ஈஸ்வரனின் ஈஸ்வரி
அத்தியாயம் – 2
ஈஸ்வரனுக்கு அன்றைய நாள் அவன் நினைத்தது போல் அமையவில்லை, அவன்
போடும் ஒவ்வொரு கணக்கையும் ஈஸ்வரி அவனுக்கே திருப்பி விட்டு செல்கிறாள்.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது, அவனின் மொத்த குடும்பமும்.
அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக எங்கோ கிளம்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு
இருப்பதை கண்டு, தன் அன்னையை தேடினான்.
அடுப்படி வேலையில் இருந்த அவரை பிடித்து இழுத்துக் கொண்டு, அங்கே இருந்த
ஸ்டோர் ரூமிற்க்கு வந்தான்.
“என்ன டா நீ! இப்படி வேலை இருக்கிற நேரம் பார்த்து இழுத்துகிட்டு வர என்னை.
என்ன டா வேணும் உனக்கு? லேட் பண்ணா உங்க அப்பா திட்டுவார் டா” என்று
அவனின் அம்மா சாரதா படபடக்க தொடங்கினார்.
“அம்மா! என்னமா நடக்குது இங்க? எனக்கு எதுவும் சரியா படல பார்த்துக்கோங்க.
அப்படி எங்க போக எல்லோரும் இப்படி அரக்க பரக்க கிளம்பிக்கிட்டு இருக்கீங்க?”
என்று தாயிடம் சிடுசிடுத்துக் கொண்டு இருந்தான்.
“என்னடா! நேத்து நான் உன்கிட்ட சொன்னதை மறந்துடியா? உனக்கு பொண்ணு
பார்த்து இருக்கோம் தானே, இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு போய் பூ வச்சு, நிச்சய
தாம்பூலம் மாத்த போறோம் டா கண்ணா”.
“நீ போய் சீக்கிரம் தயராகிகிட்டு வா, நானும் வேகமா கிளம்புறேன்” என்று கூறிவிட்டு
அவர் வேகமாக சென்றார்.
“ச! இன்னைக்கு எதுவுமே சரியா நடக்கல, முதல இதை தடுத்து நிறுத்தனும்” என்று
எண்ணிக் கொண்டே திரும்பியவன் அங்கே கண்டது, ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டு
இருக்கும் அவன் தந்தை ருத்ரன்.
“என்னடா? சீக்கிரம் கிளம்பி வா, நேரமாகுது. அங்க வந்து பொண்ணை பிடிக்கல,
இஷ்டமில்லை இப்படின்னு எதுவும் உன் வாயில் இருந்து வரவே கூடாது புரியுதா!”
என்று மிரட்டிவிட்டு சென்றார்.
அவனோ கோபத்துடன், அவர் சொன்னதை செய்ய மாடியில் இருக்கும் அவன் அறை
நோக்கி ஓடினான். கிளம்பி கீழே வந்தவன், அங்கே எல்லோரும் வேனில் ஏறி இருப்பதை
பார்த்து, தன் தலைவிதியை நொந்து கொண்டு அவனும் ஏறி அமர்ந்தான்.
வீட்டை பூட்டிவிட்டு இறுதியாக அவனின் தாயும், தந்தையும் வேனில் ஏறி அமர்ந்தனர்.
அடுத்த நிமிடம் வண்டி பெண் வீட்டை நோக்கி, தன் பயணத்தை தொடங்கி இருந்தது.
வேனில் அமர்ந்து இருந்த ஒவ்வொருவரும், சந்தோஷமாக குடும்ப கதைகளை பேசிக்
கொண்டு வர, ஈஸ்வர் மட்டும் காலையில் இருந்து மாலை வரை கல்லூரியில் நடந்த
சம்பவத்தை நினைத்து மனதில் கருவிக் கொண்டு இருந்தான்.
முதல் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும், அங்கு வந்த பியுன் ஆசிரியர் வர
சற்று தாமதமாகும், அதுவரை அமைதியாக இருக்கும்படி கூறி சென்றார்.
அமைதியாக? அதுவும் ஈஸ்வரியின் வகுப்பு மக்கள்! அது சாத்தியாமே இல்லை அல்லவா.
அவர் சென்ற சிறிது நேரத்திலே அரட்டை கச்சேரி நடக்க தொடங்கிவிட்டது, அதுவும்
ஈஸ்வரியின் மேற்பார்வையில்.
