Kadhalil nan kathaadi aanen

KNKA – 17

ஒரு வாரம் சென்றது கல்லூரி திறந்து. சப்னாவை பார்க்கும் போது எல்லாம் அவர்கள் கட்டிபிடித்ததே ஞாபகம் வந்து  கடுப்பாக இருந்தது ஸ்வாதிக்கு…. அதனால் நாளில் முக்கால்வாசி நேரம் சிடு சிடு வென்றே இருந்தாள்.

 

“ஹே!!! என்ன ஆச்சு உனக்கு?? ஏன் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகுற என்று சூர்யா கூட ஆச்சர்யப்பட்டான்….”

 

அன்று மாலை , அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்….

 

சித்துவும் இப்போதெல்லாம் ஸ்வாதிகாகவே, இவர்களுடன் நன்றாக ஒன்றிவிட்டான். அவர்கள் ரொம்ப கலாட்டா செய்தாலும், இவன் ஒரு அளவுக்கு மேல் போக மாட்டான். அவர்கள் செய்வதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பான். ஸ்வாதி, சித்தை கண்டுகொள்ளாமல் இருப்பது போல இருப்பாள்….  அவள் அவன் மேல் வருத்தத்தில் இருக்கிறாள் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறான் சித்.

 

நம்ம தெரிஞ்சவங்களை பார்த்து தான் சிரிப்போம், அதே போல் நம் உணர்வுகளை தெரியாத ஒருத்தர் கிட்ட காட்ட மாட்டோமே, இவன் கிட்ட எந்த உரிமையில் நீ கோவத்தை காட்டுற, அவன் கிட்ட இருந்து ஏதோ எதிர் பார்க்கிற… இது எல்லாம் ஏன்னு ஸ்வாதிக்கு இன்னும் புரியலை…….

 

அன்றும் ஏதேதோ பேசி கடைசியில் ஸ்வாதியிடம் வந்து முடிந்தது. ஷங்கர் ஸ்வாதியை செமையா கலாய்த்துக் கொண்டிருந்தான்.ஸ்வாதி எங்கிருந்தோ சுட்டு அசைன்மெண்ட் ஒன்றை பக்காவாக பண்ணி விட்டாள். அதனால் ஸ்வாதியை பாராட்டி, அவளை மாதிரி பாலோ பண்ணுங்க என்று ப்ரோபசர் சொன்னதால்.

 

இதை எல்லாம் இவர்களிடம் சொல்லி பார்த்துக்கிட்டே இரு.. அடுத்த தடவை உன் டிரவுசர் கழண்டடும் எனவும்  வெடி சிரிப்பு சிரித்தான் சித்… அவன் அதை கற்பனை வேறு செய்ய அவனால் சிரிப்பை அடக்கவே முடியலை….

 

இவன் சிரிப்பதை பார்த்தவள், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து முறைத்தாள். சித்தும் நிறுத்தி விடலாம் என்று நினைத்தான், ஆனால் முடியவில்லை…மேலும் மேலும் சிரிக்கவும், மற்றவர்கள் எல்லாம் மறந்து போனார்கள் அவளுக்கு,

 

எழுந்து அவன் முன்னால் வந்தவள், ‘சிரிக்காதீங்க!!!’ என்றாள்.

 

ம்ம்..ம்ம்ம்.. என்றவனுக்கு சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது….

 

டக்கென்று அவன் வாயை பொத்தி சிரிச்சீங்க!!! தெரியும்!! என்று மிரட்டவும், தலையை மட்டும் ஆட்டி சிரிக்கமாட்டேன் என்பது போல் கூறியவன் கண்களை சுழற்றி காட்டவும்,

 

அய்யோ, எல்லாரும் இருக்காங்களே என்று அப்போது தான் தோன்றியது….

 

அவர்கள் எல்லாரும் காஷுவலாக தொட்டு பேசிக் கொள்பவர்கள் தான், ஆனால் சித், அந்த காட்டெகிரியில் வரமாட்டானே….

 

‘போச்சு போச்சு!!!’என்று அசடு வழிந்த படி சென்று ஷங்கருக்கு ஒரு அடியை போட்டு விட்டு அமர்ந்தாள்….’

