Eedilla Istangal – 5

Eedilla Istangal – 5

ஹேமாவும், பாபியும் மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

ஏன்?

ஹேமா, தாராவிடம் பரிசோதனைக்கு வந்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க மீண்டும் மருத்துவமனை வந்திருந்தாள்.

இன்று தேவா வர இயலவில்லை. ஆதலால் பாபி அழைத்து வந்திருந்தான்.

தேவாவின் அண்ணன், அண்ணி இருவரும் அலுவலகம் செல்பவர்கள். ‘வார இறுதியில் கூட்டிச் செல்கிறேன்’ என்று தேவாவின் அண்ணி சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் ஹேமாவிற்கு குழந்தையின் நிலை பற்றித் தெரிந்தே ஆகவேண்டும் என்றிருந்தது. எனவே பாபியைக் கூடக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள்.

அவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு, ஐந்தாவது தளம் வந்த நேரம் 3:30. நடைக்கூடம் முழுதும் வெறிச்சோடி இருந்தது. அங்கிருந்த செவிலியரிடம் கேட்ட போது, மாலை 5:30 வரைக் காத்திருக்க வேண்டும் என்றிருந்தார்.

ஆதலால் காத்திருக்கின்றனர்.

ஹேமா, பாபி இருவருக்கும் ஒரே வயதுதான். நண்பர்கள் போல இருவரும் பேசிக் கொள்வார்கள்.

பேச்சு தொடர்கிறது,

“ஏன் ஹேமா, தேவாவை நீ வீட்டுக்குக் கூப்பிட்டியா??”

“கூப்பிட்டேன்… ஆனா வர மாட்டேன்னு சொல்லிட்டான். நீ கொஞ்சம் சொல்லிப் பாரேன்”

“நானா?? இதெல்லாம் அவன் விருப்பப்படி விட்டுடு”

“அதுவும் சரிதான். ஆனா நான் திரும்பிப் போறதுக்கு முன்னாடி, தேவாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்”

“ஆல் தே பெஸ்ட்”

“என்ன இப்படிச் சொல்ற??”

“வேற என்ன சொல்ல??”

“சரி, அதை விடு. நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற??”

“அடுத்து நானா??”

“சொல்லு பாபி”

“உன் தம்பி மாதிரி எனக்கு எந்த பிரின்ஸ்பிளும் கிடையாது. எனக்கேத்த பொண்ணுக்காக வெயிட்டிங்”

“ரொம்ப வெயிட் பண்ணிட்ட போல” என்று சிரித்தாள்.

‘ஏன் இப்படி??’ என்பது போல் பாபி பார்த்தான்.

இப்படியே இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சாரு இவர்களைக் கடந்து சென்றாள்.

கடந்து சென்றவளைப் பார்த்தவன், அதன்பின் வேறு புறம் கண்களைக் கடத்தவில்லை.

பார்த்ததும் ஏதோ ஓர் ஈர்ப்பு பாபிக்குள்!

பாபியின் முகத்தைத் திருப்பி, “ஏன் பாபி? உனக்கேத்த பொண்ணு இப்படித்தான் இருக்கணுமா?” என்று கேட்டாள்.

“ச்சே ச்சே… அப்படியெல்லாம் இல்லை. இந்தப் பொண்ணாகூட இருக்கலாம்”

“பாபி…” என்று ஹேமா ஏதோ சொல்லப் போகும் போது ஒரு செவிலியர் வந்து நின்றார்.

சாருவைப் காட்டி, “அவங்களும் gynecologistதான்… வேணும்னா அவங்ககிட்ட கேட்டுப் பாருங்க” என்றார்.

“தேங்க்ஸ் சிஸ்டர்” என்று சொல்லி, ஹேமா எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

பாபியும் கூடச் சென்றான்.

சாருவை நெருங்கியதும்…

“டாக்டர்” என்று ஹேமா அழைத்தாள்.

“யெஸ்” என்று திரும்பினாள்.