ஆண்கள் ஒரு புறம் பேசிக் கொண்டு இருக்க, இங்கே பெண்கள் மத்தியில் ஈஸ்வாியை
பார்த்து கேள்வி எழுப்ப தொடங்கினர் அவளின் தோழிகள்.
“ஹே! என்னடி இது? ரெண்டு பேரும் சேர்ந்து தான் எப்போவும் வருவீங்க. அப்புறம்
புதுசா தனி தனியா வந்தீங்க, இப்போ என்னடி திரும்பவும் சேர்ந்து வரீங்க, என்னடி
ஆச்சு?” என்று அவளின் தோழிகள் கேட்டனர்.
“அது ஒன்னும் இல்லடி, நம்ம சிடுமூஞ்சீ வாத்தி கிட்ட போன வாரம் டவுட் கேட்டேன்
நியாபகம் இருக்கா?” என்று ஈஸ்வரி கேட்டாள்.
“ஆமா ஆமா! அது எப்படி மறக்கும், முறைச்சிகிட்டே நீ கேட்ட கேள்விக்கு பதில்
சொன்னாரே. ஆமா! அதுக்கும், இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று அவளின் தோழிகள்
கேட்டனர்.
“நான் கேட்டதே இதை பத்தி தானே, அதை அவரும் புரிஞ்சிக்கிட்டு பிரின்சிபல் ஆப்
psychology என்ன சொல்லுது அப்படினு விளக்கமா சொன்னாரே”.
“கொஞ்சம் அது ஏத்துக்கிற மாதிரி இருக்கவும் தான், சரின்னு அதை முயற்சி பண்ணேன்.
ஆனா, நான் கவனிச்ச வரை யாரும் எங்களை முதல கண்டுக்கவே இல்லை. எல்லாம்
அவங்க, அவங்க வேலையை தான் பார்த்தாங்க”.
“ஒன்னு, ரெண்டு பேர் இதை பத்தி கேட்க தான் செய்தாங்க, ஆனா அவங்களும் பெருசா
அப்புறம் கண்டுக்கல. அப்படினா என்ன அர்த்தம், நாம நாமளா இருந்தா போதும், சும்மா
அடுத்த ஆளுக்கு பிடிக்கல அப்படினு மாத்த கூடாது நம்மளை”.
“சோ இப்போ திரும்ப நான் எப்போவும் போல, பீட்டர் கூட வந்துட்டேன். சார் கேட்டா,
அப்போ என்ன சொல்லனுமோ அதை நான் சொல்லிக் கொள்வேன் டார்லிங்ஸ்” என்று
சுடிதாரில் இருந்த காலரை தூக்கிக் கொண்டு கெத்து காட்டினாள்.
இவர்கள் அமர்ந்து இருப்பது, அங்கே காரிடார் அருகே உள்ள ஜன்னல் இருக்கையில்
என்பதால், இவர்கள் பேசிய அனைத்தும் வெளியே நின்று கொண்டு இருந்த ஈஸ்வருக்கு
நன்கு கேட்டது.
அவன் என்ன மாதிரி உணர்ந்தான் இதை கேட்டு என்று, சத்தியமாக அவனுக்கே
புரியவில்லை. இதுவரை ஆட்களை நன்கு கணிக்க தெரிந்தவன், இன்று ஈஸ்வரியை
எப்படி கணிப்பது என்று புரியாத நிலையில் தான் இருந்தான்.
சற்று இறுகிய முகத்துடன் வகுப்புக்கள் நுழைந்தவன், பாடத்தை எடுக்க
தொடங்கிவிட்டான். அவன் கேள்வி கேட்பான் என்று எண்ணிய ஈஸ்வரி, அவன் அதை
பற்றி கேட்காமல் இருந்தது அவன் மேல் முதல் முறையாக மரியாதை வந்தது.
“நம்ம பிரைவசி அப்படினு நினைச்சிட்டு, கேட்க கூடாதுன்னு நினைசிட்டார் போல.
இப்போவாவது புறிந்தா சரி, இந்த சிடுமூஞ்சிக்கு” என்று எண்ணிக் கொண்டு அவளும்
பாடத்தை கவனிக்க தொடங்கினாள்.