 

யாரும் எதையும் பெரிதாக கண்டுகொள்ளாத மாதிரி இருந்து விட்டு கிளம்பினார்கள்…போகும் வழியிலே ஆரம்பித்து விட்டான் பிரபா. “என்ன டா , என்ன நடக்குது….” எனவும்

 

“நம்ம காலு தான் நடக்குதுனு நினைக்கிறேன்….”

 

“ஜோக்கு!!! மகனே பிச்சுடுவேன்…. நீ டெய்லி என் கூட

வரும் போதே கொஞ்சம் டவுட் தான்…….என்ன டா, சிங்கம் சிங்கிளா இல்ல சுத்தும்,தீடீருனு  மிங்கிள் ஆக பார்க்குதுனு! மரியாதை யா சொல்லிரு……

 

“ஏதாவது இருந்தா தான டா சொல்ல!”

 

“எதுவும் இல்லாமையா சார் வாயை அந்த மேடம் பொத்துறாங்க!!! சாரும் தலையை நல்லா பூம் பூம் மாடு மாதிரி சிரிக்கமாட்டேன்னு ஆட்டுனீங்க!!!!!”

 

“மாடா!!! டேய்!!!! என்றவனுக்கு மறுபடியும் சிரிப்பு தான் வந்தது…….”

 

“மச்சான்! ஒழுங்கா சொல்றியா இல்லையா? மிரட்டினான் பிரபா.”

 

“இல்லனா என்னடா பண்ணுவ?”

 

“இப்போதைக்கு ஸ்வாதி எங்க சைடு தான் இருக்கா, உள்ள பூந்து குட்டையை குழப்பி, கோட்டை தாண்ட விடமாட்டோம்!!” பரவாயில்லை யா மச்சான் என்று ஆர்மஸ் காட்டினான்.

 

“உனக்கு அவ்ளோ கஷ்டமெல்லாம் வேண்டாம், அவளே குழம்பி தான் இருக்கா…..”

 

“டேய்!!! சொல்லவே இல்ல, ப்ரொபோஸ் பண்ணிட்டியா!!! சே! நா பத்மினியை லவ் பண்றதை உன்கிட்ட தான டா பர்ஸ்ட் சொன்னேன்……துரோகி! என்று ஆர்ப்பாட்டம் செய்தான்…”

 

“அடங்கு டா, அவ்ளோ சீன் இல்ல இங்க… அவளுக்கு என் மேலே கோவம்னு மட்டும் தான் நினைச்சேன். ஆனா வேற ஏதோ குழப்பமும் இருக்கு, சில சமயம் அவ கட்டுப்பாடு எல்லாம் மீறி என்கிட்ட பேச வர மாதிரி இருக்கும் ஆனா உடனே ஆஃப் ஆய்டுவா……”

 

“ஒரு வேளை, பர்ஸ்ட் இயர் தான்னு நினைச்சு தயங்குவாளோ?”

 

“பாவி, நான் ஜஸ்ட் பேசி பழகுறதுக்கு தான் சொல்றேன்!! நான் இப்போ ப்ரபோஸ் பண்ணினேன்னு சொன்னனேனா!!!!”

 

“என்ன டா குழப்புற? என்றான் பிரபா!!”

 

சித், “பிரபா நீ சொன்னதே தான், இ வில் வெய்ட் போர் தி ரைட் டைம்…  அவளும் யௌங், நானும் படிக்கணும் …. இன்னும் இரண்டு மூணு வருஷம் கழிச்சும் அவளுக்கு என் மேல ஸ்ட்ரோங் பீலிங் இருந்தா நா லக்கி.”

 

“இப்போதைக்கு நான் அவகிட்ட லவ் பத்தி எல்லாம் பேசமாட்டேன், ஒரு நல்ல பிரின்ட்லி ரீலேஷன்ஷிப் தான் பில்ட் பண்ண ட்ரை பண்றேன்….”

 

“இந்த கதையெல்லாம் அப்புறம், பர்ஸ்ட் உன் ஸ்டேட் ஆப் மைண்ட் என்ன? அதை பூசி மொழுகமா, உன் பேச்சு திறமை எல்லாம் என்கிட்ட காட்டமா சொல்லு பார்ப்போம்…. “எனவும்.