திரும்பியதும், அவள் கண்களில் விழுந்தது, புன்னகையுடன் நின்ற பாபிதான்.

ஆனால் அந்தப் புன்னகையைப் புறந்தள்ளிவிட்டு, “சொல்லுங்க” என்றாள்.

“டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட் இப்போதான் கிடைச்சது. அதை… ”

“வெயிட் வெயிட்… பர்ஸ்ட் எந்த டாக்டர்?? என்ன ஸ்கேன்?”

“டாக்டர் தாரா. அவங்ககிட்ட இந்த ரிப்போர்ட்ஸ காட்டணும்”

“ஓ! பட் அவங்க இன்னைக்கு வர மாட்டாங்க”

“இப்போ என்ன செய்ய டாக்டர்?”

“நீக்க போயிட்டு நாளைக்கு வாங்க. இல்ல, இன்னைக்கே பார்க்கணும்னா, 5:30 வரைக்கும் வெயிட் பண்ணனும்”

“நீங்க செக் பண்ணிச் சொல்ல முடியுமா??”

“ஸாரி. இது விசிட்டிங் ஹவர் கிடையாது. எதுனாலும் ஆப்டர் 5:30தான்”

ஹேமா முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம்.

“விடு ஹேமா… நாளைக்கு தேவாவோட வந்து பார்த்துக்கோ” என்று பாபி சொன்னதுதான் தாமதம்,

“நீங்க தேவாவோட சிஸ்டரா??” என்று ஆச்சரியம் நிறைந்த குரலில் சாரு கேட்டாள்.

“ஆமா டாக்டர்”

“ரிப்போர்ட் கொடுங்க” என்று சாரு கேட்டவுடன், ஹேமாவும் கொடுத்தாள்.

அதைப் பார்த்துவிட்டு, “பேபி நார்மல்தான். பட் விட்டமின் டேப்ளெட்ஸ் எழுதுறேன். அதை பாலோவ் பண்ணுங்க” என்று ஹேமாவின் மருத்துவமனை கோப்பில் இருந்த மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்தாள்.

“ஓகே டாக்டர்”

“டுவெண்ட்டி டேய்ஸ்க்கு அப்புறமா நெக்ஸ்ட் செக்-அப்க்கு வாங்க”

“தேங்க்ஸ் டாக்டர்”

ஒரு சிறு தலையசைப்புடன், சாரு விடைபெற்றுக் கொண்டாள்.

பாபி, அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

இதற்கிடையே ஹேமாவின் கணவன் அலைபேசியில் அழைத்திருக்க, “பாபி, ஒரு நிமிஷம். அவர்கிட்ட பேசிட்டு கிளம்பலாம்” என மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“ஹேமா… நானும் ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, சாருவை நோக்கி பாபி வேகமாக நடந்தான்.

அருகில் சென்றதும், “எக்ஸ்க்யூஸ் மீ” என்று அழைத்தான்.

குரல் கேட்டு நின்றவள், “என்ன??” என்று சற்று அசட்டையாகக் கேட்டாள்.

“தேவாவை எப்படித் தெரியும்??”

“ப்ரண்ட்டோட ப்ரண்ட். ஸோ எனக்கும் ப்ரண்ட்” என்று சொல்லி, மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

“சூப்பர்! நான் தேவாவோட ப்ரண்ட்”

“ஓ!”

“என் ப்ரண்டோட ப்ரண்ட் எனக்கும் ப்ரண்ட்” என்று கை குலுக்க, கரம் நீட்டினான்.

சாரு நின்றுவிட்டாள்.

“என்ன வேணும் உனக்கு? செக்யூரிட்டிய கூப்பிடவா??” என்றவளின் குரல் கொஞ்சம் உயர்ந்தது.

அந்த நேரத்தில், அவ்வழியே சென்ற வார்டு பாய், “டாக்டர் ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டு நின்றான்.

ஒரு நிமிடம், மூன்று பேரும் மாற்றி மாற்றி ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்த வண்ணம் நின்றனர்.

