Eedilla Istangal – 18.1

Eedilla Istangal – 18.1

அதன்பின், தாராவிற்கு இருந்த பணிச் சூழலில் தேவாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. 

மேலும், தன் அழைப்பை ஏற்காததால் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று புரிந்தது. 

எனவே, அதற்கு அடுத்தடுத்து நாட்களிலும் தாரா அழைக்கவில்லை.

?நாட்காட்டியில் ஒரு பதினைந்து நாட்களாய், தன்னை நிரப்பிக் கொள்ள நேரச் செலவிடல்கள் ஏதுமின்றி இருந்தது! – காதல் உண்டியல் feeling sad with தேவா and தாரா!!?

பதினைந்து நாட்களுக்குப் பின்… 

சார்பதிவாளர் அலுவலகம்

அன்று சாருவும், பாபியும் தங்களது வாழ்க்கைப் பயணத்தை துவக்கும் நாள்.

ஆதலால், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். 

சாருவின், மாமியார் மாமானார் வீட்டு ஆட்கள் நிறைய பேர் வந்திருந்தனர். 

மற்றும் தோழி தாராவும்!

ஆதுபோல், பாபியின் பக்கமா… அவன் அப்பா மற்றும் ஒன்றிரண்டு வழக்கறிஞர்கள்.  

மற்றும் நண்பன் தேவாவும்! 

மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கரும் வந்திருந்தனர்.

ஹேமாவின் உடல் நிலையில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களால், அவளால் வர இயலவில்லை.

தேவாவின் அண்ணன், அண்ணி அவளுக்குத் துணையிருந்தனர். எனவே அவர்களும் வரவில்லை. 

தேவாவும் தாராவும் பார்த்துக் கொண்டனர், ஆனால் பேசவில்லை. 

பாபியும் சாருவும் தங்களது முறை வரும் வரைக் காத்திருந்து, உள்ளே நுழைந்தனர். 

சில பல விதிமுறைகள் நடந்தேறிய பின்பு, பாபியும் சாருவும் கையெழுத்து இட்டுக் கைப்பிடித்துக் கொண்டனர்.

சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்து, சாரு புன்னகைத்தாள். பின் கண்களில் லேசாக நீர் சுரக்கப் பாபியைப் பார்த்தாள். 

‘நோ டியர்ஸ்’ என்று சாருவிற்கு மட்டும் கேட்கும்படி பாபி சொன்னான். 

“ரிங் எக்ஸ்சேஞ் பண்ணு பாபி” என்று சொல்லி, தேவா இருவருக்கான மோதிரங்களை எடுத்துக் கொடுத்தான். 

எதிரெதிரே இருவரும் நின்று கொண்டனர்.

ஒருமுறை நேசத்துடன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டனர்.

ஒரு நொடி கண்களால் பேசிக் கொண்டனர். 

முதலில் சாருவின் விரல் பிடித்து, பாபி மோதிரம் அணிவித்தான். பின் சாருவிடமிருந்து மாலியை வாங்கிக் கொண்டான். அதன்பிறகு, சாரு பாபிக்கு மோதிரம் அணிவித்தாள். 

சுற்றிலும் நின்றவர்கள் கரகோஷம் செய்து, அவர்கள் கரம்பிடித்த நிகழ்வைக் கொண்டாடினர். 

அக்கணம், “தாரா” என்றான் பாபி, 

எல்லாரும் ‘எதற்கு?’ என்று யோசிக்கையில், “ஒன் மினிட் பாபி” என்று சிரித்துக் கொண்டே, தன் டோட் பையிலிருந்து பரிசுத்தாள் சுற்றப்பட்ட ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

பாபி அதை வாங்கி, “இந்தா, ஒரு சின்ன கிஃப்ட்” என்று சாருவிடம் கொடுத்தான்.

“என்னது?” என்று வாங்கிக் கொள்ளாமலே கேட்டாள். 

“சாரு, வாங்கிப் பிரிச்சுப் பாரு” என்று பல குரல்கள்.

சாருவும், அதை வாங்கிப் பிரித்தாள்.

அந்தப் பரிசைப் பார்த்ததும், “பாபி” என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, அவனைப் பார்த்தாள்.

