anjali’s Endrum Enthunai Neeyaethan 9

anjali’s Endrum Enthunai Neeyaethan 9

 

       என்றும் என்துணை நீயேதான் 9

 

”எனக்கே ஆச்சர்யமா இருந்தது ஷாலினி என் அண்ணானா சம்மதித்தானு. அப்புறமும் கேட்டேன் நீ என் லவ் பிரிய போற பயத்துல தானே உதவி செய்யுறேனு கேட்டேன். அதுக்கு என் அண்ணா என்ன சொல்லுறான் தெரியுமா, ‘உன் காதல் பிரிஞ்சா எனகென்னனு சொல்லிட்டு போறான்.” ஷாலினியை வெளியே அழைத்துகொண்டு சென்றவன் வரும் வழியில் தன்னிடம் விருஷாலிக்கு உதவ ஒத்துகொண்டதை ஷாலினியிடம் கூறினான் நகுலன்.

 

ஷாலினியின் காரின் அருகே அவளை இறக்கிவிட்டவன், “ஏன் அமைதியா இருக்க, என் அண்ணா உன் அக்காவுக்கு உதவ ஒத்துக்கிட்டானு சொல்லுறேன் நீ சந்தோஷ படாமா அமைதியா இருக்க என்னாச்சு.”

 

‘உன் அண்ணாவுக்கு உன்மேல பாசம் இல்லைனு நீ நினைக்குறியா.’

 

“உண்மையா இல்லை அவனுக்கு என்மேல துளிகூட பாசம் இல்லை. அதனால் தான் சின்ன வயசுல இருந்து என்கிட்ட ஒட்டாம இருக்கான்.”

 

’இல்லை..  என்னைவிட, உன்மேல பாசம் வச்சிருக்காங்க. எப்படினு உனக்கு தெரியுமா, நீ எனக்கு ட்ரெஸ் எடுத்துகொடுக்கும் போதே உன் அண்ணா வந்துட்டாங்க. நான் உன் பக்கத்துல இருக்கிறதை பார்த்து அவர் சிரிச்சிட்டே போயிட்டாரு. அப்புறம் நீ என்னை வழியனுப்பிவிட்ட பின்பு கூட அவர் என்கிட்ட பேசுனாரு.

 

“நீங்க தான் நகுலனோட வருங்கலா மனைவியா.”

 

‘ஆமா, காதலிக்கிறோம் நீங்க”.

 

“அவனோட அண்ணா, நல்லபடியா அவனை பார்த்துக்கோம்மா.. அவனுக்கு கோவம் வரும்.. ஆனா பாசம் அதுக்கு மேல காட்டுவான். என் பரிச விழாவுக்கு உன்னை அழைச்சிருக்கானா?”

 

“இல்லையேங்க..” இவரா நகுலனோட அண்ணா பார்க்க மதுரைவீரன் மாதிரி இருக்காரு. ஆனா பேச்சுக்கும், ஆளுக்கும் சமந்தம் இல்லையே அவள் மனதில் நினைக்க.

 

’சரி அவன் அழைக்குறானோ இல்லையே நான் உன்னை அழைக்குறேன் , என் தாய் மாமா பொண்ணுக்கு பரிசம் போடுறோம் கண்டிப்பா வந்திரும்மா இது என் சார்பா அழைக்குறேன்.’

 

ஷாலினி சொல்லிமுடிக்க, “அவரோட பாசம் நம்ம காதலவிட அதிகம் அதை நீ புரிஞ்சுக்கோ. அவரோட பாசம் உன்னை, நான் நல்லா பார்த்துக்கனும் சொன்னது வாய் வார்த்தையா சொல்லலை நெஞ்சுல பாசம் இருக்க போய் தான் சொன்னாங்க. முதல கண்ண திறந்து பாரு யார் உன்மேல அதிகமா பாசம் வச்சிருக்காங்கனு. என் அக்காகிட்ட நீ சொன்னதை சொல்லுறேன் அவ அடுத்து எங்க மீட் பண்ணாலம்னு சொன்னா இன்னைக்கு நைட் கால் பண்ணுறேன்.” ஷாலினி காரில் ஏறி சென்றுவிட அவனோ அதிர்ச்சியாக நின்றிருந்தான்.

