anjali’s Endrum Enthunai Neeyaethan 15

       என்றும் என்துணை நீயேதான் 15

 

”கெட்டி மேளம் கெட்டி மேளம்..” ஐயர் மந்திரங்களை ஓதிகொண்டு சொல்ல, விருஷாலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவனில் சரிபாதியாக ஏற்றுகொண்டான் கர்ணன். இருவரின் முகத்தை தவிர மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. குறிப்பாக கோடியம்மாளுக்கும், சோனைமுத்துவிர்க்கு கண்ணீர் வந்தது, பேரனின் வாழ்க்கையில் இனி திருமணமே நடக்காது என எண்ணியிருக்க. ஒரே மாதத்தில் கல்யாணம் நடக்கும் என அவர்கள் நினைக்கவில்லை. பாண்டியன் முல்லைக்கு மகளின் இழப்பில் மீளுவதற்க்கு இந்த நிகழ்ச்சி ஒரு மாறுதலாக இருந்தது. வீரபத்திரனும், லட்சுமியும் மகனின் வாழ்வு இன்று முதல் நல்லதாகவே இருக்கும் என நினைத்துகொண்டனர்.

 

மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும், மனநிம்மதிக்காகவும் நடந்த திருமணமே இதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை என கர்ணன் நினைக்க. தங்கையின் காதலுக்காக மட்டுமே நான் இந்த திருமணத்திர்க்கு அனுமதித்தேன் எனக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என விருஷாலி நினைத்தால்.

 

”பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க.” லட்சுமி சொல்ல, தங்களின் நினைவில் இருந்து மீண்டவர்கள் கோடியம்மாள், சோனை முத்துவிடம் ஆசீர்வாதம் வாங்கினர். அவர்களை தொடர்ந்து அவரவர் தாய் தந்தையிடம் ஆசீர்வாதமும் வாங்க, இறுதியில் முல்லை, பாண்டியனிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.

 

”நல்லா இருங்க மருமகனே.. நல்லா இரும்மா..” என மனதில் மகள் இருக்க வேண்டிய இடம் என நினைக்காமல். மனதார அவர்களை வாழ்த்தினார்கள் முல்லையும், பாண்டியனும்.

 

”நல்ல நேரம் முடியுறதுக்குள்ள வீட்டுக்கு போயிடலாம்.” கோடியம்மாள் சொன்னார்.

 

புது தம்பதியர்களை அழைத்துகொண்டு வீரபத்திரன் லட்சுமி அவர்களின் வீட்டுக்கு சென்றனர். ஊரே வியக்கும்படி மகனின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என எண்ணியிருந்தவர்கள் இப்படி குடும்பத்துக்குள்ளும், சொந்தங்களின் வருகையை மட்டும் வைத்து எளிதாக நடத்திவிட்டார்கள்.

 

வரும் வழியிலெல்லாம் விருஷாலி ஒரு மாதத்துக்கு முன் நடந்தவையை நினத்து பார்த்தாள். தங்கையின் பேச்சில் அதிர்ந்தவள், அவளின் காதலனை பிரிந்து வாழ்க்கை முழுவது வாழ முடியுமா. விருஷாலி நினைத்துகொண்டிருந்தாள். எத்தனை நோயாளிகளை பார்த்திருப்பாள், காதலால் மனம் பாதித்த பெண்களை தான் அதிகம் பாத்திருக்கிறாள். அதனால் அவர்கள் எடுக்கும் விபரீத முடியும் அவர்கள் சொல்லி கேட்டு இருக்கிறாள். தங்கையின் மனமும் நோயாளிகள் போல் பாதித்துவிட்டால் என்ன செய்வது.. தன்னைவிட இளையவள் என்றாலும் ஷாலினியின் முடிவு அவளுக்கு நல்லது என்று பட்டால் செய்வாள். ஆனால் காதல் என்று வந்தால் அறிவாளிகூட முட்டாளாகிவிடுவான் இந்த சமயத்தில் அதனால் தான் விருஷாலி ஷாலினிக்கு பாலில் ஒரு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு, அவளின் அறையிலேயே ஷாலினிக்கு பாதுகாப்பாக இருந்தாள்.

 

தங்கையில் உறங்கும் முகத்தை பார்த்தவள், நகுலனை காதல் செய்வதில் இருந்து அவனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஷாலினி அவனுக்கேற்றவளாக தான் இருந்தாள். தன்னுடன் ஷாப்பிங்க் வந்தாலும், நகுலனுக்கென அவள் எதாவது ஒரு பொருள் எடுப்பாள். இவ்வளவு ஏன் தங்களின் தோழிகளின் பார்டிகளில் கூட ஷாலினி வரமாட்டாள், அதுவும் நகுலனுக்கு பிடிக்காது என்பதால் அப்படி இருக்க, நகுலன் எப்படி காதலில் பிரிந்துவிடலாம் என கூறினான். என்று விருஷாலி நினைக்க நினைக்க தங்கையின் மனம் பாதிப்பாகுமோ என வருத்தம் கொண்டாள்.

