Kaliyuga kalki 11

Kaliyuga kalki 11

கலியுக கல்கி – 11

மருத்துமனை சென்றவர்கள் பார்த்தது தலையில் கை வைத்து அமர்ந்து இருக்கும் குடும்பத்தாரினை தான். அவர்களை பார்த்தவாறே கதறிக் கொண்டு ஓடி ய அலமேலு, ராஜலுவை இறுக்கக் கட்டி கொண்டாள்.

தலையைத் தடவியவாறே அவரும் அவளை அனைத்து கொண்டார். ராக்வவுடனும் அவன் அண்ணனுடனும் அலமேலு எப்படி? என்பதை யாரும் கருத்தில் கொள்ளவில்லை அந்த அளவிற்குச் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.

“ஐயா! விதுரன் அண்ணன் எங்கே?” மனதில் படப் படப்புடன் கேட்டவனை.மௌனமாகப் பார்த்தாரே தவிர எதுவும் பேசவில்லை. அவருக்கு அடுத்து ரெங்கனிடன் சென்றவன் “அண்ணா நீங்களாவது சொல்லுங்கோ அண்ணா எங்க?”.

ரெங்கன் ஒரு அறையைக் கை காட்ட அங்கு விரைந்து சென்றான் ராகவ்.அங்கே அவசர சிகிச்சை பிரிவில் வேணியும், விதுரனும் இருந்தனர்.இருவரது உயிரும் ஊசல் ஆடுவதை அந்தக் கணிப்பு மானிட்டர் எடுத்துக் காட்டியது. அதை பார்த்து அத்தனை கோபம் அவனுக்கு எங்குத் தவிறினோம் பார்த்து, பார்த்து உடல் முழுதும் மூளையாகச் செயல்படும் ஒருவன் எதில் தவறினான்.ராக்வவிற்குப் புரியவில்லை போலும் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது.

ஒன்றும் பேச தோன்றவில்லை.மனமும் உடலும் களைத்து போக அமர்ந்து விட்டான்.பாலாஜிக்கு அவனது மனநிலை நன்கு புரிந்தது.நன்றி கடன் பட்டவனின் நிலையில், ஒன்றும் செய்ய முடியாத சூழலில், ராகவ்வின் மனம் என்ன பாடு படும் என்பதை உணர்ந்தே இருந்தான்.

அப்போதுதான் ராக்வ்விற்கு மிருது நினைவு வந்தது மீண்டும் ரெங்கனிடம் ஓடி சென்று “அண்ணா மிருது பொண்ணு எங்கே? என்று கேட்க,முதல் முறையாகத் தலை குனிந்தான் அந்த ஆண் மகன்,அதுவரை அடக்கி வைத்து இருந்த அழுகை வெடித்துச் சிதறியது சீதாவிடம்,கமலம் தான் ஆறுதலாகக் கையைப் பற்றிக் கொண்டார்.

எல்லோரையும் ஒரு வகையில் அந்தச் சம்பவம் உடலில் காயம் ஏற்படுத்தி சென்றது.இவர்கள் நால்வரையும் அரண் போல் காப்பாற்றி அந்த மூவரும் தங்களின் நன்றி கடனை தீர்த்து கொண்டனர்.வேணி தனது மேல் குண்டு பாய்ந்த அடுத்த நொடி ராஜலுவையும் ,கமலத்தையும் தள்ளிய பிறகே கீழே விழுந்தார்.
அடுத்து மிருதுவிற்கு அடிபட விதுரன் மற்ற மூவரையும் கைக்குள் அடக்க அவனது முதுகில் பதம் பார்த்து விட்டது மற்ற குண்டுகள்.ராஜலு ஒரு வார்த்தை பேசவில்லை பேச தோன்றவில்லை, இத்தனை வருடங்கள் வேணியோடு என்ன வாழ்ந்தேன்? என்பதை எண்ணி பார்த்துக் கொண்டு இருந்தார்.என்ன முயன்றும் அவருக்கு நியாயம் செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சி படுத்தி எடுத்தது.

சீதாவும்,கமலமும் நித்தமும் செத்து பிழைத்தனர்.ரெங்கன் சொல்லவே வேண்டாம் வாய் விட்டு அழுதாள் போதும் என்ற நிலை.ஓர் ஆண்மகன் சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவன்,சென்ற இடமில்லாம் சிறப்பு என்று முடி சூ டா மன்னனாக இருந்தவனை.இந்நிலைக்குத் தள்ளி விட்டனர் அவ்வீட்டுப் பெண்கள்.

