Kadhalil nan kathaadi aanen

KNKA – 12

அன்று, சப்னா சித்துவிற்காக அவன் கார் வந்து நிற்கும் இடத்திற்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். அவள் மனதில் ஒரு திட்டம் இருந்தது. சற்று நேரத்தில் வந்த கார் , கிளம்பும் முன் இவள் சென்று கல்லூரியின் வெளி வாசல் அருகே சென்று நின்று கொண்டாள்…

 

சரியாக கார் கேட்டை தாண்டும் போது, டிரைவர் பக்கமாக கை காட்டி நிறுத்தினாள்……. 

 

கார் நின்றவுடன், முன்னால் அமர்ந்திருந்த சித்துவிடம், “என் பரஸ் மிஸ் ஆயிருச்சு  இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிரும், நீங்க சிட்டிக்கு தானே போறீங்க என்னையும் ட்ராப் பண்ண முடியுமா? ப்ளீஸ்!” என்று தன் ஐடி கார்ட்யையும் எடுத்துக் காட்டினாள். 

   

இப்படி கேட்டால் எப்படி மறுப்பார்கள்? பின்னால் ஏறிக் கொள்ள சொல்லி கை காட்டினான்.கார் கிளம்பியது.

 

“ஐயம் சப்னா!பர்ஸ்ட் இயர் கம்ப்யூட்டர்  சயின்ஸ் என்ஜினீயரிங்” என்றாள்…”

                        

பதிலுக்கு அவனும் அவனை பற்றி சொல்லுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு பெரிய பல்ப் கொடுத்தான் சித். 

 

“ஓ! குட்” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.வாவ் !!! என்ன ஆட்டிட்யுட்! என்று மயங்கினாள்… அடக் கொடுமையே, அவன் உனக்கு பல்ப் கொடுக்கிறது புரியலையா??!!!

 

சிறிது நேரத்திற்கு பிறகு மறுபடியும் அவளே ஆரம்பித்தாள், காரியம் தானே முக்கியம்… மான ரோஷம் எல்லாம் பார்த்தா முடியுமா!

 

“ஸாரி டு ட்ரெபிள் யூ , எனக்கு வேற என்ன பண்றதுனு தெரியலை” எனவும்,

 

“இட்ஸ் ஆல்ரைட், உங்க வீடு எங்க?”  என்றான்.

 

“வடபழனி ,உங்களுக்கு வேறு ரூட்னா ட்ராப் மீ ஸம் வேர் , நா அங்க இருந்து ஆட்டோ ஆர் உபர் புக் பண்ணி போயிக்கிறேன்!” என்று அவன் வாயிலிருந்து ஏதாவது விஷயம் வருதா என்று பார்த்தாள். 

 

அவனோ, “ஆர் யூ ஷுயர்?”என்றவன் அவள் வீட்டுக்கு 

போககக்கூடிய வழியில் இறக்கி விட்டு விட்டான்.

 

போகும் காரை , வெறுப்புடன் பார்த்தாள் சப்னா, நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்  தான் என்று கூட சொல்ல வில்லையே !!!!

உன்னை விடுறாதா இல்லை டா!!  சில பேருக்கு அடி பலமாக வாங்கினால் தான் புரியும்!

 

அடுத்த வாரத்தில்,ஒரு நாள் வலிய சென்று,சித்திற்க்கு ஹாய் சொன்னாள் சப்னா.

 

அவன் யார் இந்த பொண்ணு என்ற ரீதியில் பார்த்து லேசாக தலையசைத்தான் . 

 

“என்னை தெரியலை யா?”என்றவளுக்கு பயங்கர ஏமாற்றம்!    

   

அடப்பாவி என் முகம் கூட உனக்கு  தெரியலை யா??! இரு டா உன்னை என்று கருவியபடி, 

 

“போன பிரைடே என்னை கார்ல ட்ராப் பண்ணினீங்களே!”நம்ம இரண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் தான்னு சொல்லி இருக்கலாம்ல சீனியர்? என்று கொஞ்சி கொஞ்சி உரிமையாய் பேசுவது போல் பேசினாள்…..

 

“ஓ! யா..!! அதனால என்ன,இப்போ தான் தெரிஞ்சுடுச்சே !! பை! பை!ஐ காட் டு கோ” என்றபடி நகர்ந்து விட்டான்.

 

சரியான கல்லுளிமங்கனா இருப்பான் போலயே!!!

 

ஒரு வார்த்தை கூட விடாமல் அவளை கதறடித்தான் சித்!!

                 

பிரபா, “யார்ரா அது?” 

 

நடந்ததை சொன்னவன், “அந்த பொண்ணு  முகம் கூட எனக்கு  ஞாபகம் இல்லை டா!” என்றவன், மனதினில் நினைத்துக் கொண்டான்,

 

“ஒரு பிசாசு மட்டும் தான் என்னை ஆட்டி படைக்குது!”வேற யாருமே என்னை துளி கூட பாதிக்கலை..ஸ்வாதியிடம் வரும் தடுமாற்றம் மாதிரி வேறு யாரிடமும் வரவில்லை என்பதை கவனித்து கூட உறுதி படுத்தி கொண்டான் சித்….எப்படி இருந்த என்னை இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் வைக்க வைச்சுட்டாளே என்று அதற்கும்  அவளை தான் திட்டினான்.!!! 

