EUTV 2
EUTV 2
அத்தியாயம் 2
“ஹே எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி… மாமாக்கு மட்டும் இது தெரிஞ்சது உன்னை என்ன பன்றாரோ தெரியலை? ஆனால் என்னை கொலையே பண்ணிருவாரு.” என்று அந்த பூங்காவில் நுழைந்த அரைமணி நேரமாக, இதே டயலாக்கை மாற்றி மாற்றி, பல்வேறு மாடுலேசனில் நூறாவது தடவையாக கூறி கொண்டிருந்தாள் ஈஸ்வரி.
ஈஸ்வரியின் எந்த விதமான புலம்பலையும் தன் காதிலே வாங்கி கொள்ளாமல், யாரோ எவரோ போன்று அந்த பூங்காவின் நுழைவு வாயிலில் ஒரு பார்வையும், தனது கைகடிகராத்தில் ஒரு பார்வையும் வைத்தவாறு மலர்விழி அமர்ந்திருந்தாள்.
அவளது கண்டுகொள்ளாத தன்மையில் கடுப்பான ஈஸ்வரி, ‘இங்கே ஒருத்தி பிபி வந்த பன்னி மாதிரி பதறிட்டு கிடக்கேன். இவளை பாரேன்…’ என்று நினைத்தவள்,
“இப்ப இங்கே ஒருத்தி இருக்குறதே உனக்கு தெரில என்ன? சரி நீ இருந்து பார்த்துட்டு வா. நான் போறேன்…” என்று எழுந்து கிளம்பவதை போன்று பிகு செய்ய, உடனே சுதாரித்த மலர்விழி ஈஸ்வரியின் கரங்களை பிடித்து இழுத்தவள், வேலாயுதம் படத்தில் வரும் சந்தானம், விஜய் ஊருக்கு போகும் போதெல்லாம் ஒரு டயலாக் சொல்லுவாரே, அதை போன்று மலர்விழியும் ஒரு வசனம் வைத்திருக்கிறாள் ஈஸ்வரிக்கு.
“போப்பா போ… ஆனால் போறதுக்கு முன்னாடி என்னோட ஒரே ஒரு கேள்விக்கு பதில் மட்டும் சொல்லிட்டு போ. உனக்கு எத்தனை வருசமா நான் மாமா மகளா கடமை ஆற்றிக்கிட்டு இருக்கேன்?” என்று கேட்டாள்.
அந்த வார்த்தைகளை கேட்டு ஏகத்துக்கும் கடுப்பான ஈஸ்வரி, “ஹே… ஹே… தயவு செஞ்சு இந்த டயலாக்கை இன்னொரு தடவை சொல்லிராதே… நீ ஒருத்தி இதை கண்டுபிடிச்சு உன் குடும்பமே என்னை பாடாபடுத்தி எடுக்கிறீங்க டி. ஹய்யோ ஹய்யோ… உங்க மூனு பேருக்கிட்ட மாட்டிக்கிட்டு நான் படுறப்பாடு இருக்கே… உங்களுக்கு ஒரே ஒரு அத்தை மகளா பிறந்துட்டு ஒரே குஷ்டம்மாப்பா…” என்று அழுபவளை போல் ஈஸ்வரி கூற, பார்க்கும் நமக்கே பாவமாக தான் இருந்தது. ஆனால் மலர்விழிக்கு இல்லை என்பது அவளது கிண்டலான பார்வையிலே தெரிந்தது.
“இப்படி எல்லாம் பேசுனா தானே உனக்கு, நான் உன் மனம் கவர்ந்த மாமா மகளுன்னும் உன்னோட உயிர் தோழினும்… எனக்காக கொடுக்க தான் உன் உயிரே இருக்குன்னும் ஞாபகம் வருது.” என்று மலர்விழி கூற,
“ஏதே…? உயிரை கொடுக்கணுமா? என்னங்க டி? இன்னும் அக்கா தங்கச்சிங்க மூணு பேரும் என் கிட்னியை தாண்டி கேட்கலை…” என்று பதறினாள் ஈஸ்வரி.
