EUTV 4

EUTV 4

4

 

                   “அவ்ளோ தான் பிளாஷ்பேக் முடிஞ்சது.” என்று பூங்காவில் வைத்து மலர்விழி தனக்கு கூறிய கதையை வீட்டில் வைத்து தனது மாமன் மகளுகளான மீதி இருவருக்கும் கூறி முடித்திருந்தாள் ஈஸ்வரி.

             “ஒஹ் அதான் மாமாவை வேணாம்ன்னு சொல்லுறீயா நீ?” என்று கார்த்திகா கேட்க, மலர்விழி முறைத்தாள்.

                          “என்ன டி? மாமா வோமான்னுகிட்டு?”

                     “சரி. சரி. அதான் இவரை வேணாம்ன்னு சொல்றீயா” என்று மீண்டும் கார்த்திகா கேட்க அதற்கு மலர்விழி மறுமொழி கூறுவதறக்குள் இடைபுகுந்த ஷிவானி,

                     “எனக்கு ஒரு சந்தேகம்?” என்று இழுக்க, மலர்விழி முழிக்க ஆரம்பித்தாள்.

               ‘இவளை பேசவிட்டோம் நம்ம டப்பா டான்ஸ் ஆடிரும்… ஆட்டையை கலை டி மலரு..’

                      “உனக்கு என்ன டவுட்? இந்த கல்யாணம் நின்ன பின்னாடி நீ அவரை கட்டிக்கிட்டா நான் கோவப்படுவேன்னா இதானே உன் டவுட்”

                         “அதுவும் ஒரு டவுட் தான். இது இரண்டாவது, முதல் டவுட் வேற?”

                      “உன் டவுட் எல்லாம் தூக்கி குப்பையில போட்டுட்டு போய் பப்ளிக் எக்ஸாம்க்கு படிக்க பாரு போடி” என்று துரத்தப்பார்க்க,

                        “ஹே நீ ஏன் என்னை விரட்ட பாக்குற? சம்தீங்க் பிஷி. நீங்க ரெண்டு பேரும் என்ன பேக்கு மாதிரி அவள் சொல்லுறது எல்லாம் நம்பிக்கிட்டு இருக்கீங்க” என்று ஷிவானி கூற, கார்த்திகாவும் ஈஸ்வரியும் அலார்ட் ஆகினர்.

                        “ஆமாம் நீ ஏன் சுடுதண்ணீ மேலப்பட்ட தெருநாய் மாதிரி பதறுற? ஷிவுக்குட்டி நீ உன் டவுட்டை கேளு டி?” என்று ஈஸ்வரி கூறிவிட என்ன கேட்க போகிறாளோ என்ற பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள் மலர்விழி.

        அவள் பதறியது சரி என்பதைப்போன்று தான் ஷிவானி தனது சந்தேகத்தை கேட்டிருந்தாள்.

               “பார்க்ல அவர் வந்து நம்ம மலரை பாடச்சொன்னார் அப்புறம் எதோ பர்ஸ்ட் நைட் பத்தி பேசுனாருன்னு சொன்னீல்ல ? ஆனால் இப்ப சொன்ன ஃபிளாஷ்பேக்ல அப்படி ஒரு சீனே வரலையே இவளுக்கு பாடத்தெரியும்ன்னும் அந்த பாட்டு தான் பிடிக்கும்ன்னும் எப்படி அவருக்கு தெரியும்? இவ எதுவோ நம்மக்கிட்ட இருந்து மறைக்க பாக்குறா?” என்று ஷிவானி கொளுத்திப்போட ஈஸ்வரியும் கார்த்திகாவும் ஆட ஆமாம் என்றவாறு மலர்விழியை கேள்வியாக நோக்கினர்.

                      “அது வந்து… எப்ப நடந்துச்சுன்னா…” என்று மலர்விழி இழுக்க,

                                “ச்சீ இழுக்காம மேட்டர்க்கு வா…” என்று மூவரும் ஒருசேர கூற, கேவலமான ஒரு சிரிப்புடன் மறுபடியும் ஒரு கொசுவத்தி சுருள் சுத்த ஆரம்பித்தாள்.

