Kadhalil nan kathaadi aanen

Kadhalil nan kathaadi aanen

KNKA – 26 ( Final episode and Epilogue)

ஒன்றரை வருடங்கள் கழித்து,

 

ஒரு வாரம் முன்பு தான் ஸ்வாதிக்கும் சித்க்கும் நிச்சயதார்த்தம் சேலத்தில் நடந்து முடிந்தது. இன்னும் ஆறு மாதம் கழித்து தான் திருமணம். குணா சொன்னாலும் நிம்மி கேட்கவில்லை..சித்தும் அமைதியாக இருக்கவே அவர் நினைத்ததை சாதித்தார்.

 

சித் நினைத்தால் பிடிவாதம் செய்து இருக்கலாம், ஆனால் உள்ளூர அவனுக்குமே  கொஞ்சம் நாள் கழித்து என்றால் தொழிலில் மேலும் சற்று அழுத்தமாக காலூன்றி கொள்ளலாம்  என்ற நினைப்பு!

 

ஸ்வாதிக்கு தெரியாமல் இருக்குமா இவனை பற்றி, நேரிடையாக கேட்காமல், காரணமே இன்றி அவனை வறுத்தெடுப்பாள்!  அவனும் அவள் எவ்வளவு படுத்தினாலும் தாங்குவான்…..

 

அதற்கும் காய்வாள் அவனிடம், “இப்படியா சாமியே சரணம்னு இருப்பீங்க…. எதிர்த்து எதுவும் சொல்ல தெரியாதா??”

 

“அது சாமி இல்ல ஸ்வாதியே சரணம்”…..

 

“மனுஷன்னா கோவம் வரணும்”

 

“புருஷன்னா கோவம் வரக் கூடாதாம் , பிரபா சொல்லி இருக்கான்!”

 

“அதுக்கு முதல்ல புருஷன் ஆகணும்!”

 

” ஸ்வாதி மா நா யார் டா உனக்கு?”

 

“யூ ஆர் ஜஸ்ட் எ சீனியர்”!!!!! காதலுடன் இப்படியும் போனது இந்த ஒன்றரை வருஷமும்…

 

ஸ்வாதி தான் சித்துடன் சண்டை போடுவாள். உமா, ராஜசேகர், சித் மூவரும் செம ராசி, அந்த அளவிற்கு அவன் மாமியார், மாமனாருடன் அளவளாவுவான்!!! அதனால் தான் நிம்மியின் இந்த காலதாமதம் பெரிதாக பிரச்சனை ஆக வில்லை….

 

இப்போது கூட சண்டை தான், ஸ்வாதி வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு போக போகிறேன் என்கிறாள். இம்முறை அவனுக்கு சப்போர்ட்க்கு உமாவும் ராஜ சேகரும் வரவில்லை, அவர்களுக்கே திருமணத்திற்கு முன்பு மகள் இவ்வாறு தங்களுடன் இருப்பது பிரியம் தான்.

அதனால் நீங்களாச்சு அவளாச்சு என்று சொல்லி விட்டனர்……

 

“ப்ளீஸ் மா, நீ ஊருக்கு போய்ட்டா நா எப்படி உன்னை அடிக்கடி பார்க்கிறது?”

 

“பார்க்க வேண்டாம், உண்மையிலே உங்களுக்கு என் மேல் ஆசை இருந்தா , இந்நேரம் நம்ம கல்யாணமே முடிஞ்சு இருக்கும்!….. நீங்க உங்க

கம்பெனியையே டிவெல்ப் பண்ணுங்க என்றாள் மனத் தாங்கலுடன்.”….

 

“என்ன மா, இப்படி சொல்லிட்டே? இப்ப கொஞ்சம் ஸ்டேபில் பண்ண தான் கல்யாணத்துக்கு அப்புறம் உன் கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் “……

 

“சரி அப்போ அதை ஸ்டேபில் பண்ணுங்க, சிக்ஸ் மந்தக்கு அப்புறம் பார்ப்போம்!!!”

