Kaalangalil aval vasantham 21(2)

அவளிடமிருந்து எதிர்ப்பெதுவும் வரவில்லை என்றாலும் அதற்கும் மேலே போக மனமுமில்லை. விடவும் முடியவில்லை.

அபஸ்வரமாக அழைத்தது செல்பேசி!

சிவபூஜை கரடி!

“ச்சே…” வெளிப்படையாகவே கடுப்பானான்.

அதுவரை ஏதோவொரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்த ப்ரீத்திக்கு வீணையின் தந்திகள் அறுந்தது போலிருந்தது.

சட்டென சுயநினைவுக்கு வந்தவள், தன்னை வளைத்திருந்த ஷானின் கைகளை வேகமாக தட்டிவிட்டு எழுந்து அவசர அவசரமாக தன்னை ஆராய்ந்தாள்.

‘எப்போது படுக்கைக்கு வந்தோம்?’ அவளுக்கு சற்றும் நினைவில்லை. ‘அந்தளவுக்கா அவனிடம் மயங்கி போயிருக்கிறேன்?’ மனம் அவளிடம் கேள்வி கேட்க, வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து போனது.

“ஏய் ஒண்ணுமே பண்ணலடி.” என்று சிரித்தவன், செல்பேசியை எக்கி எடுக்க முயன்றான். ஒருமுறை முழுவதுமாக அடித்து ஓய்ந்தது!

“ஒழுங்கா என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்ருக்கலாம்ல…” அவனை முறைத்தாள்.

“முறைச்சு பாக்காத ப்ரீத்…” என்று அவளது கையை பிடித்து இழுக்க, பூவாய் அவன் மேலேயே விழுந்தாள் மங்கை!

“சும்மா இரு ஷான்…” அவனிடமிருந்து தள்ளி அமர முயன்றாள்.

“கொஞ்ச நேரம் முன்ன, நீ அப்படி சொல்லலையே..” உல்லாசமாக அவளது தோளில் கைபோட்டுக் கொண்டு செல்பேசியை எடுக்க, அழைத்தவன், மகேஷ் என்றது. அவசரமாக அழைத்தான் மகேஷுக்கு!

“ப்ச்…” என்று அவள் மறுக்க முயல, அவளை சைகையால் நிறுத்தினான்.

அவனது உடல்மொழி தீவிரமானது.

“சொல்லுங்க மகேஷ்…” ஸ்பீக்கரில் தான் பேசினான். ப்ரீத்தியும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

“சிசிடிவி புட்டேஜை ஹேக் பண்ணி டெலீட் பண்ணியாச்சு சர். இப்ப தான் வெர்கீசும் சஞ்சீவும் முடிச்சாங்க.”

“குட்… சின்ன ஸ்லைட் கூட விடலல்ல..?”

“இல்ல சர். கம்ப்ளீட்லி ஹார்ட் டெலீட்டட்…”

ஹார்ட் டெலீட் என்பதை தலைகீழாக நின்றாலும் மீட்க முடியாது.

“தட்ஸ் குட்…” என்றவன், “அவங்க கோஆர்டினேட்ஸ்?”

அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை ஷான் கேட்க,

“மூணு பேரோட கோஆர்டினேட்ஸும் இப்ப ஒரே இடத்தை தான் காட்டுது சர்… சோ அவங்க மூணு பேரும் இப்ப ஒண்ணா இருக்காங்க…” என்று மகேஷ் கூறினான்.

“ஓ.. எந்த இடம்?”

“ஹோட்டல் பார்க் சர்…”

“ஏ2 ரெஸ்டோபார்ல தான் இருக்கணும். ரவி அடிக்கடி போயிருக்கான்…” என்று சிறிய குரலில் பிரீத்தியிடம் கூறியவன், “ஏ2 ல செக் பண்ணுங்க மகேஷ்…” என்றான்.

“ஓகே சர்…”

“தென் அங்க இருந்து யாராவது லைவ் ரிலே பண்ண முடியுமா? வீடியோ ஆர் ஆடியோ…”

“ட்ரை பண்றேன் சர். அப்படி முடியலைன்னா, முழுசா ரெக்கார்ட் பண்ணிடறேன்…” என்று கூற,

“தட்ஸ் ஸ்மார்ட் இன்டீட்…” என்றவன், ப்ரீத்தியை பார்த்து, “ஓகே வா?” என்று கேட்க, அவள் தலையாட்டினாள். ஆனால் அவளது முகம் யோசனையில் இருந்தது. அதை கவனித்தவன், அதை பற்றி அவளிடம் பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என்று கருதினான்.