                      “நான் காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்துல எங்க டிபார்ட்மென்ட்க்கு வந்த கெஸ்ட் லெக்சரர் தான் கணிதன். அந்த ஆளை முதல் தடவை பார்த்த்து அப்படியே மனசுல ஒட்டிக்கிச்சு. அன்னைக்கு எங்களுக்கு ஃபிரஸர் டே செலிபிரேசன்… ”

               “மலரு…”

                “சொல்லு டி…”

                 “ஹே மலரு…” என்று கல்லூரியில் காலடி வைத்த முதல்நாளன்று புதுமுகமாக அறிமுகமாகி ஒரே வாரத்தில் மலர்விழியின் உயிர் தோழியான பாரதி மலரை ஒரு மார்க்கமாக அழைத்துக்கொண்டிருந்தாள்.

                  “என்ன டி உனக்கு இப்ப? ” என்று எரிச்சலான மலர்விழி  கேட்கவும், அவளது இளஞ்சிவப்பு நிற தாவணியின் நுனியை திருகியவாறு இருந்த பாரதி “நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன் டி…” என்று கூற,

                   பாரதியின் வெட்கத்திலயும் குழைவிலும் வந்த சிரிப்பை அடக்கிய மலர்விழி “மேடமை யாரு லவ் பண்ண வரிசையில நிக்குறாங்களாம். சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல?”

                      “யாரும் வரிசையில நிக்கலை. நான் தான் இன்னைக்கு கண்டுபிடிச்சு இனிமே லவ் பண்ணப் போறேன்.”

                         “ஒஹோ… எப்படி யாரை கண்டுபிடிக்க போறீங்க?”

                        “அதான் எனக்கும் தெரியலை டி. அதான் உங்கிட்ட ஐடியா கேட்கலாம்ன்னு உன்னை கூப்பிட்டேன்.”  என்று மலர்விழியின் தாவணியின் நுனியில் அழகுக்காக ஒட்டியிருந்த கற்களை பிய்ந்துவிட்டவாறு கேட்டாள் பாரதி.

                          “எடு செருப்ப நாயே! முதல் என் தாவணியை விடு டி. விட்டா சாய்ந்தரம் வீட்டுக்கு போறதுக்குள்ள தாவணியை உருவி கக்கத்துல வைச்சுக்குவ போல.” என்று பாரதியின் கையை தள்ளிவிட்டாள் மலர்விழி.

                     “சரி சரி… விட்டுடேன்… ஐடியா சொல்லு” என்று தனது எண்ணத்திலே குறியாக இருந்தாள் பாரதி.

                     பாரதியை ஒரு மாதிரி பார்த்த மலர்விழி “ஏன்னவாம் மேடமுக்கு  தீடீர்ன்னு உடனே காதலிக்கனும்னு ஒரு எண்ணம்?”

                      “அதுவா மலரு… நேத்து கலைஞர் டிவில பூ படம் போட்டாங்க. அதுல அந்த பிள்ளை எப்படி உருகி உருகி அவனை லவ் பண்ணுது. ரொம்ப மனசை தொட்டுருச்சு அந்த படம். அதுனால நான் ரொம்ப டீப்பா உடனே ஒரு ஒன்சைட் லவ் பண்ணனும் டி…”

                      பாரதியின் இந்த பதிலில் அவளை ‘இது ஒரு தினுசான லூசு போல டா’ என்றவாறு பார்த்தவள்,

                     “நீ நடத்து செல்லம்…”

                    “உங்கிட்ட என்ன நான் பர்மிஷனா கேட்டேன்? எப்படி ஒரு ஆளை செலக்ட் பண்றதுன்னு ஐடியா சொல்லு மச்சி?” 

                       “வேணும்னா அசிங்கமா உன்னை நாலு வார்த்தை சொல்லுறேன். ஐடியாவெல்லாம் சொல்ல முடியாது”

                        “ஏன்ன மச்சி? நாம அப்டியா பழகிருக்கோம்? சொல்லு டி தங்கம். தோழிக்கு காதலனை செலக்ட் செய்யவே ஹெல்ப் பண்ணவன்னு உன்னை வரலாறு பேசட்டும் டி.” என்று மலர்விழியை சிரிப்புடன் தோளோடு அணைத்தவாறு தான் செய்ய போகும் காவிய காதலுக்கு காதலனை தேர்ந்தெடுக்க மலர்விழியை படுத்தி எடுத்துக்கொண்டிருந்தாள் பாரதி.