அவளின் ஆசையான படிப்பிற்கான விண்ணப்பம். 

சந்தோஷத்தில், “நீ கூட சொல்லலை” என்று தாராவிடம் செல்லமாகக் கோபம் காட்டினாள். 

“இட்ஸ் எ சர்ப்ரைஸ் சாரு அன்ட் ப்ரிப்பேர் ஃபார் என்ட்ரன்ஸ்” என்றாள் தாரா சிரித்தபடியே! 

மீண்டும் சாரு பாபியைப் பார்த்தாள். 

பாபி, லேசாக சாருவை அணைத்து, எவருக்கும் உறுத்தல் இல்லாமல், அவள் நெற்றியில் ஓர் உதடு அழுத்தம் தந்தான். 

பின், எல்லா உரிமையுடன் மாலிக்கு ஒரு முத்தம் தந்தான்.  

சூழ்ந்திருந்தோர் முகங்களில் ஒரு நிறைவான புன்னகை. முக்கியமாக சாருவின் மாமியார், மாமனார் முகத்தில்! 

அதன் பின்னர், அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.

வானம் லேசாகத் தூறல் சிந்திக் கொண்டிருந்தது. 

வந்தவர்கள் அங்கங்கே குடைப் பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர். சிலர் விடைபெற்றுச் சென்றிருந்தனர். 

உறவுகளுக்கு வழிவிட்டு, நண்பர்கள் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டனர். 

அதாவது தாராவும் தேவாவும், தனியே நின்றிருந்தனர்!!

இருவருமே ஆளுக்கொரு ஒரு திசையில் நின்று கொண்டிருந்தனர். 

அன்று அடர் சாம்பல் நிறப் புடவை, அதற்கு ஏற்றார் போல அடர் சிவப்பு வர்ண சட்டை அணிந்திருந்தாள். அடர்சிவப்பு நிறத்தில் குதி உயர் காலனி.  

காதல் சொல்ல நினைத்த நாளில் அணிந்த அதே உடை! மேலும், இன்று கூடுதலாக ஒரு குடை!! 

‘ஏன் பேசவில்லை?’ எனத் தேவாவிடம் கேட்க வேண்டும் என்று, அவனை நோக்கி முன்னேறி நடந்து வந்தாள். 

பாதித் தூரத்தைக் கடந்து வருகையில், தரையின் ஈரத்தால் தாராவின் கால் இடறியது. 

“ஸ்ஸ்” என்று சொல்லி நின்றுவிட்டாள். 

மீதித் தூரத்தை வேகமாகக் கடந்து வந்தவன், “என்னாச்சு தாரா?” என்று கேட்டான். 

“நீங்க பேசிட்டிங்க” என்று சொல்லிக் கொண்டே, தன் ஹீல்ஸைக் கழட்டினாள்.

“என்னாச்சு?” என்றான் மறுமுறையும்! 

“ஜஸ்ட் எ ஸ்லிப்” என்றாள் ஒரு கையில் குடையைப் பிடித்துக் கொண்டு, குனிந்து குதிங்காலை நீவி விட்டுக் கொண்டே!

“பெயின் இருக்கா?”

“ம்ம்ம், லைட்டா” என்றாள், நிமிர்ந்து நேராக நின்று!

“சரி, குடையைக் கொடுங்க… நான் வச்சிருக்கேன்” என்று வாங்கிக் கொண்டான்.

இருவரும் ஒரு குடைக்குள்!

காதல் நிலையாலல்ல! காலநிலையால்!! 

அவனின் அருகாமை…

அருகாமை தரும் ஆனந்தம்…

ஆனந்தம் தரும் அமைதி…

அந்த அமைதியில், தன் அன்பைத் தாழிட்டு அடைத்து வைப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் போல் இருந்தது, தாராவிற்கு!

எனவே பேச்சை ஆரம்பித்தாள்,

“அன்னைக்குத் திருப்பி கால் பண்ணறப்ப, ஏன் ஃபோன் அட்டன் பண்ணலை?”

“நீங்க அப்படிக் கேட்டது பிடிக்கலை”

“எனக்கு அப்படித் தோணுச்சு. ஸோ கேட்டேன். அதுல என்ன பிடிக்கலை?”

