EE 8

EE 8

அத்தியாயம் – 8

         அதிகாலை ஆறு மணி அளவில், செல்லில் அலாரம் அடிக்க ஈஸ்வரியின் கை தன்னைப்போல், அதை அனைத்து இருந்தது.

போர்வைக்குள் சுருண்டு இருந்தவள், மெதுவாக எழுந்து சோம்பல் முறித்து கண்ணை திறந்து பார்த்தவள், எதிரில் அவளின் கணவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பத்தை பார்த்து அதிர்ந்தாள்.

அடியே ஈசு! எதுக்கு இந்த லுக்கு விடுறான்? டிரஸ் எதுவும் சரியில்லையா?” என்று தன்னை குனிந்து சரி பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஹப்பாடி! நல்லவேளை டிரஸ் எதுவும் களையல. அப்புறம் ஏன் இப்படி ஒரு பார்வை?” என்று மீண்டும் நிமிர்ந்து பார்த்தவள், அதே துளைக்கும் பார்வை அவள் மீது.

குட் மார்னிங்க! ஆமா என்ன பார்வை உந்தன் பார்வைஎன்று அவனை நோக்கி கண்ணை அடித்துவிட்டு, எழுந்தவள் அங்கு இருந்து நகர பார்க்க, அவனின் கேள்வியில் அப்படியே அங்கேயே நின்றுவிட்டாள்.

நேத்து எதுக்கு திடீர்னு முத்தம் கொடுத்த எனக்கு? யாரை நினைச்சு கொடுத்த? சரி தூக்க கலகத்துல கொடுத்த, அப்புறம் அது என்ன லவ் யூ டா புஜ்ஜி?” என்று அவளை பார்த்து துளைக்கும் பார்வையுடன் கேட்டான்.

என்னது உங்களுக்கு கொடுத்தேனா! அப்போ புஜ்ஜிக்கு நான் கொடுக்கலையா!” என்று அதிர்ந்தவளை பார்த்து இப்பொழுது அவளை இன்னும் நன்றாக முறைத்தான்.

புஜ்ஜி யாரு?” இப்பொழுது அவன் கேள்வியில் சூடு தெரிந்தது.

எங்க தாத்தா வீட்டு நாய்க்குட்டி ஜாக், அது கூட மட்டும் தான் நான் பயமில்லாமல் இருப்பேன். மத்த எந்த நாயை பார்த்தாலும், நான் அலறி ஓடுவேன்”.

இது மட்டும் தான், நான் என்ன சொன்னாலும் சமத்தா கேட்கும். இங்க சென்னை வந்த பிறகு ரொம்ப மிஸ் செய்றேன், நேத்து என் கனவில் அது வரவும், அதுக்கு கிஸ் பண்ணுறேன் நினைச்சு உங்களுக்கு கொடுத்துட்டேன் போல, சாரிஎன்று சொல்லிவிட்டு சென்றவளை இப்பொழுது கொலைவெறியோடு பார்த்தான்.

அவனின் அந்த கோபத்திற்கு காரணம், நேற்று அவள் செய்த அட்டகாசம் தான்.

இங்கு சென்னை வந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எல்லாவற்றையும் எடுத்து அடுக்க என்று வேலைகள், ஜரூராக நடந்து கொண்டு இருந்தது.

இந்த ஒரு வாரமும், இருவரின் தூக்கமும் ஆளுக்கு ஒரு சோபாவில் தான். சென்னையில் அவன் இதற்க்கு முன் இருந்த வீட்டை, அவன் நண்பர்களுக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரவும் தான், அவன் அன்னையின் யோசனைப்படி இங்கே ஓஎம்ஆர் ஏரியாவில் உள்ள த்ரீ பெட்ரூம் பிளாட் ஒன்றை வாங்கினான்.

த்ரீ பெட் ரூம் பிளாட் என்று தான் பெயர், எல்லாம் சிறிய அளவில் சற்று காம்பாக்ட்டாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் அது தாராளம் தான், ஆனால் நாளை விசேஷம் என்று வைத்தால் அத்தனை பேருக்கும் இடம் பற்றாது.

 

ஆனால் இது தான் அவனிற்கு வசதி இப்பொழுது, இங்கு பத்தாவது மாடியில் இருந்து வெளியே பார்க்கும் பொழுது,  சென்னையின் ஒரு பகுதி அவ்வளவு அழகாக காட்சி அளிக்கும்.

