என்றும் என்துணை நீயேதான் 8
அந்த படத்தைவிட்டு அகலாத அவளது விழிகளின் கண்ணீர் வழிந்தது. ஏன் அழுகிறோம்.. எதற்க்கு இந்த அழுகை என அவள் மனம் தவிக்க. நினைவுகளில் கொஞ்சம் கொஞ்சம் மங்கலான காட்சிகள் நினைவுக்கு வந்தது. யாரோ அடிபடும் காட்சியும், பின் மருத்தவமனையில் அவளை போல யாரோ அனுமதிக்கப்பட்டு இருந்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. முகம் மட்டுமே அவளது நினைவுக்கு வரவில்லையே தவிர மற்ற கட்சி எல்லாம் அவளது நினைவுக்கு வந்தது.
“என் பொண்ணு சாருலதா.. என் ராஜாத்தி.” நிழல் படத்தில் இருந்தவளை விருஷாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் சொல்வதை அதிர்ச்சியாக அவள் கேட்டுகொண்டிருக்க. அவரோ பழைய நினைவில் மூழ்க தொடங்கினார்.
ஆசை ஆசையாக தவம் இருந்து பெற்ற குழந்தை அவள். காற்று, வெயில் தூசி என எந்த துரும்பும் அவள் மேல் படாமல் வளர்த்தார்கள். சாருலதா அவர்கள் பெற்ற புதல்வியின் பெயர். மனைவியின் ஜாடையிலும், வேதாசலத்தின் பாசத்திலும் அவள் நிகராக இருந்தாள். பள்ளி படிப்பிலும் முதல் இடமாக இருந்தாள். தாய், தந்தைக்கும் மட்டும் அவள் செல்லபிள்ளை இல்லை அவர்களின் பரம்பரைக்கே சாருலதா தான் செல்லாமான குழந்தை.
”அப்பா, இன்னைக்கு நாமா கோவை கிளம்பனும் நியாபகம் இருக்கா ப்பா.” காலையில் எழுந்ததும் தந்தைக்கு நினைவுப்படுத்தினாள்.
“ஆமா, ராஜாத்தி அப்பாவுக்கு நியாபகம் இருக்கு.”
‘ஏங்க இங்க இல்லாத காலேஜா.. கோவையில தான் படிக்கனுமா?’ ஒற்றை மகளை பிரிவதை தாங்காமல் அழகம்மை கேட்க.
“என் பொண்ணு ஆசைப்படுற காலேஜ்ல தான் நான் சேர்த்துவிடுவேன். வேணா, நீயும் உன் பொண்ணுகூட படிக்க போ.”
’என்ன ஆசையோ, பெத்தது ஒரு பொண்ணு.. அவளை கண்ணு முன்னாடி வச்சு பார்க்க தான் ஆசைபடுவாங்க நீங்க அவ ஆசைக்கு துணை போறீங்க.’
“காலேஜ் தான அழகு.. மூனு வருஷம் கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள போயிடும். அடுத்து அவ நம்ம கூடவே தான இருப்பா ஏன் கவலை படுற.” மனைவியை சமாதானம் செய்ய.
‘எனக்கென்னமோ, அவளை பிரியுறது கஷ்ட்டமா இருக்கு. உங்க பொண்ணு ஆசைக்கு நீங்க தலையாட்டுறீங்க, இதுல என் பேச்சை எங்க கேட்க போறீங்க.’ அவர் பெருமூச்சுடன் சொல்லிவிட்டு செல்ல மூனு வருஷம் பிரிவையே தாங்க முடியாத அழகம்மை, வாழ்க்கை முழுவதும் மகள் இல்லாமல் வாழ பழக வேண்டும் என கடவுள் முடிவெடுத்துவிட்டாரே என விதி நினைக்க.
கோவையில் சாருலதாவுக்கு அவள் விருப்பபட்ட படிப்பு கிடைக்க அங்கயே அவளுக்கான விடுதியை பார்த்துவிட்டு வந்தார்கள். இறுதியாக மகளிடம் வேதாசலம்,
“சாரும்மா.. நீ கண்டிப்பா இங்க தான் படிக்கனுமா? அம்மா சொன்ன மாதிரி, நானும் உன்னைவிட்டு எப்படி இருக்க போறேனு தான் பயமா இருக்கு. நீ சேஃப்டியா இருந்திப்பியா சாரும்மா. இல்லனா அம்மாவும், நானும் இங்கயே வீட்டு பார்த்து மூனு வருஷம் உன்கூடவே இருக்குறோம்.” அவர் பங்குக்கு அவர் கேட்க
“ப்பா.. சின்ன பிள்ளை மாதிரி பேசுறீங்க மூனு வருஷம் கை சுடக்குறதுக்குள்ள போயிடும். அடுத்து உங்ககூடவே தான இருக்க போறேன், நீங்களும் வீக்லி ஒன்ஸ் இங்க வாங்க. இதுகெத்துக்கு இங்க வீடு பார்த்து குடி வரனும். வேதாசலம் பொண்ணு எப்பவும் தைரியமா இருப்பேன் ப்பா.” தந்தைக்கே தைரியம் கூறினாள் சாருலதா.
