காண்டீபனின் கனவு 8
வீரா காரில் அனைத்தையும் ஏற்றினான். தண்ணிர் பாட்டில்கள் மட்டும் சீட்டின் அருகில் வைத்துக் கொண்டான். மற்றதை டரங்கில் தள்ளினான். அனைத்தையும் இவனே செய்து கொண்டிருக்க, சம்ரக்க்ஷா ஆடி அசைந்து கையில் ஒரு ப்ளாஸ்க்கை மட்டும் கொண்டு வந்தாள்.
“வீர், எல்லாம் எடுத்துக்கிட்டியா?” அடர்த்தியான முடியை தூக்கிக் சுற்றி தலைக்கு மேல் பன் கொண்டை போட்டு க்ளிப்பில் அடக்கி, அதற்கு மேல் கூலிங் க்ளாசை படுக்க வைத்திருந்தாள். முக்கால் பேன்ட் மற்றும் லூசாக ஒரு டிஷர்ட் போட்டு சிம்பிளாக கிளம்பி வந்திருந்தாள்.
“ஆச்சுங்க மேடம். நீங்களே உட்காருவீங்களா இல்ல தூக்கி உட்கார வைக்கணுமா..?” அவள் வந்த தோரனையை வைத்துக் கேட்டான்.
“எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்ல.” கையை விரித்துக் காட்ட,
“லந்தா? கொழுப்பு ஏறிப்போய் இருக்கு. குறைச்சுக்கோ. ஏறு டி.” கையை ஓங்கி அடிப்பது போல பாவனை செய்தான்.
“சரி சரி. டென்ஷனாகாத. போலாம் வா.” கைகூப்பினாள் சாம்.
“கதவெல்லாம் லாக் பண்ணிட்டியா?” காரில் ஏறி அமர்ந்தான்.
“எல்லாம் பண்ணிட்டேன். லெட்ஸ் கோ..!” அவனைத் துரிதப் படுத்தினாள்.
வண்டி கிளம்பியதும் வழக்கம் போல டிஜே வேலையை அவள் எடுத்துக் கொண்டாள்.
“ஹே சாம், ஃபர்ஸ்ட் எனக்குப் பிடிச்ச ஜனனி ஜனனி பாட்டு போட்டுட்டு அப்பறம் நீ மாத்திக்கோ.”
“என்ன சென்டிமென்ட்டோ..!” அலுத்துக் கொண்டாலும் முதலில் அதைத் தேடி ப்ளே செய்தாள்.
“செம ஃபீல் தெரியுமா இந்தப் பாட்டு. அதுவும் இப்படி அதிகாலைல சூரியன் தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கற சமயத்துல இந்தப் பாட்டைக் கேட்டா…யப்பா…அந்த மூகாம்பிகையே நேர்ல வர்ற மாதிரி இருக்கும். டிவைன்!!!” உணர்ந்து கூறினான்.
அவள் மௌனமாக அவன் சொன்னபடி அந்தப் பாட்டை ரசிக்க,
“ஜகன் மோஹினி நீ…சிம்ஹ வாஹினி நீ….!” வீரா கூட சேர்ந்து பாட, சம்ரக்ஷாவிற்கு புல் அரித்தது.
பாட்டு முடியும் வரை பேசாமல் ரசித்தாள். பின்,
“ஆமா வீர்.. இத்தனை நாள் இந்தப் பாட்டைக் கேட்டப்ப இப்படி ஃபீல் பண்ணிக் கேட்கல, ஆனா இந்த அவுட்சைட் டெம்பரேச்சர், லேசான இருட்டு, டிரைவிங்..இந்த சமயத்துல கேட்கறப்ப மனச என்னவோ பண்ணிடுச்சு.” உண்மையை ஒத்துக் கொண்டாள்.
