Eedilla Istangal – 17.2

தேவாவின் அலுவலகம் 

கீதாவின் பேச்சுகளையே அசை போட்டுக் கொண்டிருந்தான்.

அறைக்குள் இருப்பது, மூச்சு முட்டுவது போல் இருந்தது. எனவே, அறையை விட்டு வெளியே வந்து, நடைக்கூடத்தில் நின்றான். 

அமுதா இப்படிச் சொல்லியிருப்பாளா? என்று பலத்த சந்தேகம் வந்தது. 

ஆனால், அன்னையின் வளர்ப்பில் அவள் மாறியிருப்பாளோ? 

தேடுவோமா?

ஆனால் கீதா சொன்னது போல் ஏதாவது செய்துவிட்டால். இப்படி ஒரு பெயரைச் சம்பாதிக்க எத்தனை வருட உழைப்பு!

இன்னொன்றும் யோசித்தான். 

அமுதாவிற்கு விருப்பம் இருந்தால், தன்னைத் தேடி வருவது ஒன்றும் பெரிய காரியமில்லையே? 

நிறைய பேருக்குத் தன்னைத் தெரியும்! 

அப்படி இருக்கையில், அமுதாவிற்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை. 

கீதா சொல்லியது போல், ஐயாவின் மரணம் அமுதாவை மாற்றிவிட்தோ!

தனிப்பட்ட வாழ்வில், அடுத்து என்ன செய்ய? எனப் புரியாமல் தவித்தான். 

யோசித்து யோசித்து, மனம் அலைபுற்றது! 

அலைபேசியில் அலைந்து கொண்டே வந்தவன்… அதில் தெரிந்ததைப் பார்த்துச் சிரித்தான்.

அடுத்த நொடியே தாராவிற்கு அழைத்தான்.

அவளும், உடனே அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ”

“ஹாய் தேவா… எப்படி இருக்கீங்க?”

“நீங்க எங்க இருக்கீங்க?” என்றவன் குரல் கனமாக இருந்தது. 

“பர்ஸ்ட், கேட்ட கொஸ்டினுக்கு ஆன்ஸர் பண்ணுங்க” 

“நல்லா இல்லைன்னு சொன்னா, என்ன பண்ணப் போறீங்க??” 

“ஹாஸ்பிட்டல் வாங்க தேவா, செக் பண்ணிடலாம்” என்று சிரித்தாள். 

“ப்ச், எங்க இருக்கீங்க தாரா?” 

“இப்பதான சொன்னேன்… ஹாஸ்பிட்டல் வாங்கன்னு. ஸோ ஹாஸ்பிட்டல்தான் இருப்பேன்” என்று மீண்டும் சிரித்தாள். 

“மீட் பண்ணலாமா?”

“இப்பவா? நோ சான்ஸ். ஒரு டெலிவரி கேஸ். ஸோ ஐ ஹேவ் டு பி ஹியர்”

“ஓ ஸாரி! சரி, இப்படியே பேசுங்க”

“ஓகே! பட், அதுவும் டுவென்டி மினிட்ஸ்தான்”

“சரி சரி” என்று அலுத்துக் கொண்டான். 

“தேட்ஸ் குட்”

அக்கணம், “ஹாய், யங் மேன்” என்று சொல்லித் தேவாவின் தோளை தட்டவும், திரும்பினான். 

மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர் நின்றனர்! 

“தாரா, ஒன் மினிட்” என்று அலைபேசியில் சொன்னவன், “என்ன அங்கிள்? இந்த நேரத்தில” என்று எதிரில் இருப்பவரிடம் கேட்டான்.

“நத்திங். இந்த பாக்ஸ் கொடுக்க வந்தோம்”

“ஓ! ஓகே ஆண்ட்டி” என்று சொல்லும் போதே, 

அலைபேசியின் மறுமுனையிலிருந்து, ‘தேவா, தேவா’ என்று அழைக்கும் சத்தம்.

அவர்கள் இருவரும் தேவாவை ஒரு மாதிரி பார்த்தனர். 

