anjali’s Endrum Enthunai Neeyaethan 18

        என்றும் என்துணை நீயேதான் 18

 

மெத்தையில் புரண்டவள்  உடல் எதுவோ உணர்த்தியது உடலில் மேல் போர்த்திய போர்வை இழுத்து மூடி தூங்கியவள் முகம் சுருங்கியது. உடலில் எதுவோ குறைவது போல தோன்றியது அவளுக்கு. லேசாக கண் விழித்தவள் அருகே கர்ணன் உறங்கிகொண்டிருப்பதை பார்த்து விட்டு அவள் எழு நினைத்தாள். எழ மட்டுமே நினைத்தாள் ஆனால் அவளால் எழ முடியவில்லை. காரணம் உடலில் கர்ணனின் கை அவளை சுற்றி இருந்தது.  அதிர்ந்து அவனின் முகத்தை பார்க்க, அவனோ நன்றாக உறங்கி கொண்டிருந்தான் வெற்று உடம்பாக. கையை எடுத்துவிட்டு அவள் எழுந்தால் உடை வேறு மாற்றப்பட்டு இருந்தது.

 

“என்ன இது நான் ட்ரெஸ்  மாறி இருக்கு ஆனா நான் ட்ரெஸ் மாத்தலையே அவன் எனக்கு ட்ரெஸ் மாத்திருப்பானோ.” அதை யோசிக்க அவளால் முடியவில்லை.

 

“என்னங்க.. என்னங்க.. எழுந்திரிங்க..” அவனை எழுப்பி கொண்டிருந்தாள் விருஷாலி.

 

”என்ன.. என்னாச்சு..” அவன் பதறி எழ

 

“என் ட்ரெஸ் சேஞ் ஆகிருக்கு, நான் ட்ரெஸ் சேஞ் பண்ணலையே.”

 

“நான் தான் உனக்கு ட்ரெஸ் சேஞ் பண்ணிவிட்டேன்.” அசால்ட்டாக சொன்னான்.

 

“என்னது..” அவள் அதிர்ச்சியாக

 

அவளின் அதிர்சியை பார்த்து சிரித்தவன், ”இதுக்கே அதிர்சியான எப்படி இன்னும் இருக்கே அதையெல்லாம் சொல்லுறேன் கேளு.”

 

“கார்ல நீ வரும்போதே புலம்பிக்கிட்டே வந்த நானும் என் கடைமையேனு கேட்டுட்டு வந்தேன். வீட்டுக்கு வந்த பின்னாடி உன்னை யாருக்கும் தெரியாம நம்ம ரூம்க்கு அழைச்சிட்டு வர்ரதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிருச்சு. அதுமட்டுமா, ரூம்க்குள்ள வந்த உடனே உன் ட்ரெஸ் மேலயே நீ வாந்தி எடுத்துட்ட. அதை க்ளீன் பண்ண தான் உன் ட்ரெஸ் எல்லாம் கழட்டி, வேற ட்ரெஸ் போட்டுவிட்டேன்.”

 

“என்னடா சின்ன குழந்தை மண்ணுல புரண்டுட்டு வந்துச்சு நான் தான் ட்ரெஸ் மாத்திவிட்டேனு சுலபாமா சொல்லுற. நீ எனக்கு ட்ரெஸ் மாத்திருக்க, அய்யோ..” அவள் தலையில் கை வைத்து அமர, அவனோ அவள் தலையில் இருந்த கையை எடுத்துவிட்டு, “இன்னும் நடந்தது விசலா..”

 

“என்ன விசலாவா யாரு..”

 

“நீ தான் விசலா.. எல்லாரும் உன்னை ஷாலும் விருஷாலினு சொல்லுறாங்க. நான் உன் புருஷன் இல்லையா கொஞ்சம் ஸ்பெஷலா கூப்பிடலாம்னு விசலானு வச்சுட்டேன். சரி அதை அப்புறம் பார்த்துகலாம் இன்னொரு விஷயமும் நடந்தது அது.. அது.. அது..” அவன் தலையை கோதிகொண்டே வெட்க்கம் கொள்ள. அதை பார்த்துகொண்டிருந்த விருஷாலிக்கோ, புரிந்துவிட்டது.

 

“அது நடக்கலை தானே.. நாம ரெண்டு பேருக்கும் “அந்த விஷயம் நடக்கலைல”.  வார்த்தையை அழுத்தி அவள் கேட்க

 

“நடக்காமலா உன்மேல கை போட்டு துங்குவேன் எல்லாம் முடிந்தது விசலா.” விருஷாலியின் முகத்தை பார்க்காமல் வெட்க்கப்பட்டுக்கொண்டே அவன் சொல்ல, விருஷாலி இன்னும் அதிர்ச்சியானாள்.

