IV13
IV13
இதய ♥ வேட்கை 13
நாள்கள் மாதங்களாக மாறி ஓடிக் கொண்டிருந்தது.
விஷ்வாவிற்காக என படிப்படியாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாள் திலா.
எந்த நிர்பந்தமும் இன்றி, விஷ்வாவின்மீது கொண்ட பற்றினால் தன்னை அறியாமலேயே மாறிக் கொண்டிருந்தாள் திலா.
விஷ்வாவும் எதையும் எதிர்பார்க்காமல், பெரிதுபடுத்தாமல் இருக்க பழகிக் கொண்டிருந்தான்.
அலுவலகம் சென்று வந்தவனை வரவேற்றவளை வழமைபோல கண்டுகொள்ளவில்லை.
கண்டு கொண்டால் காமத்துப்பாலுக்குரிய தெளிவுரைகள் அனைத்தும் நினைவில் நின்றாடி, விஷ்வாவை சோதனைக்குள்ளாக்கிவிடுகிறது. அதனால் உறவில் துறவு நிலையை பின்பற்றி வாழத் தன்னை பழக்கிக் கொண்டிருந்தான்.
இரவு உணவிற்குப் பிறகு வெளியே சென்று வந்தவன், தனதறையில் படுத்தவாறு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
‘விச்சுக்கு வரவர ஆஃபீஸைத் தவிர வேற எதைப்பத்தின அக்கறையும் இல்லாமப் போச்சு’, என்று நினைத்துக் கொண்டவாறு வலம் வந்தவளை கவனிக்கத் தவறியிருந்தான் விஷ்வா.
ஏனெனில் பெண் என்றுமில்லாமல் சற்றுநேரம் அழகுக்கு அழகு சேர்த்து மனம் திருப்திபெற்ற நிலையில் கணவன் வந்தது முதலே அவனது பார்வைக்காக ஏங்கி எத்தனையோ செய்கிறாள்.
ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தவனைக் கண்ட கொதிப்பில்தான் இந்த குத்தல் பேச்சு. அதுவும் வெளியில் அல்ல. தன் மனதிற்குள் மட்டுமே பேசிக் கொள்கிறாள்.
பத்து நிமிடம் கழித்து விஷ்வாவின் அறைக்குள் சொம்புடன் வந்தவளைக் கண்டு புரியாமல் பார்த்தவனிடம், தான் அவனது அறையில் உறங்க வந்த விசயத்தைக் கூறியிருந்தாள் திலா.
அவ்வப்போது இதுபோல் கூறிவிட்டு, இறுதியில் அவளது அறைக்கே சென்று உறங்குவதை சற்று நாள்களாக வாடிக்கையாக்கியிருந்தாள் பெண்.
அதனால் முதல் முறை உண்டான எதிர்பார்ப்பை அதன்பிறகு வளர்த்துக் கொள்ளாமல், விட்டிருந்தான் விஷ்வா.
ஆனால் என்றுமில்லாமல் கையில் சொம்போடு வந்திருந்தவளை வைத்தகண் எடுக்காமல், யோசனையோடு பார்த்து என்னவெனக் கேட்டிருந்தான்.
திலாவின் கையில் இருந்த சொம்பை ஆராய்ச்சி நோக்கோடு பார்த்து கேட்டவனிடம், ‘சொம்பில் பால் இருக்கு’ என்றிருந்தாள். திலாவின் பேச்சை நம்பாது பேசியவனிடம் அருகில் எடுத்து வந்து சொம்பைக் காட்டி, வேண்டுமானால் குடிக்குமாறு கூறினாள் திலா.
படுக்கையில் படுத்திருந்தவன், தலையை மட்டும் தூக்கி எட்டிப் பார்த்து, வெள்ளையாக இருந்தது பால்தான் என்று உறுதிசெய்துகொண்டு, வேண்டாமென்று திடமாக மறுத்திருந்தான் விஷ்வா.