“சொல்லுங்க ஆன்ட்டி! வேற எதுவும் சொல்லணுமா?” என்றான் அவர்கள் பார்வையைப் படித்துவிட்டு! 

“ஹே யங் மேன்! ஃபோன் கட் பண்ணிட்டு, எங்ககூட பேசலாமே” 

“ஒன் மினிட் ஆன்ட்டி” என்றவன்… அலைபேசியில் இருந்தவளிடம், “தாரா, ஒரு பைவ் மினிட்ஸ் கழிச்சு உங்ககிட்ட பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டிக்க போனான்.

“இப்போ கட் பண்ணீங்க, அப்புறமா பேசவே மாட்டேன்” என்று மிரட்டினாள்! 

“ப்ச்” என்றவன், அலைபேசியை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். 

மேலும், “பரவால்ல ஆன்ட்டி, நீங்க சொல்லுங்க” என்றதும்… கொடுத்த பெட்டியின் விவரங்கள், பொருட்கள் பட்டியல் பற்றிய விளக்கங்கள் என எல்லாம் சொன்னார். 

சொல்லி முடிந்ததும், பாஸ்கர் தம்பதியினர் விடைபெற்றுச் சென்றனர். 

அப்படிப் போகும் போதே, 

“பாஸ்கர், ஃபோன்ல அந்த டாக்டர் தாராதான?”

“ம்ம்ம், அவளேதான்”

“அந்தப் பொண்ணுக்கு, தேவா ரொம்ப இடம் கொடுக்கிறான். இல்லையா பாஸ்கர்?”

“யெஸ், யு ஆர் கரெக்ட்” என்று சொல்லிக் கொண்டே, இருவரும் சென்றுவிட்டனர்.

மீண்டும் அலைபேசி அலைவரிசையில்… 

தன் அலுவலகத்துக்குள் வந்து, அலைபேசியை எடுத்து செவிக்கு கொடுத்தான்.

“ஹலோ” என்றான். 

“சொல்லுங்க தேவா”

“என்ன சொல்லுங்க?” என்று எடுத்தவுடன் கோபப்பட்டான்.

தாராவிடம் அமைதி.

“ஒருத்தங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்னு தெரியுதுல, அப்புறம் ஏன் இப்படிப் பண்றீங்க?”

“…” 

“அவங்க என்னைப் பத்தி, என்ன நினைப்பாங்க?”

“…” 

“டுவென்டி மினிட்ஸ் சொன்னீங்கள, அதைவிட ஒன் மினிட் எக்ஸ்ட்ரா பேச விடுவீங்களா?” 

“….” 

“ஹலோ பேசுங்க”

“….” 

“தாரா…” 

“…. “

“தாரா, பண்ணது தப்புதான?”

“ம்ம், தப்புதான். ஸோ டசன் டைம்ஸ் ஸாரி” என்றாள் வருத்தத்துடன்! 

“வாட்?? டசன் டைம்ஸ் ஸாரியா?”

“யெஸ்! D ஃபார் தேவா… D ஃபார் டசன்… ஸோ தேவாவுக்கு டசன் டைம்ஸ் ஸாரி” என்றாள் வருத்தத்தை தூரதேசம் அனுப்பிவிட்டு! 

“முடியலை தாரா” என்று நொந்து கொண்டான். 

“அதான் தேவா! அப்பவே சொன்னேன். ஹாஸ்பிட்டல் வாங்கன்னு” என்று நக்கலாகச் சிரித்தாள். 

“ஐ மென்ட், உங்க ஸாரி எக்ஸ்பிளனேஷனுக்கு”

“ஓ, ஓகே கூல்! சாப்டீங்களா யங் மேன்?”

“யங் மேனா??”

“அப்படித்தான அந்த ‘கரெக்ட்’ கபுள்ஸ் உங்களைக் கூப்பிட்டறாங்க” என்று லேசாகச் சிரித்தாள். 

“கரெக்ட் கபுள்ஸா?”

“மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர்” என்று நன்றாகச் சிரித்தாள். 

“திஸ் இஸ் டு மச் தாரா”

மீண்டும் சிரித்தாள். 

