c/o காதலி 3
“ ஹாய் மேரி பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி..
ஹாய் மேரி பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி..
சர் சே பேர் தலக் பாத்ஹெசா ஹுசுன் சே பரி
ஹாய் மேரி பரம் பரம் பரம சுந்தரி..”
காலை மூன்று மணிக்கே அலாரம் பாடி எழுப்பியது. சோம்பலை உதறித் தள்ளி துள்ளி எழுந்தாள் சுப்பு.
“ஹாப்பி மார்னிங் மச்சான்ஸ்” மற்ற இருவரையும் கூட புத்துணர்வுடன் எழுப்பினாள்.
“மாமமா நான் வரல டி…கண்ணு தூங்க சொல்லி கெஞ்சுது… தொறக்க முடியல .. என்ன விட்டுடுங்க..” போர்வைக்குள்ளிருந்து அம்பு குரல் கொடுக்க,
“மவளே இப்ப நீ எந்திரிச்சு வரல உன் லைஃப்ல ஹாப்பி மொமென்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணிடுவ, அப்புறம் பீல் பண்ணி பிரயோஜனம் இல்ல.” சுப்பு ஒரு ஜெர்க் குடுக்க அவளும் எழுந்தாள்.
அனைவரும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் ஹாஃப் பேன்ட் என சைக்கிள் ஓட்ட ஏதுவான உடையில் தயாரானார்கள். அவர்களின் நிறங்கள் அனைத்தும் ஹைலைட்டர் பேனா கலரான நியான் கலர்களில் பளிச்சென இருந்தது.
சுப்பு ஃபூஷியா பிங்க் நிறமும் அம்பு ஹெக்ஸ் ப்ளூ கலர் மீனு லைம் கிரீன் என ஒளிர்ந்தனர். டாக் ஹூயர் வாட்ச் , நைக்கி ஷூஸ் , கண்களில் குச்சி(Gucci) க்ளாஸ் என அனைத்திலும் பணத்தின் பெருமை தெரிந்தது. தங்களின் ஆட்டோ லாக் டோரை சாத்திக் கொண்டு கிளம்பினர். ரிசாடின் வாசலில் அவர்களுக்காக காத்திருந்தான் கமல்.
அவர்களுக்கு இணையாக அவனும் டிஷர்ட் ஷார்ட்ஸ் ,அடிடாஸ் ஷூஸ், கண்களில் கூலர்ஸ் என ஸ்டைலாக இருந்தான்.
“ஹே கமல். மார்னிங்.” சுப்பு அவனிடம் ஓடினாள்.
“ஹே!! மார்னிங் “ அவனும் உற்சாகமாகவே பதில் தந்தான்.
பின்னோடு மீனு அம்பு இருவரும் வர, அவர்களும் சகஜமாக மார்னிங் வாழ்த்துக் கூறினர். அவர்களுக்கும் அவன் புன்னகையோடு கைகுலுக்கினான்.
ஆளுக்கு ஒரு சைக்கிளையும் அவன் ஏற்பாடு செய்திருந்தான். அதையும் அவர்களிடம் கொடுத்தான்.
“இது ஹய்ட் உங்களுக்கு கம்பர்டபில்லா இருக்கா பாருங்க. இல்லனா அட்ஜஸ்ட் பண்ணி தரேன்.” என்றான்.
மூவரும் ஆளுக்கு ஒன்றாக ஏறி அமர்ந்து பார்க்க அது சரியாகவே இருந்தது. மூவரும் கிரீன் சிக்னல் கொடுக்க முன்னால் சைக்கிளை எடுத்தான் கமல்.
“கமான். ஃபாலோ மீ…இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருக்கணும். இல்லனா வி வில் மிஸ் சன் ரைஸ்” அவர்களைத் துரிதப் படுத்த பெண்கள் மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
அவன் அழைத்துப் போன பாதை மிகவும் அழகாக இருந்தது. வழி எங்கும் கூரை வேய்ந்த அல்ட்ரா மார்டன் வீடுகள் இருந்தது. அதன் வாசலில் செயற்கை செடிகளும் இயற்கை பூ மரங்களும் மாறி மாறி இருக்க , குப்பை எதுவும் இல்லாத சுத்தமான சாலையைக் கண்டனர். அதிகாலை வேளை என்பதால் மங்கலான விளக்குகள் சாலையோரம் வரிசையாக இருக்க , லேசான குளிர் இதம் பரப்பியது.