 

“ஏய்! என்னடி, இப்படி எந்த பக்கம் போனாலும் கேட் போடுற!”

 

“என்ன டி யா?? மா போய் இப்ப டி யா?”

 

“அதுவும் செல்லமா தன் மா! உடனே ரிவெர்ஸ் கியர் போட்டான், இவன் தேற மாட்டான்!!”

 

“எனக்காக ப்ளீஸ், போகாத! ஒரு நாளைக்கு மேல உன்னை பார்க்காம என்னால இருக்க முடியாதுனு உனக்கு தெரியும்ல, சேலம் போய்ட்டா ஒரு வாரத்துக்கு ஒரு தடவை கூட கஷ்டம் டா……”

 

“நான் உங்களுக்காக என் லட்சியத்தையே விட்டுட்டு வெய்ட் பண்றேன்… நீங்க எல்லாத்திலையும் உங்க சைடு தான் பார்ப்பீங்க….  ஆன்ட்டி சொன்ன மாதிரி ரெண்டு வருஷம் ஆக போகுது…..நீங்களும் இஷ்டப்பட்டு தான இந்த கேப் !!!  நா தான் விட்டுக் கொடுத்தேன்….”

 

“திஸ் டைம் போர் ஷ்யர், நா ஊருக்கு போக தான் போறேன். நீங்க வரக் கூடாது என்னை பார்க்க! ஆறு மாசம் கழிச்சு உங்களுக்கு விருப்பம் இருந்தா, கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லனா உங்க இஷ்டம் என்று கோவமாக எழுந்து போய் விட்டாள்.”

 

அவளின் மன வருத்தம் புரிந்தது, ஆனால் இனிமேல் ஒன்னும் பண்ண முடியாது… வரக் கூடாது என்று சொன்னால் போகாமல் இருப்பானா என்ன? மாசத்துக்கு இரண்டு தடவை போய் அவளை பார்க்காமல் இருக்க மாட்டான்.

 

முதல் இரண்டு மாதத்திற்க்கு பிறகு, அவளுக்கு கோவமே இல்லை, அவனிடம் அலைய வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டான்.

 

இந்த முறை பேசிக் கொண்டிருக்கும் போது, “உன் லட்சியம் என்னால கெட்டு போச்சா மா?  என்கிட்ட சொன்ன நா அதுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னுனா நினைச்ச என்று வருத்தமா கேட்டான்?”

 

“அதை இன்னுமா நினைச்சிட்டு இருக்கீங்க?”

 

“நீ சொல்றது எதுவுமே எனக்கு மறக்காது…”

 

“கடவுளே!! சரி விடுங்க அதை!”

 

“இல்லை நீ சொல்லு, நம்ம முயற்சி பண்ணுவோம்…”

 

“இல்ல, இனிமே முயற்சி பண்ணாலும் என் லட்சியத்தை அடைய முடியாது என்று சிரித்தாள்!”

 

“அப்படி என்ன லட்சியம், ஒழுங்கா சொல்லு!”

 

” கல்யாணம் பண்ணி 25 வயசுக்குள்ள குழந்தை பெத்துக்கணும்!!!!

என்ன என்னவோ எதிர்பார்த்தவன், சத்தியமா இதை எதிர் பார்க்கவே இல்லை!!”

 

“நம்ம கல்யாணம் பண்ணிக்கிறப்போ எனக்கு இருபத்தி நாலரை வயசு ஆயிடுமே என்று கண்ணடித்து சிரித்தவளை, நம்பவே முடியாமல் பார்த்தான். முறைக்க முயற்சி செய்தவன் முடியாமல் நகைத்து, நிஜமா இது தானா?!”

 

“ஆமா , இப்போ எல்லாம் பொண்ணுங்க கேரியர் முக்கியம்னு குழந்தை பெத்துக்கிறதை ரொம்ப தள்ளி போடுறாங்க, ஆனா உள்ளே இருக்க  நம்ம உறுப்புகளுக்கும்  நம்ம வாழ்க்கை முறை,  சாப்பாடு , தூக்கம் , இதை வைச்சு வயசு ஆகும் , நம்ம வயசை விட கூட இருக்க கூட வாய்ப்பு இருக்காம்… அதனால் காலத்தே பயிர் செய்ங்கிறதை பஃலோ பண்ணனும்னு நினைச்சேன்.”