மிருது இன்னும் கண் முழிக்கவில்லை விதுரனும் வேணியும் விடியலில் விழித்து விட்டனர்.மிருது சிறு பெண் என்பதால் அவளால் நடந்த அறுவை சிகிச்சையின் ரணத்தைத் தாங்க முடியவில்லை.

இவ்வாறு எண்ணங்கள் இருக்க செவிலி பெண் வந்து ராஜலுவிடம் “சார் அந்தப் பொண்ணு கண் முழுச்சுடுச்சுப் போய்ப் பாருங்க” என்றவுடன் விரைந்து சென்றார்.அங்கே மிருதுவை கண்டவுடன் அவரால் தாங்க முடியவில்லை தங்களை நம்பி வாழ வந்த பெண்ணின் அவல நிலையை எண்ணி மாய்ந்து போனார் அந்த மானுடன்.

ஓர் ஆண் மகனுக்கு எத்தனை அசிங்கமான நிலை என்ன தெரியுமா? தன்னை நம்பி வரும் பெண்களைப் பேணி போற்றுவதே வீரம். இப்போது அவர் கோழை,தனது கலக்கத்தை மறைத்து “பாப்பி” என்று அவர் அழைக்க அந்த மயக்க நிலையிலும் அவரைப் பார்த்து பயந்தவள், அவரது அழைப்பில் இன்னும் பயந்து போனாள்.

அவளது செயலில் ராஜலுக்குச் சிறு கனிவு பிறக்க “எப்புடிம்மா இருக்க ரொம்ப வலிக்குதா” என்று கேட்க கண்ணில் இருந்து ஆறாகப் பெருகியது கண்ணீர் எப்பேர் பட்ட அன்பு இது.தனது பெற்றோர்கள் கூட அவளிடம் இத்தனை கனிவு காட்டியதில்லை.இவர்களால் தான் தனக்கு இந்நிலை என்பதைப் பேதை பெண் மறந்து போனாள்.

கன்னம் தட்டி “நான் வெளில இருக்கேன் என்ன கூப்புடு எது வேணும் என்றாலும், நான் உனக்கு அப்பா மாதிரி மறந்திட வேண்டாம்” என்றவர் சென்றுவிட்டார்.அவரை தொடர்ந்து கமலம் அவள் கை பற்றி அழுக, சீதா அவளைக் குற்ற உணர்வோடு அனைத்து கொண்டாள்.

ராகவ் கண்களால் அவளை ஆறுதல் படுத்த ‘சிரித்தாள் அந்தச் சின்னப் பெண்’.எத்தனை உறவு அவளுக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது முயன்று சிரித்தாள்.

———————————————————————————————
ரெங்கன் தவியாய் தவித்தான் அவளைப் பார்க்க விடாது தனது தந்தை தன்னை அழைத்து வந்து விட்டார் “நானா அவளைப் பார்த்துட்டு வந்துறேன் ப்ளீஸ்”.

“யாரை ரெங்கன்? சீதா வந்துரு வா நீ இங்கேயே இரு”

ப்ச்….. நானா சற்று சலிப்பாக வந்தது குரல்,தனது தவிப்பை தெரிந்து கொண்டே தந்தை படுத்தி எடுப்பது கோபமாக வந்தது.

“என்ன கோவம் வருதா, எனக்கு கொலை வெறியே வருது ரெங்கன்.நீ அவள பார்த்துட்டு வந்துரு, இனி உனக்கும் அவளுக்கும் எந்த உறவுமில்லை அவளுக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பேன்” கோபமாகச் சொன்ன தந்தையைப் பார்த்து அதிர்ந்து விட்டான் ரெங்கன்.

“நானா ………………”

“நான் சொன்னது சொன்னது தான் ரெங்கன், அவளுக்கு இடது கை இனி வராதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு”.

என்… என்ன…. அடுத்த குண்டு.

“ஆமா அவ சின்னப் பொண்ணு, தொலைவுல இருந்து சுட்டது எலும்புல போய்ப் பஞ்சுடுச்சுப் பாவம், இனிமேயாவது அந்தப் பொண்ணு நல் லா இருக்கணும்”.கடுமையாகப் பேசியவர் பின்பு “இதை யாரு செஞ்சாகனு எனக்கு உடனே தெரியணும் ரெங்கன், அதுவும் ஒரு வாரத்துக்குள்ள.இந்த ஒரு வாரம் எதுக்குன்னா என் மகன் முழுசா கண் முழிக்க.”

