Kadhalil nan kathaadi aanen

KNKA – 13

சப்னா வந்து ப்ரொபோஸ் பண்ணியதெல்லாம் பெரிய விஷயமாவே எடுத்துக்கொள்ளவில்ல சித்… ஆனால் காதல் என்பதை பற்றி யோசித்த போது,  ஸ்வாதியின் முகம்  தான்  மனதில் வந்ததது….

               

இது என்ன டா கொடுமை ,  அவ முகம் தோணுது……ஒரு வேளை இது தான் லவ்வா!! ஆனால் அவன் அந்த மனநிலையிலேயே இல்லாததால், அப்படி எல்லாம் இல்லை என்று தான் தோன்றியது….. ஹார்மோன் ஏதோ தாறுமாறா செக்ரீட் ஆகுது என்று நக்கலாக நினைத்து சிரித்துக் கொண்டான்.

 

எந்த ஒரு சம்பந்தமும், காரண காரியமும்  இல்லாமல்  நமக்கும் இன்னொருவருக்கும் ஒரு அலைவரிசை உருவாகும். அது பிடித்தமாகவும் இருக்கலாம், பிடித்தமின்மையாகவும் இருக்கலாம் . அதனால் தான் காரணமே இல்லாமல் ஒருத்தர் மீது அன்பு வரும், இன்னொருத்தர் மீது வெறுப்பு வரும்!!!!

 

இன்னும் சித், எவ்ளோ ஆராய்ச்சி செய்தாலும் காரணம் மட்டும் கண்டிபிடிக்க முடியாது!!! ஆனால் காரணமே வேண்டாம் அவள் தான் வேணும் என்ற தருணம் தானாகவே அமையும்..

              

                

சப்னா, அவள் வேலையை சிறப்பாக செய்துக் கொண்டிருந்தாள். இன்னிக்கு நாங்க அந்த மால் போனோம் என்பாள், இன்னொரு நாள் வந்து சினிமா பார்த்தோம் என்பாள்…..

 

ஒரு நாள் அவள் சொல்லும் கதையை நம்பாத பெண்ணை கூட்டி போய் , “நீ இங்கேயே நில்லு, இன்னிக்கு அவனுக்கும் எனக்கும் சண்டை, நா போன என்னை கண்டிப்பா திட்டுவான் பாரு” என்றவள்,

       

சித்திடம் போய் தேவையில்லாமல்  பேச, அவன்” இன்னொரு தடவை என்கிட்ட வந்து தேவையில்லாமை  உளராதே …”  என்று கடுமையாக சொல்லி விட்டுச்  சென்றான்.

 

“பார்த்தியா??” எனவும் , அந்த பொண்ணும் தெரியாதவங்க கிட்ட பேசின உடனே கோவமா பேசமாட்டோமே, அதனால் நம்பி விட்டாள்.  என்னை  அவுட்டிங் கூப்பிடுறான் , போனா சும்மாவே இருக்க மாட்டான் ! எப்படி போறது? அதான் சண்டை என்று அடித்து விட்டாள் கதையை!!”

 

இவளை பற்றி தான் வகுப்பிற்கே தெரியுமே!!! சே! அவர் எப்படி இது கிட்ட மாட்டினார்? என்றே பேசினார்கள். அவனுக்காக வருத்தமும் பட்டார்கள்….

 

வகுப்பில் எல்லார்க்கும் தெரியும் என்றால், ஸ்வாதி அண்ட் கோ 

விற்கு தெரியாமல் இருக்குமா?

 

ஷங்கர், நான் போய் சொல்ல போறன் அவர்கிட்ட என்று குதித்தான்!!

 

சூர்யா, “அது எப்படி டா நேரா சொல்லுவே? பிரபா ப்ரோ கிட்ட சொல்லலாம் பர்ஸ்ட்!! நீ என்ன நினைக்கிற ஸ்வாதி என்றான்!”

 

“அவங்களுக்குள்ள ஏதாவது இருந்தா , நாம சொல்றது தப்பாய்டும் டா!” என்றவளை , இருவரும் ஒரு சேர “சான்ஸே இல்லை!” என்று இடைவெட்டினர்..

 

“இப்ப நீ ஏன் இப்படி உளற என்று கடிந்தான் ஷங்கர்?”

                  

அவ அவர் கூட பேசி இருக்கிறதை நானும் சூர்யாவுமே பார்த்து இருக்கோம், சோ அவங்களுக்கு பழக்கம் இருக்கலாம் ….என்று  இழுத்தாள்…

 

“பேசினா உடனே பழக்கமா….? கருமம்! இவ எங்க , அவர் எங்க என்று கோவப்பட்டான் சூர்யா! அவர் எவ்ளோ டிக்னிட்டியான பெர்ஸன் தெரியுமா?  இந்த கழிசடையோட அவரை தயவு செஞ்சு சேர்க்காத என்றதை கேட்டவுடன், அவ்ளோ  நிம்மதியாக இருந்தது ஸ்வாதிக்கு…. 