சாருவின் படிப்பை கோவையில தேர்வு செய்ய மகளைவிட்டு முதல் வருடம் எப்படியே பழகிகொண்டனர். ஆனால் இரண்டாவது வருடம் தொடங்கிய போது அழகம்மைக்கு மனம் சரியாக படவில்லை. ஏதோ தன்னைவிட்டு போகபோகிறது என அவரின் மனம் சஞ்சலமாக இருந்தது. அதை கணவனிடம் காட்டவில்லை.
அன்றைய நாளில் தான் சாருலதாவுக்கு உடல் நிலை சரியில்லை என போன் கால் வந்தது. பதறியடித்துகொண்டு அழகம்மையும், வேதாசலமும் கோவைக்கு சென்றனர். அங்கு சென்ற பொழுது தான் சாருவின் உடல் மட்டுமல்ல மனமும் மோசமாக இருந்தது.
பெற்றோர்கள் மகளின் உடல்நிலையை அறிந்து மனம்விட்டு போனார்கள். இனி என்ன செய்ய மகளை காப்பாற்ற… இதற்க்கு எதற்க்கு கடவுள் தங்களுக்கு குழந்தை கொடுக்க வேண்டும். கொடுத்தான் அதை அவனே எடுத்துகொள்வானா. என் மகளை இப்படி தூக்கி கொடுக்கவா அவளை ஆசை ஆசையாக வளர்த்தேன். அவர்கள் கலங்கி நின்ற பொழுது தான் அவர்களை தாண்டி ஒரு பெண்ணை காப்பதற்க்கு அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர்.
“சார் உங்களை பற்றி எனக்கு தெரியும் மதுரையில தொழில் துறை சங்கத்தோட தலைவரா நீங்க பேட்டி கொடுத்ததையும் நான் நீயூஸ் பேப்பரில் பார்த்துருக்கேன். இப்போ உங்க பொண்ணோடு வயசுல தான் இன்னொரு பொண்ணும் அந்த நிலைமையவிட மோசமா இருக்கா. அந்த பொண்ண காப்பாற்ற உங்க பொண்ணு தான் உதவி செய்யனும்.” அந்த மருத்துவர் சொல்ல
“என்ன சொல்லுறீங்க டாக்டர் என் பொண்ணா.. அவளே இப்போவோ, அப்பவோனு இருக்கா, அவள் எப்படி இன்னொரு பொண்ணுக்கு உதவி செய்ய முடியும்.” வேதாசலம் கேட்க
“உங்க பொண்ணு மூளை சாவு அடைந்தா, உங்க பொண்ணோட உடல் உறுப்பெல்லாம் தானமா கொடுத்து இன்னும் பல உயிர காப்பாத்தலாம் நீங்க முடிவெடுக்குறதை பொருத்து தான் ஒரு பொண்ணோட உயிர காப்பத்த முடியும்.” மருத்துவர் சொல்ல அழகம்மை கதறி அழுதார்.
“என்னங்க டாக்டர் என்னவோ சொல்லுறாங்க. வேண்டாம் என் பொண்ணு படுத்த படுக்கையா இருந்தாலும் அவ உயிரோட இருக்கனும்.”
”உங்க நிலைமை எனக்கு புரியுது அதோ அங்க நிக்குறாங்க பாருங்க அவங்களும் உங்களை மாதிரி ஒரு பொண்ண வளர்த்து இப்போ அவங்களோட பொண்ணுக்கு ஏற்ப்பட்டு இருக்கிற நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நல்லா யோசித்து முடிவெடுங்க, ஆனா தாமதம் ஆக்காதீங்க.” தங்களால் முடிந்த அளவு மருத்துவர் மற்றொரு உயிரை பற்றி எடுத்துசொல்லிவிட்டு போனார்.
மகளை காண்கையில் அவள் முகம் தவிர்த்து மற்ற இடங்களின் காயங்களும், கீறல்களும் இருந்தது. பெற்றவர்களுக்கு தெரியாத.. பெண் எதனால் பாதிக்கபட்டாள் என்று. அவர் மனதை தேற்றிகொண்டு, மனைவியின் மனதை சமாதான செய்துவிட்டு மருத்துவரிடம் சம்மதித்தார்.