“எனக்கு எதுவும் வேணாம். நீ குடி இல்லனா எடுத்திட்டுப் போயிரு. குட் நைட்”, என்று கூறிவிட்டு பழையபடி அலைபேசியில் பார்வையைத் திருப்பியிருந்தான் விஷ்வா.
கையில் இருந்த சொம்பை கணவனிடம் வந்து காட்ட, வேண்டவே வேண்டாம் என்று சாதித்தவனை, யோசனையோடு பார்த்தவாறே அங்கிருந்த மேசையின் மீது சொம்பை வைத்தாள் திலா.
அதன்பின், கர்ம சிரத்தையோடு, படுக்கையில் இருந்த விஷ்வாவை அங்கு, இங்கு என நகரச் செய்தவாறு படுக்கையை சீராக்கினாள் திலா.
திலாவின் புதிய செயலால், “இதல்லாம் எதுக்கு திலா! புதுசா என்னன்னவோ செய்திட்டிருக்க? அதுவும் நீ வந்து செய்யுற?”, விஷ்வா
“ம்.. புதுசு புதுசாதானே எல்லாம் கத்துக்க வேண்டியிருக்கு! படுக்கற நாம செய்யாம இதையெல்லாம் ஆளு வச்சா செய்வாங்க?”, என்ற கேள்வியைக் கேட்டு விஷ்வாவை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தினாள் திலா.
“என்னமோ பெரிய பிளானோட வந்திருக்க. ஆனா ஒன்னும் புரியலை!”, வெள்ளந்தியாக விஷ்வாவிடமிருந்து பதில் வந்தது.
“ம்… இனி நான் இங்கதான் படுக்கப் போறேன்னேனே!”, என்று விசயத்தை மறுமுறையும் விஷ்வாவிடம் கூறி படுத்திருந்தவனின் இதயத் துடிப்பை எகிற வைத்திருந்தாள் திலா.
‘அப்போ வந்தவுடனே சொன்னதுலாம் உண்மைதானா!’, என்று பார்த்திருந்தவனின் வாயிலிருந்து, “என்னாது?”, என்று அவனறியாமலேயே அவசரமாக வெளிவந்திருந்தது.
விஷ்வா கேட்ட வார்த்தையின் ரிதமே அவன் இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பதையும், அதிர்ச்சியடைந்தமைக்கான பதட்டத்தின் அளவையும் சுட்டிக் காட்டியிருந்தது.
அதற்குள் அனைத்தையும் சரிசெய்துவிட்டு, விஷ்வாவின் அருகே வந்து ஒரு ஒரத்தில் படுத்திருந்தாள் திலா.
திலாவின் செயலில் விஷ்வா தற்போது மிரண்டிருந்தான்.
“என்னாச்சு திலா? உன் ரூம்ல ஏதும் பிரச்சனையா?”, என்று அதே தோரணையோடு வினவினான்.
“தொண தொணனு பேசாம, தூங்கற வேலய பாருங்க! எனக்குத் தூக்கம் வருது!”, என்று அதிகாரக் குரல் வந்த திசையை புரியாமல், பாவம்போல முகத்தை வைத்தவாறு பார்த்தான் விஷ்வா.
மனம்போல சிலநேரம் மரியாதையோடும், சில நேரம் ஒருமையிலும் மாறி மாறிப் பேசுவதை வழக்கமாக்கியிருந்தாள் திலா.
விஷ்வாவும் பெண் தன்னோடு இணக்கமாக இருந்தாலே போதும் என்கிற நிலையில் எதையும் பெரிதுபடுத்தவில்லை.