   

சூர்யா ஓரளவு ஆளுங்களை கெஸ் பண்ணுவான்… அன்று உரிமையாய் சித்தின் கையை பிடித்து சப்னா  குலுக்கிய போது இவள் மனம்  சுணங்கியது! சித்தின்  கையை தைரியமாக   அவள் பிடிக்கிறாள் என்றால்…. அவர்களுக்குள் பழக்கம் இருக்கு என்றே நம்பினாள்…  ஏனென்றால் அவ்ளோ சுலபமாக சித் யாருடனும் பழக மாட்டானே…. இப்போது சூர்யா அவ்ளோ உறுதியாக சொல்லிய பின் ரொம்ப சந்தோஷ பட்டாள்….

 

சப்னா போன்ற ஆட்கள் என்ன வேணுமென்றாலும் செய்வார்கள், அவர்கள் செய்வதை போல்  நம்மால் சிந்திக்க  கூட முடியாது என்பதை ஸ்வாதி அறிய வில்லை.

 

ஷங்கரும் சூர்யாவும் பிரபாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து சென்றனர்.  அப்போது தான் சித் , இன்னும் இரண்டு நாளில் பரிட்சை எழுத போவதை கூறினான் பிரபா. சூர்யா , ஷங்கரிடம் சொல்ல வேண்டாம் என்று கண்ணை காட்டி விட்டான். பிரபாவிடம் கூறி, அவன் இதை மறைக்க முடியாமல் சொல்லிவிட்டால் பரீட்சைக்கு பாதிப்பு வந்து  விடக் கூடாது என்று நினைத்தான். அதனால் அடுத்த வாரம் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

இப்போது எல்லாம் சீனியர் போய், அக்கா ஆகி விட்டாள் பத்மினி. பத்மினி நேரிடையாக எதுவும் சொல்லவில்லை ஸ்வாதியிடம், ஆனால், கம்பெனியின் பொறுப்பு யாருக்கு என்பதை அவள் புரிந்து கொண்டாலும் காட்டி கொள்ளவில்லை. சித்  இல்லாமல் அனைவரும் ஒன்றாக சுத்தும் வீக்எண்டை அவ்வளவு என்ஜாய் செய்வார்கள்!!!!

                       

அந்த வாரம் அனைவரும் மகாபலிபுரம் போகலாம் என்று முடிவு செய்தார்கள். காலையில் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பலாம் என்று வாட்சப் குரூப்பில்  டிஸ்கஷன் ஓடி கொண்டிருந்தது. சித் அந்த குரூப் பில் இல்லை… ஆனால் அவனுக்கு தெரியும்.பிரபா போனில் பிஸி யாக இருப்பதை பார்த்தவன் , “என்னடா அவுட்டிங் பிளானா!!”  என்றான் சித்.

 

“பத்மினியால நீயும் அந்த ஜூனியர் குரூப்ல  ஐக்கியமாயிட்டியா டா?”

 

“அப்படியும் சொல்லலாம், ஏன்னா சீதை இருக்கும் ….. “என்றவனை  போதும் போதும் டா என்று கை எடுத்து கும்பிட்டான்.

 

“ஜோக்ஸ் அப்பார்ட்,  உண்மையிலே  அவங்க கூட போனா ரொம்ப ஜாலியா இருக்கும் டா… அவங்க நாலு பேரும் ரொம்ப பாண்டிங் , அதனால எந்த  ப்ரோப்ளேம்க்கும் இடம் இல்லை . டைம் போறதே தெரியாது.ஒன்லி ப்ன் தான்”.

 

“நீயும் இந்த ஒரு தடவை வாயேன்,ரொம்ப நாள் ஆச்சு நாமளும் வெளிய போய் “எனவும், 

                           

சித்தும் அப்பொழுது தான் மேற்படிப்பிற்காக எக்ஸாம் எல்லாம் எழுதி முடிந்திருந்தான், எங்கேயாவது போனா நல்லா இருக்கும் என்று தோன்றியது…..

 

“ஆனா  நீ பத்மினியோட போய்ட்டா எனக்கு கம்பெனி எனவும்?” அந்த வார்த்தையை கேட்ட பிரபா அடக்க மாட்டாமல் சிரித்தான். 

 

“இப்போ எதுக்கு டா இப்படி சிரிக்கிற…….”