நாம் பார்க்கும் சில காட்சிகள் நம் வாழ்வில் என்றும் மறக்க முடியாமல் அவ்வப்போது மக்கண்ணில் தெரிந்து கொண்டு தான் இருக்கும். அப்படி அதை நினைத்துப் பார்க்கையில் அந்த நொடி நாம் மானசீகமாக அந்த இடத்தில் இருப்பதை உணர்வோம்.
ஏனோ பெண்கள் மூவருக்கும் அந்த நாளை மறக்க முடியாது என்று தோன்ற, அந்த ஒவ்வொரு நொடியையும் தன் மனப் பெட்டகத்துக்குள் ஒரு ஆல்பம் போட்டு அந்தக் காட்சிகளை அடுக்கி வைத்துக் கொண்டனர்.
சுப்பு சற்று முன்னே சென்று கமலுடன் பேச ஆரம்பித்தாள்.
“இன்னும் கொஞ்ச தூரம் தான் போலிருக்கு. எனக்கு கடல் சத்தம் கேக்குது.” என்றாள்.
“இந்த ஊர்ல நீங்க எங்க இருந்தாலும் கடல் சத்தம் கேட்கும். அதுவும் இப்படி ஊரே அடங்கி இருக்கற சமயத்துல நிச்சயம் கேட்கும்.” அவனுடைய அழகிய பல்வரிசை தெரிய அவன் பதில் கூறியது சுப்புவுக்கு பிடித்திருந்தது.
“இவ கடலை போடா ஆரம்பிச்சுட்டா டி.. இனி நமக்கு தான் ஆள் இல்லமா போர் அடிக்கும். ஸ்கூல்னா நம்ம செட் பசங்க பொண்ணுங்க இருப்பாங்க. இந்த நாலு நாள் உனக்கு நான், எனக்கு நீ … ஓகே வா?” மீனு தனக்கு நிகராக சைக்கிளில் வந்த அம்புவிடம் கூறினாள்.
அவளும் சிரித்தபடியே, “அப்படி உனக்கு வேற கம்பனி வேணும்னா, கமல் கிட்ட அவன் ப்ரெண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வர சொல்லேன்.” அம்பு ஒரு பேச்சுக்குத் தான் கூறினாள்.
“ஹே இது கூட நல்ல ஐடியாவா இருக்கேன்.” கண்கள் மின்ன மீனு சிரிக்க,
“அடிங்க.. கொஞ்சமா ஆடுவோம். இப்படி பட்ட புது இடத்துல புது ஆளுங்க கூட சுத்தறது எல்லாம் வேணாம். கமல் எக்ஸப்ஷன், நம்ம அப்பாக்கு தெரிஞ்சவங்க. சோ பரவால்ல..மத்தவங்க எல்லாம் எப்படின்னு நமக்கு தெரியாது. சோ அப்படி ஐடியா இருந்தா டிராப் பண்ணிடு”கண்டித்தாள்.
“என்ன மச்சி நீ அம்மா இல்லாத குறைய தீத்துட்டு இருக்க… நாலு நாள் என்ஜாய் பண்ணிட்டு போகப் போறோம். கமல் ப்ரெண்ட்ஸ் னா அவங்களும் சேஃப் தான…”
“என்னவோ போ.. நன் சொல்றத சொல்லிட்டேன்.. எனக்கு ஆர்கியூ பண்ண முடியல.” அத்துடன் நிறுத்திக் கொண்டாள் அம்பு.
முக்கால் மணி நேரம் சைக்கிள் ஓட்டிய பிறகு அந்த பீச்சுக்கு வந்து சேர்ந்தனர். சைக்கிளை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அந்த மணலில் கால் புதைய நடக்க ஆரம்பித்தனர்.
“நீங்க எவ்வளவோ சன் ரைஸ் பார்த்திருக்கலாம். ஆனா இது ஸ்பெஷல்.” கமல் அவர்களிடம் கூற,
“அப்படி என்ன ஸ்பெஷல். நாங்க வர்றதுனாலயா?” மீனு சிரிக்க,
“சில்லி..” என நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“கொஞ்சம் அசிங்கப் படாம இரு” பல்லைக் கடித்தாள் சுப்பு.
