Kadhalil nan kathaadi aanen

KNKA – 18

“என்னடா சித், அந்த சப்னா கொஞ்சம் அமைதியா இருக்க மாதிரி தெரியுது!!”

 

“ஆமா டா, அவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட ஈஸியா பண்ணிட்டு எப்படி இந்த மாதிரி இருக்கா இப்போ, அது தான் என் டௌட்!!”

 

“சித், நா கேக்க சொன்னதை சூர்யா கிட்ட சொன்னியா?”

 

பிரபா, “ம்ம்..அவனும் சப்னா பழகற பசங்க கிட்ட சும்மா பேசுற மாதிரி பேசி , நிறைய விஷயம் சொன்னான்.”

 

“சப்னா அம்மா, நார்த் இண்டியனை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே, அவங்க பாட்டிக்கு பிடிக்கலையாம்….அவங்க தாத்தா தான் சேர்த்துக்கிட்டாராம். அதனால அந்த பாட்டி பெருசா ஓட்ட மாட்டாங்களாம்.  சப்னா அம்மா ஆனா விடாம லீவ்க்கு எல்லாம் வந்து பசங்களை காட்டி கொஞ்சம் நிறைய முயற்சி பண்ணிருக்காங்க..”

 

“சப்னாவே சொல்லி இருக்களாம், எங்க அம்மாவுக்கு எங்க ரெண்டு பேரையும் நல்லா செட்டில் பண்ணி எங்க பாட்டிகிட்ட பெருமையா காட்றது தான் வாழ்க்கையின் லட்சியமேனு!!”

 

சித்,”ஓ!  அவங்க எடுத்த வாழ்க்கையோட முடிவுல தப்பில்லை, எந்த குறையும் இல்லைனு ப்ரூவ் பண்ண பார்கிறாங்க போல!!”

 

“அப்புறம் எப்படி டா, இவளை இங்க கொண்டு வந்து விட்டாங்க, இவ நிச்சயமா அங்கேயும் ஏதாவது ஏடாகூடமாக பண்ணியிருப்பா!”

 

பிரபா, “வேற வழியில்லாம தான் இருக்கும், சப்னா வீட்டுக்குள்ள கொஞ்ச அடக்கி தான் வாசிப்பளாம்.அவங்க அம்மா , பாட்டி உன் மேல் ஏதாவது  கம்பெளயின் பண்ணா படிப்பை நிறுத்திடுவேன்னு  மிரட்டி இருக்காங்களாம். அவ தான் படிப்புக்கு கொஞ்சம் இம்போர்ட்னஸ் கொடுக்கிறாளே, அதனால நல்ல பிள்ளை வேஷம் தானாம்……”

 

இங்க சப்னாவும் பெரிசா என்ன பண்றது அவனை என்று மண்டை காய்ந்தாள்.  ப்ரோப்ளேம் ஆகாத மாதிரி பையன்களுடன் தான் இது வரை பழகி இருக்கிறாள். காசு தரும் வரை அவன்களுக்கு என்ஜாய்மெண்ட். வேணாமா, ஓக்கே பை தான்….

 

சித் மேல கிறுக்கு பிடிச்சு தான் இப்படி தொங்கினாள், அவன் ரொம்ப நல்லவனும் கூட. அதனால் பெரிய பிரச்சனை எதுவும் இவளுக்கு பண்ணி பேரை கெடுத்துக்க மாட்டான் என்றே நம்பினாள். அவள் வலிய போய் அணைத்தும், அவளை அவமானபடுத்தி விட்டான், அதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே!!!

 

எப்படியும் இனிமே அவன்கிட்ட காரியம் ஆகாது, எனக்கு பாதிப்பு இல்லாம, அவனுக்கு மட்டும் என்ன பண்ணலாம்  என்று யோசித்தவள், அவன் பேரை ரிப்பேர் பண்ணி, மன உளைச்சல் கொடுப்போம்.அப்போது தான் அந்த கெத்து குறையும் என்று, சித் தன்னிடம் தவறாக பேசுவதாகவும் வெளியே கூப்பிட்டு தொல்லை செய்வதாகவும் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தாள்….