அவன் எடுத்துக் கொண்டு இருக்கும் பாடம் இப்பொழுது, facial expressions and
emotions. அதாவது, ஒருவரின் முகபாவனைகள் கொண்டு அவர்களின் மனநிலையை
அறிந்து கொள்வது எப்படி என்று.
அதை அவன் எடுத்த விதம் தான், ஈசுவரியை கவர்ந்தது. அந்த அளவுக்கு அவன் அதை
அலசி இருந்து இருக்கிறான் என்று அவன் பாடம் எடுத்த விதத்திலேயே புரிந்தது.
“இவ்வளவு அழகா இதை பத்தி வகுப்பு எடுக்கிறார், அப்புறம் ஏன் நம்மகிட்ட பீட்டர் கூட
வருவது பற்றி தப்பா மீன் பண்ணனும்? ஒருவேளை நம்மளை காரணமே இல்லாம
பிடிக்கலையோ, அதனால தான் அப்படி ஒரு முக திருப்பலா நம்மகிட்ட?” இப்படி
பலவேறு எண்ணங்களால் அவனை பற்றி சிந்தனை வயப்பட்டாள்.
அதற்குள் அவன் பாடம் எடுத்து முடிக்கவும், கேள்வி பதில் செக்சன் ஆரம்பமாகியது.
அப்பொழுது இவளின் முறை வரவும், அவன் கேட்பதற்குள், அவள் அவனிடம் தன்
சந்தேகத்தை கேட்க தொடங்கிவிட்டாள்.
அதுவும், அவள் அவனை பற்றி இப்பொழுது கணித்ததை பற்றி கேட்கவும், அவனிற்கு
கோபம் கரை புரண்டது. அதுவும், இதுவரை யாரும் அவனை இத்தனை துல்லியமாக
கணித்தது இல்லை, அவனின் பெற்றவர்களை தவிர.
இன்று அவன் வெறுக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து, அவனை பற்றிய கணிப்பு பற்றி
கேட்டவுடன், அவனுக்கு முதலில் ஆச்சரியம் தான், ஆனால் இப்படி எல்லோர்
முன்னாடியும் அவள் கூறியது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
“ஷட் அப்! கிளாஸ் ல பாடத்தை கவனிக்காம, கண்டதையும் யோசிச்சு உனக்கு தோனுற
கேள்வி எல்லாம் கேட்க, இது உன் வீடு இல்லை புரியுதா?” என்று அதட்டிவிட்டு உடனே
அங்கு இருந்து வெளியேறினான்.
“என்னடி இது? இப்படி எப்போவும் கேட்க மாட்ட, இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு?”
என்று தோழிகள் பலவாறு அவளிடம் கேட்க தொடங்கினர்.
“எருமைகளா! நான் சரியா தான் கேட்டேன், யாராவது ஒருத்தர் நான் கேட்ட கேள்வியை
கவனிசீங்களா? கவனிச்சு இருந்தா, அப்போ தெரிஞ்சு இருக்கும், நான் ஏன் அந்த
கேள்வியை கேட்டேனு?” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அவளுக்கு அதன் பிறகு வேறு எந்த வகுப்பிலும், கவனம் செல்லவில்லை. நினைவு
முழுவதும், அவனின் கோபம் எதனால் என்று அதிலே சுருண்டு இருந்தது.
இதற்கு ஒரு முடிவு தெரியாமல், அவளால் அடுத்து எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது
என்று புரிந்ததும், கல்லூரி முடிந்தவுடன் நேராக ஈஸ்வர் தேடி தான் சென்றாள்.
அங்கே ஆசிரியர்கள் அறையில், அவன் கிளம்பிக் கொண்டு இருந்தான், வீட்டிற்கு செல்ல.
அவளோ, அங்கே அவனை தவிர வேறு யாரும் இல்லை என்று தெரிந்த பின், அவனை
நோக்கி சென்றாள்.
“சார்! உங்களுக்கு நான் கேட்ட கேள்வி தப்பா தெரிஞ்சு திட்டுனீங்களா? இல்லை சரியா
தெரிஞ்சு கேட்டதால திட்டுனீங்களா? இல்லை எல்லோர் முன்னாடி கேட்டதுல
கோபமா?”.
