Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-10

Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-10

 

 

 

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

                                              

 

 

அத்தியாயம் – 10

 

 

சீமாவின் தொலைபேசி அழைப்பு என்றதும், அதிர்ந்து நின்ற அனைவரும், ஆராவையே பார்த்திருந்தனர்.

 

“என்ன சீமா திடீர்னு போன் பண்ணியிருக்க…?”

,……,,….,..,……….

 

“பேசினேன்… இளா… முடியாதுன்னு சொல்லிட்டான்…”

.

………………………

 

“ஏன் அப்படி சொல்ற சீமா…..?”

 

…………………………..

 

“கிருஷ் அண்ணா வீட்டுல….”

 

………………………….

 

“இல்ல இளாவும் இங்கதான் எங்க கூட இருக்கான்…”

 

,…………………………

 

“பக்கத்துல மாதாஜி இருக்காங்க… இதோ தரேன்…”. 

போனை வேதாவின் கைகளுக்கு மாற்றினாள் ஆரா..

 

“நல்லா இருக்கியா சீமா….?”

 வேதா கேட்டதும் அந்த பக்கம் பட்டாசு வெடித்தது..

 

……………………………

 

“பார்ட்டியும் இல்லை எந்த ஸ்பெஷல் பிளானும் இல்லைடி….. ஆராவுக்கு லீவ்… அதான் வழக்கம் போல வந்து  தங்கியிருக்கா….”.

 

…………………………….

 

“இது என்னடி பெரிய கூத்தா இருக்கு….? நீ எப்ப ஆசைப்பட்டு இந்த அத்தை வீட்டுக்கு வந்த….? அப்படி வந்த உன்னை, நான் வெளியில போடின்னு கழுத்தை புடிச்சி தள்ளினேன்… எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு.., எந்த கோவத்தை என் மேல காட்டுற நீ….?”

 

…………………………….

 

“சரி எப்ப வருவ…?”

 

……………………………

 

“ வேற எதுக்கு கேட்பாங்க, ஆழாக்கு அரிசிய அதிகமா போடத்தான்….. சிலுக்கு சீமான்னு நல்ல பொருத்தமான பேருதான் இவனுங்க வச்சிருக்கானுங்க உனக்கு…. எப்ப வருவடின்னு கேட்டா .., இந்த சிலுப்பு சிலுப்பிக்கிற….?”

 

……………………

 

“ஆலிவ் டிரசா…..?”

 

………………….

 

“திமிரை பாரு.. ஏன்டி…… ரோஜா ஒண்ணும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது…என் மருமக… இஷ்டப்பட்டா சமைப்பா…இல்லாங்காட்டி சும்மா இருப்பா….அவளை நானும் என் புள்ளையுமே ஒரு வேலை சொல்ல மாட்டோம்… நீ என்னடி அதிகாரம் பண்றது…. வந்தா இருக்கிறதை, மூடிக்கிட்டு திங்கனும் புரிஞ்சுதா…?”

 

போனை கட் செய்தவர்…அனைவரும் அவரையே பார்த்திருப்பதை உணர்ந்து..,

 

“அந்த சீமை சிங்காரி வர்றால்லாம்….”

 

“என்னைக்கு….?”  கிருஷ் கேட்க…

 

“எவ்வளோ நிமிஷத்துல வரான்னு கேளுடா…? இன்னும் அரைமணி நேரத்தில இருப்பாளாம்… அந்த சிங்காரி , ராத்திரியில பழம், சாலட் மட்டும்தான் சாப்பிடுவாளாம்…. ஆலிவ் ஆயில் டிரஸ் போட்ட சாலட் வேணும்கிறா. இதுல ரோகிட்ட சொல்லி செய்ய சொல்லனுமாம்… லொள்ள பார்த்தியா இவளுக்கு… சாலட்டெல்லாம் டிரஸ் போட ஆரம்பிச்சிடுச்சா இப்போ….?”