 

ஆலயம் ஆசிரமம் ,

 

‘சார் எல்லா இடத்திலும் தேடியாச்சு குழந்தைய காணோம். பேசாம போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்கலாம்.’ என மற்ற ஊழியர்கள் சொல்ல

 

“என்னங்க விருஷாலியும் போன் அட்டென் செய்ய மாட்டேங்குறா. வாங்க போலீஸ் போகலாம் எனக்கு பயமா இருக்கு.” மேகலா அழுக

 

ஜோசப்க்கு அது தான் சரி என பட்டது அவனும், அவனது உதவியாளரும் போலீஸ்க்கு புறப்படலாம் என முடிவெடுத்து கிளம்பும் சமயம் பைக்கின் முன் அமர்ந்து சிரித்துகொண்டே வந்திரங்கினாள் அமிர்தா.

 

குழந்தையை கண்டதும் ஜோசப் வேகமாக நடக்க, அமிர்தாவை பார்த்த அனைவரும் ஜோசப் பின் ஓடினர். எங்கெங்கோ தேடிய குழந்தை இப்படி ஒருவனின் கையில் கிடைத்து, அவன் பத்திரமாக ஆசிரமத்தை கண்டறிந்து வந்து குழந்தை சேர்த்த அவனது நல்ல உள்ளத்தை கண்டு அனைவரும் நன்றி சொல்ல அவனோ,

 

“என்னங்க குழந்தை இருக்க வேண்டிய இடத்துல தானே கொண்டு வந்துவிட்டேன் ஏன் இதுக்கெல்லாம் கண்கலங்குறேங்க. குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்க, வெளிய அவ்வளவா விடாதீங்க. நான் கிளம்புறேன் நேரமாச்சுங்க.” ஜோசபிடம் இருந்து விடைபெற இருந்தான்  கர்ணன்.

 

“குழந்தை எப்படி உங்க கைக்கு கிடைச்சது.” ஜோசப் கேட்க

 

‘குழந்தை வெளியா முழிச்சிட்டு இருந்தது, நான் மார்க்கெட் பக்கம் போனேன் அப்போ குழந்தையை ஒரு அம்மா, வா வானு கை பிடிச்சி கூப்பிட்டு இருந்தப்போ தான் நான் குழந்தையோட அப்பானு சொல்லி அழைச்சிட்டு வந்தேன். எங்க இருக்கேனு கேட்டப்போ ஆலயம் ஆசிரமம்னு சொல்லிச்சு அப்புறம் அட்ரெஸ் கேட்டு இங்க அழைச்சிட்டு வர நேரம் ஆகிருச்சு.’

 

“குழந்தையை இன்னைக்கு யாரு வெளிய அழைச்சிட்டு போனாங்க மேகலா.” மனைவியிடம் கேட்க

 

‘சமையல் அம்மா தான் கூப்பிட்டு போனாங்க.’

 

“ஏங்கம்மா இப்படி பண்ணுறீங்க குழந்தையை அழைச்சிட்டு போன பத்திரமா கூப்பிட்டு வரமாட்டீங்களா. இப்போ பாருங்க குழந்த கிடைக்காம இருந்தா என்ன செய்திருப்பீங்க. சமையல் அம்மாவிடம் கோவத்தை காட்ட.”

 

’மன்னிச்சிருங்க தம்பி இனி எந்த குழந்தையை நான் வெளிய அழைச்சிட்டு போகலை.’

 

“சரிங்க சார் நான் கிளம்புறேன்.. இனி குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க.”

 

‘எவ்வளவு பெரிய உதவி சார் நீங்க செய்தது. குழந்தை மட்டும் கிடைக்காம இருந்தா என் ஃப்ரண்ட் என்னை போட்டு தள்ளிருப்பா. குழந்தைக்கு கார்டியனே என் ஃப்ரண்ட் தான் சார். ஒரு நிமிஷம் பயந்து போயிட்டோம் குழந்தை காணாம போய் கிடைச்ச விஷயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சது எனக்கு சங்கு தான், இந்த ஆசிரமத்துக்கு பூட்டு தான் சார்.’

 

”ஒரு பொண்ணு இந்த குழந்தைக்கு கார்டியனா? என்னால நம்ப முடியலை சார்.”

 

“இந்த குழந்தைக்கு மட்டுமில்ல சார் இந்த குழந்தையோட சேர்த்து ஐம்பத்தி மூனு குழந்தைக்கும் அவ தான் கார்டியன். அவளோட செலவுல தான் இந்த குழந்தைங்கள் இங்க இருக்கு. எங்க ஆசிரமத்துக்கு நிறைய இடத்துல இருந்து டெனேஷன் வருது, நிறைய பேர் வாலண்ட்ரியா செக், கேஷ் கொடுப்பாங்க, நானே இந்த ஐம்பத்தி மூனு குழந்தைங்க செலவையும் பார்த்துகிறேனு சொன்னதுக்கு, அவ சம்மதிக்கலை.”