 

“எப்ப இருந்து உன்னை இந்த மாதிரி தொல்லை செய்கிறான்?” என்றார் முதல்வர்.

 

“இப்போ இந்த செமஸ்டர் ஆரம்பத்துல இருந்து தான் சர்!”

 

“எப்படி? போன்ல யா? நேர்ல யா?”

 

போன் என்றால் மாட்டிக்கொள்வோம், டெக்னாலஜியே வேண்டாம்… மத்தபடி கடைசி வரை சாதிக்கலாம்ல அவன் பண்ணினான் என்று!!!

 

“நேரில் தான் ஸார், பார்க்கிற அப்போ எல்லாம், கூப்பிட்டு வம்பு பண்றான்!!”

 

ம்ம்..எத்தனை பேரை சர்விஸ்ல பார்த்து இருப்பார்!!!!

 

அவர், தான் விசாரித்து விட்டு இருவரையும் ஒன்றாக கூப்பிடுக்கிறேன் என்றும், தனக்கு கொஞ்சம் டைம் கொடுக்குமாறு கூறவும், சரியென்று தலையாட்டினாள். அவள் அவசரத்துக்கு நடக்குமா? மேற்கொண்டு அவர் சித்தை தனியாக சந்திப்பதை தவிர்க்குமாறு கூறவும், தன்னை நம்புகிறார் போல என்று மகிழ்ந்து போனாள்.

 

அவள் நினைத்தது, முதல்வர் மூலம் எல்லார்க்கும் தெரிய வரும், அவன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள். அவன் பெற்றோர் வரவழைக்கப்படுவார்கள் என்றெல்லாம் கனவு கொண்டிருந்தாள். அவள் மறந்தது, அவன் மூன்றாவது வருட மாணவன், அவனைப் பற்றி அவர்களுக்கு கொஞ்சமாவது தெரியாதா என்று.

 

முதல்வர் அறையில், சித் பிரபா, அவர்களுக்கு உதவிய பேராசிரியர் கூடியிருந்தனர்.

 

“நீங்க முன்னடியே சாரை அப்ரோச் பண்ணது நல்லதா போச்சு, இல்லனா கொஞ்சமாவது உங்க மேலே சந்தேகம் வந்துருக்க வாய்ப்பு இருக்கு, ஏன்னா நல்ல பெண்கள் சில பேர் இன்னும் இந்த மாதிரி எதிர்நோக்க தான் செய்யுறாங்க! சில நல்ல பையன்கள் இதனால் பாதிக்கவும் படுறீங்க உங்களை மாதிரி என்றார்.”

 

“இப்போ என்ன செய்யலாம் என்று இருக்கீங்க, அந்த பெண்ணுடைய தப்பு சீக்கிரம் நிரூபிக்கப்பட்டால் நல்லது. நான் உங்க மேல என்ன ஆக்க்ஷன் எடுத்தேன் என்று அந்த பொண்ணு கேட்க வாய்ப்பு நிறைய இருக்கு. நாளைக்கு அப்பா அம்மாவை சும்மா ஒரு பிரண்ட்லி விசிட் வர சொல்லுங்க, அதை அந்த பொண்ணு பார்க்க வேண்டியது உங்க பொறுப்பு.”

 

“ஓக்கே சார் என்ற சித், ஸார் ஒன் மோர் பேவர், சப்னா அம்மா கிட்ட நாங்க பேசினோம், அவங்க நம்பலை, உங்களை வீடியோ கால்ல பார்த்தா நம்புறேன்னு சொன்னாங்க, அதான்.”

 

” ம்ம். கால் பண்ணி கொடுங்க… “ஹலோ மேடம், ஹௌ ஆர் யூ?”

 

“பைன் ஸார்! பசங்க என்னென்வோ சொல்றாங்களே!”