 

“உன் லட்சியம் ஒரு ஆறு மாசம் தான் லேட் ஆகும் ஓக்கே…. நிறைய நாள் லவ் பண்ணிட்டோம், அதனால் தீயா வேலை செஞ்சாவது அதை நிறைவேற்றிட்டு தான் மத்த வேலை!!!”

 

ஸ்வாதியின் சிரிப்பு சத்தம் வெளியே இருந்த பெற்றவர்களின் முகத்திலும் சிரிப்பை வரவைத்தது.  “உங்க பொண்ணு ரொம்ப லக்கி, இவரை மீட் பண்ண வைச்சத்துக்கு அவ கடவுளுக்கு நிறைய நன்றி சொல்லனும் என்றார் உமா!”

 

இரண்டு மாதங்கள் கழித்து,

 

“சித் வெட்ஸ் ஸ்வாதி”

 

அனைவரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். சற்று முன் தான் ஸ்வாதிக்கு   திருமாங்கல்யம் அணிவித்திருந்தான் சித்..

 

நிம்மி கூட மனதில் எந்த கோவமும் இல்லாமல், அவர்கள் ஜோடி பொருத்ததைப் பார்த்து மகிழ்ந்து தான் போனார். “வாயாடி அழகா தான் இருக்க”! என்று சொல்லிக் கொண்டார்.

 

அன்றிரவு,

 

அவர்கள் வழக்கப்படி முதலில் ஸ்வாதியை சித் அறைக்கு அனுப்பி விட்டனர்….சற்று நேரம் கழித்து தான் சித்தை அவன் அறைக்கு செல்ல சொன்னர்கள்…. இடையில் பிரபா வேறு அவனை வேண்டுமென்றே விடாமல் பிடித்துக் கொண்டான்…. அவனிடம் இருந்து தப்பி வந்து பார்த்தால், ஸ்வாதி தன்னையும் அறியாமல் தூங்கியிருந்தாள்!

 

“எனக்காக ஆசையா வெய்ட் பண்ணுவானு நா ஓடி வந்தா, இவ எனக்கு பல்ப் கொடுக்கிறதை நிறுத்தவே மாட்டா போல்!!! என்று சிரித்தவன்…. மெதுவாக அவள் பக்கத்தில் படுத்து, இறுக்கி அணைத்து, அவள் கழுத்தில் அவன் முகத்தை புரட்டினான்…. “

 

அவன் இறுக்கி அணைத்ததுமே கொஞ்சம் கலைந்த தூக்கம், அவன் மீசை குத்தியதில் கூசி சிலிர்த்தாள்…..

 

“அச்சோ விடுங்க சித்! தூங்கிட்டேனா!! “

 

” ஆமா, இந்த ரேஞ்சல இருந்தா, எப்படி மேடம் உன் லட்சியத்தை அடையுறது என்று கேட்டபடி அவளை அங்கங்கே கடித்தான்….”

 

” அய்யோ சித்! கூசுது, ஹாஹா…”

 

“ஹே ப்ளீஸ், இவ்ளோ சத்தமா கத்தி என் மானத்தை வாங்காதம்மா.. என்றவன் கத்தும் அவள் உதடுகளை தன் வசமாக்கினான்,” பின் அங்கே பேச்சுக்கென்ன வேலை? பார்த்த நாளில் இருந்து தன்னை தனக்கே புதிதாய் அறிமுகப்படுத்தியவளிடம் இருந்து இன்றும் புது புது உணர்வுகளையும் தெரிந்துக் கொண்டிருந்தான் சித்!

