anjali’s Endrum Enthunai Neeyaethan 17

anjali’s Endrum Enthunai Neeyaethan 17

        என்றும் என்துணை நீயேதான் 17

 

இரவு முழுவதும் அவள் தேர்வுகளை பற்றிய வேலையில் இருந்ததால் விடியலில் தான் உறங்கினாள். அவளுக்கு முன் எழுந்த கர்ணன் நேரத்தை பார்க்க ஆறு ஆகிகொண்டிருந்தது. ‘இந்த நேரம் இவள் எழுந்து குளித்து கொண்டிருப்பாளே ஏன் இன்னும் உறங்குகிறாள்.’ என அவன் யோசிக்கும் நேரம் போனில் அலராம் அடித்தது. கர்ணனோ தனது போனை எடுத்துப்பார்க்க. அலாரம் அவன் போனில் இருந்து வரவில்லை, அவள் போன் தான் அலாரம் அடிக்கிறது, மெதுவாக கண் விழித்தவள், சோமபல் முறித்துகொண்டிருக்கும் போது அவளது இரவு உடை மேலே ஏறி, அவளின் இடுப்பை நன்றாக காட்டியது. கர்ணனோ அவள் சோம்பல் முறிப்பதை பார்த்து, அவளின் மேலாடை தூக்கி இடுப்பு தெரியவும் தான் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என புரிந்தது.

 

தலையை உலுக்கி கொண்டு வேகமாக குளியல் அறைக்கு சென்றவன். “இனிமே அவள் முகத்தை தவிர வேற எங்கயும் என் பார்வை போக கூடாது.” நீர்ல் சத்தியம் செய்யாத குறையாக அவன் முடிவெடுத்துகொண்டு வெளியில் வருகையில் அவள் குளித்து முடித்து, சேலையின் மடிப்பை கையால் நீவி கொண்டிருந்தாள். காட்டன் சேலையில் அவள் உடம்பு முழுவதும் ஒல்லியாக தெரிந்தது. சேலையை கட்டியிப்பதை பார்த்துகொண்டே அவனின் சட்டையை எடுக்க போக, அவள் மீது மோதிகொண்டான்.

 

“ச்சு..” அவள் சத்தமிட

 

“சாரி..”

 

 

முழுதாக தயராகிவிட்டு அவளின் ஹேண்ட் பேக்கையும், மடிக்கண்ணியையும் எடுத்துகொண்டவள், நியாபகம் வந்தது போல், “இன்னைக்கு ஈவ்னிங் ரெடியா இருங்க நான இரண்டு பேரும் வெளிய போகனும். நான் சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவேன்.” அவனிடம் சொல்ல.

 

“எதுக்கு வெளிய போகனும் நாம ரெண்டு பேரும்.”

 

“போகனும் அவ்வளவு தான்..” அத்துடன் பேச்சை முடித்துகொண்டு அவள் கீழ் இறங்கி வரும் போது,

 

“மருமகளே காலேசு கிளம்பிட்டயாம்மா..” வீரபத்திரன் கேட்க.

 

“ஆமா, மாமா.. அத்தை கேண்டின்ல சாப்பிட்டுகிறேன் நேரம் ஆச்சு.” அவசரமாக சொன்னாள் விருஷாலி.

 

“தெரியும்மா.. அதான் காலையிலே உனக்கு டிபனும், மதிய உணவும் செய்துட்டேன் இந்தா.” என்று வயர்கூடையில் அவளின் இரு வேளை உணவுகளை கொடுத்தார்.

 

“தாங்க்ஸ் அத்தை.. இன்னைக்கு நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்திருவேன் அத்தை இன்னையோட எக்‌ஷாம் முடிந்தது.” அவர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட்டாள்.

 

அதே கர்ணனின் பைக்கில் அமர்ந்துகொண்டு கம்பியை பிடித்துகொண்டு வந்தாள். அவனும் பின்னே அவள் இருக்கிறாள் என்பதை மறந்து சென்றுகொண்டிருந்தான். ஒரு ஏற்றத்தில் அவன் பைக்கின் வேகம் குறையாமல் ஏற்றிவிட, பயத்தில் அவனின் தோளில் ஒரு கையும், இடுப்பில்  ஒரு கையும் வைத்து பிடித்துகொண்டாள்.