   

கொஞ்சம் அழகாக தான் டா இருக்கா, நீ கொஞ்சம் ஞாபகம் வைச்சு இருந்திருக்கலாம் , செம ஷாக்  குடுத்திட்ட அந்த பெண்ணுக்கு என்று சிரித்தான் பிரபா.

 

“வாடா பேசாம !!”

 

அவர்கள் கல்லூரிக்குள்ளேயே உள்ள அனைத்து     டிபார்ட்மெண்ட்களிடையே சிம்போசியம் எனப்படும் கருத்தரங்கு நடைபெற்றது. முதலாமாண்டு மாணவர்கள் இந்த வருடம் பார்வையாளர்கள் மட்டுமே, அதனால் சில மாணவர்கள் விழா ஏற்பாட்டு குழுவில் இணைந்துக் கொண்டார்கள். 

 

துறு துறுவென்று அனைவருடனும் பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டு  வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதியின் மேல் தன் கவனத்தை வைக்காமல் இருக்க போராடினான் சித். 

    

அவர்களிடம் விழா சம்மந்தமாக ஏதோ சொல்ல வந்தாள் ஸ்வாதி. சித் , “நீ  ஏன் என்னை இந்த பாடு படுத்துற ?” என்று ஊடல் கொண்டவன் போல  வேண்டுமென்றே  முகத்தை திருப்பிக் கொண்டு விட்டான்!!! ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாள், ஏன் இப்படி பண்றாங்க!  சொல்ல வந்ததை பிரபாவிடம் சொல்லிவிட்டு அகன்றாள்.

            

“டேய் சித், ஏன் டா அப்படி பண்ண?” அந்த பொண்ணு முகமே ஒரு மாதிரி ஆய்டிச்சு! பழசு எதையும் மனசுலே வைச்சுக்கிட்டு இருக்காத டா, கூல் என்றான்.”

 

எதையாவது சொல்லனுமே என்று, “எனக்கு அவளை பார்த்தலே பிடிக்கலை டா, என் நிம்மதியே போய்டுது ….. ஷி இஸ் அ பிக் நியூசென்ஸ் டு மீ” என்றதை பின்னால் நின்றிருந்த ஸ்வாதியும் கேட்டாள்…

 

சித்தும் பிரபாவும் ஒரு பேப்பர் ப்ரெசென்டஷேன் செய்தார்கள், மிக நன்றாக செய்தார்கள். சித்துவினுடைய ப்ரெசென்டேஷன் திறமை அனைவரையும் ஈர்த்தது…  

 

ஹாய் சீனியர்!!!! என்ற  சப்னா,  தானாகவே சித்தின் கையை இழுத்து குலுக்கி , மார்வெலஸ் ப்ரெசென்டேஷன் என்றாள்.!!!

 

மிகவும் கடுப்பான சித்,  நாகரிகம் கருதி  எதுவும் பேசாமல் கையை மட்டும் இழுத்துக் கொண்டு ,தேங்க்ஸ் என்றான். 

 

சற்று தள்ளி நின்றிருந்த  ஸ்வாதியும் சூர்யாவும் இதையெல்லாம்  பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

பேசியபடி கடந்தவர்களை சூர்யா விஷ் பண்ணவும்,ஸ்வாதியும் செய்தாள். சற்று தயங்கி பின் நின்று சூர்யாவை மட்டும் பார்த்து பொதுவாக  நன்றி சொன்னான் சித்..

இப்படி தான் செய்ய போகிறான் என்று தெரிந்தாலும்,செய்யும் போது மனம் மிகவும் வலித்தது…  என் முகத்தை பார்த்து சிரிப்பது, தேங்க்ஸ் சொல்ல கூட முடியாம அவ்ளோ வெறுப்பா என்று வருந்தினாள். அவன் சொல்லியதை தான் கேட்டிருந்தாளே.. 

 

அவளால் அந்த புறக்கணிப்பை தாங்க முடியாமல்,  ஒரு முடிவுக்கு வந்தவள், நேரிடையாக சித்திடமே சென்று நின்றாள், உங்க கிட்ட பேசணும்….

 

“என் மேல எதுவும் கோவமா இருக்கீங்களா?  நான் எதுவும் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?”