‘பயபுள்ள வந்து பக்கத்துல தில்லா படுத்திருக்காளே! இவளுக்கு என்னாச்சு! என்னை இன்னைக்கு தூங்கவிடாம பண்ற ஐடியால வந்திருக்காளோ?’, என்று யோசித்தவனாக தயங்கி, எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள்
“இனி தனித்தனி படுக்கையில்லை!”, என்று தம்ஸ்அப் காட்டியவள், விஷ்வாவிற்கு முதுகுகாட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
‘சோதனை தீரவில்லை, சொல்லியழ யாருமில்ல. முன்னபின்ன அழுததில்ல…’, என்ற வரிகள் விஷ்வாவிற்குள் வந்து செல்ல தனது நிலையை எண்ணி வருந்தியவனாக அலைபேசியை வைத்துவிட்டு, படுக்கையை விட்டு எழுந்து நின்றிருந்தான்.
“தூக்கம் வரலைன்னா கதை சொல்லு விச்சு! நான் கேட்டுகிட்டே அப்டியே தூங்குவேன்!”, இது திலாவின் தில்லானா தில்லான (முத்து பட பாடல் ரிதத்தில் வாசிக்கவும்) வார்த்தை
“…” ‘இப்ப என்னாச்சு திடீர்னு வந்து இங்க படுத்திட்டு, கதை வேற கேக்குது. இது யாருக்கு நல்லதில்லைனு ஒன்னுமே புரியலையே’ இது விஷ்வாவின் புலம்பல்
துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டவன், “ஸ்ட்ராபெர்ரி..!. நான் நீ நினைக்கிற அளவுக்கு ரொம்ப நல்லவன் கிடையாது! ரிஸ்க் எடுக்காதே! நீ போயி எப்பவும்போல உன் ரூம்லயே படுப்பியாம்!”, என்று தன்னைப் பற்றிக் கூறியதோடு, பெண்ணையும் அவளது அறைக்கு அனுப்பும் விதமாகக் கூறியிருந்தான்.
“அதுக்குமேல நீ வருத்தப்படற எதுக்கும் நான் ஒன்னும் பண்ண முடியாது!”, என்று தீர்வாகக் கூறிவிட்டு சற்று நேரம் அமைதி காத்தான் விஷ்வா.
திலாவோ எதைப்பற்றியும் கருத்தில் கொள்ளாது, “இந்தக் கதை இதுவரை நான் கேட்டதே இல்லை விச்சு! தலையும் புரியாம, வாலும் புரியாம! இப்டியும் ஒரு கதையா?”, என்றவள்,
“ஒரு வரிக் கதையா இது. உனக்கு இதை யாரு சொன்னது?”, என்று கேட்க
அதற்குமேல் சிங்கம் ஆடு வேசம் போட்டது போதும் என்ற முடிவோடு பழையபடி சிங்கமாக மாறியிருந்தது.
“வந்து சொல்றேன். வயிட் பண்ணு”, என்று கூறியவன் உண்மையில் திலாவின் அறையைக் காண வெளியே கிளம்பினான்.
‘அல்வாவோ இல்லை அதுக்கு மேல என்னனாலும் இன்னைக்கு ஒரு கை பாக்காம விட, விச்சு என்ன பச்சாவா!’, என்று தனக்குள் கேட்டவாறே வெளியே சென்று பெண்ணின் அறையை நோட்டம் விட்டான்.
அறையில் எந்த மாற்றமும் இன்றி இருப்பதைக் கண்டவன், திலாவின் மாற்றத்தால் மணம் உல்லாசத்தை உணர, ‘கேடியா இருக்கா… முன்னாடியே சொன்னா நானும் ப்ரிப்பேடா இருந்திருப்பேன்ல! ஃப்ரீ பேடா இருந்தவன் இனி ப்ரிப்பேராகணும்’, என்று பொய்யாக அலுத்துக் கொண்டே தனதறையை நோக்கித் திரும்பினான் விஷ்வா.
‘ம்ஹ்ம்.. நம்பி இறங்கறேன்… நல்ல பேரு எடுக்கறேன்!’, என்று வலக்கையை மடக்கி தனக்குத்தானே சூளுரைத்துக் கொண்டு தனதறையை நோக்கி வந்தான்.