 

“ஸ்பீட் ப்ரேக் அதான் சேக் ஆச்சு..” அவன் சாதாரணமாக சொல்ல, அவளுக்கோ கோவமாக எதாவது பேசிவிடுமோ என்று அமைதியாக இருந்தாள்.

 

”அங்க பாருங்க டி ஒரு சார் செம ஹேண்ட்ஸ்சம்ல.” கல்லூரியின் வாசாலில் பெண்கள் கூட்டம் நின்று, கர்ண்னை பார்த்து சொல்ல.

 

இறக்கிவிட்டவன் காதில் அந்த வார்த்தை விழவில்லை. ஆனால் இறங்கியவள் காதில் அந்த வார்த்தை நன்றாக விழுந்தது. அந்த பெண் சொல்லியதை கேட்டு, “ஏன் உங்க தலையில் ஏதோ தூசியா இருக்கு.” என சொல்லிகொண்டே அவனின் தலை முடியை கலைத்துவிட்டாள் விருஷாலி.

 

“இப்போ ஓகே வா.” அவன் கேட்க, விருஷாலி கலைந்த தலையுடன் கர்ணன் கேட்ப்பதை பார்த்து, “ம்ம்.. ஓகே” வாய் மூடி சிரித்துகொண்டே சொல்லி சென்றார்.

 

“எதுக்கு சிரிச்சுட்டு போறா.” அவனுக்கு அப்போது தெரியவில்லை. வீட்டில் லட்சுமி கேட்ட போது தான் பைக்கின் கண்ணாடியை பார்த்து அதிர்ச்சியானான்.

 

“திமிரு திமிரு.. முடியை கலைச்சுவிட்டு ஓகேனு சொல்லிட்டு போறா.” மனதில் திட்டிக்கொண்டே அவன் வயலுக்கு சென்றான்.

 

”பாவம் ஷாலினிக்கு அடிப்பட்டுருச்சாம் டா..” நகுலனின் வகுப்பு தோழன் மற்றவனிடம் சொல்லிகொண்டிருக்க. நகுலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எழுதிகொண்டிருந்த நோட்டை மூடி விட்டு நேராக அவளது வகுப்பு சென்றான்.

 

“வலிக்குது டி விடு..”

 

“கொஞ்சம் பொறு ஷாலினி வலி குறையும்னா இந்த மருந்து போட்டா தான் குறையும்.”

 

“அய்யோ எரியுது டி..”

 

“தேவையாடி உனக்கு, வராத டான்ஸா வா வானா எப்படி வரும். இப்போ பாரு டான்ஸ் ஆடுரேனு விழுந்து சுழுக்கி வச்சிருக்க.” ஷாலினியின் வகுப்பு தோழி திட்டிகொண்டிருக்க.

 

“என்னாச்சு.. ஷாலினி.. எங்க வலிக்குது.” அவளின் கன்னத்தை பிடித்து நகுலன் கேட்க.

 

அவனின் கையை தட்டிவிட்டு, “விடுங் போதும்.. நான் கிளம்புறேன்.” தோழிகளிடம் இருந்து விலகி எழுந்து நடக்க முடியாமல் எழுந்தவள் வலியினால் மீண்டும் அமர்ந்துகொண்டாள்.

 

“உன்னால தான் முடியலை நான் உன்னை அழைச்சிட்டு போறேன்.” அவளின் தோளை பிடித்துகொண்டான்.

 

“என்னை விடுங்க.. இப்போ பரிதாபத்துல பிடிப்பீங்க. அப்புறம் கைவிட்டுட்டு போயிடுவீங்க நான் யாரையும் நம்ப மாட்டேன்.” அவனின் காதல் கொடுத்த காயத்தால் அவள் இப்படி பேசுவதற்க்கு காரணம்.

 

“ஷாலினி என்னை காயப்படுத்தினா அது உன்னையும் காயப்படுத்தினதுக்கு சமம்.”