 

அளவில்லாத அன்பு காட்டும் சித்தை மட்டும் தெரிந்தவள், காட்றாற்று வெள்ளம் போல காதல் செய்யும் சித்தால் திணறினாள்..ப். ப்ளீஸ் சி…சித், மெதுவா…….ஆஅ..ஆ. ,   ஆனால் இவனையும் மிக பிடித்தது அவளுக்கு….

 

ஸ்வாதி! மிக அயர்வாக தன் கை வளைவில் அரைகுறை தூக்கத்தில் இருந்தவளை அழைத்தான் சித். அவனுக்கு தூக்கமே வரவில்லை…பிறந்த குழந்தையை முதல் நாள் பார்த்துக் கொண்டே இருக்கும் புது  அம்மா அப்பா போல் இருந்தான்!

 

“ம்ப்ச்…. தூங்குங்க சித்! எனக்கு தூக்கம் வருது… உங்க மாதிரி என்னால லவ் பண்ணிட்டே இருக்க முடியாது…..”

 

உண்மை தான், ஏன் இப்படி அவளை காதலிக்கிறான், தெரியாது அவனுக்கு. தேவையான இடத்தில் தெளிவாக, சரியாக பேசும் சித், ஸ்வாதி என்றால் மட்டும் எல்லா கோட்டையும் அழித்து விட்டு , அவளின் போக்குக்கு போய் விடுவான்…!

 

“காதலில் காத்தாடி ஆனான்”

 

சுபம்

 

எபிலோக்

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

 

“ஏன்டா கண்ணா இன்னிக்கு இவ்ளோ லேட்? மணி ஒன்பது ஆச்சு!” என்றார் வீட்டினுள் நுழைந்த சித்திடம், நிம்மி. பிறந்து ஒரு மாதமே ஆன பேரனை மடியில் வைத்தபடி.

 

“கொஞ்சம் டைட் ஒர்க் மா!  குட்டி சார் இன்னிக்கு என்ன பண்ணார்?” என்று அம்மாவை கேட்டவன், நா ரெப்ரெஷ் ஆயிட்டு வரேன் என்று வேகமாக தன் அறைக்கு போனான். இப்போது அந்த அறையில் அவனும், சஞ்சனாவும் தான்.

 

ஷியாம் பிறந்ததிலிருந்து தனி அறை தான் ஸ்வாதிக்கு மகனுக்கும்.  முழு நேரமும் அவர்களுடன் இருக்க, குழந்தையை பார்த்துக் கொள்ள அவர்கள் மருத்தவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் இருப்பார்..  ஸ்வாதிக்கு இது இரண்டாவது சிசேரியன் என்பதால் அவளுக்கு நிறைய வலி, குழந்தையை தூக்கக் கூட முடியவில்லை.

 

மகளை தூங்க வைக்க மட்டும் அவர்கள் அறைக்கு வருவாள் ஸ்வாதி. அந்நேரம் எப்படியும் மகன் தூங்கி கொண்டிருப்பான் , அந்த கொஞ்சம் நேரம் தான் அவர்களுக்கு கிடைக்கும் தனிமை.

 

வேகமாக அறைக்குள் வந்தவனுக்கு தூங்கும் சஞ்சனா மட்டும் இருக்க, லேட்டாக வந்ததால் போய்ட்டா போல என்றபடி குளித்து விட்டு , மகளுக்கு முத்தமிட்டு விட்டு  ஸ்வாதியை தேடிப் போனான்.

 

ஸ்வாதி , மாமியார் அருகில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள், இப்போது ஷியாம் குணாளன் மடியில் இருந்தான்.

 

“பெயின் இன்னும் குறையலை யா?, ஏன் முகம் இவ்ளோ டல்லா இருக்கு?”என்றபடி ஸ்வாதியின் அருகில் அமர்ந்தான். “ஏம்மா இன்னும் வலி இருக்கு இவளுக்கு?”

 

“இல்ல, இப்போ வலி பரவாயில்லை சித்! என்னவோ மூட் ரொம்ப டல்லா இருக்கு” எனவும் … கேள்வியாய் அம்மாவை பார்த்தான்.?