அது மட்டுமில்லாமல், இப்பொழுது அவன் எடுத்து இருக்கும் கேசில் இங்கே தான் அதன் குற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதற்காக தான் அவன் இந்த பகுதியை தேர்ந்தெடுத்தது, அவனிற்கு இந்த கேஸ் பெரிய சவாலும் கூட.

நேற்று தான் வீட்டை முழுவதுமாக ஒழுங்கு படுத்தி இருந்தனர். அவனின் அன்னை, ஈஸ்வரியின் அன்னை, பாட்டி இருவரும் என்று நேற்று இவர்களை காண வந்து இருந்தவர்கள் இங்கு தங்கி இருந்தனர்.

ஆகையால் அவர்களுக்கு இரு அறைகளை கொடுத்துவிட்டு, இவர்கள் இருவரும் ஒரு அறையில் இருந்தனர். கீழே படுக்க இருவருக்கும் விருப்பம் இல்லை, காரணம் அவர்களின் கெத்தை விட்டுக் கொடுக்க தயாரகவில்லை.

“என் மேல கை, கால் எதுவும் போடாம ஓரமா படு புரியுதா?” என்றான் ஈஸ்வர்.

அவளோ சேம் டு யூ என்று கூறிவிட்டு படுத்துவிட்டாள் கட்டிலின் மறுபக்கம்.

இருவரும் இப்படி எதிரும், புதிருமாக திரும்பவும் மாற ஒரே காரணம் தான். அன்று நடந்த அந்த சம்பவம் தான் இவர்களின் இந்த நிலைக்கு, முழு காரணம்.

படுத்தவுடன், ஈஸ்வரி வழக்கம் போல் களைப்பில் உறங்கிவிட அவனுக்கு தான் தூக்கம் தூர போனது. இன்று காலை அவனின் மேல் அதிகாரி கொடுத்த தகவலின் படி, இங்கே தான் குழந்தைகளை கடத்துவது அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்தவன், மனதிற்குள் பல யோசனைகள்.

இவன் இப்படி கேஸ் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான், தூக்கத்தில் புரண்டு இவன் அருகே வந்து படுத்தாள் ஈஸ்வரி. படுத்ததோடு அல்லாமல், காலை தூக்கி அவன் மேலே போட்டு படுத்ததோடு, அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ பஜ்ஜி என்று வேறு சொல்லி வைத்தாள்.

இவனுக்கு அந்த ஷனத்தில், அவளுக்கு பதில் முத்தம் கொடுக்க அவ்வளவு ஆவல். ஆனால் தூக்கத்தில் இப்படி செய்பவள், யாரை நினைத்து கொடுத்தாள் என்று தெரியாமல், அவளுக்கு பதில் முத்தம் கொடுக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஆனால் அவளை தன்னிடம் இருந்து தள்ளி படுக்க வைக்க அவனுக்கு விருப்பமே இல்லை. ஆகையால் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டே படுத்து தூங்கி விட்டான்.

மறுநாள் அவளிடம் அதை தெரிந்து கொள்ள கேட்ட அவனுக்கு கிடைத்த பதில், அவனுக்கு முதலில் சிரிப்பு வந்தாலும் தன்னை ஒரு நாய்குட்டியாக கருதி, முத்தம் கொடுத்தது ஏனோ பிடிக்கவில்லை.

“நான் என்ன நாய்க்குட்டியா இவளுக்கு? கொழுப்பு கூடிபோச்சு இவளுக்கு, இரு டி உன்னை இப்போ வச்சு செய்றேன்” என்று மனதிற்குள் கருவிவிட்டு நேரே ஹாலுக்கு சென்றவன், அங்கே ஈஸ்வரியின் அன்னை அவளை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார்.

ஏண்டி இதான் நீ எழுந்து வர நேரமா? அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்து குளிச்சிட்டு, சமையற்கட்டுக்கு வந்து இருக்க வேண்டாமா? என்று திட்டிக் கொண்டு இருந்தார்.

அவளோ மனதிற்குள், அவருக்கு கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

“ என்னது அஞ்சு மணிக்கா! அது எனக்கு ராத்திரி நேரம். ஆறு மணிக்கு எழுந்துக்கணுமே அப்படின்னு அதுவும், நீங்க எல்லாம் வந்து இருக்கீங்களேன்னு எழுந்தேன்”.