 

“மீ.. அது டிரெஸ்ஸிங்… பச்சை காய்கறி, இலை மேல ஆலிவ் எண்ணெயை லேசா ஊத்தி பிசறி விடணும் அதான்…”. ரோஜா விளக்கம் கொடுத்தாள்…

 

“க்க்கும்….. நல்லா இலையும், தழையும் தின்னுட்டுதான் காட்டெருமை கணக்கா , எங்க முட்டலாம்…? எதை குத்தலாம்ன்னு திரியுறா….? இவளுக்கு நம்ம இளமாறன்  வேணுமாம்..?”

 

“அப்ப என்னை மட்டும், அவளை கட்டிக்க சொல்லி சொல்லி கேட்ட…? அந்த ரத்த காட்டேரிக்கு என்னை காவு கொடுக்க பார்த்தியா  தாய் கிழவி…?” கிருஷிர்க்கு அந்த நாள் ஞாபகம்….

 

“என்னை பத்தி என்னன்னு நினைச்ச…?அவ மட்டும் உன்னை கட்டியிருந்தாள்.., அவளை நான் அடக்கியிருப்பேன்டா…”

 

“அவளையெல்லாம் உன்னால அடக்கியிருக்க முடியாது டாலி… வேணும்னா கோந்து மாமா பக்கத்து சீட்ல அடக்கமாயிருப்பன்னு  சொல்லு ஒத்துக்கிறேன்..” இளாவுக்கு சீமாவின் மேல் இருந்த நம்பிக்கை பேசியது.

 

“இந்த வேதாவ ரொம்ப சாதாவா நினைச்சிட்டியே தம்பி….”

 

வேதா முடிப்பதற்குள் இளா…,

 

“டேய்…! உன் மாமாப் பொண்ணை நீ கட்ட வேண்டியது தானடா…? இப்படி வச்சிருந்து… என் தலையில கட்டபார்த்தியா…? இப்ப என்னை  நிம்மதியா இருக்க விட மாட்டெங்குறா ….”

 

“ஆமா அண்ணா… நீ அன்னைக்கே சீமாவ கட்ட ஒகே சொல்லியிருந்தா என்  இளா ஹாப்பியா இருந்திருப்பான்… என் ரோஜா அண்ணியும் , வேறொரு அழகான பையனை கல்யாணம் பண்ணி இருப்பாங்க… எல்லாத்தையும் கெடுத்திட்டு.., இப்ப நீ மட்டும் நல்ல பொண்டாட்டிய கட்டிகிட்டு ஜாலியா இருக்க… செல்ஃபிஷ்…..” ஆராவும் தன் பங்கிற்கு ஆட…

 

“ ம்ம் …. புள்ளை பூச்சிக்கெல்லாம் ஐடியா வருது……    நான் வேணும்னா அந்த ரத்த காட்டேரிய ரெண்டாந்தாரமா கட்டிகிடட்டா…?” கிருஷ்  வெறுப்ஸாக..

 

“சரி உன் இஷ்டம்டா… உலக நாயகன் அன்னைக்கே சொல்லிட்டார்… நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு…லேட்டா முடிவு எடுத்தாலும் லேட்டஸ்டா எடுத்திருக்க…எங்க நாலு பேருக்கும் டபுள் ஒகே…உனக்கு ஏதாவது அப்ஜெக்சன் இருக்கா ரோ….” வேதா தன் கருத்தை சீரியஸாக கூறினார்…

 

“ஒரு கண்டிஷன்…. கல்யாணமுன்னா நான் காஞ்சிபுரம் பட்டு மட்டும் தான் காட்டுவேன்  கிருஷ்……” ரோஜா

 

   சொல்லி முடிப்பதற்குள் அடக்க முடியாமல் ரோஜாவிடம் இருந்து ஒரு ‘களுக்’ சிரிப்பு வந்தது……

 

“அது என்னா களுக்குண்ணு இருக்குது சிரிப்பு.., பொண்ணுன்னா நல்ல கல கலன்னு சிரிக்க வேணாம்…? “ வேதா சொல்ல அனைவரும் சிரிக்க,

 

“என்னை பலி கொடுத்திட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தீங்களா….?

 அடிப்பாவி ரோசா…! உன் புருஷன் உனக்கு அவ்வளவு லேசா….?என் கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டே பேஷா….!