                    “சரி சரி. விடு யோசிப்போம். ” என்றவள் சிறிதுநேரம் யோசித்துவிட்டு “உன் லக்கி நம்பர் சொல்லு பார்ப்போம்?” என்று மலர்விழி கேட்க,

                      “என் பிறந்த தேதி செவன் சோ செவன் பிளஸ் செவன் ஃபொர்ட்டின். ஃபொர்ட்டின் மைனஸ் ஃபொர் டென். அதான் என் லக்கி நம்பர்” என்று ரெண்டும் ரெண்டும் நாலு எங்க அப்பா பேரு வேலு என்பது போல் லூசு தனமாக ஒரு கணக்கீடு சொல்லி அதான் எனது லக்கி நம்பர் என்று சொல்ல

‘இந்த பரம்பரை பைத்தியம் கூட எல்லாம் என்னை கூட்டு சேர வைச்சு இருக்கீயே முருகா உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்’ என்று கடவுளை திட்டியவள் பாரதியை மண்டையில் நங்கென்று  ஒரு குட்டு வைக்க வேண்டும் என்று மனதினுள் எழுந்த பேரிச்சலை அடக்கி கொண்டு பேச ஆரம்பித்தாள் மலர்விழி.

                  “உன் லக்கி நம்பர் பத்து என்ன? அதுனால இந்த செகண்ட்ல இருந்து வர பத்தாவது ஆளை தான் நீ ஒன்சைடா லவ் பண்ண ஆரம்பிக்க போற சரியா?” என்று மலர்விழி கூறினாள்.

 ஃபிரஸர் டே என்பதால் அவர்களது கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் பின்பக்க நுழைவுவாயிலிருந்து  தள்ளி சிறிது தூரத்தில் அமர்ந்திருந்தனர் மலர்விழியும் பாரதியும்.

                 இவர்கள் இருவரும் தான் முதல் ஆளாக வந்து அந்த ஆடிட்டோரியத்தையே திறந்து வைத்திருந்தனர் என்பதால் இப்பொழுது தான் ஆட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தனர்.

                   மலர்விழி வரும் ஒவ்வொரு ஆண்களுக்குமாக ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பிக்க பாரதி உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நபராக பார்த்துக்கொண்டிருந்தாள். எனெனில் அவளது போதாத காலத்துக்கு கிழடு கட்டையும், ஆகாததும் போகதாதுமாக வந்துக்கொண்டிருக்க அதில் ஜெர்க்காகிய பாரதி, மலர்விழி ஐந்தாம் எண் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ,

                             “ஹேய்.. இது எல்லாம் வேணாம். வேற மாதிரி பண்ணுவோம்.” என்று மலர்விழியின் திருவாயை தன் கரங்களால் மூடியவாறு மறுப்பாக தலையசைத்துக்கொண்டே சொல்ல, அதற்கு அவளது கரங்களூக்கு இடையே வில்லசிரிப்பை உதிர்த்த மலர்விழி

                         “நோ… நோ… அதெல்லாம் முடியாது. இதான் உன் தலையெழுத்து. இப்படி தான் பண்ணணும்.  பத்தாவாதா யாரு வாரங்களோ அவங்களை தான் நீ லவ்ஸ் விடனும். ”

                        “நான் ஆட்டைக்கே வரலைப்பா. நீயா எதாவது பண்ணு போ…” என்றவாறு மலர்விழியை விட்டு ஒரு நாற்காலி எழுந்து அமர்ந்துக்கொள்ள, அதில் கடுப்பாகிய மலர்விழி “ங்கொப்பத்தா ஒடியா போற? பத்தாவதா எவன் வாரானோ அது உன் ஆளூ தான். நான் எண்ணுவேன். ” என்றவாறு மலர்விழி எண்ண ஆரம்பிக்க மீண்டும் பாரதி அவளுக்கு அருகில் வந்தவள் வேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

               மலர்விழி எட்டு என்று எண்ணிமுடித்த பொழுது, நுழைவு வாயிலுக்கு பத்தடி தொலைவில் அவர்களது துறைத்தலைவர் மற்றும் அவர்களது துறையில் பணிப்புரியும் நான்கு பேராசிரியர்களும் வந்துக்கொண்டிருந்தனர்.

