தேன் பாண்டி தென்றல் _ 7

தேன் பாண்டி தென்றல் _ 7

 
7
 
தேன் மொழியின் அலறல் சத்தத்தில் பாண்டியன் அலறி அடித்து குரல் வந்த திசை நோக்கி ஓடப் பார்க்க  மற்ற நடுவர்கள் இவனை பிடித்து இழுத்து “அதை வாலண்டியர்ஸ் பாப்பாங்க” என்று சொல்லி நிறுத்த முயற்சித்தார்கள்.
 
 
“ உங்க வொய்ஃப் இப்டி  இருக்கும் போது பார்க்கறதுக்கு இன்னொருத்தனைதான் நீங்க அனுப்புவீங்களா?”  என்ற கடித்துக் குதறிவிட்டு தேன்மொழியைத் தேடி ஓடலானான்.
 
‘ நீ போய்தான் தீருவன்னா போயேன்டா! அதுக்கு எதுக்கு என் வொய்ஃபை இழுக்குற?’ என்று குமைந்தாலும் அவன் சொல்ல வந்ததைக் கண்டு கொண்டார் வயதான நடுவரான காளிமுத்து. அந்தக் காலனியின் மூத்த குடிமகன்களில் ஒருவர்.
 
இவர்தான் தேன்மொழியின்  கோலத்திற்க்கு சப்போர்ட் செய்துப் பேசியவர்.
 
அவனை அவன் போக்கில் ஓட விட்டு விட்டு அவனைத் தேடிய மற்றவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்களின் முணுமுமுணுப்பிற்குப் பதில் சொல்லிப் போட்டியை முடித்து வைத்து முடிவைச் சொன்னார் அவர். 
 
தேன்மொழியின் பயக் குரல் பாட்டுச் சத்தத்தில் அவர்களை எட்டவில்லை. அதுபோக அவர்கள் நிகழ்ச்சியில் ஒன்றி இருந்தனர்.  பாண்டியன் நடுவர் குழுவில் பின் வரிசையில் அமர்ந்து இருந்தான். அதுவாரசியமாக இருநதவன் தன் தேனுவின் குரல் கேட்டுப் பறந்திருந்தான். 
 
காளிமுத்து முன் வரிசையில் இருந்தாலும் பாண்டியனின்  ஓவர் இமோசனைக்  முதலில் அவதானித்துக் கேட்டிருந்தார். 
 
அவன் பட படவெனப் பொரிந்ததை மற்றவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை.
 
ஆனால் அவனது துடிப்பை அனுபவம் வாய்ந்த அவர் உணர்ந்து கொண்டார். 
 
இவன் ஓடுவதைப் பார்த்து வாலண்டியாஸ் என்று சொல்லப்படும் இளவட்டங்களும் இவன் பின்னால் ஓடினர்.
 
அங்கே தேன்மொழி ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவற்றுக்கு அடியில் மயங்கி விழுந்து இருந்தாள். 
 
அவள் வீட்டிற்குப் போவதற்கு இந்த வழி குறுக்கு வழி. இந்த வழித் தடத்தினை பயன்படுத்தும் முகமாக இங்கே வந்திருப்பாள் என்ற யூகிக்க முடிந்தது. 
 
எதற்கு பயந்தாள் என்றுதான் தெரியவில்லை. 
 
உடனடியாக அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க அவள் ‘பேந்த பேந்த’ விழித்தாள்.  
 
பாண்டியைப் பார்த்து அவள் நிம்மதி அடைந்தது அவனுக்குப புரிந்தது. ஆனால் குழப்பமாக இருந்தது.
 
நம்மளைத்தான் இவளுக்குப் பிடிக்காதே? என்று குழம்பினாலும் ஏதோ இப்படியாச்சும் ஏறெடுத்துப் பார்த்தாளே? என்று அந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ந்தான். 
 
தேன்மொழிக்கு இவனைப் பிடிக்காமல்தான் இருந்தது. இப்போது அவன் தெரிந்த முகம் என்ற ஒரு காரணத்தால்தான் அவளுக்கு அந்த நிம்மதி ஏற்பட்டது.
 