ஒரு காஞ்சிபுரம் பட்டுக்கு ஆசைப்பட்டு..,

கட்டின புருஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தயார் ஆயிட்டியேடி…?  ஆனா ஒன்னு…,…. என் கல்யாணத்தன்னைக்கு அம்புட்டு பேருக்கும் பாயசத்தில பால்டிராய்யில் ஊத்தி கொன்னுட்டுதான் அந்த பேய்க்கு வாக்கப்படுவேன்  ஜாக்கிரதை…”

 

வடிவேலு  வெர்ஷன்ல  டைமிங்கோட நல்ல ரைமிங்கோட  கிருஷ் சொந்த கதையை சோகமா சொல்லியும்  வழக்கம் போல அந்த வீட்டுல ஒரு ஈ , காக்கா  உட்பட  யாருமே கண்டுக்கல….

 

“சே……வர ..வர.., கொசு தொல்லை ஜாஸ்தியாயிட்டு….சம்பந்தம் இல்லாமல் பேசறத விட்டுட்டு…, ஆகற கதையை பார்ப்போம்… குட்டைகுழப்பி வேற வரா…? அவ குழப்பறத்துக்குள்ள நாம ஒரு முடிவுக்கு வந்திடிவோம்…”  நெஞ்சில் ரத்தம் வடியும் கிருஷ்ஷிர்க்கு  கதற கதற டின்ஜெர் வைத்த வேதா.., நேரடியாக விஷயத்திற்கு வந்தார்….

 

“ இதுவரைக்கும் அந்த சீம சித்ராங்கிக்கு, இந்த வீடு தெற்க இருக்கா வடக்க இருக்கான்னு கூட தெரியாது. இப்போ வரான்னா அதுக்கு ஒரே காரணம் இளா இங்க இருக்கிறது தான்.”

 

“லட்டு, நீ சீமா கிட்ட, நாங்க மூணு பேரும் இல்லாம பேசவே கூடாது. புரிஞ்சுதா…?”

 

“அப்படியே ஆகட்டும் ,ராஜமாதா,” ஆரா கேலியாய் தன் ஒப்புதலை தர,

 

அவள் மூக்கை இழுத்து செல்லமாய் ஆட்டியபடி,

 

“ரெண்டு பேரும் உங்க கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்க….?”   இளா ஆராவினை பார்த்து கேட்டார்.

 

ஆராவின் அழுகை  இளாவின்  கண் முன் வந்து செல்ல… ஆழ மூச்செடுத்தவனின் குரலில் வலியுடன் பதில் வந்தது…..

“நான் இதுல முடிவு எடுக்க என்ன இருக்கு டாலி….? என் மனச அவகிட்ட சொல்லிட்டேன்…..முடிவு அவ கையில….”

 

அனைவரும் கெள்வியாய் ஆராவையே பார்த்திருக்க….அவள் மட்டும் வலி நிறைந்த இளாவின் கண்களையே  பார்த்திருந்தாள்….. 

 

“எனக்கு இளா சந்தோஷமா இருந்தா போதும் மாதாஜி….அதுக்கு சாக சொன்னாலும் …, செத்துடுவேன்…..”

 

ஆரா சொல்லி முடிப்பற்குள் இளா..,

“அறிவில்லையாடி உனக்கு…,உன்னை  சாக விடத்தான் .., நெஞ்சுக்குள்ள பொத்தி.., பொத்தி வச்சி காப்பாத்துனெனா……?”. 

சொல்லி விட்டு செய்தானா….? இல்லை சொல்லு முன்னே செய்தானா….? 

 

இழுத்து இறுக அணைத்திருந்தான் ஆராவை….

 

“அடங்கொக்கா மக்கா….. தனியா ரூமுக்குள்ள பண்ண வேண்டியதை எல்லாம் ,.., இப்படி பச்ச புள்ளைங்க இருக்குற இடத்துல பண்றீங்க…. போங்கடா எங்கயாச்சும் ஒதுக்குபுறமா …..பன்னி குட்டிங்களா….” கிருஷ் .., ஆட்டத்தை கலைக்க பார்க்க…..

 

“இங்க என்ன  நடக்குது……. ?”  சீமாவின் குரல் ஆட்டோமேட்டிக்காக  இருவரையும் பிரித்தது….