“நீங்க போங்க… நான் பார்த்துக்கிறேன்” என்று சாரு சொன்ன பின்தான், வார்டு பாய் அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பாபியிடம், “என்ன பயந்திட்டியா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“பயமா?? எனக்கா?? நான் ரொம்ப ஸ்மூத்தா மூவ் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா நீ… சரி அதை விடு. பார்த்ததும் எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அதைச் சொல்லத்தான் வந்தேன். வேற ஒண்ணுமில்லை” என்று சட்டென்று மனதில் நினைத்ததைச் சொன்னான்.

ஒரு நொடிக்குக்கும் குறைவான அளவு நேரத்தில் சாருவின் கண்கள் கலங்கின.

அதைப் பாபியின் கண்கள் கவனிக்கத் தவறின.

அடுத்த நொடியில் சுதாரித்துக் கொண்டு, “உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்?? இப்படியெல்லாம் பேசிக்கிட்டிருந்த, போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்” என்றாள் அடர்த்தியான கோபத்துடன்.

“போலீஸா?? நானே ஒரு லாயர்”

“நீ யாரா வேணா இருந்துட்டு போ. ஆனா இது ஹாஸ்பிட்டல். இங்க உன் சட்டம் செல்லாது”

“செம்ம டயலாக். லாயர் நானா? நீயான்னு? சந்தேகம் வருது”

“ச்சே. உன்கிட்ட பேசிப் பிரயோஜனம் இல்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

‘இது என்ன புது தலைவலி?’ என்று எரிச்சல் பட்டுக் கொண்டே, அவளது அறைக்குள் நுழைந்தாள்.

பின்னேயே பாபியும் வந்திருந்தான்.

அவளது அறைக் கதவில் கண்களைப் படரவிட்டான். ‘சாருலதா’ என்று எழுதியிருந்ததை வாசித்துக் கொண்டான்.

மீண்டும் ஹேமா இருக்கும் இடம் நோக்கி வந்தான்.

இன்னும் அவள் கணவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். பாபி காத்திருந்தான்.

அவள் பேசி முடித்ததும்…

“லேட்டாயிடுச்சா பாபி??”

“ம்ம்ம். சரி வா, உன்னை வீட்ல விட்டுட்டு கோர்ட் போறேன்” என்று ஹேமாவை அழைத்துச் சென்றான்.

சொன்னது போல், தன் காரில் ஹேமாவைக் கூட்டிச் சென்று, வீட்டில் விட்டுவிட்டு நீதிமன்றம் சென்றான், பாபி.

****

அடுத்த நாள் காலை….

ராஜசேகர் வீடு…

சரத்தும், தாராவும் காலை உணவை எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பின், சமயலறையிலிருந்து கிரேப் ஜூஸை எடுத்து வந்து, கீதா மேசையில் வைத்தார்.

அதுவரை எதுவும் பேசாமல் இருந்தவன், “அம்மா… இதை அவகிட்ட காட்டுங்க” என்று தன் அலைபேசியைக் கீதாவிடம் தந்தான்.

“என்னடா இது??”

“ஒரு அலையன்ஸ். அவளைப் பார்த்திட்டுச் சொல்லச் சொல்லுங்க”

அலைபேசியில் இருந்த பையனின் புகைப்படத்தை, கீதா தாராவிடம் காண்பித்தார்.

ஒருமுறை கண் பார்வையை அலைபேசிக்கு கொண்டு சென்று, பின், “பிடிக்கலை” என்றாள்.

“தாரா… ஒழுங்கா பார்த்துச் சொல்லு”

“ம்மா, நல்லா பார்த்துதான் சொன்னேன்” என்றவள், கிரேப் ஜூஸை எடுத்து டோட் பேக்கில் வைத்துக் கொண்டு, “பை ம்மா” எனச் சொல்லிக் கிளம்பிவிட்டாள்.

‘என்னடா?’ என்பது போல் சரத்தைப் பார்த்தார்.

“விடுங்கம்மா”

“எப்படி விடச் சொல்ற??”

