EUTV 5

EUTV 5

                                                        5

         “மலரு டி… என்ன டி? இவரு நமக்கு வந்த சாராம் டி? எப்புடி சொல்லிக்கொடுக்குற குருவைப்போய்? எனக்கு சங்கட்டமா இருக்கு டி…” என்று பாரதி நெளிந்துக்கொண்டே கூற,

             “காதலுக்கு சாதி,மதம்,இனம்,நாடு,வயசுன்னு எந்த தடையும் கிடையாது செல்லாக்குட்டி. அந்த நோய் யாரை வேணும்னாலும் தாக்கும் ஒகேவா?” என்று சிரித்துக்கொண்டே பாரதியின் இரு கன்னங்களையும் தனது இரு கரங்களால் பிடித்து தலையாட்டிக்கொண்டே மலர்விழி கூறினாள்.

                   அதில் கண்களில் ஒளிவரப்பெற்ற பாரதி, “அப்ப நான் அவரை லவ் பண்றதுல எந்த தப்பும் இல்லையா டி மலரு?”

                      “அவரை நீ லவ் பண்றது பெரிய பாவம் டி பாரு…”

                       “ஏய் ஏன் டி குழப்புற. நீதானே இப்ப சொன்ன காதலுக்கு எந்த தடையும் இல்லைன்னு.”

                         “ஆமாம் பட் உன்னோட உயிர் தோழியுடைய காதலனை நீயும்  காதலிச்சா பெரும் பாவம் டி என் சீப்ஸீ…”

                           “இல்லை எனக்கு புரியலை?”

                         “அதாவது அவரு என்னோட ஆளுன்னு சொல்லுறேன்.” என்று பாரதியின் கண்ணாடி மாளிகையில் மாபெரும் பாறாங்கல்லை தூக்கிப்போட்டிருந்தாள் மலர்விழி.

                          “இதெல்லாம் செல்லாது… செல்லாது. அவரு தான் பத்தாவது ஆளா வந்தாரு. சோ அவரு தான் என் ஆளூ.”

                            “நோ நோ பேபிமா! நீ எப்பயோ இந்த ஆட்டைக்கே வரலைன்னு விலகிட்ட. சோ பத்து பதினைஞ்சு எல்லாம் கிடையாது. அவரும் நானும் சேம் கலர். நான் பிங்க் தாவணி அவரு பிங்க் சட்டை. நான் ப்ளூ கலர் சட்டை பாவாடை அவரும் ப்ளூ கலர் பேண்ட். அவர் அந்த பழனி முருகன் எனக்குன்னே ஆல்டர் பண்ணி அனுப்புன அழகு சிலை. இனிமே அவரு உனக்கு அண்ணன். புரிஞ்சுதா…”

                இப்படியே இவர்கள் இருவர் சண்டையும் காலியாய் கிடந்த அந்த ஆடிட்டோரியம் மாணவர்கள் மற்றும் ஆசிரியாரால் நிரம்பி, பல ஆசிரியர்களும் அவர்களது சீனியர் மாணவர்களும் பேசிசென்று மதியம் இடைவேளை விடும் வரையும் தொடர்ந்துகொண்டிருந்தது.

                  அனைவரும் வெளியே சாப்பிட சென்றுவிட இவர்கள் இருவரும் ஒரு மரத்தினடியில் அமர்ந்துகொண்டு தங்களுக்கு கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டே தொடர்ந்துகொண்டிருந்தனர்.

                “இங்கே பாரு அவரை வைச்சு நான் ஒரு கனவே கண்டுட்டேன். எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ்ஜாகி ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு அவர் மடியில சாய்ஞ்சுட்டு எனக்கு பிடிச்ச நீ பார்த்து என்னை ரசிச்சா…

நான் காட்டு தீயா எரியுறேன் டா…

லேசா கண் அசைச்சா…

கடல் பனியாத்தான் நான் உருகுறேன் டா…

சிறு கல்லா இருந்த நான் இப்போ சிலையானேன் அட உன்னால…

சிறகாக பறந்த நான் இப்போ சிறையானேன் உன்னால….