“எனக்கு கண்டிப்பா இதுக்கு பதில் தெரினியனும், பிளீஸ் சொல்லிட்டு போங்க” என்று
மிகவும் பணிவுடன் கேட்டாள், அவன் ஆசிரியராக இருப்பதால்.(நோட் பண்ணுங்கப்பா)
“இதுக்கு பதில் தெரிஞ்சு நீ என்ன செய்ய போற, முதல வகுப்பில் எப்படி இருக்கணும்னு
கத்துக்கோ” என்றுவிட்டு உடனே அங்கு இருந்து வெளியேறினான்.
அவன் மனம் முழுவதும் வெறுப்பும், கோபமும் அவள் மீது தாறுமாறாக ஏறி அமர்ந்து
கொண்டது. அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவன், அவன் தந்தை செய்த ஏற்பாடில்
மனம் மேலும் கொதித்துக் கொண்டு இருக்கிறது.
“என்னடா யோசனை? பொண்ணு வீடு வந்திடுச்சு, எறங்கு முதல சொன்னது நியாபகம்
இருக்கு தானே?” என்று அவனின் தந்தை மீசையை நீவிக் கொண்டே கேட்கவும், அவன்
தலை தானாக ஆடியது.
தன் விதியை நொந்தபடி, அவன் பலியாடு போல் கூட்டத்துடன் உள்ளே செல்லவும்,
அங்கே பெண்ணின் தந்தை வாங்க வாங்க மாப்பிள்ளை என்று வரவேர்க்கவும், இவனுக்கு
மூச்சடைத்தது.
“மாப்பிள்ளை அப்படினே முடிவு பண்ணிட்டாங்க போல, நம்மளை விட மாட்டாங்க
போலயே” என்று நொந்து போய் இருந்தான்.
இருக்கும் கோபத்திற்கு, யாரையும் சட்டை செய்யாமல் உண்மையை சொல்லி விடலாம்
என்று கூட அவனுக்கு தோன்றியது. ஆனால், அதன் பிறகு வரும் விளைவுகள் எவ்வளவு
மோசமானதாக இருக்கும் என்று அறிந்த பின், அந்த முட்டாள்தனத்தை அவன் செய்ய
போவதில்லை.
கூட்டத்தில் பெரியவர் ஒருவர் பெண்ணை அழைத்து வாங்க, என்று குரல் கொடுக்கவும்,
அவனின் தந்தை அவனை அழைக்கவும், அதுவரை குனிந்து அமர்ந்து இருந்தவன்,
நிமிர்ந்து அமர்ந்தான்.
“எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணு மா, இதான் எங்க பொண்ணு ஈஸ்வரி” என்று
அவளின் அன்னை சாந்தா தேவி அவளை அறிமுகப்படுத்தினார்.
“ஹ்ம்ம்! இவளுக்கும், எனக்கும் இருக்கிற ஒரே பொருத்தம் பேர் பொருத்தம் மட்டும் தான்.
நான் தான் மாப்பிள்ளை அப்படினு தெரிஞ்சு, இப்போவாவது என்னை பிடிக்கல
அப்படினு சொல்லு, உன் வழிக்கே வர மாட்டேன்” என்று அவன் புலம்பியது பெரியவரின்
காதில் விழுந்து விட்டதோ என்னமோ, தனியாக சென்று பேசிக் கொள்ளுங்கள் என்றார்
அவர்.
“தாத்தா! என் மனசை புரிஞ்சுகிட்டு நீங்க தான் முதல் முதல ஒரு நல்ல வேலை பண்ணி
இருக்கீங்க. கொஞ்சம் பக்குவமா தான் பேசணும் அவ கிட்ட, இன்னைக்கு வேற ஓவரா
திட்டிட்டோம்” என்று எண்ணிக் கொண்டே, அவளிடம் பேச அவனை வீட்டின் பின் பக்க
தோட்டத்திற்கு அழைத்து சென்றார்கள்.
இவர்கள் இருவரை அங்கே விட்டுவிட்டு, மற்றவர்கள் ஓரமாக ஒதுங்கிக் கொண்டார்கள்.
அப்பொழுது தான் அவன், அவளை நன்றாக கவனித்தான்.