“கண்டிப்பா நானா நம்ப ஆளுங்கள அலெர்ட் பண்ணி இருக்கேன், விசாரிச்சுட்டு தான் இருக்கேன்” என்று சொன்னவன் கைகள் முறுக்கேறியது.செய்தவன் சாமானியன் இல்லை என்பதை அறியும் பொது என்ன செய்வார்களாம்.இவர்களின் வீரம் விதுரரின் மூளை கொண்டு பழி தீர்ப்பார்களா என்ன….காலத்தின் கையில்.
தந்தையை நேர் கொண்டு பார்த்தவன் “நானா நம்பக் குடும்பத்தை எப்போதும் நானும்,விதுரனும் விற்ற மாட்டோம், இனி இது போல நடக்காது.அப்புறம் என் பொண்டாட்டிக்கு புருஷன் தேடுறது வீண் வேலை அவள யாருக்கும் விட்டு தர முடியாது.”

“சாரி மை சன் கண்டிப்பா என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பேன்”.

“பார்ப்போம் என்ன மீறி அவளுக்குக் கல்யாணம் பண்ண முடியாது கர்ஜித்தவன்”.புயலாக மிருதுவின் அறைக்குச் சென்றான்.இவர்கள் பேசுவதைக் கேட்ட கமலமும்,சீதாவும் பதறி போனார்கள், இரு பெண்களுக்கும் தனது தவறு நன்றாகப் புரிந்தது.ராஜலுவிடம் மன்னிப்பு கேட்ட மனம் இருந்தாலும் பயம் விடவில்லை

கமலம் சற்று தெளிந்தவர் ராஜலுவிடம் சென்று “என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க பாவா, நாங்க பண்ணுது தப்பு தான் அதுக்காக இப்புடியா.சரி மிருதுவுக்கு வழி சொல்லிட்டீங்க, என் தங்கச்சிய என்ன பண்ண போறீங்க. “டிவோர்ஸ்” என்றவர் அவர் அதிர்ச்சியைப் பொருட் படுத்தாமல் சென்றுவிட்டார்.

சரிதானே! தன்னை வேண்டாம் என்று விலகி இருப்பவளுக்குத், தான் எதற்கு என்று வேணியையும் கதற அடிக்க முடிவு செய்து விட்டார்.யாரிடம் ராஜலு என்றால் இந்தப் பெண்களுக்கு அத்தனை லேசா உறுமலாகக் கர்ஜித் தது அவரது மனம்.

——————————————————————————————–
கொதிக்கும் நெருப்பு குழம்பாகச் சென்றவன் மிருதுவை பார்த்தவுடன் சற்றுத் தணிந்தான்.அவளிடம் சென்று அமர்ந்து அவள் தலையை வருட.கண் மூடி இருந்தவள் யார் என்று பார்க்க.ரெங்கன் என்றவுடன் எழுந்து கொண்டாள் .அவளை மெதுவாக தூக்கியவன் முதுகோடு அனைத்துக் கொண்டான்.

வலி கொடுமையை விட இது தான் பெரிய கொடுமையாக இருந்தது மிருதுவிற்கு.கண்ணில் இருந்து நீர் அவள் கைகளில் பட நிமிர்ந்து பார்த்தவள் பதறி போனாள். “பாவா” தன்னை மீறி அழைக்கச் சொன்னது தாலி உறவு.

“இன்னொரு முறை அமுத்தி சொல்லுடி,தப்பு தான் நான் தப்பு தான் மனுச்சுடு பாப்பி.அவளையும் விட முடியாது உன்னையும் முடியாது.”

சரியென்று தலை ஆட்டினாள் பெண் அவனிடம் விளக்கம் கேட்க வில்லை.இன்னும் அவளது கொள்கை அப்புடியேதான் இருந்தது.குழந்தைக்கு மட்டுமே திருமணம் அவளுக்கு ரெங்கனை பற்றித் தெரியவில்லை,அவனும் தெரிவிக்க வில்லை என்பதே உண்மை.

சிறிது நேரம் அங்கு இருந்தவன் மீண்டும் தனது சிற்றன்னை, தம்பியை பார்க்க வந்தான்.வேணி தான் முழித்து இருந்தார் அவரிடம் சென்றவன் “உனக்கு நான் நியாயம் பண்ணுல பின்னி.நான் உன் மகனே இல்லை,எனக்கு நன்றியே இல்லை” புலம்பி மார்பில் புதைந்து அழுதவனைக் கோபமாகக் கிள்ளினார் வேணி.

பேசமுடியவில்லை என்பதால் கையால் கிள்ளி வைத்தார்,அதில் இன்னும் அவர் மார்புக்குள் புகுந்து கொண்டான் ரெங்கன்.பிறந்தது முதல் விதுரன் வரும் வரை அவனுக்கென்று இருந்த சொர்கம் அல்லவா அவள்.கடந்த காலத்தை மறக்க வேணிக்குக் கிடைத்த மருந்தல்லவா அவன், விட்டு போகுமா இந்தப் பந்தம்.