‘முன்னாடியே சொல்லியிருந்தா தம்மடிக்காம வீட்லயே இருந்திருப்பேன். தம்மடிச்சா பக்கத்தில வரவே யோசிக்கும் மோப்ப பிசாசு! இதுல இப்டியே கிட்டப்போனா மேலேயே வாமிட்டாபிசேகம் பண்ணாலும் பண்ணிரும்! அதனால இப்ப பிரஷ் பண்ணிக் குளிச்சிஉஉஉ , சே நினைக்கவே அலுப்பா இருக்கு! எப்ப குளிச்சி எப்ப வர நான்! அதுக்குள்ள அவ தூங்கிருவாளே! பேசாம நாளைக்கே கச்சேரிய வச்சிக்கலாம்னு தோணுது’, என்று தனக்குத்தானே கேட்டு, அவசர முடிவையும் தனது சோம்பேறித்தனத்தால் எடுத்திருந்தான் விஷ்வா.
அறைக்குள் நுழைந்து பார்த்தவனது பார்வையில், படுக்கையில் ஒருக்களித்துப் படுத்திருந்தவளைக் கண்டவுடன், திட்டம் போட்டு வந்தவனின் தீர்மானங்கள் காற்றோடு மறைந்து போயிருந்தது.
பெண்ணின் வடிவத்தை நின்றவாற ரசித்தவனுக்குள், ஏதேதோ எண்ணம் எழ, இதுவரை தெரியாத மாற்றங்களையெல்லாம் நினைவில் கொண்டு வந்து, ‘ப்ரீபிளாண்டா பயபுள்ள வந்திருக்கு! அதுகூட தெரியாம ப்பேனு இருந்திருக்கேன் பாரேன்’, என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டான் விஷ்வா.
அதன்பின், ‘பச்சப் புள்ளை என்னவெல்லாம் கனவு கண்டுட்டு வந்துச்சோ பாவம்! ஏமாத்துனா ரதி புருசன் கயித்தைக் கட்டி அடிப்பானாம்ல! எதுக்கு வம்பு! பேசாம அந்தப் புள்ளையோட பச்சைத்தனமான ஆசையெல்லாம் இன்னிக்குலேருந்து நிறைவேத்திரலாம்!’, என்று பெரியமனதோடு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தான்.
குளிக்கும் எண்ணத்திற்கு வந்தவன் பெண்ணைப் பார்த்தவாறே, ‘கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…’, என்ற பாடலை உற்சாகமாக ஹம் செய்தபடியே, பள்ளியறை அரங்கேற்றத்திற்குத் தன்னை தயார் செய்யும் விதமாக குளியலறைக்குள் நுழைந்திருந்தான் விஷ்வா.
குளியலுக்குப் பிறகான குதூகலிக்கும் நிகழ்வுகளுக்காக, கடனே என்று பிரஷ் செய்து, குளித்து, விஷ்வா வெளிவரும்வரை அந்த அறை நிசப்தமாக இருந்தது.
நீண்ட நேரம் எந்த சத்தமும் இன்றி இருக்கவே, படுத்திருந்தவாறே திரும்பி விஷ்வாவைத் தேடினாள் பெண். அறைக்குள் இல்லை ஆனால் பாத்ரூமில் விஷ்வா இருப்பதை கூறாமல் கூறியது விளக்குகளின் வெளிச்சம்.
அட்டாச்டு டாய்லட் பாத்ரூம் ஆகையால் விஷ்வாவின் தற்போதைய நிலையை தனக்கு சாதகமாக உணர்ந்தவளாக, ‘நம்ம இங்க வந்து படுத்த பயத்துல, பயலுக்கு டயேரியாவா இருக்குமோ?’, என்று எண்ணத்தோடு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டாள் திலா.