அவள் கண் விழித்ததும்  “என்னாச்சு தேனு?” என்றான்.
 
இப்போதுதான் அவள் அவன் மடியில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பதறி எழுந்தாள். 
“என்ன தைரியம் இருந்தா என்னை உங்க மடியில படுக்க வசசிருப்பீங்க? மயங்கிக் கிடக்கவும் நல்லதாப் போச்சுனு உங்க புத்தியக் காட்டுறீPங்களா?” என முதலில் அலறியதை விட பயங்கரமாக அலற ஆரம்பித்தாள். பாண்டியன் முகம் சுணங்கியது. மனம் சிணுங்கியது.
 
 
 இவர்கள் உடன் இருந்த இளவட்டங்கள் அவளைச் சமாதானப் படுத்தினர். 
 
“தங்கச்சிமா ! பாண்டியன் மாமா உன் சத்தம் கேட்டு போட்டியப் பாதில விட்டுட்டு வந்திருக்கு. நாங்களும் கூடதான் வந்தோம். இவ்ளோ நேரம் உனக்காக மாமா எவ்ளோ பயந்திட்டாங்க தெரியுமா?” என்று இருவரையும் இணைக்க முயன்றனர். அந்த வாக்கில் பாண்டியனின் முகச் சுணக்கத்தையும் நிவர்த்தி செய்தனர். 
 
‘நேத்து வரை அண்ணானு சொன்னீங்களேடா?’ மனதிற்குள் புலம்பினாலும் ‘இப்ப இவளை அண்ணினு சொன்னா காளி ஆயிடுவா. அதுக்கு இது பரவாயில்ல ‘ என்று மனதைத் தேற்றினான். 
 
தங்கச்சி புருசன் மச்சான் தானே? என்றொரு குழப்பம் அவன் மண்டையில் மின்னி மறைந்தது.
 
அதற்குள் அவள் எழுந்து ‘ஜங்’ என்று உட்கார்ந்து கொண்டாள். குமார் அவளுக்கு ஒரு சேர் எடுத்துக் போட்டிருந்தான்.
 
‘ஏன்டா?” என்று குமைந்தான் பாண்டியன். அவன் முகத்தைப் பார்த்த குமார் ‘இல்லனா மட்டும் அப்படியே…’ என்று பார்வையாலே முடிக்காமல் முறைக்க – பாண்டியன் அவனிடம் பல்லைக் காட்டினான். 
 
மொத்தத்தில் இந்தக் குழுவிற்கு இவன் விவகாரம் தெரிந்துவிட்டது என்பது உறுதி. 
 
 
“அதுலாம் இருக்கட்டும். முதல்ல எதுக்குக் கத்தின?” ஒரு வழியாகப் பாயின்டிற்கு வந்தான் பாண்டியன். 
 
“மொதல்லயா? நான் ஒரு தடவ தானே கத்தினேன்?” வியந்தாள் தேன்மொழி. 
 
“இப்ப ரெண்டாவது மாமாவப் பாத்துக் கத்தினயே?” என்ற எடுத்துக் கொடுத்தான் பாண்டியன்.
 
“மாமாவா?” தேன்மொழியின் முகம் ரத்தக் களறியானது.
 
“அது அவங்க மாமானனு சொன்னேன்” நிஜாகவே சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட – அது இவள் அவனைக் காறித் துப்பியதைத் தட்டி விட்ட கணக்கில் சேர்ந்தது.
 
‘ஒழிஞ்சு போ’ என்று இவனைப் பார்த்த தேன்மொழி இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தாள். 
 
“குமார் அண்ணா .. என்னை யாரோ வேலம்மானு கூப்பிட மாதிரி இருந்துச்சு” என்றாள் பதட்டத்துடன். 
 
“அது யாரு வேலம்மா?” என்றான் பாண்டியன்.
 
அவனை முறைத்த தேன்மொழி “அது என் செல்லப் பேரு” என்றாள். 
 
“செல்லப் பேரோ வெல்லப் பேரோ? அதை யார் கூப்பிட்டாங்க?” படபடத்தான் பாண்டியன்.
 
