ishq wala love 1

அத்தியாயம் 1:

 

          ஆசைப்பட்ட அனைத்தும் ஒரு சொடுக்கில் கையின் மேல் வந்து  விழுந்துவிட்டால் வாழ்க்கையில்  என்ன சுவாரசியம் இருந்திட போகிறது..  கிடைக்க வாய்ப்பே  இல்லாஎட்ட முடியா உயரத்தில் இருக்கும் ஒன்றை நினைத்து நினைத்து உயிர் உருக, ஊண் உருக காத்து களைத்தலில் தான் சுகமே இருக்கின்றது…. காத்திருப்பது மட்டுமல்ல உருகி கரைவதும் சுகம் தான் காதலில்…

                      தோழர்  எழில்மதி

 

எழில் அக்கா ..!”

எழில்ல்ல்ல்….!”

    “மேம்..!”  என்று பல குரல்கள் அந்த நீண்ட வளாகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து…

      என்னவோ அவர்கள் அனைவரது கேள்விகளுக்கான விடைத்தாளையும் யாரோ எழில்மதியின் மூளைக்குள்  தான் சொருகி வைத்திருக்கிறார்கள் என்பதை  போல் தான் அனைவரும் மாற்றி மாற்றி அவளிடமே தங்களது சந்தேகத்தை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்களை சொல்லியும் குற்றமில்லை. ஏனென்றால் இந்த நிகழ்ச்சியின் பொறுப்பு மற்றும் மேற்பார்வை யார் செய்கிறார்களோ அவர்களிடம் தானே பாவம் அவர்களும் கேட்க முடியும்.

    ஆம் இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் நம் எழில் மதியே தான். புற்றுநோயால் பாதிக்க பட்டு இருப்பவர்களுக்கு தங்களது கூந்தலை வழங்கும் நிகழ்ச்சி . இதில் பல தன்னார்வலார்கள், பொதுமக்கள், கல்லூரி சிட்டுகள் என்று பலர் தங்களது முடியை தானம் செய்தனர்.

             இது போன்று பல நிகழ்ச்சிகள்  இவர்கள் அதாவது இந்த  மீனாட்சி மெமொரியல் ட்ரஷ்ட் மூலம் (meenatchi memorial trust) மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செய்து வந்துள்ளது ஆனால் சென்னை போன்ற மாநாகரில் இதுவே முதல் முறை  என்பதால் சில தடுமாற்றங்கள் இருந்தன

   அவளுக்கும் அது புரிந்து தான் இருந்தது. ஆனாலும்  எழில் மதி ஏகபோக கடுகடுப்பில் இருந்தாள்.

     அதற்கு பல காரணங்கள் இருந்தன..

ஒன்று…

    தனக்கு முன்னே இருந்து ஓன்றரை மணி நேரமாக கேள்வியாக கேட்டு சாவடித்துக்  கொண்டிருக்கும்  ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சியின் நிருபர் மற்றும் அவரின் டீம்.

இரண்டு …

    காலை ஆறுமணிக்கு ஒரு  காபி குடித்தது, இப்பொழுது மணி பண்ணிரெண்டு  ஆகிவிட்டது.  இன்னும் சாப்பிடாததில் வெறியாகி கியா முயா  என்று தங்களுக்குள் சண்டையிட்டு கத்திக்கொண்டிருக்கும் அவளது பெருங்குடலும் , சிறுகுடலும் ..

மூன்று…

     தனக்கு இடப்புறமாக கைபேசியில்  பேசிக்கொண்டு தன்னையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருக்கும் அந்த  மிஸ்டர் பச்செலபுடுங்கி  நிரஞ்சன்…( ஹா ஹா ஹா.. அவனுக்கே அவனுக்கு என்று  சந்தியா வைத்த  பெயர்)காலம் போன காலத்துல..முருகா!’ 

நான்கு

    அலாரம் வைச்சாச்சும் மதியம் இரண்டு மணிக்கு டான்னு தாங்கள் தங்கியிருக்கும் அறையில் தன்னை வந்து பார்க்க சொல்லி கட்டளை பிறப்பித்திருந்த தனது தந்தை சின்னத்தம்பி. இவனுங்க போற போக்க பார்த்தா ராத்திரி எட்டு மணிக்கு கூட தன்னால் சின்னு அப்பாவை பார்க்கமுடியாதுன்னு புலம்பி கொண்டிருக்கும் அவளது மனசாட்சி.

ஐந்து

    அந்த வளாகத்தின் வெவ்வேறு மூலையில்  இருந்துக்கொண்டு  எழில்மதியின் பெயரை ஏலமிட்டு கொண்டிருக்கும் அந்த மூவர்..