 

“யெஸ் யெஸ், பாய்ஸ் சொல்றது உண்மை தான்!… நீங்க சீக்கிரம் வந்தா பெட்டர், அண்ட் வரது உங்க டாட்டர்க்கு தெரியாம வரணும்.”

 

“எனக்கு ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க, என் ஆபீஸ்ல சொல்லிட்டு வரதுக்கு…தேங்க் யூ சார்!”

மறுநாள், சப்னாவின் வகுப்பிற்கு பிரேக் டைம் அப்போ, கரெக்டா சித்தின் பெற்றோர் வந்து இறங்கினார்கள்..

 

அவர்கள் இருவரும் சித்தோடு, முதல்வரின் அறைக்கு போவதை திருப்தியுடன் பார்த்து ரசித்தாள் சப்னா.

 

ஸ்வாதி, “எதுக்கு டா சூர்யா, வந்து இருக்காங்க அவங்க பேரண்ட்ஸ்?”

 

“தெரியலையே, பிரபா ப்ரோ வை நேத்து நான் பார்கலையே!”

 

யதார்த்தமாக சப்னாவை பார்த்த ஸ்வாதிக்க, ஒரு நிமிடம் திக் என்றிருந்தது. அவ்ளோ குரூரம் அவள் கண்ணில்… அவங்க வந்ததுக்கும் இவளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று படப்படத்தது நெஞ்சம்….

 

சூர்யாவை சுரண்டினாள், “டேய் அந்த சப்னாவை பாரேன்!”

 

சூர்யா “அவ கண்ணு ஏன் இப்படி பளபளக்குது? சரியான பிசாசு அது, நீ கண்டுக்காத!”

 

ஆனாலும் அவள் மனதில் ஒரு நெருடல் வரத்தான் செய்தது, என்னவோ இருக்கு!!!!

@@@@@

அன்று மதியம், காபி குடிக்கணும் போல இருக்கவே பிருந்தாவும் ஸ்வாதியும் கேன்டீன்க்கு சென்றனர்!

 

அங்கே சித்துவும் பிரபாவும் இருக்க, காபி வாங்கியவர்களை  அருகில் அழைத்து,  சும்மா சீண்டினான் பிரபா,

 

“என்ன காபி யா?  இந்த வெயில்ல!! குடிச்சா வெயிலுக்கு

நெஞ்சுக்குள்ள எல்லாம் எரியாது?? ஏன்டா சித், உனக்கு எரிச்சலா தானே இருக்கும்?????

 

அவனும் தலையை மேலும் கீழும் பாவமாக ஆட்டினான்!!

 

பாரு அவன் கூட சொல்றான்! இனிமே ஜில்லுனு ஜூஸ் குடி, அப்போ தான் உள்ள இருக்கவங்களுக்கு, ஐ மீன் உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் வராம ஜில்லனு இருக்கும்……

 

முகம் சிவந்து விட்டது ஸ்வாதிக்கு!!! மின்னல் போல் வெட்டும் பார்வையை சித் பக்கம் அனுப்பி விட்டு, பிரபாவிடம் சீனியர்ர்ரர்….  முதல்ல, உங்க கம்பெனியை மாத்துறேன்..என்று பத்மினியை மனதில் வைத்து மிரட்டினாள்.

 

அவனா அடங்குவான், “அதான் மாத்திட்டியே மா! எப்படி அருமை பெருமையா வளர்த்தேன் தெரியுமா? இப்ப அப்படியே மாறி போய் கிடக்கு என்று சித்தின் தோளில் முகத்தில் தூசி தட்டுவது போல தட்டி கிழவி மாதிரி பேசிக் காட்டினான்….”

 

அச்சோ….”இவரை பத்தி தெரிஞ்சும், வாயை குடுத்து வாங்கிக்கிட்டேனே!” என்று நொந்த நூடுல்ஸ் ஆனாள்.