“ம்மா… இதுவரைக்கும் வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் எதுவும் சொல்லியிருக்காளா??”

“இல்லை”

“ஆனா… ஏதோ காரணம் இருக்கு”

“என்னடா சொல்ற?” என்று கலக்கத்துடன் கேட்டுக்கொண்டே, அவன் அருகில் வந்து நின்றார்.

“ம்மா… இனிமே போட்டோ காட்ட வேண்டாம். ஏன் யாரையும் பிடிக்கலைன்னு காரணம் கண்டுபிடிக்கணும்”

“போட்டோ வேண்டாமா? அப்போ கல்யாணம்?? இவளை நினைச்சா பயமா இருக்குடா” என்றவர் முகத்தில் கலக்கம் அதிகரித்தது.

“ம்மா, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க நிம்மதியா இருங்க. அது போதும் எனக்கு” என்று சிரித்தான்.

அவன் பார்த்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கையுடன் கீதாவின் முகத்திலும் லேசாக நிம்மதி வந்தது.

*****

த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலின் வரிகளுடன் பயணம் செய்தபடியே, மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தாள்.

இன்று மின்தூக்கியின் அருகே சாருவைச் சந்தித்தாள்.

“ஹேப்பி மார்னிங் சாரு”

“மார்னிங்”

“வாட் ஸ்பெஷல்??”

“நத்திங்” என்றவள், “தாரா, நேத்து ஹேமா வந்திருந்தாங்க” என்றாள்.

“ரிப்போர்ட் பார்த்தியா?”

“ஸ்கேன், பிளட் ரெண்டும் பார்த்தேன். நார்மல்தான். பட் விட்டமின் டிபிஸியன்சி. ஸோ டேப்ளெட்ஸ் பிரஸ்கிரைப் பண்ணியிருக்கேன்”

“ஓ! தேட்ஸ் பைன்”

“ஆனா நேத்து தேவா வரலை. வேற ஒருத்தன் வந்திருந்தான்”

“யாரு?”

“லாயர்னு சொன்னான். பேரு கேட்கலை”

“ம்ம்ம்! அப்போ அது பாபி. பர்ஸ்ட் டே என்கிட்ட பேசியிருக்காரு”

ஐந்தாவது தளம் வந்திருந்தது. இருவரும் நடைகூடத்தில் நடந்து கொண்டே, பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“என்ன பேரோ?? அவனைப் பார்த்தாலே பிடிக்கலை. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை. ஒரு டாக்டர்கிட்ட… ஒரு பொண்ணுகிட்ட எப்படிப் பேசணும்னு தெரியலை. அவன் இஷ்டத்துக்கு பேசறான். இவனெல்லாம் எப்படித்தான் லாயரோ??” என்று நேற்றைய கோபம் சற்றும் குறையாமல் பேசினாள்.

“அப்படி என்ன பேசினாரு??”

ஏனோ சாருவின் லேசான ஒப்பனை செய்த முகத்தில் குப்பென வியர்வைத் துளிகள் அரும்பின.

“அது எதுக்கு? இட்ஸ் டுயூட்டி டைம்” என்று சொல்லி, சாரு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

தன் முன்னே செல்லும் சாருவை ‘என்னாச்சு இவளுக்கு??’ என்ற அர்த்தங்கள் கொண்ட பார்வை பார்த்துக் கொண்டே, தாரா நடந்தாள்.

*****

அடுத்த நாள் விடிந்தும் விடியாத காலை…

பாதி இயற்கை வெளிச்சம், பாதி செயற்கை வெளிச்சம் என்று சென்னை மாநகரத்தின் காலை வேலை சாலை.

நிலவின் குளிரை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பூமிப்பரப்பு. அதன் மேல் ஒரு சிலர் மட்டும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சாலையின் இருபுறமும் துப்பரவு தொழிலார்கள் தூய்மை செய்யும் பணியைச் செய்து கொண்டிருந்தனர்.

அதிகாலை 3:00 மணிக்கு ஒரு சிக்கலான பிரசவக் கேஸை முடித்துவிட்டு, தாரா வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள்.