புடவையில், பெண்ணிற்குறிய நளினம் மின்ன தேவதை போல் நின்றவளை,
அவனரியாமல் ரசித்தான். ஒரு நிமிடம், வந்த காரணம் மறந்து இருந்தவன், அவள்
நிமிர்ந்து அவனை முறைத்த பின் தான் அவனுக்கு வந்த காரியம் நினைவு வந்தது.
தன்னையே கடிந்து கொண்டு, அவளிடம் கூற வேண்டிய விஷயத்தை கூற
தொடங்கினான்.
“இங்க பாரு, நான் ஏற்கனவே வேற ஒரு பொண்ணை விரும்புறேன். வீட்டுல ஒத்துக்கல,
சோ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு நீயா போய் சொல்லிடு பிளீஸ்.
என்னால அவளை தவிர வேற யாரையும் லைஃப் பார்ட்னரா ஏத்துக்க முடியாது”.
“நான் சொன்னது உனக்கு புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன், உங்க வீட்டுல நீ எப்படி
சொல்லணுமோ, அப்படி சொல்லிக் கொண்டு இதை நிறுத்திடு” என்று சொல்லிவிட்டு
அவன் நகர, அவள் முடியாது என்று கூறி அவனை தடுத்தாள்.
“வாட்! ஹே லூசு, நான் வேற ஒருத்தியை விரும்புரேன்னு சொல்லுறேன், அப்போ கூட
உனக்கு புரியலையா?” என்று கொதித்தான்.
“முதல புரியல, ஆனா இப்போ எல்லாம் புரியுது எனக்கு. உங்க வீட்டுல ரொம்ப
நாளைக்கு முன்னாடியே, உங்க கிட்ட என்னை பத்தின விபரம் எல்லாம் சொல்லி
இருக்காங்க தானே” என்று கேட்டான்.
கோபத்தில் இருந்தவன், அவள் எதற்காக கேட்கிறாள் என்று யோசிக்காமல் ஆமாம்
என்றான்.
“அப்போ, நானே உங்களை பிடிக்கல அப்படினு சொல்லுற மாதிரியான சந்தர்ப்பத்தை
நீங்களே உருவாக்கிட்டீங்க அப்படிதானே!” என்று அவள் கேட்ட பின் தான் அவனின்
தவறு புரிந்தது.
அவனின் மௌனமும், அந்த முகபாவனையும் அவனை காட்டிக் கொடுக்கவும், அவள்
இப்பொழுது தெளிவாக ஒரு முடிவு எடுத்தாள்.
“சோ கிரிமினல் psychology படிச்சதுக்கு, கரிமினல் கிட்ட காட்ட வேண்டிய
வேலையை என் கிட்ட காட்டிடீங்க. அப்போ நானும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்,
உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அப்படினு சொல்ல போறேன்” என்று அவள்
கூறவும், அவன் செய்வதறியாமல் திகைத்தான்.
“டைம் முடிஞ்சுது, உங்களை கூட்டிட்டு போக வந்துட்டாங்க, கிளம்புங்க” என்று அவள்
கூறவும், அமைதியாக இருந்தால் அது ஈஸ்வர் இல்லையே.
“ஹ்ம்ம்! நீ இதுக்கு ரொம்ப வருத்தப்படுவ, இவனை ஏன் ஓகே சொன்னோம் அப்படினு நீ
தினமும் வருத்தப்படுவ பாரு” என்று அவன் எச்சரிக்கவும், அவளோ அவனை போடா,
போடா என்பது போல் ஒரு லுக் விட்டாள்.
அங்கே சபையில் இவர்களிடம் மீண்டும் ஒரு முறை, சம்மதமா என்று இருவரிடமும்
கேட்கவும், இருவரும் சம்மதம் என்று பதில் அளித்தனர்.
அங்கேயே, அப்பொழுது பூ வைத்து நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டு, திருமணம்
அடுத்த மாதம் பரிட்சை முடியவும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஈஸ்வர் அங்கு இருந்து கிளம்பும் பொழுது, திரும்பி அவளை பார்த்து முறைக்க, அவளோ
ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக கொடுத்தாள். அதில் அவன் தான் அரண்டு, ஓடி
போனான்.
“ச! என்ன பொண்ணு இவ? வேற பொண்ணை விரும்புறேன் சொல்லியும், எப்படி
இவளால ஒத்துக்க முடிஞ்சது?” என்று பொறுமிக் கொண்டு இருந்தான்.