 

”விருப்பமே இல்லாம எதுக்கு என்னை தொட்ட.” அவள் கோவத்தில் மூக்குவிடைக்க அவனை பார்த்து கேட்டாள்.

 

“என்னது விருப்பம் இல்லாம நான் உன்னை தொட்டேனா? விசலா நீ தான் என்னை கட்டி பிடிச்சு, முத்தம் கொடுத்து, நான் தள்ளி தள்ளி விட்டா நீ கிள்ளி வச்சு என்மேல வந்து விழுற. அதுவும் நீ  போட்டுருக்க நைட் ட்ரெஸ் வேற மேடு, பள்ளத்தை என் கண்ணுக்கு காட்டிட்டே இருந்தது. எவ்வளவு நேரம் தான் நானும் அடக்கி வைக்குறது என் உணர்வுகளை. அதான் நானும் சரினு உன்கிட்ட “அப்படி நடந்துக்க வேண்டியதாச்சு”. சளைக்காமல் அவனும் நேற்று நடந்ததை விருஷாலியிடம் கூறினான். அவளோ அவன் சொன்னதெல்லாம் உண்மை என நம்பி அதிர்ச்சி விலகாமல் இருந்தாள். அவளின் முகத்தை பார்த்துகொண்டிருந்தவன் மனதில் ‘அடிப்பாவி பொய் சொல்லுறேனு கூட கண்டு பிடிக்க முடியலை இதுல நீ மனநல மருத்துவர்க்கு படிச்சுருக்க. சும்மாவ சொன்னாங்க படிச்சவங்க முட்டாள்னு, படிக்காதவன் அறிவாளினு. இப்போவே நான் நேற்று எதுவும் நடக்கலைனு சொன்னா, நீ சாதாரணம் நடந்துக்குவ என்கிட்ட. கொஞ்ச நாள் போகட்டும் அடுத்து சொல்லுறேன் இதெல்லாம் பொய் நமக்குள்ள எதுவும் நடக்கலைனு.’  மனதிலே நினைத்துகொண்டான்.

 

விருஷாலியோ போட்டுயிருந்த உடையை லேசாக விலக்கிவிட்டு கண்ணாடியை பார்த்தாள். அவள் திரும்பி திரும்பி நின்று முதுகினை பார்க்க, பின் கழுத்தை நிமிர்த்தி பார்க்க என அவள் செய்கையை புரியாமல் பார்த்துகொண்டிருந்தான் கர்ணன்.

 

“என்ன செய்யுற விசலா ஏன் கழுத்து, முதுகை தடவியும், தொட்டும் பார்க்குற.”

 

“இல்லை என் ஃப்ர்ண்ட்ஸ் சொல்லிருக்காங்க, “அது” நடந்தா காயம் இருக்குமாமே. அதான் முதுகுல உங்க நக கண் பதிஞ்சு இருக்கானு பார்க்குறேன், கழுத்துல பல் தடம் இருக்கானு பார்க்குறேன்.” அவள் சொல்லியதில் அவன் தான் திகைத்து பார்த்தான் விருஷாலியை. இவ்வளவு புத்திசாலியா நீ என்பது போல அவன் பார்க்க.

 

“அந்த காயம் படமா நான் நடந்துகிட்டேன் உன்கிட்ட.” மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை வைத்துவிட்டு சென்றான் குளியல் அறைக்கு.

 

விருஷாலிக்கு நேற்று ஜூஸ் குடித்தது வரை தான் நினைவு இருந்தது. ஆனால் அதன் பின் என்ன நடந்தது என அவளுக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை. இதில் கர்ணன் வேறு இருவரும் வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டோம் என கூறிவிட்டு சென்றதை நினைத்து  தவித்தாள். உண்மையில் நடந்ததா? இல்லை நடக்கவில்லையா? என அவளுள்ளே குழப்பமாக இருந்தாள்.

 

குளியல் அறைக்குள் சென்ற கர்ணன் சிரித்துகொண்டே இருந்தான். அவன் சொல்லியதை பொய் என்று அவள் கண்டுப்பிடிக்க முடியவில்லை என. ஆனால் நேற்று காரில் இருந்து வீட்டில் அவர்களின் அறையில் வரை நடந்தது வேறு.

 

”விருஷாலி நல்லா இருக்கியா.. ஏன் ஒரு மாதிரி ஆடிட்டே இருக்க.” அவளின் நடவடிக்கையை பார்த்து அவன் கேட்டான்.

 

“நானா? நானா? நல்லாவே இல்லை ஏன் தெரியுமா?” விருஷாலி உளர ஆரம்பித்தாள் அவள் உளருவதை பார்த்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்.

 

“என்னாச்சு உனக்கு ஏன் உளறுர என குடிச்ச ஹேட்டல்ல.”