 

 

சீமாவின் கத்தலில், திடுக்கிட்டு ஆரா பதறவும் ., இளா……  , ஆராவை சுற்றியிருந்த  இடது கையை எடுத்து விட்டு, வலது கையை ஆராவின் தோளை சுற்றியே அவளை அணைவாக   இறுக்கி பிடித்திருந்தான்.

 

வேதா ,ரோஜா,கிருஷ் மூன்று பேரும், நல்ல பூஜை நேரத்தில் நுழைஞ்சுடுச்சேப்பா   இந்த  பனி  கரடி….! என்ற ……. அச்சச்சோ…….! அதிர்ச்சியில் நின்றிருக்க…,

 

“வரும்போது கண்ணால் பார்த்து இருப்பியே…, அப்பவும் தெரியலையா………, என்ன நடந்ததுன்னு……?”

 இளா …., அனைத்து பால்களையும் அடித்து விளையாட முடிவெடுத்து ,கிரவுண்டில் சிங்கிள் பேட்ஸ் மேன்னாக நின்றான்…

 

“அது ஒன்னுமில்லை இளா.., ஆராவும் நீயும் சோகமா எதோ பேசினது போல இருந்தது அதான்.. நானும் கலந்துக்கலாம்னு கேட்டேன்…”

 

இருவரும் கட்டிபிடித்து இருந்த நிலையை கண்ட எரிச்சலில் தான் இவள் கோபத்துடன் கேள்வி கேட்டாள்… 

ஆனால் தப்பு செய்த எண்ணமோ ,தயக்கமோ இளாவுக்கு இல்லை.. ‘என் ஆரா … என் உரிமை’ என்ற புரட்சி போராட்டத்தில் வேகமாக அவன் குரல் கொடுக்கவும்…,. 

 

இதை எதிர்பார்க்காத சீமாவின் குரல் தான்…, ‘உன் வேகம்…, எனக்கு ரொம்ப சோகம்…’. என்று குழைந்து நெளிந்து விட்டிருந்தது…

 

 “இங்க ஒண்ணும் நானும் ஆராவும் விருந்து வைக்கல…, மூணாவது மனுஷங்க வந்து  கலந்துக்கரத்துக்கு….போயி வந்த வேலைய பாரு…”.

 

“நான் கலந்துக்க வந்தது விருந்துதானே இளா….. ஹ ஹ ஹா….”

 என்று அவளே காமெடி பண்ணி அவளே சிரித்தாள்…

 

“நீ உன் அத்தை வீட்டுக்கு வந்திருக்க…, அவங்ககிட்ட மட்டும் உரிமை கொண்டாடினா .., உனக்கு நல்லது….”

 

சீமாவின் கண், இளாவின் கையிலேயே இருக்க… இது தெரிந்தும் இளாவின் கை ஆராவின்  தோளில்லேயே இருந்தது……, கையை எடுத்தானில்லை….மாறாக இன்னும் இறுக்க அணைத்திருந்தான்.

 

பால்ய நண்பனின் ஒவ்வொரு அசைவையும் மனனம் செய்திருந்த சீமா, ஆராவின் தோள் மேல் இருந்த கையிற்கும், ஆறு பிள்ளை சவாலுக்கும் எதுவும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வியில் தொக்கியபடி நின்றிருந்தாள்.

 

இளா ,ஆராவிடம்,  “லட்டு பேபி நாம வா ரூமுக்கு போயி பேசுவோம், நம்ம ஃபியுச்சர் பத்தி பேசுவோம்… இங்க  ஏதோ அந்நிய சக்தி ஆதிக்கம் இருக்கிறது போல இருக்கு வாடா…”

 

என்று அவன் அழைக்கவும், அவன் இடுப்பை கோர்த்து கொண்டு ஆராவும் ,

 

“பை, சீமா..” சொல்லிவிட்டு செல்ல முற்பட,

 

இந்த முறை சீமா தான் கொசு மருந்து அடிக்கவெண்டியதாயிற்று……(புகை மூட்டம் யூவர் ஹானர்….)