காரின் சன்னலின் வழியே நடைபாதையை பார்த்துக் கொண்டே வந்தாள்.

சட்டென கண்களின் கருமணிக்குள் காதலிப்பவன் விழுந்தான்.

ஆம்! தேவா சாலையில் எதிர்புற நடைபாதையில் அமர்ந்திருந்தான்.

உடனே, “கோபி, வண்டியை நிறுத்துங்க” என்றாள்.

“ஏன்-க்கா??”

“அது… தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்காரு. பார்க்கணும்… அதான்”

“சரி-க்கா” என்று சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினார்.

காரிலிருந்து இறங்கியவள், சாலையைக் கடந்து வந்து… தேவா இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.

சாலையோர விளக்குக் கம்பத்தினெ ஒளி… விடிந்து கொண்டிருக்கும் வானின் வெளிச்சம்… இந்தச் சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேவாவின் பைக்.

அதிலிருந்து சற்று தூரத்தில் அமர்ந்திருந்த தேவா. அவனது கவனமெல்லாம் கையில் வைத்திருந்த நாளிதழ் மேல்!

பார்க்கவே, தாராவிற்கு ரசனைக்குரியதாக இருந்தது.

பெரிய அளவிற்கு ஆள் நடமாட்டமோ, வாகனங்களின் இரைச்சலோ இல்லாததால்… தாரா காலணியின் சத்தம் கேட்டு, தேவா நிமிர்ந்து பார்த்தான்.

தாரா ஒரு சிறு முறுவல் தந்தாள்.

அவள் வருவதைப் பார்த்தவன், ‘இங்க ஏன் வரணும்?’ என்பது போல் யோசனை முகம் காட்டினான்.

அவன் அருகில் வந்ததும், “ஹேப்பி மார்னிங்” என்றாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் நாளிதழைப் படிக்க ஆரம்பித்தான்.

‘மறந்திட்டானோ?’ என நினைத்தவள்…”நான்… என்னைய நியாபகம் இல்லையா??” என்று கேட்டாள்.

“இருக்கே”

“எங்க சொல்லுங்க?”

“ஒரு நார்மல் டெலிவரிக்கு ஒன் லேக் வாங்குற டாக்டர்”

முறுவலை கைவிட்டு முறைத்தாள்.

“ஓகே கூல்! தாரா… போதுமா??” என்றான்.

தன் பெயரை உச்சரித்துவிட்டான் என்ற சந்தோஷத்தில், அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து போதுமான அளவு இடைவெளிவிட்டு உட்கார்ந்தாள்.

சற்று தூரத்தில் துப்புரவு தொழிலாலர்கள் பெருக்கிக் கொண்டிருந்தனர். அதன் சத்தமும், அதிலிருந்து தூசியும் வந்தது.

“என்ன குப்பைக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கீங்க??”

“ம்ம்ம், அப்படியும் சொல்லலாம். இல்லை, குப்பையைச் சுத்தம் செய்றவங்க கூட நிக்கிறேன்னு சொல்லலாம்” என்று சொல்லி, அவளைப் பார்த்தான்.

அவளுக்குப் புரியவில்லை என்று தெரிந்தது.

“நீங்க என்ன… இவ்வளவு ஏர்லியா?”

“ஒரு கிரிட்டிக்கல் டெலிவரி கேஸ். அதை முடிச்சுட்டு வீட்டுக்குப் போறேன்”

“அதான் டயர்டா தெரியறீங்க”

“ட்ரு. பீலிங் ஸோ டயர்ட்”

“அப்புறம் எதுக்கு இங்க இருக்கீங்க? வீட்டுக்குப் போகலாம்ல?!”

“உங்ககிட்ட பேசணும்” என்று சட்டென்று சொன்னாள்.

“ரொம்ப இம்ப்பார்ட்டன்ட்டா??”

“ம்ம்ம்”

“இஃப் ஸோ, இன்னைக்கு வேண்டாம். நாட் இன் குட் மூட்”

“ஏன் என்னாச்சு??”

