anjali’s Endrum Enthunai Neeyaethan 13

என்றும் என்துணை நீயேதான் 13

 

தன்னவனை காக்க வைஷாலி தன் உயிரை பணையம் வைத்து கர்ணனின் உயிரை காத்தாள். அவளின் செயலில் கர்ணனும், விருஷாலியும் அதிர்ந்து போனர். விருஷாலியோ தன்னால் முடிந்தளவு காரை மருத்துவமனைக்கு வேகமாக விரட்டினாள். இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. கர்ணனோ அவளின் வயிற்றில் கை வைத்து அழுத்திகொண்டிருந்தாலும் இரத்தம் வெளியேறியபடி தான் இருந்தது.

 

“ஷாலு சீக்கிரம் போடி.. அவங்களை காப்பாற்றியே ஆகனும்.” ஷாலினி விருஷாலியை விரட்ட

 

“ஷாலினி என் பேக்ல காட்டன், பஞ்சு எடுத்து இரத்ததை அழுத்தி துடைச்சு இரத்ததை க்ளீன் பண்ணு.”

 

“அய்யோ கொஞ்சம் சீக்கிரம் போங்க..” கர்ணன் சொல்ல

 

காரை வேகமாக ஓட்டினாள் விருஷாலி அவள் வாழ்வில் இவ்வளவு வேகம் காரை ஓட்டியது இல்லை. லாரி, கண்டைனர், பஸ் என பார்க்காமல் அதற்க்கு உள்ளே நுழைந்து எல்லாம் அவள் ஓட்டிகொண்டிருந்தாள்.

 

”நர்ஸ்.. ஸ்டெக்ச்சர் கொண்டு வாங்க.” காரை நிறுத்திய நிமிடம் அவள் கத்த. அந்த மருத்துவமனையே அதிர்ந்தது, அங்கிருந்தவர்கள் விருஷாலி கத்தியதை திகைத்து பார்த்தாலும், அவள் பின் கர்ணன் கையில் ஒரு பெண்ணை தூக்கியபடி அவன் ஓடி வந்தான். அவன் கையில் ஒரு பெண்ணின் உயிர் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அனைவரும் விரைந்து வந்தனர்.

 

அவன் கையில் இருந்து அந்த வைஷூவை தாங்கியவர்கள், உடனே அறுவை சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். நகுலனின் காலிலும், தலையிலும் அடிப்பட்டிருப்பதை பார்த்த விருஷாலி, அவனையும் ஷாலினியையும் வேறு ஒரு மருத்தவரிடம் அனுப்பி வைத்தாள். கர்ணனின் சட்டை முழுவதிலும் இரத்த கறை தான் அவனின் எண்ணம் முழுவதும் வைஷூவின் உயிர் மீண்டு வரவேண்டும்.

 

”மேடம் அந்த பொண்ணோட அட்டெண்டர் யாரு.” ஒரு செவிலி கேட்க.

 

“நான் தான்..” செவிலி கொண்ட பேப்பரில் கையெழுத்து போட்டான்.

 

“சீப் எப்படியாவது அந்த பொண்ண காப்பாத்துங்க. இது விஷயமா போலீஸ் கேஸ் ஆகாம நான் பார்த்துகிறேன் சீப்.” தலைமை மருத்துவரிடம் பேசிகொண்டே வந்தவளை பார்த்தான் கர்ணன்.

 

“டாக்டர்… என் வைஷூ எனக்கு வேணும்.. அவளை காப்பாத்துங்க.”

 

“கவலைப்படாதீங்க மிஸ்டர்..” அவனின் தோளை தட்டிகொடுத்துவிட்டு விருஷாலியுடன் ஐ.சி.யூவில் நுழைந்தனர்.

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சை. செவிலிகள் சிலர் உள்ளே நுழைய, சிலர் வெளியே படப்படப்பாய் கையில் மருந்துகளை மாற்றி மாற்றி கொண்டுவந்தனர். நகுலனும், ஷாலினியும் வந்துவிட்டனர். ஆனால் உள்ளே இருப்பவர்கள் எப்பொழுது தான் வெளியே வருவார்கள் என காத்திருந்தனர்.

 

மருத்துவர்கள் வெளியே வந்தனர்.. தலைமை மருத்துவருடன், விருஷாலியும் வெளியே வந்தார்கள். அவர்கள் முகம் சோகத்தை காட்டியபடி இருந்தது. காத்திருப்பவனிடம் என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் அவர்கள் தயக்கம் காட்ட. அவனோ அவர்களின் முக்கத்தில் என்ன இருக்கிறது என அவனால் அறியமுடியவில்லை. வைஷூவை காப்பாற்றிவிட்டார்களா? இல்லையா? என அவன் கேட்க முடியாமல் தவிக்க.