 

“ஜூஸ் தான் குடிச்சேன் ஆனா அது வேற ஜூஸாம்”.

 

“என்ன  வேற ஜூஸா.. அப்படி என்ன ஜூஸ்”.

 

“விஸ்கி.”

 

“அடிப்பாவி குடிப்பியா நீ.. இது மட்டுமா இல்லை..” அவன் இழுக்க, அதை பார்த்தவள், அவனை தள்ளிவிட்டு,

 

“நான் எதுக்கு விஸ்கி குடிக்கனும், அதெல்லாம் நல்லாவே இருக்காது. ஒயின் குடிப்பேன் அவ்வளவு தான் ரெட் ஒயின் கூட ட்ரை பண்ணிருக்கேன் பரவாயில்லை.” எந்த மதுபானத்தை குடித்தாள் நல்லா இருக்கும் என்பதற்க்கு சான்றழித்துகொண்டிருந்தாள் விருஷாலி.

 

“என்னது ரெட் ஒயின் பரவாயில்லாம இருக்குமா?.. நானெல்லா அந்த பக்கத்தை கூட திரும்பி பார்க்க மாட்டேன். ஆனா நீ எந்த ஃப்ராண்ட் நல்லா இருக்குனு வரைக்கும் தெரிஞ்சு வச்சுருக்க.” அவன் அதிர்சி விலகாமல் கேட்டான். அவனுக்கு தெரியாது விருஷாலி குடித்தால் மனதில் இருப்பதை கொட்டி விடுவாள் என்று.

 

“நான் குடிப்பேன், குடிக்காம கூட இருப்பேன் இப்போ என்ன உனக்கு பிரச்சனை. நீ தான் என்னை விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டல.”

 

“நீயும் தானே விருப்பம் இல்லாமல் என்னை கல்யாணம் செய்த. ஏதோ என்மேல காதலா இருக்குற மாதிரி ஓவரா பேசுற.” அவன் எரிச்சலில் பேச கோவம் வந்துவிட்டது விருஷாலிக்கு.

 

“காதல் இல்லை தான், ஆனா எப்போ மத்த பொண்ணுங்க கண்ணுக்கு நீ அழகா தெரிந்தாயோ அப்போவே நீ எனக்கு மட்டும் தான் முடிவு பண்ணிட்டேன் அதான் உன் தலை முடியை கலைச்சுவிட்டேன். அது மட்டுமா, என் தங்கைக்காக தான் உன்னை கல்யாணமும் செய்துகிட்டேன்.”

 

“உன் தங்கச்சிக்காகவா?” கர்ணன் அதிர்ந்து பார்க்க.

 

“ஆமா, அவள் காதல் பிரிய நான் தான் காரணமா? அதான் உங்க மாமாவ வச்சு என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வர்ர மாதிரி செய்தோம். நானும் என் அப்பாகிட்ட வாய் திறந்து உன்னை தான் விரும்புறேனு பொய் சொல்லி உங்க மாமா வருவாங்க திருமணத்து சம்மதம்னு சொல்லுங்க ப்பானு என் அப்பாக்கிட்ட சொன்னேன். அதே மாதிரி உன் மாமாவும் என் வீட்டுக்கு வந்தாரு திருமணம் முடிந்தது. என்னால பிரிந்த காதல் ஒன்னு சேரனும் தான் இந்த திருமணத்துக்கு சம்மதிச்சேன். உங்க மாமா என் வீட்டுக்கு போக சொன்னது வேதாசலம் அங்கில்.” என ஆரம்பம் முதல் நடந்ததை அவனுக்கு தெரியும்படி, கூறினாள். இதையெல்லாம் கேட்ட கர்ணனுக்கு  தான் தலை சுற்றியது. நான் தம்பியை ஒதுக்கியதன் மூலம் அவன் காதலும் பிரியும் என நினைக்கவில்லையே என்று.

 

“நகுலனும், ஷாலினியும் எப்படியெல்லாம் காதலிச்சாங்கனு தெரியுமா உனக்கு. அப்படி காதலிச்சவங்கள் பிரிந்தா அதோட வலி என்னனு உனக்கு தெரியுமா. என் தங்கை கண்ணீரை பார்த்து நான் எப்படி துடிச்சேன் தெரியுமா, அவளோட காதல் பிரிய போகுதுனு என்கிட்ட சொல்லி எப்படி அழுதானு உனக்கு தெரியுமா. என்னைவிட சின்ன பொண்ணா இருந்தாலும், தைரியமா இருப்பா. என்கிட்ட மறைக்காம நகுலனை நான் காதலிக்குறேனு என்கிட்ட தான் முதல் முறையா சொல்லிருக்கா. அப்படி இருந்த அவங்க காதலை பிரிக்க நீயும், நானும் தான் காரணமும் சொல்லும் போது எனக்கு தான் அதிர்சியா இருந்தது.”

