Kaliyuga kalki 15

Kaliyuga kalki 15

கலியுக கல்கி – 15

 

திறந்த அறையில் மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை,ஆம் அந்த ஜோடிகள் விதுரரின் வீட்டுக்கு பறந்து விட்டது.அர்த்த ஜாமத்தில் தமையனின் உதவியுடன் பறந்துவிட்டான், தன் காதல் கிளியை இழுத்து கொண்டு.

 

ராஜலுக்குத் தனது மகனின் லீலை புரிந்து விட்டது,அவர் கோபமாக வேணியைப் பார்க்க, இடை புகுந்த கமலம் அவரிடம்  மெதுவான குரலில் “உங்கள போல உங்க மகன் பாவா” சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

 

வேணி நமுட்டு சிரிப்புடன் செல்ல,இவர்களைப் புரியாமலே பார்த்துக் கொண்டு இருந்தனர் சில அப்பாவி ஜீவன்கள்,ஓர் மர்ம  நாவல் படிக்கும் நினைவில் அவர்கள், எப்பொழுதும் திக் திக் மனதோடு உலவி கொண்டு இருக்கின்றனர்.இதில் பரிதாபத்திற்கு உரியவர் யாரென்றால்? நமது பொன்னியின் தந்தை தான்.

 

திருமணமான ஒரே நாளில் மகளையும்,மருமகனையும் காணவில்லை என்றால் பாவம், அந்த ஜீவன் என்ன தான் செய்யும்? மெதுவாக ராகவ்விடம் சென்று “ஐயர் தம்பி என்  பொண்ணு எங்க?”பயத்துடன் கேட்க.

“அவுங்க பத்திரமா இருக்காங்க இன்னொரு வீட்டுல, அண்ணனும்  கூட இருக்காரு பயம் வேண்டாம்,நீங்க நிம்மதியா இருங்க” அதுக்கு மேல் என்ன பேச தலையை மட்டும் ஆட்டிவிட்டு தனது அறைக்குச் சென்றார் அரைகுறை      

 மனிதனுடன்.

 

யோவ்! ஐயரே……. என்று ஆரம்பித்தவளை அலேக்காகத் தூக்கி சென்று விட்டான் ,இனி அவளைப் பேசாவிட்டால்? எனவே அவளது மொத்த பேச்சுக்களையும் களவாடி செல்லும் முயற்சியில் ஈடுபட்டான்.

 

என்ன ஒரு விந்தை ஆந்திர எங்கே,கும்பகோணம் எங்கே,பொள்ளாச்சி எங்கே கடவுளின் விளையாட்டுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது போலும்.

 

கிழக்கையும் மேற்கையும் இணைத்தால் கூட விட்டுவிடலாம், இவர் வடக்கையும் கிழக்கையும் அல்லவா நேர் செய்ய எண்ணுகிறார் பொல்லாத விளையாடப்பா.

 

மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க ராகவ்விடம் போராடி கொண்டு இருந்தாள் முத்து “யோவ் மூச்சு முட்டி செத்துருவேன் போல விடுய்யா …… பாவிமனுசா பார்க்க அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டுப் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்”.

“ஆமாடி நான் அப்படித்தான் ரவுடி மாமி,மிரட்டி மிரட்டியே என்ன முந்தி பிடிக்க வச்சுட்ட கைகாரியாக்கும் நீ”

 

“நான் மாமி இல்ல முத்து”

 

“நேக்கு நீ மாமி தாண்டி எப்போ உன்ன கன்னிகாஸ்னாநம் பண்ணிண்டேளோஅன்னைக்கே நீ எங்க ஆத்து பொண்ணு,இனி பொள்ளாச்சியை மறந்துடு” அவனது பேச்சில் வெகுண்டவள் மேலும் பேசும் முன்னே முற்றி புள்ளி வைத்துவிட்டான் ராகவ்.

 

திருமணம் மட்டும் ஆகவில்லை என்றால் ராகவ் பேசிய பேச்சுக்கு, முத்து கடப்பாரையை எடுத்து வாயில் குத்திருப்பாள்,எந்த சாமி புண்ணியமோ ராகவ்வின் வாய்த் தப்பித்தது.