மீண்டும் ராஜலு வந்து வேணியைப் பார்க்காதது போல விதுரனிடம் சென்று அமர்ந்து கொண்டார்.அவருக்கு வேணியின் மேல் கொள்ளை கோபம்.எப்பொழுதும் ராஜலு கோபம் கொண்டாள் சிறிது பேசி அவரைத் திசை திருப்பி விடுபவர் இன்று அதனை செய்ய முடியாமல் தவித்தார், மனிதன் அத்தனை நெருப்பாக இருந்தார்.

அக்னியிடம் செல்லும் ஓர் அடிக்கு முன்னே அனல் வெளிப்படும் அல்லவா,அதுவே தகிக்கச் செய்தது, அனலே இப்புடி என்றால் நெருப்பு நெருங்கினாள் என்ன செய்யும்.

பின்பு ராகவ்வை அழைத்துப் பெண்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சொல்ல, அனைவரும் கிளம்பி சென்றனர்.வேணியையும் ,மிருதுவையும் பார்க்க பெண் செவிலி அமர்த்தி இருந்தார் ராஜலு.விதுரனை தானே பார்த்துக் கொண்டார்,அவரிடம் எதிர்த்து பேச தாரணி இன்றிப் பெண்கள் விடை பெற்றனர்.

காருக்குள் அமர போன அலமேலுவை தடுத்து நிறுத்தினான் பாலாஜி.கண்களால் ராகவ்வை போகச் சொல்ல.அவனும் எதுவும் பேசாது சென்று விட்டான்.அவன் சென்ற உடன் தனியாக ஓர் இடத்தில் அலமேலு வை கூட்டி சென்று சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவன் விட்டான் ஓர் அரை.

காது கிழிந்து விழவில்லையே ஒழிய, கிழிந்து விடும் அளவிற்கு வலி உயிர் போயிற்று “என்ன தைரியமடி நோக்கு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போய் இருக்க.எல்லாம் இருக்கத் திமிர் தானே. ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கை எரிய ஊறுகா போடுவேண்டி.அதுவும் நாலு பேரு பசி ஆறனும், ஆளுக்கு இரண்டு இட்டிலி தான் கிடைக்கும்,

இதுல படிக்கணும் பள்ளி கட்டணம்.இதர செலவுனு, நைட் முழுக்க முழிஞ்சுண்டு இருப்பேன்,ராகவன் வேறு பாலுக்கு அழுவான் முடுஞ்ச வரைக்கும் அம்மா பார்த்துக்குவா, முடியாத பச்சதுல நான் ஸ்கூல் போகாம வேலைக்குப் போவேன்.”

“இத்தனை கஷ்ட பட்டு வளர்த்த பெத்தவளா விட்டுட்டு எப்புடிடி உன்ன கல்யாணம் பண்ண சொல்லு.தெய்விக காதலுனு சொன்ன, கார்ல வரும் போது தப்புப் பண்ணிட்டேன் நேக்கு அம்மா, அப்பா தான் வேணும் காதல் வேண்டாம் அழுத.அது எப்படிடி நோக்கு வந்த ரெத்தம் நேக்கு வந்த தக்காளி சட்னி.”

அவன் பேசியதில் தன் தவறு புரிய அழுது கொண்டே கை கூப்பியவள் “மன்னிச்சுடுங்க இனிமே இப்புடி பண்ண மாட்டேன்” என்றவளை பார்த்து. “இனியாவது பெத்தவங்களுக்கு நிம்மதி கொடு, நேக்கு எங்க அம்மா தான் முக்கியம் அவுங்க யாரை காட்டுறாங்களோ அவ தான் என் ஆத்துகாரி.”
சிறு வலி எடுத்தாலும் அதனை மறைத்துக் கொண்டு தலையை ஆட்டினாள் அலமேலு.இனியும் பாலாஜியை அவள் கஷ்ட படுத்த விரும்பவில்லை. பின்பு அவளை வீட்டினில் பத்திரமாக விட்டவன்.தனது ஊருக்கு கிளம்பி விட்டான் ராகவ்விடம் கூடச் சொல்லி கொள்ளவில்லை.

இவர்களின் நிலை இப்புடி இருக்க முத்து மற்றும் பொன்னி நாட்களை அழகாக நிம்மதியாகக் கடத்தினர்.கொஞ்ச நாட்கள் அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்ற விதியும் விட்டு வைத்தது.

கல்கி வருவான்………

error: Content is protected !!