AnthaMaalaiPozhuthil10

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 10

ரகுநந்தன் அவளை உறுதியாக பார்க்க, ‘இவுகளுக்கு என்ன இத்தனை பிடிவாதம்?’ என்று அவள் பிடிவாதத்தை வசதியாக மறந்து கொண்டு எண்ணினாள் அபிநயா.

   எனக்கு யாரவது என்னை இப்படி தான் செய்யணுமுன்னு, இப்படி தான் இருக்குமுன்னு கட்டாய படுத்தினா பிடிக்காது. அது யாராக இருந்தாலும் சரி. நான் அவங்க சொன்னதை செய்ய மாட்டேன். நான் அவங்க சொன்னதை கேட்க மாட்டேன்.” அபிநயா அவள் உறுதியை நிலை நாட்டினாள்.   

அவள் பேசிய விதத்தில், ரகுநந்தனின் முகத்தில் புன்னகை அரும்பியது. “இது என்ன வீம்பு பிடிச்ச கொள்கை?” அவன் வம்பிழுக்க, அவனை முறைத்து பார்த்தாள் அபிநயா.

       உட்காரு… விழுந்திராத. ஏற்கனவே மண்டை உடைஞ்சி இருக்கு.” அவன் பாவமாக கூற, ‘இவுக என்னை கிண்டல் செய்றாகளா?’ என்று அவள் சந்தேகமாக பார்த்தாள்.

    இல்லை என்று கூற முடியாத படியும், ‘ஆம் என்று கூற முடியாதபடியும் அவன் முகம் ஒரு அப்பாவி முகபாவனையை வெளிப்படுத்த, அவள் இவனை ஆராயும் விதமாக பார்த்தாள்.

       வாத்தியரம்மா உட்காருங்க. பேசணும். கட்டாயப்படுத்தலை.” அவன் சிரித்துக் கொண்டே கூற, மேலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமர்ந்தாள் அபிநயா.

      காலையில் என்ன கேட்டீங்கன்னு சொல்ல மாட்டீங்க.” அவன் மீண்டும் தொடங்க, அவள் சீறுவது போல் தலை சிலுப்ப, அவன் குலுங்கி சிரித்தான்.

        இவுகளை பிடிக்கலைன்னா? அப்படி கேட்டது இவ்வளவு குத்தமா? சொல்லி சொல்லி காட்டுதாக?’ மனதிற்குள் முணுமுணுத்து  கொண்டாள்.

   பிடிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு.” அவள் முகத்தை பார்த்தபடி உறுதியாக வெளிவந்தது அவன் குரல்.

     அந்த உறுதி அவளையும் சற்று அசைத்து பார்த்தது. ஆனால், அவள் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

   கல்யாணம் ஆகிட்டா புருஷன். இதுல பிடிக்கும், பிடிக்காது இதெல்லாம் எங்க வந்தது?’ என்று தோள்களை குலுக்கி கொண்டாள் அபிநயா.

                   எல்லாரும் கல்யாணம் செய்யறாங்கனு நானும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினச்சேன். எனக்கு இந்த கல்யாணத்தில் எல்லாம், நம்பிக்கை இல்லை. விருப்பமில்லை.” என்று அவன் ஆழமான குரலில் கூற, “ரொம்ப லவ் ஸ்டோரி, லவ் சினிமாவா பார்ப்பீகளோ?” அவள் கேள்வியாக நிறுத்த, அவன் அவளை முறைத்து பார்த்தான்.

    இல்லை… இல்லை நீங்க பேசுங்க.” என்று தன் ஆள் காட்டி விரலை அவள் உதடுகள் மீது வைத்து பேசுமாறு செய்கை காட்டினாள்.

         இந்த குழந்தை குட்டி அதெல்லாம் கூட, எனக்கு அவ்வளவு இஷ்டம் கிடையாது.” அவன் கூற, ‘நேற்று அவுக அக்கா பையனோட, அவ்வளவு இழைஞ்சாக? என்னவோ இடிக்குதே.என்று துணுக்குற்றாள் அபிநயா.

     இப்ப எதுவும் பேச கூடாது.என்ற எண்ணத்தோடு மௌனித்துக் கொண்டாள்.

     ரகுநந்தன் மேலும் தொடர்ந்தான். “அம்மாவுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஒரு இக்கட்டான நிலைமை.” அவன் தடுமாறினான்.