“உயிரை கொடுக்கணும்னா சாவுறது இல்லை டி… மாமா மகளுக்கு ஒரு பிரச்சினைனா அடி உதை வாங்கியாச்சும் அதுல இருந்து காப்பாத்துறது தாண்டி… நீ காலேஜ் செகண்ட் இயர் படிக்குறப்ப, அப்போதைய உன் காதலனா இருந்த கார்த்தி கூட நீ காலேஜ் கட் அடிச்சுட்டு பாபநாசம் படத்துக்கு போய், அதை நம்ம செல்லூர் மாமா பார்த்துட்டு, உங்க அப்பாகிட்ட சொல்லி கொடுக்க, உன்னை உங்க அம்மா பிஞ்ச விளக்கமாறாலை சுங்கு பரத்தும் போது, அதை தெரிஞ்சுகிட்டு வந்து, நீயும் நானும் தான் காலேஜ் கட் அடிச்சி படத்துக்கு போனோம்னு, அந்த பையன் யாருனே தெரியாதுனும் உன்னை காப்பாத்த நான் பொய் சொல்ல… அது எங்க அப்பா காதுக்கு போய் அவர் கொத்தமல்லி கொழுந்தாட்டம் ஒரே ஒரு பிள்ளை வைச்சு இருக்கோமேன்னு கூட யோசிக்காம, காது தீயுற வரைக்கும் இரண்டு நாள் அட்வைஸ் மழையை பொழிஞ்சு, என்னால இப்ப டிவில கூட படம் பார்க்க முடியாத மாதிரி பண்ணாறே…” என்று நீளமாக மலர்விழி பேச, அதை பாதியில் நிறுத்திய ஈஸ்வரி,
“அடியே… அப்போதைய காதலனா இப்ப வரைக்குமே அவன் தான் டி என் காதலன்… சரி விடு விடு…” என்றாள்.
“இப்ப என்ன சொல்ற நீ?” என்று மலர்விழி கேட்க,
“இருக்கேன் இருந்து தொலையுறேன். கேஸ் ஆன கூட உன் கூட சேர்ந்து நானும் பிஞ்ச செருப்பாலே அடி வாங்குறேன். உனக்காக எதையும் செய்வேன் டி என் செல்லாக்குட்டி…!” என்று அவளது தாடையை பிடித்து ஈஸ்வரி கொஞ்சினாள்.
அவளது கையை தட்டிவிட்டவள், “அப்பப்ப உனக்கு பிஜிஎம்ஓட பிளாஷ்பேக் போட்டா தான் பாசம் வருது…” என்று மலர்விழி பேசி கொண்டிருக்கும் போதே அந்த இடத்தை வந்து அடைந்தான் கணிதன்.
“ஹாய்…!” என்ற அவனது திடீர் அழைப்பில் தங்களது வாதத்தை விட்டு அவனை நோக்கினர் இருவரும்.
“ஹாய்..!” என்று இருவரும் ஒருசேர கூற ஈஸ்வரியை பார்த்து கன்னம் குழிய சிரிக்க,
‘டேய் டேய் சிரிக்காதே டா… ஹையோ… இப்படி தான் மயக்க பார்ப்பான் மலரு லைக் பண்ணாதே டிஸ்லைக் பண்ணு.. டிஸ்லைக் பண்ணுணுணுணுணு’ என்று மனத்திற்குள்ளே மலர்விழி பேசி கொண்டிருக்க, அவளையும் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்தவன், என்ன என்பதை போன்று இரு புருவங்களையும் உயர்த்தி கேட்க,
‘ஐயோ கொல்லுறானே…! இவரு பெரிய சிவாஜிகணேசன். கண்ணாலே பேசுவாரு…’ மனதிற்குள் புலம்பினாள் மலர்விழி.
“உங்க கூட கொஞ்சம் பேசணும்.”
“ஒஹ்… பேசலாமே…” என்றவன் மலர்விழிக்கு அருகில் இருந்த இருக்கையை இன்னும் கொஞ்சம் அவளை நோக்கி நெருக்கி போட்டு அமர்ந்தான்.