 

லேசாக வெட்க புன்னகை வந்தது சித்துக்கு….

 

“அச்சோ மச்சான் இப்படி சிரிக்கும் போது எவ்ளோ அழகா இருக்க டா! எங்க டா என் சிங்கம்?  என்றவன், பின் அவனே என் சிங்கம் சிறு முயல் ஒன்றிடம் வகையாய் சிக்கி கொண்டது…..என்றவுடன் இருவரும் அட்டகாசமாக சிரித்தார்கள்….”

 

“எனக்கு எப்போ இருந்துனு எல்லாம் கரெக்டா சொல்ல தெரியலை, ஆனா இப்போ அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு..  அவ விஷயத்தில எப்போதுமே நான் என்னை புதுசா டிஸ்கவர் பண்றேன் டா..”

 

“நான் அவ கூட இருக்க அப்போ எல்லாம் ஏதோ மேஜிக் பண்ற மாதிரி ஷி பிரிங்ஸ் மீ ஜாய், ஹாப்பினெஸ் எல்லாம்….. “

 

“ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் ஹெர் டா, அவளை நா இவ்ளோ லவ் பண்றேன் அப்படி வைச்சுக்கவேன்னு சொல்ல மாட்டேன், ஏன்னா என் ஹாப்பினெஸ்ஸே அவ தான்னு நினைக்கிறேன்……”

 

“இதை தான் நீ லவ்னு சொல்றனா, தென் ஐ கேன் சே, இ லவ் ஹெர்

 அ லாட் !!!!!”

 

“செம மச்சி, நீ ஆத்மார்த்தமா பேசுறதை கேக்கவே சந்தோஷமா இருக்கு….  நீ சொல்ற மாதிரி, வி வில் வெய்ட் என்று ஹை – பை கொடுத்தவன்,

 

“அவ சின்ன பொண்ணு, நீங்க இரண்டு பேரும் படிக்கணும், எல்லாம் ஓக்கே தான்… ஆனா இன்னும் பியூ மந்தஸ்ல நீ யூஎஸ் போக போற, போறதுக்கு முன்னாடி ஜஸ்ட் உனக்கு இப்படி ஒரு பீல் இருக்குனு அவ்ளட்ட சொல்லிட்டு போ………”

 

“ம்ம்… பார்ப்போம்…. இப்போதைக்கு என்னால கொஞ்சம் ஹர்ட் ஆன அவ மனசு சரியாகனும், அவ ஹாப்பி யா உங்ககிட்ட பேசுற மாதிரி என்கிட்டயும் பேசணும் அவ்ளோ தான் டா…”

 

ஹாஸ்டல்க்கு சென்ற ஸ்வாதிக்கு, சே! என்ன பண்ணி வைச்சுட்டேன் என்று தலையில் அடித்துக் கொண்டாள்!!! என்ன நினைப்பான் என்னை பத்தி, எல்லாரும் தப்பா நினைப்பாங்களோ என்றெல்லாம் மருகினாள்!

 

அவளை பார்க்க அறைக்கு வந்த பத்மினி, என்ன ஸ்வாதி, ஏன் ஒரு மாதிரி இருக்கே?” எனவும்

 

எம்பேரஸ்ட்டா இருந்த ஸ்வாதியும் டக்கென்று, “இல்ல கா, அவங்க தப்பா நினைச்சு இருப்பாங்களோ”? என்று மொட்டையா கேட்கவும்?

 

“எவங்க”?

 

“அவங்க தான், சித்தார்த் சார்.!” என்று இழுத்தாள்

 

“அட லூசு பொண்ணே!! இதை நினைச்சு தான் இப்படி இருந்தியா??அவனுக்கு பிடிக்கலைனா நேரா சொல்லிடுவான், அவன் தான் பல்லு சுளிக்கிக்கிற அளவுக்கு சிரிச்சானே!! சோ டோன்ட் ஒர்ரி!!”