 

ஸ்வாதியின் சிவந்த முகம், அதில் தெரிந்த மெலிதான வெட்கம், கொஞ்சம் அசடு வழிவது என எல்லாம் சேர்ந்து சித்தை மயக்கியது……. மௌனமாக அவளையே பார்த்திருந்தான்.

 

“என்ன மச்சான் நா சொல்றது கரெக்ட் தான!!! மயக்கத்தில் ம்ம்ம்…ம்ம்ம் என்றவன் பின் பிரபாவின் சிரிப்பு சத்தத்தில் சுதாரித்து, டேய்!! நீயாச்சு ஸ்வாதியாச்சு, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை….”

 

“எப்படி அலறான் பாரு, உன்னை பார்த்தாலே எங்களுக்கு எல்லாம் பயம்” என்றதும் சித், இவன் விடமாட்டான் என்றபடி, வாடா என்று அவனை இழுத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினான்….

 

போகும் போது ஸ்வாதியை பார்த்து புன்னைகைக்க தவறவில்லை.

 

மனதில் சாரல் அடித்தது ஸ்வாதிக்கு!!

 

“ஷப்பா, இவர்க்கு மட்டும் நம்மளால கௌண்டர் குடுக்கவே முடியாது போலடி”! என்றாள் பிருந்தா…. அவள் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆள் இல்லை, அதனால் புரியவில்லை, எப்போதும் போல் கலாய்கிறான் என்று மட்டுமே நினைத்தாள்.

 

ஆமா, நமக்கும் ஒரு டைம் வராமலா போய்டும், அப்போ பார்த்துக்குவோம்!!! என்ற ஸ்வாதிக்கு, காபி குடிச்சாலும் மனம் ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல குளு குளு என்று இருந்தது… என்ன இப்படி பார்க்கிறார் புதுசா……

 

இவளுக்கு மேல் இருந்தான் சித். ஸ்வாதி அறியாமலே அவனை பார்க்கும் போது அவள் கண் அவனுடன் காதல் பேசியது…. அவ்ளோ தான் சித், டோட்டல் பிளாட்……

@@@@@

சப்னாவின் அம்மா மிகுந்த மன வருத்தத்தில் வந்துக் கொண்டிருந்தார் சென்னைக்கு…  அப்பா கிட்ட கொஞ்சம் கூட வார்த்தையை விட்றாத, தாங்க மாட்டார்… போய்ட்டு வந்து பேசிக்கலாம்…நா தாத்தா வை பார்க்க போறன்னு சொல்லி இருக்கேன்.

 

ம்ம்..இவ எப்படி மா நம்ம வீட்டுல பொறந்தா?

 

எல்லாம் என் தலையெழுத்து!! உன் பாட்டிக்கு தெரிஞ்சுதோ, அவ்ளோ தான்! எல்லாம் தப்பும் நா தான் சொல்லிடுவாங்க….

 

அந்த பையன் போன் பண்ண அப்போ நா பர்ஸ்ட் நம்பவே இல்ல, ஏன்னா இப்ப எல்லாம் யாரையும் நம்ப முடியலை….ஆனா நா சொன்ன மாதிரியே , ப்ரின்சிபாலை வீடியோ கால்ல பேச வைச்சுட்டான்…. அப்போ விஷயம் பெருசோனு ரொம்ப பயமா இருக்கு டி….

 

அவன் சொல்லலை யா மா என்ன விஷயம்னு? சொன்னான், உங்க பொண்ணு என் சம்பந்தம் இல்லாமையே என்னையும் அவளையும் சேர்த்து காலேஜ்ல ருமர் ஸ்பிரேட் பண்றா, நீங்க வர்றீங்களா இல்லை லோக்கல் கார்டியன் கிட்ட இன்போர்ம் பண்ணலாமானு கேட்டான்!!!

 

அதே மும்பையில் வளர்ந்த அவள் அக்கா நல்லா தானே இருக்கா? எங்க தப்பா போச்சு இவளுக்கு???