“ஏன் ஸ்பெஷல்?” அம்பு மீண்டும் கேட்க,
“வாங்க காட்றேன்…” சிறிது தூரம் நடந்த பிறகு,
அங்கே மணலில் சிறு கீற்றுக் கொட்டகை போட்டு சில பேர் அமர்ந்து இருந்தனர்.
“அங்க பாருங்க.” என கை காட்டினான்.
பெண்கள் சிலரும் ஆண்கள் சிலருமாக அங்கே இருந்தவர்களின் உடைகள் வித்தியாசமாக இருந்தது.
பெண்கள்,மேலே ரவிக்கையும் சிறிது இடை தெரிய கீழே முக்கால் நீளம் பாவாடை அணிந்து தலையில் தாவணியை தவழ விட்டு அதிலே நெற்றியைச் சுற்றி சிறு மணிகளை தொங்கவிட்டிருந்தனர். கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தனர்.காதில் பெரிய கம்மல் போட்டு கால்களில் தண்டை மற்றும் கையில் ஒரு பெரிய தாள வாத்தியம் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆண்கள், மேலே குறுக்குவாக்கில் ஒரு அங்கவஸ்திரம் போன்ற துணியும், இடையில் அதே போன்ற அறை நீளம் வேட்டியும் கட்டி ஒரு காலில் மட்டும் தண்டை போட்டு, கையில் சங்கு போன்ற ஒன்றை வைத்திருந்தனர். அவர்களும் காதில் ஒரு வளையம் போட்டு கையில் காப்பு அணிந்திருந்தனர்.
“யார் இவங்க? இங்க ஏன் உட்காந்து இருக்காங்க?” அவர்களைப் பார்த்துக் கேட்க,
“இவங்களும் சன் ரைஸ் பாக்க வந்தவங்க, ஆனா நம்மள மாதிரி இல்ல. இவங்க காட்டுக்குள்ள வாழற மக்கள். வருஷத்துல இந்த மாசம் இந்த வாரம் மட்டும் இங்க வருவாங்க.
அவங்க சூரியனை தெய்வமா கும்பிடுறவங்க. இந்த வாரம் முழுக்க ஏழு நாளும் அவங்க தினமும் வந்து சூரியன வழிபட்டு கொண்டாடுவாங்க.
அதாவது சூரியன் உதயமாகும் பொழுது அதை பாட்டுப் பாடி வரவேற்பாங்க. அவங்க சூரியன எழுப்பறதா அர்த்தம். அதுக்கு அப்புறம் சூரியன் உச்சிக்கு வரப்ப சில படையல் எல்லாம் போட்டு கும்பிட்டு வழிபடுவாங்க. சாயங்காலம் சூரியன் மறையும் போதும் பாட்டுப் பாடுவாங்க. தூங்க வைக்கற பாட்டு. இப்போ அவங்க பாடுவாங்க கேளுங்க.” சிறிதாக விளக்கம் கொடுத்தான்.
“ஏன் அவங்க இங்க வந்து பண்ணனும். அவங்க இடத்துல பண்ண மாட்டாங்களா?” அம்பு கேட்க,
“ இது மாதிரி மலையும் கடலும் சேர்ந்து வர இடத்த அவங்க தேர்ந்தெடுக்கணும்னு சொன்னங்க.” கமல் பதில் தர,
அப்போது தான் அங்கே இரண்டு மலைகளுக்கு நடுவில் சூரிய உதயம் என்று புரிந்தது.
கீழே கடல், மேலே இரண்டு மலைகள் லேசாக வானம் சிவந்து வர, அங்கிருந்த மக்கள் ஆர்வமாய் எழுந்து வரிசையாய் நின்றனர். அம்பு உடனே அதை அவளது மொபைலில் வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.
அனவைரும் தலைக்கு மேல் கை தூக்கி சூரிய நமஸ்காரம் செய்தனர். பின்பு தங்களின் பையிலலிருந்து கைநிறைய பூக்களை எடுத்து மெல்ல எழுந்து வரும் சூரியனை நோக்கி காற்றில் வீசினர்.
பின்பு அந்த ஆண்கள் கூட்டத்தில் ஒருவன் மட்டும் முன் வந்து தன் இசைக்கருவியை அடித்து “ஓ…..! கதிரவனே….! காக்கும் இறைவனே !” என கணீர் குரலில் பாட ஆரம்பித்தான். அவன் பல்லவியைப் பாட, பின் மற்றவர்கள் சேர்ந்து தாளமும் சங்கொலியுமாக தங்களின் வாத்தியத்தை எடுத்து வாசித்தனர்.