அவனது முகம் அவளுக்கு வெகு அருகில்; என்ன சொல்ல அவனை அழைத்தாள் என்பதே ஒரு நொடி மறந்து போக தனது அக்மார்க் திருட்டு முழியை முழித்தவள், “அது.. வந்து… அது வந்து…” என்று இழுக்க,
‘இவ ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம் பார்த்தா, கல்யாணத்தை நிறுத்த வந்தவ மாதிரி தெரியலையே…’ என்று மலர்விழியின் தடுமாற்றத்தை கண்டு கொண்டு ஈஸ்வரி அவளை ஒரு தினுசாக பார்க்க, அது மலர்விழியின் திருட்டு முழியில் விழ, அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவள், தன்னை நிலைப்படுத்தி கொண்டு, கணிதனை நோக்கி திரும்பினாள்.
அவளது செயல்களையெல்லாம் ஒரு சிரிப்புடன் பார்த்திருந்தவன், மலர்விழி தன்னை பார்க்கவும், “ம்ம்… சொல்லுங்க…” என்று ஊக்க,
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. உங்களுக்கும் எனக்கும் எதுவும் செட் ஆகாது. நீங்க தூங்கும்போது கூட புத்தகத்தை கட்டி பிடிச்சிட்டு படிக்குறவரு… நான் புத்தகத்தை பார்த்தாலே தூங்குறவ… காலேஜ் முடிச்சு 2 வருஷம் ஆச்சு.. இன்னும் 5 அரியர் இருக்கு. நீங்க 6.1′ நான் ஹை ஹீல்ஸ் போட்டே ஐஞ்சு அடி நாலு அங்குலம் தாங்க. நீங்க அரவிந்த்சாமி கலர்ல இருக்கீங்க… நான் ரோஸ் பவுடர் பாண்ட்ஸ் பியூட்டி உபயோகத்துலன்னு ஓரளவுக்கு சிவப்பா இருக்கேன்… நம்ம காமினேஷன் பார்க்க வடைகரியும் சக்கரைபொங்கலும் மாதிரி இருக்கும். ” என்று மலர்விழி மூச்சுவிடாமல் படபடப்புடன் பேசி முடிக்க, அதற்காகவே காத்திருந்தவள் போன்று ஈஸ்வரி அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க, அதை மடமடவென்று குடித்துவிட்டு, தனது எதிரிலிருந்தவனது கண்களை சந்திக்க, அந்த லேசர் விழிகளோ, அளப்பரிய சுவாரசியத்துடன் இவளது இதழ்களை தான் நோக்கி கொண்டிருந்தது. அதில் சிறிது ஜெர்க் ஆனவள் ‘ஐஸ் நைஸ்ஸ்ஸ்ஸ்…!’ என்று கணிதனின் கண்ணோடு சென்ற மனதிற்கு கடிவாளமிட்டவள்,
“ப்ளீஸ் என்னை பிடிக்கலைன்னு சொல்றீங்களா?” என்று கண்களை சுருக்கி கேட்க, கணிதனோ அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் இன்னும் சாய்ந்து அமர்ந்து டேபிளில் இருந்த இடது கரத்தால் தனது கன்னத்தை தாங்கியவன்,
“எங்கே ஒரு பாட்டு பாடு கேட்போம்?” என்று அவள் யாருக்கோ எவருக்கோ பேசியதை போன்று இடக்கையால் டீல் செய்தவாறு கணிதன் கேட்டான்.
“ஏதே?????? பாட்டு பாடவா?”
“ம்ம்… யெஸ்…” என்று கூற மலர்விழி தனது அருகிலிருந்த ஈஸ்வரியை, ‘இந்த ஆளு என்ன லூசா?’ என்ற செய்தியை கண்களில் ஏற்றி கொண்டு பார்க்க, அவளும் அதே கேள்வியோடு தான் மலர்விழியை பார்த்து கொண்டிருந்தாள்.
“சரி ஒரு பாட்டு தானே பாடிவிடு…” என்று ஈஸ் சொல்ல, அதுதான் மலர்விழிக்கும் சரியென்று பட, “என்ன பாட்டு வேணும்?” என்று கேட்டாள்.
“உனக்கு பிடிச்ச பாட்டு… நீ பார்த்து என்னை ரசிச்சானு வரும்ல… ” என்றான் கணிதன்.
‘வெய்ட்… வெய்ட்… இவருக்கு எப்படி மலருக்கு நல்லா பாட தெரியும்னு தெரியும்? அதுவும் இந்த பாட்டு தான் பிடிக்கும்னும் தெரியும்…’ ஈஸ் மைண்ட் வாய்ஸ் ஓடியது.