“தாரா கூடப் பேசுறதுக்கு, வேற யார்கூடவும் இருக்கிற பிரச்சனை ரீஸனா இருக்காது”

“புரியலை” 

“அன்னைக்கு உங்க வாட்ஸ்அப் மெசேஜ் பார்க்கணும்னு பார்க்கலை. தற்செயலா பார்த்தேன். அன்ட் பேசறப்போ நீங்களும் ஜாலியா பேசினீங்க, ஸோ நானும்…”

“ஓ! ஜஸ்டிபிகேஷன்?”

 

“இட்ஸ் நாட் ஜஸ்டிபிகேஷன், ஜஸ்ட் மை கிளாரிஃபிகேஷன்”

“அதான் எதுக்கு?”

“எதுக்கு-னா?? நான் என்னோட லவ் பெயிலியர் மறந்து பேசிக்கிட்டு இருந்தேன். ஆக்சுவலா அதை நானே மென்ஷனும் பண்ணியிருந்தேன்” 

“…. “

“அப்படியிருக்கிறப்போ, அந்தப் பொண்ணு இல்லைன்னுதான், உங்ககிட்டப் பேசுறதா சொன்னா! எப்படி இருக்கும்??” என்று கேள்வி கேட்டான். 

அமைதியாக நின்றாள். 

“நான் உங்ககூடப் பேசிறப்போ, என் மனசில என்ன தோணுதோ அதைத்தான் பேசியிருக்கேன்”

“…. “

“அது… பர்ஸ்ட் டே ஆர்க்கியூமென்ட்… ப்ரோபோசல் டே-ல நோ சொன்னது… அதுக்கப்புறம் ஸாரி கேட்டது… மால்-ல பேசினது. ஃபோன்-ல ஃபன் டாக்… எல்லாமே”

“….” 

“வேற யார் கூடயோ இருக்கிற ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் வச்சி… தாராகூட பேசவும் மாட்டேன், எந்த ரிலேஷனும் ஸ்டார்ட் பண்ண மாட்டேன்”

“ஏன் அப்படி?” என்று தன்னை அறியாமல் கேட்டாள். 

“ஏன்னா?! தாரா எனக்கு அப்படிப்பட்ட ஒரு பொண்ணா தெரியிறாங்க” என்று அவளை அறிந்து சொன்னான். 

“நான், தேவாவைச் சரியா புரிஞ்சிக்கலையோன்னு தோணுது”

“எனக்கு அப்படித் தோணலை”

“ஃபோன்ல பேசுற மாதிரியே பேசலாமா? இது ஒரு மாதிரி இருக்கு தேவா” என்றாள், எதையோ மறைக்க பிரயத்தனம் படுவது போன்ற குரலில்!

அவளின் பிரயத்தனம் அவனுக்குப் புரிந்தது. 

இரண்டு மூன்று நிமிடங்கள் அமைதியாக கழிந்த பின், அவளது ஹீல்ஸைக் காட்டி, “மாட்டிக்கோங்க” என்றான். 

தூறல் வலுத்திருந்தது.

லேசாகப் புடவையைத் தூக்கி, மண் ஓட்டியிருந்த பாதத்தை, மழையில் காட்டிச் சுத்தம் செய்து கொண்டாள்.

ஹீல்ஸை திரும்பப் போடும்போது, நிலை தடுமாறினாள். ஆதாரமாகப் பிடித்துக்கொள்ள, அவனை நோக்கி அவளது கரம் சென்றது. 

அடுத்த நிமிடமே ஒரு தயக்கம் வந்து, அவள் கரத்திற்கு முன் நின்றது. 

ஆதலால், “டூ யூ மைன்ட்?” என்று தேவாவிடம் கேட்டாள்.

கொஞ்சமும் யோசிக்காமல், “நெவர் மைன்ட்” என்றான்.

அவனைப் பிடித்துக் கொண்டு, ஹீல்ஸை மாட்டினாள்.

“எதுக்கு இவ்ளோ பெரிய ஹீல்?”

அவன் அப்படிக் கேட்டதும், “வெயிட் எ செகன்ட்” என்று சொல்லி, இரண்டு ஹீல்ஸையும் நன்றாக மாட்டினாள். 