பெண்ணின் மனம் சொன்னது, ‘விச்சுவாது பயப்படறதாவது! ஏற்கனவே பய ஒரு தடவை பாஞ்சதுலயே பஞ்சராகிப்போன டயராட்டம் பத்துநாளு கிடந்த! அத்தோடவாவது தில்லா இருந்தியா? ஒரேடியா ஊரவிட்டு செங்கோட்டைப் பக்கமா ஓடுனவதான நீயி! இப்ப வந்து பெரிய இவளாட்டம் பேசுர பேச்சைப் பாரேன்! வெக்கமாயில்லை!’ , என்று இடித்துச் சிரித்தது.
தனது சிரிப்பை அத்தோடு நிறுத்தி, ‘அட அதவேற இப்ப நினைச்சா இன்னும் குளிர் காய்ச்சலே வந்திரும் எனக்கு!’, என்ற தலையில் அடித்து தன்னிலையை யோசித்தவாறு இருக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் திலா.
குளியலறைக் கதவு திறக்கவே, அங்கிருந்து வெளிவந்தவனின் மீது தனது பார்வையைத் தேக்கினாள் திலா.
திலாவின் பார்வையை எதிர்கொண்டவன், என்னவென்று புருவத்தை உயர்த்திக் கேட்க, புருவத்தை உயர்த்தியதால், அடர்ந்திருந்த கேசம் மேலெழும்பி கீழே வந்த அழகை ரசித்தவாறே கணவனைப் பார்த்துச் சிரித்தவள், ‘ஒன்னுமில்லை!’ என்று தலையை மறுத்து ஆட்டிச் சிரித்தாள் திலா.
“என்னடீ விடாம சைட்டடிக்கிற!”, என்று கேட்டவனிடம்
“கல்லால அடிக்காதவரை சந்தோசப்படு! சைட்டடிக்கிறதையெல்லாம் வந்து கணக்கு கேட்டுக்கிட்டு! கண்ணுனு ஒன்னு இருந்தா கண்டதையும் அடிக்கறதுதான்! அதுலயும் கட்டுனவனா போயிட்ட! உன்னை அடிக்கலைனா வருங்காலத்துல வரலாறு என்னை தப்பா பேசிறாது…! அதுக்குத்தான்!”, என்று விளக்கம் கூறினாள் திலா.
‘பய குளிச்சி ஃபிரஷ்ஷா வரதைப் பாத்தா ஏதோ பக்கா பிளான்ல இருக்கான்போல! அப்ப நாந்தான் உஷாரா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனுமா!’, என்று தனக்குள் எண்ணியவாறு பழையபடி திரும்பிப் படுத்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் திலா.
“ரொம்பப் பேசாதடீ”, என்றவன், “வந்து வச்சிக்கரேன் உன்னை!”, என்று தலையைத் துவட்டும் பணியைச் செய்து கொண்டிருந்தான்.
‘கடவுளே எல்லாம் நல்லபடியா, எந்தப் பிரச்சனையுமில்லாம நடந்திட்டா நான் தேங்கா ஒடைச்சு அர்ச்சனை பண்றேன்!’, என்று அவசரமாக பிராத்தனை வேறு செய்து கொண்டாள் திலா.
இதற்கிடையில் பேசிய கணவனது வார்த்தைக்கு, “கட்டிக்கிட்டவளை வச்சிக்கரேங்கறீயே! அசிங்கமாயில்லையா விச்சு உனக்கு!”, என்று மீண்டும் அவனிம் வம்பு வளர்த்தாள்.
“எல்லாம் என் நேரன்டி”, என்றவன் அதற்குமேல் அமைதியாகியிருந்தான்.
சற்று நேரத்தில் அருகில் வந்து படுத்தவனை உணர்ந்தவள், எதுவும் பேசத் தோன்றாது அமைதியாக இருந்தாள்.
துவக்கம் எங்கிருந்து என்பதில் தனக்குத்தானே ஆலோசனையில் இருந்தவனை அறியாதவள் நீண்ட நேர அமைதியில் உறங்கத் தயாராகியிருந்தாள்.