எதுவும் பதில் சொல்லாமல், நாளிதழைப் புரட்டினான்.

‘என்ன செய்ய?’ என்று தெரியாமல், தூரத்தில் நடைப்பயிற்சி செய்வோரை வேடிக்கைப் பார்க்கலானாள்.

“தாரா, எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று சம்பந்தம் இல்லாமல் ஆரம்பித்தான்.

“ம்ம்ம், சொல்லுங்க”

உடனே சற்று பக்கத்தில் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை, “அக்கா இங்க வாங்க” என்று கூப்பிட்டான்.

அவரும், “இன்னா தேவா?” என்று வந்து நின்றார்.

“தாரா… இவங்கெல்லாம் கவர்ன்மெண்ட் எம்பிளாயர்ஸ்தான். பட் கொஞ்ச பேர்தான் பெர்மெனன்ட். ரிமைனிங் இருக்கிறவங்க கான்டிராக்ட் எம்பிளாயர்ஸ்”

“ம்ம்ம்”

“இந்த கான்டிராக்ட் வொர்க்கர்ஸுக்கு கான்டிராக்டர் வழியேதான் சேலரி வரும். ஸேட் திங் இஸ், கான்டிராக்டர் ப்ரொப்பரா சேலரி கொடுக்க மாட்டாங்க”

“ஓகே”

“கான்டிராக்டர் ப்ராப்ளத்த நான் பார்த்துக்கிறேன். பட் இவங்கள்ல கான்டிராக்ட் முடிஞ்ச சிலருக்கு உங்க ஹாஸ்ப்பிட்டல்ல ஏதாவது பெர்மெனன்ட் கிளினிங் ஜாப் இருந்தா சொல்லுங்களேன்”

அவன் கூறிய, ‘சுத்தம் செய்பவர்கள் கூட நிற்கிறேன்’ என்பது, இப்பொழுதுதான் தாராவிற்கு புரிந்தது.

“ஆனா தேவா… இப்ப ஹாஸ்பிட்டல்ல வேக்கென்சி இருக்கான்னு தெரியலை. அப்படியே இருந்தாலும் ஏஜென்சி வழியாதான் பில் பண்ணுவாங்க”

“ப்ம்ச், இது வேறயா?” என்று சலித்துக் கொண்டான்.

“பட், ஒரு சிக்ஸ் மன்ந்த் கழிச்சு நான் ஒரு ஹாஸ்ப்பிட்டல் ஓபன் பண்ணுவேன். அதுல வேணா எடுத்துக்கிறேன்”

அவனுக்கு அது போதுமானதாக இருக்கவில்லை.

“நீங்க போங்க-க்கா. நான் வேற யார்கிட்டயாவது கேட்டுப் பார்க்கிறேன்” என்றான்.

“சரி தேவா” எனத் திரும்பிச் செல்லப் போனவரிடம்,

“ஒரு நிமிஷம் நில்லுங்க… ” என்றாள்.

‘எதுக்காக?’ என்ற கேள்வியுடன், தேவா தாராவைப் பார்த்தான்.

“வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேட்கச் சொல்லுங்க?”

‘கேளுங்க’ என்ற பொருளில் தேவா அப்பெண்மணியைப் பார்த்தான்.

“இந்தப் பொண்ணு டாக்டரா தம்பி?”

“ஆமாக்கா”

“நம்ம ஏரியாவாண்ட கேம்ப் போட்டு நாளாச்சுப்பா. இதால முடியுமா?”

“இட்ஸ் எ பீஸ் ஆஃப் கேக் பாஃர் மீ” என்றாள் துள்ளல் சிரிப்புடன்.

“இன்னா சொல்லுது தம்பி?”

“ம்ம்ம்” என்று தாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அது அவங்களுக்கு ஈஸியாம்” என்றான்.

துள்ளலை உள்ளத்துக்குள் முடக்கி வைத்துவிட்டு, ‘என்ன சொல்லப் போறானோ??’ என்று உதடுகள் முணுமுணுத்தன.