அந்த நேரம் நீரிலிருந்து வெளிவருவது போல, இரு மலைகளுக்கு நடுவில் இருந்து சூரியன் மெல்ல எழும்பினான்.
அந்த காட்சியைக் கண்ட அம்புவின் கண்களில் தன்னால் நீர் வந்தது.
மற்றவர்களுக்கும் அது ஒரு புல்லரிக்கும் செயலாகத் தான் இருந்தது.
“வாவ்..! சம்திங் வொண்டர்புல்..” சுப்பு இயல்பாக கமலின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
கமல் அவளின் செயலில் சற்று ஆச்சரியம் ஆனான். ஒரு வேலை இது தான் அவளின் இயல்போ எனவும் யோசித்தான்.
அதனால் அவனும் சகஜமாகவே எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான்.
அந்த மலை மக்கள் தங்களின் வழிபாடு முடிந்து அங்கிருந்து செல்ல,
“கிளம்பலாமா?” கமல் கேட்டான்.
“ம்ம் போலாம். எனக்கு பசிக்குது, அட்லீஸ்ட் ஒரு காஃபி வேணும் நல்லா சூடா.” மீனா குதித்தாள்.
காஃபி என்ற வார்த்தையில் அந்த அற்புத நிமிடத்தில் இருந்து வெளிவந்தாள் அம்பு.
அங்கே வெளிப்புறம் பழைய கட்டிடம் போன்று இருந்த ஒரு காபிஷாப்புக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.
வெளியே இருப்பது போல் அல்ல, அந்தக் கடை உள்ளே மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. வண்ண வண்ண பூக்கள் ஆங்காங்கே தொங்க விட்டு கண்களுக்கு விருந்தாக்கி இருந்தனர்.
இவர்கள் உள்ளே நுழைந்ததும், “ஹே! கமல் வாட்சப் ப்ரோ..ரொம்ப நாள் அச்சு. நம்ம கடை பக்கம் எல்லாம் வரமாட்டியே…இப்ப எப்படி?” அந்தக் கடை நடத்துபவன் அவர்களை வாசலிலேயே எதிர்கொண்டு கேட்க,
“ஹே மேன்! வரக் கூடாதுன்னு இல்ல.. வொர்க் பிரஷர் அப்படி. இல்லனா ஓல்ட் ப்ரென்ட்ட மீட் பண்ணாம இருப்பேனா. வெல்.. இவங்க என்னோட கெஸ்ட்ஸ்.. பீச் சன்ரைஸ் பாக்க வந்தோம். அப்படியே உன் கடைல காஃபி சாப்பிடலானு கூட்டிட்டு வந்தேன்.
“கண்டிப்பா… நீங்க உக்காருங்க. நான் உங்களுக்கு ஸ்ட்ராங்கா எடுத்துட்டு வரேன்.” சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து நகர,
“நீங்க பேசிட்டு இருங்க இதோ வரேன்.” என எழுந்து சென்றவன், அங்கிருந்த ஒரு ஸ்மோக் ஜோன் செல்வதை கவனித்தனர் பெண்கள்.
“தம் அடிப்பான் போல…” மீனா கிளுக்கிச் சிரித்தாள்.
“எனக்கும் சிகரெட் ட்ரை பண்ணனும். என்ன சொல்றீங்க..?” முந்திரிக் கொட்டை சுப்பு ரகசியாமாகக் கேட்க,
“வொய் நாட்…” மீனு கண்ணடித்தாள்.
“எல்லாத்தையும் கத்துகிட்டு விட்டுடணும். சோ ஐ அம் ஆல்சோ இன்.” கட்டைவிரலை தூக்கிக் காட்டினாள் அம்பு.
அதற்குள் கமல் வந்துவிட, “என்ன அதுக்குள்ள தம் அடிச்சாச்சா..?” மீனு சிரிக்க,
“இல்ல.. தம் அடிக்கல..இது வேற..” அத்தோடு நிறுத்தினான்.
“வேற என்ன ?” சுப்புவின் ஆர்வம் விடுவதாக இல்லை.
“அதெல்லாம் பெரியவங்க விஷயம். ஃப்ரீயா விடு!” சற்று அதட்டினான்.