“நான் சொல்றதெல்லாம் கேட்டு சின்ன புள்ளையா ஒழுங்கா என்கூட போட்டி போடாம நடந்துகிட்டீனா எல்லாமே நல்லாத் தான் இருக்கும்.” இது தான் சாக்கு என்று அவளைக் குட்டினான்.
“ஹே! என்ன நக்கலா, நானே ஊர்ல இருந்து வந்தப்பறம் உன்கூட மல்லுக்கு நிக்க முடியலன்னு பீல் பண்ணிட்டு இருககேன்.எல்லாத்துக்கும் உன்கிட்ட தான வந்து நிக்க வேண்டியதா இருக்கு.” தலையில் அடித்துக் கொண்டாள்.
“அதான் விதி. எப்பவும் நீ சின்னவன்னு புரிஞ்சு நடந்துக்கோ.” காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
“ஐய.. இதுக்கு சந்தோஷத்த பாரு. அல்ப..” முகத்தை தோளில் இடித்துக் கொண்டாள்.
“ரொம்ப பேசுன, இங்கயே இறங்கி வீட்டுக்கு போக வேண்டியதா இருக்கும். இந்த ட்ரிப் முடியற வரைக்கும் என் மபேச்சுத் தான் கேட்கணும். மவளே எதாவது ராங்கு பண்ண, அங்கேயே இருக்க வேண்டியது தான்.” சற்று மிரட்டவே செய்தான்.
“ம்ம் க்கும். வேற வழி.சரி அங்க வரவங்கள பத்தி கொஞ்சம் சொல்லு.” என வம்பு கேட்க ஆரம்பிக்க,
“ஹே மறந்தே போயிட்டேன். என் போன் எடுத்து கொஞ்சம் கில்பர்ட்க்கு கால் பண்ணு. கிளம்பிட்டாங்களான்னு கேட்கணும்.” நினைவு வந்து கூறினான்.
கில்பர்ட் போன் எடுக்காமலே அடித்து ஓய்ந்தது.
“சரி, கட் பண்ணிட்டு, வருண்ன்னு ஒரு நம்பர் இருக்கும் அதுக்கு பண்ணு.” என்றான்.
இரண்டு ரிங்கிலேயே வருண் எடுத்தான்.
“மச்சி! கிளம்பிட்டீங்களா?” வருண் கேட்டான்.
“ஆமா, மாமா, ஆன் தி வே! நீங்க? கில் க்கு போன் பண்ணேன், எடுக்கல. அதான் உனக்கு பண்ணேன்.” வீரா கூற,
“அவர் போன் சைலென்ட்ல இருக்கு. அவர் தான் டிரைவ் பண்றாரு, நாங்க கிளம்பிட்டோம். ரோமியும் வரலன்னு சொல்லிட்டான்.” வருண் சொல்லும் போதே,
“ஏன் அவனுக்கு என்ன ஆச்சு?” பதட்டமாகக் கேட்க,
“ஸ்டமக் அப்செட். ஹாஸ்ப்பிட்டலைஸ் ஆகிருக்கான். சோ கண்டிப்பா வர முடியாதுன்னு சொல்லிட்டான்.” வருண் விளக்கினான்.
“ஒ! சேட். பட் நம்ம ப்ளான்ல எந்த மாற்றமும் இல்லையே?! அதே ஒன் வீக் தான?” அவன் காரியத்தில் கண்ணாகக் கேட்க,
“எஸ், எஸ், எதுக்காகவும் இந்த ப்ராஜெக்ட்ட மிஸ் பண்ணக் கூடாதுன்னு கில் சொல்லிட்டு இருக்காரு.” பேசிக் கொண்டே போனை ஸ்பீக்கரில் வைத்தான் வருண்.
“ஹே! வீர். ப்ளான்ல எந்த சேஞ்சும் இல்ல. நானே இல்லைனாலும் கண்டிப்பா நீங்க மட்டுமாவது பண்ணிடனும்.” கில் கூறினார்.