“ஓகே சர்…”

“ஸ்பை கேமராவோட யாரையாவது அனுப்பினா லைவ்வா கவர் பண்ணலாம் மகேஷ்…”

“அங்க ஒரு பார் அட்டெண்டர் எனக்கு பழக்கம். இந்த மாதிரி விஷயத்துக்கு யூஸ் பண்ணிக்குவோம். அவர்கிட்ட இந்த வொர்க்க குடுக்கட்டுமா சர்?” என்று மகேஷ் கேட்க,

“உங்களுக்கு நம்பிக்கை இருந்தா குடுங்க மகேஷ். ஆனா இட் ஷுட் பி ஹைலி கான்ஃபிடென்ஷியல்…” என்றும் எச்சரித்தான்.

“கண்டிப்பா சர்…” என்று ஒப்புதல் கூறியவன், இணைப்பை துண்டித்தான்.

நிமிர்ந்து அவளை நேராக பார்த்தான் ஷான்.

“என்ன யோசனை ப்ரீத்?”

“மூணு பேர் – ஐபிஎல் மேட்ச் – டிரஸ்ட் அக்கௌண்ட்ஸ்… இதுதான் சர்கிளா? இல்லன்னா நாம எதையாவது மிஸ் பண்றோமா?” தீவிரமான பாவனையில் அவள் கேட்டாள்.

“பண்ணலாம்… பண்ணாமலும் இருக்கலாம்… ஆனா மூணு பேரும் சேர்ந்து பெரிய அளவுல ரிக்கிங் (rigging) பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இதுல சைலேஷ் எதுக்கு உள்ள வர்றான்?”

“அதை உங்க ஸ்வேதா தான் சொல்லணும்…” சாதாரணமாக கூறுவது போல தோன்றினாலும் வார்த்தைகளில் லேசான வெப்பம்.

“அவ என்னோட ஸ்வேதா ஆகறதுக்கு காரணமே நீ தான்ங்கறதை நான் சொல்ல விரும்பல ப்ரீத். அப்ப எனக்கு மெச்சுரிட்டி இல்ல. நீ முடியாதுன்னு சொன்னதும் உன்னை விட செம பிகரா கரெக்ட் பண்ணி காட்டணும்ன்னு எனக்குள்ள ஈகோ என்னை தூண்டி விட்டு இருக்கணும்.” என்றவன் சற்றே மௌனமானான்.

தவறுக்கு காரணம் என்று யார் மேலும் குற்றம் சாட்ட முடியாது என்பதை உணர்ந்திருந்தான். எப்படி இருந்தாலும் நம்முடைய செயல்களுக்கு நாம் மட்டுமே காரணம். அடுத்தவர்கள் மேல் பழியை போட நினைப்பவர்கள் உண்மையிலேயே பலவீனமானவர்கள்.

‘ஐ ஆம் தி ஸ்ட்ராங்கஸ்ட்…’ என்பதுதான் அவன் அவ்வப்போது அவனுக்கே சொல்லிக் கொள்ளும் மந்திரம். அதை மறந்து விட்டு ப்ரீத்தியின் மேல் பழி போட கூடாது என்பதில் அவன் கவனமாக தெளிவாக இருந்தான்.

“இப்ப இருக்க மெச்சுரிட்டி அப்ப இருந்திருந்தா, நிதானமா இருந்து நீ ஓகே சொல்லனும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்துருப்பேன். அப்ப எனக்கு அந்த பொறுமை இல்ல. பைத்தியம் மாதிரி நானே என்னோட வாழ்க்கைய கெடுத்து குட்டிசுவராக்கிட்டேன்…” உணர்ந்து கூறியவனின் கையை பற்றிக் கொண்டவள்,

“நீ இந்தளவுக்கு ஃபீல் பண்ண வேண்டியதில்ல ஷான். யூ டிசர்வ் தி பெஸ்ட். நான் முடியாதுன்னு சொன்னதுக்கான காரணம் இன்னும் அப்படியே தான் இருக்கு. ஆனா ஒரு நிமிஷம் நான் இப்ப தடுமாறிட்டேன். ஐ அக்செப்ட். உன் மேல இருக்க மரியாதை, இத்தனை நாளா நைட்டும் பகலும் கூடவே இருக்கறது, என்னை நீ ராணி மாதிரி ட்ரீட் பண்றது, எனக்காக சிகரெட்டை விட்டதுன்னு என்னை கொஞ்சம் ஒரு மாதிரியாக்கிடுச்சு. சாரி ஷான்…” மெல்லிய குரலில் கூறியவளை ஆழ்ந்து பார்த்தான்.