 

                    ****************************************************

 

அங்கே விதுரரின் வீட்டில் பொன்னியும் விதுரனும் சண்டையிட்டு கொண்டுருந்தனர்.நேற்று அறைக்குள் வந்தவளை கடத்தி கொண்டு வந்த பொதுத் தொடர்ந்த சண்டை,இப்போது வரை ஓயவில்லை,அவள் தமிழ் வேறு அவனுக்குப் புரியவில்லை. ஒரு சில வார்த்தைகள் ராகவ்விடம் வம்பு செய்து கத்து கொண்டாலும்,அவள் பேசும் கொங்கு தமிழுக்குத் தனி அகராதி தேடி கொண்டு இருந்தான்.

 

அதே நிலை தான் அவளுக்கும் ,அவன் கோபமாகப் பேசும் பொதுக் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாரோ என்று பயந்து போனாள் பாவம்.

 

மொழி தெரியாவிட்டாலும் சண்டை மட்டும் ஓயவில்லை கோபம் உச்சம் தொடும் போதெல்லாம் பக்கத்துக்கு அறைக்கும்,பத்துரூமுக்கும் சென்று வந்தான் விதுரன்.அதிலும் அவன் எதோ செய்வதாகச் சண்டை பிடித்தாள் பொன்னி.

 

கெஞ்சி,கொஞ்சி பார்த்தவன் இறுதியில் அதிரடியாகப் பாய்ந்துவிட்டான்,வாய் சண்டை விட்டு உணர்வுகளுக்கும்,உணர்ச்சிகளுக்கும் ஆனா சண்டை,எல்லை மீறும் பொது இருவரும் வென்றுதான் சிறப்பு.

 

கோபம் போய்க் காதல் பெறுக அடிபட்ட கையை வருடிக்கொடுத்து கொண்டாள் பொன்னி,கண்ணில் நிறையும் நீர் வெளி வந்தால் வண்மையாகக் கணவன் கோபம் கொள்வானென்று  உள் இழுத்து கொண்டாள்.

 

வலுவான தேகத்தில் கயவர்கள் ஆடிய கொடூர ஆட்டத்தைக் காணும் பொதுச் சராசரி பெண்ணாகக் கணவனின் உயிர் பயம் வந்து போகத் தேகம் விறைத்தது.நல்லது நினைத்தாலே பொல்லாப்பு  வந்து சேரும் இக்காலத்தில்,துணிந்து அறம் செய்யும் கண்ணவனை எண்ணி பயம் கொண்டாள்.உதவுவதும் தட்டி கேட்பதும் கூட ஒரு வகைப் போதை தான்.

 

இன்று என்னால் ஒரு நன்மை,என்னால் ஓர் உயிர் பிழைத்தது என்ற மன நிம்மதியும் தன்னால் என்ற மமதையும் ஒரு வகையில் போதை தானே.அவன் பரம்பரை தந்த துணிவும்,சமுதாயம் தந்த மரியாதையும்,அவன் சமூகம் தந்த உத்துழைப்பும் அவனை முன்னேற செய்திருக்கிறது,இதனை ஒரு காலமும் அவனால் விட்டு தர முடியாது என்பது திண்ணம்.அப்படியென்றால் பயந்தே சாகும் வாழ்க்கையா?

 

கூடலில் மனம் லயிக்காமல் கோர எண்ணத்தின் பிடியில் அவள்.அவளது 

உள்ளதை உணர்ந்தவன் போல எழுந்து அமர்ந்தவன் அவளையும் எழுப்பித் தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.

 

என்ன பொம்மி கழுத்து வளைவில் காதலை தேடி கொண்டே கேட்டான் அவளுக்கு எங்கு இருந்து பதில் வரும்,அவனது சேட்டையைத் தாங்க முடியாமல் அவனைத் தள்ளி விட்டு வெளியில் ஓடினாள்.சென்றவள் அவனது கதவையும் பூட்டி விட்டு சென்றாள்.