நீ பார்த்து என்னை ரசிச்சா..                                                                  

பாட்டு பாடிட்டு இருக்கேன் டி. நான் தான் மலர்விழி கணிதன் புரிஞ்சுக்கோ மச்சி. என் வாழ்க்கையில கம்பி விட்டு ஆட்டப்பாக்குறீயே உனக்கு வெட்கமா இல்லை ” என்று மலர்விழி கேட்க,

             “இந்த கனவு எப்ப வந்துச்சு உனக்கு?”

               “ஜஸ்ட் இப்ப உங்கூட பேசிட்டு இருக்கும் போது தான் மச்சி.”

             “நீயாச்சும் இப்பதான் முதலிரவுக்கே போற. அவருக்கும் எனக்கும்  ஒரு பையன் ஒரு பொண்ணு போதும்ன்னு பேமிலி பிளான் பண்ணிட்டோம். பெரியவன் செகண்ட் ஸ்டார்ண்ட். பொன்னு யூகேஜி. சோ அவர் எனக்கு தான் ” இது பாரதி.

                 “இல்லை அவர் இந்த மலர்விழிக்கு தான்.” இது மலர்விழி.

                  “இல்லை அவர் பொண்டாட்டிக்கு தான்….” என்று இன்னொரு குரல் எதிரொலிக்க தோழியர் இருவரும் யாருடா இந்த உரிமைக்குரல் என்று திரும்ப அவர்கள் இருவருக்கும் அருகில் அவர்களது வகுப்பு மாணவி திவ்யா அமர்ந்திருந்தாள்.

             “ஏன்ன டி? ஏற்கனவே இங்கே ரெண்டு பேர் இருக்கோம். இதுல நீ மூணாவதா?”

                “அடச்சீ கருமம் நிறுத்துங்க. காலையிலருந்து நானும் பார்த்துட்டு இருக்கேன். உங்க அக்கப்போரு தாங்கல இதுல நான் வேறயா? போங்கடி… ” என்று திவ்யா அலுத்துக்கொள்ள

                  “அப்ப சரி… அப்ப சரி…” என்று இருவரும் கோரஸ் பாட அவர்களை நோக்கி கேவலமான லுக்கை விட்டவள் தனது தீர்ந்துப்போன தட்டை நிரப்ப சென்று விட, இருவரும் மீண்டும் தங்களது சண்டையை ஆரம்பித்திருந்தனர்.

                     காலையில் அனைத்தும் பேச்சுவார்த்தைகளாக சென்றிருக்க, மதியத்திலிருந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்தது.

              இரண்டு நாட்களாக பாரதி எவ்வளவோ கெஞ்சியும் கொஞ்சியும் பாடுவதற்கும் ஆடுவதற்கும் பெயரை கொடுக்கவேமாட்டேன் என்று அடம்பிடித்திருந்த மலர்விழி கணிதனை கவரவேண்டுமென்று மதிய இடைவெளியில் எப்படிஎப்படியோ விழாவை ஒருங்கமைத்துக்கொண்டிருந்த அவளது சீனியர் மாணவி ஷாலினியிடம் கெஞ்சி தனது பெயரை இணைத்திருந்தாள்.

              பாடுவதற்கு அவளது பெயர் அழைக்கப்பட மேடை நோக்கி புன்சிரிப்புடன் சென்றவளுக்கு  சிறிது பதட்டமோ பயமோ எதுவுமே மலர்விழியிடம் இல்லை.  சிறு வயதிலிருந்தே அவளது அம்மாவின் ஆசையால் பாட்டும் பரதநாட்டியமும் முறைப்படி கற்றிருந்தாள். அவளது தாயின் இறப்பிற்கு பிறகு அவளை தாயாய் அரவணைத்து கொண்டது இந்த பாடலும் நாட்டியமும் தான். அதனாலோ என்னவோ அவளுக்கு படிப்பின் மேல் சுத்தமாக ஆர்வம் செல்லவேயில்லை போன்று. அப்படி சொல்லி தான் அவளது தந்தையும் மலர்விழியை அவளது பத்தாம் வகுப்பிற்கு மேல் அவளது நாட்டியத்திற்கும் பாடலிற்கும் தடை விதிந்திருந்தார்.

             தந்தை சொல்லை எப்பொழுதும் மீறாதவள் முதல்முறையாக அவரது பேச்சை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கணிதனை கவருவதற்காக பதின்ம வயதிற்கே உரிய துடுக்குதனத்துடனும் ஆர்வத்துடனும் இதை செயலாற்ற இறங்கினாள்.