“நீங்க போங்க-க்கா… நான் இவங்ககிட்ட, ஏரியா கவுன்சிலர்கிட்ட பேசி எற்பாடு பண்ணறேன்”

“சரி தேவா, பேசிக்கின்னு இருங்க… காஃபி வாங்கிக்கின்னு வரேன்” என்று சந்தோஷமாகச் சென்றார்.

அவர் சென்றதும்,

“எதிர்ல நிக்கிறவங்களுக்குப் புரியிற மாதிரி பேசுறதுதான் மொழி” என்று அழுத்தமாகச் சொன்னான்.

அந்த ‘ழகரத்தை’ அவன் உச்சரித்த விதம், உச்சந்தலையில் கொட்டிச் சொன்னது போல் இருந்தது.

சரியென்று தலையாட்டினாள்.

அதற்குள் ஒருவர் காஃபி வாங்கிக் கொண்டு வந்து, அவர்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டுச் சென்றார்.

சூரியன் உதிக்காத காலை வேளையில், சூடான காஃபியை ரசித்துப் பருகுகையில்…

தடித்திருந்த மௌனங்களுடன்
தன்னருகில் காதலன்!

வேறென்ன வேண்டும் தாராவிற்கு!

நிச்சயம் காதல் உண்டியலில் சேர்த்து வைக்க வேண்டிய நேரச் செலவிடல்கள்!!

காஃபி காலியான பின்,

“தாரா, உங்க கன்வீனியன்ட் டேட் சொல்லுங்க??”

“நெக்ஸ்ட் வீக் சண்டே”

“என் நம்பர் உங்ககிட்ட இல்லை-ல?”

இல்லையென தலையை அசைத்தாள்.

“ஓகே, கேம்ப் ரிலேட்டடா பேசணும்னா யூஸ் பண்ணிக்கோங்க” என்று தன் அலைபேசி இலக்கங்களைக் கொடுத்தான்.

அவளும் குறித்துக் கொண்டாள்.

ஒரு விசிட்டிங் கார்டை நீட்டி, “இதுல என்னோட ஆபீஸ் நம்பர் இருக்கு. பெர்ஷனல் நம்பர் பிஸியா இருந்தா, இந்த நம்பர் யூஸ் பண்ணுங்க. அங்கிள் ஆர் ஆண்ட்டி வில் ஹெல்ப் யூ” என்றான்.

அதை அவள் வாங்கிக் கொள்ளவில்லை.

‘ஏன்?’ என்கின்ற கேள்வியை அவன் கண்ணாடிக்குப் பின்னிருந்து கண்கள் கேட்டன.

“நீங்க பிஸியா இருந்தா, வெயிட் பண்ணி… ப்ரீயாகிறப்போ பேசிக்கிறேன்” என்றாள்.

தேவாவிற்கு ஏதோ நெருடலாகத் தோன்றியது.

மேலும் அவன் யோசிக்கும் முன், “அண்ட் தேவா… இது என் நம்பர்” என்று தன் அலைபேசி எண்ணைச் சொன்னாள்.

அவனும் குறித்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் தாரா. உங்க டிரைவர் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. கிளம்புங்க” என்று சொல்லி, மீண்டும் நாளிதழில் மூழ்கினான்.

எழுந்து நடக்கப் போனவள், திரும்பி நின்று “தேவா” என்று அழைத்தாள்.

“என்ன தாரா??”

“வாட்சப்ல குட்மார்னிங் மெசேஜ் அனுப்பினா… பரவாயில்லையா??” என்று விருப்பமாகக் கேட்டாள்.

“தாராளமா… பட் நான் ரீட் பண்ண மாட்டேன். பரவாயில்லையா???” என்று சொல்லி, அவளது விருப்பத்தை விகற்பமாகப் பார்க்க ஆரம்பித்தான்.

எதுவும் பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

இதயத்தைப் பரிமாற நினைப்பவள், இலக்கங்களைப் மட்டும் பரிமாறிக் கொண்டு சென்றாள்.

error: Content is protected !!