“காரணம் இன்னும் அப்படியேத்தான் இருக்குன்னா? என்ன சொல்ல வர்ற? எதுக்கு சாரி சொல்ற?” அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

“என்னோட குடும்பத்தை நீ பார்த்து இருக்க. எல்லாரையும் விட உனக்கு நல்லா தெரியும். பொறுப்பே இல்லாத அப்பா, அவர்கிட்ட போராடிட்டு இருக்க அம்மா, படிச்சுட்டு இருக்க தங்கச்சி… இவங்க எல்லாரையும் தாண்டிட்டு உன் கிட்ட நான் வர முடியாது. அவங்களுக்கு செட்டில் பண்ணிட்டுத்தான் வரணும்னா உனக்கு வயசு போய்டும். இப்பவே உனக்கு ஒரு குடும்பம் வேணும்ன்னு நீ நினைக்கற. ஆனா அதுக்கு நான் நல்ல சாய்ஸ் கிடையாது…”

“அதை நான் சொல்லணும். சூஸ் தி பெஸ்ட் ஆன்சர் மாதிரி வாழ்க்கைய இன்னும் காம்ப்ளிகேட் பண்ணிக்க மாட்டேன் ப்ரீத்தி. என்னோட முட்டாள்தனத்தை நினைச்சு நான் ஃபீல் பண்ணாத நாளே கிடையாது. உனக்கு அந்த பாஸ்ட் தான் பிடிக்கல. அதுக்கு தான் குடும்பத்தை காரணம் காட்டற…”

“நிச்சயமா இல்ல. ஜஸ்ட் நீ இன்னொருத்தியோட செக்ஸுவல் காண்டாக்ட்ல இருந்தங்கறது உன்னோட கேரக்டரை டிஃபைன் பண்ணாதுடா.  அதை தாண்டி என்னோட ஷான் யார்ன்னு எனக்கு தெரியும். அப்பவும் சரி, இப்பவும் சரி, நீ எனக்கு மரியாதைக்குரியவன். அந்த லிமிட்ல நான் நின்னுட்டு இருந்திருக்கணும். நான் கொஞ்சம் லிமிட்ட தாண்டிட்டேன். தயவு செஞ்சு அதை மறந்துடு… ப்ளீஸ்…”

அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன், காதோடு, “எதை மறக்க சொல்ற? என்னால எதையுமே மறக்க முடியாதுடி… நீ எனக்கு வேணும் ப்ரீத். எப்பவுமே கூடவே இருக்கணும். ப்ளீஸ்…” என்று கிசுகிசுப்பாக கூறியவன், மென்மையாக முத்தமிட, அவளது உடலில் சிலிர்ப்போடு நடுக்கமும் பரவியது.

“வேணாம் ஷான். என்னோட வழில போக விடு. நீ இன்னும் கொஞ்சம் பேசினா கண்டிப்பா நான் விழுந்துடுவேன். உன்னை மறுத்து பேச எனக்கு வராது. ஆனா எனக்குள்ள குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் வந்துரும். அது நம்ம வாழ்க்கைய கெடுத்துடும்.” என்று அவளும் கிசுகிசுப்பாகவே கூற, அவளை மெல்ல விடுவித்தான்.

மெளனமாக அவளை பார்த்தவனை பார்த்து, “சின்ன வயசுல இருந்தே அப்படியே பழகிட்டேன் ஷான். என்னோட கடமைய முடிக்காம என்னால ஒரு குடும்பத்தை அமைச்சுக்க முடியாது.” தெளிவாக கூறினாள். ஆனால் அதை பார்த்தவனுக்குத்தான் கோபமும் ஆற்றாமையும்!

“அவங்க எனக்கும் குடும்பம் தான? ஏன் பிரிச்சு பார்க்கற?”

“குடும்பம் தான். ஆனா என்னோட சுமைய நான் மட்டும் தான் சுமக்கனும். அதை ஈசியா உன் தலைல கட்டக் கூடாது. அதை தாண்டி எனக்கு இன்னும் நிறைய சங்கடம் இருக்கு… ப்ளீஸ் புரிஞ்சுக்க…” என்று முடிக்கையில், அவளது குரல் தளர்ந்திருந்தது.

“சரி… எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் மறைக்காம சொல்லு… நீ என்னை லவ் பண்றியா இல்லையா?” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவன் கேட்க,

“என்னை இமோஷனலா கார்னர் பண்ணாத ஷான். நான் ப்ராக்டிக்கலா பேசிட்டு இருக்கேன். லவ் ஈஸ் நத்திங் பட் அன் இன்டராக்ஷன் பிட்வீன் கெமிக்கல்ஸ். ஜஸ்ட் எ காம்படீஷன் பிட்வீன் ஹார்மோன்ஸ்… நீ என்னை ஜெய்க்கிறியா… நான் உன்னை ஜெய்க்கறேனான்னு பாக்கற ஒரு ஹை ப்ரொஃபைல் டிராமா. அவ்வளவுதான். அதுக்கு நீ இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் குடுக்க தேவையில்லை.”