அடுத்து, இரு விரல்களால் தன் கண்களைக் சுட்டிக் காட்டினாள். பின், அதே இரு விரல்களால், அவன் கண்களைக் சுட்டிக் காட்டி, “உங்க கண்ணைப் பார்த்துப் பேச” என்றாள். 

தேவா சிரித்தான். 

அவன் பிடித்திருந்த குடையின் அடியில் நின்று… அவனைப் பிடித்திருக்கும் கரத்தை எடுக்காமல்… அவளும் சிரித்தாள். 

அக்கணம் இரண்டு விடயங்கள் நடந்தன! 

ஒன்று

மிஸஸ் பாஸ்கர் இதைப் பார்த்தார்.

“பாஸ்கர், அங்க பாருங்க” என்று தேவா மற்றும் தாரா நிற்கும் இடத்தைக் காட்டினார்.

மிஸ்டர் பாஸ்கரும், அதைப் பார்த்து ஆச்சிரியப்பட்டார்.

“தேவாவுக்கு, அந்தப் பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்கு. இல்லையா பாஸ்கர்?”

“யெஸ், யூ ஆர் கரெக்ட்” என்று சொல்லியபடி குடையைப் பிடித்த வண்ணம், இருவரும் நடக்க ஆரம்பித்தனர். 

******

இரண்டாவது 

திருமணம் முடிந்த தம்பதியினர்… மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாபி…

முக்கால்வாசி பேர் வாழ்த்துச் சொல்லி, விடைபெற்றுச் சென்றிருந்த பின்னரே, சாருவும் பாபியும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். 

அந்த நேரத்தில்தான், தாரா தேவா நின்று கொண்டிருந்த தோற்றம் சாருவின் கண்களில் விழுந்தது. 

“ஐயோ, என்ன பாபி நடக்குது?” என்றாள் பதறியடித்து! 

பாபியும் பார்த்தான்! 

“நீ ஏன்-ம்மா, அவங்களையே பார்க்கிற?” என்றான் பதற்றமே இல்லாமல்! 

“என்ன இப்படிச் சொல்ற? இதெல்லாம் தப்பில்லையா??” என்று படபடத்தாள்! 

“எனக்கென்னமோ இதுதான் சரின்னு தோணுது” என்றான் பட்டும் படாமல்! 

அவன் சொன்ன விதத்தைக் கேட்டு, “இது எங்க போய் முடியப் போகுதோ?” என்று புலம்ப ஆரம்பித்தாள். 

“இதுதான் ஆரம்பம்” என்று பாபி சொன்னதும், 

அவனை முறைத்துப் பார்த்தாள்.

“நமக்குந்தான்” என்று சொன்னதும், 

அவளின் முறைப்படி விட்டுவிட்டு, முறுவலைக் காட்டினாள்.

அவனும் முறுவலித்தான். 

சாருவின் ஒரு கையில் பெரிய குடை, மறுகையால் பாபியைப் பிடித்திருந்த விதம், பாபியின் தோளில் மாலி… 

பார்க்க ரசனைக்குரியதாக இருந்தது! 

*****

உறவினர்களுடன் சற்று நேரம் இருக்க, சாருவின் மாமியார் மாமானார் வீட்டிற்குப் பாபியை அழைத்தனர்.

அவனும் சரியென்றிருந்தான். அதன்படி கிளம்ப ஆரம்பித்தனர்.

பாபி கிளம்பும் முன், தேவாவின் அருகில் வந்து, “நீயும் வர்றியா?” என்று கேட்டான். 

“ம்கூம், இது உன்னோட டைம். ஜஸ்ட் என்ஜாய்”

“ம்ம்”

“அப்பா வர்றாங்களா?”

“ஆமா, சாரு வரணும்னு சொல்லிட்டா”

“சரி கிளம்பு, வீக்கென்ட்ல நானும் அக்காவும் வீட்டுக்கு வர்றோம்”

“ம்ம்ம் சரி” என்று இருவரும் விடைபெற்றுக் கொண்டனர். 

இதே போல் சாருவும் தாராவிடம் விடைபெற்றுக் கொண்டாள்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் சென்ற பின், மீண்டும் தாராவும், தேவாவும் தனித்து நின்றனர்.

தேவா, தாரா அருகில் வந்தான்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!