 

“அந்த காலத்தில் எல்லாம் யாராவது வீட்டுக்கு வந்து போய்ட்டே இருப்பாங்க , பக்கத்து வீட்டுக்காரங்க வந்து சும்மா எட்டி பார்த்திட்டு போவாங்க, குழந்தை ரொம்ப அழுதா, தானா  நாலு பேரு வந்திருவாங்க.!. அப்படி வரவங்க பேசுறதில, கொஞ்சம் கூட தனிமை உணர்வே இருக்காது…. ஆனா இப்ப லைப் ஸ்டைலே மாறி போச்சு,சோ இந்த போஸ்டப்பார்டம் மூட் ஸ்விங்ஸ் கொஞ்சம் அதிகமா இருக்கு.. பெயின், தனிமை எல்லாம் சில பேருக்கு டிப்ரெஷன் வரை கொண்டு போய் விடுது….”

 

“என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்க?”

 

“அப்படினா , நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு, அவளை ஒரு சின்ன வாக் கூட்டிட்டு போ… பெயின் நல்லா குறைஞ்சிட்டா என் மருமக பழைய மாதிரி துறுதுறுனு  ஆய்டுவா … என்ன ஸ்வாதி,  என்று அவள் கன்னம் கிள்ளினார்!!!”

 

“ஆமா சித்! நீ கொஞ்சம் சீக்கிரம் வரணும், ஸ்வாதியை இப்படி டல்லா பார்க்கவே எனக்கும் பிடிக்கலை!” என்றார் குணாளன். கல்யாணம் ஆன புதிதில், நிம்மி சரியாக பேச மாட்டார் , அவருக்கும் சேர்த்து குணாளன் மருமகளை நன்றாக கவனிக்க , இயல்பாக ஒட்டிக் கொண்டாள் ஸ்வாதி அவரிடம்.

 

“ஏன் மாமா, நீங்க சித்துக்கு தம்பியோ, தங்கச்சியோ கொடுத்து இருந்தா, அத்தைக்கு ஒரு டேக் டைவேர்ஷன் கொடுத்து , அந்த பிள்ளையையும் பாருங்கனு சொல்லி இருப்பேன், இப்போ பாருங்க ஸ்டரையிட் ரோடு தான் , வேற ஆப்ஷனே இல்ல என்பாள்!”

 

“ஹஹா, அவ ப்ரோபெஷனுக்காக தான் மா, ஆயாம்மா கிட்ட குழந்தையை வளர்க்கிறது எல்லாம் உங்க அத்தையால முடியாது… சித் ஓரளவு வளர்ந்த அப்புறம் தான் சொந்த ஹாஸ்பிட்டலே கட்டினோம். அதுவரைக்கும் அவனுக்கு முன்னுரிமை கொடுத்து பிராக்டிஸ் கூடக் கம்மியா தான் பண்ணினா!” என்றதை கேட்ட பின் தான் முதல் முறையாக மாமியாரிடம் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று விரும்பினாள் ஸ்வாதி!

 

அவள் அம்மாவிடம் ஐடியா கேட்க, “மாப்பிள்ளை உன் மேல் இருக்க காதலை ரொம்ப வெளிப்படையா காட்டுறார், அதனால அவங்களுக்கு ஒரு வருத்தம் கண்டிப்பா இருக்கும்…மத்தபடி நா பேசின வரை அவங்க நல்லவங்க… நீ அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனு புரிஞ்சுகிட்டா மாறிடுவாங்க!”

 

“நானே உன்கிட்ட சொல்லணும்னு இருந்தேன், எங்க கிட்ட மாப்பிள்ளை பிரீயா பேசும் போது நீ எவ்ளோ சந்தோஷப்படுற! அதே மாதிரி அவர் பேரெண்ட்ஸ் கிட்ட நீ இருந்தா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்.. உன் மாமியார் கூட குறைச்சு இருந்தாலும், நீ மாப்பிள்ளைக்காக நல்லா பேசு டா என்றார்!”