“கண்டிப்பா கில். வி வில் ராக்..ஓகே நாம அங்க மீட் பண்ணுவோம். பை!” என்றான்.
“எதுவோ சரி இல்ல.” எனவும்,
“ஏன் அப்படி சொல்ற வீர்?” சாம் அலுத்துக் கொண்டாள்.
“இல்ல சாம். எல்லாரும் நல்லா ஃபிட் ஆன பர்சன்ஸ். ஏன் திடிர்னு இப்படி ஆகனும்.?” புரியாவிட்டாலும் சரியாகவே யோசித்தான்.
“ஹே சொல்ற நீ. நாம நல்லா தான இருக்கோம். அந்த கில், அப்புறம் வருண் எல்லாரும் நல்லா தான் கிளம்பிருக்கோம். அப்புறம் என்ன? மனுஷன்னா எதாவது வர தான் செய்யும். அது அவங்களுக்கு இப்போ வந்திருக்கு. அதுக்கு ஏன் எதையோ யோசிக்கற?”
“தெரியல, சம்திங் டெல்ஸ் மீ! பாரு கில் கூட அங்க வரப் போறதில்ல.” அருள்வாக்கு சொல்வது போல சட்டென சொல்லிவிட்டான்.
“ஹேய்! ஏன் டா அப்படி சொல்ற.” சாம் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“என்ன சொன்னேன்.?” அவனே ஒரு நொடி புரியாமல் கேட்க,
“இப்போ சொன்னியே, கில் அங்க வரமாட்டாருன்னு.” அவளுக்கு அதிர்ச்சி மீண்ட பாடில்லை.
“நானா? அப்படியா சொன்னேன்.?”தலையில் கை வைத்துக் கொண்டான் வீர்.
“என்ன டா ஆச்சு, ஹ்ம்ம் ஹூம்.. நீ வண்டிய நிறுத்து நான் ஓட்றேன். உனக்கு மைன்ட் சரியில்ல.” அவள் பிடிவாதமாகச் சொல்ல,
“ஹே அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ பாட்டு போடு, லெட்ஸ் சேஞ்ச் தி மைன்ட்” ஏதோ சமாதனம் சொல்லி அவளை மாற்றினாலும், அவன் மனதில் ஏன் அப்படித் தோன்றியது என அவனுக்கே தெரியவில்லை.
கஷ்டப்பட்டு மனதை மாற்றினான். மலைப் பாதையில் வண்டி செல்ல ஆரம்பிக்க, கவனமுடன் ஒட்டவேண்டும் என கருத்தை அதி பதிய வைத்தான். வளைந்து வளைந்து செல்லும் ஹேர்பின் பெண்டுகள் வீராவை ஒரே மனநிலையில் வைத்திருந்தது.
சாம் அவனுடன் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டு வர, அந்த பழைய சிந்தனை அவனை விட்டுப் போனது.
நூற்றிமுப்பது மைல்கள் வேகமாக பக்குவமாக ஓட்டி வந்தான். அங்கிருந்த ஒரு ஹோட்டல் முன்பாக வண்டியை நிறுத்தி, கில் மற்றும் வருணுக்காக காத்திருந்தனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவர்களும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
‘அப்பாடா! கில் வந்துட்டான். அப்போ எனக்குத் தோணின மாதிரி எதுவும் இல்ல.’மனம் சற்று நிம்மதி அடைந்தது.
“ஹே! வீர், ஹாய் சாம்,” இருவருக்கும் லேசாகக் கட்டிப் பிடித்து வரவேற்றான் கில்.
“ஹாய் கில், நீங்க கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்கீங்க, எப்படி மலை ஏறப் போறீங்க?” வழக்கம் போல சாம் அவனைக் கிண்டல் செய்தாள்.
ஆபீஸ் நண்பர்களோடு டின்னெர் செல்லும்போது சாமையும் அழைத்துச் செல்வான் வீரா. அப்படித் தான் அவர்கள் சாம் உடன் பழகியது.