 

“சாரி மிஸ்டர்.. அந்த பொண்ண எங்களால காப்பாற்ற முடியவில்லை. இன்னும் எவ்வளவு நிமிஷமும் எங்களால சொல்ல முடியாது. நீங்க போய் பாருங்க மிஸ்டர்.” அவர் சொல்ல

 

அவனுக்கு இதயமே நின்றுவிட்டது.. வைஷூ உயிர் இருப்பது இன்னும் நிமிடங்கள் மட்டும் தானா? அவன் நினைக்க, அப்படியே அவன் மடிந்துவிட்டான். அவனின் செயலில் விருஷாலி அதிர்ச்சியாக தான் பார்த்துகொண்டிருந்தாள்.

 

“ஷாலு என்ன இப்படி சொல்லுராங்க நீயாவது வைஷூவை காப்பாத்து ஷாலு.” அக்காவிடம், கெஞ்ச.

 

“இல்லை ஷாலினி எங்களால காப்பாத்த முடியலை சாரி.” தங்கையிடம் தங்களால் முடியாததையை இயலாமையில் சொல்ல

 

“அப்புறம் எதுக்கு டாக்டர் படிச்ச.. உன்னால முடியலைனா. வேற டாக்டர் வரசொல்லலாம்.. உனக்கு தெரியாதவங்களா என்ன. ப்ளீஸ் ஷாலு வைஷூவ காப்பாத்த சொல்லு.”

 

தங்கையின் பேச்சில் விருஷாலி இனி காப்பாற்ற முடியாது என தலையை இடவலமாக அசைத்தாள்.

 

ஐ.சி.யூவில் நுழைந்த கர்ணனோ, வைஷூவின் ஃபெட்க்கு அருகே சென்றான். வைஷூவின் நெஞ்சுக்கு கீழே குண்டடி பட்டதாலும், அந்த குண்டடியை கூட அவளால் தாங்க முடியாத உடலின் சக்தி வடிந்தது போல் அவளின் உடல் இருந்தது.

 

“வைஷூ.. வைஷூ..” அவளின் கையை கர்ணன் தன் கைக்குள் பொத்திக்கொண்டு அவளை அழைக்க.

 

லேசாக கண் விழித்தவள் முன் கர்ணன் அமர்ந்திருப்பதை பார்த்து, அவனின் கையை இருக்கமாக பிடித்துகொண்டாள் வைஷூ. முகத்தில் மாட்டியிருந்த மாஸ்க்கை எடுத்தவள்,  “என்னங்க உங்களுக்கு எந்த அடியும் படலையே..” அவளின் கேள்வியில் கர்ணன் தான் திகைத்து போனான். அவள் உயிரே எந்த நொடி போக போகிறதோ மருத்துவர் சொல்லிருக்க. தன் உடலில் எதுவும் அடிபட்டிருக்கா என விசாரித்தவளின் மனம் அவனுக்கு இன்று தான் முழுமையாக புரிந்தது.

 

“வைஷூ.. உனக்கு எதுவும் இல்ல ம்மா.” அவன் என்ன கூறுவது என தெரியாமல் அவளின் நிலையை எண்ணி கண்ணீர்விட்டான்.

 

“என்னங்க.. எனக்கு தெரியும் நான்.. நான்..” அவள் திணற, கர்ணன் பதறி போனான்.

 

”வைஷூ.. ஒன்னுமில்ல ம்மா.. இங்க பாரு..” அவள் கன்னத்தை தட்டினான். வைஷூவின் கண்கள் சொருக.. கர்ணன் மருத்துவரை அழைத்தான்.

 

அவளின் மூச்சு திணறலுக்கு மாஸ்க்கை மாட்டிவிட்டு அவளுக்கு ஊசியை போட்டனர். அதுவரையில் கர்ணன் அவள் கையில் இருந்து தன் கையை பிரிக்கவில்லை. அவனும் அங்கேயே நின்றிருந்தான்.. என்ன முயற்சித்து மருத்துவர்களால் வைஷாலியை காப்பாற்ற முடியவில்லை. கர்ணனின் முகத்தை பார்த்துகொண்டே அவள் விழி மூடினாள்.