          நமக்கானது நிகழ் காலமும், எதிர் காலமும் மட்டும் தான். கஷ்டப்பட்டு எல்லாம் என் கிட்ட உங்க கடந்த காலத்தை சொல்ல வேண்டாம்.” அவன் தடுமாற்றத்தில், அவள் முந்தி கொண்டாள்.

       ரகுநந்தனக்கும், அரங்கேறிய சம்பவங்களை இப்பொழுது அபிநயாவிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இல்லை, முடியவில்லை என்றும் கூறலாம்.

      அவன் விழுங்கி கொண்டு, மூச்சை இழுத்துவிட்டு மேலும் தொடர்ந்தான்.

           நான் நடந்த இந்த கல்யாணத்துக்கு உண்மையா இருப்பேன். நியாயமா நடந்துப்பேன். கொஞ்சம் கால அவகாசம் வேணும். அவ்வுளவு தான். நான் தடுமாறி நின்னப்ப தான், மாமா உன்னை பத்தி சொன்னாங்க. கல்யாணம் பேசினாங்க. உனக்கும் கொஞ்சம் ஸ்பைஸ் தேவைப்படுமுன்னு தோணுச்சு.”

           இப்பொழுது அபிநயா எதுவும் பேசவில்லை. அங்கு நிலவிய அசௌகரியமான அமைதியை குழைக்கும் விதமாக, “வி ஷல் ஹவ் எ ஷார்ட் கமர்சியல் பிரேக் வித் ஸ்வீட் பிரெண்ட்ஷிப் இன் அவர் வெட்டிங் லைப்.” என்று அவன் கிட்கேட் விளம்பரம் போல் கூற, அபிநயா அழகாக புன்னகைத்தாள்.

     வாத்தியாரம்மா. நான் ரொம்ப ஜாலியான ஆளு. எனக்கு சண்டை சச்சரவு எல்லாம் பிடிக்காது. வாழ்க்கையை அனுபவிக்கனும். அதுக்கு தான் கல்யாணம் கூட வேண்டாமுன்னு நினைச்சன். மூணு முடிச்சி போட்டு வாழ்க்கையை சிக்கலாக்க கூடாதுன்னு நினச்சேன். ஆனால், சிக்கல் ஆகிருச்சு. சிக்கலை பக்குவமா பதமா நட்போட டீல் பண்ணுவோம். பிரெண்ட்ஸ்.” என்று அவன் கைகளை நீட்ட, தண்ணீருக்குள் மொந்தென்று விழுந்தாள் அபிநயா.

      அபிநயா தண்ணீருக்குள் மூழ்க, பாய்ந்து குதித்து, அவளை பற்றி இழுத்தான் ரகுநந்தன்.

     வாத்தியாரம்மா!” என்று அவன் பதற, கலகவென்று சிரித்தாள் அபிநயா.

     கழுத்தை நீட்டறதுக்கு முன்னாடி தான் சோதிக்க முடியலை. கையை குடுக்கறதுக்கு முன்னாடி சோதிச்சி பார்த்திராலுமுன்னு தான் குதிச்சி பார்த்தேன். நம்பிக்கையான ஆள் தான். நம்பி கைகொடுக்கலாம். எதையும் யோசிக்காம பொசுக்குன்னு குதிச்சுடீக” அவள் மெச்சுதலாக புன்னகைத்தாள்.

    ஒருவேளை, எனக்கு நீச்சல் தெரியாம இருந்திருந்தா?” என்று அவன்  கரையில் வந்தமர்ந்து கேட்க, “எனக்கு தெரியும். உங்களையும் காப்பாத்துற அளவுக்கு.” என்று அவள் கண் சிமிட்டினாள்.

     அவள் கண்சிமிட்டலில், அவன் தான் தடுமாறி போனான்.

                  உங்க காயம் ஈரம் ஆகிருச்சு. செப்டிக் ஆகிருமோ?” என்று அவன் அக்கறையாக  கேட்க, “ம்… ச்… ஒன்னும் ஆகாது.” அவள் சிலுப்பிக் கொண்டாள்.

        காலையில் பேசியது தான். ஆனால் இப்பொழுது லகுவாக பேசியது ரகுநந்தனுக்கு சற்று பாரம் இறங்கியது போல் இருந்தது.

     திருமண வாழ்க்கை அத்தனை கடுப்பாக இருக்காது.அவன் மனம் இந்த ஒரு நாளில் அவனுக்கு கூறுவது போல் தோன்றியது.