 

“அதனால் தான் என் அக்கா, எனக்கா, என் காதலுக்காக அவள் வாழ்க்கையை தியாகம் பண்ணிருக்கா. அதுவும் விருப்பம் இல்லாம உங்க அண்ணாவ திருமணம் செய்துருக்கா. அதைவிட எல்லாம் இந்த வலி அதிகம் இல்லை.”

 

“அப்போ என்மேல தான் தவறுனு சொல்லுரியா ஷாலினி.”

 

“ஆமா, அண்ணனுக்காக காதலை வேண்டாம் சொல்லுறவங்களை அன்னைக்கு தான் பார்த்தேன்.” அவன், அன்று இருவரும் பிரிந்துவிடலாம் என சொல்லிய தினத்தை நியாபகப்படுத்தினாள்.

 

“வலி எல்லார்க்கு இருக்க தான் செய்யும் ஷாலினி ஆனால் ஒரு உயிர் போனதோட வலி நமக்கு வந்தா தான் தெரியும். அதே மாதிரி தான் என் மாமா பொண்ணு வைஷாலி இறக்கும் போது ஏற்ப்பட்ட வலி எனக்கு தெரிந்தது. அதனால் தான் நாம பிரிந்துவிடலாம்னு சொன்னேன். சொல்லிய என்னைவிடவா உனக்கு வலிக்க போகுது.”

 

“வலிச்சது இங்க வலிச்சது..” ஷாலினி அவனின் சட்டையை பிடித்துகொண்டு, இதயத்தை சுட்டிகாட்டி வலியின் வீரியத்தை சொன்னாள்.

 

“சாரி டி.. நீ இல்லைனா நான் மட்டும் எப்படி இருப்பேன்.” அவளை கட்டிகொண்டு அழுதான். ஷாலினியின் வகுப்பு தோழிகள் அவர்களின் பேச்சுகளை கேட்டுகொண்டிருந்த நேரம் இப்படி திடீர் என கட்டிப்பிடிப்பார்கள் என அவர்களுக்கு தெரியாது, அவர்களின் செயலை கண்ணை மூடிகொண்டு வெளியே சென்றனர்.

 

இரண்டு மாத பிரிவுக்கு பின் இன்று தான் இருவரும் பார்த்து, பேசிகொண்டனர். அவனின் அணைப்பில் ஏறிய பாரம் இறங்கியது. அவளுடன் எப்போது தள்ளி நின்று பேசியவன் இன்று தான் காதலியின் ஸ்பரிசத்தை உணர்கிறான். இரண்டு மாதங்களின் இருவருக்கும் புரிந்து இருக்கும், காதலில் மகிழ்ச்சி மட்டுமல்ல கண்ணீரும் இடம் பெறும் என்பதை.”

 

ஹோட்டல் க்ரீன் பார்க்..

 

“ஹே வா ப்ரீத்தி.. வா ஷிவானி, எங்க வந்தனா..” தோழிகளை வரவேற்று, வந்தனாவை கேட்டுகொண்டிருந்தாள் மோனிஷா.

 

“காரை பார்க் பண்ணிட்டு வரேனு போயிருக்கா. எங்க ஷாலு வந்துட்டாளா மோனி.”

 

”இல்லை டி, அவளை தான் தேடிட்டு இருக்கேன்.”

 

“ஹாய் மோனி.. எங்க டாக்டர் வந்துட்டாரா.” மோனியின் கணவனை கேட்க.

 

“ம்ம் உள்ள அவரோட ஃப்ர்ண்ட்கிட்ட பேசிட்டு இருக்காரு.”

 

”அதோ வந்துட்டா நம்ம ஷாலு..” ப்ரீத்தி சொல்ல, மற்ற மூவரும் திரும்பி பார்க்க. கர்ணனுடன் வந்துகொண்டிருந்தாள் விருஷாலி.

 

“ஹாய்ய்ய்.. ஷாலு..” நால்வரும் அவளை கட்டியணைத்து வரவேற்றனர்.

 

“ஹீஸ் மை ஹஸ்பெண்ட் கர்ணன்.” அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்க.

 

“ஹாய் சார்..” நால்வரும் வணக்கம் வைக்க, அவனுக்கு வியப்பாக இருந்தது.