“கண்டிப்பா மா, இந்த மாதிரி யோசிக்கவே இல்லை மா, தேங்க்ஸ் மா!”  எப்படி எப்படி என்று யோசித்தவள் சித்திடம் போய், “நான் வேலைக்கு போலாம்னு இருக்கேன்” என்றாள்… அப்போ சஞ்சனா அவள் வயிற்றில் இரண்டு மாசம்…!

 

“வாட்? என்றான் நம்ப முடியாமல்!”

 

வேலைக்கு போகும் எண்ணமே இப்போதைக்கு அவளுக்கு இல்லை என்று அவனுக்கு தெரியும். “ஏய்! என்ன பிளான் பண்ற என்றான் ஒரு மாதிரியாக!”

 

“ம்ம்கூம்… நீங்க பர்ஸ்ட் சொல்லுங்க!”

 

“அப்கோர்ஸ் வேண்டாம்னு தான், உனக்கு ஏதாவது பண்ணனும்னா நம்ம கம்பெனிக்கு வா!”

 

“சரி வாங்க அத்தை கிட்ட கேட்போம்”!

 

மறுபடியும், “வாட்”! எங்க அம்மா கிட்டயா?”

 

“உங்க அம்மா தானே என் அத்தை??” இழுத்து போனாள் சித்தை!”

 

” அத்தை! ஆச்சரியமாக பார்த்தார் நிம்மி”. தேவைக்கு மேல் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். அத்தை என்று அவள் அழைத்திருக்கிறாளா என்று யோசித்தாலும் ஞாபகம் வரவில்லை…

 

“நீங்க சொல்லுங்க அத்தை, நா கேட்டுக்கிறேன் என்று அவர்கள் பேசியதை சொல்ல, வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், உச்சி குளிர்ந்து விட்டது நிம்மிக்கு…எத்தனையோ நாள் நினைத்திருக்கிறார், ஒரே மகன், அவன் மனைவியிடம் உயிராய் இருக்கிறான், இப்போது அவர்கள் வீட்டு வாரிசு வேறு வரப் போகிறது …ஆனால் என்னால் அவளிடம் நெருங்க முடியவில்லையே என்று…  இன்று அவள் ஒரு அடி எடுத்து வைத்ததும், இவர் அவளை நோக்கி பல அடி எடுத்து வைத்தார் … அதன் பின் அவர்கள் உறவில் அப்படி ஒரு மேஜிக்!

 

சஞ்சனாவிற்கு நாலு வயது தான் ஆகிறது, அப்படியே சித்தின் ஜெராக்ஸ். பாட்டியின் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் முக்கால்வாசி பேரை தெரியும் அவளுக்கு…. மாதத்தில் ஓரு நாள் அல்லது இரண்டு நாள் தான் செல்வாள் அங்கே, அனைவரிடமும் போய் பேசி விட்டு தான் வருவாள்…. “என் மருமக மாதிரி குணம் என் பேத்திக்கு, எல்லாரையும் கவர் பண்ணிருவா என்று பெருமையாக சொல்வார் நிம்மி!”

 

அவன் அம்மா சொல்லிய பிறகு சித், ஸ்வாதிக்காக ஒரு

“கெட் டு கெதர்” ஏற்பாடு பண்ணி இருந்தான் அவர்கள் வீட்டில். இப்போது பிரபாவும் சித்துடன் தான் கம்பெனியில் இருக்கிறான். அவர்களுக்கு மூன்று வயதில் பையன் தேவ். சூர்யாவிற்கு இப்போது தான் திருமணமாகி மூன்று மாதம் ஆகிறது. அவன் மனைவி பிரியா…அவர்கள் பெங்களூருவில் இருந்து ஸ்வாதிக்காக வந்திருக்கிறார்கள். யாரையாவது கரெக்ட் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டிருந்த ஷங்கர் தன் கூடவே இருந்த பிருந்தா தன்னை காதலிப்பதே தெரியாமல் சுத்திக் கொண்டிருந்தான்… அவளே அவனிடம் சொன்ன பிறகு தான் தெரிஞ்சுது அவனுக்கு. அவர்கள் இருவருக்கும் ஒரு வயதில் ரேஷ்மா இருக்கிறாள்.