 

”எல்லாம் கேள்விபட்டேன் விருஷாலி.. ஆனால் என்னால தான் உடனே வரமுடியலை. டெல்லில நடந்த கொலை கேஸ் பற்றி விசாரிட்டு இருக்கும் போது தான் நடந்த அனைத்தையும் என் ஜூனியர் சொன்னான். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன் இப்போ எல்லாம் ஓகே தான.” ப்ரணவ் கேட்க.

 

“நாட் ஓகே ப்ரணவ்.. இப்போ என் தங்கையோட காதல் பிரிந்துவிட்டது.”

 

“நகுலன் நல்ல பையன் தான.. அப்புறம் என்ன.. அவங்களுக்குள்ள சண்டையா..”

 

“என்னலா தான் அவங்க காதல் பிரிந்துவிட்டது..” என ஆரம்பம் ப்ரணவிர்க்கு தெரிந்தாலும், இடையில் வைஷூவின் விஷயத்தில் இருந்து  நேற்று தங்கையின் அழுகை வரை சொல்லி முடித்தாள் விருஷாலி.

 

“நகுலன் என்ன பைத்தியமா.. அண்ணனுக்காக காதலை தியாகம் செய்ய.”

 

“பைத்தியம் இல்லை ப்ரணவ்.. அன்பு, அவங்க அண்ணனோட வாழ்க்கை சரியாகமா அவன் காதல் மட்டும் எப்படி செய்ய முடியும். அவன் எடுத்த முடிவு சரி தான் ஆனா இதுல அதிகம் பாதிப்பானது ஷாலினியும் அவளோட காதலும் தான்.”

 

“நான் பேசிப்பார்க்குறேன் விருஷாலி..”

 

”வேண்டாம் ப்ரணவ்.. இது என் தங்கையோட காதல் வாழ்க்கை. அவளுக்குகாக நான் தான் முயற்சி எடுக்கனும்.”

 

“அதுக்கு.. நீ என்ன செய்ய போற விருஷாலி.”

 

“திருமணம்”

 

“யாரை”

 

“நகுலனோட அண்ணன தான் திருமணம் செய்ய போறேன்.” ப்ரணவ் அதிர்சியாக பார்க்க

 

“விருஷாலி உன் தங்கை வாழ்க்கைக்காக உன் வாழ்க்கையில விளையாடாத. இது ரொம்ப முட்டாள் தனமான முடிவு.”

 

“இல்லை முட்டாள் தனமான முடிவு இல்லை சரியான முடிவு தான் நான் எடுத்திருக்கிறது.” ப்ரணவிர்க்கும், விருஷாலிக்கும் சண்டை வராத குறையாக இருவரும் வாகுவாதம் செய்தனர். இறுதியில் ப்ரண்வே இறங்கி வந்தான்.

 

“உன் இஷ்டம் விருஷாலி.. திருமணத்துக்கு என்னை கண்டிப்பா அழைக்கனும்.” அவன் கோவத்தில் சொல்லிவிட்டு சென்றான்.

 

அடுத்து அவள் சென்ற இடம் வேதாசலத்தின் வீட்டிற்க்கு தான். அவரிடம் நடந்த அனைத்தையும் சொல்லியவள் தங்கையின் காதல் பிரியகூடாது என்று வேதாசலத்தின் உதவியை நாடினாள். சந்தோஷூம் அதற்க்கு உதவி செய்வதாக சொல்ல, வேதாசலம் எப்படி அவர்களின் வீட்டை அனுகுவது என தெரியாமல் நின்ற போது தான் பாண்டியனை எதிர்பாரமல் சந்தித்தார்.

 

ஒரு பெண் வீட்டில் கர்ணனுக்கு பெண் பார்க்க சென்ற போது. அங்கு அவர்கள் ஏற்கனவே நடந்த விஷயத்தை மனதில் கொண்டு பெண்ணை கர்ணனுக்கு திருமணம் செய்துகொடுப்பதில் விருப்பம் இல்லை என சொல்லிவிட்டனர். அதனால் மனம் சோர்ந்து வந்தவர்  முகம் வேர்வையில் குளித்திருக்க, அவரின் நெஞ்சில் வலி சுரீர் என்று வலி எடுக்க அப்படியே நெஞ்சை பிடித்துகொண்டு அமர்ந்துவிட்டார். பின் அங்கிருந்த மக்கள் தான் வேதாசலத்தின் காரை நிறுத்தி உதவி செய்யுமாறு கூறினார்கள். வேதாசலமும் பாண்டியனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரின் சொந்தங்களுக்குகாக காத்திருந்தார். அப்போது மருத்துவர், பாண்டியன் நலமாக இருக்கிறார் என சொல்லி, அவரை பார்க்க போகலாம் என அனுமதியும் கொடுத்தார்.