“என்னாச்சு உங்களுக்கு?? சும்மா கெக்கபிக்கன்னு சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க”

“கெக்கபிக்க… இது என்ன வேர்டு தேவா? மீனிங் என்ன?” என்று கேட்டு, அதற்கும் சிரித்தாள்.

“என்னைய கிண்டல் பண்றீங்க. கரெக்டா??”

“100 மார்க்ஸ் தேவா… தோ யூ பெயில்டு யங் மேன்” என்று மறுபடியும் சிரித்தாள். 

“நான் ஒரு விஷயம் சொன்னா, உங்க சிரிப்பு அப்படியே ஸ்டாப்பாயிரும்”

“ஓ! அப்படியா? அது என்ன விஷயம்?” என்று மிடுக்காகச் சிரித்தாள். 

“ரெண்டு நாள், நான் ஏன் ஃபோனே பண்ணலை??”

“பிஸியா இருந்திருப்பீங்க, என் நியாபகம் வந்திருக்காது” என்றவள் குரல் அர்த்தம் சொல்லிச் சிரித்தது! 

“இன்னைக்கு ஏன் பண்ணேன்?”

“ஃபிரியா இருந்திருப்பீங்க, நியாபகம் வந்திருக்கும்” என்று விளையாட்டாய் சிரித்தாள். 

“அது எப்படி?”

“என்னைய நியாபகப் படுத்திற பொருள் ஒன்னு…” என்று யோசித்தவள், “பட் நான் கிஃப்ட் எதுவும் கொடுக்கலையே தேவா” என்றாள்.

“நெருங்கிட்டிங்க…”

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று கேட்டு விஷமத்துடன் சிரித்தாள். 

“ஹலோ, ஆன்ஸரை நெருங்கிட்டீங்கன்னு சொன்னேன்”

“ஓகே” என்று யோசித்தவளின் சிரிப்பு சட்டென்று நின்றது. 

“தேவா” என்று அசௌகரியமாக அழைத்தாள்.

“ஐ திங்க் யூ காட் இட்” என்று சிரிக்க ஆரம்பித்தான்.

“தேவா ப்ளீஸ்…”

“என்ன ப்ளீஸ்?” என்று தோரணையாகச் சிரித்தான். 

“ப்ரிட்டி ப்ளீஸ்”

“நான் அதைக் கேட்கலை. எதுக்கு ப்ளீஸ்?” என்று தெளிவு படுத்திச் சிரித்தான். 

தாராவிடம் அமைதி.

“தாரா…” 

“ம்ம்ம்” 

“இப்போதான் உங்க குட் மார்னிங் மெசேஜ் எல்லாம் பார்த்தேன்”

மறுமுனையில் : தாரா கண்களைச் சுருக்கி, ‘அய்யோ’ என்று முணுமுணுத்தாள். 

“எத்தனை மெசேஜஸ்??”

மறுமுனையில் : தாரா தலையில் மெல்லமாக அடித்துக் கொண்டாள். 

“அதுமட்டுமில்லாம… ஒரு மனுசனுக்கு எத்தனை பெட் நேம்?”

“தேவா…” என்று இழுத்தாள். 

“அதுவும் அவ்வளவு….” என்றவன் வார்த்தையை முடிக்கும் முன்னே, 

“தேவா… தேவா… போதும்… போதும்” என்று அவசர மெதுவாகப் பதறினாள். 

தேவா சிரித்தான். 

“அது… நீங்களும் என்னைய லவ் பண்ணுவீங்கன்னு நினைச்சி அனுப்பினது” என்றவள் குரலில் அசடு வழிந்தது! 

மீண்டும் சிரித்தான்.

“தேவா ப்ளீஸ்… டெலிட் பண்ணீடுங்க”

“ச்சே ச்சே… நல்லாத்தான் இருக்கு. இருந்துட்டு போகட்டும்” என்று நய்யாண்டிச் சிரிப்பு சிரித்தான். 

“ப்ளீஸ் டெலிட் பண்ணுங்க”

“ஓகே, ஒன் டீல் ஃபார் டெலிட்” என்று பேரமாகச் சிரித்தான். 