      அந்த மூவரின் குரலை வைத்து,இந்த செய்தி கும்பலிடமிருந்து  தப்பித்தால்  தான் உண்டு என்று அவளது மூளை அவளது புலன்களுக்கு வேகமாக ஒரு வாட்ஸாப் செய்தியை தட்டிவிட அதை பக்கென்று பிடித்துக்கொண்ட அவளது வாய்

    “ரொம்ப நன்றி சார்! உங்களோட உதவி இதேபோல் என்றும் எங்களுக்கு வேண்டும். அப்புறம் இன்னொரு முக்கியமான பெரிய குட் நியூஸ் எங்க லதா அம்மா உங்களுக்கு சொல்லுவாங்க. ” என்று கைகூப்பி நன்றி கூறியவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.

   பின்னே அவளுக்கு முதலில் இருந்தே இந்த தொலைக்காட்சி, வானொலி இதிலெல்லாம் பேசுவது  பிடிக்காது என்பதை விட வராது. ஏனென்றால் ஒழுங்காக பேசுகிறோமா அல்லது  ஏதாவது உளறுகிறோமா, முகத்தில் தேவையில்லாத எக்ஸ்பிரஷன் எதுவும் காட்டுகிறோமா என்கின்ற பல யோசனைகளில் பதட்டத்தில் பயங்கரமாக உளற ஆரம்பித்துவிடுவாள்.

     பற்றாக்குறைக்கு இன்று அவர்கள் கேட்கும் கேள்விகள் எதுவும் எழிலுக்கு புரியவில்லை. எதையாவது கூறி சமாளிப்போம் என்று நினைத்துக்கொண்டு இவள் கூறும் எந்த பதிலும் அவர்களுக்கு புரியவில்லை என்பது அவர்களது முகத்திலிருந்தே தெரிந்தது.

      எனவே தான் பத்துமணி போல் ஆரம்பித்த கேள்விகள் பனிரெண்டு மணிவரை இழுத்துவிட்டது.

    எழில் மற்ற விஷயத்தில் எல்லாம் கெட்டி தான். இந்த மாதிரி வரும்போது தான்  கொஞ்சம் என்ன நிறையவே சொதப்பி விடுவாள் . அதனாலே எப்பொழுதும் இந்த பேட்டி எல்லாம் லதா அம்மாவே தான் கொடுப்பார்.

         இன்று அவரால் இங்கு வர முடியாத சூழ்நிலை. எனவே அவரது காரியதரிசி என்பதால் இவள் பேச வேண்டியதாகி போய்விட்டது.

            அதிலும் அந்த பச்செலபுடுங்கி நிரஞ்சனின் பார்வை வேறு கிர்ர்ர்ர்ர்…. பார்த்துட்டே இரு டா ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த முட்டைக்கண்ணை சிணுக்கருக்கி வைச்சு   பணியாரம்  திருப்பி போடுற மாதிரி திருப்புறேன். ஏன் டா உன் வயசென்ன?? என் வயசென்ன?? வயசுக்குனு ஒரு மரியாதை தர வேண்டாம். பிச்சைக்காரன் என்று மனதினுள்ளே தாளித்து கொட்டிக்கொண்டே

       தன்னை நக்கலாக பார்த்து சிரித்தவாறு தன்னை அழைத்திருந்த மூவரில் ஒருத்தியான சந்தியாவை நோக்கி எரிச்சலுடன் சென்றவள்

                       “என்ன டி?” என்று கேட்க,

              தனக்கு முன்னே அமர்ந்திருந்த பெண்மணியின் நீண்ட கூந்தலை சரிபாதி அளவுக்கு கத்திரியால்   வெட்டிக்கொண்டே, “ வாடா என் மச்சி.. வாழைக்காய் பஜ்ஜி.. உன் உடம்பை பிச்சி.. போடப்போறேன் பஜ்ஜி..” என்று தலையை சிலுப்பி அவளது ஆஸ்தான ஹீரோ வைத்திருப்பதைப்போல் முன் நெற்றியில் வழியவிட்டிருந்த முடியாட சந்தியா பாட,

       அவளிடம் கூந்தலை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்த  பெண்மணியோ இவளது பேச்சில் வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்தார்.. பின்னே இருக்காதா இவர் வந்து அமர்ந்ததில் இருந்து அவள் செய்யும் அழும்பு கொஞ்சமா நஞ்சமா…

           “எக்கா சிரிக்காதிங்க அக்கா. மொத்த முடியயையும் நீங்க ஆட்டுற ஆட்டத்துல கைதவறி வெட்டிற போறேன்.. அப்புறம் நீங்க இந்த தங்கையை போட்டு வெளுத்தாலும் குத்தினாலும் கொதறினாலும் ஓட்ட வைக்க முடியாது..”,

              அவளை முறைத்த எழில் ” எதுக்கு டி கூப்பிட்ட? என்ன வேணும்..”