 

”வாங்க உள்ள போகலாம்..” அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கிய டேபிளில் அமர்ந்தனர்.

 

“என்னங்க இவங்க தான் என் ஃப்ர்ண்ட் வந்தனா, ப்ரீத்தி, ஷிவானி, அண்ட் மிஸஸ். விருஷாலிகர்ணன், அண்ட் இவர் கர்ணன். நியூலி மேரிட் அவங்க மேரேஜூம் நம்ம மேரேஜூம் ஒரே தேதில நடந்ததுங்க.” மோனிஷா தன் கணவனிடம் அறிமுகம் செய்ததோடு, விருஷாலியின் மேரேஜையும் சொன்னாள்.

 

“ஹாலோ ஆல்.. சிஸ்டர்ஸ்.. அண்ட் உங்களுக்கு என் பெஸ்ட் விஷஸ் மிசஸ்.கர்ணன்.” தோழியர் நால்வரிடமும், பேசி, இறுதியில் விருஷாலி கர்ணனிடம் வாழ்த்துகளை கூறினான்.

 

“தாங்க் யூ..”

 

அவர்களுக்குள் சின்ன பேச்சு வார்த்தையும், கல்லூரி படிக்கும் போது நடந்த கலாட்டக்களையும் சொல்லி சிரித்துகொண்டிருந்த வந்தனாவும், ப்ரீத்தியும். மோனிஷாவின் சேட்டைகளை மறக்காமல் கூறினாள்.

 

“அடிப்பாவி என்னமோ அவனுக்கு நான் லவ் லெட்டர் கொடுத்த மாதிரி பேசுற. ஆனா அது நீ எழுதிய லவ் லெட்டருனு அவனுக்கு தெரியமா போனது ஆச்சர்யமே.”

 

“அதைவிட பெரிய காமெடி என்ன தெரியுமா, அது லவ் லெட்டர்னு தெரியாம அவன் படிச்சு பார்த்து முழிச்சான் பார்த்தியா அங்க தான் நம்ம பார்த்திபன் நிக்குறான்.” ஷிவானியும் அந்த காமெடியில் மீதி இருந்ததை சொல்ல.

 

தோழிகளின் நால்வரும் நடந்ததை  நினைத்து சிரித்துகொண்டிருந்தனர். அவர்களின் சிரிப்பையும் பேசுவதையும் ஒரு புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர் மோனிஷாவின் கணவனும், விருஷாலியின் கணவனும்.

 

“இதெல்லாம் நடந்திருக்கா.. நானெல்லாம் படிப்பு படிப்புனு சுத்திட்டே இருப்பேன்.” மோனியின் கணவன் ரவி சொல்ல.

 

”அண்ணா, இதெல்லாம் விட விருஷாலிக்கு ஒரு ஜூனியர் பையன் கொடுத்தான் பாருங்க ஒரு அதிர்ச்சி அதெல்லாம் வாழ்க்கையில மறக்க முடியாது.”

 

”ஏய் சும்மா இருடி..” விருஷாலி வந்தவனாவை அடக்க.

 

”அப்படியென்ன நடந்தது.” ரவி கேட்க, கர்ணன் சுவராசியமாக கேட்க ஆரம்பித்தான்.

 

விருஷாலியின் டிப்பார்மெண்ட் ஃபங்க்‌ஷனில் விருஷாலியின் வாழ்த்துரையை ஆங்கில புலமையில் பேசுவதை கவனித்து, அன்று முதல் விருஷாலியின் தீவிர ரசிகன் ஆனான். அதை வெளிப்படுத்தும் விதமாக அவன் விருஷாலின் பின்னே சுற்றினான்.

 

“என்ன டா உனக்கு பிரச்சனை..”

 

“சீனியர், உங்களை எனக்கு பிடிச்சிருக்கு, நான் உங்க கூட வாழ்க்கை முழுவது வராம இருந்தாலும், இந்த காலேஜ் முடியுற வரையாவது உங்க கூட வரேன் சீனியர்.” அவன் சொன்னதை கேட்டு மொத்த கல்லூரியும் சிரித்துவிட்டது.

 

“டேய்.. நீ என் ஜூனியர்.”

 

“அதனால் என்ன சீனியர்..”