“ரொம்ப பிராக்டிகலா பேசற ப்ரீத். ஆனா உனக்கும் இமோஷன்ஸ் இருக்கு. ஹார்மோன்ஸும் இருக்கு. அதை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நான் பார்த்தேன். அந்த ப்ரீத்தி தான் ஒரிஜினல். இது முகமூடி. எனக்கு மாஸ்க் வேண்டாம்… ஒரிஜினல் தான் வேணும். ஐ ஷால் வெய்ட். கண்டிப்பா எங்க சுத்தினாலும் இங்க தான் வருவ…” உணர்ந்து கூறியவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“கண்டிப்பா உன்கிட்ட தான் வருவேன். வேற எங்க போவேன்? உன்னோட தோளை மட்டும் எனக்கு கொடு. என்னோட சப்போட் சிஸ்டம், என்னோட ப்ராசசிங் சிஸ்டம், என்னோட ப்ரீத்திங் சிஸ்டம் எல்லாமே நீ தான். நீ இல்லைன்னா நான் வெறும் சீரோ. ஆனா என்னால அதுக்கு மேல யோசிக்க முடியாது. யோசிக்கவும் மாட்டேன். யோசிக்கவும் வேண்டாம். கண் முன்னாடி காயத்ரி நிக்கறா. அம்மா ஆதரவே இல்லாம நிக்கற மாதிரி தோணுது.” என்று கூறிக்கொண்டே வந்தவள், “ரொம்பவும் சுயநலவாதியா இருக்கேனோ?” என்று அவனிடமே கேட்டாள்.

“ஒரு வகைல ஆமா.” என்றவன், “சரி விடு… நம்ம வேலைய பார்க்கலாம்…” என்று அவன் கத்தரித்தான்.

அவளது தாழ்வு மனப்பான்மை என்னவென அவனுக்கு தெரியும். அவனிடம் பணம் வாங்க அவ்வளவு யோசித்தவள் அவள். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராக ஒருவன் இருக்கிறான் என்றாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்று சுயமரியாதையோடு நிற்பவள். கொடுத்த பணத்துக்கு வட்டி போட்டு திருப்பி தந்து கொண்டிருக்கிறாள் என்பதுதானே உண்மை! அந்த சுயமரியாதையை அழிப்பது என்பது அவளையே அழிப்பதற்கு சமம் என்பதை அவன் உணராமலில்லை.

ஆனால் காதல் என்பது சுயத்தை தொலைப்பது. நீயும் நானும் வேறல்ல என்று முழுமையாக கலப்பது. அப்படி கலக்க, இருவருக்குமே சுயம் இருக்கக் கூடாது. சற்று முன்னர் தொலைத்ததை போல அவளாக தொலைத்து விட்டு வருவாள். கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

மீண்டும் செல்பேசி அழைத்தது.

மகேஷ் தான்!

“சொல்லுங்க மகேஷ்…”

“சர். லைவ் வாய்ஸ் ரெக்கார்டர் அவங்க டேபிளுக்கு கீழ பிக்ஸ் பண்ணியாச்சு. உங்க போனுக்கு லைவ்வா ரிலேவாகற மாதிரி செட் பண்ணிருக்கேன். ரெக்கார்டும் பண்ணிருவேன். அன்ட் ஸ்பை கேமராவோட அவங்களுக்கு பக்கத்துல ஒரு ஆள் போயாச்சு. அதை ரெக்கார்ட் பண்ணி உங்களுக்கு அனுப்பிடறேன்…” என்று கூற, ஷான் பெரிதாக புன்னகைத்தான்.

“குட் மகேஷ்… வெல்டன்…” என்றவன் தொடர்பை துண்டித்தான்.

ப்ரீத்தியை பார்த்து புன்னகைத்தவன், ஸ்பீக்கரை ஆன் செய்தான். மகேஷ் அனுப்பிய லைவ் ரிலேவை கேட்க ஆரம்பித்தான், ப்ரீத்தியோடு!

அவர்களது பேச்சை கேட்டு அதிர்ந்தவன், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

சதிக்கு பதில் சதிதான்!

துரோகத்துக்கு பதில் துரோகம் தான்!

வஞ்சத்துக்கு பதில் வஞ்சம் தான்!