                 மேடையில் ஏறியவள் மைக்கை தனது கரங்களில் வாங்கிக்கொண்டு பாடமல் சுற்றும் முற்றும் கண்களை அலைபாயவிட்டவாறு இருந்தாள். நீங்கள் நினைப்பது சரியே அவள் கணிதனை தான் தேடிக்கொண்டிருந்தாள்.

              மலர்விழி மேடை ஏறுவதற்கு முன்பு வரை அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வலதுபுறம் அமர்ந்திருந்த அவர்களது சீனியர் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். அவள் மேடையை அடைய எடுத்துக்கொண்டிருந்த இடைவேளையில் கணிதன் எங்கோ சென்றிருந்தான்.

                  மலர்விழி மேடை ஏறி பாடமால் தனது முட்டைக்கண்களை உருட்டிக்கொண்டிருக்க  சீனியர்ஸ் அனைவரும் ஷாலினியை தான் முறைத்துக்கொண்டிருந்தனர்.

                   கீழே அமர்ந்திருந்தவர்களும் சலசலக்க ஆரம்பித்திருந்தனர்.

“பேத்தெடுத்த பென்குயினே பாடாம என்ன டி முழிச்சுட்டு இருக்க…” என்று பாரதி இங்கு புலம்ப,

                    “ஹே மலர்விழி என்ன பண்ணிட்டு இருக்க? பாடு கேர்ள்…” என்று மேடையின் ஒரத்தில் இருந்து மலர்விழியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ஷாலினி.

          அதற்குள் “ஹே பாட்டை மறந்துட்டியா? ஏன் மா இப்படி நின்னுட்டு இருக்க? ”

               “உன் பாடல் என்னும் இசைவெள்ளத்தில் நீந்த வந்த எங்களை ஏமாற்றிவிடாதே பெண்ணே… ஏமாற்றிவிடாதே…” என்று மாணவர்கள் கலாய்க்க ஆரம்பிக்க மலர்விழியோ எதையும் கண்டுக்கொள்ளமால் கணிதனையே தேடிக்கொண்டிருந்தாள்.

                   ஷாலினி மிகவும் பதட்டமாகியவள் மேடையில் ஏறி மலர்விழியை இறங்க சொல்லிக்கொண்டிருந்தாள்.

                     பாரதியோ இங்கு, “இப்படி மானத்தை வாங்குறாளே…சத்தியமா இவ என் ப்ரெண்டு கிடையாது. எனக்கு இவ யாருனே தெரியாது.” என்று அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

               “அக்கா… ப்ளீஸ் அக்கா… ஒரு நிமிசம்… ப்ளீஸ்…ப்ளீஸ்…” என்று மலர்விழி கெஞ்ச ஷாலினி என்ன நினைத்தாளோ சரியென்று தலையாட்டிவிட்டு டிஜேவிடம் சென்றவள் தற்பொழுது வந்த பிரபல பாடலை ஒலிக்கவிட சொன்னாள்.

        என்ன இங்கு நடக்கிறது என்பதைப்போல் பார்த்த தங்களது துறைத்தலைவரிடம் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு மலர்விழியை பார்த்தவாறு நின்றுக்கொண்டாள்.

              மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் போய்விட தற்பொழுது இசைத்துக்கொண்டிருக்கும் பாடலுக்கு ஆட்டம் போட ஆரம்பித்திருந்தனர்.

         பாடலும் முடியப்போகும் தருவாயிலிருக்க ஷாலினி மலர்விழியை பயங்கரமாக முறைத்துக்கொண்டிருந்தாள்.

              அவளிடமிருந்து பார்வையை திருப்பிய மலர்விழி முதல் வரிசையில் அமர்ந்திருந்த தங்களது துறை ஆசிரியர்களிடம் திருப்ப அவர்களும் இவளை தான் முறைத்துக்கொண்டிருந்தனர்.

               அவளது துறைத்தலைவர் எதோ அவளிடம் சொல்ல முயற்சி செய்ய, சட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டாள். இதற்குமேல் பாடாவிட்டால் தன்கதி அதோகதி என்று உணர்ந்தவள் கணிதனை சபித்தவாறு பாட தயாரனாள்.