   எந்த இடைவெளியையும் கொடுத்து, இந்திராவை உள்ளே விட்டுவிட கூடாது.ரகுநந்தனின் மனம் தீர்க்கமாக எண்ணிக் கொண்டது.

          இவளை பிடிக்குமா? காதல் கத்திரிக்காய், அன்பு அவரைக்காய், பாசம் பாகற்காய் இதெல்லாம் வருமான்னு தெரியலை.என்று எண்ணியபடி அவன் அவளை பார்க்க, “ஆனால், இதுக்கெல்லாம் எனக்கு உங்களை பிடிக்குமுன்னு நான் சொல்ல மாட்டேன். ஒன்லி பிரெண்ட்ஸ். ஒகே?” என்று அவன் பேசிய விதத்தில், அவள் உறுதியாக ஒதுங்கி நின்றாள்.

         இவர்கள் வீட்டை புரிந்து கொள்ள வேண்டும். இவுகளை புரிந்து கொள்ள வேண்டும். என்னை பற்றி இவுகளுக்கு என்ன தெரியுமுன்னு நான் தெரிஞ்சிக்கணும்.என்று மனதிற்குள் கணக்கிட்டு கொண்டாள் அபிநயா.

                 அவன், “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரிக்க, “என்ன சிரிப்பு?” என்று கேட்டாள் அபிநயா.

         இல்லை நட்புக்கே தண்ணீரில் குதிக்க வேண்டியதாகிருச்சு. பிடிக்குமுன்னு சொல்ல என்னென்ன செய்ய வேண்டியதிருக்குமோன்னு நினச்சேன். சிரிச்சேன்.” அவன் கூற, “ஏன் சீதை தான் தீயில் குளிக்கணுமா? ஒரு மாற்றத்துக்கு நீங்க தீயில் குளிக்கறது. நானும் ராமன் தான்னு.” என்று அவளும் கேலியாக கூறினாள்.

     வாத்தியரம்மா, என்ன ஒரு நல்ல எண்ணம். பிரம்பால் அடிக்கறது. தீயில் குளிக்க சொல்றது. உங்க உயர்ந்த எண்ணத்துக்கு நான் இன்று முதல் உங்க சிஷ்யன் ஆகிறேன்.” என்று அவன் அவள் முன் இடை வரை குனிய அவள் புன்னகைத்து கொண்டாள்.

          புதிதாய் தோன்றிய நட்பில், அவர்கள் பேசியபடி வீட்டை நோக்கி நடந்தனர்.

         திருமணம் என்னும் பந்தம்

         உருவானது சொந்தம்…

         உருவானது உறவாகுமா?

          இணைந்தது சதியா?

         இல்லை விதியா?

         நட்பாய் பூத்திட்ட மொட்டு

         காதல் என்னும் மலராய் மலருமா?

         கைசேர காலம் காத்திடுமா?

        சொந்தங்கள் தான் அனுமத்திடுமா?

 

ஈர உடையோடு அவர்கள் வீட்டிற்குள் நுழைய, “என்ன அபி இது?” என்று கடிந்து கொண்டார் ராமசாமி.

 

   நான் தான்…” என்று இருவரும் ஒரு சேர, மற்றவர்களை காப்பாற்ற முனைய, அசடு வழிந்தனர்.

    அந்த செயலில் திருப்தி அடைந்தவராக, ராமசாமி வெட்க புன்னகையோடு விலகி கொண்டார்.

    மாமா செம்ம ரொமான்டிக்கான ஆளோ?” என்று கேட்க, அபிநயா அவனை புரியாமல் பார்க்க, “இல்லை… மாமா ஏதேதோ கற்பனை பண்ணிட்டு போற மாதிரி தெரியுது.” என்று கண் சிமிட்டினான் ரகுநந்தன்.

    உங்க பேச்சை பார்த்தா கல்யாணத்தில் விருப்பம் இல்லாத ஆள் மாதிரி தெரியலியே? வேற கதை எதுவும் இருக்கா?” என்று அபிநயா புருவம் உயர்த்த, “வாத்தியாரம்மா, நான் ஒரு அப்பாவி சிஷ்யன். இப்படி எல்லாம் சந்தேக பட கூடாது. மீ பாவம்.” என்று கூறி கொண்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டான் ரகுநந்தன்.