“சமையற்கட்டுக்கு வந்தா மட்டும் போதும், சாப்பாடு எல்லாம் வரிசைகட்டிகிட்டு வந்திடுமா என்ன சீக்கிரம் எழுந்தா?” இப்படி மைன்ட் வாய்சில் அவள் பேச, அவள் அன்னை மறுபக்கம் அவளை வச பாட என்று ஓடிக் கொண்டு இருந்தது.

அவளின் குனிந்த தலையை பார்த்து, அவனுக்கு சிரிப்பு வந்தது. இந்த ஈஸ்வரி குறும்பு நிறைந்தவள், அவள் செய்யும் சேட்டைகளுக்கு எல்லோருமே விசிறி. அந்த முகத்தில் எப்பொழுதும் குறும்பும், புன்னகையும் நிறைந்து இருக்கும்.

இவன் அவளை ரசித்துக் கொண்டு இருக்க, அவன் பாட்டி அதற்குள் அங்கே வந்தவர் ஈஸ்வரியை சென்று குளித்து வருமாறு கூறிவிட்டு, அவளின் அன்னை சாந்தாவை கூட்டிக் கொண்டு அங்கு இருந்து சென்றார்.

“தம்பி! நாங்க இன்னைக்கு நைட் ட்ரைன் ஏறுறோம், நீ ஈஸ்வரியை நல்லா பார்த்துக்கோ. சின்ன பொண்ணா இருந்தாலும், ரொம்ப பொறுப்பு அவ. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும், பேசி தீர்த்திடுங்க உடனே”.

“அப்படி பேசி தீர்க்கலைனா, என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும். உங்க அப்பா கிட்ட நான் அப்போவே பேசி இருந்தா, இன்னைக்கு இப்படி பிரச்சனை வந்து இருக்காது” என்று பெருமூச்சு விட்டவரை பார்த்து, அனைத்துக் கொண்டான்.

“அம்மா! அவளை நான் நல்லா பார்த்துக்கிறேன். நீங்க கவலையே படாதீங்க, அந்த பிரச்சனை எல்லாம் நான் சரி பண்ணிடுறேன். நீங்க நேத்து தான வந்தீங்க, இன்னும் ரெண்டு நாள் எல்லோரும் இருந்துட்டு போகலாம் இல்லையா?” என்று கேட்டான்.

“இல்லைபா, அங்க உங்க அப்பாவும், மாமாவும் தனியா இருக்காங்க. நாங்க உங்களை பார்க்க தான் வந்தோம் பீட்டர் தம்பியோட, உங்களை பார்த்துட்டோம் இல்லையா, சந்தோஷமா இருங்க” என்று அவர் கூறிவிட்டு ஈஸ்வரியின் அன்னைக்கு உதவ, சமையற்கட்டுக்கு சென்றார்.

பெருமூச்சுடன் தங்களின் அறைக்கு வந்தவன், அங்கே இருந்த பால்கனிக்கு சென்று எப்பொழுதும் மேற்கொள்ளும் யோகா பயிற்சியை செய்ய தொடங்கினான். அவர்களின் அறையை ஒட்டிய குளியலறையில் குளித்து வந்தவள், டிரெஸ்ஸிங் டேபிளின் முன் சென்று தலை முடியை வார தொடங்கினாள்.

அப்பொழுது ஓம் என்று சத்தம் அவள் செவியை எட்டவும், எங்கு இருந்து வருகிறது என்று பார்த்தாள். பால்கனியில் அவன் செய்யும் யோகாவை பார்த்து, மலைத்து போனாள்.

“ஆத்தி! இவன் என்ன இப்படி இருக்கான்? வந்ததில் இருந்து எக்சர்சைஸ், ரன்னிங், யோகான்னு ஏதாவது ஒன்னை செய்துகிட்டே இருக்கான். நான் எல்லாம் எழுந்துக்கவே யோசிப்பேன், இவன் டைம்க்கு எழுந்து எல்லாம் செய்றான்”.

“போச்சு! நம்ம அம்மு காதுல இது விழுந்தா, எனக்கு காலையில் கிடைச்சதை விட டபுள் மடங்கு கிடைக்குமே. எனக்கு எதிரி வெளியே வேண்டாம், வீட்டுக்குள்ளயே ஒன்னு இருக்கு, நூறு பேருக்கு சமமா” என்று மைன்ட் வாய்சில் இவள் கதற, அதற்குள் வெளியே சாந்தா இவளை அழைத்து விட்டார்.

வேகமாக தலையை நன்றாக பின்னி விட்டு, நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு அணிந்து இருந்த சுடிதாருக்கு ஷால் தேடி எடுத்து அதையும் பின் செய்து விட்டு வெளியே வந்தாள்.