 

“சச்சின் அஞ்சலி வாழலையானு நீ கேக்க வர்ர.”

 

“ஆமா, சீனியர்..”

 

”அவனும், விருஷாலி சொல்ல கேட்க்காம எங்க காலேஜ் ஃபைனல் இயர் முடிந்து போகும் போறப்போ நாங்க ஃபீல் பண்ணோமோ இல்லையோ அந்த ஜூனியர் அழுது புரண்டுட்டதை பார்த்துருக்கனும் அங்கேயே நீங்க எல்லாம் சிரிச்சிருப்பீங்க.”

 

“அப்புறம் என்னாச்சு..”

 

“அப்புறம் என்ன அந்த ஜூனியர் எங்க இருக்கானோ, ஆனா விருஷாலியே அலறவிட்டவன் அவன் ஒருத்தன் தான்.” வந்தனா

சொல்லி முடித்தும் விருஷாலிக்கு வெட்க்கமாக போனது, கர்ணனோ, புன்னகையுடன் விருஷாலியை பார்த்தான்.

 

அதன் பின் பேச்சுடன், உணவுகளை பகிர்ந்துகொண்டு மேலும் ஏதேதோ பேசிகொண்டிருந்தனர். ஆண்கள் இருவரும் தனியாக பேச செல்ல, பெண்கள் ஐவரும் கூடி அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.

 

“எப்படி போகுது புது வாழ்க்கை கர்ணன்.” ரவி கேட்க

 

“நல்லா போகுது.. உங்களுக்கு எப்படி போகுது.”

 

“எனகென்ன, ராஜா மாதிரி பார்த்துகரா என் மனைவி.. அவளோட அன்புல நான இருக்கேனு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.  உங்ககிட்ட சொல்லுறதுக்கு என்னங்க, நானும் ஒரு பொண்ணை காதலிச்சவன் தான். என்ன டா இப்போதான் எல்லார் முன்னாடியும் படிப்புனு சுத்திட்டு இருந்தேனு சொன்னானு யோசிக்குறீங்களா. எல்லார் முன்னாடியும் சொந்த விஷயத்தை எப்படிங்க சொல்ல முடியும்.”

 

கர்ணன் அவனை ஏன் என்பது போல் பார்க்க.

 

“இரண்டு வருஷ காதல் தோல்வில தான் முடிந்தது. அதுக்கு பின்னாடி திருமணம் செய்யனும் சொல்லி வீட்டுல ஒவ்வொரு பொண்ணு போட்டோ காட்டுனாங்க. எனக்கு பிடிக்கலைனு சொல்லி விட்டேன். ஆனா திடீர்னு பொண்ணு பார்க்க கூப்பிட்டு போயிட்டாங்க. அங்க போயாவது பொண்ணுக்கிட்ட சொன்ன சரியா போகும் நினைச்சேன். அங்க தான் மோனிஷாவோட அன்பு எனக்கு புரிய ஆரம்பிச்சது. அப்புரம் திருமணம் செய்துகிட்டோம், இரண்டு பேருமே வெளிப்படையா பேசினோம், ஒரு வாரம் நான் அவகூட டைம் செபெண்ட் பண்ண லீவ் போட்டுருந்தேன், ஆனா மோனிஷாவுக்கு     லீவ் கிடைக்கலை. கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கை புரிந்துகொண்டு வாழ ஆரம்பிக்கனும் கர்ணன்.”

 

“வாழ்க்கை இந்த ஜென்மத்துல ஒரு முறை தான் வாழப்போறோம். அதையேன் தள்ளி வைக்கனும் பிடிச்சு வாழ பழகிட்டா வாழ்க்கை சுவாரசியமா இருக்கும். உங்க திருமணத்தை பற்றி மோனிஷா சொன்னா, அவங்களோட மனசுல என்ன இருக்குனு தெரிந்துகொள்ள முயற்சி பண்ணுங்க. உங்களுக்கு தெரியாது கூட இருக்கலாம். அஸ் ஏ ஃப்ர்ண்டா சொல்லுறேன் கர்ணன் விருஷாலிகிட்ட கணவனா வெளியப்படையா பேசுங்க, இல்லை பேச வைங்க.” தன் வாழ்க்கையை சொல்லுவது போல அவர்களின் வாழ்க்கையும் வாழ்வதற்க்கே என கர்ணனுக்கு புரியும்படி சொன்னான் ரவி.