நித்திராதேவியின் மடியில் உறக்கத்தை துவங்கியிருந்தாள் திலா. சற்று நேரத்தில் பாதங்களை வருடிய உணர்வில் கால்களை பயந்து உதறியிருந்தாள்.
உதறிய கால்களை மீண்டும் பற்றி மென்மையாக கைகளால் முதலில் தடவிக் கொடுத்தான். கால் விரல்களுக்கு இதமாக சொடுக்கெடுத்தான். பாதங்களில் இருந்த கொலுசை கெண்டைக்கால் வரை ஏற்றி, இறக்கி அழகு பார்த்தான்.
விஷ்வாவின் செயலால் உடலெங்கும் மயிர்கூச்சம் உண்டானதில் சிலிர்ப்பு உண்டாயிற்று பெண்ணுக்கு. பிறகு பாதங்களை பொக்கிஷம்போல ஏந்திய விஷ்வாவினது கைகளின் வெம்மையை உணர்ந்த சந்தோசத்தில் மனம் விம்மித் திளைத்திருந்தாள் திலா.
சூடான இதழ் முத்தத்தை வலது மற்றும் இடது காலின் முன்பாதத்தில் பதித்ததும், ஜிவ்வென காலின் வழிப் பரவிய உணர்வில் சொல்லால் வடித்திட இயலாத மந்தகாசமான உணர்வைப் பெற்றாள் திலா.
விஷ்வாவின் செயலில் புரிந்தபோதும், புரியாத பார்வை தலையைத் தூக்கிப் பார்த்தவளை, புரிய வைக்கும் முயற்சியில் விஷ்வா இறங்கியிருந்தான்.
பயத்தை வெளிக்காட்டாது, இயன்றவரை பூரண ஒத்துழைப்பு தரவேண்டும் என்கிற உத்வேகத்தோடு, திலாவும் மனதளவில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளத் துவங்கியிருந்தாள்.
முத்தத்தில் துவங்கி, பெண்ணின் சித்தத்தை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருந்தான் விஷ்வா.
முத்தத்தில் தோய்த்து தனது எண்ணத்திற்கேற்ப இணங்கச் செய்தவன், இறுதியில் தனது முரட்டுத்தனமான இதழை ஸ்ட்ராபெர்ரி இதழோடு ஸ்பரிசம் கொள்ளச் செய்து, அல்வாவை அளவோடு சுவைத்தான்.
பெண்ணை தன் மன வேட்கைக்கு தக்கவாறு மாற்றத் துவங்கி அதில் வெற்றியும் பெற்றதை, அவளின் இயைந்த நிலையைக் கண்டே உணர்ந்து கொண்டான் விஷ்வா.
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுத்ததில், உணர்வுகளின் வேகத்தில் கொதிக்கத் துவங்கியிருந்தாள் திலா.
பெண்ணை தான் உணரும்முன், பெண் தன்னை உணரவேண்டியதன் அவசியத்தை அறிந்தமையால், அதற்கான ஆயத்த வேலைகளில் நிதானமாகவே செயல்பட்டான் விஷ்வா.
கலையாமல், களைக்காமல் காமனை உணர முடியாது!
களிப்பு கூடும்போது, கசங்கித் துன்புறுவது பெரிய குறையாகத் தோன்றாது.
களிப்பைக் கூட்டும் வித்தைகளை விதைகளாக பெண்ணின் மேனியில் விதைக்கத் துவங்கியிருந்தான் விஷ்வா.
பெண் களிப்பை அறுவடை செய்யத் தயாராகியிருந்தாள்.
உச்சி முதல் உள்ளங்கால்வரை விஷ்வாவின் ஆளுகைக்குட்பட்டு, இதமாகக் கட்டுப்பட்டிருக்க, சுருதி மீட்ட வேண்டிய சரியான கம்பியை முறையாக மீட்டத் தடையாக இருந்த அனைத்தையும் முதலில் நீக்கி, நீக்கிய பகுதியில் நீங்காது தன்னை இடம் மாற்றியிருந்தான் விஷ்வா.