 

சுமார் ஒரு மணி நேரம் கழித்துக் கதவை திறந்து வந்தவள் மறுக்காமல் தங்களது அறை கதவை பூட்டி விட்டு வந்தாள். எதுக்கு ஓடினாள், கையில் என்ன காகிதம் புரியாமல் பார்த்தவன் அருகில் வந்தவள்.

 

“இந்தாங்க படுச்சுட்டு எனக்குப் பதில் சொல்லுங்க அப்போதான்…………..”அவளைச் சொல்ல விடாது பாதியில் தடுத்தவன். “அப்புடி ஒன்னும் நீ எனக்கு வேணாம் போடி” உதறி தள்ளாதக் குறையாகக் கோபமாக அவளது கைகளைத் தட்டிவிட்டான்.அவனை நன்கு அறிந்தவள் ஆயிற்றே அவன் கோபம் கொண்டாலும் மீண்டும் சென்று அவனிடம் ஒட்டி கொண்டு அமர்ந்து அவனது கைகளில் அந்தக் கடிதத்தைக் கொடுத்தாள்.

 

அதைப் பிரித்தவன் சற்று மிரண்டு தான் போனான்,மூன்று பக்கத்துக்கு இருந்தது அந்தக் கடிதம்.காதல் படிக்கச் வேண்டிய நேரத்தில்,கடிதத்தைப் படிக்கச் வைத்து விட்டாள் இந்தத் தமிழச்சி அலுப்பது போல் கொஞ்சி கொண்டான்.

 

அவனும் அவளும் சேர்ந்து வாழும் பொழுது வரும் சாதகப் பாதகத்தை வேலை ஆளிடம் சொல்லி அவர் துணையோடு தெலுங்கில் எழுதி அச்சடிக்கப் பட்டிருந்தது,படிக்காத பெண்ணாக இருந்தாலும்,

 

நாகரீமாகப் புத்திசாலித்தனமாக அவள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்த்தவன் மனதில் மெச்சி கொண்டான்.அதிலும் இறுதியாகத் தான் ஒருவளே இறுதி வரைக்கும் உங்கள் நிழலாக என்று முடித்திருக்க,அவளது அன்பில் அந்த வாக்கியத்தில் சொக்கி தான் போனான்.அவள் பயம் அவளுக்கு எங்கே வேணி,மிருது போல் அவர்கள் சமூகத்தில் யாரேனும் தனுக்குப் போட்டியாக வந்துவிட்டாள் தனக்கு மட்டுமே தன்னவன் என்ற உறுதியளிக்க வேண்டும்.

 

நியாயம் தானே அவள் கேட்ட கேள்விக்கு அவனது பதில் செயல் மூலமாக இருந்தது.

 

                                *******************************************

 

எதிர் அறையில் இருந்து சத்தம் வர துயில் கலைந்த பொன்னி தனது நிலையை மறந்து வேகமாக எழுந்து விட்டாள்.பதறி போய்த் திரும்பி பார்க்க போர்வையைப் பாடமாகக் கையில் வைத்துக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்தான் விதுரன்.

 

சிறு ஓசைக்கே எழுந்துவிடுவான் அத்தனை விழிப்பாக இருப்பவன்.எதிர் அறையில் கதைவை உடைக்கும் ஓசைக்கா தூங்க போகிறான்.இதனை அறியாமல் எழுந்து விட்டாள் பொன்னி

 

அவனோ கையில் உள்ள போர்வையை  நன்கு போர்த்திக் கொண்டு உறங்குவது போல் பாசாங்கு செய்தான்,ஒருபுறம் கதுவு உடைய மறுபுறம் கணவன் சேட்டை செய்ய,என்ன செய்வது என்று  தெரியாமல் நின்றவள் இறுதியில்  அவனிடமே தஞ்சம் கொண்டாள்.