       அபிநயா சிரித்த முகமாக வீட்டில் ஒரு குளியலை முடித்துவிட்டு, அவள் தாய்க்கு உதவி செய்து கொண்டிருக்க, வீட்டிற்கு வந்திருந்த உறவுகளோடு பேசி கொண்டிருந்தான் ரகுநந்தன்.

           மாப்பிள்ளையோட அப்பா, உங்க அப்பாவுக்கு சிநேகிதம் தான். நல்ல மாதிரின்னு உங்க அப்பா சொன்னாக. பார்த்தாலும் அப்படி தானே தெரியுது.” என்று தன் மகளிடம் பேச்சு கொடுத்தார் பார்வதி.

     ஆமாம் அம்மா.” தலை அசைத்து கொண்டாள் அபிநயா.

     அவுக அக்கா பத்தி சொல்லுவோமா?’ என்று ஒரு நொடி யோசித்த அபிநயா, ‘அவுக என்ன ஜுஜுபி . நான் சாமாளிச்சிப்பேன். என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அபிநயா மேலும் எதுவும் பேசவில்லை.

          அம்மாவிடம் சொல்லி இருக்க வேண்டுமோ?’ என்று காலம் தாழ்ந்து வருந்த போவது தெரியாமல்.

       அப்பொழுது, “அபிநயா… அபிநயா…” என்று சத்தம் செய்து கொண்டு கோபமாக உள்ளே நுழைந்தார் ராமசாமி.

     என்னடி செஞ்சி வச்ச? உங்க அப்பா இவ்வளவு கோபமா வராக?” என்று பதறிக்கொண்டு அடுப்பங்கரையில் இருந்து வெளியே வந்தார் பார்வதி.

     யாரை கேட்டு பசுபதி வீட்டுக்கு விருந்து வரேன்னு சொன்ன?” அவர் கோபமாக கேட்க, “அத்தான் வீட்டுக்கு விருந்துக்கு போகாம எப்படி?” என்று அசட்டையாக கேட்டாள் அபிநயா.

நீ இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு கிளம்பனும். அதனால, முடியாதுன்னு சொல்லிடு. நீ போக வேண்டாம்.” அவர் கண்டிப்போடு கூற, “அங்க போறதுக்கு முன்னாடி போயிட்டு போறேன் அப்பா.” அவளும் உறுதியாக கூறினாள்.

    அபிநயா!” அவர் தன் மகளை பார்த்து கர்ஜிக்க, “அங்க போயிட்டு போயிடுவோம். இதுல என்ன இருக்கு மாமா.” ரகுநந்தன் இயல்பாக கூறினான்.

    இல்லை, மாப்பிள்ளை அது சரிப்பட்டு வராது. எனக்கும், அக்காவுக்கும் ஆகாது.” மேலே பேசமுடியாமல், அவர் நிறுத்தி கொண்டார்.

     யாரோ எதாவது கட்டுக்கதை கட்டுமுன், இவுகளை அங்க கூட்டிட்டு போகணும்.அபிநயா உறுதியாக நின்றாள்.

      எனக்கு எல்லாரையும் ஆகும். எனக்கு சரிப்பட்டு வரும். பத்து நிமிஷமோ, கால் மணி நேரமோ, அங்க போயிட்டு தான் போறோம்.” என்று அபிநயா உறுதியாக கூறிவிட்டு, “உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று தன் கணவனிடம் கேட்டாள் அபிநயா.

    அதுல என்ன இருக்கு? போற வழி தானே. போயிட்டு அப்படியே நம்ம வீட்டுக்கு போயிடுவோம்.” அவன் சம்மதம் தெரிவிக்க, அபிநயா சமயலறைக்குள் நுழைந்து கொண்டு வேலையை தொடங்கினாள்.

        ராமசாமி கடுங்கோபத்தில் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

    பசுபதி அவர்கள் வீட்டில், அபிநயா வரும் விஷயத்தை வடிவமாளிடம் கூற, அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

         ஏலே, அவ வரட்டும். அவளை உண்டு இல்லைனு ஆக்குறேன். அவமானப்பட்டு போவா. என்ன திண்ணக்கம்? வேற ஒருத்தன் கையிலே தாலியையும் வாங்கிட்டு, அதை காட்ட என்கிட்டயே வருவாளோ? வரட்டும்… வரட்டும்…” அவர் சவால் விடும் விதமாக கூற, பசுபதி செய்வதறியாமல் கைகளை பிசைந்தான்.

பொழுதுகள் விடியும்…