“அம்மா! ப்ளீஸ் ஏற்கனவே காதுல ரத்தம் வர அளவுக்கு உன் அட்வைஸ் நிறைய கேட்டுட்டேன். இனி ஒழுங்கா இருக்கேன் சரியா, உன் மாப்பிள்ளை இப்போ வந்திடுவார் வாங்க சாப்பாடு எல்லாம் எடுத்து வைக்கலாம் மேஜையில்” என்று அவருக்கு முன் முந்திக் கொண்டு ஓடிவிட்டாள்.

“சாந்தா! அவளை ஒன்னும் சொல்லாத இனி பேரன் பார்த்துப்பான் அவளை. அவளும் பொறுப்புள்ள பிள்ளை தான், நீ இந்த பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறது, வாங்கி வைக்கிறது எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து அதை அவளுக்கு சொல்லி கொடு” என்று காமாட்சி பாட்டி சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

அதற்குள் அங்கே ஈஸ்வர் யோகா எல்லாம் முடித்துக் கொண்டு, குளித்துவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு ஈஸ்வரி பார்த்து பார்த்து பரிமாற, அதை ஒரு நிறைவுடன் பார்த்தனர் இரு தாய்மார்கள்.

அதன் பின் அன்றைய நாள் முழுவதும், அரட்டை அரட்டை என்று இரவு அவர்கள் ரயில் ஏறும் வரை தொடர்ந்தது. எல்லோரும் இப்பொழுது ரயில் நிலையாத்தில், ஈஸ்வரனும், ஈஸ்வரியும் அவர்களை வழியனுப்ப வந்து இருந்தனர்.

“பீட்டர் அண்ணா! அடுத்த தடவை ஜாக்கை தூக்கிட்டு வாங்க, ரொம்ப மிஸ் பண்ணுறேன் அதை. அம்மா! அப்பா கிட்ட சொல்லி அங்க பாட்டி வீட்டில் இருந்து இங்க நம்ம வீட்டில் வச்சுகோங்க புஜ்ஜியை சரியா” என்றவளை பார்த்து முறைத்தார்.

“அது வந்தா நீ உருப்பிட்டுருவ! ஒழுங்கா மாபிள்ளையை கவனிச்சுக்கோ, நீயும் உடம்பை பார்த்துக்கோ புரியுதா?” என்று அவளை எப்பொழுதும் போல் ரெண்டு கொடுத்துவிட்டே ரயில் ஏறினார்.

“ஹா ஹா! உனக்கு இது தேவையா ஈஸ்? கவலையே படாத, இன்னொரு தடவை நான் ஜாக்கை கூட்டிட்டு வரேன் சரியா? அப்புறம் சார், இவளை லேசா நினைக்காதீங்க, கொஞ்சம் விட்டா நம்மளையே முழுங்கிட்டு ஓடிடுவா கேடி” என்று கூறிய பீட்டரை பார்த்து சிரித்தான்.

அவன் நினைவுகளில், கல்லூரியில் இவர்கள் ஒன்றாக வருவதையும், ஓடி பிடித்து விளையாடி சீன்டியதையும் பார்த்து, இவள் எப்படி அவனோடு இப்படி பழகலாம் என்ற பொறாமை உணர்வே அன்று அவளை அப்படி பேச வைத்தது என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் ரயில் கிளம்ப, எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் கையை ஆட்டி அவர்களை வழியனுப்பிவிட்டு காரில் ஏறி தங்கள் வீடு நோக்கி பயணிக்க தொடங்கினர்.

“ஆமா! எனக்கு ஒரு சந்தேகம்? எல்லோரும் அம்மா கிளம்பும் பொழுது, அப்படி அழுவாங்க புதுசா கல்யாணம் பண்ணி வந்த புதுசுல, நீ ஏன் அழவே இல்லை?” என்று கேட்டான்.

“யார் சொன்னா அழவே இல்லைன்னு, அது எல்லாம் நல்லா அழுதுட்டேன் இங்க வந்த அன்னைக்கே. அப்புறம் இதான் லைப்ன்னு தெரிஞ்ச பின்னாடி, அழுது கண்ணீரை வேஸ்ட் பண்ணாம, வாழ்கை போற போக்குல வாழனும் நினைச்சேன், அதான் அழுகை வரல” என்று அவள் கூறவும், அவன் ஒரு நிமிடம் பிரமித்து விட்டான்.