 

“எனக்கு இதெல்லாம் தெரியாது.. அவன் மேல எனக்கு கோவம் தான். ஆனா அவன் காதல்ல இப்படி ஒரு முடிவ அவன் எடுப்பானு எனக்கு தெரியாது.”

 

விருஷாலியோ வாயை மூடிகொண்டு கீழே இறங்கி செல்வதை பார்த்து அவனும் கூடவே சென்றான். ஒரு மரத்தில் பின் அவள் வாந்தி எடுப்பதை பார்த்து தண்ணீருடன் அவளை நெருங்கினான். அவளின் தலையை அழுத்தி பிடித்துகொண்டான்.  சுத்தம் செய்துகொண்டு காரில் அமர்ந்தவள் மயக்கத்துக்கு சென்றாள். அதன் பின் அவன் காரை எடுத்துகொண்டு வீட்டிர்க்கு செல்ல அங்கு அனைவரும் உறங்கிகொண்டிருந்தனர். யாரை தொந்திரவு செய்யாமல் மெதுவாக விருஷாலியை அழைத்துகொண்டு அவர்களது அறைக்கு சென்றவன் அவளின் விருப்பமின்று எப்படி உடையை மாற்றுவது என யோசித்தவன் வேறு வழியின்றி அவனே கண்களை மூடிகொண்டு அவளின் உடையை மாற்றிவிட்டான்.

 

மெத்தையில் அவளை கிடத்தி போர்வையயும் போர்த்திவிட்டவன் மனம் இன்று தான் அனைத்து  உண்மைகளையும் அவள் வாயால் இருந்து தெரிந்துகொண்டதை நினைத்து நாளையே நகுலனிடமும், ஷாலினியிடமும் பேசவேண்டும் என முடிவெடுத்துகொண்டு அவளின் அருகில் அவன் படுத்தான். ஆழ்ந்த உறக்கத்தில் அவள், “நான் ஒன்னும் குடிகாரி இல்லை, ஃப்ர்ண்ட்ஸோட ஜாலிய இருக்க ஒரு சிப் அடிப்பேன், ஆனா இன்னைக்கு ஜூஸ் மாத்திகொடுத்துட்டாங்க.” அவள் சொல்லிகொண்டே கட்டிலில் இருந்து கீழே விழ போக, விருஷாலி சொன்னதை கேட்டவன் சிரித்துகொண்டே அவளின் மேல் கை போட்டு தூங்கினான் அவ விழாமல் இருப்பதற்க்காக. ஆனால் காலையில் இவள் இப்படி மறந்து போய் தன்னிடமே என்ன நடந்தது என கேட்ப்பாள் என அவன் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

 

“என்ன ஷாலு உன் வீட்டுக்காரு குடிச்சதை கண்டுபிடிச்சுட்டாரா?”  போனில் கான்ப்ரன்ஷ் காலில் இருந்த வந்தனா கேட்க.

 

“ஆம வந்தனா, ஆனா..” விருஷாலி அடுத்து சொல்ல வர,

 

“என்னாச்சு ஷாலு குடிகாரினு திட்டிட்டாரா.” ஷிவானி அவளின் அமைதியை கலைக்க.

 

“இல்லை.. இல்லை.. நான் தூங்கிட்டேனு மட்டும் சொன்னாரு அவ்வளோ தான்.” அவன் சொன்னதை இவர்களிடம் சொன்னால் நான் தான் இவர்களுக்கு கேலி பொருளாக தெரிவோம் அதனால் சொன்ன வேண்டாம் என நினைத்தாள் விருஷாலி.

 

”எப்படியோ உன்னை வீட்டை விட்டு தொரத்தலையே ஷாலு. இல்லைனா குடிகாரியெல்லாம் என் வீட்டுல இருக்க கூடாதுனு சொல்லிருந்தா என்ன ஆகிருக்கும்.” ப்ரீத்தி சொல்லி சிரிக்க, அதைகேட்டு மற்றவர்கள் சிரித்துவிட்டனர்.

 

“முதல எனக்கு ஆரஞ்சு ஜூஸ் ஆர்டர் உன்னை சொல்லனும் எல்லாம் உன்னால தான்.” வந்தானவை திட்டினாள் விருஷாலி.

 

தோழிகள் அனைவரும் விருஷாலியை நினைத்து பேசி சிரித்துகொண்டு இருக்க, கர்ணன் முன்னே ஷாலினியும், நகுலன் இருந்தனர். அவர்கள் கர்ணனின் முன் அமைதியாக இருக்க, கர்ணன் தான் பேச்சை ஆரம்பித்தான்.

 

                                                                    தொடரும்…………….