இன்னொரு பெண்ணின் உயிரையாவது தன் மகள் காத்திருக்கிறாள் என்று பெருமையும், தன் பெண்ணை இனி அந்த பெண்ணின் உருவில் காணலாம் என அவர் கொஞ்சமே மகிழ்ச்சியடைய முடிந்தது.
வேதாசலத்தின் சம்மதம் கிடைத்தவுடன் அவரச சிகிச்சையில் சேர்க்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்றினர். சாருலதாவின் இதயம் அந்த பெண்ணிற்க்கு மாற்றப்பட்டது. மற்ற உறுப்புகள் சேமிக்கப்பட்டு அடுத்த உயிர்களை காக்கா உள்ளது. அனைத்து விபரமும் முடிந்து சாருலதாவின் உடல் வேதாசலத்திடம் கொடுத்தனர்.
“உங்க பொண்ணு இந்த உலகத்துல இல்லாம இருக்கலாம். ஆனா ஒவ்வொரு உயிரிலும் உங்க பொண்ணு வாழ்ந்துட்டு இருக்கா சார்.” அந்த மருத்தவர் ஆறுதல் சொல்லி அவரை அனுப்பி வைக்க.
சாருலதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அனைத்து காரியங்களும் நிறைவாக முடிந்து வீட்டுக்கு வந்தார்கள். அனைவரும் சாருலதாவின் இறப்பை ஈடு செய்யமுடியாமல் தவித்தனர். இந்த நிலையில் தான் அழகம்மை மனம் தாங்காமல் கணவனிடம்,
“நான் அப்போவே சொன்னேன்ல நம்ம பொண்ண கோவையில படிக்க வைக்க வேண்டாம்னு கேட்டீங்களா. இப்போ நாம உயிரோட இருந்த என்ன செய்ய வாழ வேண்டிய வயசுல என் மக இல்லாம போயிட்டாளே. இதுக்கா நாமா தவம் கிடந்து பெத்தோம்.” வேதாசலத்தின் சட்டையை பிடித்து கேட்க. அவரோ கண்ணீர் மட்டுமே பதிலாக கொடுத்தார். மனைவி ஒவ்வொரு நாளும் மகளை நினைத்து ஏங்கி தவித்தார். சில நேரத்தில் மகளின் நிழல் படத்தின் அருகே நின்று சாதாரணமாக பேசிகொண்டிருப்பார். இதை பார்த்த வேதாசலம் மனைவியின் மனம் பாதிக்கபடுவதை கண்டு அவர் வெளியே அழைத்து சென்றார்.
ஒருவாறாக சாருலதா இல்லாததை ஈடு செய்வதற்க்காக ஒவ்வொரு ஆசிரமம்த்திற்க்கு மனைவியை அழைத்து சென்றார். அப்படி அழைத்து சென்ற ஒரு ஆசிரமத்தில் தான் விருஷாலியை அவர் கண்டார். விருஷாலியின் ஒவ்வொரு செயலும் அவரின் மகளை தான் நினைவுபடுத்தியது.
தொழிலில் கவனம் செலுத்தியவர், ஒரு முறை தொழில் துறை பார்டியில் மீண்டும் விருஷாலியை கண்டார். சுடிதாரில் எளிமையான அலங்காரத்தில் தன் தங்கையிடம் கோவத்துடன் பேசியவள் எழுந்து வேறொரு இடத்துக்கு சென்று அமர்ந்துகொண்டாள். அவளை பார்த்துகொண்டே அவளின் பின் சென்றவர்,
“ஏன் ம்மா.. இங்க வந்திருக்கா..” பாசமாக பேச
‘நீங்க யாரு.. ஓ.. பிஸ்னெஸ் மேன்னா.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை அங்கில். நான் எப்போவும் இந்த நாளுல ஆசிரமம் போவேன் எனக்காக என் குட்டி ஃப்ர்ண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க. ஆனா, என் அப்பாவும், என் அம்மாவும் இங்க போகனும் என்னை கட்டாயப்படுத்தி கூப்பிட்டு வந்துட்டாங்க.’
“உனக்கு ஆசிரமத்துக்கு போகனுமா ராஜாத்தி.”
“நோ என் நேம் ராஜாத்தி இல்லை.. விருஷாலி.”
“சரி விருஷாலி.. நான் உன்னை கூப்பிட்டு போனா. என்கூட வருவியாம்மா.”