                வந்த அனைவருக்கும் எப்படியும் ஐம்பதை தொட்டவர்களூம் ஐம்பதை தொட்டு விட துடிப்பவர்களாகவும், தங்களது கேசத்தை கடன் கொடுத்தவர்களாகவும் இருக்க பாரதி அரண்டுவிட்டாள். தன்னுடைய காதல் கோட்டையை கட்டும் பணியை இந்த விஷப்பாட்டிலிடம் கொடுத்து  இப்படியா புல்டவுசர் விட்டு ஏத்தவிடுவோம் என்று நொந்தவாறு கண்களை மூடி அமர்ந்துவிட்டாள்.

               “ஒன்பது… ப…த்…துதுது” என்று சந்தோசமாக ஆரம்பித்த மலர்விழியின் குரல் தேய்ந்து ஒன்றுமேயில்லாமல் காற்றாகிவிட்ட குரலில் பாரதியின் செவியை அடைய

 சட்டென்று நிமிர்ந்தவள் நுழைவுவாயிலை பார்க்க, அங்கே இளஞ்சிவப்பு நிற சட்டையும் அடர்நீல நிற ஜீன்ஸ்ம் அணிந்து ஆறடி உயரத்தில், கட்டுமஸ்தான தேகத்தோடு, காஷ்மீர் ஆப்பிள் போன்று செக்கசெவலென இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒருவன் காற்றில் பறக்கும் தனது முன்நெற்றி முடியை ஒதுக்கி விட்டவாறு சிரிப்புடன் வந்துக்கொண்டிருந்தான்.

                  “ஹே..ஹே..ஹே… நன்றி மச்சி… நன்றி மச்சி… இவன் தான் என் ஆளு. என் உயிர் ஆவி எல்லாம் இனி இவனுக்கு தான். உடல் மண்ணுக்கு உயிர் இவனுக்கு. ” என்று என்னேனமோ பாரதி பினாத்திகொண்டிருக்க , மலர்விழியோ தனி உலகத்தில் உலாவிக்கொண்டிருந்தாள்.

                      அந்த ஆடிட்டோரியத்தை யாரோ சட்டென்று தூக்கிகொண்டுப்போய் அண்டார்டிக்காவில் வைத்ததைப்போன்று அந்த இடம் முழுவதும் பனிப்பொழிய, அவனைத்தவிர அங்கிருந்த அனைவரும் இரண்டுகால்கள் கொண்ட இராட்ச மலர்களாக மாறி மணம்பரப்ப பாரதி பேசிக்கொண்டிருந்தது அனைத்தும் சிக்னல் இல்லாத அலைப்பேசி அழைப்பு போன்று விட்டுவிட்டுக்கேட்டுக்கொண்டிருந்தது.

             “மலரு… மலரு…  அவன் நம்மள  நோக்கி தான் வந்துட்டு இருக்கான். எனக்கு வெக்கம் வெக்கமா வருது டி. நீ ஏன் டி கோல்கேட் விளம்பர மாடல் மாதிரி ஈஈஈஈ…ன்னு இளிச்சுட்டு இருக்க. வாயை மூடு டி. பக்கத்துல வந்துட்டான் டி. ” என்று பாரதி மலர்விழியிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் நெருங்கியிருந்தான் அவன்.

             “நீங்க எந்த இயர்?” என்று கேட்க மலர்விழிக்கு அவன் குரல் தேனாக காதில் பாய முதல் தடவை சுவரின் பிடிப்பில்லாமல் நடக்கும் குழந்தையைப் போன்று மனம் தள்ளாடி தள்ளாடி கிலுக்கிகொண்டிருந்தது.