பயந்திருந்தவள், கணவனது சிருங்கார லீலையினால் உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பில் விழிப்போடு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
பருவ வினாக்களுக்குரிய பதிலை, சிறிது சிறிதாக மனமும், உடலும் உணரத் துவங்கிய வேளை.
பெண்ணை பக்குவத்தோடு, நிதானமாக கையாளத் துவங்கியிருந்தான் விஷ்வா.
கிறங்கிக் கிடந்தவளின் கிளர்ச்சிக்கு உரமிட்டவாறு, உத்வேகத்துடன் செயல்பட்டவனை, கைகளால் மாலையாக்கி, காற்றுப்புகாதவாறு உடலோடு உடலை ஐக்கியமாக்கி ஒத்துழைத்தாள் பெண்.
சில நொடிகளின் தேடலும், கூடலும் வெற்றியடைந்தபின், உச்சம் தொட்டு, தனை மீறிய பரவசத்தில் துள்ளித் துடித்து, வெடித்து, பீறிட்ட பெண்ணின் செயலைக் கண்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், அத்தோடு இதமாக திலாவின் முதுகைத் தடவிக் கொடுத்து, பெண்ணை ஆசுவாசம் கொள்ளச் செய்தான்.
முழுமையாக சிற்றின்பக் களிப்பை உணர்ந்து, பெண்ணை உச்சம் பெறச் செய்வது அத்தனை எளிதல்ல என்பதனையும், அதற்கான தனது மெனக்கெடல்களின் காலஅளவு, செயல்பாடுகள் அனைத்தையும் புரிந்து கொண்டவனுக்குள் புன்முறுவல் வந்திருந்தது.
அத்தனை சுகம். முகத்தில் நிம்மதி. அத்தோடு பெருமூச்சு.
செயல்பட்டவன் சிவனே என்று அனைத்தையும் ரசித்துப் பார்த்திருக்க, ஏசியிலும் பெண்ணது மூக்கின் கீழ் பூத்திருந்த வியர்வைத் துளிகளை, தனது இதழ் கொண்டு ஒற்றி எடுத்தவனின் மீசை தந்த குறுகுறுப்பில், சிணுங்கியவள் தன்னவனை முன்பைக் காட்டிலும் இறுக்கி அணைத்து அவனது மார்பில் இளைப்பாறினாள் பெண்.
உடலெங்கும் பாய்ந்து பரவிய இன்பத்தை ஒவ்வொரு செல்லும் ஆர்ப்பரித்துக் கொண்டாடியதை உள்ளுணர்வு உணர்ந்து கொண்டதில், வந்த சுகமது! அதனால் பரவிய நிம்மதி அது! அதனால் எழுந்த நிம்மதியுடனான பெருமூச்சு அது!
பெண்ணவளின் செயலைக் கண்டு, தனக்கான ஒத்துழைப்பைத்தர தன்னவளிடமே சரணடைந்திட, கொண்டவனின் முகம் காண நாணிய முகத்தை புதைத்துக் கொள்ள இடம் தேடியவளைத் தேற்றினான்.
கண்களை மூடியவாறே, தன்னைத் தேற்றியவனின் தேவையை நிறைவேற்றத் தயாரானாள் பெண்.
தேவனாக தனது தேவையை நிறைவேற்ற வந்தவனை, தேவை அறிந்து முகம் சுழிக்காமல், ஒத்துழைக்க, நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின், ஆனால் இதுவரை உணராத, புதுமையான உணர்வைப் பெற்று பூரணமடைந்து, புது சந்தோசத்தை முழுமையாக உணர்ந்து உச்சமடைந்திருந்தான் ஆடவன்.
எத்தனையோ கலவிகளைக் கண்டவனுக்கும், உடலெங்கும் உணர்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்ததை உணர்ந்தான்.