 

அவள் சொன்னதை கேட்டு சிரிப்பு வந்தாலும், அப்பாடா! என்றிருந்தது அவளுக்கு …உண்மை தானே எப்படி சிரிச்சான்!! எனக்கு கண்ணை காட்டிய பின்னும் சிரித்த முகமாக தான இருந்தான்……. …

ஓ! மேடம்க்கு சிரிச்ச முகம் எல்லாம் ஞாபகம் இருக்கோ என்று நக்கல் பண்ணியது மனசாட்சி ! அவன் மேல் நீ கோவமா இருக்க டி!

ஆமா !!ஆமா!! யார் இல்லைனு சொன்னது????

 

அவனுக்கு இப்ப எல்லாம் கோவமே இல்ல போல, ரொம்ப சாதரணமா தான் இருக்கான். திடீரென்று, அவள் மனசில், ஆமா, நீ எந்த உரிமையில் இன்னிக்கி அவனை தொட்டு, அவன் வாயை பொத்தினே?? அவனும் சிரிக்கிறான்…. இது புரிந்தவுடன் படக்கென்று அவள் இதய துடிப்பு எகிறியது….

 

ஹே, மனசே, லவ் கிவ்னு என்னை கெடுக்காத, சின்ன பிள்ளை நானு… ரொம்ப நாளா டெரரா இருந்த ஒருத்தன் இப்போ பம்மினா, நாங்க அப்படி தான் அட்வாண்டேஜ் எடுப்போம்………

 

அப்படியா, அவன் யாருக்கிட்ட பேசினா, யாருக்கூட போன உனக்கு என்ன!! எதுக்கு பின்னாடியே போன!!!

 

அது…. ஒரு கூரியாசிட்டி!!

 

ஆஹான்…!!!  அப்ப அந்த சப்னாவை அடிக்கிறேன், குத்துறேன்னு அலைஞ்சுது எல்லாம்…… யே!!! மன சாட்சி, “நீ அந்தண்டை போ பா…….படா பேஜராக்கீது, பதில் சொல்ல மிடியல….

 

தன் மனதில் ஓடியதை நினைத்து சத்தமாக சிரித்தாள் ஸ்வாதி…

 

மெதுவாக நடந்து போய், அவர்கள் குட்டியாக வைத்திருந்த கண்ணாடி முன் நின்றவள், சித்தை, நா லவ் பன்றேனா!!! நடு நிலையாக தன் மனதை புரிந்துக் கொள்ள முயன்றாள்.

 

எல்லா பொண்ணுங்களுக்கு ஆசை வர மாதிரி பையன், அதனால சலனப்படுறேனோ!!! மே பி இருக்கலாம் ஸ்வாதி!!!

 

மனசாட்சியை தொட்டு சொல்லு எனவும், ம்ம்… பிடிக்கும் …. அவன் கோவப்பட்டா கஷ்டமா இருந்தது, வருத்தபட்ட அப்போ, டோன்ட் பீல் பேட் , உன் கிஸ் எனக்கு கொஞ்சம் பிடிச்சு தான் இருந்ததுனு சொல்லி இருக்கலாம் என்று குறும்பாக கண் சிமிட்டினாள்…

 

உடனே அவளே போதும் பையத்தியம் ஆய்டாத! முதல்ல படி, இப்போதைக்கு சித்தை நல்லா சைட் அடிச்சு என்ஜாய் பண்ணு. அவனுக்கு கடுகளவுக்கு கூட டௌட் வரக்கூடாது, இல்ல முதல்லே தான்

ஆரம்பிப்பான்! என்ன, அதான் முறைக்கிறத, திட்டுறது எல்லாம்…. ஹஹஹ

 

சரி சரி, லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.  சித்தே, வந்து உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா?? அட கிரகமே, இப்படி கஷ்டமான கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது, உமாவுக்கு (அவள் அம்மா) தெரிஞ்சா பர்ஸ்ட் பேக் அப் பண்ணிட்டு தான் அடுத்த வேலை பார்க்கும்…அப்புறம் ஒரு அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்கோ, சீக்ரெட் ஆசை எல்லாம் வெளிய சொல்ல கூடாது…… ஓக்கே…. பை பை……என்று மனசாட்சிக்கு விடை கொடுத்தவள், இப்ப ரொம்ப யோசிக்காத, படி, என்ஜாய் என்று முடிவெடுத்துக் கொண்டாள்….

 

“சமத்து ஸ்வாதி”!