“தெரிஞ்சா நான் ஏன் கத்தறேன்” முறைத்தாள் தேன்மொழி
 
அவளுக்கு ஒன்று புரியவில்லை.
 
இந்தக் குழப்பமான நேரத்தில் அவனைத் திட்ட முடிகிறதென்றால் -அவனை மட்டும் திட்ட முடிகிறதென்றால் – அவனுக்காக  அவள் மனதிலும் ஒரு இடம் இருக்குமோ? என்று யோசித்திருக்கலாம்.
 
“ஒருவேளை இங்க வேற யாருக்கும் உன் இந்தப் பேரு தெரிஞ்சிருக்கும். அவங்க உன்னைக் கூப்பிட்டு இருப்பாங்க. இல்லை இங்க வேற யார் பேராவது வேலம்மானு இருந்திருக்கும். அவங்களைக் கூப்பிட்டு இருப்பாங்க” என்று பாண்டியன் அந்தப் பிரச்சனையை முடிக்கப் பார்த்தான்.
 
 
“ஓ ஆமா மாமா” என்ற குமாரை  அதிசயமாகப் பார்த்தான் பாண்டியன். 
 
‘மாமாவா? இவ்ளோ நேரம் அண்ணானுதானே கூப்பிட்டே?’ என்ற அவன் பார்வையை கேலியாகப்  புறம் தள்ளினான் இத்தனை நேரம் அவன் கூட இருந்த குமார்.
 
“இதோ இந்த வீட்டில இருக்கற தென்றல் அக்காவைக் கூட வேலம்மானுதான் அவங்க அம்மா கூப்பிடுவாங்க” புதுத் தகவல் தந்தான் குமார்.
 
பாண்டியனுக்கு இது புது செய்திதான்.  தேன்மொழி கண்களில் மின்னல் அடித்தது.
 
“தென்றலுக்கு வேலம்மானு இன்னொரு பேர் இருக்கா?”- வியந்தான் பாண்டியன். இந்த தேனு கிறுக்கிக்கே இப்படி ஒரு பேர் இருப்பது இவனுக்கு இதுவரைத்  தெரியாது. 
 
எங்கே? தரகு கமிஷன் வியாபாரம் கொள்முதல் என்று இப்படியே சுற்றிக் கொண்டு இருந்தால் இந்த ஜென்மத்தில் இவனுக்குக் கல்யாணம் ஆகிவிடும்!
 
“அது அவங்க பாட்டி பேராம்” என்றான் குமார்.
 
“எனக்கும் இது பாட்டி பேருதான்” என்றாள் தேன்மொழி.
 
 
குமாருடன் வந்திருந்த மற்றவர்கள் இவள் தெளிந்ததும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள். 
 
“சரி. சரி . இதுக்கு ஒரு மயக்கமா?  நம்மளை இல்லனா வேற யாரையாச்சும் கூப்பிட்டு இருப்பாங்கனு கூடத் தெரியாதா? இதுக்கு ஒரு அலறல்! மயக்கம் ! உன் மயக்கத்துக்குத் தண்ணி தெளிக்க நானு வேற?” என்று சலித்துக் கொண்டான் பாண்டியன். 
 
பாண்டியன் மீது நல்ல அபிப்ராயம் இருந்ததால் குமார் ஒரு கண் அசைவில் பாண்டியனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
 
இப்போது இருந்தது இவர்கள் இருவர்தான்.
 
“சார்” சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனை ரகசியமாக அழைத்தாள் தேன்மொழி. 
 
ஒரே குஜாலாகிவிட “என்ன என்ன?” என்று முகம் முழுக்கப் புன்னகையடன் அவளிடம் அவன் வினவ – அவளோ ‘பயங்கரமான மிருகம்’ ரேஞ்சுக்கு இவனைக் கண்டு மிரண்டாள்.
 
பாண்டியன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.
 
“சொல்லு தேனு. என்ன விசயம்?” என்றான்.
 