 

அந்த ஜோக்கை பற்றி சொன்னவன், “டேய் ஜோடிக்கெல்லாம் அங்க வேலையில்லை, எல்லாரும் ப்ரண்ட்ஸ் அவ்ளோதான்… சோ நீ வர!” என்று முடித்து விட்டான்.              

 

அனைவரும் அன்று காலையில் , சித் ஏற்பாடு செய்த இன்னோவாவில் கிளம்பினார்கள். பசங்க நாலும் பேரும்  டிரைவிங் தெரிந்தவங்க என்பதால் அவர்களே கிளம்பினார்கள்.

 

அனைவரும் வருவதற்காக காத்திருந்தனர் சித்தும், பிரபாவும். 

 

இது நாள் வரையில் சித், ஸ்வாதியை  தெரிந்தே தான் கண்டுக்காமல் இருந்தான்.அவளிடம் எல்லை மீறி அவனின் மனம் பட்ட பாடு, பின்னும் அவள் இருந்தாலே அவனின் தவிப்பு  எல்லாம் சேர்ந்து  அவளின் சங்காதமே வேண்டாம்  என்று தான் இது நாள் வரை நினைத்து இருந்தான். ஆனால் அவ்வப்போது அவளை நினைக்கும் மனதை பிரீயாக விட்டுவிடுவான்.

 

பிரபா, பத்மினி  அவர்களுடனேயே இருப்பதால் , அவர்களை பார்த்தால், மற்றவர்களிடம் பேசினாலும் முயன்று ஸ்வாதியை கண்டு கொள்ளாமலே இருப்பான்.

    

ஆனால், இன்று அப்படி இருக்க முடியாது, சரி இன்று மட்டும் ஒன்றிரண்டு வார்த்தை பேசுறதில என்ன ஆக போகுது என்று நினைத்து கொண்டான்..

 

எல்லாரும் வர, தூரத்தில் வரும் போதே  ஸ்வாதி அவனை பார்த்து விட்டாள்… இவனா ! வேண்டுமென்றே என்னை மட்டும் ஒதுக்குவானே!! இன்னிக்கு போய் நான் மூட் அப்செட் ஆகணுமா!!! சே!!! எவ்ளோ நாள் ஆசை மகாபலிபுரம் போகணும் என்று நினைத்தவள், 

 

உடனே அவளாகவே, ஐடியா! ,அவன் முகத்தை பார்த்தால் தான நமக்கு வருத்தம். அவன் எப்படி நா ஒருத்தி இருக்கிற மாதிரியே காட்டிக்கமாட்டானோ,இன்னிக்கு நா அப்படி இருக்க போறேன்…ஹி ஈஸ் இன்விஸிபிள் டு மீ …..

 

சூப்பர்!! எப்படி ஸ்வாதி,அறிவு அறிவு என்று தன்னை தானே சொல்லிக் கொண்டாள்.

 

எல்லாரும் பொதுவாக ஹாய் சொல்லியபடி, காரில் ஏறினார்கள்.  சித் வண்டி ஓட்டுகிறான் என்றதால், பிரபா அவனோடு முன்னாடி அமர்ந்தான். , 

ஸ்வாதி, வேகமாக சென்று பின்னால் அமர்ந்தாள்.அவளுக்கு எப்போதுமே வாகனம் நகர்ந்தாலே தூக்கம் வந்து விடும்…. அதனால் பின்னாடி என்றால் யாருக்கும் தொல்லை இராது .

 

சூர்யா சென்று அவளுடன் அமர்ந்தான். நடுவில் பத்மினி , ஷங்கர் மற்றும் பிருந்தா அமர்ந்து கொண்டார்கள்.

 

 

வண்டி கிளம்பிய பின்,  “ஏய் குரங்கு!! ,வாழை பழத்தை தின்னுட்டு தூங்கு. நாங்க வழியில் சாப்பிட்டு,உனக்கு பார்சல் வாங்கி வைச்சுக்கிறோம் என்றான்”. 

 

அவன் சொன்னதைக் காட்டி, பிரபா கண்ணாலே,  சித்திடம் சொன்னனேன் பார்த்தியா என்று புன்னகைத்தான். 

 

ஒரே கேலியும் கிண்டலுமாக வந்து சேர்ந்தனர். அவ்வளவு சத்ததிருக்கும் நன்றாக தூங்கினாள் ஸ்வாதி. 

 

“ஏய்!! என்று அவளை குலுக்கி ,எழுந்திரு வாத்து ,மகாபலிபுரம் வந்தாச்சு… “எனவும் சோம்பலாக கண்ணை கசக்கி கொண்டே எழுந்தவளை அவனறியாமல் முகத்தில் சிறு புன்னகையுடன் ரசித்து  பார்த்துக்கொண்டிருந்தான் சித்.