“ஏன் நாங்கலாம் இப்போ செவன்டீன்..இன்னும் ஆறு மாசத்துல எய்டீன்..சொல்லுங்க பரவால்ல..தெரிஞ்சுகறோம்.”
‘இவளெல்லாம் அடங்கற டைப்பே இல்ல. சின்ன வயசுல வலிய வந்து கெட்டுபோகுதுங்க…’ என நினைத்தவன்,
“டோப் அடிக்க ரெடி பண்ணிட்டு வந்தேன். என் ப்ரெண்ட்ஸ் கூட வீக்என்ட் என்ஜாய் பண்ண.. போதுமா?” இதுக்கு என்ன சொல்லுவா என்பது போல பார்க்க,
“நிஜமாவா…!!” கண்களில் மின்னல் தெறிக்க மூவரும் பார்க்க,
அதை ரசித்தவன், “ஆமா. காப்பிய குடிச்சுட்டு ரூம் போகலாம் வாங்க.” அதற்கு மேல் அவர்களிடம் பேசாமல் தன் நண்பனிடம் சென்று பேசிக் கொண்டிருந்தான்.
இவர்களோ காபியை ருசித்தபடியே ஒருவருக்கொருவர் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள,
அது கடைசியில் தாங்களும் அதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற முடிவில் கொண்டு வந்து நிறுத்தியது.
ரிசாட்டுக்கு வந்தும் மீண்டும் குளித்து கிளம்பி கமலைப் பார்க்க வந்தாள் சுப்பு.
சுப்புவின் கோரிக்கையைக் கேட்டதும் உறைந்து போயே விட்டான்.
“ஹேய்…கெட்டுப் போகலாம் ஆனா இவ்வளோ சின்ன வயசுல கெட்டுப் போகக் கூடாது. ஒழுங்கா ட்ரிப்ப முடிச்சுட்டு ஊர் போய் சேரு.” சற்று உரிமை எடுத்துக் கொண்டு சொன்னான்.
“கெட்டுப் போறதுன்னு ஆன பிறகு எப்போ கெட்டா என்ன.. ப்ளீஸ் கமல்..” கண்களில் அழகைத் தேக்கி அவள் கெஞ்ச, இவன் தான் அவளது வழிக்கு வந்தான்.
“சரி தம் அடிச்சு இருக்கியா?”
“ஒரு தடவ எங்க ஸ்கூல்ல பசங்க கூட இருக்கறப்ப ட்ரை பண்ணிருக்கேன். ஆனா சரியா புகைவிடத் தெரியல.” உதட்டை சுழித்து அவள் கூற,
சிரித்துவிட்டான்.
“முதல்ல தம் அடிச்சு காட்டு , அப்பறம் டோப் அடிக்கலாம்.” புருவத்தை உயர்த்திக் கேட்க,
“சரி, தம் வாங்கிட்டு எங்க ரூம்க்கு வாங்க.” என்றாள்.
“என்னது …ரூம்க்கு வரவா..அடியேய்… என்ன நெனப்புல இப்படி கூப்புடற?”
“நீங்க நல்லவங்க..?” அவன் கையைப் பிடிக்க,
“யார் சொன்னா.. ?” அர்த்தப்பார்வையுடன் நின்றான்.
“உங்க அப்பாவே நம்பி அனுப்பி இருக்காங்களே…!” பல்லைக் காட்டி சிரித்தாள்.
“அந்த ஒரு காரணத்துல தான் தப்பிச்சுட்டு இருக்கீங்க…” திரும்பி நின்று தலையைக் கோத,
அவன் ஆளுமையில் கிறங்கி அவனுக்கு உதட்டைக் குவித்து அவனறியாமல் ஒரு பறக்கும் முத்தம் கொடுத்தாள்.
“இல்லனா என்ன செய்வீங்களாம்?”
“ம்ம்ம்… “மீண்டும் அவன் புறம் திரும்ப,
“போடி.. போ.. ஒருத்தன் கொஞ்சம் அடக்கமா இருந்தா விட்ராளுங்களா..!”அலுத்துக் கொண்டான்.
“சரி எப்போ ரூம்க்கு கொண்டு வரீங்க..?” அதிலேயே நின்றாள்.
“ரூம்க்கு எல்லாம் வேணாம். ரெடியா இருங்க வேற ப்ளேஸ்க்கு போலாம்.” கிளம்பினான்.