கணிதனை முறைத்தவாறு, “நீ பார்த்து என்னை ரசிச்சா…
நான் காட்டு தீயா எரியுறேன் டா…
லேசா கண் அசைச்சா…
கடல் பனியாத்தான் நான் உருகுறேன் டா…
சிறு கல்லா இருந்த நான் இப்போ சிலையானேன் அட உன்னால…
சிறகாக பறந்த நான் இப்போ சிறையானேன் உன்னால….
நீ பார்த்து என்னை ரசிச்சா…” என்று பாடினாள் மலர்விழி.
“ஹான் போதும் போதும்…” என்று கூறியவாறு மலர்விழியின் பாடலை நிறுத்திய கணிதனது முகத்தை ஆவலுடன் நோக்கினாள் அவள்.
“இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா நீ ஆசைப்பட்ட மாதிரி இந்த பாட்டை எப்படி நம்ம பர்ஸ்ட் நைட் அன்னைக்கு என் மடியில சாய்ஞ்சுட்டு பாடுவ? டா…..ர்லிங்…” என்றவாறு தனது இருக்கையை விட்டு எழுந்தவன், தனது வலக்கரத்தால் அவளது கன்னத்தை வலிக்க பிடித்து இழுத்தவன் தனது உதட்டில் வைத்து கொஞ்சிவிட்டு,
“அண்ட் ஒன் மோர்திங்.. வடைகறியும் சக்கரைபொங்கலும் புதுவித காமினேஷன் சூப்பரா இருக்கும்.” என்று ஒற்றை கண்ணை சிமிட்டுவிட்டு சென்றான் கணிதன்.
பேய் அறைந்ததை போன்று அமர்ந்திருந்த மலர்விழியை தனது உலுக்களின் மூலம் நிகழுலகம் கூட்டி வந்தாள் ஈஸ்வரி.
“ஹே இங்கே என்ன டி நடக்குது? அவர் என்னமோ உரிமையா பாட்டு பாடுன்னு சொல்லுறாரு. உனக்கு பிடிச்ச பாட்டையும் சொல்லுறாரு. எனக்கு தெரியாம அவர் கூட பர்ஸ்ட் நைட் பத்திலாம் டிஸ்கஸ் பண்ணிருக்க? யாரு டி நீ? எனக்கு தெரியாம என்ன டி பிளாஷ்பேக் வைச்சி இருக்க? சொல்லு டி சொல்லு…” என்று உலுக்கினாள் ஈஸ்வரி.
எப்பொழுதும் போன்று திருத்திருவென முழித்து கேவலமான ஒரு சிரிப்பை போட்டவள், “உனக்கு தெரியாம என் வாழ்க்கைல ஒண்ணுமே இல்லை டி… அவனா அடிச்சு விடுறான்…” என்றாள்.
“இந்த டகால்டி வேலை எல்லாம் இங்கே வேணாம்… நீ யாருன்னு எனக்கு தெரியும்… நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும். ஒழுங்கு மரியாதையா சொல்லிரு…” என்ற ஈஸ்வரி, நீ இப்பொழுது சொல்லியே ஆகவேண்டும் என்பதை போன்று பார்த்தாள்.
“நான் காலேஜ் படிக்கும் போது சொல்லிருக்கேன்ல ஒரு சார் சூப்பரா இருப்பாரு பட் திமிரு ரொம்ப அதிகம்னு… அவர் தான் இவர்…”
“ஆமாம் ஆமாம்… அவரா இவரு? நல்லா தாண்டி இருக்காரு. ஆமாம் எப்ப இவர்கிட்ட அந்த பர்ஸ்ட் நைட் மேட்டர் எல்லாம் பேசுன…?”
“அதான் டி எனக்கும் தெரில… நானும் பாரதியும் பேசுனது இவருக்கு எப்படி தெரியும்னு…?”
“ஒஹ்… சரி நீ டோட்டல் பிளாஷ் பேக் சொல்லு கேட்போம்…”
“அப்படி ஒன்னும் ஓர்த் ஆன ஸீன் எல்லாம் இல்லை டி…”
“நீ முதல் சீனை சொல்லு. அது ஒர்த்தா இல்லையான்னு நாங்க சொல்லுறோம்…”