அவளின் சிந்தனைகளில் தான் எவ்வளவு தெளிவு? இதை அவன் திருமணம் முடிந்த நாள் முதலாக பார்த்து கொண்டு தானே இருக்கிறான். எல்லாவற்றிலும், இவனை விட ஏதோ ஒரு படி மேலே அல்லவா அவள் சிந்தனைகள் இருக்கிறது.

அன்று அந்த பிரச்சனை மட்டும் தங்களுக்குள் வரவில்லை என்றால், இன்னேரம் இவள் கர்ப்பமாகி இருந்தாலும் ஆச்சரயப்படுவதற்க்கு இல்லை. அந்த அளவுக்கு அல்லவா, அவள் அன்று இவனை ஈர்த்து இருந்தாள்.

“ஏனுங்க! ரொம்ப நேரமா ஒரு கார் நம்மளையே பின் தொடருற மாதிரி ஒரு பீலிங். எதுக்கும் நீங்க டெஸ்ட் பண்ணி பார்த்திடுங்க, அப்போ தான் கொஞ்சம் தெளிவா இருக்கும்” என்று ஈஸ்வரி அவனை நினைவுகளில் இருந்து மீட்டெடுத்தாள்.

அப்பொழுது தான் அவனும் சற்று கூர்ந்து கவனிக்க தொடங்கினான், ஒரு கார் மட்டும் இல்லை, அதன் பின் வேறு ஒரு காரும் இவர்களை பின் தொடர்ந்து வருகிறது.

“சீட் பெல்ட் போட்டுக்கோ, என் போனை எடுத்து அதுல விஷ்வான்னு ஒரு பெயர் இருக்கும், அவனுக்கு போன் போடு” என்று கூறிக் கொண்டே காரை சற்று வேகம் எடுத்து ஓட்ட தொடங்கினான்.

“டேய் நல்லவனே! லீவ் நாள் ல கூட என் பொண்டாட்டி கூட ப்ரீயா பேச விடுறீயா நீ? இப்போ எதுக்கு டா இத்தனை தடவை கூப்பிடுற எருமை?” என்று இவன் நண்பனும், சக போலீஸ் அதிகாரியுமான விஷ்வா சிடுசிடுத்தான்.

“பரதேசி! ஆறாவது தடவை கூப்பிடும் பொழுது போன் எடுத்ததும் இல்லாம, என்னையை திட்டிகிட்டு இருக்க லூசே. என்னை எவனோ ரெண்டு கார் ல பாலோவ் பண்ணுறாங்க, என் கூட என் மனைவியும் இருக்கா”.

“இப்போ நான், இன்னும் கொஞ்ச நேரத்துல ஓஎம்ஆர் ஹைவேய்ஸ் பிடிச்சிடுவேன். உனக்கு தான் என்ன செய்யணும்ன்னு இப்போ தெரியுமே, எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு கூப்பிடு” என்று கூறிய ஈஸ்வர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தீவிர யோசனையில் இருந்தான்.

இரண்டு கார் என்பது போய், இப்பொழுது நான்கு காராக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அவன் வேகத்தை கூட்டி அங்கும், இங்கும் அவர்களுக்கு போக்கு காட்டினானே ஒழிய, தப்பிக்க எந்த முயற்சியும் அவன் எடுக்காததை நினைத்து அவள் யோசிக்க தொடங்கினாள்.

“பார்டா! அவனுகளை ரவுண்டு அப் பண்ண பிளான் போடுறாரா ஆபிசர், ஆனா அதுக்குள்ள அவனுங்க சினிமாவில் வந்த மாதிரி, ஏதாவது லாரி வச்சு தூக்கிட்டா!” என்று மனம் அவளுக்கு அடித்துக் கொண்டது.

“பயப்படாத! இன்னும் ரெண்டு நிமிஷம் தான், விஷ்வா இப்போ வந்திடுவான். கண்டிப்பா உனக்கு எதுவுமாக நான் விட மாட்டேன், நம்பலாம் என்னை” என்றவனை பார்த்து இப்பொழுது முறைத்தாள்.

“நான் ஒன்னும் பயப்படல, உங்களுக்கு எதுவுமாக கூடாதுன்னு தான் வேண்டிக்கிறேன். நான் உங்களை எப்படி விதவிதமா வச்சு செய்ய பிளான் பண்ணி இருக்கேன், இப்படி சேசிங் ல உசுரு போனா நான் அப்புறம் ஆவியா தானே திரிவேன்” என்று அவள் கூறியதை கேட்டு இவன் தான் அரண்டு விட்டான்.