“என்ன டீல்?”

“இப்போல்லாம் ஏன் மெசேஜ் அனுப்புறதில்லை??”

“டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொன்னீங்கள. அதான்” என்று விளக்கம் சொன்னாள்.

“ஓ! எத்திக்…”

“ய்யா.. ய்யா. ஜ நோ… ” என்று ஆரம்பித்தவளிடம்,

“வாட்…?? வாட்.??” என்றான் புருவங்கள் உயர! 

“நான் எதுவுமே பேசலை. நீங்களே சொல்லுங்க” 

“இனிமே டெய்லி மார்னிங் மெசேஜ் அனுப்புங்க”

“நீங்க ரீட் பண்ணுவீங்களா?” 

“ம்ம்ம். பட், ஜஸ்ட் குட் மார்னிங் மெசேஜ். இந்த பெட் நேமெல்லாம் வேண்டாம்”

“ஓகே யங் மேன்”

“இப்போதான சொன்னேன்” என்று சலித்துக் கொண்டான். 

“இது நான் வைக்கலை. உங்க வெல் விஸ்ஸர் வச்சது”

“தாரா…”

“சரி, அதை விடுங்க… எதுக்கு மீட் பண்ணனும்னு கேட்டீங்க?”

“மறந்திருந்தேன்! நியாபகப் படுத்திறீங்க” என்றவன் குரலில் இயலாமை இருந்தது. 

“என்ன நியாபகம்?”

“நவ், ஐ டு நோ தி பெயின் ஆஃப் பெயிலியர்” என்றான் வருத்தத்துடன்! 

“அபௌட் யூவர் லவ்”

“ம்ம்ம்” 

“என்னாச்சு தேவா?”

“அவங்களுக்கு விருப்பமில்லை” 

“ஏன் தேவா?”

“அது எதுக்கு? டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

சிரித்துவிட்டாள்.

“ஏன் சிரிக்கிறீங்க?” 

“ஸாரி”

“எதுக்குச் சிரிச்சீங்க??” என்றவன் குரல் கடினப்பட்டிருந்தது. 

“யூஸ்வலா நீங்கதான் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்வீங்க. இப்போ, உங்களைச் சொல்றதுக்கும்.. ஒருத்தர் இருக்காங்களே? அதான்… ” என்றாள் தயக்கத்துடன்! 

சட்டென தேவா சிரித்துவிட்டான். 

“சிரிக்கிறீங்களா தேவா??” 

“ஆமா சிரிக்கிறேன்” என்று சிரித்தான். 

“பர்ஸ்ட்லே நான் நோட் பண்ணேன், வாய்ஸ் டல்லா இருக்குன்னு. இதான் ரீஸனா?”

“ம்ம்ம்”

“பட், அதனால்தான் இப்படி ரியாக்ட் பண்றீங்களோ?”

“புரியலை தாரா”

“லவ் பெயிலியர் ஆனதாலதான்… என்னோட வாட்ஸப் மெசேஜ் பார்க்கிறது… மெசேஜ் அனுப்பச் சொல்றது…” என்று அவள் முடிக்கும் முன்னே, 

“வாட் எ மென்டாலிட்டி தாரா? இனிமே என்கிட்ட பேசணும்னு நினைக்காதீங்க” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

மருத்துவமனை 

சட்டென அழைப்பு துண்டிக்கப் படவும்தான்… என்னாயிற்று? என்று தான் பேசியதை ஓட்டிப் பார்த்தாள்.

‘தாரா யூ ஸ்டுபிட்” என்று தன்னைத் திட்டிக் கொண்டே திரும்பவும் அலைபேசியில் தேவாவை அழைத்தாள்.

அவன் எடுக்கவில்லை.

மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தாள்.

அவன் எடுக்கவேயில்லை.

?

தன்னுள், அழகாய் நேரச் செலவிடல்களை நிரப்பிக் கொண்டிருந்த வேளையில், இது என்ன ‘அன்வான்ட்டடாய்’ ஓர் நிறுத்தம்! – காதல் உண்டியல் feeling angry with தாரா!!