              “நீ தான் வேணும்.! கல்யாணம் பண்ணிக்கிறீயா? ” என்று கண்ணடித்து, உதடுகளை குவித்துக்கேட்க,

                     “அட  கிறுக்கு கழுதை..! உனக்கு இன்னும் வயசு இருக்கு.. வாலிபம் இருக்கு..” என்று எழில்மதி சிவாஜி மாடுலேஷனில் கூற, இருவரும் பக்கென்று சிரித்து விட்டனர்.

              “இதை பாக்குறதுக்கு தான் கூப்பிட்டேன்.. டாடா..”

        அவளை செல்லமாக முறைத்தவள் “இதெல்லாம் ரொம்ப ஓவர்… ஒழுங்கா வேலை பார்க்க விட மாற்றேனு அந்தா வாரான் பாரு அவன் கிட்ட கம்பளைண்ட்  பண்றேன். ” என்று தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த நிரஞ்சனை நோக்கி கை நீட்டியவாறு எழில் மிரட்ட,

     “பாவம் ஒன்னும் தெரியாம உளறிக்கிட்டு இருக்கியே காப்பாத்திவிடுவோம்னு பிளான் போட்டு மூணு பேரும்  ஒரே நேரத்துல கத்தி உன்னை  கூப்பிட்டதுக்கு கம்பளைண்ட்  கொடுப்பங்களாமே கம்பளைண்ட்.. அதுவும் அந்த பச்செல புடுங்கிகிட்ட.. அவனும் அவன் பார்வையும் ” என்று சந்தியா கூறி முடிப்பதற்கும் நிரஞ்சன் அவர்களை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

              வேகமாக வந்தவன் சந்தியாவை ஒரு முறை முறைத்துவிட்டு எழில்மதியிடம் தன்னுடைய அலைபேசியை நீட்டினான்.

       யார்? என்ற கேள்வியுடன் அலைபேசியை வாங்கியவள் பேசுவதற்காக இவர்களிடமிருந்து தள்ளி சென்று விட,

      “சாமா நீக்கேலோவா.. சரோஜா நீக்கேலோவா.. கியா வோ? ” என்று சந்தியா நிரஞ்சனை வம்பிழுப்பதற்காக தூண்டிலை போட,

    ‘அடி  ஆத்தி.. இனிமேல் பேசுனா நிப்பாட்ட மாட்டாளே… இவளை கண்டுக்காத மாதிரியே நிப்போம்என்று ஒரு மைண்ட் வாய்ஸ்ஸை போட்டவன் தள்ளி நின்று அலைபேசியில் காரசாரமாக பேசிக்கொண்டிருந்த எழிலை நோக்கி திரும்பி நின்றுவிட,

அவனின் தற்காப்பு முயற்சியில்  விஷமமாக சிரித்தவள், “எக்கா..?” என்று இழுக்க,

   அவளை நம்பி தலையை கொடுத்து அமர்ந்திருந்த அந்த பெண்மணி “என்ன மா?” என்று அவள் முன்னாடி போட்ட வசனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே கேட்க,

            “ அவள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை…

             அவள் என்னை ஏற்று…க்கொண்டிருந்தால்

             அவளை என் பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருப்பேன்…

             அவள் என்னை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால்

             அவளை என் இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறேன் தீபமாக…

             அவளிருக்கிறாள் தீபமாக.. நான் இருக்கிறேன் பாவமாக…

             அவளிருக்கிறாள் தீபமாக.. நான் இருக்கிறேன் பாவமாக

என்று அவள் சிரிக்காமல் தகுந்த ஏற்ற இறக்கத்துடன் கூறி  தான் ஒரு டீ ஆரின் வெறித்தனமான ரசிகை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்க,

           இந்த டயலாக் தனக்கு தான் என்று புரிந்துகொண்ட நிரஞ்சனுக்கு கட்டுகடங்காமல் கோவமும் அதற்கு மேல் சிரிப்பும் வந்து தொலைய பல்லை கடித்து கொண்டு நின்றான்.

                                “ஏக்கா… ஒய் எக்கா.. சிரிப்பு வந்தா சிரிச்சுரனும். புரியுதா. இப்படி கக்கா போக கஷ்டபடுற காண்டாமிருகம் மாதிரி முஞ்சியை வைச்சுக்க கூடாது.”

அடுத்து என்ன என்ன பேசி இருப்பாளோ அதற்குள் எழில் கொலைவெறியுடன் அவர்களை நோக்கி வந்தாள் .