அவர் அழைத்ததில் அவள் மனம் சரி என சொல்ல தூண்டியது.
“ம்ம்.. ஓகே.. இருங்க என் தங்கைகிட்ட சொல்லிட்டு வந்திரேன்.” என அவள் சொல்லிவிட்டு வர விருஷாலியை அழைத்துகொண்டு ஆலயம் ஆசிரமம்த்திற்க்கு சென்றார் வேதாசலம்.
காத்திருந்த குழந்தைகள் அனைவரும் விருஷாலியின் வருகையில் மகிழ்ச்சியடைந்தனர். அவளும் குழந்தைகளுடன் குழந்தையாய் மாறினாள். பதினைந்து வயது பெண் போல் அவள் காணப்படவில்லை. கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவி போல் உடலுக்கு கேற்ற உயரமாக இருந்தாள்.
இரண்டு மணி நேரத்திற்க்கு பின் அவரிடம் சென்றவள், “ரொம்ப நன்றி அங்கில்.. நீங்க உதவி செய்யலனா இவங்க சந்தோஷத்தை நான் மிஸ் பண்ணிருப்பேன்.” அவள் சொல்ல
“நீ என்ன கேட்டாலும் நான் செய்ய தயாரா இருக்கேன் ம்மா.”
“அப்போ எந்த உதவி கேட்டாலும் நீங்க செய்வீங்களா.” அவள் கேட்க
“செய்வேன்.. இதான் என் பேமிலி போட்டோ, அதோட என் போன் நம்பரும் இருக்கும். எந்த நேரம், எந்த பொழுதும் என்னை நீ அழைக்கலாம். உனக்கு உதவி செய்ய நான் இருக்கேன்.” அது தான் அவர்களின் கடைசி சந்திப்பு அதன் பின் அவள் அந்த போட்டோவில் என்ன இருக்கிறது என கூட பார்க்கவில்லை. பார்ட்டியின் நடுவில் எங்க போனாய் என தாய், தந்தை கேட்டதற்க்கு கூட திமிராகவே பதில் கூறினாள்.
நாட்கள், மாதங்கள் வருடங்கள் ஓடின அழகம்மை மனநிலையால் அதிகம் பாதிக்கபட்டு இறந்துவிடவே. மனைவியின் இறப்பை ஒருவாறு சந்தித்து திரும்பியவரின் விழியில் மீண்டும் விழுந்தாள் விருஷாலி. அதன் பின் தான் விருஷாலியின் மொத்த தகவலும் அவருக்கு கிடைக்க, விருஷாலியை பாதுகாக்க இருவர். அவள் எங்கு செல்கிறாள், எங்கு படிக்கிறாள் என அதை கண்காணிக்க இருவர் என விருஷாலியை பாதுகாத்து வந்தார்.
அவள் படிப்பின் போது ஏற்ப்பட்ட மன அழுத்ததால் அவள் கல்லூரி படிப்பில் தேர்ந்தெடுத்த பொழுது தான் தெரிந்தது. அவள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை கேட்டு அதில் இருந்து அவள் மீளவே அவளது கல்லூரியில் மனநிலை மருத்துவர் படிப்பு எடுக்க காரணமாக அமைந்தது என்று.
அதன் பின் அவள் ஆசிரமம் சென்றாலும், குழந்தைகளிடம் அவ்வளவாக ஒட்டிதலை அவள் ஏற்படுத்திக்கொள்ளவே இல்லை. தள்ளி நின்றே அவர்களை கவனிப்பாள், ஆலயம் ஆசிரமம் அவளது பள்ளி தோழனின் தந்தை நடத்துவதால் அவளின் வருகை அங்கு யாரும் தடுக்க முடியாது. படிப்பு முடிந்து வேலையிலும் மருத்துவ கல்லூரியிலேயே அமைய, அவளே போலவே அவளது தோழிகளும் பின்பற்றினர். கல்லூரி படிக்கும் போதே அவள் குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களின் கார்டியனாக பொறுப்பேற்றாள். இது இன்று வரையில் வீட்டிற்க்கே தெரியாது. அந்த குழந்தைகளுக்கென செலவுகள் அனைத்து அவளது பொறுப்பில் இருந்தது, இன்று வரையிலும் தொடர்கிறது.