 

பல்லவர்களின் புகழ் எக் காலத்திலும் அழியாதவாறு அமைந்திருந்த  கோயில், சிற்பங்கள் என அனைத்தையும் ரசித்தனர்… அங்கே சென்ற சிறிது நேரத்திலே சித், ஸ்வாதி, ஒரு முறை கூட தன்னை பார்க்கவில்லையென்றும் , அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பவில்லை என்றும் உணர்ந்துக்கொண்டான். 

 

பரவாயில்லை, நம்ம பேசனும்னு அவசியம் இல்லை என்று முதலில் நினைத்தான்…… 

                             

ஆனா கொஞ்ச நேரத்திலே, மனதின் ஓரம் நமைக்க ஆரம்பித்து விட்டது……

                            

நம்ம கண்டுக்காத அப்போ இந்த மாதிரி எந்த உணர்வும் இல்லையே! நல்லா தானே இருந்தேன். இப்போ மட்டும் ஏன் இப்படி ஒரு தடுமாற்றம் என்று குழம்பினான்.

                              

அப்போது சரியாக , ஸ்வாதி ஷங்கரிடம் ,”ஓ! உனக்கு வந்தா இரத்தம்  எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா போடா!!” என்று எதற்கோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

                                

நம்மளை ஒருத்தங்க  இக்னோர் பண்றாங்கனு  தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கோ??? நா பண்ணின அப்போ அவளும்  இப்படி தான் பீல் பண்ணி இருப்பாளோ… அதனால தான் என்கிட்ட பேச வந்துருப்பாளோ!!!

                               

சே! நா வேற மாதிரி பீல் பண்ணி அவாய்ட் பண்ணா ….அது அவளை இன்னும்  மோசமா பீல் பண்ண வைச்சு இருக்குமே  என்று இப்போ  நினைத்தான்!!  அவளை பார்த்து , இன்னிக்கு ஒரு ஸ்மைல் பண்ணிட்டா போச்சு என்று சாதாரணமாக நினைத்தான்.

       

மதியம் , ஈ.சி.ர் இல் உள்ள ஒரு  பீச் ரெஸ்டாரண்டக்கு சென்று உணவருந்தினர்…மனசுக்குள் ஒரே ஒரு தடவை என்னை பாரேன் ஸ்வாதி என்று நினைத்தான். ரொம்ப நேரமாக அவன் அவளை தன் பக்கம் திருப்ப, குரங்கு சேட்டை மட்டும் தான் குறை என்பது போல்  என்ன என்னவோ பண்ணிக் கொண்டிருந்தான்..

                                      

ஒருவரை ஒருவர்  பார்த்து சிரித்து விட்டால், பிரச்சனை முடிந்து விடுமே என்ற மன நிலை அவனுக்கு…அவ்ளோ ஈசி இல்லை சித் கண்ணா!!!

ம்கூம்ம், அவளா பார்ப்பாள்!! அவன் தான் அவளுக்கு இன்விசிபிள் மோடுடில் இருக்கிறானே!!!

    

                                      

அவள் அனைவருடனும் பேசிக்கொண்டு , அவனை மட்டும் பார்க்காமல் இருப்பது,  ஸ்வாதி! இப்போ என்னை பார்க்க போறியா இல்லயானு , அந்த டேபிள்,சேர் எல்லாத்தையும் தூக்கி அடிக்கனும் போல் வெறி வந்தது…..    நினைத்து பார்த்தவன் , மிரண்டு போனான்!! 

 

                                           

சட்டென்று எழுத்தவன், நான் பீச் வரைக்கும் போய்ட்டு வரேன் என்று சொல்லி விட்டு சென்றான்  ஜில்லென்ற அலைகள் வந்து கால்களையும் , மனதையும் ஒரு சேர குளிர்வித்தன.

அமைதியாக யோசிக்க முயன்றான், நான் நினைக்கிறது எதிர்ப்பார்கிறது எதுவுமே அவ விஷயத்தில ஒர்க் அவுட்  ஆக மாட்டேங்குது….. நானே மாத்தி மாத்தி நடந்துக்கிறேன்….. மத்தவங்க கிட்ட எனக்கு எந்த  எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும் பெரிசா வர்றதில்லை… யெஸ், ஐ  அக்ரீ, என் மனசு அவ விஷயத்திற்கு  ரொம்ப இம்போர்ட்னஸ் கொடுக்குது! ஷி இஸ் ஸ்பெஷல் டு மீ!!!!