அவனுக்கு தெரியவில்லை, அவள் வேண்டாம் என்று சொல்லும் மனநிலையில் தான்
இருந்தாள் என்றும், அது இவனின் இன்றைய நடவடிக்கையில் தான் மாறி இருக்கிறது
என்று.
அங்கே புடவையை கலைத்து போட்டுவிட்டு, சுடியை மாற்றியவள் கண்ணீர் வலிய
தலையணையை நனைத்துக் கொண்டு இருந்தாள் ஈஸ்வரி. அவளால், இப்படி ஒரு
சம்பவத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
அங்கே வந்த அவளின் நண்பன் பீட்டர், அவளின் இந்த அழுகையை கண்டு பயந்து
விட்டான். அவ்வளவு எளிதில் அழுக கூடியவள் இல்லை ஈஸ்வரி, இப்பொழுது
அழுகிறாள் என்றால் இதில் விருப்பம் இல்லையோ என்று நினைத்தான்.
“பாப்பு! உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா டா” என்று இப்பொழுது ஒரு
அண்ணனாக கேட்டான்.
“தெரியல அண்ணா” என்ற அவளின் பதிலில் பயந்தே விட்டான். வாயில் இருந்து
எப்பொழுதும் பீட்டர் என்று தான் வரும் அவளுக்கு,
இப்படி அபூர்வமாக அண்ணா என்று அழைத்தால் அவள் எதோ குழப்பத்தில் இருக்கிறாள்
என்றும், இல்லையென்றால் முடியாமல் போகும் சமையம் மட்டும் தான் இப்படி
அழைப்பது. இப்பொழுது அவளின் பிரச்னை என்ன என்று, அவளிடம் கேட்டால்
மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணியவன், சற்று அதட்டலுடன்
அழைத்தான்.
அது வேலை செய்தது, அழுகை தேம்பலாக மாறி அவனை பார்த்து சிறுபிள்ளை போல்
முளித்தாள்.
“இப்போ என்ன பிரச்சினை உனக்கு? சொன்னா தானே தெரியும், சும்மா இப்படி
அழுகாம விஷயம் என்னனு சொல்லு” என்று அதட்டி கேட்டான்.
“அந்த சிதுமூஞ்சி, வேற ஒரு பொண்ணை விரும்புறான் போல. இவங்க வீட்டுல
ஒத்துக்கவே இல்லை, உடனே என்னை பத்தி சொல்லி இருப்பாங்க போல, அதுக்கு
இவன் என்ன செஞ்சான் தெரியுமா?”.
“காலேஜ்ல என்னை எப்போ பார்த்தாலும் முறைசிகிட்டே இருந்தான், அதுவும் நான் உன்
கூட வரும் பொழுது எல்லாம் எதோ தப்பானவளா பார்ப்பான். முதல நான் கண்டுக்கல,
ஆனா அவன் அப்படி செய்ததற்கான ரீசன் தெரியவும், நொந்துட்டேன் டா”.
“நானே இன்னைக்கு எல்லோரும் முன்னாடி நோ சொல்லணும் அப்படினு, அவன்
என்னை அப்படி பார்த்தான்னு சொல்லவும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?
அப்போவே அவனை கொண்ணு போடணும் போல வெறியே வந்தது டா, ஆனா அவன்
அப்படி எல்லாம் சாக கூடாது”.
“பொண்ணுங்க அப்படினா அவனுக்கு அவ்வளவு மட்டமா, அதான் அவன் வேண்டாம்
சொல்லியும் நான் எஸ் சொன்னேன். இனி அவனா, இல்லை நானா அப்படினு
பார்த்திடுறேன்” என்று கூறிய அவளை பார்த்து சிரித்துக் கொண்டான் பீட்டர்.
இது மட்டுமா காரணம், அவனுக்கு தான் தெரியுமே இது மட்டுமே காரணம் இல்லை
என்று. அவனை அவள் கொல்லுவாளா? ஹா ஹா, அவளின் உயிரே அவனாக இருக்க
அவளாவது அவனை கொல்லுவதாவது?.
இனி அந்த ஈஸ்வரை, அந்த கடவுள் ஈசுவரால் கூட காப்பாற்ற முடியாது, ஈஸ்வரியின்
பிடியில் அல்லவா இனி அவன்.
தொடரும்..