 

”எக்‌ஷாம் ஒரு வழியா முடிந்தது இனி நான் இரண்டு வாரம் லீவ் போடனும்.” மோனிஷா சொல்ல

 

“அதிகமா வேலை இருக்கு போல மோனிக்கு.” வந்தனா அழுத்தி சொல்ல.

 

“ச்சீ போடி.. ஷாலு நேத்து நைட் நான் போன் பண்ணேன் அண்ணா, எடுத்துருப்பாங்க போல. டின்னர் ப்ளான் பற்றி நியாபகம் படுத்த தான் போன் பண்ணேனு சொல்லி, நானும் அவரை இன்வைட் பண்ணேன். உன்கிட்ட சொன்னாரா.”

 

ஓ.. அதான் நம்ம கிளம்பி வர்ரதுக்குள்ள ரெடியா இருந்தான். “ம்ம் சொன்னாங்க டி..”

 

”ஜூஸ் ஆடர் பண்ணலாமா..” ப்ரீத்தி கேட்க,

 

“ஓகே..”

 

சர்வர் அனைவருக்கும் ஜூஸ் எடுத்து வர, ஷாலுக்கு வரவேண்டிய ஜூஸ் வரவில்லை. அதன் பின் வேறொரு சர்வர் மூலம், ஷாலுக்கு கொடுத்தவிட்ட ஜூஸை மாற்றி வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, விருஷாலிக்கு வேறு ஜூஸை கொடுத்துவிட்டார். அதையும் அவள் என்ன ஏதென்று உணரும் முன் குடித்துவிட்டாள்.

 

“ஏய் எனக்கு ஆரஞ்சு ஜூஸ் தான ஆர்டர் பண்ண.” ஷாலு கேட்க.

 

“ஆமா, டி ஏன்..”

 

“இல்லை குடிச்சா ஒரு மாதிரி இருக்கு அதான்.” ஷாலு சந்தேகமாக சொல்ல, வந்தனா அவளின் க்ளாஸை வாங்கி முகர்ந்து பார்த்தாள்.

 

“ஷாலு, நீ குடிச்சது ஆரஞ் ஜூஸ் இல்லை டி, விஸ்கி.” வந்தனா அதிர்சி வைக்க மொத்த பெண்களும் திகைத்து நின்றனர்.

 

“என்ன என்னாச்சு.. ஏன் எல்லார் முகமும் இப்படி அதிர்ச்சியா இருக்கு.” ரவி கேட்க.

 

“நத்திங்க்.. கிளம்பலாம்.. அவங்களுக்கெல்லாம் நேரம் ஆகிருச்சாம் போகலாமாங்க. நீங்க நம்ம கார் எடுத்துட்டு வாங்க, நாங்க பின்னாடியே வரோம்.”

 

ஆண்கள் இருவரும் முன்னே போக, பெண்கள் “ஷாலு இன்னைக்கு ஒரு நாள் சமாளிச்சுரு டி.. உன் வீட்டுக்காரு கேட்க்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்லிடாத. அப்புறம் நீ குடிச்சது தெரிந்திரும்.”

 

“ட்ரை பண்ணுறேன்..” வாய் குளற மேலும் பயந்து போனார்கள்.

 

முதலில் ப்ரீத்தி, ஷிவானி, வந்தனா ஒரு காரில் செல்ல, அதன் பின் ஷாலு, கர்ணன் சென்ற பின்  மோனியும், ரவியும், புறப்பட்டனர்.

 

வரும் போது விருஷாலி காரை ஓட்டி வர. இப்போது கர்ணன் ஓட்டிக்கொண்டிருந்தான். காரில் சென்றுகொண்டிருந்த போது விருஷாலி ஏதேதோ புலம்ப ஆரம்பித்தாள். அவள் புலம்புவதை பார்த்து அவளை அவன் விசாரிக்க திகைத்து போனான் கர்ணன்.

 

                                            தொடரும்…………………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!