 

“சாரி மிஸ்டர் அவங்க இறந்துட்டாங்க.” மருத்துவர் அவனின் தோளில் கை வைத்து சமாதானம் செய்ய, அவனோ வைஷாலி பிடித்திருந்த கையில் முகத்தை புதைத்துகொண்டு அழுதான். தன்னையே உயிரென நினைத்துவளின் வாழ்வை இப்படி பாதியில் முடித்துவிட்டானே அந்த கடவுள்.. என நினைக்க தான் முடிந்தது.

 

சோலையூர் கிராமமே அல்லோல் பட்டது வைஷூவின் இறப்பு செய்தியை கேட்டு. பெற்ற மகளை இப்படி எமனுக்கு தூக்கி கொடுக்கவா நான் ஆசை ஆசையாக பெத்தெடுத்து வளர்த்தேன். என துக்கத்தில் இருந்த வைஷூவின் பெற்றவர்களும், கர்ணனின் பெற்றவர்களும். ஊரே திரண்டு இருந்தது வைஷூவின் வீட்டின் முன். அனைத்து காரியங்களும், முடிந்து வைஷூவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மொத்த குடும்பமும் துக்கத்தில் இருக்க, ஒரு சிலர் கர்ணன் பரிசம் போட்டதில் தான் ராசி இல்லை என மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 

”என்னால தான் அந்த பொண்ணு இறந்துட்டா.. என்னை பழிவாங்கிருக்கலாம் அந்த ஹரி. ஒன்னும் தெரியாத அந்த அப்பாவி பொண்ணோட உயிர் போயிருச்சு. இப்போ நான் ஒரு கொலைகாரி.. கொலைகாரி..” தன் தலையில் அடித்துகொண்டு விருஷாலி அழுதாள். அவள் வாழ்வில் முதல் முறையாக கண்ணீர் சிந்துகிறாள் அதுவும் ஒரு பெண்ணிற்காக. அழும் விருஷாலியை பார்த்துகொண்டிருந்த வேதாசலம் விருஷாலியின் அழுகையை எப்படி நிறுத்துவது என தெரியாமல் இருந்தார்.

 

”சார் கண்டிபிடிச்சிட்டோம்.. கல்யாணத்தை நிறுத்தியது யாருனு.” வேதாசலம் பணியாள் அவரின் முன் வந்து கூற. விருஷாலி அதிர்ச்சியாக வேதாசலத்தை பார்த்தாள்.

 

“யார் அது..”

 

“சாருலதாவோட காதலன்.” அவன் நிறுத்த, இது என்ன புது கதை என்பது போல இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்.

 

”தேவையில்லாம ஒரு பொண்ணோட உயிர் போச்சுடா உன்னலா.” ஹரியை கட்டி வைத்து துன்புறுத்திகொண்டிருந்தான் சந்தோஷ்.

 

“டேய் அவ உயிர் போனதுக்கு என்னை ஏன் டா சித்ரவதை பண்ணுற.. என்னை விடுடா.. என்னை அவமானபடுத்தியவளை தான் பழிவாங்க நினைச்சேன்.” அடியின் வலியை தாங்க முடியாமல் ஹரி கதறினான்.

 

”உனக்கு அடுத்தவங்க வலி எப்படி இருக்கும்னு தெரியாதுல இப்போ காட்டுறேன் பாரு..” அவனின் உடலில் ‘முக்கிய உறுப்பை” ஹரி கதற கதற வெட்டி வீசினான்.

 

“ஆ….ஆ.. அம்மா..” ஹரியின் அலறல் அந்த வீட்டில் அனைத்து இடத்தில் கேட்டாலும் யாரும் அந்த அலறலை கேட்டு வரமாட்டார்கள் ஏன்னென்றால் அந்த வீட்டை சுற்றி எந்த மனிதர்களும் இல்லை. எந்த கட்டிடமும் இல்லை.

 

“என் காதலியை எப்படி துடிக்க துடிக்க கொடுமை செய்து அவளை கெடுத்தியோ, அந்த வலியைவிட உன் வலி இல்லை டா. அவள் வாழ்க்கையை மட்டுமா கெடுத்த, ஒட்டுமொத்த பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுத்துக்கு நான் அவங்க சார்பா உன்னை கொல்ல போறேன்.” காதலின் மரணத்தை தூரத்தில் இருந்து பார்த்தவனின் மனம்.