அவள் நினைத்தது போல், லாரி ஒன்று திருப்பத்தில் வேகமாக வருவதை பார்த்து, கண்களை இறுக மூடி முருகா! முருகா! என்று வேண்ட தொடங்கிவிட்டாள்.

அதற்குள் பெரிய இடியுடன் கூடிய சத்தம் கேட்கவும், பயத்தில் காதுகளை இறுக மூடி பக்கத்தில் இருந்த கணவனை அனைத்துக் கொண்டாள். அவனும் அவளின் பயமறிந்து அவளை கட்டிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் தெளிந்தவள், கார் ஓரிடத்தில் நின்று இருப்பதையும் அங்கே கூட்டமாக போலீஸ் நின்று கொண்டு இருந்ததையும் பார்த்து தான் சற்று ஆசுவாசமானாள்.

அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தவன், அவளை பருக செய்துவிட்டு பின் பக்கம் திரும்பி பார்த்து பெருமூச்சு விட்டான். அப்பொழுது தான் அவன் பார்வை சென்ற திக்கை பார்த்தவள் நெஞ்சம், எகிறி குதித்து இதயத்துடிப்பை மீண்டும் அதிகரிக்க செய்தது.

அந்த லாரி, இவர்கள் துரத்தி வந்த காரின் மீது மோதி நசுங்கி வைத்து இருந்தது. தொடர்ந்து வந்த மற்ற கார்களை எல்லாம், போலீஸ் பிடித்து விசாரித்துக் கொண்டு இருந்தனர் அவர்களின் பாணியில்.

ஈஸ்வர் இருந்த ஜன்னல் கதவை தட்டிய நபரை பார்த்து, எங்கோ பார்த்தது போல் உள்ளதே என்று அவனை நன்றாக உற்று பார்த்தவளுக்கு, அவன் யார் என்று புரிந்தது.

“டேய் பக்கி! எப்படிடா இருக்க? அப்புறம் அந்த ஜாஸ்மின் ஒகே சொல்லிடாளா உனக்கு? கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா?” என்று விஷ்வாவை பார்த்து கேள்வியை தொடுத்தாள்.

“ஒன்னு ஒண்ணா கேள்வி கேளு எருமை! எப்போ பார்த்தாலும் எங்கேயோ ஓடுறவ மாதிரியே வரிசையா கேள்வி கேட்பா? மல்லிகா தான் என் மனைவி, இப்போ தான் ஒரு நாலு மாசம் முன்னாடி எங்க கல்யாணம் நடந்தது”.

“நீ எப்படி இருக்க? ஆமா நீ எப்படி இங்க?” என்று பார்த்தவன் அப்பொழுது தான் ஈஸ்வர் அங்கே இருப்பதை பார்த்து, ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்ற கணக்கை பார்த்துவிட்டு, அவன் சிரிக்க தொடங்கினான்.

“டேய்! பரதேசி சொல்லிட்டு சிரி டா எருமை” என்று விஷ்வா கத்தவும், நிதானத்திற்கு வந்தவன், அவன் சிரிப்பிற்கான காரணத்தை கூற தொடங்கினான்.

“இல்லை சின்ன வயசிலே அவ ஷெர்லாக் ஹோல்ம்ஸ் மாதிரி, பயங்கரமா குற்றம்! நடந்தது என்ன? அப்படின்னு ஒன்னு ஒண்ணா ஆராய்வா? இப்போ அவளுக்கு லட்டு மாதிரி நீ சிக்கி இருக்கியா, இனி சும்மா இல்லாம பிரிச்சு மேஞ்சிடுவா” என்று கூறிவிட்டு சிரிக்கும் நண்பனை பார்த்து கொலைவெறியே வந்தது அவனுக்கு.

பின்ன, இப்பொழுது தான் சிறிது நேரத்திற்கு முன், அவனை வச்சு செய்ய முடியவில்லையே என்று வருந்திய மனைவியை பார்த்து அரண்டு இருந்தவன், இப்பொழுது இந்த செய்தியில் பீதிக்கு உள்ளானான் என்பதை அவன் மட்டுமே அறிவான் அல்லவா.

இனி இவர்களின் வாழ்க்கை, எவ்வளவு சுவாரசியங்கள் வைத்து இருக்கிறது என்பதை அந்த கடவுள் மட்டுமே அறிவார்.

தொடரும்.

    

 

 

 

 

 

 

   

   

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!