 

அதற்குள் ஒரு ஆணின் குரல்…., 

 

“ஹே ……. பேப்…. ஐ  பார்கிட்  யூவர் கிட்…” ( பேபி உன் காரை ஓரங்கட்டிட்டு வந்தேன்னு ஸ்டைலா சொல்றாராமா……)

 

வந்தவனை அப்போதுதான் அனைவரும் ஸ்கேன் செய்தார்கள்…. 

கருப்பு டீ ஷர்ட்டும் ….. லோ ஹிப் ஜீன்ஸ் பேண்ட் டும்…. முழங்கையிலிருந்து … கைவிரல் வரை நீண்டிருந்தது ஒரு டிராகன் டாட்டூ…., புருவத்தில் துவாரமிட்டு ரிங்  போட்டிருந்தான்…. தலையில் இரு பக்கமும் ஸீரோ கட்டிங் செய்து நடு பிரதேச  முடியை  நட்டுகொண்டு பம்பலாக நிற்குமாறு ஹேர் ஸ்டைல்லோடு நின்றிருந்தான்…

 

“ஓ… டிரைவரா சீமா…. காசு கொடுத்து விட்டு, போயி முடி வெட்டிட்டு வர சொல்லு அவனை….., நல்ல முத்துன பனங்காயை .., தலையில கவுத்து வச்சது போல இருக்குது அவன் மண்டை……”  வேதா சீரியஸாக கலாய்த்தார்…

 

“அய்யோ …ஆன்டி …இவன் என்னோட பெஸ்டீ….. விக்ரம்…. (பெஸ்ட் பிரண்டாமா) ..நாங்க இந்த பக்கம்தான் ஒரு பர்த் டே பார்டில இருந்தோம்…..அதான் உங்ககிட்ட பேசின அடுத்த டென் மினிட்ஸ்ல …, வந்துட்டேன்…” சீமா புளி போட்டு விளக்கினாள்.

 

“இந்த விக் மண்டையனுக்கு பேரு விக்ரமாம் டி…”. கிருஷ் ரோஜாவிடம் கிசு கிசுக்க…

 

“ரோஜாவோ…. அவனும் அவன் பார்வையும்……..” முணு முணுத்தாள்….

 

“அப்ப கண்ணும் டொக்காடி   அவனுக்கு……..” 

 

“அட நீ வேற கிருஷ்…. அவன் நம்ம லட்டுவ பார்வையாலேயே  , முழுங்குறான் …. நல்லா தூசி தட்டிட்டு…. உன் கண்ணை விரிச்சி பாரு………”. ரோஜா கடு கடுத்தாள்….

 

அதற்குள்……..

 

“ ஹூ இஸ் திஸ் டஸ்கி ப்யூட்டி……? ஷீ லூக்ஸ் செக்ஸி…ஐ ஜஸ்ட் லவ் ஹெர்..…”

 

ஆராவை பார்த்து .., வாயிலே வாட்டர்  ஃபால்ஸ்ஸை ..,ஓபன் செய்து விட்டிருந்தான்…புதியவன்.

 

இளா…. முறைத்து கொண்டே குமுக்க தயாராக…, கிருஷ்…., விஜயகாந்த்  போல விழிகளில் வெறியேத்தி அமுக்க தயாராக…,

 

“டேய் …… யாரை பார்த்து செக்ஸிண்ணு சொல்ற…..? என்கிட்ட எதாவது ..,  டஸ்க்கு…. டுஸ்க்குன்ன…. அப்புறம் புஸ்ஸாயிடுவடா புஸ்வாணம் மண்டையா…..……!”  ஆராதான் அரங்கத்தை  அதிர விட்டிருந்தாள்…( ஆராவோட ஆறாம் அறிவு ஆன்ல இருக்கும்போது பயபுள்ள சிக்கிட்டான் போல…)

(இதிலிருந்து நமக்கு என்ன தெரியுது…..? அத்தனை பேருக்கும் அவன் மண்டை மேல இருக்கிற கொண்டை மேலே ஒரு காண்டு…)

 

ஆரா எகிறி அடித்ததில்…, டர்ரான…. விக்ரம்.., சீமாவின் பின்னே பதுங்க….