              அங்கு ஒடிக்கொண்டிருந்த பாடலும் முடிந்துவிட, மாணவர்கள் அடுத்த பாடலை போடுமாறு கத்திக்கொண்டிருக்க மலர்விழி ஷாலினியை பார்த்து வேண்டாம் என்று தலையசைத்தவள் தனது தொண்டையை செருமிக்கொண்டு பாட ஆரம்பித்தாள்.

“என் நேரமா என் பெத்த நேரமா

பல பாய்ஸ் பின்ன சுத்த வச்ச வந்த சாபமா

என்னை மட்டுமா எக்கசக்கமா அட

இன்னும் யாரை அலைய வச்ச ரொம்ப பாவமா

வேனும்னு என்னை சிக்க வைச்சுட்டானா

இங்கே தான் எங்கோ ஒளிஞ்சுறிக்கிறானா

பிள்ளையாரே பிள்ளையாரே என் கண்ணில் காட்டு

அவன் யாரு யாரு

சுத்தி சுத்தியே நடுரோட்டில் நிக்கிறேன்

இன்னும் எங்கே தேட தேட

கூட்டத்தில் குழம்பி நிக்கிறேன்….”  என்று பாடலுக்கு முகத்தில் அபிநயம் பிடித்தவாறே பாடிகொண்டிருந்த மலர்விழியின் குரலிலும் அந்த குழந்தை முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷனிலும் ஆடிட்டோரியமே ஆவென்று வாயை பிழந்து பார்த்துக்கொண்டிருந்தது. அவளுக்கு தெரியும் அவளது குரலுக்கு யாரையும் வாயடைக்க செய்யும் சக்தி உள்ளது என்பது…

 

          ஆடிட்டோரியத்தின் பின்வாசல் வழியாக வேகவேகமாக நுழைந்தான் கணிதன்.

              அவனைப் பார்த்ததும் பலவருடங்களாக இருண்டு கிடந்த வீட்டில் தீடிரென்று ஒளிப்பரவியதைப்போன்று அவள் வதனம் மினுமினுப்பை பூசிக்கொள்ள தனது கையிலிருந்த மைக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டவள்

              கணிதனை பார்த்தவாறே

 

ஏய் சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…
குத்துச்சண்ட இத்தோட…
நிப்பாட்டுப் போதும்…
முத்தச்சண்ட என்னோட…
நீ போட வேணும்…

   

நீ பார்த்து என்னை ரசிச்சா…

நான் காட்டு தீயா எரியுறேன் டா…

லேசா கண் அசைச்சா…

கடல் பனியாத்தான் நான் உருகுறேன் டா…

சிறு கல்லா இருந்த நான்

 இப்போ சிலையானேன் அட உன்னால…

சிறகாக பறந்த நான்

இப்போ சிறையானேன் உன்னால….

நீ பார்த்து என்னை ரசிச்சா..

  சிறு ஓடையில் ஒரு ஓரமா…
மனசோட ஒரு காதல்…
மெதந்தோடுதடா…
உன்ன பார்த்ததும் வழியோரமா…
உயிரோட ஒருபாதி…
கழண்டோடுதடா…

உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
என் ஆச ரொம்பப் பாவம்…
கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு…
நீ மோசப் பார்வ வீசி…
மதிகெட்டுத் திரியும்…
மதியப் பாரு…

ஏய் சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…
குத்துச்சண்ட இத்தோட…
நிப்பாட்டுப் போதும்…
முத்தச்சண்ட என்னோட…
நீ போட வேணும்…

ஏய் சண்டக்காரா…
குண்டு முழியில…
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…
குத்துச்சண்ட இத்தோட…
நிப்பாட்டுப் போதும்…
முத்தச்சண்ட என்னோட…
நீ போட வேணும்…”

***

ரிஷபன் “நிஜமாவே மலர்விழி ரொம்ப சூப்பரா பாடுவாங்களா அண்ணா?” என்று கேட்க, அன்றைய நினைவில் கன்னம் குழிய சிரித்தவாறு இருந்த கணிதன், “ஆமாம் டா… அவ பாட ஆரம்பிக்கும் போது நான் இல்லை. வெளியே ஒரு முக்கியமான கால் பேசிட்டு இருந்தேன்.”