“சாம், ஐ அம் மெய்ன்ட்டனிங் மை வெய்ட். உன்ன விட வேகமா மலை ஏறிக் காட்றேன் பாரு.” என்றார் கில்.
“ஹே வருண்.” என வீரா கட்டிப் பிடிக்க, அத்தனை நேரம் வருணை கவனிக்காத சாம் அப்போது தான் பார்த்தாள்.
கண்ணுக்கு லட்சணமாக, படு ஸ்மார்ட்டாக இருந்தான் வருண். அடர்த்தியான அளவான ட்ரிம் செய்த மீசை, கூலர்ஸ், அடர்த்தியான கேசம் , அதை அழகாக ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.
“இது சாம், சம்ரக்க்ஷா..” வீர் அறிமுகப் படுத்த,
ஏனோ உற்சாகம் வடிந்தவள் போல, “ஹலோ” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.
பின்பு அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க, சாம் அங்கிருந்த ஹோட்டல் மற்றும் அதனுடைய முன் பகுதியில் இருந்த அழகான தோட்டம் என அனைத்தையும் ரசித்துப் புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
கில், இங்கேயே காரை விட்டுவிட்டு இங்கிருந்து செல்லலாம் எனக் கூற, வீரா மறுத்தான்.
“இல்ல, கில். அது நல்ல யோசனை இல்ல. இங்கிருந்து நாம இன்னொரு ஐஞ்சு ஆறு மைல் நடக்கணும் அதுக்கப்றம் தான் அடிவாரம் இருக்கற பாதையே தெரியும். நீ என்ன சொல்ற வருண்.” வீரா நன்கு ஆராய்ந்து கூறினான்.
“எஸ், லாஸ்ட் டைம் நான் வந்தப்ப கூட, கார அடிவாரம் வரை எடுத்துட்டுப் போனோம். ஒரு எமர்ஜென்சினா உடனே இவ்வளவு தூரம் ஓடி வர முடியாது. அதுவுமில்லாம, நாம அவ்வளவு திங்க்ஸ் எடுத்துட்டுப் போகணும். பெட்டர் வி வில் கோ இன் கார்.” வருண் எடுத்துக் கூற,
“ஓகே. நீங்க சொன்னா சரி தான். சோ உடனே போலாமா, இல்ல, யூ நீட் ரெஸ்ட் ?” கில் கேட்க,
“ இங்க ஒரு காஃபி குடிச்சுட்டு கிளம்பலாம்” என்றான் வருண்.
அனைவருக்கும் காபி ஆர்டர் செய்தான். சாம் அப்போது வர, அவளுக்கும் காஃபி எடுத்து வந்து கொடுத்தான் வருண்.
வருண் எடுத்து வருவான் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை. “தேங்க்ஸ்” என்றாள்.
“இட்ஸ் ஓகே.” அழகாகச் மறுத்துச் சென்றான்.
வீரா அருகில் வந்தான். சாம் வருணைப் பார்த்துக் கொண்டிருக்க,
“ஹே வாய்லேந்து வர வாட்டர்ஃபால்ஸ க்ளோஸ் பண்ணு. அப்பட்டமா தெரியுது நீ அவன சைட் அடிக்கறது.” அவள் காதில் முனுமுனுத்தான்.
“ஐய, ச்ச. நான் ஒன்னும் சைட் அடிக்கல. எனக்கு இவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கு டா.” யோசிப்பது போல சாம் கூற,
“உடனே ப்ளேட்ட மாத்தாத டி. பாக்க செமையா இருக்கான் என்ன மாதிரி. அவன் ஆள் எப்படின்னு இந்த ஒன் வீக் ஸ்டடி பண்ணலாம், அப்பறம் வீட்ல பேசலாம். ஓகே வா” வீரா ஐடியா கொடுப்பது போல போட்டு வாங்கினான்.