 

இதற்க்கு மேலும் ஒருவன் இறக்க முடியாது. ஏன்னென்றால் ஆண்களின் பலமும், பலவீனமும் அவர்களின் ஆண்மையே. அதையே அவன் எடுத்துவிட்டான் இனி அவன் வாழ்ந்தால் என்ன வாழாமல் போனால் என்ன. ஆனாலும் காதலி துடித்த துடிப்பு சந்தோஷின் கண் முன்னால் வந்து சென்றது.

 

“எனக்கு வலிக்குது சந்தோஷ..” அவள் வலியில் துடிக்க, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதை நினைத்தவனின் மனம் இன்றும் கதறி அழுதது.

 

“சந்தோஷ் இதுக்குமேல இவனை கொல்ல முடியாது. இனிமே இவன் எந்த பொண்ணு பக்கத்துலையும் போகமுடியாத படி நீ செய்திருக்க செயலே போது. நீ எழுந்து வேதாசலத்தையு, விருஷாலியையும் பார்க்க போ. நடந்த உண்மையை சொல்லு.. அப்படியே வைஷாலி வீட்டுக்கும் நீ போகனும்.” அவனின் உயிர் தோழன் அமுதன் சொல்ல

 

“பாவம் டா அந்த பொண்ணு கல்யாண கனவுல இருந்தா. விருஷாலியை காப்பாற்ற நான் தான் ஹரியை மிரட்டுறதுக்கு போன் செய்து பேசினேன். ஆனா, ஹரியோட சந்தேகம் கர்ணன் மேல வரும்னு நான் நினைக்கலை.  அதுக்கு அந்த பொண்ணு சாகும்னு நான் எதிர்பார்க்கலை டா.” அறிமுகமே இல்லாத வைஷாலிக்கு அவன் கண்கள் கலங்கின.

 

“டேய் நடந்தது நடந்து போச்சு விடு.. இனி எல்லாம் கடவுளோட செயல்ல தான் இருக்கு. எழுந்து நீ மதுரை கிளம்பு. நானும் இவனை எங்காயவது தூக்கி வீசிட்டு வரேன்.” சந்தோஷை அனுப்பி வைத்துவிட்டு உயிர் இருந்தும், இல்லாதது போல் மயங்கி இருக்கும் ஹரியை அவன் தூக்கி கொண்டு யாரும் இல்லாத ரோட்டின் ஓரம் தூக்கி வீசிவிட்டு வந்தான் அமுதன்.

 

அனைத்து தகவல்களையும் கேட்ட வேதாசலமும், விருஷாலியும் திகைத்து இருந்தனர். வேதாசலமோ மகளின் இறப்பில் கூட அவனை கண்டதில்லையே பின் எப்படி அவன் விருஷாலிக்கு உதவ வந்தான். என அவர் யோசிக்க. அப்போ சாருவின் காதலன் தான் தன் திருமணத்தை நிறுத்தியதா? விருஷாலி யோசித்தாள்.

 

ஹரி ஏன் வைஷூவை கடத்த வேண்டும் என விருஷாலி யோசிக்க. அதே நேரத்தில் கர்ணனும் வைஷூ ஏன் அவன் கடத்தினான் என்பதையும் யோசிக்க ஆரம்பித்தான். நகுலனை தேடி கர்ணன் சென்றான்.

 

கோவையில் படிக்கும் போது சாருவிற்க்கும் சந்தோஷிற்க்கும் காதல் ஏற்பட்டது. சாரு, சந்தோஷ் காதல் யாருக்கும் தெரியாமல் இருக்க. சந்தோஷ் உடன் பயிலும் ஹரிக்கு சாருவின் மேல் ஒரு பார்வை இருந்தது. ஒரு கட்டத்தில் சாருவை சந்தோஷ் அழைப்பது போல குரலில் பேசி தனியாக ஒரு ஹோட்டலுக்கு அழைத்து அவளிடம் தவறாக முயன்ற போது தான் விருஷாலி பார்த்துவிட்டாள். அவளின் மூலம் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்த பின் ஹரியை அனைவரின் முன் செருப்பால் அடித்தாள் விருஷாலி. இதை அங்கிருந்த அனைவரும் பார்த்துவிட்டனர். அதனால் விருஷாலியின் மீது ஏற்ப்பட்ட பழிவாங்கும் உணர்வு அவனை மறக்க செய்யவில்லை. அதனால் தான் சாருவையும், விருஷாலியையும் அவன் பழிவாங்க நினைத்தது.

 

அனைத்து உண்மையையும் கர்ணனுக்கு தெரியவந்தால் என்ன நடக்கும்?

 

இதனால் நகுலனும் ஷாலினியும் பிரிவார்களா?

 

                                         தொடரும்………………