 

’ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சார் ஒரு பொண்ணுக்குள்ள இவ்வளவு தாய்மையான பாசமா? என்னால நம்ப முடியலை. நல்லவேளை குழந்தை கண்டுபிடிச்சு வந்து சேர்த்தேன் இல்லனா அவங்க கவலைப்பட்டுருப்பாங்க.’ கர்ணன் அவளுக்காக கவலை கொள்ள.

 

“கவலையா… சார் என்னை கொன்றுப்பா.. இன்னும் அவளுக்கு தகவல் போகலை. குழந்தையை காணோம்னு அடுத்த நிமிஷம் அவளுக்கு தான் கால் பண்ணோம் நல்ல வேளை அவ போன் எடுக்கலை. எடுத்து, நாங்க குழந்தை காணோம் சொன்னா, இந்த ஆசிரமத்துக்கு பெரியா பூட்டு போட்டு பூட்டிருப்பா.”

 

‘எப்படியோ, அவங்க மூலமா குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு கிடைச்சிருக்கே அதுவே போதும். என்னால முடிஞ்ச உதவியும் செய்திருக்கேனு நினைக்குறப்போ சந்தோஷமா இருக்கு. என் தோப்புல விளையுற தேங்காய், வயலுல விதைச்ச நெல், காய்கறியும் உங்க ஆசிரமத்துக்கு மாசம் மாசம் வந்து சேர்ந்திரும். இன்னைக்கு இருந்து நானும் உங்க ஆசிரமத்துக்கு என்னால முடிஞ்ச அளவு உதவி செய்றேன். அவளின் செயலுக்கு ஈடாக இல்லாமல் இருந்தாலும் அவனால் முடிந்த அளவு உதவி செய்வதை பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

“அப்போ உங்க அட்ரெஸ், உங்களை பற்றி தகவல் இந்த ஃபைல்ல பில் பண்ணுங்க.” அவனின் முழுதகவல்களையும் வாங்கிகொண்டு,அவனை வழியனுப்பி வைத்தனர்.

 

காலையில் சென்ற மகள் இரவு அனைவரும் உறங்கும் நேரத்திற்க்கு வருகிறாள். காரில் இருந்து இறங்கிய விருஷாலியை கோவமுடன் முறைத்த ஜோதி, “எங்கடி போயிட்டு வந்த..”

 

‘தலைவலியா இருக்கும்மா.. நாளைக்கு காலையில பேசுறேன்.’ குரலில் சுரத்தே இல்லாமல் பதில் சொல்லிய மகளை பார்க்க ஜோதிக்கு கவலையாக இருந்தது.

 

உடையை மாற்றாமல் மெத்தையில் படுத்துகொண்ட விருஷாலி மனம் அந்த வீட்டை விட்டு வர கால்கள் மறுத்தது. இருந்தாலும், அவளை பெற்ற தாய், தந்தை தேடுவார்கள் தானே அதனால் மனமே இல்லாமல் விருஷாலியை வழியனுப்பி வைத்தார் வேதாசலம். அவளும் வருகிறேன் என புன்னகையும், தலையசைப்புடன் கிளம்பினாள்.

 

“ஏய்.. ஷாலு உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா? உன்கிட்ட ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லனும் என்ன தெரியுமா? என் ஆளோட அண்ணா, உனக்கு உதவி செய்ய ஒத்துக்கிட்டாங்க. எப்போ மீட் பண்ணலாம்னு சொல்லு.” விருஷாலியை உலுக்கியபடி கேட்க

 

‘ஷாலினி நான் தூங்கனும் பிளீஸ் என் ரூம்ல இருந்து வெளியே போ. நான் காலையில நீ சொல்லுறதை கேட்க்கிறேன்.’

 

என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி பிகேவ் பண்ணுறா. சரி இல்லை இவ, சரியே இல்லை.. விருஷாலியை பார்த்துகொண்டே அவளது அறையில் ஒளி விளக்கை அணைத்துவிட்டு கதவை சாற்றிவிட்டு கிளம்பினாள்.

 

என்றும் இல்லாத உறக்கம் ஏதோ தாயின் அரவணைப்பில் அவள் உறங்குவது போல தோன்றியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் கண்கள் நிம்மதியா உறக்கத்தை தழுவியது.