 

“இப்போ பரவாயில்லை தம்பி..”

 

”பரவாயில்லைங்க ஐயா..”

 

“ஏன் தம்பி இப்படி தனியாவ வருவீங்க கூட யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு வந்திருக்கலாமே. அப்படி என்ன தான் காரியத்துக்கு வந்தீங்க.” வேதாசலம் கேட்க, பாண்டியன் அனைத்தையும் சொல்லி முடிதார். மருமகனின் வாழ்க்கை நல்லதாக அமைய பெண் தேடிக்கொண்டிருப்பதை சொன்னார். அப்போது தான் விருஷாலி சொல்லிய காரணமும் நியாபகம் வந்தது.

 

“பையன் போட்டோ வச்சிருக்கீங்களா.” அவர் கேட்க.

 

கர்ணனின் போட்டோவை காட்டினார் பாண்டியன். போட்டோவை பார்த்த வேதாசலம், ”பையனுக்கு எத்தனை பேரு கூட பிறந்தவங்க.”

 

“ஒரே ஒரு தம்பி.. அவன் பேரு நகுலன்.” பாண்டியன் சொல்லவும், அன்று, விருஷாலி ஷாலினியின் காதலனை பற்றி சொன்னது நியாபகம் வந்தது.

 

“நான் சொல்லுற இடத்துக்கு போங்க, பொண்ணு கேளுங்க அவங்க உங்க குடும்பத்துக்கு பொண்ணு கொடுப்பாங்க.” அவர் சொல்லுவதை, புருவம் சுருங்கி பார்க்க.

 

“எப்படி ஐயா சொல்லுறீங்க.. நீங்க சொல்லுற இடத்துல..” அவர் சந்தேகமாக கேட்க.

 

“எல்லாம் நல்லபடியா நடக்கும் தம்பி..” வேதாசலம் சிரித்துகொண்டே சொல்லிவிட்டு சென்றார்.

 

வேதாசலம் கொடுத்த முகவரியில் பாண்டியனும் சென்று பார்த்தார். பாண்டியன் தயங்கியபடியே வாசலில் நின்றிருக்க,

“வாங்க.. வாங்க.. ஏன் அங்கயே நின்னுட்டீங்க உள்ள வாங்க .” ஜெகன் சிரித்த முகமாய் பாண்டியனை அழைத்து சென்றார் வீட்டினுள்.

 

“ஜோதி.. ஜோதி..” மனைவியை அழைத்து, பாண்டியனுக்கு அறிமுகம் செய்ததோடு நிற்காமல் அவர்க்கு குடிக்க கையில் குளிர்பானத்துடன் வந்தாள் விருஷாலி.

 

“இவள் தான் என் மூத்த மகள் விருஷாலி..”

 

பாண்டியனுக்கு நடப்பது அனைத்தும் கனவு போல் இருந்தது. வேதாசலம் சொல்லியது போல் நடக்கிறதே என அவர் யோசிக்க.

 

“சார் என் மருமகனுக்கு உங்க பொண்ணை திருமணம் செய்து கொடுக்க..” அவர் கேட்க்க தயங்குவதை பார்த்து,

 

“மனபூர்வ சம்மதம்ங்க.. என்ன சார்னு சொல்லுறீங்க.. உங்க வயசு தான் என் வயசும் பேர் சொல்லி அழைங்க.”

 

ஆச்சர்யமாக இருந்தது பாண்டியனுக்கு பொண்ணு கொடுக்க சம்மதம்னு சொல்லிட்டாங்க. அப்போ அன்னை என்னை சந்தித்தவர் இவங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருங்கின சொந்தமோ. இல்லை இவரோ அப்பாவா இருக்குமோ. பாண்டியன் எப்படி நடந்தது என யோசிக்க.

 

“பாண்டியன் உங்க மருமகனுக்கு என் பொண்ணை திருமணம் செய்து கொடுக்க முழு சம்மதம். என் பொண்ணோட விருப்பமும் இது தான். எப்போ திருமணம் வச்சுகலாமுனு தேதி குறிச்சுட்டு சொல்லுங்க. எங்க சார்பா என்ன செய்யனும்னு சொல்லுங்க அதையும் நாங்க செய்துகொடுக்குறோம்.” ஜெகன் பாண்டியனுக்கு அதிர்சி மேல் ஆச்சர்யமும் வைத்தார்.