“ஹேய் கூல் ஆரா…….. டேக் இட் ஆஸ் ஏ காம்பிளிமெண்ட்….” சீமாதான் அவனுக்கு உதவிக்கு வந்தாள்….

 

“இங்க பாரு சீமா….. இது குடும்பம்…. உன் ப்ரெண்ட் வந்தான்னா …, இங்க எப்படி நடந்துக்கனும்ன்னு சொல்லி கூப்பிட்டு வரமாட்டியா……. பொறுக்கி மாதிரி பேசறான்.. இதே வேற ஒருத்தனா இருந்திருந்தா வகுந்திருப்பேன்…இவன் கூடதான் ராத்திரி பகல் பார்க்காம ஊர் சுத்தறியா…?.”

வேதா குடும்பத் தலைவியாய் ஏரியாவை தன் கண்ட்ரோலிர்க்கு எடுத்துக் கொண்டார்…

 

“ஓஹ்…… ஆன்டி…அவனை தப்பா எடுத்துக்காதீங்க…அவன் போர்ன் அண்ட் ப்ராட்டப் எல்லாம் யூ எஸ் ……சோ ஓபன் மைண்ட்டெட்……..”. சீமா நியாயம் பேசினாள்…..

 

அவள் நியாயாபடுத்தியது கோபமூட்ட…. வேதா..,

“அமெரிக்காவிலயும் ..,  அம்மாவுக்குதான பொறந்தான்…அங்க இருக்குற நம்மூர்க்காரங்க எல்லாம் அவுந்து விழுகிற டவுசரை போட்டுக்கிட்டு…, இப்படித்தான் அரைவேக்காட்டுத்தனமா பேசுறாங்களா…..?”

 

“சாரி ஆன்டி…அவனுக்காக நான் சாரி கேட்டுகுறேன்..”  வேதாவின் கோபம் தனக்கு நல்லதல்ல….நமக்கு காரியம் ஆக வேண்டும் என்று சீமா சமாதானம் பேசினாள்….

 

ஆனால் சீமாவின் மனதிற்குள்……….. இளாவிற்கும்..,  ஆராவிற்கும் இடையில் ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது….. அது என்ன என்று தெரியாமல் இங்க இருந்து போகக்கூடாது…, என்ற தீர்மானத்திற்கும் வந்து விட்டாள்…

 

ரோஜா தான்..,

 

“சரி கை கழுவிட்டு வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.. டைம் ஆகிட்டு..”

 என்று சூழ்நிலையை இயல்புக்கு கொண்டு வந்தாள்.

 

அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கையை சுத்தம் செய்து விட்டு  டைனிங் டேபிளில் உட்கார…, விக்ரமுடன் சென்ற சீமா .., கையை சுத்தம் செய்து கொண்டே காதில் ரகசியம்…. பேசினாள்….

 

டேபிளுக்கு வந்த விக்ரம்….

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க…… ஆரா… நீங்களும் தான்….”

 

“உனக்கு தமிழ் கூட தெரியுமா….?” வேதா கேட்க…

 

“ஆங்..…….தெரியும் ஆன்டி… நான் பிறந்தது யூ எஸ்…. பத்து வயசுலயே ஃபேமிலியோட சென்னையில செட்டில் ஆகிட்டோம்….”

 

(பின்ன எதுக்குடா …அம்புட்டு பீட்டர்…. இங்கிலீஷ் தெரியாத என்னை இங்கிலீஷ்ல டயலாக் எழுத வச்சிட்டியேடா பாவி…. உன் தலைமுடி மொத்தமும் தாறுமாறா கொட்ட…. எர்வாமாடின் தடவியும் எஃபெக்ட் இல்லாமால் போக… சபிக்கிறென்டா உன்னை.)

