக்கியோ அவங்களை பழிவாங்குனா நீ துடிக்கிறதை நான் பார்க்கலாம் இல்லையா.” கண்கள் முழுவது வெறியில் துடிக்க.

 

ஹரியின் பின்னிருந்து ஒரே ஒரு உதைவிட்டான் கர்ணன். கர்ணன் உதைத்த உதையில் ஹரி மாடிபடியின் பக்கம் விழுந்தான். விருஷாலியின் கையை அவன் பேசிகொண்டே லேசாக விட அவள், கர்ணனின் பக்கம் விழ இருந்தாள். அவளை விழாமல் கைக்குள் வைத்துகொண்டு, ஹரியை பார்த்தான் கர்ணன். விருஷாலி யாரென முகத்தை பார்க்க அவனின் கோவத்தில் அவள் உடலே நடுங்கியது. ஒரு ஆணின் கோவத்தையும், முகத்தையும் பார்த்தவள் மனம் இவன் யாரக இருக்க கூடும் என சிந்தித்தாள்

 

”போய் ஷாலினியையும், வைஷூவையும் கயிறை கழட்டிவிடுங்க.” அவள் காதருகில் சொல்லிவிட்டு ஹரியை நோக்கி கர்ணன் செல்ல, இடையில் வந்த அடியாளையும் ஒரு கை பார்த்து அவர்களை இரண்டு அடி கொடுத்து தள்ளிவிட்டான். அவனின் அடியில் ஒவ்வொருவனும் வலியில் சுருண்டு விழுவதை பார்த்தாள் விருஷாலி.

 

“சொல்லுறேன்ல போய் அவங்களை காப்பாத்து.. வேடிக்கை பார்க்க நேரம் இல்லை போ.. அவங்களை இங்க இருந்து அழைச்சிட்டு போ.” அவன் ஒருவனை அடித்துகொண்டே சொல்ல, சுயநினைவிர்க்கு வந்தவள் வேகமாக செயல்பட்டாள்.

 

“ஷாலி.. ஷாலி.. முழிச்சு பாருடி ஷாலு வந்திருக்கேன்.” தங்கையின் கன்னத்தை தட்டி எழுப்பிக்கொண்டே கயிறை கழட்டினாள் விருஷாலி.

 

“இங்க பாரும்மா… ஏய்.. இங்க பாரும்மா..” வைஷூவின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ கொஞ்சம் முழித்துப்பார்த்தாள்.

 

“எழுந்திருங்க இரண்டு பேரும்.. மெதுவா.. மெதுவா.” விருஷாலி எழுப்பிகொண்டு இருக்க.

 

“நகுலா.. கால் வலிக்குதா.. கொஞ்சம் வலி பொறுத்துக்கொண்டு எழுந்திரி.” விருஷாலி அவனையும் எழுப்ப முயற்ச்சிக்க. அவனோ எழ முடியாமல் வலியில் துடித்தான்.

 

”உன்னால முடியும் எழுந்திரி.. வலியை பொறுத்துக்கோ.” முயற்சி செய்ய சொல்ல அவனும் செய்து கொஞ்சம் எழுந்தான்.

 

“வாங்க.. வாங்க.. போகலாம்.” விருஷாலி மூவரையும் எழுப்பிகொண்டு செல்ல.

 

ஹரியை நன்றாக போட்டு அடித்தான் கர்ணன். கர்ணனின் அடியில் ஹரி சுருண்டு போய் விழுந்தான், அடி தாங்க முடியாமல் அவன் கதறினான். ஓரளவுக்கு அடித்தவன் அதற்க்கு மேல் அடித்தால் அவன் செத்துவிடுவான் என நினைத்துவிட்டு கர்ணன் அவனை விட்டுவிட்டான்.

 

பாதி தூரம் நடந்த வைஷூ கர்ணனை காணவில்லை என்ற நினைவு வந்ததும் விருஷாலியின் கையில் இருந்து தன் கையை உருவிகொண்டு கர்ணனை தேடி மீண்டும் அந்த வீட்டின் உள்ளே நுழைய, ஷாலினியை நகுலனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் எங்கு மீண்டும் செல்கிறாள் என பின்னாடியே வந்த விருஷாலியும், ஹரி துப்பாக்கியை எடுத்து கர்ணனை குறி வைத்து சுட, “என்னங்க…” வைஷூவின் குரலில் திரும்புவதற்க்குள் வைஷூ கர்ணனை தள்ளிவிட்டு துப்பாக்கியின் தோட்டாவை அவள் வாங்கிகொண்டாள். இரண்டு குண்டுகள் அவளின் உடலில் நுழைய வலியால் அவள் துடித்து, கீழே விழுந்தாள்.

 

“வைஷூ…” என கத்திகொண்டே கர்ணன் வைஷூவை மடிதாங்கி அமர்ந்தான்.

 

வைஷூவின் நிலையை பார்த்த விருஷாலியும், அதிர்ச்சியாக நிற்க. வைஷூவின் உயிர் ஒவ்வொரு நொடியும் வலியில் துடித்தது.

 

“ஏன் வைஷூ இப்படி செய்த.. ஹாஸ்பிட்டல் போகலாம்.” கையிலே வைஷூவை தூக்கிகொண்டு கர்ணன் செல்ல. அவனின் பின்னே விருஷாலியும் சென்றாள்.

 

கார்ணனின் கையில் வைஷூ இரத்த காயத்துடன் இருப்பதை பார்த்து ஷாலினியும், நகுலனும் பதறி போனார்கள்.

 

இனி வைஷூ பிழைத்துகொள்வாளா?

 

ஹரியை தப்பவிட்டார்களா?

 

வெளிவராத உண்மையை யார் வெளிகொண்டு வருவார்கள்?

                                                 

                                                     தொடரும்…………