“டேய். சீ சீ புத்தி போகுது பாரு. நானும் உன்ன மாதிரி நம்ம ஊரு பையன தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
“அவனும் நம்ம ஊர் தான். பாத்தா தெரியல.” அவளது சமாளிப்பைக் கண்டு சிரித்தான் வீரா.
“நான் சொன்னது, ஊர்ல இருக்கற பையன. இங்க இருக்கற ஊர்ப்பையன இல்ல.” அவனுக்கு அழகு காட்டினாள்.
“ம்ம்ம்.. நீ சொல்றத பாத்தா, இந்த இடத்த விட்டு போறதுக்குள்ள சிறப்பான சம்பவமெல்லாம் நடக்கும் போலிருக்கு.காத்திருப்போம்.” என அழுத்தமாகக் கூறினான்.
அவனது கையைக் கிள்ளினாள்.
“சரி காஃபிய குடிச்சுட்டு கிளம்பு. இந்த பிளேஸ்ல தான் எல்லாம் கிடைக்கும், நாம அங்க உள்ள போயாச்சுன்னா இவ்வளவு தூரம் வரணும். சோ எதாவது வேணும்னா இங்கயே சொல்லு.” அக்கறையுடன் கூற,
“அதான் நாம எல்லாம் ப்ளான் பண்ணி வீட்லயே பேக் பண்ணிக்கிடோமே.எதுவும் வேணாம். போலாம்” அவளும் கிளம்பினாள்.
அனைவரும் தங்களின் காரில் கிளம்ப, கரடு முரடான அந்த ஐந்து மைல்கள் ஐம்பது மைல்கள் போலத் தோன்றியது.
வழி எங்கும் சீரான பாதை இல்லை. அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என தெளிவாகத் தெரிந்தது. போகப் போக காட்டிற்குள் அவர்கள் இருப்பது உணர முடிந்தது.
காணவே முடியாத அழகிய மான்களும், முயல்களும், புது வித பறவைகளும் காட்சி தந்தன.
சாம் அனைத்தையும் வித விதமாக படமெடுத்தாள். சற்று நேரத்தில், சல சலவென ஓடும் நீரோடையின் சப்தம் காதை நிறைத்தது.
வண்டியை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்க, “வாவ்” குத்தித்தாள் சாம்.
“எவ்வளோ சூப்பரா இருக்கு பாரு வீர்.” அவனையும் சேர்த்துக் கொள்ள, அவனோ காரின் மீது சாய்ந்தபடி நின்று அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்.
“தூரத்துல ஒரு அருவி இருக்கு. அங்கிருந்து வர தண்ணீர் தான் இது. இது கலப்படமில்லாத கிளியர் வாட்டர். ட்ரை பண்ணிப் பாரு.” அவளிடம் காலியான பாட்டில் ஒன்றைக் கொடுக்க,
அவளும் ஆர்வமாக அந்த நீரோடையில் இறங்கப் பார்க்க,
“நோ…ஸ்டாப்” வருண் கத்தினான்.
முன் வைக்க எடுத்த காலை அப்படியே ஃப்ரீஸ் ஆக்கினாள்.
வீர ஓடி வர, “என்ன ஆச்சு வருண்?” என்றான்.
“இந்த இடத்துலேந்து இந்த மலையோட மேக்னேடிக் புல் அதாவது ஈர்ப்பு விசை அதிகமா இருக்கும். இந்த தண்ணீரே எவ்வளவு வேகமா ஓடுது பாரு. இதுக்குள்ள இறங்கினா, இழுத்துட்டுப் போய்டும்.” விளக்கமாகக் கூறினான்.
நீரில் இறங்காமல் அவளுக்குப் பாட்டிலில் நீரைப் பிடித்துக் கொடுத்தான் வருண்.