 

“சரி உட்கார்ந்து சாப்பிடுப்பா…. ஆனால் தமிழ்லயே பேசு… எனக்கு இங்கிலீஷ் தெரியாது.”.(ஆமாம்… எனக்கும்தான்) 

வேதா மன்னித்ததை  செயலில் காட்டினார்…

 

சீமாவிற்க்கு இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வந்தது…. அடிக்கடி இளா, ஆராவையும் கவனிக்க தவறவில்லை……

 

ஆனாலும் சூழ்நிலையில் ஒரு இறுக்கம்…இளாவின் விழிகள் விக்ரமை பார்க்கும் போதெல்லாம் நெருப்பை கக்கின… 

 

 அவரவருக்கு வேண்டியதை ரோஜா பார்த்து பார்த்து பரிமாறினாள்… இடையில் ‘ மீ….பரங்கி பச்சடி ஸ்வீட்டா செஞ்சிருக்கொம்…இதுக்கு மேல நீங்க சாப்பிட கூடாது….. ஊறுகாய் ஒரு ஸ்பூன் தான்’…என வேதாவை கவனிக்க செய்யவும்….

 

சீமாவின் எண்ண அலைகள் தான் சுனாமியாக சுழன்றடித்தது..,

ஓஹோ….. இப்படி ஐஸ் வச்சித்தான்..,இந்த கிழவிய கைக்குள்ள போட்டுகிட்டியா…..? அதான் என்கிட்டயே.. அந்த கிழவி உனக்கு அவ்வளோ சப்போட் பண்ணினா போல….ஒரு சாலட் செய்ய சொன்னா நீ குறைஞ்சு பொய்டுவியோ…..உன்னை இப்போ கவனிக்க நேரமில்லை….. இளாவை பார்த்து பெருமூச்சு விட்டாள்….. இருந்தாலும் சின்னதா ஒரு பிட் போடுவோம்… ரோஜாவிடம்..,

 

“அக்கா…நீங்கதான் ஆன்டிய.., கண்ட்ரோல்  பண்ணுவீங்க போல….? அவங்களுக்கு புடிச்சதை ஆன்டி சாப்பிடட்டுமே……கிருஷ் கூட அவர் ஒய்ஃப்ப ஒண்ணும் சொல்ல மாட்டேன்றான்….. எங்க ஆன்டி ரொம்ப பாவம்…என்னால இந்தக் கொடுமையை பார்க்க முடியல….நீங்க என் வீட்டுக்கு வாங்க ஆன்டி.., நான் உங்களை கவனிச்சுக்கிறேன்….”

 

சொல்லி முடிக்கலை அதற்குள்….,

 

“எங்கம்மாவுக்கு  சுகர் இருக்கு……அதோட அசிடிட்டியும் இருக்கு…. கவனம் இல்லாமல் சாப்பிட்டா அப்புறம் அவங்களுக்குதான் கஷ்டம்…அது தெரிஞ்சுதான் ரோஜா கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிறா..இதுல உனக்கு என்ன கஷ்டம்…” கிருஷ் பொண்டாட்டிக்கு சப்போர்டினான்.

 

“இதுக்கு பேரு கண்ட்ரோல் இல்லை..அக்கறை . எந்தங்கச்சிக்கு எல்லார் மேலயும் அன்பு காட்ட மட்டும்தான் தெரியும்…மத்தவங்க மாதிரி கண்ட்ரோல் பண்ண தெரியாது.”. இளா இடித்துரைக்க…,

 

“அண்ணி. …, மாதாஜி மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா….?என் கிருஷ் அண்ணாவும் அப்படித்தான் …, கிண்டல் பண்ணினா கூட மாதாஜி கிட்ட அன்பா தான் இருப்பாரு… அதோட உனக்கு இருபத்தி ஆறு…, அண்ணிக்கு இருபத்தி அஞ்சு…. அவங்களுக்கு நீதான் அக்கா…”

“அப்படியே .., வயசை குறைக்கிறியே நைசா…”

 கடைசியாக ஆரா …, அவள் பங்குக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்திவிட்டாள்…

 

கடைசில சீமா போட்ட பிட்டு …அவளுக்கே ஆச்சு ரிவீட் ….

 

ஆனால் சம்பவம் .., சம்பவம்னு சொல்லுவாங்களே அந்த சம்பவத்தில சம்பந்தப்பட்ட வேதாவும், ரோஜாவும் வாயவே திறக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டதுதான் இருந்ததிலேயே பெரிய அவமானமாகிவிட்டது சீமாவிற்கு.. 