 

பாண்டியனுக்கு இதற்க்கு மேல் தாமதித்தால் திருமணம் தள்ளி போய்கொண்டே  இருக்கும் என்பதால் கையோடு ஒரு பரிசமும், குடும்பம் மட்டும் கலந்துகொள்ளும்படி வைத்துவிட்டு, திருமண தேதியை இரண்டு வாரத்துக்கு பின் குறித்தனர்.

 

குடும்பம் முழுவது மகிழ்ச்சியில் இருந்தாலும், ஷாலினியும், நகுலனும் விருஷாலியிண்டம் பேச செல்லும் போதெல்லாம் அவர்களை தவிர்த்துவிட்டு அவளது  அன்னையிடனோ, இல்லை தந்தையுடனோ இருப்பது போல் பார்த்துகொண்டாள்.

 

ஷாலினியோ, விருஷாலியின் கல்லூரிக்கே சென்று பேச முயற்சிக்கும் போதெல்லாம் மீட்டிங்க் இருப்பது போலும், மற்ற மருத்துவமனைக்கு சென்று இலவசமாக சிகிச்சை கொடுப்பதிலும் ஷாலினியை தவிர்த்தாள். சில நேரம் வீட்டிர்க்கு கூட தாமதமாக வருவாள் விருஷாலி.

 

தங்கை வீட்டில் இருந்தால் விருஷாலி, ஆசிரமத்தில்முழு நேரம் இருப்பாள். ஷாலினியை மொத்தமாக விருஷாலி தவிர்க்க ஆரம்பித்தாள். இல்லையென்றால் தோழிகளுடன் நேரத்தை கூட்டிக்கொள்வாள்.

 

“என்ன ஷாலு உன் தங்கச்சிக்காக எப்படிடி நகுலனோட திருமணத்துக்கு சம்மதிக்க தோணுச்சு.” வந்தனா கேட்க

 

“வேண்டாம் ஷாலு… பிடிக்காத திருமணம் செய்து, அதுல வர்ர பிரச்சனையில அதிகமா பொண்ணுங்க பாதிக்கப்பட்டு வர்ர பொண்ணுங்களை நீயே ட்ரீட்மெண்ட் பாத்திருக்க. அப்படி இருந்து எப்படி ஷாலு இந்த திருமணத்துக்கு ஒத்துக்கிட்ட.” மோனிஷா கேட்க.

 

“எல்லாம் என் தங்கச்சியோட காதலுக்குகாக தான். ஆனா இன்னொரு விஷயமும் இருக்கு, அதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. விட்டுருங்க இனி என் வாழ்க்கைனால யாருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.” தோழிகளிடம் முழுதாக விஷ்யத்தை கூறாமல் ஷாலினிக்காக மட்டுமே என விருஷாலி சொல்லியிருந்தாள்.

 

ஆலயம் ஆசிரமம்:

 

தனியாக மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தவள் முன் குழந்தைகளின் மகிழ்சியான விளையாட்டில் அவள் கண்கள் பார்த்திருக்க. மனம் லேசானது போல் இருந்தது. அவளை போலவே கர்ணனும் அங்கு தான் இருந்தான். மாமாவின் திடிர் செயலில் கர்ணனின் மனம் அவனின் குடும்பத்திர்காக மட்டுமே விருஷாலியை திருமணம் செய்ய சம்மதித்தான். அவனுக்குமே விருஷாலியை எப்படி பெண் பார்த்தனர் என்ற கேள்வியும் இருந்தது ஆனால் அதை கேட்க்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. ஒருவேளை கர்ணன் சந்தோஷூடன் வந்த போது சொல்லிய சொல்லுக்கு தான் விருஷாலியும் இந்த திருமணத்திற்க்கு சம்மதித்தாளோ என்ற கேள்வியும் அவனுள் இருந்தது ஆனால் விருஷாலியிடம் முகம் கொடுத்து பேசுவதற்க்கு கூட அவன் விரும்பவில்லை. அவன் வீட்டிலும் நகுலன் கர்ணனிடம் பேச வந்தால் அவனை பார்த்துவிட்டு பார்க்காது போல் கடந்து சென்றான். கர்ணன் வயல், தோப்புகளில் நேரம் கடத்த்துவதை கணக்கு மாமா அறிந்தாலும் கர்ணனிடம் பேசுவதற்க்கு அவர்க்கு தைரியம் இல்லை.

 

இதோ திருமணமும் முடிந்தது விருஷாலியின் தோழிகளும், தோழனும் திருமணத்திற்க்கு வந்திருந்தனர். இருவரை தவிர வேதாசலமும், சந்தோஷூ திருமணத்திற்க்கு வரவில்லை.

 

கர்ணன், விருஷாலி மணவாழ்வு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

 

அண்ணனின் வாழ்வு சீராகிவிட்டதென்று நகுலனும், ஷாலினியும் மீண்டும் காதலில் இணைவார்களா?

                                               

                                                                     தொடரும்…………..