 

அவள் கூட தனியா நிற்கும் அந்த நேரத்தில் , அவன் மனம் போட்ட ஆட்டத்தில்  ஒரு வேளை அன்னிக்கு ஹக் பண்ணி, கிஸ் பண்ணாதல இப்பவும் அவளை தொடணும்னு தோணுதோ என்று பயந்து போனான்… 

 

முதல்ல  இவளை விட்டு கிளம்பனும் என்று நினைத்தவன், ” இங்க பாரு   அன்னிக்கி ஏதோ தப்பாய்டிச்சு, அதனால தான் இப்போ பேசுறேன்,  அதர்வைஸ்  யூ ஆர் ஜூஸ்ட் அ ஜூனியர், ஓக்கே. ஸ்டே இன் யூவர் லிமிட்ஸ்!” என்றபடி ஓடியே போனான்…. இல்லனா  அவ கையை பிடிச்சு , டோன்ட் பீல் பேட் னு  ஆறுதல் சொல்லிருப்பான் கண்டிப்பா!!!!

 

அவள், அவனிடம் நீங்க  ஜஸ்ட் என்னை பார்த்தா ஒரு ஸ்மைல் பண்ணாக்  கூட போதும், நீங்க  இக்னோர் பண்றது  எனக்கு கஷ்டமா இருக்குனு தான் சொல்ல வந்தாள்…   என்ன சொல்ல வரேன்னு இல்ல, என் கூட பேசவே ரெடி இல்லையே அவர்…. என்னை அவ்ளோ மோசமாவா  நினைக்கிறார்…. அந்த சப்னா எல்லாம் கை குலுக்கி விஷ் பண்றா…. என்று வருத்தப்பட்டவள்….. 

   

இருக்கட்டும், வாழ்க்கை ஒரு வட்டம் டா, என்ன டா வா ?  என்ற மனசாட்சியிடம், இனிமே அவர்க்கு இல்லை இல்ல அவனுக்கு என்ன மரியாதை!! எனக்கு ஒரு சான்ஸ் வராம போகாது, அப்போ பார்த்துக்கிறேன்!!! அந்த சப்னா மாதிரி ஆளு கிட்ட மாட்டி அவஸ்தை பட்டா தெரியும்! யாரு நியூசென்ஸ்னு அப்போ புரியும் என்று திட்டி தீர்த்தாள் அவனை…. 

 

சப்னாவிற்கு எரிச்சலாக இருந்தது…. இவனை கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் போலவே…..   இனிமேல் அவன் கிட்ட மறைமுக முயற்சி எல்லாம் செல்லாது , நேரிடையாவே ட்ரை பண்ண வேண்டியது தான் என்று சொல்லிக்கொண்டாள்.

 

அவன் பொண்ணு என்று சிரித்து பேசுவதும் இல்லை, அவள் பேசினாலும் அதை கத்தரித்தும் விடுகிறான். பின் எப்படி நல்லவள் வேஷம் போடுவது??

 

அவள் வகுப்பில், மெதுவாக பசங்களிடையே அவளும் சித்தும் பழகுவது போல கதை கட்டி விட்டாள்…. ஒரே ஒரு நாள் அவன் கூட போய்ட்டு, வராவாரம் அவனோடு போவது போல்  பில்டப் செய்தாள்.. .

 

ஒரு நாள் அவனுடன் போனதை வைத்து, அவன் காரில் வந்து ஏறும் இடைவேளையில் ,அவன் டிரைவரிடம் பேச்சு கொடுத்து அவனை பத்தி தெரிந்துக் கொண்டாள்… 

 

அன்று தனியாக அமர்ந்திருந்த  சித்தை கண்ட சப்னா ,  “என்ன பண்றீங்க இங்க?” என்று, அவனை ரொம்ப தெரிந்தவள்  போல் போய் கொஞ்சினாள்…. 

 

கோவம் வந்தாலும் வேறு எதுவும் சொல்லாமல், “எனி ப்ரோப்ளேம்?” என்றான்.

 

“இல்லை , உங்க கிட்ட ஒன்னுசொல்லணும்னு , ஆனா உங்களை தனியாவே பார்க்க முடியலை… “என்று இழுத்தாள்…

 

ஓ! என்றதோடு நிறுத்திக் கொண்டான் அவன்.

 

என்னவென்று அவன் தான் கேட்கமாட்டானே!!!, அதனால் பட்டென்று அவளும் “நீங்க என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றீங்க, உங்களை பத்தியே தான் திங்க பணறேன் ஐ திங்க, ஐயம் இன் லவ் வித் யூ என்றாள்!!”

 

ஒரு மாதிரியாக பார்த்து விட்டு “ஸாரி, ஐயம் நாட் இண்டெர்ஸ்டேட்!”என்றபடி எழுந்து சென்று விட்டான். 

 

இப்படி தான் பதில் சொல்லுவான் என்று தெரிந்தாலும், ரெண்டு வார்த்தை  எக்ஸ்ட்ரா அட்வைஸ் பண்ற மாதிரி பேசுவான் கொஞ்சம் அழுது ஸீன் போடலாம்னு  இருந்தவள்  நினைப்பில் மண் விழுந்தது…

 

இப்படி கெத்து காட்றேல்ல, இந்த திமிர் எல்லாம் பறக்க விடுறேன் பாரு

டா !!!