 

“ஹி ஹி ஹி….சும்மா கிண்டலுக்கு கேட்டேன்.. எனக்கு தெரியாதா ரோஜா வை பத்தி….” வேறு வழியில்லாமல் இளித்து சமாளித்தாள் சீமா….

 

ஒரு வழியாக சீமாவினால் தோன்றிய இறுக்கம்.., அவளை கழுவி ஊத்தியதும் களைய…. 

 

ஆனால் இவ்வளவு விஷயம் இங்க போயிட்டு இருக்க.., சத்தம் போடாமல் மிக்ஸர் சாப்பிட்டுட்டு… (மன்னிக்கவும்) மிச்ச மீதியை சாப்பிட்டுட்டு இருந்தான் விக்ரம்.

 “அடடே… அந்த வட்டுருட்டான் மண்டயன்.ஆராவை பார்த்தே அரண்டுட்டான் போலிருக்கே மச்சான்,” கிருஷ் கலாய்த்தான்.

 

ஆரா..,

“மாதாஜி ….சாப்பாடு செம்ம…ஆனா …, மொட்ட மாடில சாப்பிட்டு இருந்தா நான் இன்னும் அதிகமா சாப்பிட்டு இருப்பேன்….”

 

“ஆமாண்டி .., இப்ப ரொம்ப கம்மியா கொட்டிக்கிட்ட….அப்ப மாடியில சாப்பிட்டு இருந்தா சட்டி வட்டி எல்லாத்தையும் மொத்தமா முழுங்கியிருப்பியாடி சோத்து மூட்டை…”

 

“எத்தனை தடவைடா உனக்கு சொல்லுறது…. லட்டு சாப்பாட்டு மேல கண்ணு வைக்காதன்னு…….ஆளு வளர்ந்தியே அறிவு  வளர்ந்துச்சா உனக்கு…. முதல்ல  உன் காலடி மண்ணெடுத்து சுத்தி போடணும் லட்டுக்கு…”.. வேதா  கொந்தளிக்க….

 

“நான் ஷூ தானே போடுறேன்… மண்ணுக்கு எங்க போவீங்க……”… கிருஷ் டஃப் கொடுத்தான்….

 

“நீங்க கவலைபடாதீங்க மீ…. கிருஷ் தூங்கிறப்ப …ஒரு பிடி மண்ணை கொண்டுபோய்..,அவரு காலிலேயே தேய்ச்சு எடுத்து தரேன்… நீங்க லட்டுக்கு சுத்தி போடுங்க…..” 

என்ற ரோஜாவின் பதிலுக்கு ஆரா …கிருஷிடம் பழிப்பு காட்ட… காண்டானது கிருஷ் இல்லை….சிலுக்கு தான்…

 

‘ஆத்தாடி…இந்த சோத்து குண்டானை கிண்டல் பண்ணினா …, சொந்த புள்ள.., புருஷன்னு கூட பார்க்காமல் வரிஞ்சு கட்டிக்கிட்டு மல்லுக்கு நிக்குறாளுக… நம்மள அத்தனை பேர் ரவுண்ட் கட்டியும்…., ஒரு பார்வை கூட நமக்கு ஆதரவா பார்க்கலையே…’

(இதுல பாரு சிலுக்கு….,வழக்கமா இவங்க டார்கெட்டு கிருஷ் தான்…. இன்னைக்கு நீயா வந்து தொக்கா  சிக்கிக்கிட்ட…, சின்னா பின்னமாகரத்துக்கு முன்னாடி  சீக்கிரமா தப்பிச்சு பொய்டுடி ராசாத்தி…… )

 

‘வந்த உடனே பொய்டலாமுன்னு தான் நினைச்சேன்… இருங்கடி உங்க எல்லாரையும் வச்சி செஞ்சிட்டு போறேன்…அப்ப தெரியும் இந்த சீமா யாருன்னு…!’ அதற்கு வலு சேர்க்கும் விதமாக விக்ரமின் பார்வை அவ்வப்போது.., ஆராவை திருட்டுத்தனமாக கபளிகரம் செய்ய.., அதைப்பார்த்து சீமாவின் மனது வேகமாக கணக்கு போட்டது… 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!