                   “இல்லை சார். இங்கே ஒரு மாசம் தான். எக்ஸாம் ரிசல்ட்ஸ் வந்ததும் எப்படியும் வேற காலேஜ் போயிருவேன். ” என்று பேசிக்கொண்டிருந்தவனது காதில் இன்னிசையாக ஆடிட்டோரியத்திலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்க, அந்த குரல் தனது மனதில் எதோ புதுவித அவஸ்தையை ஏற்படுத்த மனம் ஏனோ ததும்பும் நிறை தண்ணீர் லாரிப் போன்று நாலப்புறமும் சிதறிக்கொண்டிருந்தது.

      அந்த மாயக்குரலின் சொந்தக்காரியை காண்பதற்காக வேகமாக உள்ளே நுழைந்தவன் பாடலை பாடிக்கொண்டிருந்தவளை பார்த்து இமைக்க மறந்தான்.

            மலர்விழியோ அவனது வருகையில் அன்றலர்ந்த மலர் போல் முகம் மலர்ந்தவள் அடுத்த பாட்டைப் பாட அரங்கமே ஓஓஓவென்று அலறி அமைதியாகியது.

                அவளின் பார்வையால் மட்டுமல்ல தனது குரலாலும் தன்னை மயக்கமுடியுமென்று அந்த நொடி உணர்ந்தான்.

                    “என்ன வாய்ஸ் டா சாமி இது?” என்று தன்னையறியாமலே வாய்விட்டு கூறியிருந்தான்.

         கணிதனை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவனை யாரோடாவது ஒப்பிட்டுக் கூறுங்கள் என்றால் கண்டிப்பாக பத்தில் எட்டுப்பேர் அவனை புத்தருடன் ஒப்பிட்டு கூறியிருப்பர். அந்தளவுக்கு கணிதன் மாபெரும் மனிதனா என்றால் அது அப்படியில்லை. எதற்கும் சலனப்படாத எதன்மீதும் ஆசைக்கொள்ளாத, ஆதங்கப்படாத சகலத்தையும் தள்ளியிருந்து பார்க்கும் ஒரு ஜீவன்.

            கணிதனுக்கு பதட்டப்பட தெரியாது. கோவப்பட தெரியாது. அனைத்தையும் சிரிப்புடனே கடப்பவன்.  நிகழ்,கடந்த, எதிர் காலம் எல்லாமே அவனுக்கு ஒன்று தான். எதிலும் பற்றில்லை. எதுவும் தன்னை பற்றிக்கொள்ளவும் அனுமதிக்காதவன். அவ்வளவு பெரிய குடும்பத்தில் கூட அரசாங்கம் தற்பொழுது சொல்லும் சமூக இடைவெளியை தனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே கடைப்பிடிப்பவன். சுருங்க சொன்னால் எதற்கும் ஆட்படாதவன். எதையும் தன்னை ஆட்கொள்ளவிடாதவன் கணிதன்.

      இவையனைத்தும் இன்று காலை தன் முன்னே பாடிக்கொண்டிருப்பவளை பார்க்கும் வரை மட்டும்தான். அவளை பார்த்தபின்பு அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தது.

             அவனின் அமைதியான அழகாக சீரமைக்கப்பட்டிருந்த மனம் என்னும் நந்தவனத்தில் முதல் பார்வையிலே இலேசான தென்றலை வீசி செடி,கொடி பூக்களை படபடக்க செய்திருந்தவள் அவனது இதயத்திற்கும் எக்குதப்பாக லயம் மாறி துடிக்க தெரியும் என்று காட்டினாள்.

              இப்பொழுது அவளின் தேன் மதுர குரலின் உபயத்தால் சூறாவளியே வீசி நந்தவனத்தை கன்னா பின்னாவென்று பிய்தெறிந்திருந்தாள் இந்தப்பெண்.

               இந்தப்பெண் தெரிந்து செய்கிறாளா? இல்லை தெரியமால் செய்கிறாளா என்று தெரியவில்லை. எப்படியோ அவனின் அமைதியை சிறிதுசிறிதாக குலைத்துக்கொண்டிருந்தாள்.

            விஜய் “ஹா ஹா ஹா…அண்ணா இந்த சீன்ல உங்க மூளை ஆஜராகி இது மிகவும் ஆபத்தான மிருகம். தாழ்வான பகுதியை நோக்கி ஒடுங்கள்ன்னு அறிவுறுத்தி இருக்குமே…”  என்று கூற ஜோசப் பிரதர்ஸ் சிரிப்பால் அந்த ஜோசப் வில்லாவே அதிர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!