அதற்குள் அருகில் இருந்த ஒரு மரக்குச்சியை எடுத்து ஒடித்து அந்த நீரோடையில் வீசினான் வீரா. அவன் வீசிய வேகத்தை விட, அது தண்ணீரில் விழுந்ததும், சட்டென நீரால் அடித்துச் செல்லப் பட்டு, நொடிப் பொழுதில் அது எங்கோ சென்றுகொண்டிருப்பதை பார்த்தனர்.
“வாவ்… இவ்வளோ ஃபோர்ஸ்ஸா!” ஆச்சரியப் பட்டான் வீரா. உடனே காரிலிருந்து தனது காந்தப் புலத்தை அளக்கும் கருவியைக் கொண்டு வந்து அந்த இடத்தைச் சுற்றி ஒவ்வொரு இடமாக வைத்துப் பார்க்க, அதிக எண்ணிக்கையை காட்டியது.
“இண்டரஸ்டிங். இந்த இடம் ரொம்ப அதிகமான ஈர்ப்பு விசை கொண்ட இடம் தான்.”
இப்படி இவர்கள் மூவரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க,
“ஆ…”வென அலறினார் கில்.
அனைவரும் ஓடிவர அங்கிருந்த ஒரு கல் குத்தி அவரது காலை கிழித்திருந்தது.
“எப்படி கில்? ஷூ என்னாச்சு? இங்க ஏன் வெறும் காலை வெச்சீங்க?” வீரா அவரை தாங்கிக் கொண்டு வந்து காரில் அமர வைத்தான்.
வருண் அதற்குள் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்சை எடுத்து வந்தான்.
“இல்ல ரொம்ப நேரம் ஷூ போட்டது ஒரு மாதிரி காலை இறுக்கிப் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சு. இப்போ தான் கழட்டினேன். அதுக்குள்ள இப்படி ஆகும்னு நினைக்கல.” சிறு பிள்ளைப் போல காரணம் சொல்ல,
“என்ன கில் பாத்து வைக்க கூடாதா, எப்படிப் பட்ட பிளேஸ்இது?”வருண் காயத்தைத் துடைத்து மருந்து வைத்துக் கட்டினான்.
அதன் பிறகு யாரும் அங்கு நிற்கவில்லை, உடனே கிளம்ப, சமதள இடம் ஒன்று வந்தது. அங்கேயே டென்ட் போட்டுக் கொள்ளலாமென வருண் கூறினான்.
மதிய வேளை ஆகிவிட்டது, இருந்தாலும் அந்த இடம் ரம்யமாக இருந்தது. அண்ணாந்து பார்த்தால் பிரம்மாண்டமான மலைத் தொடர். பார்க்கப் பார்க்க முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆகாங்கே கேட்கும் பறவைகளின் ஓசை மெல்லிய காற்று, முன் இருந்த இடம் போல் அல்லாமல் ஒரு அமைதியான நீர் நிலை.
“இந்த தண்ணியும் நம்மள அடிச்சுட்டுப் போகுமா?” அப்பாவியாய் சாம் கேட்க,
“இல்ல, இது அப்படி இல்ல. இது கொஞ்சம் ரேன்ஜ் கம்மி, அதுனால அடிச்சிட்டுப் போகாது” வீரா விளக்கம் தந்தான்.
கில் அனைத்தையும் எடுத்து வைக்க உதவ,
வருணும் வீராவும் அங்கே மூன்று டென்ட் அமைத்தனர். சாமும் கில்லும் சேர்ந்து உணவு தயாரிக்க அடுப்பும் மற்றவைகளையும் தயார் படுத்தி வைத்தனர். பிறகு சாம் தனது கேமேராவைக் கையில் எடுத்துக் கொண்டு பார்பதெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் அவள் கேமிராவில் பளிச்சென்று பட்ட ஒன்றை தற்செயலாகப் படமெடுத்து விட, ஆச்சரியமாக அதை நிஜக் கண்ணில் பார்க்க எண்ணி நேரில் பார்த்தாள்.