நினைவில் மூழ்கியவரின் முன் அவள் நிற்க அவரோ, ”என் பொண்ணு இல்லைனு நினைச்சிட்டு இருந்த நேரத்துல தான் என் பொண்ண பரிசோதித்த டாக்டர நான் மீட் பண்ணேன். அவரு தான் உன் அட்ரெஸ் கொடுத்தாரு. அதுக்கு முன்னே இருந்தே நான் உன்னை பாதுக்காக்கவும், உன்னை தூரத்துல இருந்து பார்த்துட்டு இருந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது என் பொண்ணோட இதயம் உனக்குள்ள இருக்குனு. என் பொண்ணே திரும்ப கிடைச்சுட்டானு நான் சந்தோஷமா இருந்தேன். உன்னை முதல விட இப்போ அதிகமா பாதுக்காக ஆரம்பிச்சேன். தொழில் வியாபரமா நான் வெளியூர்ல இருந்தேன், நேத்து தான் ஊருல இருந்து திரும்பி வந்த உடனே உன் போன் கால்.” அவர் சொல்லி முடிக்க, அவள் வந்ததன் காரணத்தை மட்டும் சொல்லவில்லை என அவரே கேட்டார்.
”என்ன உதவி வேணும் ராஜாத்தி.. சொல்லும்மா.” அவர் கண்களை துடைத்துகொண்டு கேட்க.
என்ன கேட்ப்பாள் அவரிடம்.. என்றோ அவள் மகள் தன் உயிரை காப்பாற்றிய நிஜத்தை அவர் சொல்லிய பின்பே தான் தனக்கே தெரிந்தது. அவரின் பெண் கொடுத்த உயிரால் தான் நானே வாழ்கிறேன் அதற்க்கே அவருக்கு வாழ் நாள் முழுவதும் அவர் மகளின் இடத்தில் இருந்து சேவகம் செய்யவேண்டும். இதில் எங்கே நான் அவரிடம் உதவி கேட்க முடியும்.
அவளின் யோசனையை கலைத்தவர் மீண்டும் அவளிடம் என்ன வேண்டும் என கேட்க.
“தெரியலையே.. என்ன வேண்டி நான் இங்க வந்தேனோ அதெல்லாம் மறந்து போயிருச்சு இதுல நான் என்ன கேட்க உங்ககிட்ட.” விருஷாலியின் கண்ணில் கண்ணீர் வடிய அவரிடம் சொல்ல
வாசலில் விருஷாலிக்கு நியமித்த பாதுகாவலன் வந்து நின்றான் கையில் கவருடன். விருஷாலியை விட்டு விலகி அவனின் அருகில் சென்றவர் அவன் ஏதோ விருஷாலியை பார்த்து சொல்லிகொண்டிருக்க. அவரோ கோவமான முகத்துடன் விருஷாலியையும், அவனையும் பார்த்துகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவனை அனுப்பிவிட்டு விருஷாலியிடம் வந்தவர்.
“ஏன் ம்மா.. ஏன் இந்த முடிவு எடுத்திருக்க உன்னை பாதுக்காப்பா வச்சிருந்தது எல்லாம் அந்த ஹரிக்கு கல்யாணம் செய்து கொடுக்கவா? வேண்டாம்மா… என் ராஜாத்தில.. அந்த கல்யாணத்தை நீ நிறுத்த வேண்டாம் நானே நிறுத்துறேன். இனி உன் வாழ்க்கை நல்லவனோடு மட்டும் தான் அமையும்.”
அவள் எதற்க்காக வந்தாளோ அதை அவள் வாயால் சொல்லுவதற்க்குள் இவரின் வேலையாளே கண்டறிந்து வந்து சொல்லிவிட்டானே. அதுவுமில்லாமல் அவரே கல்யாணத்தை நிறுத்துவதாக சொல்கிறார். எப்படி செய்வார். அவள் யோசிக்க அவளது யோசனையை கலைத்தார்.
“நீ நார்மலாவே இரும்மா.. கல்யாண வேலை எல்லாம் நடக்கட்டும். ஆனா அந்த ஹரி உன் வாழ்க்கை துணை இல்லை. நீ தைரியாம போம்மா.. விருஷாலி என்னைக்கும் தைரியமா இருந்து தான் பழக்கம். உன் கண்ணீர் இதுவே கடைசியா இருக்கட்டும்.” அவளுக்கு தைரியம் சொல்ல, அவளோ அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
மகளே தன் நெஞ்சில் சாய்ந்தது போல இருந்தது. சாருலதாவின் உணர்வை கூட அப்பொழுது அவரின் மனம் அறிந்தது. அவளோ, இவ்வளவு நாள் ஒரு பெரிய மனிதரின் பாசத்தை உணராமல் போய்விட்டோமே. என அவள் கவலைகொள்ள, மெதுவாக விருஷாலியின் தலையை கோதினார்.
தொடரும்……..