               “ஃப்ர்ஸ்ட் இயர். ” என்று பாரதி சொல்லிக்கொண்டிருக்க, சிரித்துக்கொண்டே மலர்விழி“யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்?” கேட்க, அவளது கேள்வியில் பாரதி அதிர்ந்து நிற்க, இவள் கேள்வி கேட்டவனோ மலர்விழியை முறைத்துக்கொண்டே “கணிதன்… ” என்று கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்க,

                 “எஸ் கியூஸ் மீ கணிதன்… நீங்க எந்த இயர்? ” என்று மீண்டும் மலர்விழி கேட்க, அவளை நன்கு முறைத்தவன் “ஃப்ர்ஸ்ட் இயர் கோஆர்டினேட்டர். உங்களோட அப்ளைடு பிஸிக்ஸ் சார்…” என்று கூறினான்.

  கணிதனின் முதல் வருடம் என்ற வார்த்தையில் குஷியானவள் அவன் அடுத்தடுத்து கூறியவற்றில் பெரிதாக ஆடிப்போகா விட்டாலும் சிறிதளவு ஏமாற்றம் அடைந்த மலர்விழி “ஓஹ்..ஒஹ்… உங்க ஹையிட் என்ன?”.

              கணிதன் ஆடிட்டோரியத்தில் நுழைந்தவுடனே மலர்விழியை கவனித்துவிட்டான்.  அவனை பார்த்தவுடனே அவளது முகம் மற்றும் கண்கள் காட்டிய வர்ணஜாலம் அவனுக்கு எற்புடையதாக இல்லை. ஏனெனில் அந்த பெண் பார்க்க மிகச்சிறிய பெண்ணாக இருந்தாள். அதனால் தான் அவர்களிடம் நெருங்கி எந்த வருடம் என்று கேட்டான். அவன் எதிர்பார்த்ததுப்போலவே சிறியப்பெண் தான். எப்பொழுதும் போல் மற்றவருக்கு கூறும் அறிவுரையை கூறி நல்வழிப்படுத்தலாம் என்று தான் வந்தான். ஆனால் மிக அருகில் அவளது அந்த ரசனை பார்வை ஏனோ அவனை தடுமாற செய்வதாக இருந்தது.

                      இதுப்போன்று பலப்பெண்களின் ஆர்வமான பார்வைகளை, காதல் பார்வைகளையெல்லாம் அவன் கடந்து வந்திருக்கின்றான். ஆனால் இவளின் பார்வை எதோ நெஞ்சாங்கூட்டிற்குள் இறகால் குறுகுறுப்பு ஊட்டுவதாய் இருந்தது. 

                        தன் தடுமாற்றத்தை மறைத்தவாறு அந்த இடத்தை விட்டு  நகரப்போனவனை பெயர் என்னவென்று கேட்க முதன்முதலாக  கூச்சம் என்பதை உணர்ந்தான். தனது பெயரை கூறிவிட்டு இவளிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தவனை எந்த வருடம் என்று கேட்க, தான் ஒரு ஆசிரியர் என்று தெரிந்தால் பயந்து பார்வையை மாற்றிவிடுவாள் என்று நினைத்துகொண்டு கூறினால் அவளோ மிகச்சிறிய ஏமாற்றமே அடைந்தவள் அடுத்து தனது உயரம் என்னவென்று கேட்க நிஜமாகவே அசந்துவிட்டான். ‘என்ன பொண்ணு டா இவ?’

                    “அதை தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற?”  முறைக்க முயன்றும் முடியாமல் உதட்டோரம் சிரிப்பால் துடிக்க கேட்டான் கணிதன்.

                   “எல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ்க்கு தான் சார். சொல்லுங்க?” என்று மலர்விழி உரிமைப்பட்டவனிடம் சினுங்குவதைப் போன்று சினுங்க, பாரதி அவளது சினுங்கலில் அடியே அவர் என் ஆளுடி என்று நினைத்தவாறு பார்க்க,

             “6.1’ ” என்று கணிதன் கூறிவிட்டு வேறு எதுவும் கேட்டுவிடுவாளோ என்று பயந்தவாறு அந்த இடத்தை விட்டு ஒடிவிட்டான்.

      செல்பவனையே அதரங்களில் உறைந்த சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவளின் கரத்தை பிடித்து இழுத்து தனதருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்தாள் பாரதி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!