“நீங்க சொன்ன மாதிரி யாரும் என் பேரு சொல்லலை. அந்த வேலம்மாவைத்தான் கூப்பிட்டிருக்காங்க”
 
“அதனால என்ன? எப்படியோ குழப்பம் தீர்ந்திருச்சா? கிளம்பு. உனக்கு கோலப் போட்டிக்கு ஸ்பெஷல் பரிசு தர்றேன்னு காளிமுத்து சார் சொல்லி இருக்காரு. ஏதாச்சம் சோப்பு டப்பா குடுப்பாரு. வாங்கிக்கோ. எழுந்திரு” என்றான்.
 
இந்தப் பாண்டியன் தன் வாயை அம்மாவிடம் மட்டும் கழற்றி வைத்து விடுகிறான். தாய்க்குப் பின் தாரம் என்பதற்கேற்ப தேன்மொழியிடமும் தன் பேச்சைக் குறைத்தால்தான் உயிர் தப்புவான். 
 
“நான் சொல்ல வர்றதைக் கேட்க முடியுமா? முடியாதா?” முறைத்தாள் தேனு.
 
“சொல்லு தேனும்மா” அவன் குரல் அவளை உரிமைக் கொண்டாடியது.  அதை அவன் உணரவில்லை ஆனால் தேன்மொழி உணர்ந்தாள்.
 
 
இவனிடம் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்றுப் புரிந்தது. ஆனால் இவள் குழப்பத்திற்கு அவனால்தான் நெட்டையோ குட்டையோ ஒரு முடிவு தர முடியும் என்று நம்பினாள். 
 
 
பாண்டியனைக் கூர்மையாகப் பார்த்த தேன்மொழி “ தென்றல்னு சொன்னீங்களே? அவங்க இப்ப எங்க?” என்றாள்.
 
“ ஏன்? அவங்க அவங்க வீட்லதான் இருப்பாங்க”
 
“பங்ஷனுக்கு அவங்க வரலையா?”
 
“எல்லோரையும் இன்வைட்தான் பண்ண முடியும். வர்றது வராதது அவங்க இஷ்டம்” 
 
இவள் ஏன் இதைக் கேட்கிறாள்? என்ற குழப்பத்தில் பாண்டியன் மனதுக்குள் உளன்றான்.
 
“நீங்க இதே காலனியிலதான் இருக்கீங்க. அவங்க எங்க இருக்காங்கனு உங்களால உறுதியாச் சொல்ல முடியல” அவனைக் குற்றம் சாட்டினாள்.
 
“மா. தேனுமா. ஆளாளுக்கு அவங்க அவங்க வேலை. அதுல ஓரொருத்தர் பத்தித் தெரியாதது குத்தமாடா?” என்று நயந்து கேட்டான்.
 
“ அது பிரச்சனை இல்ல. ஆனா இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற தென்றல் அதாவது இன்னொரு வேலம்மா அவ வீட்ல இருக்கிறது உண்மைதான். ஆனா எப்படி இருக்கானு தெரியுமா?” 
 
“தேனு! ஏதாவது பிரச்சனையாம்மா?” பதறினான் பாண்டியன்.
 
“பிரச்சனையான்னு இப்பக் கேளுங்க! நீங்க தென்றலைப் பாத்து எத்தனை நாள் இருக்கும்?” 
 
“அது தெரியலைடா. நான் அவளைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆரம்பத்துல அவங்க அம்மாகிட்ட ஏதோ ரெண்டு மூனு வாட்டி கேட்டேன். அப்புறம் ஒரு வயசுப் பொண்ணைப் பத்தி நாம விசாரிக்கிறது தப்பாகிரும்னு விட்டுட்டேன்”
 
 
இருவரும் இப்போது  ஒரு வீட்டின் பேஸ்மென்ட் திண்டில் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தக் கட்டிடம் பெரிதாக இருந்ததால் அதற்கு பேஸ்மென்ட் உறுதியாகப் போட்டிருக்க அந்தப் பகுதி உட்கார ஓரளவு வசதியாகத்தான் இருந்தது. அந்த வீடு போட்டியக் நடக்கும் திசைக்கு மற்றொரு கடைசிப் பக்கமாக அமைந்திருந்தது. 
 