 

ஹரியின் கையில் இருந்த புகைப்படம் அனைத்தும் அவனின் கையில் சிக்கி சின்னாபின்னமான பெண்களுடன் அவன் இருந்த புகைப்படம் தான். அவன் செய்த அனைத்து தவறும் வீட்டுக்கு தெரியாமல் செய்தவை. தந்தைக்கோ, அன்னைக்கோ தெரிந்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்ப கூட தயங்கமாட்டார்கள்.

 

யாரின் வேலை இது எப்படி அவர்கள் கையில் நான் பல பெண்களுடன் இருக்கும் படம் கிடைத்தது. இது மட்டும் தானா இல்லை இன்னும் வைத்திற்க்கிறாரா என அவன் யோசித்தான். அவனின் யோசனையை போன் கால் கலைத்தது.

 

“என்ன தம்பி, படம் எல்லாம் நல்லா க்ளியரா விழுந்திருக்கா. இல்லை இன்னும் ஹச்.டி பிரிண்ட் போட்டு உன் அப்பாவுக்கு அனுப்பவா.” இளைஞனின் குரலாக கேட்க.

 

”யாரு டா நீ என் விஷய்த்துல தலையிடுற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா.”

 

“தம்பிக்கு கோவம் அதிகமா வரும் போலயே.. இப்போ கோவம் பட்டா பின்னாடி உனக்கு சோத்துக்கு வழியில்லாம செய்திருவேன். ஒழுங்கா நான் சொன்னதை நீ செய்யனும், செய்யலைனா இப்போ நீ பார்த்துட்டு இருக்க படம் உன் பேமிலியும் பார்ப்பாங்க.”

 

“என்ன செய்யனும்.” உடனே ஒத்துக்கொள்ள

 

“உனக்கு நடக்க போற கல்யாணத்தை நீயே நிறுத்தனும். அதுவும் கல்யாணத்தன்னைக்கு நீ நிறுத்தனும். இல்லைனா நான் முதல்ல சொன்னது தான் நடக்கும்.”

 

“நோ.. என்னால முடியாது..”

 

”அப்போ நீ தெருவுக்கு போக ரெடியா இரு..” போன் வைக்கபட, ஹரியோ என்ன செய்வது என தெரியாமல் இருந்தான்.

 

”நகுலன் உன் அண்ணாவோட உதவி எனக்கு வேண்டாம். அவங்ககிட்ட சொல்லிரு, வேறெருத்தர் உதவி செய்யுறேனு சொல்லிருக்காங்க. அதனால அவர் உதவி இனி எனக்கு தேவைப்படாது.”

 

“அப்புறம் எதுக்கு என் அண்ணாகிட்ட உதவி கேட்க சொன்னீங்க. அவன் உதவி செய்ய முன் வந்தா இப்போ வேண்டாம்னு சொல்லுறீங்க.” நகுலன் ஷாலினியை பார்த்து என்ன இது என பார்வையால் கேட்க.

 

“ஷாலு தெளிவா சொல்லு, யாரு இப்போ உனக்கு உதவி செய்ய போறாங்க.”

 

“அவங்களை பற்றி எல்லாம் என்னிடம் கேட்காத. அது ரகசியம் எனக்கும், அவங்களுக்கும். கல்யாணம் நடக்காது.. மண்டபத்துக்கு போவோம் நான் மேடை ஏறுவேன் ஆனா ஹரி என் கழுத்துல தாலி கட்டமாட்டான்.”

 

“என்ன ஷாலு.. என்னவோ சொல்லுற எனக்கு புரியலை.”

 

”எதாவது தப்பா நடந்தா என்ன செய்வீங்க.. பேசாம என் அண்ணாவையும் உதவிக்கு கூப்பிடலாம். ஷாலினி சொல்லு அவங்ககிட்ட.”

 

“அவ தான் யாரோ உதவி செய்ய வராங்கனு சொல்லிட்டால விடுங்க. இனி நாம என்ன நடக்குதுனு வேடிக்கை மட்டும் பார்க்கலாம். உங்க அண்ணாகிட்ட உதவி தேவைப்படலைனு சொல்லிருங்க.” அக்காவை முறைத்துகொண்டு நகுலனிடம் ஷாலினி கூற

 

ஹரியோ யார் தன்னை இப்படி பிளாக் மெயில் செய்வது என கண்டறிய ஆரம்பித்தான்.

 

                                                தொடரும்…………..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!