 

வழக்கம் போல் பிரபா, சித்தையும் ஸ்வாதியையும் ஒட்டித் தள்ளிக் கொண்டிருந்தான்…

 

“ஒரு வருஷமா உங்களால எனக்கும் என் பட்டுமாவுக்கும் சண்டை தெரியுமா? உன் வீட்டுக்காரன் நீ பிரெக்னென்ட்னு கன்பார்ம் ஆன நாள்ல இருந்து ஒரு பிஸினஸ் ட்ரிப் கூட போகலை, எல்லாத்தையும் என் தலையிலே கட்டிட்டான்!”

 

“நான் கூட சொன்னேன், மச்சான் கோழி அடைகாக்கும் போது சேவலுக்கு என்ன வேலைனு?! கேட்டா தானே என்று அங்கலாய்த்தான்”

 

பிரபாவை முறைத்தாலும், அதில் உண்மை இருந்ததால் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது..அவளின் பிரெக்னென்சி முழுவதும் சித் சற்று ரெஸ்ட்லெஸாகவே தான் இருந்தான்.  முக்கியமான விஷயத்தில் வெறும் சைடு டிஷ்ஷோடு நிறுத்திக் கொள்வான் சித்! மெயின் கோர்ஸ்க்கு போகவே மாட்டான்… அதுவும் வயிறு பெரிதான பின் அதை பார்த்தால் பயம் தான் வருது என்பான்..

 

சஞ்சனாவை சுமந்த டைம், வளைகாப்பிற்கு பிறகு சேலத்திற்க்கு பார்க்க வந்தவனை, பிரிவு தந்த ஏக்கத்தில் ஆசையாக இவள் அவனை நாட,  அவன் வழக்கம் போல் பாதியில் பின் வாங்க, பாருங்க இப்ப நீங்க பண்ணலை, நான் டாக்டர் கிட்ட கம்பெளயின் பண்ணுவேன், அவங்க அத்தையோட பிரண்ட் , உங்க மானம் தான் போகும் என்று கிட்டத்தட்ட மிரட்டி தான் சாதித்தாள்.

 

“அக்கா, நீங்க சீக்கிரம் அடுத்தது ரெடி பண்ணுங்க, நா எங்க வீட்டுக்காரரையே எல்லா ட்ரிப்க்கும் போக சொல்றேன்.”

 

“நா ரெடி மட்டும் பண்ணிக்கிறேன், அதுக்கு அப்புறம் நீங்க அவனை சென்னையிலே இருக்க விடாம பார்த்துக்குங்க என்று கண்ணடித்தாள்!” அந்த அளவிற்கு பத்மினியை படுத்துவான் பிரபா… யோகா பண்ணு…ஸ்விம்மிங் பண்ணு என்று….

 

எல்லோரும் விடை பெற்று சென்ற பின், இவர்கள் இருவரும் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள்,

 

“எவ்ளோ நாள் ஆச்சு உன் முகத்தை இப்படி ஹாப்பி யா பார்த்து!” என்று கன்னம் தடவினான் சித்…..

 

அவளுக்கே இன்று மனம் உற்சாகமாக இருந்தது தெரிந்தது.

 

அவளுடைய சின்ன சின்ன பிரச்சனைகளையும், இதெல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்காமல் அதை சரி செய்ய மெனக்கெடுவான் சித். அது பெரிய பெரிய சந்தோஷத்தை கொண்டு வரும் அவர்கள் வாழ்க்கையில்.

 

“இன்று போல் என்றும் வாழ்க!”            

 

Hi friends, thanks for the support. Oru nalla feel good love story eluthi parkalam appadingira aasaiyil eluthina ennoda first kathai ithu. Now i have written three more stories and all are available in Amazon Kindle. Mudinchavanga padinga. Nandri. Special thanks to the friends who gave likes and  comments.           

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!