 
சேரில் தான் மட்டும்  இருக்கப் பிடிக்காதவள் எழுந்து வர அதைப் புரிந்த பாண்டியனும் அவளுடன் இணைந்து நடந்தான். இயைந்து நடந்தான். இப்போது ஒருவரும் ஒன்றாய் அமர்ந்திருக்க அதுவே கோடி சுகமாக இருந்தது அவனுக்கு. 
 
 
“தேனும்மா. நீ இப்படி சுத்தி சுத்தி கேட்கிறதை விட்டுட்டு முழுசாச் சொல்லு. என்ன நடந்தது? நீ என்னப் பாத்த. அவங்க வீட்ல தென்றலை எதுவும் சொல்லிக்கிட்டு இருந்தாங்களா?” ஒரு வழியாக விசயத்திற்கு வந்தான் பாண்டியன்.
 
“ஒரு வழியாப் புரிஞ்சுதா? இப்ப இதை நான் சொன்னா நம்ப மாட்டீங்க. இந்த இடமும் எனக்கு உறுத்தலா இருக்கு. அப்புறமா உங்களுக்குச் சொல்றேன். ஆனா அதுக்குள்ள தென்றலுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு” 
 
“என்ன பேசற தேனு? ஒருத்தங்களுக்குப் பிரச்சனைனு தெரிஞ்ச பிறகும் ஸ்டெப்ஸ் எடுக்க  நல்ல நேரம் கெட்ட நேரம் பாத்துக்கிட்டு உட்காந்திருக்கச் சொல்றியா? என்ன  விசயம்னு உடனே சொல்லு. மத்ததை நான் பாத்துக்கிறேன்.” பாண்டியன் பதறினான். அது நிஜமான துடிப்பு என்று நன்றாகப் புரிந்தது. 
 
தேன்மொழிக்கு ஒரு வழியாக இவனிடம் இதைச் சொல்லலாம் என்று இறுதியாக முடிவானது. 
 
“அது ஓகே. நாம இப்படி தனியா வந்து நின்னு பேசறது தெரிஞ்சா எங்க அம்மா என்னை வெட்டி உப்புக் கண்டம் வச்சிருவாங்க. அதுக்குத்தான் சொன்னேன். அந்த வீட்டுக்குப் பக்கம் நிக்க பயமா இருந்துச்சு. அதான் தள்ளி வந்தேன்.” 
 
அவள் மட்டுமா தள்ளி வந்தாள். இவனையும் தள்ளிக் கொண்டு அல்லவா வந்திருக்கிறாள். புரியுமா அது அவளுக்கு ? 
 
இவனுக்கு விளக்கம் சொல்லி முடித்து விட்டு – தன் சந்தேகத்தையும் இவன் தலைக்கு  மாற்றி விட்டு  பறந்து விட்டாள். 
 
பாண்டியன் சிந்தனையில் முழ்கினான். சில திட்டங்கள் தீட்டிப் பார்த்தான். தூரத்தே நின்று கொண்டு தென்றல் வீட்டு கண்ணாடி ஜன்னலைப் பதம் பார்க்க முயற்சித்து கொண்டு இருந்தபோது  குமார் வந்து கையோடு இவனை பரிசு வழங்கும் மேடைக்கு கூட்டிப் போய்விட்டான். 
 
அதன் பிறகு அவள் கோலப் போட்டியில் – ஆறுதல் பரிசோ  அல்லது ஸ்பெசல் பரிசோ – ஒரு சின்ன டிபன் பாக்ஸ் பரிசாக வாங்க பாண்டியன் மனம் வாடினான். 
 
டொனேசனை இவன் அள்ளி வழங்கி இருக்கிறான். அதிலிருந்து அவளுக்கு நல்ல பெரிய பரிசு கொடுத்திருக்கலாம் தானே? அதை விட்டு காளிமுத்து சார் வழங்கும் கிப்டே கொடுக்க வேண்டுமா? என்று பொங்கினான்.
 
ஆனால் அதைக் கூட கொடுக்கவிடாமல் தடுத்த அழகிய வீர பாண்டியனை மறந்து விட்டான் இந்தப் பாண்டியன். 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!