 

அப்புடி ஒரு சிரிப்பு விதுரனுக்கு,அவனது சிரிப்பில் பயம்,வெட்கம் தூரம் போகத் தனது கை கொண்டு வலிக்கும் வரை அவனது நெஞ்சை பதம் பார்த்தாள்.அவளிடம் சிரிது நேரம் விளையாடிவிட்டு அவளை இருக்கச் செய்து பொறுமையாகக் கதவை திறந்து போனான் விதுரன்.

 

பத்திரமாகத் தனது பதுமையைப் பதுக்கிவிட்டுச் சென்றான் என்று கூடச் சொல்லலாம். அவன் செய்து கொண்டு இருக்கும் காரியம் அப்படி.

 

கோபமாகச் சென்று சத்தம் வரும் கதவை திறந்தவன் “ஏன்டா நாயே! கத்திகிட்டே இருக்க” என்று அங்கு ஏதோ திரவம் போல் உடல் முழுதும் ஊற்றி, உடல் எது? உடை எது? உடை இருக்கின்றதா என்ற கணிக்க முடியாத அளவிற்கு இருந்த ஒருவனை மீண்டும் அடித்துத் துவைத்தான்

 விதுரன்.

 

“யாரடா நீ விட்டுரு என்ன” உயிர் பயத்தில் அலறியவனைக் கண்டு சற்று நிதானித்தவன் அவனது எதிர் புறத்தில் தளர்வாக அமர்ந்து.

 

“நான் யாருனேதெரியல அப்புறம் எதுக்கு என்கிட்ட மோதுற”

எதிரில் இருப்பவனுக்கு ஏதோ புரிய “ராஜலு காரு………”

 

“ராஜலு காரு பிட்டா விதுரன் ராஜலு” கம்பீரமாகச் சொன்னவன் மீண்டும் அடி நொறுக்கினான்.

 

இதற்குப் பயந்து தான் ராஜலு சீண்டி விட்டு அவனை அங்குத் தங்க வைத்து மணமுடித்ததது,தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்வேன் என்பதை நிரூபித்து விட்டான்.

 

தங்கள் பகையால் அப்பாவி உயிரிகள் போவதை ராஜலு விரும்பவில்லை,ஏற்கனவே நடந்த விபத்தில் போன உயிர்களுக்கு என்ன நியாயம் என்ற நிலையில். இன்று மகன் தனது மருமகளுடன் தனித்து அந்தக் கயவனுடன் இருப்பது தெரிந்தால் அவரின் நிலை?

 

“நான் பண்ணது மறந்து போச்சா?” அந்த நிலையிலும் அவன் மிரட்ட.

 

“சினிமா மாதிரி பேசாதடா”

 

“நீ என்ன சீப்பா எடைபோடுற”

“அதான் நான் பண்ண தப்பு, உன்ன சரியா எடைபோடுல,போட்டுருந்தா அன்னைக்கே தூக்கி இருப்பேன்”.

 

“இங்க பாரு நான் யாரு…? அவன் சொல்லி முடிக்கவில்லை மீண்டும் அவனை அடித்துக் கொண்டே

 

“இன்னும் மூணு நாள் உனக்கு டைம் ,எங்க ஊருல இருக்குற உன்னோட ஒட்டு மொத்த கான்ட்ராக்ட்டும் வரணும்,வரும்,இல்லாட்டி வரவைப்பேன்.அதுவரை திமிரா பேசி அடிவாங்கிச் சாகாத சொல்லிவிட்டு” கதைவை சாவி கொண்டு பூட்டிவிட்டுச் சென்றான்.கதவு திறந்து இருந்தாலும் அவனால் வெளியில் வர முடியாத அளவிற்குச் செய்திருந்தான் விதுரன்.

 

அவனது ரெத்தம் கொதித்தது இறந்த உயிருக்கு என்ன வழி?தவறு செய்தால்? தண்டித்தால்? பாதகம் தண்டித்தவருக்கா? எந்த ஊர் நியாயம் இது கலியுகத்தின் கோட்பாடே இது போல் தானோ.

 

வருவான் கலியுக கல்கி…….

 

 

Leave a Reply

error: Content is protected !!