             “என்ன ஆச்சு மதி??” என்று நிரஞ்சன் கேட்க,

              “கால் மீ அக்கா ஆர் மேடம்…” என்று கடுகடுவென்று பொரிய,

              “அப்படி எல்லாம் கூப்பிட முடியாது. அக்கானு கூப்பிடணும்னா நீ என்னை விட ஒரு இன்ச் ஆச்சும் உயரமா இருந்து இருக்கனும்.” என்று அவனும் கடுப்படிக்க,

                 க்ர்ர்ர்ர்ர்ர்இவனை பார்த்த இந்த இரண்டு வருடங்களிள் லட்சத்தி ஒன்றவாது தடவையாக தனது ஐந்தடி இரண்டு அங்குல உயரத்தை நினைத்து நொந்து கொண்டவள், அவனை நோக்கி ஒரு முறைப்பை கொடுத்து விட்டு

             “நான் ஏர்போர்ட் போறேன்இங்கே பார்த்துகோங்க. ” என்றவள் வேறு எதுவும் பேசாமல் சென்று விட,

               நிரஞ்சன்க்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இவள் எப்போழுது தான் தன் காதலை புரிந்துகொள்வாளோ என்று நினைத்துகொண்டு ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட, அதற்கென்றே காத்து இருந்தவள் போல்

          “ஏஏஏஏபொன்னான மனசே பூவான மனசே வைக்காதே பொண்ணு மேல ஆசைவைக்காதே பொண்ணு மேல ஆசை…” சந்தியா பாட ஒடியே விட்டான்.

சென்னை சர்வேதேச விமான நிலையம்

    மும்பையிலிருந்து சென்னை வரும் ஏர்இந்தியா விமானம் இடையில் ஏற்பட்ட தொழில்நூட்ப கோளாறால் ஒரு மணிநேரம் தாமதமாக சென்னையை வந்தடையும் என்று தேன்மதுர குரலில் அறிவிப்பு வர எழில் மதி நொந்து போய் அருகிலிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தாள்.

        அப்பொழுது செல்பேசி அதிர்ந்து தன் இருப்பை வெளிப்படுத்த எடுத்து பார்த்தாள்.. சந்தியாவிடமிருந்து தான் புலனம் (வாட்ஸாப்) குறுஞ்செய்தி வந்திருந்தது.

        இங்கு வந்துகொண்டிருக்கும் போது தான் அனைத்தையும் அவளுக்கு குறுஞ்செய்தியின் மூலம் கூறியிருந்தாள். அதனால் அந்த டாம் பற்றிய அனைத்து செய்திகளும் ஆவென்று வாயை திறந்திருக்கும் பொம்மையொடு ‘ஆம்பளை பாஞ்சாலி’ என்று பெயர் தாங்கி நாலைந்து வெப்சைட் லிங்க் வந்திருந்தது.

  ‘ஆம்பளை பாஞ்சாலி’ என்ற பெயரை பார்த்தவுடன் வந்த சிரிப்புடன் அவனை அறிந்துகொள்ள ஒவ்வொரு லிங்காக அழுத்தினாள்.

              மொத்தமாக படித்துமுடித்தவள் சிறிதுநேரம் ஸ்தம்ப்பித்து எழுந்தே நின்று விட்டாள். காரணம் அதில் இருந்த செய்திகள் அப்படி.

       அவனை பற்றி அறியும் ஆவலில் ஒரு மணி நேரம் கடந்தது கூட தெரியவில்லை அவளுக்கு . ஆம் தி கிரேட் டாம் ஜகாப்ஸ் சென்னை மண்ணில் தனது பாதங்களை பதித்திருந்தான்.  

                   மீண்டும் அந்த தேன் மதுர குரலின் அறிவிப்பு வர, தனது கவனத்தை போர்டிங்க் விட்டு வெளியே வருபவர்களை நோக்கினாள்.

                   தனது ஆறடி நான்கு அங்குல உயரத்தால் தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் சிறிதாக்கி கொண்டு வீர நடையுடன், முகம் கொள்ளா சிரிப்புடன் எழிலை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.

             முதல் பார்வ்வையிலே இருவரும் அடையாளம் கண்டுக்கொண்டனர்.

                        ‘ஹே பகவான்!! இவன் என்னா இவ்ளோ பெருசா இருக்கான். ’

                           ‘ஒஹ்.. பாய்…!! ஷீ இஸ் சோ சுமால் (oh boy…!she  is so small)’

     இருவரது மனவோட்டமும் இப்படி இருக்க, ஒருவரை ஒருவர் நெருங்கி விட்டனர். எழில் அவனை வரவேற்க்க கையை நீட்ட, அவனோ இருகரம் நீண்டு அணைத்துக்கொள்ள,

“டேய்..டேய் என்ன டா பண்ண்ண்….” அவளை முடிக்க கூட விடாமல் பின்னாடி இருந்து ஒடி வந்த ஆறடி உருவம் இருவரையும் சேர்த்து அணைத்துக்கொள்ள,

 

                எழில் கரும்புமீஸினில் மாட்டிக்கொண்ட சக்கை ஆனாள்…