சகதர்மினியின் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டதால் வந்த நிலை இது என்பதனையும் அறிந்திருந்தான்.
கலவியில் கொடுப்பதும் ஆனந்தம், பெறுவதும் ஆனந்தம்.
கலவிக்குப்பின்னும், கலைந்து செல்லாது, பின்னிப் பிணைந்து பிரிய மனமற்றுக் களைத்துக் கிடந்த உள்ளங்களை, உறக்கம் அடுத்தடுத்து இனிதே தழுவிக் கொண்டது.
எதையும் சிந்திக்கவோ, நிந்திக்கவோ தோன்றாது நிம்மதியாக நிறைவோடு உறங்கியிருந்தாள் திலா.
பெண்ணிற்காக ஒவ்வொன்றையும் கவனமெடுத்து, நிதானமாகச் செயல்பட்டவனுக்கு, பெண்ணின் நாணமும், குங்குமத்தைப் பூசிக்கொண்டது போன்று மாறியிருந்த திலாவின் வதனமும், நிறைவு கொண்ட மனதைக் காட்டிட, ஆடவனின் மனமும் பூரண திருப்தியை பெற்றது.
கூடலுக்குப் பின்னும் முத்தமழையை பொழிந்திருந்தான்.
“தாங்க்ஸ்டா”, என்ற கணவனின் சொல்லைக் கேட்டபோதும், “ம்ம்…”, திலா
அடுத்தடுத்து விஷ்வா எதைப் பேசினாலும், கேட்டாலும், திலாவிடமிருந்து, “ம்ம்..”, என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் பேசவில்லை.
இதுவே பெண் மயக்கத்திலிருந்து மீளாத நிலையை எடுத்துரைக்க, முதுகைத் தட்டிக் கொடுத்தே உறங்க வைத்திருந்தான் அந்தக் கள்வன்.
பிறகே, தான் உறங்கத் துவங்கினான்.
கூடல் தந்த நிறைவு நிம்மதியான உறக்கத்தையும், இனிய கனவுகளையும் இருவருக்கும் தந்திருந்தது.
காலையில் எழுந்தவனின் கண்களில் படாமல் இருந்தவளைக் கண்டு, பார்வையாலேயே தேடினான் விஷ்வா.
பெண் வீட்டில் இருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லாமல் இருந்தது.
‘பிடிச்சுத்தானே எல்லாம் நடந்துது. இப்ப என்னாச்சு இவளுக்கு? எங்க போனா?’, என்று நினைப்போடு, திலாவின் அறை, அடுக்களை, மாடியில் இருந்த பெண்ணின் அறை அனைத்தையும் சென்று கண்டவனுக்கு, பெண்ணைக் காணாததால் குழப்பம் வந்து குடியேறியிருந்தது.
தலையைத் தாங்கியவாறு தனதறையில் அமர்ந்திருந்தவன், வீட்டில் திலா எங்கு சென்றாள் என்கிற விசயம் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
‘கையில ஏதோ எடுத்துட்டு போனாங்க’, என்பதற்குமேல் செக்யூரிட்டி எதையும் கவனிக்காது இருந்தது விஷ்வாவிற்கு இன்னும் மனதளவில் தொய்வை உண்டாக்கியிருந்தது.
தனதறையில் சென்று காலைக் கடன்களை முடிக்க இயலாத மனநிலையோடு சோம்பி அமர்ந்திருந்தான் விஷ்வா.
அலைபேசியை எடுத்து டயல் செய்திட, அது வீட்டிற்குள் ஒலித்து இன்னும் ஓய்ந்திருந்தான்.
‘எங்கடீ போன என்னை விட்டுட்டு!’, விஷ்வா
விஷ்வா எனும் வித்தகனின் இதய வேட்கையை திலா உணர்ந்து கொள்வாளா?
அடுத்த அத்தியாயத்தில்.